திருச்சி விமான நிலையம் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்...!  நண்பர்கள் இச்செய்தியை பகிர்ந்து அனைவருக்கும் உதவவும்.  சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் மூலம் எனது நண்பர் நேற்று தாய்நாட்டிற்கு செல்கையில் அவரது லக்கேஜ்ஜில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் பூட்டை உடைத்து திருடப்பட்டுள்ளன.ஆகவே நண்பர்கள் தங்கள் உடைமைகள் சரியாக உள்ளனவா என கண்காணிக்கவும்.  தகவல் :- Krishnan Senthilதிருச்சி விமான நிலையம் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்...! நண்பர்கள் இச்செய்தியை பகிர்ந்து அனைவருக்கும் உதவவும். சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் மூலம் எனது நண்பர் நேற்று தாய்நாட்டிற்கு செல்கையில் அவரது லக்கேஜ்ஜில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் பூட்டை உடைத்து திருடப்பட்டுள்ளன.ஆகவே நண்பர்கள் தங்கள் உடைமைகள் சரியாக உள்ளனவா என கண்காணிக்கவும். தகவல் :- Krishnan Senthil
இதை கனிவுடன் படியுங்கள்.!!!

ஒரு பையனுக்கு கேன்சர் இருந்தது.
எல்லோருக்கும்
தெரிந்ததுதானே கேன்சரை குணப்படுத்த
முடியாது என்று.

 அவனுக்கு 18 வயது , எந்த
நேரத்திலும் சாகலாம்.


அவன் வாழ்க்கை முழுதும் அவன்
வீட்டிலேயே முடங்கி கிடந்து அம்மாவின்
பராமரிப்பில் வாழ்ந்து வந்தான். அவன்
வீட்டை விட்டு எங்கேயும் வெளியில்
சென்றதில்லை.


ஒரு நாள் அவன் வெளியில்
சென்று சுத்திபார்க்க அவன் அம்மாவிடம்
அனுமதி வாங்கினான்.


அவன் வீட்டை விட்டு வெளியில்
இறங்கி நடக்கையில் பல
கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே
நடந்தான்.


அப்படி ஒரு கடையை கடந்து விட்டு பின்
திரும்பி இன்னொரு முறை அந்த
கடையை பார்த்தான்.
 அது ஒரு கேசட் கடை.
அதைவிட முக்கியமாக அந்த கடையில் அவன்
வயதை ஒட்டிய ஒரு தேவதை மாதிரி ஒரு பெண்
இருந்தாள்.


அவன் மெதுவாக அந்த கடை உள்ளே சென்றான்.
அவன் 'என்ன வேண்டும்'
என்று கேட்டுவிட்டு ஒரு புன்னகையை
உதிர்த்தாள்.. அவன் வாழ்நாளில்
இப்படியொரு அனுபவம் கிடைத்தில்லை.


 முதல்
பார்வையிலே காதல் என்பதை உணர்ந்தான்.
ஆனாலும் அவனுக்கு ஒருவித பயம்..
ஏதோ ஒரு கேசட்டை காட்டி இது வேண்டும்
என்றான். அவளும் அதை எடுத்து இதை பார்சல்
கட்டவா என்றாள். அவன் ஆமாம் என்பதாக
தலையை ஆட்டினான்.
அவள் உள்ளே சென்று கேசட்டை அழகாக பார்சல்
கட்டி வந்தாள்.


நேராக அதை கொண்டு போய்
அவன் அலமாரியில் வைத்து விடுகிறான்.
இது தினமும் நடக்கிறது. ஒருநாள் கூட
அவளிடம் பேசுவதற்கு அவனுக்கு பயம்.
கேசட்டை பிரித்து பார்த்ததும் கிடையாது.

இது அவன் அம்மாவுக்கு தெரிய வருகிறது.

அவள் அவனுக்கு தைரியம்
சொல்லி அனுப்பி வைக்கிறாள்.அவன் அந்த
கடைக்கு போய் ஒரு கேசட்டை வாங்கி அவள்
பார்சல் கட்டும் சமயத்தில் ஒர் பேப்பரில்
அவனது தொலைபேசி எண்ணை எழுதி
வைத்துவிட்டு கேசட்டை வாங்கியவுடன்
வீட்டிற்கு ஓடி வந்துவிடுகிறான்.


அடுத்த நாள் அந்த
வீட்டு தொலைபேசி மணி அடிக்கிறது. அவன்
அம்மா எடுக்கிறார்கள்.. அவன்
பெயரை சொல்லி 'இருக்கிறானா'
என்று கேட்கிறாள்..


அம்மாவிற்கு அழுகையை அடக்க
முடியவில்லை. அவன் நேற்றே இறந்துவிட்டான்
என்று கூறுகிறாள்.


 ஒரு பெரிய நிசப்தம். அவள்
அம்மாவின் அழுகை தவிர எதுவும்
கேட்கவில்லை.
அடுத்த நாள் அம்மா அவன்
நியாபமாக அவன் அறைக்கு செல்கிறாள்..


அங்கே அவன் அலமாரியில் நிறைய பிரிக்கப்படாத
பார்சல்கள் இருந்தன.. அதை பிரித்து பார்க்கிறாள்.
அதன் உள்ளே ஒரு கேசட்டும்
ஒரு துண்டுபேப்பரும் இருந்தது. அதில் 'நீ
ரொம்ப அழகாக இருக்கிறாய். ஏன் என்னிடம்
பேசவே மாட்டேங்குறே '
என்று எழுதியுருந்தது..


 மற்ற பார்சல்களிலும்
ஒரு கேசட்டும் அதே துண்டு பேப்பரும்
இருந்தது.


நெஞ்சை தொடும் இந்த குட்டிகதையில்
ஒரு பெரிய நீதியே இருக்கிறது.


உங்கள்
துணையிடன் எப்பாவாவது சண்டை போட்டால்,
சிறிது நேரம் உங்கள்
ஈகோவை கழட்டி வைத்துவிட்டு சில சமாதான
வார்த்தை கூறுங்கள்.. 


இல்லாவிடில் அந்த
பிரிக்கப்படாத பார்சல் போல பல வாய்ப்புகள்
பறிபோகும்...!!!


thanks to: tamil facebook news..!!!!


பறக்க முடியாமல் இருக்கும் தன் தாய்க்கு குஞ்சுகள் வந்து உணவளிக்கும் காட்சி...!!!
 (அல்லாஹ் மிகப்பெரியவன்)

thanks to: daytamil.com


ஆஸ்திரேலியாவில் பிரசவத்திற்காக
கேதே ஒக் டேவிட் என்ற ஆஸ்திரேலியப்
பெண்மனி சிட்னி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். கருத்தரித்து 27
வாரங்களே ஆன நிலையில்.
அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.
குறைந்த எடையில் பிறந்த ஒரு ஆண்,
ஒரு பெண்.


இரு குழந்தைகளையும் காக்க
மருத்துவர்கள் பெரு முயற்சி செய்தனர்.
பெண் குழந்தை உயிர் பிழைத்தது.
ஆனால்..


மருத்துவர்கள் கடைசி வரை போராடியும்
ஆண் குழந்தையைக் காப்பாற்ற
முடியவில்லை. குழந்தை இறந்துவிட்டதாக
தாயிடம் தெரிவிக்கப்பட்டது.


அதைத் தாங்கிக் கொள்ள முடியாத, அந்தத்
தாய்.. இறந்த
குழந்தையை மார்போடு கட்டி அணைத்து அழ
ஆரம்பித்து விட்டார்.


தொடர்ந்து இரண்டு மணி நேரம் தன்
உடலுடன் குழந்தையை அணைத்துக்
கொண்டு அழுதவாறே இருந்தார்.


அப்போது.. குழந்தை மெதுவாக
மூச்சு விடுவதை அந்தத் தாய் உணர்ந்தார்.


உடன்
மருத்துவர்களை அழைத்து குழந்தை மூச்சு விட
ஆரம்பித்ததைக் கூறினார்.


மருத்துவர்கள் குழந்தைக்கு அவசர
சிகிச்சை அளித்து.. இங்குபேட்டரில்
வைத்து..
சகஜ நிலைக்குக்
கொண்டு வந்தனர்.


சிறிது நேரத்தில் கண்
விழித்தது குழந்தை..
அதைப் பார்த்து.. ஆனந்தக்கண்ணீர் விட்ட
தாயின் விரல்களை குழந்தை பிடித்துக்
கொண்டது. 


இறந்த குழந்தையை உயிர்
பிழைக்க வைத்தது எது..


ஆம்..
அந்த தாயின் அரவணைப்பு..


இப்போது சொல்லுங்கள், உலகத்தில்
சிறந்தது தாய்மைதானே...!!!


(அல்லாஹ் மிகப்பெரியவன்)

Hard Disk ஐ பாதுகாக்க Check Disk செய்யுங்கள்

Hard Disk ஐ பாதுகாக்க Check Disk செய்யுங்கள்
உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.
மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.
இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.
இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.
எப்படி செய்வது எனக் காண்போம் வாருங்கள்.
1.My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.
2.அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab ஐ தெரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.
3.இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.
4.இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.
உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.
5.இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக் கூடாது எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள்.மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப் படும்.
6.மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ் ) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.
உங்கள் Hard Disk ஐ பரமரிப்பது உங்கள் கடமை. எனவே முதலில் chkdsk (check Disk )செய்யுங்கள். உங்கள் Hard Disk ஐ காப்பாற்றுங்கள்.
நன்றி:udayanadu.wordpress.com
Post image for அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம்
அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம்
உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்: மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப்பெயர் சூட்டுகின்றது. ரமழான் அல்லாத நாட்களில் ஸுபுஹ் தொழுகையின்போது பள்ளிவாசலின் நிலையைப் பாருங்கள். பரிதாபமாக இருக்கும். சில பள்ளிவாசல்களில் ஒரு வரிசைகூட முழுமையாக இருக்காது. இதற்காகவா இவ்வளவு பொருள் செலவில் பரந்து விரிந்த பள்ளிவாசல்களைக் கட்டினோம்..?
நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள். “”யா அல்லாஹ்! எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக!” (அபூதாவூத்)
நபி(ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தவிதத் தகுதியும் இல்லாமல் அதிகாலை நேர த்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சமூகமாகவே நம் சமூகம் இருக்கின்றது.
ஃபாத்திமா(ரழி) அறிவிக்கின்றார்:
அதிகாலை நேரத்தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் நபி(ஸல்) என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள் “”அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப்படுத்துபவராக மாறி விடாதே. அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன்(ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தை வழங்குகின்றான்”. (நூல்: பைஹகீ)
ஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப்படுகிறார்கள். அல்லாஹ்வை இறைவன் என்று ஏற்றுக் கொண்டிருக்கும் நாம் எவ்வளவு தூரம் அல்லாஹ்வின் ரிஸ்கை அலட்சியம் செய்கின்றோம்… பாருங்கள்!
அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும் காட்சியை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள். படுக்கை, போர்வை, மனைவி மக்களின் அரவணைப்பு அத்துணையும் உதறிவிட்டு அதிகாலையில் எழும் மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றான். வானவர்களிடம் கேட்கின்றான்: “”வானவர்களே எனது இந்த அடியானைப் பாருங்கள்…! படுக்கை, போர்வை, மனைவி, மக்கள் அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழுந்து விட்டான். எதற்காக…? என்ன வேண்டும் இந்த அடியானுக்கு..? “எனது அருள்மீது ஆசை வைத்தா…? எனது தண்டனையைப் பயந்தா…? பின்னர் வானவர்களிடம் அல்லாஹ் கூறுகிறான்: “”உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்: அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்கு நிச்சயம் கொடுப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ அதிலி ருந்து நிச்சயம் அவனுக்கு நான் பாதுகாப்புக் கொடுப்பேன்.” (நூல்: அஹ்மத்)
அதிகாலை நேரத்தில் சூரியன் உதிக்கும் வரை தூங்குபவர்கள் அல்லாஹ்வின் அருளையும், பாதுகாப்பையும் அலட்சியம் செய்யும் மக்கள் அல்லவா? அல்லாஹ்வின் பாதுகாப்பையே அலட்சியம் செய்பவர்களுக்கு ஷைத்தான் அல்லாமல் வேறு யார்தான் பாதுகாவலனாக இருக்க முடியும்? ஆனால், மனிதர்களில் சிலர் இப்படியும் இருக் கின்றார்கள். உலகம் எப்படி மாறினாலும் சரி, மக்கள் அனைவரும் எப்படிப் போனாலும் சரி, தொலைக் காட்சியில் எவ்வளவு முக்கிய நிகழ்ச்சிகள் ஒளிப் பரப்பினாலும் சரி… மனதில் ஸுபுஹ் தொழுகையை நினைத்த வண்ணமே படுக்கைக்குச் செல்வார்கள். அவ்வண்ணமே அதிகாலையில் எழுவார்கள். அவர்கள்தாம் உண்மையான இறை நம்பிக்கையாளர்கள்.


அதிகாலைத் தொழுகையை விட்டதால் நாம் கண்ட நன்மை என்ன? இத்தொழுகையை விட்ட தால் நாம் வங்கியில் சேமித்த பணம் எவ்வளவு? இத் தொழுகையை விட்டதால் நாம் அடைந்த பதவி உயர்வுகள் எத்தனை? இதனை அலட்சியம் செய்ததால் வியாபாரத்தில் நாம் கண்ட லாபம் என்ன? மனதில் நாம் அடைந்த நிம்மதி எவ்வளவு? எண்ணிப் பார்த்தால் எதுவும் இல்லை. அத்தனையும் சுழியம்.
ஒருவர் அல்லர், இருவர் அல்லர் ஒட்டுமொத்த ஒரு சமூகமே அல்லாஹ் கடமையாக்கியக் கட்டாயத் தொழுகைகளில் ஒன்றை அலட்சியம் செய்கின்றது என்றால் அல்லாஹ்வின் வெற்றி எப்படிக் கிடைக்கும் நமக்கு?
நாம் இங்கே பேசுவது இரவுத் தொழுகையைக் குறித்தோ, தஹஜ்ஜுத் தொழுகையைக் குறித்தோ, உபரியான வணக்கங்களைக் குறித்தோ அல்ல. மாறாக அல்லாஹ் நம்மீது விதியாக்கிய அதிகாலைத் தொழுகையைக் குறித்து : ஃபர்ள் தொழுகையைக் குறித்து என்பதை எண்ணும்போது மனதில் வேதனை அலைகள் எழுகின்றன.
அண்மையில் இணையதளத்திற்கு ஒரு பள்ளிவாசல் முஅத்தினின் (பாங்கு சொல்பவர்) வேதனையைப் படிக்க முடிந்தது. அறிஞர்களிடம் அவர் கேட்ட மார்க்க விளக்கத்தை அதில் வெளியிட்டிருந்தனர். அவருடைய கேள்வி இதுதான்: “”சில சமயம் நான் அதிகாலைத் தொழுகைக்காக பாங்கு சொல்கின்றேன். தொழுகைக்கு யாரும் வருவதில்லை. நான் காத்திருப்பேன். சூரியன் உதித்து விடுமோ என்ற பயம் வருகின்றது. எனவே இந்தப் பள்ளிவாசலை மூடிவிட்டு வேறு பள்ளிவாசலுக்குச் சென்று ஜமாஅத்துடன் நான் ஸுபுஹ் தொழுகையை நிறைவேற்றலாமா?
ஸுபுஹானல்லாஹ்! சமூகத்தின் நிலையைப் பாருங்கள். நல்ல வேளை, இது இந்தியாவில் அல்ல. வேறு எங்கிருந்தோ கேட்கப்பட்ட கேள்வி. ஆனாலும், நம் ஒவ்வொருவரையும் உலுக்கி எடுக்கும் கேள்வி இல்லையா இது? ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தைப் பார்த்து கேட்கப்பட்ட கேள்வி இல்லையா இது?
நபிகளாரின் வேதனை :
உபை இப்னு கஅப்(ரழி) அறிவிக்கின்றார்: ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் ஸுபுஹ் தொழுகை முடித்த பின் எங்களை நோக்கித் திரும்பியவாறு கேட்டார்கள்: “”இன்ன மனிதர் தொழுகைக்கு வந்தாரா?” மக்கள் “”இல்லை” என்று கூறினார். மீண்டும், “”இன்னவர் வந்தாரா?” என்று கேட்க, மக்களும் “”இல்லை” என்று கூற, நபி(ஸல்) அவர்கள் வேதனையுடன் இவ்வாறு கூறினார்கள்:
“நயவஞ்சகர்களுக்கு இந்த இரு தொழுகைகளும் (ஸுபுஹ், இஷா) கடினமானவையாக இருக்கும். இந்த இரு தொழுகைகளில் கிடைக்கும் நன்மைகளை இவர்கள் அறிந்து கொண்டால் தவழ்ந்தேனும் இதற்காக வருவார்கள்” (நூல்:புஹாரி, முஸ்லிம்)
ஆம், நபி தோழர்களின் காலத்தில் இறை நம்பிக்கையாளர்களை அளக்கும் அளவுகோலாக இந்த இருவேளை தொழுகைகள்தாம் இருந்தன.
இப்னு உமர்(ரழி) கூறுகின்றார் : “”ஸுபுஹ் தொழுகைக்கும் இஷா தொழுகைக்கும் யார் வழக்கமாக வருவதில்லையோ அவர்களை குறித்து நாங்கள் மோசமாகவே எண்ணியிருந்தோம்” (அதாவது நயவஞ்சகர்கள் என்று).
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மட்டும் இன்றைய கலகட்டத்தில் நம்மிடையே இருந்திருந்தால் நம்மில் எத்தனை பேர்களை நயவஞ்சகர்களின் பட்டியலில் சேர்த்திருப்பார்களோ என்பதை எண்ணும்போது திகைத்து நிற்கின்றோம்.
இன்ன இடத்தில் அதிகாலையில் வா என்று உங்களுடைய காதலியோ காதலனோ சொன்னால் விழுந்தடித்து ஓடமாட்டீர்களா? ஒவ்வொரு நாளும் 1000 ரூபாய் தருகின்றேன். அதிகாலையில் இன்ன இடத்தில் என்னைச் சந்திக்க வேண்டும் என்று எவராவது நம்மிடம் கூறினால் போவோமா மாட்டோமா? அப்படி என்றால் அல்லாஹ்வின் அளப்பரிய அருளை மட்டும் வேண்டாம் என்று கூறி அலட்சியமாக படுக்கையில் படுத்துக் கிடக்கின்றோமே நம்மைக் குறித்து அல்லாஹ் என்ன நினைப்பான்? அதிகாலைத் தொழுகையை அலட்சியம் செய்பவர்கள் உண்மையில் மிக மோசமான மனிதர்கள்.
நபி(ஸல்) அவர்களின் அமுத மொழிகள் :
மறுமையில் இருளில் ஒளியின்றி நடப்பவர்களுக்கு நற்செய்தியாக நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: “”(பள்ளிவாசலை நோக்கி அதிகாலை) இருளில் நடந்து செல்பவர்களுக்கு மறுமையில் முழுமையான ஒளி கிடைக்கும் எனும் நற்செய்தியைக் கூறுங்கள்” (நூல்: பைஹகீ)
“”யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார்.” (நூல்: தபராணி)
“”சூரிய உதயத்திற்கு முன்புள்ள தொழுகையையும் சூரியன் மறைந்ததற்குப் பின் உள்ள தொழுகையையும் (ஸுப்ஹு, இஷா) யார் தொழுகின்றாரோ அவர் நரகில் ஒருநாளும் நுழையமாட்டார்” (நுல்:முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபு உமாமா(ரழி) அறிவிக்கின்றார்கள். யார் உளூ செய்தபின் பள்ளிவாசலுக்கு வந்து ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத் தொழுது பின்னர் ஃபஜ்ரு தொழுகையையும் தொழுகின்றாரோ அவர் நன் மக்களின் பட்டியலிலும், அல்லாஹ்வின் தூதுக் குழுவினரின் பட்டிய லிலும் எழுதப்படுகின்றார்.
அல்லாஹ்வின் விருந்தாளிகள்: அல்லாஹ்வின் தூதுக்குழுவினர் என்பது எவ்வளவு பெரிய சிறப்பு!
ஒவ்வொரு நாளும் வானவர்கள் இரு தடவை இந்தப் பூமிக்கு வருகை தருகின்றார்கள்; அவர்கள் அனைவரும் அஸர் தொழுகையிலும் ஸுபுஹ் தொழுகையிலும் சந்தித்துக் கொள்கின்றார்கள். பணி முடிந்துத் திரும்பும் வானவர்களிடம் அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் அல்லாஹ் கேட்கின்றான் “”எனது அடியார்களை எந்த நிலையில் சந்தித்தீர்கள்? எந்நிலையில் விட்டு வந்தீர்கள்?” அதற்கு வானவர்கள் கூறுவார்கள். “”அவர்கள் தொழுகையில் இருக்கும் நிலையில் சந்தித்தோம். தொழுகையில் இருக்கும் நிலையில் விட்டுவந்தோம்.” (நூல்: திரிமிதி)
இந்த ஹதீஸை சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். பல ஆண்டுகளாக ஸுபுஹ் தொழுகை என்றால் என்ன என்றே தெரியாமல் தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவரைக் குறித்து வானவர்கள், யா அல்லாஹ் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள் என்றோ, ஸுபுஹு தொழாமல் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார்கள் என்றோ கூறுவதாக இருந்தால் எப்படி இருக்கும்? அதிலும் 5 ஆண்டுகள் 10 ஆண்டுகளாக இதே பதிலை வானவர்கள் அல்லாஹ்விடம் கூறினால் நம்மைக் குறித்து அல்லாஹ் என்ன முடிவு செய்வான்? அதிகாலை சூரியன் உதயமாகும் வரை தூங்குப வர்களைக் குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டது. அதற்கு நபிகளாரின் பதில் இது: “”அந்த மனிதரின் காதுகளில் ஷைத்தான் சிறு நீர் கழித்து விட்டான்” என்றார்கள். கற்பனை செய்து பாருங்கள்! இருபது முப்பது ஆண்டுகளாய் ஒருவரின் காதுகளில் தொடர்ந்து ஷைத்தான் சிறு நீர் கழிக்கின்றான் என்றால் அவன் எப்படிப்பட்ட துர்பாக்கியவானாக இருக்க வேண்டும்.
இன்னும் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. ஆனாலும் நம் சமூகத்திற்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. நிறையப் பேர்களுக்கு இப்படி ஒரு தொழுகை பள்ளிவாசலில் தொழப்படுகின்றது என்ற விவரமே தெரியாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
யூதப் பெண் அமைச்சரின் பதில்:
நான் அரபுலகில் வசித்தபோது யூதப் பெண் அமைச்சர் ஒருவரின் நேர்காணலைப் பத்திரிக்கையில் படிக்க நேர்ந்தது. கோல்டா மேயர் என்ற அந்தப் பெண் அமைச்சரிடம் யூதப் பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுத்தனர். “”கடைசிக் காலத்தில் யூதர்களை முஸ்லிம்கள் கல்லால் அடித்துக் கொல்லும் ஒரு நேரம் வரும் என்று முஸ்லிம்களின் நபி கூறி யுள்ளாராமே” அதைக் குறித்துத் தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்? இதுதான் கேள்வி. அதற்கு அந்தப் பெண் அமைச்சர் என்ன கூறினார் தெரியுமா? “”ஆம், நாம் அதனை நம்புகின்றோம். ஒருநாள் அவர்கள் நம்முடன் போர் புரிவார்கள்.”
“அப்படி என்றால் அந்த நாள் எப்போது வரும்?” என்று மீண்டும் அவர்கள் கேள்வி கேட்க, அப் பெண்மணி கூறினார்: “”ஜும்ஆ தொழுகைக்கு வருவதைப் போன்று என்றைக்கு முஸ்லிம்கள் ஸுபுஹ் தொழுகைக்கு வருகின்றார்களோ அன்று வேண்டுமென்றால் அது நடக்கலாம் அதுவரை நாம் அஞ்ச வேண்டியதில்லை”.
அப்பெண்மணியின் மதி நுட்பத்தைப் பாருங்கள். இஸ்லாமியச் சமூகத்தை எவ்வாறு எடைபோட்டு வைத்துள்ளார் என்பதைக் கவனியுங்கள். “”யூதர்களால் நாங்கள் நசுக்கப்படுகின்றோம் எங்களை காப்பாற்று” என்று நாம் இறைவனிடம் இருகை ஏந்துகின்றோமே.. இறைவன் ஏன் நமது இறைஞ்சுதல்கள் மீது இரக்கம் காட்டுவதில்லை? அவனது கட்டளையை நாம் நிராகரிக்கிறோம்: அவன் நமது விண்ணப்பங்களை நிராகரிக்கின்றான் அவ்வளவு தான்.
காலை 7 மணி முதல் 10 மணி வரை சாலைகளில் போக்குவரத்து நெரிசலைச் சற்று கவனித்துப் பாருங்கள். கூட்டம் கூட்டமாக மக்கள் புற்றீசல்கள் போன்று எங்கிருந்து இவ்வளவு மக்களும் ஒரு சேரப் புறப்பட்டு வந்தனர் என்று தோன்றும். அதில் முஸ்லிம்களும் கணிசமாக இருப்பர். ஆச்சரியம் சுமார் 3 மணி நேரத்திற்கு முன் இம் முஸ்லிம்கள் எல்லாம் எங்கிருந்தனர்? உயிருடனா அல்லது உயிரற்றவர்களாகவா? உயிருடன்தான் இருந்தனர் என்றால் ஸுபுஹ் தொழுகைக்குப் பள்ளிவாசலுக்கு ஏன் வரவில்லை? யாரிடம் கேட்டால் இதற்கான பதில் கிடைக்குமோ தெரியவில்லை.
அதிகாலைத் தொழுகையில் அரை வரிசையை வைத்துக் கொண்டு அமெரிக்காவை வெற்றி கொள்ள நாம் ஆசைப்படுகின்றோம். பள்ளிவாசலில் பாதி வரிசை கூட இல்லை; பலஸ்தீன் எங்களுக்கே என்கிறோம். ஓடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு நடத்துகிறோம். முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும் என்கிறோம், எப்படிக் கிடைக்கும்? அதிகாலைத் தொழுகைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?
மாற்றத்தின் நேரம் அதிகாலை :
உலகில் பெரும் மாற்றங்களை எல்லாம் அதி காலை நேரத்திலேயேதான் அல்லாஹ் ஏற்படுத்தி உள்ளான். உலகில் அழித்து நாசமாக்கப்பட்ட சமூகங்கள் எல்லாம் அதிகாலை நேரத்தில்தான் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன.
ஹூத்(அலை) அவர்களின் ஆத் கூட்டத்தை அழித்ததைக் குறித்து அல்லாஹ் கூறுகிறான்: இறுதியில் அவர்களின் நிலைமை என்னவாயிற்று எனில் அவர்கள் வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அதிகாலையில் தென்படவில்லை” (46:25)
ஸாலிஹ் நபி(அலை) அவர்களின் சமூகக் கூட்டத்தைக் குறித்து இறைவன் குறிப்பிடுகிறான்: “”திடுக்குறச் செய்கின்ற ஒரு நிலநடுக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதிகாலையில் அவர்கள் தம் இல்லங்களில் முகங்குப்புற (உயிரற்றவர்களாக) வீழ்ந்து கிடந்தார்கள்” (7:91) (இதே கருத்தை அத்தியாயம் ஹூத் வசனம் 94, அல்ஹிஜ்ர் வசனம் 83 ஆகியவற்றிலும் காணலாம்)
ஷீஐப்(அலை) அவர்களின் கூட்டத்தைக் குறித்து இறைவன் கூறுகின்றான்: “”இறுதியில், ஒரு கடும் நிலநடுக்கம் அவர்களைப் பிடித்தது. அவர்கள் தம் வீடுகளிலேயே அதிகாலையில் குப்புற வீழ்ந்து மடிந்தார்கள்” (29:37)
இவ்வாறு ஒவ்வொன்றாக நாம் கூறிக் கொண்டே போகலாம். மண்ணோடு மண்ணாக்கப்பட்ட அத்தனை சமூகங்களும் அநேகமாக அதிகாலை நேரத்தில்தான் அழிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவேதான், மக்கத்து சமூகமும் நபி(ஸல்) செய்தியை ஏற்றுக் கொள்ளாமல் ஏளனம் செய்தபோது அல்லாஹ்வின் எச்சரிக்கை இவ்வாறு இருந்தது: “என்ன, இவர்கள் நம்முடைய தண்டனைக்காக அவசரப்படுகின்றார்களா? அது அவர்களின் முற்றத்தில் இறங்கிவிடுமாயின், எவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு விட்டதோ அவர்களுக்கு அந்நாளின் அதிகாலை மிகவும் கெட்டதொரு நாளாகிவிடும்” (37:176,177)
(இப்போது கூறப்பட்ட அத்தனை வசனங்களிலும் ஸுபுஹ் என்னும் அரபி சொல்தான் பயன் படுத்தப்பட்டுள்ளது)
பண்டையக் காலத்தில்தான் இவ்வாறு அதிகாலை என்பது அழிவிற்கான நேரமாக இருந்தது என்று நாம் நிம்மதி அடையவேண்டாம். இன்றும் அவ்வப்போது அல்லாஹ்வின் எச்சரிக்கை அதிகாலை நேரத்திலேயேதான் வருகின்றன.
  • 2004-ல் ஏற்றப்பட்ட சுனாமி அதிகாலை நேரத்தில்தான் ஏற்பட்டது.
  • துருக்கி பூகம்பம், ஈரானின் நிலநடுக்கம் அனைத்தும் அதிகாலை நேரத்திலேயேதான் நடைபெற்றன.
  • ஒவ்வொரு தனிமனிதருக்கு வரும் மாரடைப்பு எனும் திடீர் மரணமும் அநேகமாக அதிகாலை 3 முதல் 6 மணிக்குத்தான் வருகின்றது என்று மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.
இன்னும் இன்னும் ஏராளம் கூறலாம். இவை அனைத்தும் அல்லாஹ்வின் வேதனை என்றோ எச்சரிக்கை என்றோ எப்படி வேண்டுமென்றாலும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.
மரணம் என்பது அல்லாஹ்வின் விதி. அது வந்தே தீரும். அதில் ஐயம் எவருக்கும் இருக்க முடியாது தான். ஆனால் துர் மரணம் என்பது? அல்லாஹ்வின் தூதரே பாதுகாப்பு கேட்ட விஷயம் அல்லவா? மேலே கூறிய அனைத்தும் துர் மரணம் அல்லாஹ் பாதுகாப்பானாக!
“யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார்” என்று நாம் மேலே கூறிய ஹதீஸின் முழுமையான பொருள் இப்போதாவது விளங்குகின்றதா?
நாம் செய்ய வேண்டியது என்ன?
1. தூங்கு முன் நாளை கண்டிப்பாக ஸுபுஹ் தொழுவேன் (இன்ஷா அல்லாஹ்) என்ற உறுதியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள் (எழுந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்றல்ல)
2. படுக்கும் முன் அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்.
3. நாம் தொழுதால்தான் நம் பிள்ளைகள் தொழுவார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.
4. தவறிய தொழுகைகளுக்கு பாவமன்னிப்புக் கேளுங்கள்.
5. அலாரம் வைத்துக் கொண்டு தூங்குங்கள்.
6. சீக்கீரம் தூங்கி அதிகாலையில் எழுவதே நபிவழி என்பதை நினைவில் வையுங்கள்.
7. கெட்ட முஸ்லிம்களுக்கு நாமே முன்னுதாரண மாக அமைந்துவிடக் கூடாது என்பதாக உறுதி எடுங்கள்.
8. வழக்கமாக ஸுபுஹ் தொழும் நல்லவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள்.
9. ஒழுவுடன் தூங்குவதற்கு முயலுங்கள்.
10. தம்பதிகளாக இருந்தால் முதலில் எழும் ஒருவர் மற்றவரைத் தண்ணீர் தெளித்தாவது எழுப்ப முயலுங்கள். அல்லாஹ்வின் அருள் அதில்தான் அடங்கியுள்ளது.
 மெளலவி நூஹ் மஹ்ழரி
சமரசம்
thanks to: readislam.net
ஒரு மதம் (மார்க்கம்) தானாக பரவுகின்றது, வளருகின்றது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் அந்த அதிசயத்தை உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தை பரப்புவதற்கு உலகளவில் ஒரு அமைப்பு இல்லை. ஒரு இயக்கம் இல்லை. ஆனாலும் அது பரவுகின்றது வளருகின்றது.
    இஸ்லாத்தை எதிர்த்தால் பெரிய பெரிய வல்லரசுகளின் ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கின்றது. அதற்கு உதாரணம் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரீன். ஒரு முஸ்லிம் விரைவில் கோடீஸ்வரன ஆக வேண்டுமா? அவன் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. திருக்குர்ஆன் சரியில்லை என்று அவன் ஏதாவது உளறினாலோ, கிறுக்கினாலோ போதும்; உடனே அவனுக்கு உலகில் பெயரும் புகழும் கிடைக்கும். ஒரே இரவில் அவனை ஓர் ஒரு சிறந்த அறிஞன், மிகப்பெரிய சிந்தனையாளன், புரட்சி எழுத்தாளான் என்றெல்லாம் அவனுக்கு பட்டங்கள் வந்து சேர்ந்துவிடும்.
    எல்லா பத்திரிகைகளும் பத்தி பத்தியாக செய்திகள் வெளியிடும். அப்பாவி முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்பட்டு கொதித்தெழுவார்கள். துப்பாக்கி சூடுகளுக்குப் பழியாகி பிணமாவார்கள். இஸ்லாத்தை விமர்சித்த அந்த பெயர் தாங்கி முஸ்லிமுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கிடைத்துவிடும். ஒரு சிலர் ஆத்திரப்பட்டு கொலை மிரட்டல்கள் விடுவார்கள். உடனே அவனுக்கு பாஸ்போர்ர்ட் இல்லாமலேயே உலகப் பயனம் மேற்கொள்ளும் தகுதி கிடைத்துவிடும். அவனுக்காக அடைக்கலம் தர பெரிய பெரிய நாடுகள் முன் வருவார்கள். வல்லரசுகளின் அதிபர்கள் எல்லாம் அவனுக்கு விருந்துகளும், விருதுகளும் தந்து கெளரவிப்பார்கள். முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை; விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனோபக்குவம் இல்லை; கருத்து சுதந்திரம் இல்லை; முஸ்லிம்கள் என்றாலே அது ஒரு வெறிப் பிடித்த கூட்டம்; தீவிரவாத கூட்டம் என்றெல்லாம் உலக அரங்கில் பிரச்சாரம் முடுக்கிவிடப்படும்.
    இஸ்லாத்தை எதிர்ப்பதுதான் கெளரவமான செயல் என்பதை நிலை நாட்டத்தான் இத்தனை ஆதரவுகள் தரப்படுகின்றன. இஸ்லாத்தை முஸ்லிம்களே எதிர்க்க வேண்டும் என்று சில முஸ்லிம் அதிருப்தியாளர்களை தூண்டத்தான் இத்தனை வஞ்சக நாடகங்களும் நடத்தப்படுகின்றன. ஆக அனைத்து  மீடியாக்களும் ஒன்று சேர்ந்து அல்லும் பகலும் பிரச்சாரம் செய்கின்றன. ஆனாலும் இஸ்லாம் தேய்பிறையாக மாறாமல் வளர் பிறையாக மின்னுகிறது. இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளிலேயே அவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இஸ்லாம் வளருகின்றது.

   எதிர்ப்புகள் வளர வளர, அப்படி இஸ்லாத்தில் என்னதான் குறைகள் இருக்கின்றன; நாமும் பார்ப்போமே என்று, இன்று இஸ்லாத்தை ஆராய முன் வருகிறார்கள். அவர்களுடை மனக்கண்கள் திறக்கின்றன. உலகில் இப்படி மனித குலத்தை ஒருங்கிணைக்கும் மார்க்கம் ஒன்று இருக்கின்றதா? அடடா இதுவரை எங்களுக்கு தெரியாமல் போய்விட்டதே என்று அங்கலாய்க்கிறார்கள். ஒரு தூய்மையான மார்க்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தோமே என்று வருத்தப்படுகிறார்கள். உண்மை என்னவென்று தெரிந்த பிறகு உடனே அதை அரவணைத்துக் கொள்கிறார்கள். இன்று இஸ்லாத்தை எதிர்க்கின்ற அனைத்து சக்திகளும் தங்களுக்கு தெரியாமல் இஸ்லாம் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றார்கள். எதிர்ப்புகளையும், எதிர்ப்பாளர்களையும் வைத்தே இஸ்லாம் பரவுகின்றதென்றால் இது ஒரு அதிசயமல்லவா?
    பத்திரிகைகள், சினிமா தொலைக்காட்சி, இசை இவை இல்லாமல் இன்று உலகில் எதுவும் பரவ முடியாது. இது இன்றைய உலக நிலை. மற்ற மதங்கள் அழகான பெண்களைக் காட்டி சீரியல் நாடகங்களையும் நடத்தி பட்டி மன்றங்களையும், திருவிளாக்களையும், தெருக்கூத்துகளையும் காட்டி இசையுடன் சேர்ந்த பாடல்களை பாடி பத்திரிகைகளில் விளம்பரம் செய்து தங்கள் மதங்களை வளர்க்க முயற்சிக்கின்றன. ஆனால் இத்தனைக்குப் பிறகும் இவைகளைப் பார்த்து மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த மதத்தில் இணைந்ததாக செய்திகளை நாளிதல்களில் பார்க்க முடிகிறதா?    ஒரு மதம் பரவ வேண்டுமானால் சிலைகள் அவசியம் வேண்டும். மதச் சின்னங்களைப் பரப்ப வேண்டும். இவையில்லாமல் எந்த மதத்தையும் பரப்ப முடியாது. ஆனால் சிலைகளும் இல்லாமல்; சின்னங்களும் இல்லாமல் இஸ்லாம் பரவுகின்றதே! இது ஆச்சயரியமில்லையா?
    இன்றைய பிரச்சார சாதனங்களுக்கு மூலதனமே பெண்கள்தான். விளம்பரத்தின் திறவுகோலும் தோற்று வாயுமாக இருக்கின்ற பெண்ணின் கவர்ச்சியான உடலமைப்பிற்குத் திரைப்போட்டு மூடிவிட்டு இஸ்லாம் வளருகின்றதே… இசை கூத்துக்கு இங்கே இடமேயில்லை. மனிதன் விரும்பும் மனம்போல் வாழ இஸ்லாத்தில் சுதந்திரம் இல்லை. மனம்போன போக்கில் ஒரு முஸ்லிம் வாழ முடியாது, இங்கு கட்டுப்பாடுகள் அதிகம். மக்கள் விரும்பும் விபச்சாரம், சூதாட்டம், மதுபானம், வட்டி இந்த நான்கையும் அறவே தடுப்பது இஸ்லாம் ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே.
    முஸ்லிம்களிடம் வல்லரசுகள் இல்லை. ஐ.நா சபையில் ஆதிக்கம் இல்லை. ஒருங்கிணைப்பு இல்லை. எங்கே பார்த்தாலும் முஸ்லிம்கள் தம் வீடுகளிலிருந்து துரத்தப்படுகிறார்கள், முஸ்லிம் என்று சொன்னாலேயே ஆபத்து வலிய வருகின்றது. ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே. முஸ்லிம்களின் கடவுளோ கண்களுக்குத் தெரியாது. அவர்களுடைய தலைவரின் (இறைத்தூதர்) படம்கூட அவர்கள் பார்த்ததில்லை.
    முஸ்லிம்கள் தொழுவதற்கு கைகால் கழுவ வேண்டும். சிறு நீர் கழித்தாலும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். குளிப்பு கடமையானால் (முழுக்கு) குளித்து விட்டுத்தான் இறை ஆலயத்திற்குள் நுழைய வேண்டும். தினந்தோறும் ஐந்து வேளை கட்டாயம் தொழ வேண்டும். இத்தனை சிரமங்கள், இத்தனை கஷ்டங்கள் இருப்பினும் இஸ்லாம் பரவுகின்றதே.
    தர்மம் செய்துதான் தீரவேண்டும் என்று எந்த மதத்திலும் கட்டாயமில்லை. ஆனால் வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் வருடா வருடம் ரூபாய்க்கு இரண்டரை சதவீதம் தன்னுடைய சம்பாத்தியத்திலிருந்து ஏழைகளுக்குக் கொடுத்தே தீர வேண்டும். இந்த சுமையையும் ஒரு முஸ்லிம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். இஸ்லாத்தில் குற்றங்களுக்கு தண்டனை மிக கடுமையானவை. ஆனாலும் இஸ்லாம் பரவுகின்றதே! இது எப்படி சாத்தியமாகின்றது?
    இறைவன் தன்னுடைய திருமறையில் இப்படி கூறுகின்றான்;
    “அவர்கள் அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர். ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூரணமாக்கியே வைப்பான். (61:8)
    உலகில் உள்ள மதங்கள் கடவுளுக்காக அல்லாமல், மதங்களுக்கே கடவுளை பயன்படுத்துகின்றன. கடவுளின் சட்டங்கள், கடவுளின் ஆட்சி வரவேண்டும் என்று கடவுளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள் முஸ்லிம்கள் மட்டும்தான். மாற்று மதத்தினர் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்காகத்தான் கடவுளை வணங்குகிறார்களே தவிர, கடவுளின் விருப்பங்கள் நிறைவேற அவர்கள் ஆசைப்படுவதில்லை. கடவுளை தங்கள் இனத்திற்கும் மதத்திற்கும் சொந்தமாக்க முயற்சி செய்கின்றார்களே தவிர, கடவுளை எல்லோருக்கும் பொதுவாக்க அவர்கள் விரும்புவதில்லை.
    Universal god என்ற பரந்த நோக்கை குறுகிய மனப்பான்மையோடு, கடவுளையே சிறுமைப்படுத்த முயல்கின்றார்களே தவிர, இவர்கள் கூறும் மதங்களால் கடவுளுக்குப் பெருமையில்லை. மனித குலத்திற்காக மதம் சேவையாற்ற வேண்டுமே தவிர, மதங்களுக்காக மனித குலத்தைக் கூறு போடக்கூடாது. ஆக உண்மையான கடவுள் நம்பிக்கை உடையவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதை தவிர வேறு வழி கிடையாது.
    இஸ்லாம் ஒன்றுதான் கடவுளை பெருமைப்படுத்தும் மதமாக (மார்க்கமாக) இருக்கின்றது. அது மட்டும்தான் தனக்காக வாழாமல் கடவுளுக்காக வாழ கற்றுத் தருகின்றது. கடவுளை அடைய அது ஒன்றுதான் வழியாய் இருக்கின்றது. போலிப் பொருள்களுக்குத்தான் போலியான விளம்பரங்கள் தேவை. சர்க்கரையை யாரும் விளம்பரம் செய்ய அவசியமில்லை. அதன் இனிப்பு சுவைத்தவர்களுக்கு நன்கு தெரிகின்றது. விளம்பரம் இல்லாமல் அது தானே விற்பனையாகிறது. அது போலத்தான் இஸ்லாமும். நாம் சர்க்கரை உள்ள இடத்தைக் காட்டினால் போதும். மக்கள் தானே அதைப் பெற்றுக் கொள்வார்கள். இன்பம் அடைவார்கள்.
Post image for இஸ்லாம் ஓர் அதிசயம்
thanks to: readislam.net
Post image for இஸ்லாமிய ஒழுக்க நெறிகள்…..மார்க்கம் மனிதனுக்கு நம்பத்தகுந்த தன்மை மற்றும் கடமையுணர்வு பற்றியக் கோட்பாடுகளைக் கற்பிக்கின்றது. குர்ஆனின் அறிவுரைகளைப் பேணாத சமுதாயத்தில் இந்தக் கோட்பாடுகள் நிலைத்து நிற்கும் என எதிர்பார்ப்பது தவறாகும்; இத்தகைய சமுதாய மக்கள் இறைவனை விடடு மற்றவர்களையே, எல்லாச் சூழ்நிலைகளிலும் நம்புகின்றனர். தொல்லையும் துன்பமும் நேரும்போதும் நன்மைகள் கிட்டும்போதும் மட்டும் இறைவனின் உதவியை நாடுவார்கள். தன்னுடைய செயல்களுக்குத் தான் கணக்குக் கொடுத்தாக வேண்டுமென்றும், தன்னுடைய தீயச்செயல்களுக்குத் தண்டனை அனுபவித்தாக வேண்டுமென்றும் நம்பாத ஒருவன் தன்னுடைய ஆசாபாசங்களுக்கு அடிமையாகி முற்றிலும் தன்னலம் நாடுபவனாகவே விளங்குவான்.
சமுதாயத்தில் இத்தகைய எடுத்துக்காட்டுகள் ஏராளமாகக் காட்டவியலும். உயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், புகழ்பெற்றிருந்து, இப்போது புகழ் மறைந்து மக்களின் கவனத்தைக் கவரும் நிலையில் இல்லாதவர், திவாலாகி விட்ட பணக்காரன் ஆகியோரிடமிருந்து மக்கள் விலகி விடுகின்றார்கள். கொடுமையான நோயால் பாதிக்கப்பட்டவன் தன் நண்பர்கள் தன்னை விட்டும் தூர அகன்று தன்னைக் கைவிட்டு விட்ட நிலையில் தன்னந்தனியாகத் தவிப்பான். நன்றி கொன்றவர்களைப் பற்றிய செய்திகள் நாள்தோறும் நாளிதழ்களில் பங்காளிகள் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதைக் காண்கிறோம். வட்டி ஆதிக்கம் செலுத்தும் உறவுகளில் எல்லாவிதமான ஒழுக்கக் கேடுகளையும் ஓழுங்கீனங்களையும் காணலாம்; அன்றாட வாழ்க்கையில் பணமே மிகவும் முக்கியமான அம்சமாக விளங்குகிறது.
நட்புறவிலும் துரோகம் வெகு சாதாரணமாக ஊடுருவி காணப்பெறும் ஒரு சமுதாய நிகழ்வாகி விட்டது. ஒருவரை ஒருவர் நம்பாத சமுதாயத்தில் மக்கள் தங்களின் மிக நெருங்கிய நண்பர்களையும் விட்டு விலகிச் சென்று ஆதாயம் விளையும் புதிய நட்புறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இத்தகைய காரணங்களுக்காக அநேக மக்கள் தங்கள் நண்பர்களை இழந்திருக்கிறார்கள். தாம்பத்திய உறவுகளிலும் இதுவேதான் உண்மை. அற்ப காரணங்களுக்காகக் கணவன் மனைவியை விட்டும், மனைவி கணவனை விட்டும் பிரிந்து சென்று விடுகிறார்கள். தவறாகப் புரிந்து கொண்டதன் காரணமாக, தாங்கள் இழைத்த தீயச் செயல்களை யாரும் பார்க்கவில்லை என்பதற்காக அவை என்றுமே மறைவாகவே இருக்கும் என்று எண்ணி இவ்வளவு பொறுப்பற்றவர்களாக நடந்து கொள்கிறார்கள். அவர்களை அத்தீயச் செயல்களினின்றும் தடுப்பவர் யாரும் அல்லது தடுப்பது எதுவும் இல்லை. ஆகச் சுருங்கச் கூறுமிடத்து ஒருவரை ஒருவர் நம்பாத சமுதாயத்தில் நம்பிக்கைத் துரோகமும் வஞ்சகமும் நிறைந்து ஒருவரோடு ஒருவர் தீய உள்நோக்கத்துடனேயே பழகுகின்றனர்.


இத்தகைய சமுதாயங்களில் நிலவும் தீமைகள் இவை மாத்திரமல்ல. தன் அழகிற்காகவும் புகழுக்காகவும் ஆயிரம் ஆயிரம் மக்களின் அன்பிற்கும் பாராட்டிற்கும் உரியவர்களாக விளங்கியவர்கள் வயது முதிர்ந்து தங்களின் கவர்ச்சியை இழந்ததும் மக்களின் அன்பையும் பாராட்டையும் இழந்து விடுகின்றனர்; தனிமையில் வறுமையிலும் வாடி மடிகின்றனர். தங்களைச் சுற்றி நின்ற ஆர்வலர்களும் நண்பர்களும் பத்திரிக்கையாளர்களும் தீடீரென மறைந்து விடுவார்கள். இதுதான் அவர்கள் அனுபவிக்கும் மாற்ற முடியாத வாழ்க்கையின் ஒரு கூறு.
இறைவன் மீது நம்பிக்கையில்லாத மக்கள் மனிதன் குரங்கு போன்ற ஒரு விலங்கிலிருந்தும், தொடர்பற்ற ஒரு நிகழ்வின் மூலம் தோன்றினான் என்று நம்புகின்றனர். இதனால் தான் மனிதனுடைய உடல் தோற்றமும் பொருள் வளமுமே முக்கியமாகக் கருதப்பட வேண்டிய அம்சங்களாக விளங்குகின்றன. இந்த அம்சங்கள் இல்லாமல் ஆகும்போது மக்களின் மதிப்பும் மறைந்து விடுகின்றது. இந்தத் தத்துவம், விலங்கிலிருந்து தோன்றிய ஒருவனுக்கு முக்கியத்துவமும் மதிப்பும் தர அனுமதிக்காது. ஒருவரிடமுள்ள பொருட் செல்வத்திற்கும் அவருக்கு கிட்டியிருக்கும் புகழுக்குமே மதிப்பும் கெளரவமும் அளிக்கப்படுகிறது. இளைஞர்களும் அழகிற் சிறந்தவர்களும் மக்களிடையே புகழ் வாய்ந்தவர்களுமே உரிய மதிப்பையும் தகுதியையும் பெறுகின்றனர்; சமுதாயம் வயது முதிர்ந்தவர்களை ஒதுக்கிவிடுகின்றது. அவர்களின் உதவி தேவை இல்லை. சமுதாயத்திலுள்ள மற்றவர்களும் மனிதன் குரங்கிலிருந்து தோன்றியவன் என்னும் தத்துவத்தை நம்புகின்றனர். இந்தத் தத்துவம், கடமையில் முழு ஈடுபாடு கொள்வதை ஆதரிக்காததால், இந்த மக்கள் தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுகின்றனர். தங்களின் பெற்றோர்கள் தாம் தங்களை ஊட்டி வளர்த்தார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். அவர்கள் சேர்க்கப்படும் முதியோர் இல்லங்களில் அவர்கள் முறையாகவும் நேராகவும் கவனிக்கப்படுவதில்லை.
மார்க்கப் பண்புகளைப் பேணாதவர்கள் தங்களின் பெற்றோர்களிடமும் கூட பாசமின்றியும் கொடுமையாகவும் நடந்து கொள்வார்கள் என்பது தெளிவாகிறது. கடமை உணர்வின்மை மனித உறவுகளை எல்லாம் சீர்குலைக்கிறது. மனித ஆன்மாவில் குழப்பத்தையும் கேட்டையும் விளைவிக்கின்ற இந்தச் சமுதாயக் சீர்கேடு மார்க்கப் பண்புகளைப் பேணுவதன் மூலமே களையப்படும். இஸ்லாமியக் கோட்பாடுகளைப் பின்பற்றும்போது மக்கள் மற்றவரை பயனற்றவர்களாகக் கருத மாட்டார்கள். மனிதனுக்குச் சிறப்பைத் தருவது நிச்சயமாக அவனுடைய அழகிய தோற்றமும் செல்வ வளமும் பதவியும் அல்ல. அவனுடைய இறையச்சமும் ஓழுக்க மேம்பாடுமே அவனை மதிப்புமிக்கவனாக்கும் பண்புகள். மனிதனுக்கு வழங்கப்பட்ட இம்மை வாழ்வு அவனைச் சோதனைக்குள்ளாக்குவதற்காகவே. இவ்வுலகில் குறுகிய காலம் வாழ்ந்துவிட்டு மனிதன் நிரந்தர வீடாகிய மறுமையை அடைவான். மறுமையில் அவனுடைய ஒழுக்கப் பண்புகளை கணக்கிடப்படும். எனவே நற்பண்புகளே பலனளிக்கும். இறைவன் அவனுடைய அடியார்கள் ஒருவருக்கொருவர் நம்பகமானவர்களாக வாழும்படி வலியுறுத்துகின்றான். இவ்விதம் வாழ்வதன் மூலமே இறைநம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
இஸ்லாமிய ஒழுக்க நெறி சமுதாயத்தில் மேலோங்கும்போது கடமையுணர்வும் நம்பகத்தன்மையும் மிகச் சிறந்த முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. குழந்தைகள் பெற்றோரை அன்புடன் போற்றி ஆதரிப்பார்கள். பெற்றோரும், திறமையாளர்களும், கல்வியாளர்களும், நாட்டிற்காக உழைத்தவர்களும் எவ்வளவுதான் வயது முதிர்ந்தவர்களானாலும் வாஞ்சையுடன் பாராட்டப்படுவார்கள். குடும்பத்தில் வயது முதிர்ந்தவர்கள் தனியாக விடப்பட மாட்டார்கள். இளைஞர்கள் வயது முதிர்ந்தோரை அடிக்கடி சென்று பார்த்துப் பேசிக் குலவுவார்கள்; அவர்களுக்கு உதவ முன்வருவார்கள். இத்தகைய சமுதாயத்தில் நட்புறவு நீடித்து நிற்கும். மக்கள் சகோதர சகோதரிகளாகப் பழகுவார்கள். நோய்வாய்ப்பட்டிருக்கும் போதும், இடர்ப்பாடுகள் துன்பங்கள் நேரும் போதும் ஒருவருக்கொருவர் உதவுவார்கள்; இதுவே இறைவனின் திருப்தியைப் பெறுவதற்குரிய வழி என எண்ணி மகிழ்வுடன் உதவுவார்கள். கணவனும் மனைவியும் இறையுணர்வோடு ஒருவரை ஒருவர் மனதார நேசித்து வாஞ்சையுடன் வாழ்வார்கள். மறுமையில் நம்பிக்கை கொண்டு ஒருவர்மீது மற்றவர் பற்றும் பாசமும் மாறாது. அவர்களில் ஒருவர் நோயால் பீடிக்கப்பட்டு படுக்கையில் கிடந்தாலும் பற்றும் பாசமும் உதவியும் மாறாது. மனைவி வயது முதிர்ச்சியின் காரணமாக கவர்ச்சியை இழந்தாலும் அல்லது தீப்புண்பட்டு முகம் வசீகரத்தை இழந்தாலும் கணவனுக்கு அவள் மீதுள்ள அன்பு குறையாது. இறைநம்பிக்கையால் உருவாகும் உணர்வே இதற்குக் காரணம். துன்பமும் பிரச்சினையும் எழும் காலங்களில் பேணப்படும் பொறுமையும் சகிப்புத் தன்மையும் இறை நம்பிக்கையாளர்களுக்கு மன நிம்மதியை அளிக்கும். கீழ்வரும் நபிமொழி இறை நம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் கடமையுணர்வை எடுத்துரைக்கிறது.
முஸ்லிம்கள், ஒருவருக்கொருவர் சகோதரர் ஆவர். ஒருவருக்கொருவர் தீங்கு செய்ய மாட்டார்; ஒருவரை ஒருவர் கைவிட்டு விடவும் மாட்டார். தன் சகோதரனின் தேவையைக் கவனிப்பவரின் தேவையை இறைவன் நிறைவு செய்வான்; தன் சகோதரனின் கவலையைப் போக்குபவரின் கவலைகளில் ஒன்றை மறுமை நாளில் அல்லாஹ் நீக்கி விடுவான். (புகாரீ, முஸ்லிம்)
இந்த உறவும் பற்றும் எல்லாம் இறை நம்பிக்கையாளர்கள் மேற்கொள்ளும் வணிக மற்றும் இதர உடன்பாடுகளுக்கும் பொருந்துவனவாகும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதும் செய்த உடன்பாட்டைப் பேணுவதும், இறை நம்பிக்கையாளர்களின் நம்பத்தகுந்த பண்புகளில் தனிச் சிறப்பான ஓர் அம்சமாகும். குர்ஆனில் அறிவுரைகள் பேணப்படாதச் சமுதாயத்தில் மக்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவார்கள் என்றோ கடமையுணர்வோடு செயல்படுவார்கள் என்றோ எதிர்பார்ப்பது மடமையாகும்.
மூலம் : ஹாரூன் யஹ்யா
thanks to: readislam.net
“அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்காக(ப் படைத்து)த் தன் அதிகாரத்துக்குள் வைத்திருக்கிறான். (அவ்வாறே) விண்மீன்கள் யாவும் அவனுடைய சட்டளைக்குட்பட்டவையாகவே இருக்கின்றன. உறுதியாக இதிலும் உய்த்துணரும் மக்களுக்குப் பல நற்சான்றுகள் இருக்கின்றன” (16:12)
“அவன் தான் நீங்கள் மீன்களை(ப் பிடித்துச் சமைத்து)ப் புசிக்கவும், நீங்கள் அணிகலனாக அணியக்கூடிய பொருள்களை எடுத்துக் கொள்ளவும், கடலை(உங்களுக்கு) வசதியாக்கித்தந்தான். (பல இடங்களுக்கும் சென்று வணிகத்தின் மூலம்) இறைவனின் அருளை நீங்கள் தேடிக் கொள்ளும் பொருட்டு, (கடலில் பயணம் மேற்க்கொள்ளும் போது) கப்பல் கடலைப் பிளந்து கொண்டு செல்வதை நீங்கள் காண்கிறீர்கள். (இதற்காக இறைவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்திக் கொண்ருப்பீர்களாக!”
“உங்களைச் சுமந்திருக்கும் பூமி அசையாதிருப்பதற்காகப் (பெரிய) பெரிய மலைகளை அதன் மீது வைத்தான்! (உங்கள் போக்குவரத்துக்கு) நேரான வழிகளை நீங்கள் அழிவதற்க(ப் பல) வழிகளையும், ஆறுகளையும் அமைத்தான்.” (15:14,15)
இறை விசுவாசிகளே நீங்கள் இவைகளை நன்கு ஆய்ந்து பாருங்கள்! தனிப்பெரும் வல்லவன் ஒருவனுடைய அளப்பரிய ஆற்றலன்றி உலக இயற்கைகள் என்று சொல்லப்படும் படைப்பினங்கள் தோன்றி இருக்க இயலுமா? என்பதைச் சற்றே சிந்தியுங்கள்!
நிதானமாக எண்ணிப் பார்ப்பவர்க்கு இறை ஆற்றல் மிகத் தெள்ளத் தெளிவாகத் தென்படும். மனிதன் என்பவன் என்றும் பலவீனமானவன்! பலமுள்ளவன்-அனைத்தின் மீதும் ஆளுமை உள்ளவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இலர்!
இத்தகைய வலிமை உள்ளவனையே நாம் வணக்கத்திற்கு உரியவனாக ஏற்று வணங்கி நன்றி செலுத்த வேண்டும்.


“அல்லாஹ்வே அனைத்துப் பொருள்களையும் படைத்தவன். அவனே அனைத்தின் பாதுகாவலன்.
வானங்கள், பூமியிலுள்ள (கருவூலம் முதலிய)வைகளின் திறவுகோல் அவனிடமே இருக்கின்றன. ஆகவே, அல்லாஹ்வின்  வசனங்களை எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் முற்றிலும் நட்டமடைந்தவர்களே!
(நபியே!) நமக்கும், உமக்கு முன்னிருந்த ஒவ்வொரு (தூது)வருக்கும் மெய்யாகவே ‘வஹீ” மூலம் அறிவிக்கப்பெற்றது (என்னவென்றால் இறைவனுக்கு) நீங்கள் இணை வைத்தால், உங்களுடைய நன்மைகள் (யாவும்) அழிந்து, உறுதியாக நீங்கள் நட்டமடைந்தவர்களில் ஆகி விடுவீர்கள் (என்பதாகும்).
ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்கும்; அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நீரும் இருந்துவாரும்”.
இத்துணை தெள்ளத் தெளிவாக பேரிறைப் பெட்டகம் திருக்குர்ஆன் தெளிவாக்கியப் பின்பும், வல்ல அல்லாஹ்வின் ஆற்றலை உணராதவர் எப்படிப்பட்டவராக இருப்பர்?  என்பதைச் சிந்தனைச் செல்வர்களே அறிந்துக் கொள்ளுங்கள்!
அழியும் இம்மையின் மீது அசைக்க இயலாத முழு நம்பிக்கை மறுமையின் மீது ஐயம்! இவர்கள் இணை வைப்பவர்கள் தாமே? ஆனால், அவர்கள் (இறை நம்பிக்கையில் அழுத்தம் இல்லாதவர்கள்) நாவால் மொழிவதெல்லாம், “நாங்கள் மறுமையை நம்புகின்றோம்; இம்மை அழியக்கூடியது என்பதை உணர்கின்றோம்” என்பதனையே!
அவர்களின் செயல்முறைகள் யாவும், இம்மையை மிகமிக நேசிப்பவர்கள் என்பதையே காட்டுகின்றன.
பெரியவர்கள் சொன்னார்கள்! முன்னோர்கள் மொழிந்தார்கள்! இமாம்கள் இயம்பினார்கள்! என்றால் உடனுக்குடன் செவி சாய்த்து செயல்படுவார்கள், குர்ஆன் கூறுகிறது! நபிமொழிகள் நவில்கின்றன! என்றால் முகம் சுளித்து நிற்பவர்களே எண்ணற்றோர்!
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்க முன், மக்கத்து குரைஷிக் குஃப்பார்கள் தங்களின் சுயநல-சுகபோக வாழ்க்கைக்கு துயரங்கள் வந்து விடுமோ என்ற ஆதங்கத்தால் இஸ்லாத்தினை நிராகரித்தார்கள் – அதாவது, வெளிப்படையாக எதிர்த்தார்கள்.
இன்று அப்துர்ரஹ்மான், அப்தில்லாஹ் என பெயர் வைத்துக் கொண்டு குர்ஆன்-ஹதீஸை ஏற்றுக் கொண்டவர்களாக பிறரை நம்ப வைத்து, அறிந்தோ, அறியாமலோ செயலளவில் உதாசீனப்படுத்துகின்றனர். அவர்களைவிட இவர்கள் படு பயங்கரவாதிகள்!
“அல்லாஹ்வை அடிபணிகிறோம்” என்று கூறிக்கொண்டே எண்ணற்ற இணைவைத்தலில் நாளும் ஈடுபட்டு, அடிப்படை இஸ்லாத்தைத் தகர்த்து எறிந்துக் கொண்டு இருக்கின்றனர், என்னே கேவலம்! என்னே மதியீனம்!
“(நபியே!) எவன் நம்முடைய நினைவுறுத்தலைப் புறக்கணித்து இவ்வுலக வாழ்க்கையைத் தவிர, (மறுமையை) விரும்பாதிருக்கின்றானோ அவனை நீர் புறக்கணித்துவிடும்.” (53:29)
“இவர்களுடைய கல்வியறிவு இவ்வளவு தூரம்தான் செல்கின்றது! (இதற்கு மேல் செல்வதில்லை) உறுதியாக உமதிறைவன் தன்னுடைய வழியிலிருந்து தவறியவன் யாரென்பதையும் நன்கறிவான்; நேரான வழியில் செல்பவன் யார் என்பதையும் நன்கறிவான்.” (53,30)
இறை விசுவாசிகளே! உண்மையிலேயே, எம்மனிதர்கள் இறை ஆற்றலை உணர்ந்து, அச்சத்தாலும், நம்பிக்கையாலும் வல்ல நாயனுக்கு அடிபணிந்து வாழுகின்றார்களோ அவர்களே ஈடேற்றம் பெற்றவர்கள்.
எவர்கள் இறையாற்றலை அலட்சியப்படுத்தி, தங்களுடைய பகுத்தறிவின் வெளிப்பாடுகளால் பெருமையடித்தக் கொள்கின்றார்களோ, அவர்கள் உறுதியாக  (இம்மையை மிகவும் விரும்புவதால்) இம்மையிலும், மறுமையிலும் கேவலத்துக்குரியவர்களாக வாழப் போகின்றவர்களே!
“ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். எனினும் உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம், மறுமை நாளில் தான்! ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுவர்க்கத்தில் புகுத்தப் பெறுகின்றாரோ அவர், உறுதியாக(பெரும்) பாக்கியத்தை அடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை, மயக்கக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை”. (3:185)
  புலவர். செ. ஜஃபர் அலி, பி.லிட்.,
thanks to: readislam.net
Post image for மரணம் வரை ஏமாறும் பரிதாபம்!இன்று மக்களின் சகல விதமான சீர்கேடுகளுக்கும் மார்க்கப்பணியை இந்தப் புரோகிதரர்கள் வருமானத்திற்குரிய வழியாக ஆக்கிக்கொண்டதே. எப்பொழுது ஒருவன் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்கிறானோ அவன் ஒரு போதும் நேர்வழியை – குர்ஆனிலும், ஹதீஸிலும் உள்ளதை உள்ளபடி சொல்லவே முடியாது. கோணல் வழிகளை மட்டுமே நேர்வழியாகப் போதிக்கவே முடியும். மண்ணறையை சந்திக்கும்வரை மனிதனுக்கிருக்கும் பொருளாசை, அந்தப் பொருளை அடைவதற்காக எல்லா பாதகங்களையும் செய்ய வைத்து விடுகிறது.
பொருளாசையின் விபரீதங்கள்:
பொருளாசை காரணமாக வியாபாரிகள் கலப்படங்கள் செய்கிறார்கள். டாக்டர்களை எடுத்துக்கொள்ளுங்கள் பொருளாசையால் மனித உயிருடன் விளையாடுகிறார்கள். சாதாரண சளி காய்ச்சலுக்குச் சென்றாலும் பயமுறுத்தி பல சோதனைகளை செய்து காசை பிடுங்கி விடுவார்கள். பெரும்பாலான சுகப்பிரசவங்கள் இந்த டாக்டர்களினால் அறுவை சிகிச்சையாக ஆக்கப்படுகின்றன. மருந்தினால் குணப்படுத்த முடிந்த நோய்களும் இன்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றன. எந்தத் துறையை தொழிலாக கொண்டர்வகளும் பொருளாசை காரணமாக தில்லுமுல்லுகள் செய்யாமலில்லை.
புரோகிதரர்களின் பேராசை:
இப்படிப்பட்ட நிலையில் மார்க்கப் பணியை தங்களின் பிழைப்பாகக் கொண்டவர்கள் அதில் தில்லுமுல்லுகள் பித்தலாட்டங்கள் செய்யமாட்டார்கள் என்று எண்ணுவது நம்புவது அதிசயமாகும்.  இந்த மதவாதிகளிடம் காணப்படும் தில்லுமுல்லுகள் பொய்பித்தலாட்டங்கள் ஏமாற்று வித்தைகள் செய்யும் இவர்களை மிஞ்ச முடியாது.
உலகியல் துறைகளில் காணப்படும் ஏமாற்றுப் பித்தலாட்டங்களை மக்கள் எளிதில் இணங்காண முடியும். அதனால் மக்கள் அவற்றில் எச்சரிக்கயாக இருக்க பெரிதும் வாய்ப்புள்ளது. மதவாதிகள் செய்யும் ஏமாற்று பித்தலாட்டங்களை மக்கள் எளிதாய் இனங்காண முடிவதில்லை. அதனால் மக்கள் அதிலிருந்து தப்பவும் வழியில்லை.  அனைத்து மதப்புரோகிதரர்களும் பேராசை பித்து பிடித்து அழைகிறார்கள். இந்த உண்மையை இன்று மடாலயங்களிலும், மிஷனரிகளிலும், தர்காக்களிலும் இந்த புரோகிதர்கள் செய்யும் பித்தலாட்டங்களின் மூலம் அவர்களின் உண்மையான சொரூபத்தை மக்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.


காலமெல்லாம் ஏமாறுவதில்லை:
ஒரு டாக்டர் வைத்தியம் செய்கிறார். சுகம் கிடைக்கவில்லை. இரண்டாம் மூன்றாம் முறையும் வைத்தியம் செய்தும் சுகம் கிடைக்கவில்லை; இப்போது அந்த நோயாளி வேறு திறமை மிக்க டாக்டரைப் பார்த்து போய்விடுவார். ஒரு வக்கீல், ஒரு ஆடிட்டர் போன்றோரின் உண்மை நிலையும் இதுவே.
இதுபோல் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் எத்தனை பட்டங்கள் பெற்றவராக இருந்தாலும் காலமெல்லாம் ஒருவரையே நம்பியிருக்கும் பரிதாப நிலை உலகியல் துறையை பொருத்த மட்டிலும் இல்லவே இல்லை.
இன்னொரு அரிய வாய்ப்பும் உலகியல் துறைகளுக்கு உண்டு. படித்து பட்டம் பெற்றவர்கள் அனுபவ வாயிலாக நிறைந்த அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இந்த இரண்டு வாய்ப்புகளும் மதத்துறையில் இல்லவே இல்லை. உதாரணமாக ஒரு மடாதிபதி மனிதக்கரங்களால் செதுக்கிய சிலைகளை வணங்குவதன் மூலம் மோட்சம் பெறலாம் என உபதேசிக்கிறார். அவர் உபதேசத்தை நம்பி நடப்பவர் அவர் வாழ்நாள் முழுதும் அந்த சிலைகளை வணங்கினாலும் அதன் பலனை இவ்வுலகில் பார்க்கபோவதில்லை. அதே முக்கடவுள் கொள்கையை போதிக்கும் பாதிரியாரின் போதனையை நம்பி அதில் உறுதியாக நின்று வணங்கியவரும் அதன் பலனை இவ்வுலகில் பார்க்கப்போவதில்லை.
அதே போல் தாயத்து தட்டு தர்கா சடங்குகளை போதிக்கும் முஸ்லிம் புரோகிதரை முழுமையாக நம்பி அவரின் போதனைப்படி வாழ்நாள் முழுதும் செயல்பட்டு வரும் ஒருவர் தனது மரணத்திற்கு முன்னர் அதன் பலாபலனை கண்டு கொள்ளப்போவதில்லை.
இப்படியே தக்லீதை, மத்ஹபுகளை, தரீக்காக்களை, பிரிவுகளை, அமைப்புகளை, கழகங்களை போதிக்கும் புரோகித மவ்லவிகளின் போதனைகளை அப்படியே நம்பி அவற்றின்படி தமது வாழ்நாள் முழுவதும் செயல்பட்டு வருபவர்கள் தங்களின் மரணத்திற்கு முன்பு அதன் பலாபலன்களை கண்டு கொள்ளப்போவதில்லை.
காலம் கடந்த ஞானம்:
உலகியல் துறைகளில் தங்களின் சொந்த அனுபவத்தில்  அவர்களின் திறமையற்ற நிலையை அறிந்து எச்சரிக்கையாய் குறிப்பிட்ட டாக்டரிடமிருந்து, வக்கீலிடமிருந்து, எஞ்ஜினியர்களிடமிருந்து விடுபட்டு சரியானவர்களை தேர்வு செய்வதுபோல் மதத்துறையில் இந்தப் புரோகிதரர்களின் திறமையற்ற நிலையை அறிந்து அவர்களிடமிருந்து விடுபட முடியவில்லை. நாளை மறுமையில்தான் தாங்கள் தகுதியற்ற இந்த புரோகிதரர்களை நம்பி மோசம் போனதை அறிய முடியும். நரகில் வீழ்ந்த பின்னர் அவர்களைத் திட்டியும் சபித்தும் இப்படி கூறுவார்கள்.
33:67.   “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள்   பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்”
33:68.   “எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெருஞ்   சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக” (என்றும் அவர்கள் கூறுவார்கள்).  
கடமையான மார்க்கப் பணிக்குக் கூலி-சம்பளம் அறவே கூடாது என்று   குர்ஆன் வசனங்கள் கூறிக் கொண்டிருக்க ஹதீஸ்கள் இதுபற்றி என்ன கூறுகின்றன என்று   பாருங்கள்.
”குர்ஆனை ஓதுங்கள்! அதன் மூலம் சாப்பிடவோ, பொருள் திரட்டவோ   முற்படாதீர்கள்” என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். (அஹ்மத், தஹாவி, தப்ரானி,   இப்னு அஸாகிர்)
”எவர் குர்ஆனை ஓதுகிறாரோ அவர் அல்லாஹ்விடமே கேட்கட்டும்,   வருங்காலத்தில் குர்ஆனை ஓதிவிட்டு மக்களிடமே (கூலி-சம்பளம்) கேட்பவர்கள்   தோன்றுவார்கள்” என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். (திர்மிதி, அஹ்மத்)
மார்க்க பிரச்சாரத்தை பிழைப்பாகக் கொண்டவர்கள் ஒருபோதும் சத்தியத்தை போதிக்க மாட்டார்கள். மார்க்கப் பணிக்கு கூலி வாங்கக்கூடாது என்பதை குர்ஆன் வசனங்கள் தெளிவாக கூறிக்கொண்டிருக்க, அவற்றை புறக்கணித்து விட்டு மார்க்கத்தை பிழைப்பாக்கி கொண்டிருக்கிறார்கள். பகலில் பசுமாடு தெரியாத குருடனுக்கு இரவில் எருமை மாடு தெரியுமா? என்று சொல்வதற்கொப்ப கூலிக்கு பிரச்சாரம் புரியும் மவ்லவிகள் ஒரு போதும் மக்களுக்கு நேர்வழியைக் காட்ட மாட்டார்கள். அவர்கள் மார்க்கத்தில் செய்த கலப்படத்தை வழிகேட்டையே நேர்வழியாக எடுத்துக் காட்டி மக்களை ஏமாற்றி தங்கள் வயிற்றுப் பிழைப்பை வெற்றிகரமாய் நடத்துவார்கள்.
எனவே முஸ்லிம் சமுதாயத்திற்கு மாபெரும் கேட்டை விளைவிப்பவர்களே இந்த புரோகித மவ்லவிகள். இவர்களிடமிருந்து முஸ்லிம் சமுதாயம் விடுபட்டு ஆரம்ப காலங்களில் எப்படி குர்ஆன், ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக விளங்கிச் செயல்பட்டார்களோ அதுபோல் செயல்பட முன்வர வேண்டும்.  இந்தப் புரோகிதர மவ்லவிகளின் வார்த்தைகளில் மயங்கி அவர்கள் பின்னால் செல்வதை கைவிட்டு குர்ஆன் ஹதீஸ் மொழி பெயர்ப்புகளை நேரடியாக முனைப்புடன் பார்த்து சிந்திக்க முன்வரவேண்டும்.  முஸ்லிம்கள் புரோகிதத்தின் பிடியிலிருந்து விடுபட துஆ செய்வோம்.

thanks to: readislam.net