நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள்

, , No Comments
நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள்
1-اَللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي اْلآخِرَةِ حَسَنَةً،وَقِنَا عَذَابَ النَّارِ

01. இறைவா! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நற்பாக்கியங்களைத் தருவாயாக! மேலும் எங்களை நரக வேதனையிலிருந்து காத்தருள்வாயாக!


--------------------------------------------------------------------------------

2- اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ ، وَعَذاَبِ النَّارِ، وَفِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ الْقَبْرِ، وَشَرِّ فِتْنَةِ الْغِنَى ،وَشَرِّ فِتْنَةِ الْفَقْرِ، اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِـيْحِ الدَّجَّـالِ، اَللَّهُمَّ اغْسِلْ قَلْبِيْ بِمَـاءِ الثَّلْجِ وَالْبَـرَدِ، وَنَقِّ قَـلْبِيْ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِيْ وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ

02. இறைவா! நரகின் சோதனை, நரக வேதனை, கப்ரின் சோதனை, கப்ரின் வேதனை, செல்வத்தின் சோதனையின் தீயவிளைவு, வறுமையின் சோதனையின் தீயவிளைவு ஆகிய அனைத்திலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! மஸீஹுத் தஜ்ஜாலுடைய சோதனையின் தீயவிளைவுகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பனிக் கட்டி மற்றும் பனித்துளி நீரால் என் உள்ளத்தை கழுவி விடுவாயாக! வெண்மையான துணியை அழுக்கிலிருந்து தூய்மைப் படுத்துவதைப் போல் என் உள்ளத்தை பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் நீ ஏற்படுத்தியுள்ள தூரத்தைப் போல எனக்கும் என் பாவங்களுக்கும் மத்தியில் தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! சோம்பல், பாவச்செயல், மற்றும் கடன் ஆகியவற்றிலிருந்து நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


--------------------------------------------------------------------------------

3-أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْهَرَمِ وَالْبُخْلِ، وَأَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ.


03. யாஅல்லாஹ்! இயலாமை, சோம்பல், கோழைத்தனம், வயோதிகம், கஞ்சத்தனம், கப்ரின் வேதனை, வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை ஆகியவைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


--------------------------------------------------------------------------------

4-أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلاَءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوْءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ اْلأَعْدَاءِ


04. யாஅல்லாஹ்! கஷ்டங்கள் ஆட்கொள்வதை விட்டும் விரும்பத்தகாதவை ஏற்படுவதை விட்டும் தீயமுடிவுகளை விட்டும் விரோதிகளின் கேளி, கிண்டல்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


--------------------------------------------------------------------------------


5-أَللَّهُمَّ أَصْلِحْ لِيْ دِيْنِي الَّذِيْ هُوَ عِصْمَةُ أَمْرِيْ ، وَأَصْلِحْ لِيْ دُنْيَايَ الَّتِيْ فِيْهَا مَعَاشِيْ ، وَأَصْلِحْ لِيْ آخِرَتِي الَّتِيْ فِيْهَا مَعَادِيْ ، وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِّيْ فِيْ كُلِّ خَيْرٍ ، وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِّيْ مِنْ كُلِّ شَرٍّ

05. யாஅல்லாஹ்! என்னுடைய மார்க்கத்தை எனக்கு சீர்படுத்து வாயாக! ஏனெனில் அதுதான் எனது அரண். எனது உலகை எனக்கு சீர்படுத்துவாயாக! ஏனெனில் அதுதான் நான் வாழுமிடம். எனது மறுமையை சீர்படுத்துவாயாக! ஏனெனில் அதுதான் நான் திரும்பிச் செல்லுமிடம். எனது வாழ்க்கையில் அதிக நன்மைகள் புரிவதற்கு வாய்ப்பளிப்பாயாக! அனைத்து தீமைகளை விட்டும் விடுபட்டதாக எனது மரணத்தை ஆக்குவாயாக!


--------------------------------------------------------------------------------

6-اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَي

06. யாஅல்லாஹ்! நேர்வழியையும் (உனது) அச்சத்தையும் பத்தினித் தனத்தையும் (பிறரிடம்) தேவையற்ற நிலையையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.


--------------------------------------------------------------------------------

7-أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْبُخْلِ، وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ، أَللَّهُمَّ آتِ نَفْسِيْ تَقْوَاهَا، زَكِّهَا أَنْتَ خَيْرُمَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلاَهَا، أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لاَيَنْفَعُ، وَمِنْ قَلْبٍ لاَيَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ، وَمِنْ دَعْوَةٍ لاَيُسْتَجَابُ لَهَا


யாஅல்லாஹ்! இயலாமை, சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், வயோதிகம் மற்றும் கப்ர் வேதனை ஆகியவைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன். யாஅல்லாஹ்! என் உள்ளத்தில் உனது அச்சத்தை ஏற்படுத்துவாயாக! அதனை தூய்மைப்படுத்துவாயாக! நீதான் அதனைத் தூய்மைப் படுத்துவோரில் மிகச் சிறந்தவன். நீயே அதன் பொறுப்பாளன். நீயே அதன் தலைவனுமாவாய். யாஅல்லாஹ்! பயனளிக்காத கல்வியைவிட்டும் (உனக்கு) பயப்படாத உள்ளத்தை விட்டும் நிறைவடையாத மனதை விட்டும் பதிலளிக்கப்படாத பிரார்த்தனையை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


--------------------------------------------------------------------------------

8- أَللَّهُمَّ اهْدِنِيْ وَسَدِّدْنِيْ، أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْهُدَى وَالسَّدَادَ


08. யாஅல்லாஹ்! எனக்கு நேர்வழியைக் காட்டுவாயாக! அதில் உறுதியாக நிற்கச் செய்வாயாக! யாஅல்லாஹ்! நேர்வழியையும் அதில் உறுதியாக நிற்பதையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.


--------------------------------------------------------------------------------

9-أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَ ةِ نِقْمَتِكَ، وَجَمِيْعِ سَخَطِكَ


09. யாஅல்லாஹ்! உனது அருட்கொடைகள் (என்னை விட்டு) நீங்குவதை விட்டும் ஆரோக்கியத் தன்மை (என்னைவிட்டு) மாறுவதை விட்டும் உனது திடீர் தண்டனையை விட்டும் உனது அனைத்துக் கோபங்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


--------------------------------------------------------------------------------

10-أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ، وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ


10. யாஅல்லாஹ்! நான் செய்தவைகளின் தீயவிளைவை விட்டும் நான் செய்யாதவற்றின் தீயவிளைவுகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


--------------------------------------------------------------------------------




11-أَللَّهُمَّ أَكْثِرْ مَالِيْ وَوَلَدِيْ ، وَبَارِكْ لِيْ فِيْمَا أَعْطَيْتَنِيْ

11. யாஅல்லாஹ்! எனக்கு செல்வத்தையும் சந்ததியையும் அதிகப்படுத்துவாயாக! மேலும் எனக்கு நீ கொடுத்தவற்றில் அபிவிருத்தி செய்வாயாக!


--------------------------------------------------------------------------------

12-لاَ إِلَـهَ إِلاَّ اللهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ، لاَإِلَـهَ إِلاَّ اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ، لاَ إِلَـهَ إِلاَّ اللهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ اْلأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ

12. வணக்கத்திற்குரியவன் மகத்தான, கணிவான அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. வணக்கத்திற்குரியவன் மேன்மைமிக்க, அர்ஷின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. வணக்கத்திற்குரியவன் வானங்கள், பூமி மற்றும் கண்ணியத்திற்குரிய அர்ஷின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.


--------------------------------------------------------------------------------

13-أَللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُوْ، فَلاَ تَكِلْنِيْ إِلَى نَفْسِيْ طَرَفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِيْ شَأْنِيْ كُلَّهُ، لاَ إِلَـهَ إِلاَّ أَنْتَ


13. யாஅல்லாஹ்! நான் உனது அருளையே ஆதரவு வைத்துள்ளேன். (அதனை) கண் மூடித்திறக்கும் அளவிற்குக் கூட (நிறுத்தி) எனது உள்ளத்தை ஏங்க வைத்து விடாதே!. மேலும் என்னுடைய அனைத்து காரியங்களையும் சீர்படுத்துவாயாக! வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை.


--------------------------------------------------------------------------------

14-لاَ إِلَـهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّيْ كُنْتُ مِنَ الْظَالِمِيْنَ


14. வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர வேறில்லை. நீயே தூய்மையானவன். நிச்சயமாக நான் அநீதம் இழைத்தோரில் ஒருவனாகி விட்டேன்.


--------------------------------------------------------------------------------

15-أَللَّهُمَّ إِنِّيْ عَبْدُكَ، اِبْنُ عَبْدِكَ، اِبْنُ أَمَتِكَ، نَاصِيَتِيْ بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِيْ كِتَابِكَ أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ،أَوِاسْتَأْثَرْتَ بِهِ فِيْ عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيْعَ قَلْبِيْ،وَنُوْرَ صَدْرِيْ وَجَلاَءَ حُزْنِيْ وَذَهَابَ هَمِّيْ


15. யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உனது அடிமை. உனது அடிமை மற்றும் உனது அடிமைப் பெண்ணின் மகன். எனது நெற்றிப்பிடி உன் கையில் உள்ளது. அதனை உனது சட்டத்தின்படி நீ செயல்படுத்துகிறாய். எனக்கு நீதமான தீர்ப்பு வழங்குகிறாய். உனக்கு நீயே சூட்டிக்கொண்ட, உனது வேதத்தில் நீ இறக்கியருளிய, உனது படைப்பினங்களில் ஒருவருக்கு (நபிக்கு) நீ கற்றுக் கொடுத்த, உனது மறைவான ஞானத்தில் நீயே தேர்ந்தெடுத்துக் கொண்ட உன்னுடைய அனைத்துப் பெயர்களின் பொருட்டால் கேட்கிறேன். (இறைவா!) குர்ஆனை என் உள்ளத்தை பொலிவூட்டக் கூடியதாக, நெஞ்சின் ஒளியாக, கவலையை நீக்கக்கூடியதாக, துன்பத்தை போக்கக் கூடியதாக ஆக்குவாயாக!


--------------------------------------------------------------------------------

16-أَللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ


16. யாஅல்லாஹ்! உள்ளங்களை திருப்பக் கூடியவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பக்கம் திருப்புவாயாக!


--------------------------------------------------------------------------------

17-يَا مُقَلَّبَ الْقُلُوْبِ ثَبِّتْ قَلْبِيْ عَلَى دِيْنِكَ


17. உள்ளங்களை புரட்டுபவனே! என் உள்ளத்தை உன் மார்க்கத்தில் நிலைத்து நிற்கச் செய்வாயாக!


--------------------------------------------------------------------------------

18-أَللَّهُمَّ أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَاْلآخِرَةِ


18. யாஅல்லாஹ்! இவ்வுலகிலும் மறுவுலகிலும் உன்னிடம் நலவைக் கேட்கிறேன்.


--------------------------------------------------------------------------------

19-أَللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَـتِيْ فِي اْلاُمُوْرِ كُلِّهَا، وَأَجِرْنِيْ مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ اْلآخِرَةِ


19. யாஅல்லாஹ்! என்னுடைய அனைத்து காரியங்களின் முடிவுகளையும் சிறந்ததாக ஆக்குவாயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் என்னை பாதுகாப்பாயாக!


--------------------------------------------------------------------------------

20-رَبِّ أَعِنِّيْ وَلاَتُعْنِ عَليَّ، وَانْصُرْنِيْ وَلاَ تَنْصُرْ عَلَيَّ، وَامْكُرْ لِيْ وَلاَ تَمْكُرْ عَلَيَّ، وَاهْدِنِيْ وَيَسِّرِ الْهُدَي إِلَيَّ، وَانْصُرْنِيْ عَلَى مَنْ بَغَي عَلَيَّ، رَبِّ اجْعَلْنِيْ لَكَ شَاكِرًا، لَكَ ذَاكِرًا، لَكَ رَهَّابًا، لَكَ مِطْوَاعًا، إِلَيْكَ مُخْبِتًا أَوَّاهًا مُنِيْبًا، رَبِّ تَقَبَّلْ تَوْبَتِيْ، وَاغْسِلْ حَوْبَـتِيْ، وَأَجِبْ دَعْوَتِيْ، وَثَبِّتْ حُجَّتِيْ، وَاهْدِ قَلْبِيْ، وَسَدِّدْ لِسَانِيْ، وَاسْلُلْ سَخِيْمَةَ قَلْبِيْ

20. யாஅல்லாஹ்! எனக்கு கிருபைசெய்வாயாக! எனக்கு பாதகமாக கிருபை செய்யாதிருப்பாயாக! எனக்கு உதவி செய்வாயாக! எனக்கு பாதகமாக உதவி செய்யாதிருப்பாயாக! எனக்காக சூழ்ச்சி செய்வாயாக! எனக்கு பாதகமாக சூழ்ச்சி செய்யாதிருப்பாயாக! எனக்கு நேர்வழியை காட்டுவாயாக! நேர்வழியை எனக்கு எளிதாக்குவாயாக! எனக்கு அநீதி செய்பவருக்கு பாதகமாக எனக்கு உதவிசெய்வாயாக! உனக்கு நன்றி செலுத்துபவனாக, உன்னை நினைவு கூர்பவனாக, உன் மீது அதிக அச்சம் கொள்பவனாக, உனக்கு வழிப்படுபவனாக, கட்டுப்படுபவனாக, அடிபணிபவனாக, சரணடைபவனாக என்னை ஆக்குவாயாக! இறைவா! எனது பாமன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக! எனது பாவங்களை போக்கிடுவாயாக! எனது பிரார்த்தனைக்கு பதிலளிப்பாயாக! எனது ஆதாரங்களை நிலைபெறச் செய்வாயாக! எனது உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! எனது நாவை பலப்படுத்துவாயாக! எனது உள்ளத்தின் கசடுகளை அகற்றிடுவாயாக!


--------------------------------------------------------------------------------




21-أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَاسَأَلَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَااسْتَعَاذَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،وَأَنْتَ الْمُسْتَعَانُ، وَعَلَيْكَ الْبَلاَغُ، وَلاَ حَوْلَ وَلاَقُوَّةَ إِلاَّ بِاللهِ

21. யாஅல்லாஹ்! உன்னுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கேட்ட அனைத்து நல்லவற்றையும் நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் உன்னுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பாதுகாவல் தேடிய அனைத்து தீமைகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். உதவி செய்பவனும் நீயே! வழிகாட்டுபவனும் நீயே! அல்லாஹ் (விதித்தவற்றிலிருந்து) விலகவோ, (விதிக்காதவற்றை செய்ய) சக்தி பெறவோ அவன் துணையின்றி முடியாது.


--------------------------------------------------------------------------------

22-أَللَّهُمَّ إِنِّيْ أَعُـوْذُ بِكَ مِنْ شَرِّ سَمْـعِيْ، وَمِنْ شَرِّ بَصَرِيْ، وَمِنْ شَرِّ لِسَانِيْ، وَمِنْ شَرِّ قَلْـبِيْ، وَمِنْ شَرِّ مَنِـيِّـيْ .

22. யாஅல்லாஹ்! என்னுடைய செவியின் தீங்கை விட்டும் பார்வையின் தீங்கை விட்டும் நாவின் தீங்கைவிட்டும் உள்ளத்தின் தீங்கைவிட்டும் எண்ணத்தின் தீங்கைவிட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


--------------------------------------------------------------------------------

23-أَللَّهُمَّ إِنِّيْ أَعُـوْذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُوْنِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ اْلأَسْقَامِ

23. யாஅல்லாஹ்! வெண்குஷ்டம், பைத்தியம், உடலுறுப்புகள் அழுகிவிழும் நோய் மற்றும் பிற தீயநோய்கள் ஆகிய அனைத்திலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


--------------------------------------------------------------------------------

24-أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ اْلأَخْلاَقِ وَاْلأَعْمَالِ وَاْلأَهْوَاءِ

24. யாஅல்லாஹ்! வெறுக்கத்தக்க குணங்கள், தீயசெயல்கள், கெட்ட ஆசைகள் ஆகியவற்றை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


--------------------------------------------------------------------------------

25-أَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيْمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ.

25. யாஅல்லாஹ்! நிச்சயமாக நீயே மன்னிப்பவன். கண்ணியத்திற்குரியவன். மன்னிப்பை விரும்புகின்றவன். எனவே என்னை மன்னித்தருள்வாயாக!


--------------------------------------------------------------------------------

26- أَللَّهُمَّ إِنِّيْ أَسْـأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ،وَتَرْكَ الْمُنْكَرَاتِ،وَحُبَّ الْمَسَاكِيْنِ،وَأَنْ تَغْفِرَ لِيْ وَتَرْحَمَنِيْ، وَإِذَا أَرَدْتَ فِتْنَةَ قَوْمٍ فَتَوَفَّنِيْ غَيْرَ مَفْتُوْنٍ، وَأَسْأَلُكَ حُبَّكَ،وَحُبَّ مَنْ يُّحِبُّك،وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُـنِيْ إِلَىحُبِّكَ.

26. யாஅல்லாஹ்! நான் நல்லறங்களை செய்ய, தீமைகளை விட்டுவிட, ஏழை களை நேசிக்க அருள்புரியுமாறும், என்னை நீ மன்னித்து, கிருபை செய்யுமாறும், நீ ஏதேனும் ஒரு சமூகத்தினரை சோதிக்க நினைத்தால் அச்சோதனைக் குள்ளாக்கப்படாதவனாக என் உயிரைக் கைப்பற்றி விடுமாறும் உன்னிடம் கேட்கிறேன். உனது நேசத்தையும் நீ நேசிப்போரின் நேசத்தையும் உனது நேசத்தின் பக்கம் அழைத்துச் செல்லும் செயல்களை நேசிப்பதையும் உன்னிடம் கேட்கிறேன்.


--------------------------------------------------------------------------------

27-أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ، عَاجِلِهِ وَآجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ وَمَالَمْ أَعْلَمْ، وَأَعُوْذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ، عَاجِلِهِ وَآجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ وَمالَمْ أَعْلَمْ، أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ عَبْـدُكَ وَنَبِيُّكَ، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا إسْتَعَاذَ بِكَ مِنْهُ عَبْدُكَ وَنَبِيُّكَ، أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ، وَمَا قَرَّبَ إِلَيْهَامِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ، وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قَضَاءٍ قَضَيْـتَـهُ لِيْ خَيْرًا .

27. யாஅல்லாஹ்! நான் அறிந்திருக்கின்ற மற்றும் அறியாத அனைத்து நன்மைகளையும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் (தருமாறு) உன்னிடம் கேட்கிறேன். நான் அறிந்திருக்கின்ற மற்றும் அறியாத அனைத்து தீமைகளை விட்டும் இவ்லகிலும் மறுவுலகிலும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! உன்டைய அடியாரும்; நபியுமாகிய (முஹம்மது-ஸல்-) அவர்கள் கேட்ட நல்லவைகள் அனைத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். உன்னுடைய அடியாரும் நபியுமாகிய (முஹம்மது-ஸல்) அவர்கள் பாதுகாவல் தேடிய தீமைகள் அனைத்தை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! சொர்க்கத்தையும் அதன் பக்கம் நெருக்கி வைக்கும் சொல் மற்றும் செயலையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் நரகத்தை விட்டும் அதன் பக்கம் நெருக்கி வைக்கும் சொல் மற்றும் செயலை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் நீ எனக்கு நிர்ணயித்துள்ள அனைத்து தீர்ப்புகளையும் (ஏற்பாடுகளையும்) எனக்கு நல்லதாக ஆக்கிவைக்குமாறும் உன்னிடம் வேண்டுகிறேன்.


--------------------------------------------------------------------------------

28-أَللَّهُمَّ احْفَظْنِيْ بِاْلإِسْلاَمِ قَائِمًا، وَاحْفَظْنِيْ بِاْلإِسْلاَمِ قَاعِدًا،وَاحْفَظْنِيْ بِاْلإِسْـلاَمِ رَاقِـدًا وَلاَ تُشْمِتْ بِيْ عَـدُوًّا وَلاَ حَاسِدًا، أَللَّهُمَّ إِنِّيْ أَسْـأَلُكَ مِنْ كُلِّ خَيْرٍ خَزَائِنُهُ بِيَدِكَ وَأَعُوْذُ بِكَ مِنْ كُلِّ شَرٍّ خَزَائِنُهُ بِيَدِكَ

28. யாஅல்லாஹ்! நான் நிற்கும்போதும் உட்காரும் போதும் படுக்கும் போதும் இஸ்லாத்தைப் பேணி நடப்பவனாக என்னை நீ ஆக்குவாயாக! மேலும் என்னை விரோதி மற்றும் பொறாமைக்காரனின் பரிகாசத்திற்கு ஆட்படுத்தா திருப்பாயாக! யாஅல்லாஹ்! உன்னிடமுள்ள அனைத்து நல்ல பொக்கிஷங்களிலிருந்தும் (எனக்கு தருமாரு) நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் உன்னிடமுள்ள அனைத்து தீய பொக்கிஷங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


--------------------------------------------------------------------------------

29-أَللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا تَحُوْلُ بِهِ بَيْنَـنَا وَبَيْنَ مَعَاصِيْكَ، وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ، وَمِنَ الْيَقِيْنِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مَصَائِبَ الدُّنْيَا، أَللَّهُمَّ مَتِّعْنَا بِأَسْمَاعِنَا، وَأَبْصَارِنَا، وَقُوَّاتِنَا مَا أَحْيَيْتَنَا، وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا، وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا، وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَاناَ، وَلاَتَجْعَلْ مُصِيْبَتَنَا فِيْ دِيْنـِنَا، وَلاَتَجْعَلِ الدُّنْيَـا أَكْبَـرَ هَمِّنَا وَلاَمَبْـلَغَ عِلْمِنَا، وَلاَتُسَلِّطْ عَلَيْنَا مَنْ لاَّيَرْحَمُنَا.

29. யாஅல்லாஹ்! உனக்கு மாறுசெய்வதை விட்டும் எங்களை தடுக்கக் கூடிய (உன்னைப் பற்றிய) அச்சத்தையும் உன்னுடைய சொர்க்கத்தைப் பெற்றுத்தரும் வழிபாட்டையும் உலக சோதனைகளை எளிதாகக் கருதச் செய்யும் உறுதியையும் எங்களுக்குத் தருவாயாக! இறைவா! எங்களுடைய செவிப் புலன்களையும் பார்வைகளையும் (உடல்) சக்திகளையும் நீ எங்களை வாழவைக்கும்வரை (குறையின்றி) இயங்கச் செய்வாயாக! அதனை எங்கள் வாரிசுகளுக்கும் ஆக்குவாயாக! எங்களுக்கு அநீதம் செய்தவர்களைப் பழி வாங்குவாயாக! எங்கள் மீது விரோதம் கொண்டவர்களுக்கு பாதகமாக எங்களுக்கு நீ உதவிசெய்வாயாக! எங்களுடைய மார்க்கத்தில் எங்களுக்கு சோதனைகளை ஏற்படுத்தாதிருப்பாயாக! இவ்வுலகையே எங்கள் நோக்கமாவும் எங்கள் அறிவின் எல்லையாகவும் ஆக்காதிருப்பாயாக! எங்கள் மீது இரக்கம் காட்டாதவரை எங்கள் பொருப்பாளியாக ஆக்கா திருப்பாயாக!


--------------------------------------------------------------------------------

30-أَللَّهُمَّ إِنِّيْ أَعُـوْذُ بِكَ مِنَ الْجُبْنِ،وَأَعـُوْذُ بِكَ مِنَ الْبُخْـلِ، وَأَعُـوْذُبِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَعَذَابِ الْقَبْرِ

யாஅல்லாஹ்! கோழைத்தனம், கஞ்சத்தனம், முதுமைவரை என்னுடைய ஆயுட்காலம் நீடித்தல், உலகசோதனை, கப்ரின் வேதனை ஆகியவைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


--------------------------------------------------------------------------------




31-أَللَّهُمَّ اغْفِرْ لِيْ خَطِيْئَتِيْ وَجَهْلِيْ وَإِسْرَافِيْ فِيْ أَمْرِيْ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ أَللَّهُمَّ اغْفِرْ لِيْ هَزْلِيْ وَجِدِّيْ وَخَطَئِيْ وَعَمْدِيْ وَكُلُّ ذَلِكَ عِنْدِيْ

யாஅல்லாஹ்! என்னுடைய குற்றங்களையும் என்னுடைய அறியாமையால் விளைந்த தவறுகளையும் என்னுடைய செயல்களில் நான் வரம்பு மீறியதையும் நீ மன்னித்தருள்வாயாக! இவைகளைப் பற்றி என்னைவிட நீயே நன்கறிந்தவன். யாஅல்லாஹ்! நான் விளையாட்டாகவோ, வேண்டுமென்றோ, அறியாமலோ, அறிந்தோ செய்தவைகளையும் மேலும் என்னிடம் நிகழ்ந்த அனைத்து -பாவங்களையும்- மன்னித் தருள்வாயாக!


--------------------------------------------------------------------------------

32-أَللَّهُمَّ اغْفِرْلِيْ، وَارْحَمْنِيْ، وَاهْدِنِيْ، وَعَافِنِيْ، وَارْزُقْنِيْ

யாஅல்லாஹ்! என்னை மன்னித்து விடுவாயாக! கிருபை செய்வாயாக! நேர்வழி காட்டுவாயாக! சுகமளிப்பாயாக! உணவளிப்பாயாக!


--------------------------------------------------------------------------------

33-أَللَّهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمًا كَثِيْرًا،وَلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ، فَاغْفـِرْ لِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِيْ، إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ

யாஅல்லாஹ்! எனக்கு நானே மிக அதிகமாக அநீதி இழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர வேறு எவராலும் எனது பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் பேரருளால் என்னை மன்னித்து, கிருபையும் செய்வாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பவனும் கிருபை செய்பவனுமாவாய்.


--------------------------------------------------------------------------------

34-أَللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِعِزَّتِكَ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَنْ تُضِلَّنِيْ، أَنْتَ الْحَيُّ الَّذِيْ لاَ يَمُوْتُ، وَالْجِنُّ وَاْلإِنْسُ يَمُوْتُوْنَ

யாஅல்லாஹ்! நான் உனக்கே கட்டுப்பட்டேன். உன்மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன். உன் மீதே உறுதி கொண்டுள்ளேன். உன்பக்கமே மீண்டுள்ளேன். உன்னிடமே முறையிடுகிறேன். யாஅல்லாஹ்! வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிர வேறுயாருமில்லை. உன்னுடைய கண்ணியத்தின் பொருட்டால் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன், என்னை நீ வழிதவறச் செய்யாதிருப்பாயாக! நீயே மரணிக்காத நித்திய ஜீவன்;. மனித, ஜின் இனத்தினர் மரணித்துவிடுவர்.


--------------------------------------------------------------------------------

35-أَللَّهُمَّ إِنَّا نَسْـأَلُكَ مُـوْجِبَاتِ رَحْمَـتِكَ وَعَزَائِمَ مَغْفِـرَتِكَ وَالسَّـلاَمَةَ مِنْ كُلِّ إِثْمٍ وَالْغَنِيْمَةَ مِنْ كُلِّ بِرٍّ وَالْفَوْزَ بِالْجَنَّةِ وَالنَّجَاةَ مِنَ النَّارِ.

யாஅல்லாஹ்! உனது அருளைப் பெற்றுத்தரும் செயல்களையும் உனது மன்னிப்பில் உறுதி கொள்ளும் நிலையையும் அனைத்து பாவங்களை விட்டு பாதுகாப்பையும் அனைத்து நல்லறங்களின் பிறதி பலன்களையும் சொர்க்கத்தைப் பெற்று வெற்றி பெறவும் நரகை விட்டும் ஈடேற்றம் பெறவும் (அருள்புரியுமாறு) நிச்சயமாக நாங்கள் உன்னிடம் கேட்கின்றோம்.


--------------------------------------------------------------------------------

36-أَللَّهُمَّ اجْعَلْ أَوْسَعَ رِزْقِكَ عَلَيَّ عِنْدَ كِبَرِ سِنِّيْ، وَانْقِطَاعِ عُمُرِيْ

யாஅல்லாஹ்! எனது முதுமைப் பருவத்திலும் எனது ஆயுள் முடியும் நிலையிலும் உன்னுடைய அருட் கொடைகளை (ரிஸ்கை) எனக்கு விசாலப்படுத்துவாயாக!


--------------------------------------------------------------------------------

37-أَللَّهُمَّ اغْفِرْ لِيْ ذَنْبِيْ، وَوَسِّعْ لِيْ فِيْ دَارِيْ،وَبَارِكْ لِيْ فِيْ رِزْقِيْ

யாஅல்லாஹ்! என்னுடைய பாவத்தை மன்னிப்பாயாக! என்னுடைய வீட்டை விசாலமாக்குவாயாக! என்னுடைய உணவில் அபிவிருத்தி செய்வாயாக!


--------------------------------------------------------------------------------

38-اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ،وَرَحْمَتِكَ فَإِنَّهُ لاَ يَمْلِكُهَا إِلاَّ أَنْتَ

யாஅல்லாஹ்! உன்னுடைய தயாளத் தன்மையிலிருந்தும் உன்னுடைய அருளிலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். ஏனெனில் இவைகளை உன்னைத் தவிர வேறு எவரும் சொந்தம் கொள்ள முடியாது.


--------------------------------------------------------------------------------

39-أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ التَّرَدِّيْ، وَالْهَدْمِ، وَالْغَرَقِ وَالْحَرَقِ، وَأَعُوْذُ بِكَ أَنْ يَتَخَـبَّطَنِيَ الشَّـيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوْذُ بِكَ أَنْ أَمُوْتَ فِيْ سَبِـيْلِكَ مُدْبِرًا، وَأَعُوْذُ بِكَ أَنْ أَمُوْتَ لَدِيْغًا

யாஅல்லாஹ்! உயரத்திலிருந்து கீழே விழுந்தோ, இடிந்து விழுந்தோ, மூழ்கியோ, எரிந்தோ இறப்பதை விட்டும், மரண நேரத்தில் ஷைத்தான் என்னை தீண்டுவதை விட்டும், உன்னுடைய பாதையில் (போர் செய்யும்போது) புறமுதுகு காட்டிஓடி இறப்பதை விட்டும், (விஷ ஜந்துக்களால்) கொட்டப்பட்டு இறப்பதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


--------------------------------------------------------------------------------

40-أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْجُوْعِ، فَإِنَّهُ بِئْسَ الضَّجِيْعُ، وَأَعُوْذُ بِكَ مِنَ الْخِيَانَةِ، فَإِنَّهَا بِئْسَتِ الْبِطَانَةُ

யாஅல்லாஹ்! பசியை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில் நிச்சயமாக அது மனிதனை கீழே சாய்ப்பதில் மிகவும் தீயது. மேலும் மோசடி செய்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில் நிச்சயமாக அது மிகக்கொடிய நம்பிக்கை துரோகமாகும்.


--------------------------------------------------------------------------------




41-أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَالْقَسْوَةِ وَالْغَفْلَةِ وَالْعَيْلَةِ وَالذِّلَّةِ وَالْمَسْكَنَةِ وَأَعُوْذُ بِكَ مِنَ الْفَقْرِوَالْكُفْرِ وَالْفُسُوْقِ وَالشِّقَاقِ وَالنِّفَاقِ وَالسُّمْعَةِ وَالرِّيَاءِ وَأَعُوْذُ بِكَ مِنَ الصَّمَمِ وَالْبَكَمِ وَالْجُنُوْنِ وَالْجُذَامِ وَالْبَرَصِ وَسَيِّئِ اْلأَسْقَامِ .

யாஅல்லாஹ்! இயலாமை, சோம்பல், கோழைத்தனம்;, கஞ்சத்தனம், முதுமை, கல்நெஞ்சம், பொடுபோக்கு, கஷ்டம், இழிவு, ஏழ்மை ஆகியவைகளை விட்டும் வறுமை, நிராகரித்தல், பாவச்செயல், பிரிவை ஏற்படுத்துதல், நயவஞ் சகத்தனம், பிறர் போற்றவேண்டும் என்பதற்காகச் செயல் படல், பிறர் பார்க்கவேண்டும் என்பதற்காகச் செயல்படல் -முகஸ்த்துதி- ஆகியவைகளை விட்டும், செவிடு, ஊமை, பைத்தியம், உடலுறுப்புக்கள் அழுகி விழும்நோய், வெண் குஷ்டம் மற்றும் கெட்ட அனைத்து நோய்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


--------------------------------------------------------------------------------

42-أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْفَقْرِ، وَالْقِلَّةِ، وَالذِّلَّةِ، وَأَعُوْذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ

இறைவா! வறுமை, ஏழ்மை, இழிவு ஆகியவற்றை விட்டும் நான் பிறருக்கு அநீதம் செய்வதை விட்டும் பிறரின் அநீதிக்கு ஆளாவதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன்.


--------------------------------------------------------------------------------

43-أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ جَارِ السُّوْءِ فِيْ دَارِ الْمُقَامَةِ فَإِنَّ جَارَ الْبَادِيَةِ يَتَحَوَّلُ

இறைவா! (நான்) வசிக்கும் இடத்தில் தீய அண்டை வீட்டாரை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில் நிச்சயமாக அண்டை வீட்டார் திசைமாறச் செய்து விடுவார்கள்.


--------------------------------------------------------------------------------

44- أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ قَلْبٍ لاَّيَخْشَعُ، وَمِنْ دُعَاءٍ لاَّيُسْمَعُ، وَمِنْ نَفْسٍ لاَّتَشْبَعُ، وَمِنْ عِلْمٍ لاَّيَنْفَعُ، أَعُوْذُ بِكَ مِنْ هَؤُلاَءِ اْلأَرْبَعِ

யாஅல்லாஹ்! (உனக்குப்) பயப்படாத உள்ளம், ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனை, நிறைவடையாத மனம், பயனளிக்காத கல்வி ஆகிய இந்த நான்கு தன்மைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம்; பாதுகாப்புத் தேடுகிறேன்.


--------------------------------------------------------------------------------

45-أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ يِوْمِ السُّوْءِ، وَمِنْ لَيْلَةِ السُّوْءِ، وَمِنْ سَاعَةِ السُّوْءِ، وَمِنْ صَاحِبِ السُّوْءِ، وَمِنْ جَارِ السُّوْءِ فِيْ دَارِ الْمُقَامَةِ

யாஅல்லாஹ்! பகலில் ஏற்படும் தீங்கை விட்டும் இரவில் ஏற்படும் தீங்கை விட்டும் தீங்கு ஏற்படும் நேரத்தை விட்டும் தீய நண்பர்களை விட்டும் மற்றும் (நான்) வசிக்கும் இடத்தில் தீய அண்டை வீட்டாரை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


--------------------------------------------------------------------------------

46-أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ ، وَأَسْتَجِيْرُ بِكَ مِنَ النَّارِ .

யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் சொர்க்கத்தை கேட்கிறேன். மேலும் நரகத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


--------------------------------------------------------------------------------

47- أَللَّهُمَّ فَقِّهْنِيْ فِي الدِّيْنِ

இறைவா! எனக்கு மார்க்க விளக்கத்தைத் தருவாயாக!


--------------------------------------------------------------------------------

48-أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لاَ أَعْلَمُ.

யாஅல்லாஹ்! நான் அறிந்து கொண்டே உனக்கு இணைவைப்பதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நான் அறியாமல் செய்தவற்றிற்காக உன்னிடம் பாவமன்னிப்பு கேட்கிறேன்.


--------------------------------------------------------------------------------

49-أَللَّهُمَّ انْفَعْنِيْ بِمَا عَلَّمْتَنِيْ،وَعَلِّمْنِيْ مَا يَنْفَعُنِيْ وَزِدْنِيْ عِلْمًا

யாஅல்லாஹ்! எனக்கு நீ கற்றுக் கொடுத்தவற்றை எனக்கு பயனுள்ளதாக ஆக்கிவைப்பாயாக! எனக்கு பயனளிப்பவற்றையே கற்றுத் தருவாயாக! மேலும் என்னுடைய கல்வியை அதிகப்படுத்துவாயாக!


--------------------------------------------------------------------------------

50-أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَـيِّـبًا،وَعَمَلاً مُتَقَبَّلاً

யாஅல்லாஹ்! பயனளிக்கும் கல்வியையும் தூய்மையான (ஹலாலான) உணவையும் ஏற்றுக்கொள்ளப்படும் நல்லறத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.


--------------------------------------------------------------------------------




51-أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ يَاأَللهُ بِأَنَّكَ الْوَاحِدُ اْلأَحَدُ الصَّمَدُ الَّذِيْ لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًاأَحَدٌ أَنْ تَغْفِرَ لِيْ ذُنُوْبِيْ إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ

யாஅல்லாஹ்! நிச்சயமாக நீ தனித்தவன். ஒருவன், தேவையற்றவன். யாரையும் பெற்றெடுக்காதவன். யாராலும் பெறப்படாதவன். யாராலும் நிகராக முடியாதவன். யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னுடைய பொருட்டால் கேட்கின்றேன் என்னுடைய பாவங்களை மன்னித்து விடுவாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பவனாகவும் கிருபை செய்பவனாகவும் உள்ளாய்.


--------------------------------------------------------------------------------

52-أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدُ، لاَإِلَهَ إِلاَّ أَنْتَ، وَحْدَكَ لاَشَرِيْكَ لَكَ، الْمَنَّانُ، يَابَدِيْعَ السَّمَوَاتِ وَاْلأَرْضِ، يَاذَا الْجَلاَلِ وَاْلإِكْرَامِ، يَا حَيُّ يَاقَيُّوْمُ، إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ، وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ

யாஅல்லாஹ்! நிச்சயமாக புகழனைத்தும் உனக்குரியதே! உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தனித்தவன், இணையற்றவன். கொடையாளன். வானங்களை யும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவனே! வல்லமை மிக்கவனே! கண்ணியத்திற்குரியவனே! நித்தியஜீவனே! நிரந்தர மானவனே! நிச்சயமாக நான் உன்னுடைய பொருட்டால் சொர்க்கத்தைக் கேட்கிறேன், மேலும் நரகைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


--------------------------------------------------------------------------------

53-أَللَّهُمَّ اغْفِرْ لِيْ، وَتُبْ عَلَيَّ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُـوْرُ .

யாஅல்லாஹ்! என்னை மன்னிப்பாயாக! என்னுடைய பாவ மன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பை ஏற்றுக்கொள்பவனும் மன்னிப்பவனுமாவாய்.


--------------------------------------------------------------------------------

54-أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ بِأَنِّيْ أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللهُ لاَإِلَهَ إِلاَّ أَنْتَ، اْلأَحَدُ، الصَّمَدُ الَّذِيْ لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

யாஅல்லாஹ்! நிச்சயமாக நீயே இறைவன். வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. நீதனித்தவன். தேவையற்றவன். யாரையும் பெற்றெடுக்காதவன். யாராலும் பெறப்படாதவன். யாராலும் நிகராக முடியாதவன் என்று நான் சாட்சி கூறியதின் பொருட்டால் நான் உன்னிடம் (என் தேவைகளைக்) கேட்கிறேன்.


--------------------------------------------------------------------------------

55-أَللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبَ، وَقُدْرَتِكَ عَلَي الْخَلْقِ، أَحْيِنِيْ مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِّيْ، وَتَوَفَّنِيْ إِذَا عَلِمْتَ الْوَفَاةَ خَيْرًا لِّيْ، أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ، وَأَسْأَلُكَ كَلِمَةَ الْحَقِّ فِي الرِّضَا وَالْغَضَبِ، وَأَسْأَلُكَ الْقَصْدَ فِي الْغِنَي وَالْفَقْرِ، وَأَسْأَلُكَ نَعِيْمًا لاَيَنْفَدُ،وَأَسْأَلُكَ قُرَّةَ عَيْنٍ لاَتَنْقَطِعُ، وَأَسْأَلُكَ الرِّضَا بَعْدَ الْقَضَاءِ، وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ، وَأَسْأَلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَي وَجْهِكَ، وَالشَّوْقَ إِلَي لِقَائِكَ فِيْ غَيْرِ ضَرَّاءَ مُضِرَّةٍ، وَلاَفِتْنَةٍ مُّضِلَّةٍ، أَللَّهُمَّ زَيِّنَّا بِزِيْنَةِ اْلإِيْمَانِ، وَاجْعَلْنَا هُدَاةً مُهْتَدِيْنَ

யாஅல்லாஹ்! உன்னுடைய மறைவானஞானம் மற்றும் படைப்பினங்கள் மீதுள்ள உனது ஆற்றல் ஆகியவற்றின் பொருட்டால் கேட்கிறேன். நான் வாழ்வது எனக்கு சிறந்தது என்று நீ அறிந்திருந்தால் என்னை வாழச்செய்வாயாக! நான் இறப்பதுதான் எனக்கு சிறந்தது என்று நீ அறிந்திருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக! இறைவா! நான் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் உன்னைப் பயப்படவும் விருப்பிலும் வெறுப்பிலும் உண்மையைப் பேசவும் வறுமையிலும் செழிப்பிலும் நடுநிலையையும் நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் முடிந்துவிடாத அருட்கொடையையும் விடைபெறாத கண் குளிச்சியையும் விதியை பொருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் மரணத்திற்குப் பின் குளிர்ந்த (சொர்க்க) வாழ்வையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் வழி கேட்டின் குழப்பத்திலும் தீயவிளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டு விடாது உன்னை சந்திப்பதின் ஆசையையும் உன் திருமுகத்தைப் பார்ப்பதில் இன்பத்தையும் உன்னிடம் கேட் கிறேன். யாஅல்லாஹ்! ஈமானின் பொலிவூட்டும் தன்மைகளைக் கொண்டு எங்களை அலங்கரிப்பாயாக! எங்களை நேர்வழி பெற்றோரின் வழியில் ஆக்குவாயாக!


--------------------------------------------------------------------------------

56-أَللَّهُمَّ ارْزُقْنِيْ حُبَّكَ، وَحُبَّ مَنْ يَنْفَعُنِيْ حُبُّهُ عِنْدَكَ، أَللَّهُمَّ مَا رَزَقْتَـنِيْ مِمَّا أُحِبُّ، فَاجْعَلْهُ قُوَّةً لِّيْ فِيْمَا تُحِبُّ، أَللَّهُمَّ مَا زَوَيْتَ عَنِّيْ مِمَّا أُحِبُّ، فَاجْعَلْهُ فَرَاغًا لِّيْ فِيْمَا تُحِبُّ .

யாஅல்லாஹ்! எனக்கு உன்னுடைய நேசத்தையும் நான் யாரை நேசித்தால் உனது நேசத்திற்குரியவனாக ஆக முடியுமோ அவரின் நேசத்தையும் எனக்குத் தந்தருள் புரிவாயாக!. யாஅல்லாஹ்! நான் விரும்பியதை நீ எனக்கு தந்துள்ளாய். எனவே நீ விரும்பும் செயல்களில் நான் ஈடுபட எனக்கு சக்தியூட்டக் கூடியதாக அதனை ஆக்குவாயாக! யாஅல்லாஹ்! நான் விரும்பிதை நீ என்னை விட்டும் தடுத்துவிட்டாய். எனவே நீ விரும்பும் செயல்களில் ஈடுபடும் வாய்ப்பாக அந்த இடைவெளியை எனக்கு ஆக்குவாயாக!


--------------------------------------------------------------------------------

57-أَللَّهُمَّ طَهِّرْنِيْ مِنَ الذُّنُوْبِ وَالْخَطَايَا، أَللَّهُمَّ َ نَقِّنِيْ مِنْهَا كَمَا يُنَقَّي الثَّوْبُ اْلأَبْيَضُ مِنَ الدَّنَسِ، أَللَّهُمَّ طَهِّرْنِيْ بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِالْبَارِدِ

யாஅல்லாஹ்! பாவங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் என்னைத் தூய்மைப் படுத்துவாயாக! யாஅல்லாஹ்! அழுக்கிலிருந்து வெள்ளைத் துணியைத் தூய்மைப் படுத்தப்படுவதைப் போல் என்னை இவற்றிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! யாஅல்லாஹ்! பனிக்கட்டி, பனித்துளி, குளிர்ந்த நீர் ஆகியவைகளைக் கொண்டு என்னை தூய்மைப் படுத்துவாயாக!


--------------------------------------------------------------------------------

58-أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ وَسُوْءِ الْعُمُرِ وَفِتْنَةِ الصَّدْرِ وَعَذَابِ الْقَبْرِ

யாஅல்லாஹ்! கஞ்சத்தனம், கோழைத்தனம், முதுமை, மனக் குழப்பம், மண்ணரை வேதனை ஆகியவைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


--------------------------------------------------------------------------------

59-أَللَّهُمَّ رَبَّ جِبْرَائِيْلَ، وَمِيْكاَئِيْلَ، وَرَبَّ إِسْرَافِيْلَ، أَعُوْذُ بِكَ مِنْ حَرِّ النَّارِ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ

யாஅல்லாஹ்! ஜிப்ரயீல், மீகாயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் இறைவா! நரக வெப்பம் மற்றும் மண்ணரை வேதனை ஆகியவைகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


--------------------------------------------------------------------------------

60-أَللَّهُمَّ أَلْهِمْنِيْ رُشْدِيْ، وَأَعِذْنِيْ مِنْ شَرِّ نَفْسِيْ

யாஅல்லாஹ்! எனக்கு நேர்வழியைக் காட்டுவாயாக! மேலும் என்னுடைய மனதின் தீங்கிலிருந்து என்னைபாதுகாப்பாயாக!


--------------------------------------------------------------------------------




61-أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا ، وَأَعُوْذُبِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ

யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் பயனுள்ள கல்வியைக் கேட்கிறேன். மேலும் பயனளிக்காத கல்வியை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


--------------------------------------------------------------------------------

62-أَللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ، وَرَبَّ اْلأَرْضِ، وَرَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ، رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْئٍ، فَالِقَ الْحَبِّ وَالنَّوَى، وَمُنْزِلَ التَّوْرَاةِ وَاْلإِنْجِيْلِ وَالْفُرْقَانِ، أَعُوْذُ بِكَ مِنَ شَرِّ كُلِّ شَيْئٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ، أَللَّهُمَّ أَنْتَ اْلأَوَّلُ، فَلَيْسَ قَبْلَكَ شَيْئٌ، وَأَنْتَ اْلآخِرُ، فَلَيْسَ بَعْدَكَ شَيْئٌ، وَأَنْتَ الظَّاهِرُ، فَلَيْسَ فَوْقَكَ شَيْئٌ، وَأَنْتَ الْبَاطِنُ، فَلَيْسَ دُوْنَكَ شَيْئٌ، اِقْضِ عَنَّا الدَّيْنَ،وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ

யாஅல்லாஹ்! ஏழு வானங்களின் இறைவனே! பூமியின் இறைவனே! மகத்தான அர்ஷின் இறைவனே! எங்கள் இறைவனே! அனைத்துப் பொருட்களின் இறைவனே! விதையையும் வித்துவையும் பிளப்பவனே! தவ்ராத், இன்ஜீல், ஃபுர்கான் (குர்ஆன்) ஆகிய வேதங்களை இறக்கியவனே! அனைத்துத் தீமைகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில் அவற்றின் நெற்றிப்பிடி உன் ஆதிக்கத்தில்தான் உள்ளது. யாஅல்லாஹ்! நீயே ஆரம்பமானவன் உனக்கு முன்பு எதுவுமில்லை. நீயே கடைசியானவன். உனக்கு பின்பு எதுவுமில்லை. நீயே மிகைப்பவன். உனக்குமேல் எதுவுமில்லை. நீயே மறைவானவன். உனக்கு மறைவானது எதுவுமில்லை. எங்களுடைய கடனை நிறைவேற்றுவாயாக! மேலும் ஏழ்மையை விட்டும் (பாதுகாத்து, பிறர்) தேவையற்றவர்களாக ஆக்குவாயாக!


--------------------------------------------------------------------------------

63-أَللَّهُمَّ أَلِّفْ بَيْنَ قُلُوْبِنَا، وَأَصْلِحْ ذَاتَ بَيْنِنَا، وَاهْدِنَا سُبُلَ السَّلاَمِ ، وَنَجِّنَا مِنَ الظُّلُمَاتِ اِلَي النُّوْرِ، وَجَنِّبْنَا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، وَبَارِكْ لَنَا فِيْ أَسْمَاعِنَا، وَأَبْصَارِنَا، وَقُلُوْبِنَا، وَأَزْوَاجِنَا، وَذُرِّيَّاتِنَا، وَتُبْ عَلَيْنَا، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ، وَاجْعَلْنَا شَاكِرِيْنَ لِنِعَمِكَ، مُثْنِيْنَ بِهَا عَلَيْكَ، قَابِلِيْنَ لَهَا، وَأَتْمِمْهَا عَلَيْنَا.

யாஅல்லாஹ்! எங்கள் உள்ளங்களை இணைப்பாயாக! எங்களுக்கு மத்தியில் (நட்பை) சீர்படுத்துவாயாக! வெற்றிக்குரிய வழிகளை எங்களுக்கு காட்டு வாயாக! இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் எங்களுக்கு ஈடேற்றம் அளிப்பாயாக! வெளிப்படையான, அந்தரங்கமான அனைத்து மானக்கேடான விஷயங்களை விட்டும் எங்களை நீ பாதுகாப்பாயாக! எங்கள் செவிப்புலன்கள், பார்வைகள், உள்ளங்கள், மனைவியர்கள், வாரிசுகள் ஆகிய அனைத்திலும் அபிவிருத்தி செய்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பவனும் கிருபை செய்பவனுமாவாய். உன்னுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவர்களாக, அதற்காக உன்னை புகழ்பவர்களாக, உனது அருட்கொடைகளை ஏற்றுக் கொள்பவர்களாக எங்களை ஆக்குவாயாக! மேலும் எங்களுக்கு (உன்) அருட்கொடைகளை பரிபூரணப் படுத்துவாயாக!


--------------------------------------------------------------------------------

64-اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَيْرَ الْمَسْأَلَةِ، وَخَيْرَ الدُّعَاءِ، وَخَيْرَ النَّجَاحِ، وَخَيْرَ الْعَمَلِ، وَخَيْرَ الثَّوَابِ، وَخَيْرَ الْحَيَاةِ، وَخَيْرَ الْمَمَاتِ، وَثَـبِّـتْـنِيْ، وَثَقِّلْ مَوَازِيْنِيْ، وَحَقِّقْ إِيْمَاِنْي، وَارْفَعْ دَرَجَاتِيْ، وَتَقَـبَّلْ صَلاَتِيْ، وَاغْفِرْ خَطِيْئَتِيْ، وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلَي مِنَ الْجَنَّةِ، أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ فَوَاتِحَ الْخَيْرِ،وَخَوَاتِمَهُ،وَجَوَامِعَهُ، وَأَوَّلَهُ،وَظَاهِرَهُ،وَبَاطِنَهُ،وَالدَّرَجَاتِ الْعُلَي مِنَ الْجَنَّةِ آمِيْنَ
أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَيْرَ مَا آتِيْ، وَخَيْرَ مَا أَفْعَلُ، وَخَيْرَ مَا أَعْمَلُ، وَخَيْرَ مَابَطَنَ، وَخَيْرَ مَا ظَهَرَ، وَالدَّرَجاَتِ الْعُلَي مِنَ الْجَنَّةِ آمِيْنَ
أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ أَنْ تَرْفَعَ ذِكْرِيْ، وَتَضَعَ وِزْرِيْ، وَتُصْلِحَ أَمْرِيْ، وَتُطَهِّرْ قَلْبِيْ، وَتُحَصِّنَ فَرْجِيْ، وَتُنَوِّرَقَلْبِيْ، وَتَغْفِرَ لِيْ ذَنْبِيْ، وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلَي مِنَ الْجَنَّةِ آمِيْنَ
أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ أَنْ تُبَارِكَ فِيْ نَفْسِيْ، وَفِيْ سَمْعِيْ، وَفِيْ بَصَرِيْ، وَفِيْ رُوْحِيْ، وَفِيْ خَلْقِيْ، وَفِيْ خُلُقِيْ، وَفِيْ أَهْلِيْ، وَفِيْ مَحْيَايَ، وَفِيْ مَمَاتِيْ، وَفِيْ عَمَلِيْ، فَتَقَبَّلْ حَسَنَاتِيْ، وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلَى مِنَ الْجَنَّةِ آمِيْنَ

யாஅல்லாஹ்! நல்ல வேண்டுதல், நல்ல பிரார்த்தனை, நல்ல வெற்றி, நற்செயல், நற்கூலி, நல்வாழ்வு, நல்ல மரணம் ஆகிய வற்றை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். என்னை நீ உறுதிப்படுத்துவாயாக! (மறுமை நாளில்) என்னுடைய தராசைக் கனப்படுத்துவாயாக! என்னுடைய ஈமானை பலப்படுத்துவாயாக! என்னுடைய அந்தஸ்தை உயர்த்துவாயாக! என்னுடைய தொழுகையை ஏற்;றுக்கொள்வாயாக! என்னுடைய தவறுகளை மன்னிப்பாயாக! மேலும் நான் உன்னிடம் சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்த்தைக் கேட்கிறேன்.
யாஅல்லாஹ்! நல்ல வெற்றிகளையும், நல்லமுடிவுகளையும், அனைத்து நல்லவைகளையும் நல்ல துவக்கத்தையும் வெளிப்படையான, அந்தரங்கமான நல்லறங்களையும் சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துகளையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். ஏற்றுக் கொள்வாயாக!
யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் நல்லவற்றில் ஈடுபடவும், நல்லவற்றைத் தூண்டவும், நல்லவற்றைசெய்யவும், அந்தரங்கம் மற்றும் வெளிப்படையான அனைத்து நல்லவைகளையும் சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துகளையும் கேட்கிறேன். ஏற்றுக் கொள்வாயாக!
யாஅல்லாஹ்! நான் செய்யும் திக்ரை உயர்த்துமாறும் என்னுடைய பாவத்தை மன்னிக்குமாறும் என்னுடைய பிரச்சனைகளை சீராக்குமாறும் என்னுடைய உள்ளத்தை தூய்மைப்படுத்துமாறும் என்னுடைய மர்மஸ்தானத்தை பத்தினித்தனமாக ஆக்குமாறும் என்னுடைய உள்ளத்தை ஒளிமயமாக்குமாறும் என்னுடைய பாவங்களை மன்னிக்கு மாறும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துகளையும் கேட்கிறேன்.
யாஅல்லாஹ்! என்னுடைய உள்ளம், காது, பார்வை, உயிர், உடல், குணம், குடும்பம், வாழ்வு, மரணம், செயல் ஆகிய வற்றில் நீ அபிவிருத்தி செய்யுமாறு நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் என்னுடைய நல்லறங்களை நீ ஏற்றுக் கொள்வாயாக!. சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துகளைக் கேட்கிறேன். தந்தருள்வாயாக!


--------------------------------------------------------------------------------

65-أَللَّهُمَّ جَنِّبْنِيْ مُنْكَرَاتِ اْلأَخْلاَقِ، وَاْلأَهْوَاءِ، وَاْلأَعْمَالِ وَاْلأَدْوَاءِ

யாஅல்லாஹ்! தீயகுணங்கள், தீயஆசைகள், தீயசெயல்கள், தீயநோய்கள் ஆகியவைகளிலிருந்து என்னை நீ காப்பாற்று வாயாக!


--------------------------------------------------------------------------------

66-أَللَّهُمَّ قَنِّعْنِيْ بِمَا رَزَقْتَنِيْ، وَبَارِكْ لِيْ فِيْهِ، وَاخْلُفْ عَلَيَّ كُلَّ غَائِبَةٍ لِّيْ بِخَيْرٍ

யாஅல்லாஹ்! நீ எனக்கு அளித்த ரிஸ்கை -அருட் கொடைகளை- எனக்கு போதுமானதாக்கி, அதில் எனக்கு அபிவிருத்தியும் செய்வாயாக! என்னை விட்டும் நீங்கிவிடும் -அருட்கொடைகளுக்கு- பகரமாக அதைவிட சிறந்த வற்றை எனக்குத் தருவாயாக!


--------------------------------------------------------------------------------

67-أَللَّهُمَّ حَاسِبْنِيْ حِسَابًا يَسِيْرًا .

யாஅல்லாஹ்! என்னை (மறுமையில்) மிகவும் எளிதாக விசாரணை செய்வாயாக!


--------------------------------------------------------------------------------














துஆ

எண்
ஆதார நூல்

01
புகாரி, முஸ்லிம்

02
புகாரி, முஸ்லிம்

03
புகாரி, முஸ்லிம்

04
புகாரி, முஸ்லிம்

05
புகாரி

06
புகாரி

07
புகாரி

08
புகாரி

09
புகாரி

10
புகாரி




துஆ

எண்
ஆதார நூல்

11
புகாரி

12
புகாரி, முஸ்லிம்

13
அபூதாவூத், அஹமத்

14
திர்மிதி, அஹமத்

15
அஹமத்

16
முஸ்லிம்

17
திர்மிதி

18
திர்மிதி

19
அஹமத், தப்ரானி

20
திர்மிதி, அபூதாவூத்





துஆ

எண்
ஆதார நூல்

21
திர்மிதி, இப்னுமாஜா

22
திர்மிதி, அபூதாவூத்

23
அஹமத், அபூதாவூத்

24
திர்மிதி, ஹாகிம்

25
திர்மிதி

26
திர்மிதி, அஹமத்

27
அஹமத், ஹாகிம்

28
ஹாகிம்

29
திர்மிதி

30
புகாரி






துஆ

எண்
ஆதார நூல்

31
புகாரி

32
முஸ்லிம்

33
புகாரி, முஸ்லிம்

34
புகாரி, முஸ்லிம்

35
ஹாகிம்

36
ஹாகிம்

37
அஹமத்

38
தப்ரானி

39
நஸயீ

40
அபூதாவூத்






துஆ

எண்
ஆதார நூல்

41
ஹாகிம், பைஹகீ

42
அபூதாவூத், நஸயீ

43
ஹாகிம்

44
அபூதாவூத்

45
தப்ரானி

46
திர்மிதி

47
புகாரி, முஸ்லிம்

48
ஸஹீஹ் அல் ஜாமிஃ

49
இப்னுமாஜா

50
இப்னுமாஜா






துஆ

எண்
ஆதார நூல்

51
நஸயீ, அஹமத்

52
திர்மிதி, அபூதாவூத்

53
திர்மிதி, அபூதாவூத்

54
திர்மிதி, அபூதாவூத்

55
நஸயீ, அஹமத்

56
திர்மிதி

57
திர்மிதி, நஸயீ

58
நஸயீ

59
நஸயீ

60
திர்மிதி





துஆ

எண்
ஆதார நூல்

61
இப்னுமாஜா

62
முஸ்லீம்

63
ஹாகிம்

64
ஹாகிம்

65
ஹாகிம்

66
ஹாகிம்

67
ஹாகிம், திர்மிதி

0 comments:

Post a Comment