தஃப்ஸீர் கலை

, , No Comments
தஃப்ஸீர்
“தப்ஸீர்” என்னும் சொல் ஃபஸ்ஸர, விளக்கினான் தெளிவு படுத்தினான் என்னும் வினைச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். “தஃப்ஸீர்” என்னும் சொல்லுக்கு “விளக்கம், தெளிவு” என்னும் பொருளில் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
وَلَا يَأْتُونَكَ بِمَثَلٍ إِلَّا جِئْنَاكَ بِالْحَقِّ وَأَحْسَنَ تَفْسِيراً
(முஹம்மதே!)அவர்கள் எந்த உதாணத்தைக் கூறியபோதினும் (அதைவிட) உண்மையா னதையும்,அழகிய விளக்கத்தையும் நாம் உமம்மிடம் கொண்டு வருவோம்.(அல்புர்கான் : 25:33)இங்கே “அழகிய விளக்கம்” எனக்குறிப்பிட ” َأَحْسَنَ تَفْسِيرا ” “அஹ்ஸனு தஃப்ஸீரா” என்னும் சொல் இங்கு ஆளப்பட்டிருக்கிறது.“ஷரீஆவின் கண்ணோட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் மீது அருளப்பட்ட அல்லாஹ்வின் வேதமான குர்ஆனை விளக்கவும், அதன் பொருளை தெளிவுபடுத்தவும், அவற்றின் நுட்பமான கருத்துக்களையும், சட்டங் களையும் அலசி ஆராயும் கலைக்கு “தஃப்ஸீர்” எனப்படும்.

தஃப்ஸீர் மிகவும் தேவை!
கொள்கை கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள், பண்பு நலன்கள்,கொடுக்கல் வாங்கல்கள், செயலாற்றும் வழிமுறைகள் போன்றவற்றை சரியாகப் புரிந்து கொளவதற்கு தஃப்ஸீர் கலை மிகவும் இன்றியாமையாததாகும்

தேவைக்கான காரணங்கள்:-
1.குர்ஆன் மிக உயர்ந்த இலக்கியமாகவும், நிறைந்த பல பொருளை உள்ளடக்கிய குறைந்த சொற்களாகவும் உள்ளது. அது காட்டும் பொருட்செறிவை விவரிப்பதும் அதில் புதைந்துள்ள பல நுட்பங்களை தெளிவுபடுத்திக் காட்டுவதும் அவசியமாகும். குர்ஆன் வசனங்கள் அருளப்பட்ட சூழ்நிலைகளையும்,பின்னணிகளையும் புரிந்து கொண்டாலே அது வலியுறுத்தம் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.(உ-ம் 108 வது “வல்அஸ்ரு” அத்தியாயம்)
2. சில வசனங்கள் வெளிப்படையாக ஒரு கருத்தைக் காட்டலாம். ஆனால் அதன் உட்பொருளோ சில முக்கிய நோக்கங்களைக் கொண்டதாக அமைந்திருக்கும்.அதைப் பற்றிய விவரங்களைத் தெரிவது அவசியமாகும்.
3. குர்ஆனின் சில வசனங்கள் சில பின்னணிகைளைக் கொண்டதாக அருளப்பட்டிருக்கும். அதன் காரணத்தைப் புரிந்து கொண்டாலே அதைத் தெரிந்து கொள்ள முடியும்.இல்லையேல் அது தொடர்பான வசனங்களுடன் மோதுவதாகத் தெரியும்.(உ-ம் மது பற்றிய வசனம்- 4:43)
4. குர்ஆன் கூறும் சில சட்டங்களை ஸுன்னா (நபிமொழிகள்) வாயிலாகவே) புரிந்து கொள்ளமுடியும்.பொதுவாகக் கூறப்பட்டி ருக்கும் அந்த வசனங்களை குறிப்பாகச் சொல்லி விளக்கப்பட வேண்டும். அது குறித்து நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கச் செயல்மூலம் காட்டி விளக்கயுள்ளனர்.ஆகவே ஸுன்னாவின் பங்கைத் தெரிந்து கொள்வதும் அவசியமாகும். (உ-ம்) அகீமுஸ்ஸலாத்த வ ஆத்துஸ்ஸகாத்த போன்ற வசனங்கள். (பார்க்க- 2:43,83,110, 4:77,103,22:78,24:56, 58:13,73:20)

குர்ஆன் (தஃப்ஸீர்) விரிவுரை செய்வதற்குரய நிபந்தனைகளும், தகுதிகளும்.
1. இஸ்லாமியக் கொள்கையில் ஆழ்நத ஞானமும்,உறுதியும் வே ண்டும். இல்லையெனில் தனது தவறான கெள்கையின் பால் மக்களை திசைதிருப்பிவிடுவார்கள்.
2. குர்ஆனுகுக்கு குர்ஆனைக் கொண்டே விளக்கமளிக்கவேண்டும். ஓரிடத்தில் சில வசனங்கள் தெளிவில்லாமலிருக்கும். மற்றொரு இடத்தில் அதை விளக்கும் வேறொரு வசனம் வரும். பிறிதொரு இடத்தில் ஒரு வசனம் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கும.இன்னொரு இடத்தில் அதே வசனம் வரிவாகக் கூறப்பட்டிருக்கும்.இவற்றைத் தெளிவாகத் தெரிந்து குர்ஆனிலிருந்தே குர்ஆனை வளக்கவேண்டும்.
3. குர்ஆனுக்கு ஸுன்னாஹ் (ஹதீஸ்கள்) விரிவுரையாகவும், தெளிவு ரையாகவும் அமைந்திருக்கும். அவ்வாறு விளக்கப்பட்டிருக்கும் வசனங்களை ஹதீஸ்கள் வாயிலாகவே விவரிக்கவேண்டும். ஏனெ னில் “நான் குர்ஆனையும், அதைப்போன்ற ஒன்றையும் வழங்கப் பட்டிருக்கிறேன்” என நபி (ஸல் அவர்கள் கூறியுள்ளனர். அது போன்ற ஒன்று என்பது ” ஸுன்னா” வாகும்.
4. ஸுன்னாவில் அதைப் புரிந்து கொள்ளும் ஆதாரம் கிடைக்காத போது நபி (ஸல் ) அவர்களிடம் கேட்டுத் தெரிந்த நபித் தோழர்களின் சொல் விளக்கத்தின் வாயிலாகப் புரிந்து கொளளவேண்டும். ஏனெனில் குர்ஆன் அருளப்படுவதை நேரிலே கண்டு கற்றுத்தேறியவர்கள்.அவை பற்றிய முழுமையான அறிவு விளக்கமும், தெளிவும் பெற்றுத்தங்கள் வாழ்விலே செயல்படுத்தியவர்கள்.
5. குர்ஆனிலோ, ஸுன்னாவிலோ, நாயத்தோழர்களின் தீர்ப்புகளிலோ அதற்குரிய தெளிவோ, ஆதாரமோ கிடைக்காத போது ஸஹாபாக்க ளிடம் மண்டியிட்டு தஃப்ஸீர்களைப் பயின்ற தாபியீன்களின் தீர்ப்பு களைக் கொண்டு குர்ஆன் வசனங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இவையே பெரும் பாலான இமாம்களான மேதைகள் கடைபிடித்து வந்த நெறிமுறை யாகும்.
6. குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டுள்ளதால் அம்மொழி பற்றிய ஆழமான புலமை இருக்கவேண்டும்.
“அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பும் ஒருவர் அரபிமொழிப் புலமை இல்லையெனில் இறைவேதத்திற்கு விளக்கம் கூற தகுதியற்றவர்” என்று தப்ஸீர் கலை மேதை இமாம் முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஆகவே, முஃபஸ்ஸிர் (விரிவுரயாளர்) முஸ்லிமாகவும், கீழ்காணும் பதினைந்து கலைகளைக் கற்றுத் தேறியவராகவும் இருக்கவேண்டும்.

அந்த 15 கலைகள் யாவை?
1. அல்லுகத் (அகராதி ஞானம்) ,
2. அந்நஹ்வு ( சொற்புணர்ச்சி இலக்கணம்,
3. அஸ்ஸர்பு , அத்தஸரீஃப் (சொல்லிலக்கணம்),
4. அல்இஷ்திகாக் (சொற்களின் தாது இலக்கணம்)
5. அல்மஆனி (அணி இலக்கணம்
6.இல்முல் பதீஉ (அருங்கலை),
7.கிராஅத் (ஓதும் கலை)
8. இல்முல் அகாயித்,
9. உஸூலுல் ஃபிக்ஹ் ( இஸலாமிய சட்ட ஞானத்தின் அடிப்படைக்கலை), 10.இல்முல் பயான் ( உரை இலக்கணம்),
11.அஸ்பாபுந் நுஸூல் (குர்அன் வசனங்கள் இறங்கிய காலம்,காரணம் பற்றிய கலை)
12.அந்நாஸிக்,வல்மன்ஸூக் ( மாற்றுவதும், மாற்றப்பட்டதுமான வசனங்கள் பற்றிய விவரம்),
13.அல்பிக்ஹ் (சட்ட ஞானம்)
14.அல்அஹாதீதுல் முபய்யினா லி தஃப்ஸீரில் முஜ்மல் வல்முப்ஹம் (மறைமுகமான பொருள் பற்றி நபி(ஸல்) விளக்கிய கலை)
15.இல்முல் மூஹிபா (இறுதியாக இறைவனின் தனிப் பெரும் ஞானம் பெற்றிருத்தல்)

(வளரும்)

0 comments:

Post a Comment