உடலில் ஏற்படும் வலியை உணரும் தன்மை மனித மூலையில்தான் உள்ளது என்று எண்ணினர். ஆனால் அண்மைக்கால கண்டுபிடிப்புகள், வலி உள்வாங்கிகள் (Pain-receptors) தோலில் அமைந்திருப்பதால்தான் ஒரு மனிதன் வலியை உணர்கிறான் என்று நிரூபித்துள்ளன. இந்த (Pain-receptors) இல்லையெனில் உடலில் ஏற்படும் வலியை உணர்ந்திட இயலாது.
தீக்காயங்களால் துன்புறும் ஒரு நோயாளியை பரிசோதனை செய்யும் மருத்துவர், அந்நோயாளியின் தீக்காயத்தின் அளவை கண்டறிய ஒரு குண்டூசியால் குத்திப் பார்க்கின்றனர். நோயாளி வலியை உணரும் பட்சத்தில் நோயாளி லேசான தீக்காயங்களோடு தப்பினார் என டாக்டர் மகிழ்ச்சி அடைகிறார். காரணம் தீக்காயங்களால் உள்வாங்கிகள் (Pain-receptors) பழுதாகாமல் நல்ல நிலையில் உள்ளது என்பதை எடுத்து காட்டுகின்றது. இதற்கு மாறாக நோயாளி குண்டூசியினால் வலியை உணராமல் இருந்தால் அந்த தீக்காயம் ஆழமாக ஏற்பட்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டுவதோடு உள்வாங்கிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது.
إِنَّ الَّذِينَ كَفَرُواْ بِآيَاتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَارًا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُواْ الْعَذَابَ إِنَّ اللّهَ كَانَ عَزِيزًا حَكِيمًا
யார் நம் வேத வசனங்களை நிராகரிக்கின்றார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை அவர்கள் வேதனையை (பூரணமாக) அனுபவிப்பதெற்கென அவர்களுக்கு நாம் மாற்றிக்கொண்டே இருப்போம்- நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். 4: 56 سورةالنساء
தாய்லாந்தில் உள்ள (Chieng Mai University) பல்கலைகழகத்தில் உடர்கூறு துறையின் தலைவர் Prof. Tagatat Tejasen என்பவர் தோலில் உள்ள வலி உள்வாங்கிகள் குறித்து நீண்ட காலம் ஆய்வு மேற்கொண்டவர். 1400 ஆண்டுகளுக்கு முன் இந்த அறிவியல் உண்மை திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளதை அவரால் ஆரம்பத்தில் நம்பவே முடியவில்லை. இந்த மிகத் துல்லியமான அறிவியல் பேருண்மை திருக்குர்ஆனில் பொதிந்து கிடப்பதை கண்ட பேராசியரியர் தெஜாசன் ஆச்சரியப்பட்டார்.
இந்த இறைவசனம் அவர் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி சவூதியின் தலைநகர் ரியாதில் (Scientific Signs of Quran and Sunnah) எனும் தலைப்பில் நடபெற்ற எட்டாவது மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட பேராசிரியர் தெஜாசன் இஸ்லாத்தின் ஏகத்துவ கோட்பாட்டை ஏற்றுக்கொள்வதாக பகிரங்கமாக முழங்கினார்
0 comments:
Post a Comment