நபி அவர்களின் காலத்திலிருந்து 13 நூற்றாண்டுகளுக்குக் கிடையில் மிகப் பாதுகாப்பான வகையில் மிகச் சிறந்த முறையில், மிகவும் நம்பகமான பல நல்லோரின் வாயிலாக பல கால கட்டங்களைக் கடந்து உண்மை ஹதீதுகள் நம்மை வந்தடைந்துள்ளன.
ஹதீஸ்கள் நம்மை வந்தடைந்த நம்பகமான முவ்வழிகள்
1. முஸ்லிம் சமுதாயத்தின் தியாக அடிப்படையிலான விடா முயற்சி.
2. மிகப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள ஞாபகப் குறிப்புகளும், கையெழுத்து பிரதிகளும்.
3. பலம் வாய்ந்த மனன சக்தியின் காரணமாக உண்மை நடப்புகளை, ஒருவரின் பின் ஒருவராய், சங்கிலித் தொடர்போன்று தொடர்ச்சியாக முறைப்படி எடுத்துச் சொல்லல் ஆகிய இம்மூன்று முறையான வழிகளில் தான் அம்மாபெரும் ஹதீஸ் பொக்கிஷங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இக்கண்ணோட்டத்தில் ஹதீஸ்களைச் சேகரித்தல், முறை படுத்துதல், தொகுத்தல், நூல் வடிவாக்கல் முதலிய சேவைகளுக்கான காலத்தை நான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம்.
நபித்துவத்தின் காலமுதல் ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டின் வரை
இக்கால கட்டத்தில் ஹதீஸ்களைச் சேகரித்தவர்கள் யார்? கையெழுத்துப் பிரதிகளும், ஹதீஸ் சம்பந்தப்பட்ட தொகுப்புகளும் யாவை? ஆகியவற்றின் முழு விபரங்களும் பின்வருமாறு:
ஹதீஸ் மனனம் செய்தவர்களில் மிகப் பிரபலமானவர்களின் பெயர்கள்.
இவர்கள் 1000க்கு அதிகமான ஹதீஸ்கள் மனனமுள்ளவர்கள்.
1. அபூஹுரைர(ரழி) என்னும் அப்துர்ரஹ்மான்(ரழி) (வயது 78, மறைவு ஹிஜ்ரி 59) அறிவித்த ஹதீஸ்கள் 5374 மாணாக்கர்கள் சுமார் 800
2. அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரழி) (வயது 71, மறைவு ஹிஜ்ரி68) அறிவித்த ஹதீஸ்கள் 2660
3. அன்னை ஆயிஷா(ரழி) (வயது 67, மறைவு ஹிஜ்ரி 58) அறிவித்த ஹதீஸ்கள் 2210
4. அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) (வயது 84 மறைவு ஹிஜ்ரி 73) அறிவித்த ஹதீஸ்கள் 1630
5. ஜாபிருபின் அப்துல்லாஹ் (ரழி) (வயது 94 மறைவு ஹிஜ்ரி 73) அறிவித்த ஹதீஸ்கள் 1560
6. அனஸ் பின் மாலிக் (ரழி) (வயது 103 மறைவு ஹிஜ்ரி 93) அறிவித்த ஹதீஸ்கள் 1286
7. அபூஸயீத் குத்ரீ (வயது 84 மறைவு ஹிஜ்ரி 74) அறிவித்த ஹதீஸ்கள் 1170
500 க்கு மேல் 1000 க்குள் ஹதீஸ் மனனம் செய்தவர்கள்
1. அபூபக்கர் (ரழி) மறைவு ஹிஜ்ரி 13
2. உஸ்மான் (ரழி) மறைவு ஹிஜ்ரி 36
3. உம்முஸலமா (ரழி) மறைவு ஹிஜ்ரி 59
4. அபூ முஸல் அஷ் அரீ (ரழி) மறைவு ஹிஜ்ரி 52
5. அபூ தர்ரு கிபாஃரீ (ரழி) மறைவு ஹிஜ்ரி 32
6. அபூ அய்யுபுல் அன்ஸாரீ (ரழி) மறைவு ஹிஜ்ரி 51
7. உபையு பின் கஃபு (ரழி) மறைவு ஹிஜ்ரி 19
8. முஆது பின் ஜபல் (ரழி) மறைவு ஹிஜ்ரி 18
மேற்கண்ட உத்தம ஷஹாபாக்களின் பின்னணியில் அக்கால கட்டத்தில் வாழ்ந்து வந்த "தாபியீன்கள்" எனும் நபித்தோழர்களைக் கண்ணால் காணும் பாக்கியம் பெற்றவர்களையும் நாம் நினைவில் நிறுத்தவேண்டும். ஏனெனில் அவர்களின் கலப்பற்ற தூய முயற்சிகளின் காரணமாகவே நபி அவர்களின் பொக்கிஷங்களான ஹதீஸ்களை உம்மத் (வழித்தோன்றல்)களாகிய நம்மபவர்க்குச் சுடர்விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன.
0 comments:
Post a Comment