MS Office இப்பொழுது தமிழில் வந்துள்ளது. எல்லாமே தமிழ் மயம். எல்லாவிதமான தொடர்புகளும் அமைப்புகளும் தமிழில் உள்ளன. நாம் ஆங்கிலத்தில் இதுவரை புரிந்துக்கொள்ளாத காரியங்கள் எல்லாம் எளிதாக காணமுடிகிறது. ஆங்கிலம் தெரியதவர்களும் கூட தெளிவாக புரிந்துக் கொள்ள முடியும். இதுவரை ஆங்கிலத்தில் பார்த்த நமக்கு இது ஒரு புது அனுபவத்தை கொடுக்கிறது. மேலும் இலக்கண பிழைகளை கூட இதில் காண்பிக்கிறது. இதிலிருந்து புதிய கணினி வார்த்தைகளை தெரிந்துகொள்ள முடிகிறது. மைக்ரோசாப் கம்பெனி இதை இலவசமாக கொடுக்கிறது. Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ் என்று அழைக்கபடும் இந்த மென்பொருளை நீங்கள் http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyId=91426C33-EA45-482D-AF08-CD8EA8CBFD53&displaylang=ta
பயன்பெறுங்கள்.


தரவிறக்கி இதை Install செய்யுங்கள்.
Install செய்த பின் எப்படி அமைப்பது என்பதை பார்ப்போம்.

பயன்படுத்துவதற்கான நெறிமுறைகள்:

Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ் மொழிக்கு உங்கள் பயனர் இடைமுகத்தை மாற்றுவதற்கு, இந்த வழிமுறைகளை பின்பற்றவும்:



Microsoft Office 2007 Language Settings -ஐ Start\All Programs\Microsoft Office\Microsoft Office Tools என்ற மெனுவிலிருந்து தொடங்கவும்.
Display Language என்ற தாவலிலிருந்து Display Microsoft Office menus and dialog boxes in: என்பதை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் காணவிரும்பும் மொழியை கீழ் தோன்றும் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியே இப்போது இயல்புநிலை மொழியாக காட்சியளிக்கும்.
Display Language என்ற தாவலில் உங்கள் Office காட்சியை Windows காட்சியுடன் பொருத்துவதற்கான விருப்பம் இருக்கிறது. தற்போதுள்ள Windows -இன் மொழி உங்களுக்காக பட்டியலிடப்படும். உங்கள் Windows காட்சியுடன் பொருந்தும் Office காட்சியை அமைத்துக்கொள்ள Set the Microsoft Office display language to match the Windows display language என்ற தேர்வுப் பெட்டியை தேர்ந்தெடுக்கவும். Display Microsoft Office menus and dialog boxes என்ற பட்டியலில் நீங்கள் தேர்வு செய்ததை இந்த அமைப்பு மேலெழுதிவிடும்.
Editing Languages தாவலில் நீங்கள் இயக்க விரும்பும் மொழியை Available Editing Languages என்ற பட்டியலில் தேர்வு செய்து அதன்பிறகு AddEnabled Editing Languages பட்டியலில் பட்டியலிடப்படும். என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியானது
Editing Languages தாவலில், உங்கள் முதன்மை திருத்தல் மொழியாக இருக்கவேண்டிய மொழியை Primary Editing Language பட்டியலில் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் OK பொத்தானை கிளிக் செய்யவும்.
Office பயன்பாடுகளை அடுத்த முறை தொடங்கும்போது நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள மொழி அமைப்பு மாற்றங்கள் செயல்படும்.
குறிப்பு: உதவியை Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ் மொழிக்கு மாற்ற முடியாது. உதவியானது அசல் நிறுவலில் உள்ள மொழியிலேயே தொடர்ந்து இருக்கும்.
கீழ்தோன்றும் பட்டியலிலுள்ள உதவியைக் காண்பி என்பதை அடிப்படை மொழியிலேயே எப்போதும் இருக்கும்படி அமைக்கவும்
தொடக்க

காலத்தில் சர்ச்சைக்குரிய சப்ஜெக்ட்களை தொட்டுக் கொண்டிருந்தவர் நாளடைவில்
“ஒரு கையில் இறைவேதம், மறு கையில் நபிபோதம்

இருக்கையில் நமக்கென்ன தயக்கம்

கண்களில் ஏனிந்த கலக்கம்”

என்பது போன்ற கருப்பொருளை தேர்வுச் செய்து தனது பாதையை சீர்படுத்திக் கொண்டது அவருக்குள்ளேயே ஏற்பட்ட ஒரு இயற்கையான மனமாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘அந்த நாளிலே மக்கா நகரம் இருந்தது’ எப்படியென்றும், ‘ஐயாயிரம் ஆண்டுகள் முன்னே நடந்த அரபு நாட்டு தியாக’த்தையும், ‘பாத்திமா வாழ்ந்த முறை’யையும், ‘பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை’யையும், ‘கண்களை குளமாக்கும் கர்பலா’ நிகழ்ச்சியையும் பாமரர்கள் ஏட்டில் படித்து தெரிந்துக் கொண்டதைவிட இவர் வாயிலாக இஸ்லாமிய சரித்திர நிகழ்வுகளை அறிந்து கொண்டவர்கள் ஆயிரமாயிரம்.

“மெளத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமா?

மாறிடும் வாழ்வினில் மூழ்குதல் நியாயமா?”

என்று இவரது பாடல், “தழுவாது எனக்கு மரணபயமே” என்று பாடிய ஆசைக்கவிஞன் கண்ணதாசன், “காலா என் கண்முன் வாடா, உன்னைக் காலால் உதைக்கின்றேன்” என்று பாடிய மீசைக் கவிஞன் போன்ற கேரக்டர் மனிதர்களையும், ‘மரணபயம்’ ஆட்கொண்டு தெளிவு பிறக்க வைத்து விடும்.

“கன்னியரே! அன்னையரே! கொஞ்சம் நில்லுங்கள்” என்று அன்புடன் இவர் அழைக்கையில் கடுக்கண்களை காதில் போட்டுக் கொள்ளும் கன்னியர்கள் இந்த கனிவான அறிவுரையை காதில் போட்டுக் கொள்ள ஆயத்தமாகி விடுவார்கள்.
நாம் நன்றாக இல்லை !
காரணம் நாம் ஒன்றாக இல்லை !

ஒரே இறை – எத்தனை இயக்கங்கள் !
ஒரே மறை – எத்தனை குழப்பங்கள் !
ஒரே பிறை – எத்தனை பெருநாட்கள் !

மார்க்கம் வலியுறுத்தும் பிரியம் !
தெரியவில்லை – நமக்கு !
மார்க்கத்தை வைத்தே பிரியத் தெரிகிறது !

முஃமின்கள் கண்ணாடி போன்றவர்கள் !
துவேச கற்களை வீசினோம் !
ஒவ்வொரு திசையிலும் சிதறினோம் !
காலமெல்லாம் நாம் கதறினோம்!

கபர்ஸ்தானாய் மாறும் ஆப்கானிஸ்தான் !
உணவின்றி மடியும் சோமாலியா !
பற்றி எரியும் பாலஸ்தீன் !
உயிர்களின் புதைகுழி காஷ்மீரின் சோகம் !

பாங்கோசை ஒலிக்கின்ற பூமியெங்கும் இரத்தம் !
இருந்தும் திருந்தவில்லை நம் சித்தம் !

இஸ்லாமிய இயக்கங்களே – நீங்கள் !
வேற்றுமையில் ஒற்றுனை காண வேண்டாம் !
ஒற்றுமையில் வேற்றுமை என்ன? கூறுங்கள் !

இஸ்லாம் தான் பேரியக்கம் என்று !
ஓர் குடையின் கீழ் நின்று !
இவ்வுலகுக்கு உரக்கச் சொல்லுங்கள் !

சிந்திப்போம் ! வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமமக்காகப் பிரார்த்திப்பொம்!
- சமுதாய ஒற்றுமை புத்தகத்திலிருந்து….
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்.

லுஹருக்குச் செய்த ஒளுவோடு அசர் தொழுவது வழக்கம். ஆனால் இன்று என்னைத் தொழ வைக்கச் சொன்னார்கள். தொழுகை முடியும் வரை ஒளு பற்றி சந்தேகமாக இருந்தது. முடிந்த பிறகு ஒளு முறிந்த விஷயம் உறுதியானது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

...மின்னஞ்சல் வழியாக சகோதரர் ஜாகிர் ஹுஸைன்.

தெளிவு: வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

மார்க்கத்தைத் தெளிவாக அறிந்துப் பின்பற்ற வேண்டும் என்ற அவாவில் இக்கேள்வியை எழுப்பியச் சகோதரர் ஜாகிர் ஹுஸைன் அவர்களுக்கு மார்க்கத்தில் மேலும் அதிகப்பற்றை இறைவன் ஏற்படுத்துவானாக.

முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள். உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள். உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள். (005:006)

''தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடி பொருட்களிலிருந்து (செய்யப்படும்) எந்தத் தர்மமும் (இறைவனால்) ஏற்கப்படாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா)

''உங்களில் ஒருவருக்கு சிறு தொடக்கு (ஹதஸ்) ஏற்பட்டுவிட்டால் அவர் அங்கத் தூய்மை - ஒளுச் செய்துகொள்ளாதவரை அவரது தொழுகை ஏற்கப்படாது'' என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

''எவனுக்கு ஒளு இல்லையோ அவனுக்கு தொழுகை இல்லை'' (அஹ்மத், இப்னுமாஜா)

மேற்கண்ட இறைவசனமும், நபிமொழிகளும் தொழுகைக்கு ஒளு - அங்கத் தூய்மை மிக அவசியம் என உறுதிப்படுத்துகின்றது. சிறுநீர், மலம் கழிப்பது, காற்று வெளியேறுவது ஆகியவை ஹதஸ் - சிறு தொடக்கு எனப்படும். ஒளுவோடு இருக்கும் போது இச்செயல்களைச் செய்தால் ஒளு நீங்கிவிடும். பின்னர் மீண்டும் ஒளுச் செய்தே தொழுகைக்குத் தயாராக வேண்டும்.
(ஒளுச் செய்ய தண்ணீர் கிடைக்கவில்லை எனில் தூய்மையான மண்ணில் தயம்மும் செய்துகொள்ள அனுமதிக்கும் இறைவசனம், 004:043)

தொழுகையில் காற்றுப் பிரிதல்
''தொழும் போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஏற்படுவதாக நான் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு, 'நாற்றத்தை உணராத வரை அல்லது சப்தத்தைக் கேட்காத வரை தொழுகையிலிருந்து திரும்ப வேண்டாம்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

தொழுகையில் காற்று வெளியேறுவது போன்ற வெறும் உணர்வுக்காகத் தொழுகையை இடையில் முறிக்க வேண்டிய அவசியமில்லை! இனி சகோதரரின் கேள்விக்கு வருவோம்.

தொழுகைக்கு வெளியே ஒளு நீங்கியதை மறந்த நிலையில் தொழுகைக்குத் தயாராகி, தொழுகையில் ஒளு பற்றிய சந்தேகம் ஏற்பட்டு, தொழுது முடித்தப் பின் ஒளு நீங்கியது உறுதியானது என்பதால் "ஒளுவின்றி தொழுகை இல்லை" என்ற மார்க்க நியதிப்படி மீண்டும் ஒளுச் செய்து அத்தொழுகையைத் தொழ வேண்டும். இதனால் பின்பற்றியவர்களின் தொழுகைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

தொழுகையில் இமாமத் செய்பவரின் தவறுகள் பின்பற்றித் தொழுவோரைப் பாதிக்காது என்றக் கருத்திலமைந்த நபிமொழி புகாரியில் இடம்பெற்றுள்ளது. மேலும், மறதியாக ஒளு நீங்கிய நிலையில் தொழுகை நடத்திய இமாம் என்ன செய்ய வேண்டும்? இதற்கு அஃதர் - நபித்தோழர்களின் செயல்கள் நல்ல முன்னுதாரணமாக இருக்கின்றன.

'ஒருமுறை உமர்(ரலி) அவர்கள் தாம் குளிப்புக் கடமை உள்ளவராக இருக்கும் நிலையில் (விஷயம் தெரியாமல்) மக்களுக்குத் தொழ வைத்து விட்டார்கள். பின்னர் (விஷயம் தெரிய வருவே அவர்கள் மட்டும்) தொழுகையை மீட்டித் தொழுதார்கள். ஆனால் தொழுகையை மீட்டும்படி மற்றவர்களுக்குக் கூறவில்லை'' (தாரகுத்னீ)

''ஒருமுறை அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களிடம், ஒளு இல்லாமல் ஒருவர் மக்களுக்கு தொழ வைத்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அவர் மட்டும் தொழுகையை மீட்ட வேண்டும், அவரைப் பின்பற்றி தொழுதவர்கள் மீட்ட வேண்டியதில்லை'' என்று பதிலளித்தார்கள்.(தாரகுத்னீ)
எனவே ஒளு முறிந்தது என தெளிவாகத் தெரிந்த அந்தத் தொழுகையைச் சகோதரர் மீண்டும் தொழ வேண்டும்.

(இறைவன் மிக்க அறிந்தவன்)

satyamargam.com
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
திருமணமும், வலீமாவும் ஒரே நாளில் செய்யலாமா? இதற்கு விளக்கம் அளிக்கவும். - மின்னஞ்சல் வழியாக சகோதரர் ஃபையாஸ்

தெளிவு: வ அலைக்கும் ஸலாம் வரஹ்..

மார்க்கத்தில் தெளிவுபெற வேண்டும் என்ற நோக்கில் விளக்கம் கோரிய சகோதரர் ஃபையாஸ் அவர்களுக்கு வல்ல நாயன் மார்க்க ஞானத்தை அதிகப்படுத்தியருள்வானாக.

''திருமணம் எனது வழிமுறை'' என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் திருமண விருந்தும் அளித்திருக்கிறார்கள். திருமண விருந்து அளிக்கும்படி மற்றவர்களை ஏவியும் உள்ளார்கள். 'வலீமாவுக்கு உங்களை அழைத்தால் செவி சாயுங்கள்' என்று நபியவர்கள் நவின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்). எனவே ஒரு முஸ்லிம் தான் மணம் முடிக்கும் போது தமது வசதிக்கேற்ப வலீமா அளிக்கலாம்.

அன்னை ஸைனப் (ரலி), அன்னை ஸஃபிய்யா (ரலி) ஆகியோரை நபி (ஸல்) அவர்கள் மணமுடித்தபோது வலீமா அளித்திருக்கிறார்கள் என்ற செய்தி புகாரி, முஸ்லிம் நூற்களில் இடம் பெற்றுள்ளது.

அப்துர்ரஹ்மானிப்னு அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் உடையில் ஒருநாள் (வாசனைத் திரவத்தின்) மஞ்சள் கறையைக் கண்ட நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதுபற்றி வினவியபோது, ஒரு பேரித்தங் கொட்டையளவு தங்கத்தை மஹர் கொடுத்து திருமணம் செய்துள்ளதாக பதில் கிடைத்தபோது 'பாரகல்லஹு லக' என்று வாழ்த்தியதுடன், ஓர் ஆட்டை அறுத்தாயினும் வலீமா கொடுப்பீராக என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

ஆகவே, மணவிருந்து அளிப்பது நபிவழி என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. மண விருந்தென்பது திருமணம் நிகழ்ந்த பிறகு தான் கொடுக்க வேண்டுமே தவிர இன்ன நாளில் தான் வலீமா கொடுக்க வேண்டும் என்று நபிவழி் குறிப்புகளில் குறிப்பிடப்படவில்லை. நபி(ஸல்) அவர்கள் தங்களுக்குத் திருமணம் முடித்த மறுநாளில் வலீமா விருந்து அளித்துள்ளார்கள்.

விருந்து என்பது அனைவரும் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வு என்பதால் இன்றைய நடைமுறையில் இதற்கு பொதுவாக விடுமுறை நாட்களையே தேர்வு செய்து அன்று விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுக்கப் படுகிறது.

அதேபோல் வலீமா அவரவருடைய சக்திக்கேற்ப கொடுக்கலாம். ஆயினும் இது வசதியிருப்பின் கொடுக்கப்பட வேண்டிய ஒன்றே தவிர வலீமா-திருமண விருந்தின்றியும் திருமணம் நிறைவேறி விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வசதியில்லாதவர்கள் சிரமப்பட்டு கடன் வாங்கியாவது பெரிய அளவில் வலீமா கொடுக்க வேண்டியதில்லை. இதில் வீண் விரயமும் கூடாது. அலி ரளியல்லாஹு அன்ஹூ அவர்கள் வலீமா கொடுத்தபோது பேரித்தம்பழமும், தூய்மையான தண்ணீரும் வழங்கினார்கள் என்ற குறிப்புகளையும் ஹதீஸ்களில் காண முடிகிறது.

எனவே திருமணம் முடிந்த பின் வசதிக்கேற்ப, வசதிபடும் நாளில் வீண் விரயத்திற்கு வழிவகுக்காத எளிமையான வலீமா விருந்து அளிக்கலாம்.
(இறைவன் மிக்க அறிந்தவன்)
satyamargam.com
ஐயம்:

அஸ்ஸலாமு அலைக்கும்

ஆசிரியர் அறிய,

திருமணம் மற்றும் உடல் உறவு சம்மந்தமான இஸ்லாமிய அடிப்படையிலான பூரண விளக்கங்களை எதிர்பார்க்கிறேன். ஏனெனில் உடல் உறவு சம்மந்தமான நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. விரைவில் திருமண பந்தத்தில் இணைய இருக்கிறேன். அதனால் உங்களின் பதிலைக் கூடிய விரைவில் எதிர்பார்க்கிறேன்.

என்னைத் தப்பாக நினைக்க வேண்டாம். எனக்கு விரைவில் கல்யாணம் ஏற்பாடாகி இருக்கிறது. சில சந்தேகங்கள். அவற்றை நிவர்த்தி செய்து கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன். அதனால்தான் தொடர்பு கொண்டேன். தவறாக நினைக்க வேண்டாம். இது பலருக்கு உள்ள சந்தேகம். ஆனால் கேட்க வெட்கத்தில் இருக்கிறார்கள்.

எனது சந்தேகங்கள்:

1.உடல் உறவின் போது தடுக்கப்பட்டவை/ஆகுமாக்கப்பட்டவை பற்றிய விளக்கம்
2.மாத விடாய் காலத்தில் உடல் உறவு தடுக்கப்பட்டது. ஆனால் அந்த காலத்தில் மனைவியுடன் ஒன்றாக உறங்குவது - அணைத்து முத்தமிடுவது கூடுமா?
3.பெண்களின் பின் துவாரத்தால் புணர்ச்சியில் ஈடுபடுவது கூடுமா?
4.பெண்கள் மார்பில் பால் குடிக்கலாமா?
5.இஸ்லாம் அனுமதித்த குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள் ஏதும் உண்டா?
6.உடல் உறவுக்கு முன்னர் ஏதும் துஆ இருக்கிறதா?

தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். கூடிய விரைவில் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். எனது கேள்விகளை இங்கே பிரசுரிக்க முடியவில்லை என்றால் பதிலை எனது ஈமெயிலுக்கு எதிர்பார்க்கிறேன். இந்த மாதம் திருமணம் ஏற்பாடாகி இருப்பதால் உங்கள் பதிலை விரைவாக எதிர்பார்க்கிறேன்.

வஸ்ஸலாம் - (மின்மடல் மூலம் ஒரு வாசகர்)

தெளிவு:

வ அலைக்குமுஸ்ஸலாம்.

ஆண், பெண் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் மிக முக்கியமான நிகழ்வாகும். திருமணத்தின் நோக்கம் சந்ததிகளைப் பெறுவது என்பதாக அல்குர்ஆன் 004:001 வசனம் குறிப்பிடுகிறது. இஸ்லாம் இல்லறத்தை அனுமதித்து, துறவறத்தைத் தடை செய்துள்ளது.

''இளைஞர் சமுதாயமே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும்! ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும், கற்பைக் காக்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா)

தகாத வழியில் சென்று விடாமல் கற்பைக் காத்துக் கொள்ளும் கேடயம் என்பது திருமணத்தின் மற்றொரு நோக்கமாகும். திருமணம் இப்படித்தான் நடத்த வேண்டும் என சில ஒழுங்குகளை இஸ்லாம் வகுத்துள்ளது.

இஸ்லாமியத் திருமணத்தில் இல்லாதவை:

இஸ்லாத்தில் கட்டாயத் திருமணம் இல்லை!

இஸ்லாத்தில் வரதட்சணைத் திருமணம் இல்லை!

''திருமணம் செய்வது எனது வழிமுறையாகும் அதை யார் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல'' என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். (முஸ்லிம்)

இஸ்லாத்தில் ஆடம்பரத் திருமணம் இல்லை!

இன்று திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடத்துப்படுகிறது. பிறர் மெச்சுவதற்காகவும், செல்வங்களை ஊருக்குக் காண்பிப்பதற்காகவும் திருமணம் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

''குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரக்கத் நிறைந்ததாகும்'' என்பது நபிமொழி (அஹ்மத்)

ஆடம்பரமில்லாத திருமணத்தையே இஸ்லாம் விரும்புகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இனி கேட்கப்பட்ட ஐயங்களுக்கான விளக்கங்களைப் பார்ப்போம்.

(1-அ & 3) தாம்பத்திய உறவில் தடுக்கப்பட்டவை:

மாதவிலக்குக் காலத்தில் மனைவியுடன் உடல் உறவு கொள்ளக்கூடாது (பார்க்க - அல்குர்ஆன், 002:222)

நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ''மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது, கணவன் அவளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ''தாம்பத்திய உறவைத் தவிர மற்றவை அனைத்தும் (அனுமதிக்கப்பட்டுள்ளன)'' என்று பதிலளித்தார்கள். (தாரிமீ)

மனைவியின் மலப்பாதையில் உறவு கொள்ளக்கூடாது. மலப்பாதையில் உறவு கொள்வது ஓரினப் புணர்ச்சிக்கு ஒப்பானதால் அதைக் கண்டிப்பாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இவை இரண்டைத் தவிர இல்லறத்தில் ஈடுபடும் முறை பற்றி வேறு எந்தத் தடையும் இல்லை!

(1-ஆ) தாம்பத்திய உறவில் ஆகுமாக்கப் பட்டவை:

உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்களாவர். எனவே, நீங்கள் விரும்பியவாறு உங்கள் விளைநிலங்களுக்குச் செல்லுங்கள். உங்கள் ஆத்மாக்களுக்காக (நற்செயல்களின் பலனை) அனுப்புவதில் முந்திக் கொள்ளுங்கள். அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள். (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன், 002:223)

இல்லறத்தில் ஈடுபடும் தம்பதியருக்கு (1-அ)வில் தடுக்கப்பட்டவை தவிர்த்து முழுச் சுதந்திரத்தை இறைமறை வழங்குகிறது. இல்லறம் என்பது நல்ல சந்ததிகளுக்கான விளைநிலம் என்பதை மனதில் கொண்டால் போதுமானது.

(2) மாதவிலக்குக் காலத்தில் மனைவியை அணைத்துக் கொள்ள, முத்தமிட அனுமதி உள்ளது; உடலுறவு மட்டும்தான் விலக்கப் பட்டுள்ளது.

''எங்களில் ஒருவருக்கு மாதவிலக்கு ஏற்பட்டிருக்கும்போது கீழாடைக் கட்டிக் கொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள் (ஆடை கட்டிக் கொண்ட) பின்னர் அணைத்துக்கொள்வார்கள்'' அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா(ரலி) அன்னை மைமூனா (ரலி) நூல்கள், புகாரி, முஸ்லிம்

(4) மனைவியின் மார்பைச் சுவைப்பது குறித்துத் தடையேதும் இருப்பதாகத் தெரியவில்லை; என்றாலும் பச்சிளம் குழந்தைக்குப் பாலுட்டும் தாயாக இருப்பின் அந்தப் பாலை உங்கள் மனைவியிடம் அல்லாஹ் ஊற வைப்பது உங்களின் குழந்தைக்காக என்பதை உணர்ந்து கொள்ளவும்.

(5) குடும்பக் கட்டுப்பாடு:

தற்காலிகக் குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடுவதை இஸ்லாம் அனுதித்துள்ளது. நிரந்தரக் குடும்பக் கட்டுப்பாட்டை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. மனைவியின் கருப்பை வலுவிழந்த நிலையில் இருந்து குழந்தை பேற்றைப் பெற்றால் அதனால் ஆபத்து ஏற்படும் என்றிருந்தால் நிரந்தரமாகக் குழந்தைப் பிறப்பைத் தடை செய்து கொள்ளலாம். ''எந்த ஓர் ஆன்மாவும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திக்கப்படமாட்டாது'' (அல்குர்ஆன், 002:233. 023:062)

(6) உடலுறவுக்கு முன் செய்யும் பிரார்த்தனை:


'உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள விழையும்போது ''பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மாரஸக்தனா'' என்று பிரார்த்தித்து, அதன் பின் அந்தத் தம்பதியருக்கு குழந்தை விதிக்கப்பட்டால் அக்குழந்தைக்கு ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மதீ, அஹ்மத், இப்னுமாஜா)

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் (குழந்தைச்) செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!

பொதுவான அறிவுரைகள்:

ஒரு மூஃமினான ஆண் மூஃமினான தன் மனைவியை வெறுத்துவிட வேண்டாம். அவளது ஒரு குணத்தை அவன் வெறுத்தால் அவன் விரும்பக்கூடிய வேறொரு குணத்தை அவளிடம் அவன் காணலாம். நபிமொழி (முஸ்லிம், அஹ்மத்)

நல்ல குணம் கொண்டவர்களே ஈமானில் முழுமை பெற்றவர்கள். உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியிடம் நல்லபடி நடந்து கொள்பவர்களே! நபிமொழி (அஹ்மத், திர்மிதீ)

பெண்களை நல்ல முறையில் நடத்துங்கள். அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக உள்ளவர்கள். அதைத் தவிர அவர்களிடம் உங்களுக்கு வேறு எந்த உரிமையும் இல்லை! நபிமொழி (திர்மதீ, இப்னுமாஜா)

பெண்கள் வளைந்த எலும்பு போன்றவர்கள். அதனை நிமிர்த்த முயன்றால் உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளை விட்டுவிட்டால் அவளிடம் இன்பம் பெறுவாய். நபிமொழி (புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

ஒரு பெண் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்து விட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள். நபிமொழி (திர்மதீ, இப்னுமாஜா)

ஒரு பெண் தனது கணவனின் வீட்டிற்கும் அவன் குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள்; அவைகளைப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவாள். நபிமொழி (புகாரி, முஸ்லிம்)

''உங்களில் ஒருவர் தன் மனைவியுடன் தாம்பத்திய உறவில் கூடிவிட்டு மறுமுறையும் கூட விரும்பினால் அவர் உளூச் செய்து கொள்ளட்டும்'' நபிமொழி (முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

''நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில் உண்ணவோ உறங்கவோ விரும்பினால் தொழுகைக்குச் செய்வது போல் உளூ செய்து கொள்வார்கள்'' (புகாரி, முஸ்லிம்)

பொதுவாகத் தடை செய்யப்பட்டவை:

கணவன் மனைவி தாம்பத்தியம் நான்கு சுவர்களுக்குள் நடக்கும் உறவாகும். இருவரும் ஒருவருக்கொருவர் அந்தரங்கங்களை அறிந்து கொண்டு பின்னர் அதை வெளியில் பரப்பித் திரிவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கணவனும் மனைவியும் பரஸ்பரம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுப் பின்னர் மனைவியின் (தாம்பத்திய அந்தரங்க) இரகசியத்தை (பிறரிடம்) பரப்புகின்ற மனிதனே அல்லாஹ்விடம் மறுமை நாளில் தகுதியால் மிகவும் மோசமானாவன். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத்).




இனிய இல்லறம் காணவிருக்கும் உங்களுக்கு எங்களது உளங்கனிந்த நபிவழி வாழ்த்துக்கள்!

நபி (ஸல்) அவர்கள் திருமணத்தில் வாழ்த்தும்போது ''பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கய்ர்'' என்று கூறுவார்கள். (திர்மிதீ, அபூதாவூத்)

பொருள்: ''அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக! நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக''

மண வாழ்வில் இணையும் கணவன், மனைவி இருவருக்கும் இஸ்லாம் அழகிய உபதேசங்களை வழங்கியுள்ளது. அதில் சிலவற்றை இங்குத் தந்திருக்கிறோம். கணவன், மனைவி ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, பிறரின் மனம் நோகாமல் நடந்து கொண்டால் இல்லறம் இனிதாகும்.

மேலும் சில விளக்கங்கள் அறிய இங்குச் சொடுக்கவும்.

(இறைவன் மிக்க அறிந்தவன்)


satyamargam.com
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சில இயக்கங்கள் தங்கள் தொண்டர்களிடம் "அல்லாஹ்விடம் செய்யும் பைஅத் அல்லாஹ்வின் பெயரில் சத்தியம்" என்று கூறி பைஅத் வாங்கிக் கொள்கிறார்கள். பின்பு அவர் அந்த இயக்கத்திலிருந்து வெளியேற நினைத்தால் அவர் முன்பு செய்த சத்தியத்தைச் சொல்லி பயமுறுத்துகிறார்கள்.

உதாரணமாக:

அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் தொழுகையை விடமாட்டேன், நான் பொய் சொல்ல மாட்டேன், நான் டிவி பார்க்க மாட்டேன், நான் இந்த இயக்கத்திலிருந்து விலக மாட்டேன், இயக்கத்திலிருந்து எப்போது அழைப்பு வந்தாலும் நான் வருவேன் இப்படிப் பல உறுதிமொழிகள்.

சில சமயங்களில் மேலே குறிப்பிட்டுள்ளவற்றில் ஏதேனும் விடுபட நேரிடும்; அப்போது நாம் குற்றவாளி ஆகிவிடுகிறோம். மேலே கண்டவாறு சத்தியம் செய்யலாமா? இப்படி செய்யக் கூடாது என்றால் முன்பு செய்தவர்களின் நிலை என்ன?

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில் தருக. (மின்னஞ்சல் மூலம் சகோதரர் அப்துல்லாஹ் முஃபீஸ்)


தெளிவு: வ அலைக்கும் ஸலாம் வரஹ்...

யா அல்லாஹ்! நான்
1. தொழுகையை விட மாட்டேன்.
2. பொய் சொல்ல மாட்டேன்.
3. தீயவற்றைப் பார்க்க மாட்டேன்.
4. இஸ்லாத்திலிருந்து விலக மாட்டேன்
5. இஸ்லாத்துக்காக உழைப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தால் நழுவ விட மாட்டேன்.


என்பன போன்ற சத்தியங்களை எல்லாம் உள்ளடக்கியதுதான் "அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ்; வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வ ரஸூலுஹூ" என்ற உறுதிமொழியாகும்.

ஒவ்வொரு தொழுகை அழைப்பிற்குப் பதில் சொல்லி இறைஞ்சும்போது,



"ரழீத்து பில்லாஹி ரப்பன், வ பி முஹம்மதின் ரஸூலன், வ பில் இஸ்லாமி தீனா" (முஸ்லிம்)



என்ற உறுதிமொழியையும் சேர்த்தே சொல்கிறோம்.


(பொருள்: அல்லாஹ்வை இறைவனாகவும், முஹம்மது (ஸல்) அவர்களை (அல்லாஹ்வின்) தூதராகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்.)

இவை அனைத்தும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியானுக்கும் இடையேயான பைஅத் என்னும் உறுதிமொழிகளாகும். அல்லாஹ், அவன் அனுப்பிய இறைத்தூதர், இஸ்லாம் ஆகிய மூன்றைத் தவிர "இயக்கம்" என்ற நான்காவதற்கு நம் உறுதிமொழியில் இடமில்லை.

இதில் எந்த இயக்கத்துக்கும் அதன் தலைவர் என்ற மனிதனுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. செல்லாத பைஅத்துக்குப் பரிகாரம் ஏதுமில்லை.


சரி, அப்படியெனின் முன்பு செய்தவர்களின் நிலை என்ன?


''முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன?'' என்று அவன் (ஃபிர்அவ்ன்) கேட்டான். ''அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான்; மறக்கவும் மாட்டான்.'' என்று அவர் (மூஸா) கூறினார். (அல்குர்ஆன் 020:051,052)



முஸ்லிம்களே!


முன் செய்தவர்களின் நிலை என்ன? என்று குழம்பி விடாமல் நீங்கள் அல்லாஹ்விடம் செய்த உறுதிமொழியை நிறைவேற்றுங்கள்!


''உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான்'' (அல்குர்ஆன் 005:089)


(முற்றாய் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!)

satyamargam.com

ஐயம்: மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன?
"பிஸ்மில்லாஹ்" என்று சொல்ல வேண்டுமா? அல்லது "யா ஷாஃபீ, யா மஆஃபீ" என்று கூறவேண்டுமா? "பிஸ்மில்லாஹ்" என்று கூறி எடுத்துக் கொள்ளும் மருத்துவம் மூலமாக பரக்கத் (குணம்) கிடைக்குமா?

மின்னஞ்சல் வழியாக சகோதரி மெஹர் பானு

தெளிவு: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோதரி, உங்கள் கேள்விக்கான விளக்கம் தாமதம் ஆனதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம்.

மருந்துகள் உட்கொள்ளும்போது, "யா ஷாஃபீ யா மஆஃபீ என்று கூறவேண்டும்" என்பதற்கு நமக்குத் தெரிந்து சான்றுகள் ஏதும் இல்லை.

எங்களில் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வலக்கரத்தால் அவரைத் தடவிவிட்டுப் பிறகு ''அத்ஹிபில் பஃஸ ரப்பந் நாஸ் வஷ்ஃபி அன்தஷ் ஷாஃபி லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக்க ஷிஃபாஅன் லாயுகாதிரு ஸகமா'' என்று பிரார்த்திப்பார்கள். அறிவிப்பாளர் ஆயிஷா (ரலி) (நூல்கள்: புகாரி, 5675, 5743, 5750. முஸ்லிம், 4409, 4410, 4411. திர்மிதீ, 980)

‏أَذْهِبْ ‏ ‏الْبَاسَ ‏ ‏رَبَّ النَّاسِ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا ‏ ‏يُغَادِرُ ‏ ‏سَقَمًا

(பொருள்: மனிதர்களின் இரட்சகனே! நோயைப் போக்கி குணமளிப்பயாக! நீயே குணமளிப்பவன். நோயை முற்றிலும் போக்குவதற்கு உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை!) இந்த நபிமொழியிலிருந்து தான் மருந்துகள் உட்கொள்ளும் போது, "யா ஷாஃபி, யா மஆஃபீ" என்று கூற வேண்டும் என்றக் கருத்தை நீங்கள் பெற்றிருந்தால் அக்கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இந்த அறிவிப்பில் அவ்வாறு இல்லை.

*****

உண்ணுவது, பருகுவது என உலக வாழ்வின் அனைத்துச் செயல்களையும் துவக்கும் முன் இறைநாமம் நினைவுகூரப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

உங்களில் ஒருவர் ஏதேனும் உணவைச் சாப்பிட்டால், ''பிஸ்மில்லாஹ்'' என்று கூறவும். ஆரம்பத்தில் கூற மறந்துவிட்டால் ''பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆகிரிஹி'' எனக் கூறட்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஆயிஷா (ரலி) (நூல்கள்: அபூதாவூத், திர்மதீ, அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான், ஹாகீம், பைஹகீ)

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்தேன். (ஒரு முறை) எனது கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாய்) அலைந்து கொண்டிருந்தது. அப்போது ''குழந்தாய்! (உண்ணும்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்வாயாக! உன் வலக்கரத்தால் உண்பாயாக! உனக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்து உண்பாயாக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் உமர் பின் அபீ ஸலாமா (ரலி) (நூல்கள்: புகாரி, 5376. முஸ்லிம், 4111. திர்மிதீ, 1918. அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா)

நோய் நிவாரணத்திற்காக உட்கொள்ளும் மருந்தாக இருந்தாலும் அதையும் சாப்பிடும் முன் ''பிஸ்மில்லாஹ்" என்று கூறுவதே நபிவழி என்பதை இன்னும் பல அறிவிப்புகளிலிருந்து விளங்கலாம். உண்ணும்போது அல்லாஹ்வின் பெயரை நினைவுகூருவதுடன் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையுடன் உட்கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுநோயாளியின் கையைப் பிடித்து தம்முடன் உணவுத் தட்டில் சேர்த்துக் கொண்டார்கள். ''அல்லாஹ்வின் பெயராலும், அல்லாஹ்வின் மீது உறுதியும் நம்பிக்கையும் கொண்டு உண்பீராக!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) அவர்கள். (நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான், ஹாகீம்)

பரகத்

''ஒவ்வொரு நோய்க்கும் அதற்குரிய மருந்துண்டு. நோயுற்றால் மருத்துவம் செய்து கொள்ளுங்கள், அல்லாஹ்வின் நாட்டப்படி நோய் நீங்கும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) (நூல்: முஸ்லிம் 4432)

எல்லா நோய்க்கும் மருந்துண்டு நோயுற்றால் மருத்துவம் செய்யவேண்டும். என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நோய் குணமாகும் என்றே மருத்துவம் செய்கிறோம். இறைவனின் நாட்டமிருந்தால் நோய் குணமடைந்து பரகத் ஏற்படும் என்பது ஆன்மீகத்தின் ஆழமான நம்பிக்கை.

(இறைவன் மிக்க அறிந்தவன்)

satyamargam.com
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

என் பாட்டனாருக்கு இரண்டு மனைவியர். பாட்டனாருக்கு என் தந்தை முதல் மனைவியின் மகன். என் சிறிய தந்தை இரண்டாம் மனைவியின் மகன். நான் என் சிறிய தந்தையின் மகளைத் திருமணம் செய்யலாமா? தயவு செய்து எனக்கு பதில் அனுப்பவும்.

மின்னஞ்சல் வழியாக சகோதரர் அஜீஸ் ஜாஃபர்.

தெளிவு: வ அலைக்கும் ஸலாம் வரஹ்...

ஒருவர் தனது சிறிய தந்தையின் மகளைத் திருமணம் செய்ய மார்க்கத்தில் தடை இல்லை.

உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும் உங்கள் புதல்வியரும் உங்கள் சகோதரிகளும் உங்கள் தந்தையின் சகோதரிகளும் உங்கள் தாயின் சகோதரிகளும் உங்கள் சகோதரனின் புதல்வியரும் உங்கள் சகோதரியின் புதல்வியரும் உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும் உங்கள் பால்குடிச் சகோதரிகளும் உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள். அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது. ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:23)

உடன் பிறந்த அண்ணன்-தம்பிகளுக்குப் பிறந்த ஆண்-பெண் மக்கள் ஒருவரையொருவர், "அண்ணன்", "தங்கை", "அக்கா", "தம்பி" என்ற உறவுமுறையில் அழைத்துக் கொண்டாலும் ஒரே தந்தைக்குப் பிறந்த ஆண்-பெண் மக்களிடையே ஏற்படும் சகோதர, சகோதரி இரத்த உறவு போன்று, பெரிய தந்தை-சிறிய தந்தை மக்களிடையே சகோதர-சகோதரி உறவை இறைவன் ஏற்படுத்தவில்லை.

மேற்கண்ட திருமறை (4:23வது) வசனத்தில் திருமணம் முடிக்க விலக்கப்பட்டவர்களில் ''உங்கள் சகோதரிகளும்'' என்பதில் ஒரு தாய் தந்தையருக்குப் பிறந்த பெண் மக்களும் ஒரு தந்தை இரு அன்னையருக்குப் பிறந்த பெண் மக்களும் சகோதரிகள் என்ற இரத்த உறவு வட்டத்திற்குள் வந்துவிடுவர்.

அதுபோல் ஒரு பெண்ணுக்கு முந்திய கணவன், பிந்திய கணவன் என இரு கணவருக்குப் பிறந்த ஆண்-பெண் மக்களாக இருந்தாலும், இருவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதால் இவர்களும் உடன் பிறந்த சகோதர-சகோதரியாவர்.

"உங்கள் சகோதரிகளை மணமுடிக்காதீர்கள்" என இறைவன் விலக்குவது இந்த உறவுகளைத்தான்! கூடுதலாக, ஒரே தாயிடம் பால் குடித்தவர்கள் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ளலாகாது.

மற்றபடி ஓர் ஆண், தன் பெரியப்பா-சித்தப்பா மகள், அல்லது பெரியம்மா-சின்னம்மா மகளைத் திருமணம் செய்துகொள்வதை இறைவன் தடை செய்யவில்லை.

(இறைவன் மிக்க அறிந்தவன்)

satyamargam.com


ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்



உங்கள் தளத்தில் அனைத்து பகுதிகளும் சிறப்பாக உள்ளது. அதிலும் இறைமறை நபிமொழி அடிப்படையில் அழகாக பதில் தரும் ஐயமும் - தெளிவும் பகுதி அருமை.

எனது கேள்வி:

கணவர் அன்பளிப்பாக வாங்கிக்கொடுத்து விட்ட நகைகளுக்கு உரிய ஜக்காத்தை மனைவிதான் கொடுக்க வேண்டுமா? (நகைகள் மீதான உரிமை மனைவி மீது இருப்பதால்)



மின்னஞ்சல் வழியாக சகோதரி, திருமதி ஜஹ்ரா - Mrs.Jahra



தெளிவு: வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்...



ஒருவருக்குச் வழங்கும் அன்பளிப்பு என்பது, வழங்கியவுடன் முடிவுக்கு வந்து விடுகிறது, அன்பளிப்பு வழங்கியவருக்கு அப்பொருளின் மீது எவ்வித உரிமையும் இல்லை. அன்பளிப்பு வழங்கியப் பொருளைத் திரும்பப் பெறுவது மிக இழிவான செயலாக இஸ்லாம் கூறுகிறது.



தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தின் குடும்ப முறையில் ஒரு கணவன், தன் மனைவிக்கு அளிக்கும் எப்பொருளும் அது அவளின் கணவனுக்கு உரியதாகவேக் கருதப்படுவது வழக்கத்தில் உள்ளது. இது கணவன்-மனைவியரிடையே மட்டுமில்லை வீடு, நிலம், நகைகள் எனக் குடும்பத்துப் பெண்களுக்கென்று சொத்துக்கள் கொடுத்தாலும் அந்தச் சொத்துக்களின் மீது பெரும்பாலும் அக்குடும்பத்து ஆண்களின் ஆதிக்கம் இருக்கும். இது பரவலாக எல்லாச் சமூகத்தினரிடமும் உள்ள நடைமுறையாக இருந்து வருவதை வருத்தத்துடன் ஒப்புக்கொண்டேயாக வேண்டும், இந்த நடைமுறை மாற வேண்டும்.



அன்பளிப்பாகக் கொடுத்தப் பொருள், அன்பளிப்பைப் பெற்றவருக்கே சொந்தமாகும். பொருளுக்கான முழு உரிமையும் அவருக்குரியது. தாய், தந்தை, மகன், மகள், சகோதரன், சகோதரி, கணவன், மனைவி என எவர் அன்புளிப்பு வழங்கினாலும் அது வழங்கப்பட்டவருக்கே உரியதாகும்.



ஒரு கணவன், தன் மனைவிக்கு அன்பளிப்பாக வழங்கிய நகைகள் மனைவிக்குரியன. அந்நகைகளுக்கான ஸகாத்தை மனைவியே கொடுக்க வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்து இல்லை! ஆனாலும் ஒரு பெண்ணுக்குச் சொந்தமான நகைகளுக்கு அந்தப் பெண்தான் ஸகாத் கொடுக்க வேண்டுமா? என்ற கேள்வி எழக் காரணிகள், பொதுவாக நம் சமுதாயப் பெண்கள் பொருளீட்டுவதில் ஈடுபடுவதில்லை என்பதாலும் குடும்பத்தை நிர்வகிக்கும் மனைவியின் முழுப்பராமரிப்பை கணவன் மீது இஸ்லாம் சுமத்தியுள்ளதாலும் தமக்குச் சொந்தமான நகைகளுக்கும் கணவரே ஸகாத் வழங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.



இதற்கான தீர்வை நபிவழிச் செய்தி வழியே அணுகுவோம்.



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''பெண்களே! உங்கள் நகைகளிலிருந்தாவது தர்மம் செய்யுங்கள்'' என்று கூறினார்கள். நான் (என் கணவர்) அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம் சென்று 'நீங்களோ கையில் காசில்லாதவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெண்களாகிய) எங்களைத் தர்மம் செய்யுமாறு பணித்தார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (வறுமையில் வாழும்) உங்களுக்கே அதை நான் வழங்கலாமா எனக் கேளுங்கள். அதுவே எனக்குப் போதுமாகும் என்றால் (நான் உங்களுக்கே வழங்கி விடுவேன்) இல்லை (கணவனுக்கு மனைவி வழங்குவது தர்மமாகக் கருதப்படாது) என்றால் அதை நான் பிறருக்குக் கொடுத்து விடுவேன்' என்று கூறினேன்.



அப்போது (என் கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் என்னிடம் '' நீயே அவர்களிடம் சென்று கேள்'' என்று கூறி விட்டார். எனவே நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டு வாசலில் (ஏற்கனவே) ஓர் அன்சாரிப் பெண்ணும் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது.



பிலால் (ரலி) அவர்கள் எங்களை நோக்கி வந்தபோது, ''நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று இரு பெண்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு, தம் கணவன்மார்களுக்கும் தமது அரவணைப்பில் வளரும் அநாதைக் குழந்தைகளுக்கும் தம்மீது கடமையான தர்மத்தை வழங்கலாமா என வினவுகின்றார்கள் என்று கேளுங்கள். ஆனால் நாங்கள் யார் என்று அவர்களிடம் சொல்ல வேண்டாம்'' என்று நாங்கள் கூறினோம். பிலால் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவ்வாறே கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''அவ்விருவரும் யாவர்?'' என்று பிலாலிடம் கேட்டார்கள். அதற்கு ''ஓர் அன்சாரிப் பெண்ணும், ஸைனபும்'' என்று பிலால் பதிலளித்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''எந்த ஸைனப்?'' என்று கேட்டார்கள். ''அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் துணைவியார்'' என்று பிலால் பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''அவ்விருவருக்கும் இரு நன்மைகள் உண்டு, ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது, மற்றொன்று தர்மத்திற்குரியது'' என்று கூறினார்கள். (புகாரி, 1466. முஸ்லிம், 1824)



பெண்களுக்குரிய நகைகளுக்குப் பெண்களே ஸகாத் வழங்க வேண்டும் என்பதற்கு மேற்கண்ட நபிமொழி சான்றாக உள்ளது. ஸகாத் எனும் கடமையான தர்மத்தை யாருக்கு வழங்குவது என்பதை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டிய நபித்தோழியர், தமது மார்க்கத் தீர்வை நபி (ஸல்) அவர்களிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்கள். இறைவன் அவர்களைப் பொருந்திக்கொள்வானாக.



''நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்'' (திருமறை, 066:006)



(இறைவன் மிக்க அறிந்தவன்)

satyamrgam.com
ஐயம்: சகோதரி திருமதி. ஜஹ்ரா அவர்களின் இன்னொரு கேள்வி



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்



ஆண்கள் தாடி வைத்திருப்பது என்பது 24 மணி நேரமும் ஒரு சுன்னத்தை ஹயாத் ஆக வைத்திருப்பதால் அதன் நன்மை ஒவ்வொரு நொடியும் பொழிந்து கொண்டிருக்கும் என்பது உண்மையா? எனில் பெண்களுக்கு அதுபோன்ற தொடர் நன்மை பெற்றுத் தரும் செயல் எது?


தெளிவு: வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்...



ஆண்கள் தாடி வைத்திருப்பதால் 24 மணி நேரமும் நன்மைகள் பொழிந்து கொண்டிருக்கும் என்ற அறிவிப்பு எதையும் நாம் அறியவில்லை. ஆண்கள் தாடி வைப்பது சுன்னத் என்றாலும் தாடி மட்டும் வளர்த்துக்கொண்டால் போதாது. முஸ்லிமல்லாத ஆண்களும் தாடி வைத்திருக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கும் ஒவ்வொரு நொடியும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும் என்று கருதுவதற்கில்லை!



ஆண்கள் தாடி வைத்துக்கொண்டாலும் மற்ற சுன்னத்துகளைப் பேணி - நபிவழி நடக்கும் போதுதான் முஸ்லிம் என்று பரிணாமம் பெறுகின்றனர்.



''மீசையைக் குறைத்து தாடியை (வளர) விடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)



ஒரு முஸ்லிம் புறத்தோற்றத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அளவுகோலாகத் தாடியைக் குறிப்பிடுகிறது இஸ்லாம்.



அதேவேளை தாடி வைக்கும் நோக்கத்தைப் பொறுத்தும் நன்மையின் அளவு வேறுபடும். புற அழகிற்காகவோ அல்லது பிறர் தம்மை மதிப்புடன் நோக்கவேண்டும் என்பதற்காகவோ வைக்கப்படும் தாடியினால் கிடைக்கும் நன்மை நபியவர்களின் வழிமுறையை நிலைநிறுத்துவதற்காக வைக்கப்படும் தாடியினால் கிடைக்கும் நன்மைக்கு முன் மிகச் சிறிய அளவினதாகும்.



"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன; ஒவ்வொரு மனிதரும் அவர் எண்ணியதையே அடைந்துகொள்வார்....." என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள், நூல்: புகாரி, 6689)


பெண்களுக்கு இஸ்லாம் வழங்கும் சிறப்புத் தகுதிகளை விரிவஞ்சி மிகச் சுருக்கமாகக் காண்போமெனில்,



குடும்பத்திற்காக ஆண்கள் என்னதான் மாடாய் உழைத்து, ஓடாய்த் தேய்ந்தாலும் பிள்ளைகளுக்கு மிகவும் நெருக்கமானவர் யார்? என்று கேட்டால் தாய் என்று - திரும்பத் திரும்ப தாய் என்றே இஸ்லாம் கை காட்டுகிறது. இதுவே பெண்மைக்கும், தாய்மைக்கும் இஸ்லாம் வழங்கும் மிகப்பெரும் நன்மைகளல்லவா!



''முஸ்லிமான ஆண்களும் பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும் பெண்களும் உண்மை பேசும் ஆண்களும் பெண்களும் பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும் பெண்களும் அடக்கமாக நடக்கும் ஆண்களும் பெண்களும் தர்மம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், தமது கற்பைக் காத்துக்கொள்ளும் ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும் பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயாரித்து வைத்துள்ளான்'' (அல்குர்ஆன் 033:035)



முஸ்லிமான ஆண்கள், பெண்களுக்கான நற்கூலிகளில் எக்குறையும் ஏற்படுத்தி விடமாட்டேன் என இறைவன் வாக்களித்திருக்கிறான்.



(இறைவன் மிக்க அறிந்தவன்)

satyamargam.com


ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்.



எனது கீழ்கண்ட கேள்விக்கு சத்தியமார்க்கம்.காம் மூலம் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.



ஒரு பெண் தனியாக கார் ஓட்டிக் கொண்டு செல்ல இஸ்லாம் அனுமதிக்கிறதா? (மின்னஞ்சல் வழியாக சகோதரி, ஜியா சிதாரா)



தெளிவு: வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்...



அடிப்படை மனித உரிமைகளைப் பொறுத்தவரை இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. அதுபோல் அடிப்படைக் கொள்கையிலும் ஆணும், பெண்ணும் சம உரிமை பெற்றுள்ளனர். அதாவது, பெரும்பாலான விஷயங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம சுதந்திரம் உள்ளது.



மாதவிலக்கு, பிரசவம், மற்றும் குழந்தைக்குப் பாலூட்டும் காலங்களில் பெண்ணுக்கு இபாதத் - வணக்க வழிபாடுகளில் இஸ்லாம் சலுகைகள் வழங்கியுள்ளது. மற்றபடி,



''ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம்'' (அல்குர்ஆன் 016:097).



''ஒவ்வொரு மனிதனும் தான் செய்தவற்றுக்குப் பிணையாக்கப்பட்டுள்ளான்'' (அல்குர்ஆன் 074:038).



இன்னும், ''ஒருவர் பாவத்தை மற்றவர் சுமக்க மாட்டார்'' என்ற கருத்தைத் திருமறையின் பல வசனங்கள் உரைக்கின்றன. நற்செயல்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக இருப்பது போல், தற்பெருமை, அகம்பாவம், தீய நடத்தைகள் போன்ற குணங்களும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாகவே கருதப்படும்.



வாகனம் ஓட்டுவது



வாகனம் செலுத்துவதில் ஓர் ஆணுக்கு உரிமையுள்ளது போல, ஒரு பெண்ணுக்கும் வாகனத்தை ஓட்டிச் செல்லும் உரிமையுள்ளது. வாகனம் ஓட்டுவதில் ஆண்களுக்கு அனுமதியை வழங்கி, பெண்களுக்கு அனுமதியை மறுப்பதற்கு இஸ்லாமிய அடிப்படையில் எந்த ஆதாரமுமில்லை. உலகக் காரியங்களில் தனக்குத் தேவையான விஷயங்களில் ஆண் இயங்குவதுபோல் பெண்ணும் இயங்கிக்கொள்ள சம உரிமை படைத்தவள்.



சர்க்கரை நோயாளி ஒருவர், தன் மனைவியுடன் மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு நெடும்பயணத்தில் இருந்தார். பயணத்தில் அவரது இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடிப்போய் வாகனத்தை ஓட்டுவதில் நிதானமிழந்தார். ஏறக்குறைய ஒரு விபத்து நிகழவிருந்து, அல்லாஹ்வின் உதவியால் அது தவிர்க்கப் பட்டது. உடனே அவரின் மனைவி வாகனத்தைக் கட்டுப்படுத்தி ஓரங்கட்டி, தன் கணவரை ஓட்டுனர் இருக்கையிலிருந்து மாற்றி, வாகனத்தை விரைவாக ஓட்டிச் சென்று அருகிலிருந்த ஒரு பெட்ரோல் ஸ்டேஷனில் நிறுத்தி, முதலுதவி செய்து, அல்லாஹ்வின் அருளால் தன் கணவரைக் காப்பாற்றினார். "பெண்கள் கார் ஓட்டக் கூடாது" என்ற தடையை விதிப் படுத்தி வைத்துள்ள சவூதி அரேபியாவில், கடந்த 23 மார்ச் 2005இல், ரியாத்-தாயிஃப் நெடுஞ்சாலையில் இந்நிகழ்வு நடந்தது.



இதுபோன்ற அவசர வேலைகள், கணவரால் இயலாதபோது பிள்ளைகளைப் பள்ளிகளுக்குக் கொண்டு செல்வது, திரும்ப அழைத்து வருவது போன்ற கட்டாய வேளைகளில் பெண்கள் வாகனம் ஓட்டத் தெரிந்திருப்பது எவ்வளவு நன்மை பயக்கத்தக்கது என்பதற்குத் தனி விளக்கம் தேவையில்லை.



வாகனத்தில் பயணிப்பது



"(மஹ்ரமல்லாத) ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தனித்திருந்தால் ஷைத்தான் அவர்களோடு மூன்றாமவனாகச் சேர்ந்து கொள்வான்" என்ற நபிமொழிக்கு மாற்றமாக, மஹ்ரமல்லாத ஓட்டுனரைச் சம்பளத்திற்கு அமர்த்தி, அவருடன் தனிமையில் பயணம் செய்யும் முஸ்லிம் செல்வச் சீமாட்டிகளை அனுமதிப்பதும் பெண்கள் தனியாக வாகனம் ஓட்டிச் செல்வதற்கு அனுமதி மறுப்பதும் ஓரிரு முஸ்லிம் நாடுகளில் வழக்கிலுள்ள விசித்திரங்களேயன்றி அது, இஸ்லாத்தின் மறுதலிப்பன்று. தந்தை / கணவன் போன்ற பொறுப்பாளர்களின் அனுமதியோடு ஒரு முஸ்லிம் பெண் தனியாக வாகனத்தில் பயணிப்பதற்கு இஸ்லாத்தில் எவ்விதத் தடையுமில்லை. ஆனால், கால வரையறையுண்டு. "உரிய துணை (மஹ்ரம்) இன்றி ஒரு பெண், ஒரு பகல் ஓரிரவுக்குக் கூடுதலாகப் பயணிக்க வேண்டாம்" என்று நபி (ஸல்) அவர்கள் வரையறை செய்திருக்கிறார்கள் (திர்மிதீ 1089, புகாரி 1088, முஸ்லிம் 2608) என்பதைக் கருத்தில் கொண்டால் போதும்.



தனிமை



''தனிமையில் (பயணம் செய்வதில்) உள்ள, நான் அறிந்திருக்கின்ற சிரமங்களை மக்கள் அறிந்திருந்தால் எந்தப் பயணியும் இரவில் தனியாகப் பயணம் செய்ய மாட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, 2998).



இது ஆண், பெண் என இரு பாலருக்கும் பொதுவான அறிவிப்பு. இரவில் தனியாகப் பயணம் செய்வதில் கொலை, கொள்ளை போன்ற அபாயங்களைச் சந்திக்கவும், இருட்டு போன்ற சிரமங்களையும் மேற்கொள்ளவும் நேரும். எனவே தனிமைப் பயணம் சிரமங்கள் அடங்கிய ஆபத்தானது என்பதை மேற்கண்ட அறிவிப்பு உணர்த்துகின்றது.



அதுவே தனிமையில் செல்லும் பெண்ணென்றால் ஒரு படி மேலே, கயவர்கள் அவளின் பெண்மையை சூறையாடும் ஆபத்திற்கான சாத்தியம் உண்டு. எனவே, உலக வாழ்க்கையில் பெண்கள் சுதந்திரமாக இயங்குவதை இஸ்லாம் தடை செய்யவில்லை. ஒரு பெண் தனியாக வாகனத்தை ஓட்டிச் செல்லலாம். அந்தத் தனிமை தனக்குப் பாதுகாப்பாக இருக்கின்றதா என்பதை அந்தப் பெண் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். தீமையைத் தாமாகத் தேடிக்கொள்ளும் தன்மை, பெண்கள் தனிமையை ஏற்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் இருக்கிறது. மற்றபடி ஆண்களுக்கு நிகரான பெண்களின் சுதந்திரத்தில் இஸ்லாம் எவ்வித குறைபாடும் வைத்துவிடவில்லை.



பெண்களின் மீதான தனிப்பட்ட அக்கறையால் அபாயத்தைச் சந்திக்கும் அளவுக்கான தனிமையைத் தவிர்த்துக்கொள்ளும்படி இஸ்லாம் அறிவுரை கூறுகிறது.



(இறைவன் மிக்க அறிந்தவன்).

satyamargam.com
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்


குழந்தை பிறந்ததால், அதன் முடியை மழித்து, முடியின் எடைக்கு எடை வெள்ளியை தர்மம் செய்ய வேண்டுமா?



மின்னஞ்சல் வழியாக சகோதரர் முஹம்மது ரஃபீக்



தெளிவு: வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்...



குழந்தை பிறந்ததும், குழந்தைக்காக மார்க்க ரீதியாகச் செய்ய வேண்டியவை, குழந்தை பிறந்த ஏழாம் நாளில் ஓர் ஆட்டை அறுத்து (விரும்பியவர் ஈராடுகளை அறுக்கலாம்) அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அவனுக்காகப் பலியிடுதல் 'அகீகா' எனப்படும். இது கட்டாயமில்லை; விரும்பியவர் கொடுக்கலாம்.



அன்றே குழந்தையின் முடியை மழிக்க வேண்டும்.



முடியை மழித்த பின், "முடியின் எடைக்குச் சமமாக வெள்ளியைத் தர்மம் செய்" என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஓர் அறிவிப்பு திர்மிதி நூலில் 1439ஆவதாக இடம்பெற்றுள்ளது. தொடர்பறுந்த பலவீனமான அச்செய்தி:

''நபி (ஸல்) அவர்கள் ஹஸன் (ரலி) அவர்களுக்காக ஓர் ஆட்டை அகீகா கொடுத்தனர். மேலும் "ஃபாத்திமா! இவரது தலையை மழித்து அந்த முடியின் எடைக்கு வெள்ளியைத் தர்மம் செய்'' என்று கூறினார்கள். நான் அம்முடியை எடை போட்டபோது அதன் எடை ஒரு திர்ஹம் அல்லது அதைவிடக் குறைவாகவே இருந்தது - அறிவிப்பவர்: அலீ (ரலி).



இது ஹஸன் கரீப் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும். (இரண்டாவது அறிவிப்பாளர்) முஹம்மது பின் அலீ என்பவர் அலீ (ரலி) அவர்களின் காலத்தில் பிறக்கவில்லை என்பதால் இது தொடர்பறுந்த ஹதீஸாகும் என்று திர்மிதி இமாம் கூறுகிறார்கள்.



அடுத்து, ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஹஸன் (ரலி) அவர்களையும் ஹுஸைன் (ரலி) அவர்களையும் பெற்றடுத்தபோது அவர்தம் தலைமுடியை மழித்து அதற்கான எடைக்கு வெள்ளியை வறியவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதரை அண்டி வாழும் திண்ணைத் தோழர்களுக்கும் தர்மம் செய்ததாக அபூ ராஃபிஉ அவர்கள் அறிவிக்கும் செய்தியை இமாம் அஹ்மது தமது முஸ்னதில் 25930ஆவதாகப் பதிந்திருக்கிறார்கள். ஆனால், அதிலும் யாருடைய வழிகாட்டலின்படி அவ்வாறு செய்தார்கள் என்று தெளிவு ஏதுமில்லை.



எனவே, குழந்தைகளுக்கு முடிமழித்து, முடியின் எடைக்கு எடை வெள்ளியைத் தர்மம் செய்ய வேண்டும் என்ற ஹதீஸ்களில் ஒன்று அறிவிப்பாளர் தொடர்பறுந்ததாகவும், மற்றொன்று நபியவர்கள் சொன்னார்களா? என்ற சந்தேகத்திற்கிடமாகவும் இருப்பதால், அகீகா கொடுக்கும்போது முடியின் எடைக்கு எடை வெள்ளியை தர்மம் செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்ற வலுவான ஆதாரங்கள் இல்லை.



சந்தேகமானவற்றை விட்டு உறுதியானதையே எடுத்துக்கொள்வோம்.



இறைவன் மிக்க அறிந்தவன்.

satyamargam.com
ஐயம்: தொழும் பொழுது குர்ஆனைத் திறந்துப் பார்த்து அல்லது கைகளில் ஏந்திக் கொண்டு அதைப் பார்த்து ஓத அனுமதி உள்ளதா?

மின்னஞ்சல் வழியாகச் சகோதரர் Mazlan Ameen

தெளிவு:

தொழும்போது குர்ஆனைத் திறந்து பார்ப்பதற்கோ அல்லது கைகளில் ஏந்தி அதைப் பார்த்து ஓதுவதற்கோ நாமறிந்தவரை மார்க்கத்தில் வழிகாட்டல் ஏதும் இல்லை.

(தொழுகையில்) ''உள்ளச்சத்துடன் - கட்டுப்பட்டு - நில்லுங்கள்'' (அல்குர்ஆன், 2:238)

(அவர்கள்) ''தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்'' (அல்குர்ஆன், 23:2)

ஒருவர் தம்மைத் தொழுகைக்குத் ஆயத்தப்படுத்திக்கொண்டு, தொழுகையின் ஆரம்ப நிலையில் நின்று, தொழுகைக்குள் நுழையும் முதல் தக்பீர், ''தக்பீர் தஹ்ரீமா'' எனப்படும். இத்துவக்க தக்பீரைக் கூறியவுடன் தொழுகைக்கு வெளியே செயலாற்றும் உண்ணுதல், பருகுதல், பேசுதல் போன்ற உலகச் செயல்பாடுகள் விலக்கப் பட்டதாகிவிடும். தொழுகை என்பது வணக்கங்களின் சிகரமாகும். அந்நேரம் தொழுபவர் தன் கவனம் முழுமையும் இயன்றவரை தொழுகையில் மட்டுமே செலுத்த வேண்டும். தொழுகையில் இஸ்லாம் கற்பிக்கும் முறைகளை முடிந்த அளவுக்குக் கடைப்பிடித்து உள்ளச்சத்துடன் தொழ வேண்டும்; மற்றவற்றை ஒதுக்கிவிட வேண்டும்.

'முடிந்த அளவுக்கு' என்பதில் தொழுகையின்போது எதிர்பாராது நாம் எதிர் கொள்ளும் தும்மல், இருமல் போன்ற உபாதைகளின்போது சளியை உமிழ்தல் / துடைத்துக் கொள்ளுதல் ஆகியவையும் மனிதருக்குத் தொல்லை தரும் ஊர்வன / பறப்பனவற்றை அப்புறப் படுத்தலும் தொழுகைக்குக் குறைவை ஏற்படுத்தா என்பதற்கு நபிவழியில் சான்றுகள் உள்ளன.

மேற்சொன்னவை அனைத்தும் தொழுகையில் நமது கவனம் சிதறுவதற்குக் காரணமாக இருந்தாலும் அவை அனைத்தும் நமது விருப்பத்துக்கு மாற்றமாக, நாம் எதிர்பாராமல் நடப்பவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தங்கள் கேள்வியில் கண்டவாறு தொழும்போது குர்ஆன் பிரதியைக் கையில் வைத்துக் கொண்டு ஓதும்போதும் ஒரு ஸ்டாண்டில் வைத்துப் பார்த்து ஓதும்போதும் அடுத்த பக்கத்தைத் திருப்புவதற்காக அடிக்கடி நமது கைகளைப் பயன் படுத்த வேண்டி வரும். அப்போதெல்லாம், "தொழுகையில் நிற்கும்போது நபி (ஸல்) அவர்கள் தங்கள் இடக்கையை நெஞ்சில் வைத்து அதற்குமேல் வலக்கையை வைத்திருப்பார்கள்" என்ற நபிவழிக்கு அடிக்கடி மாறு செய்ய வேண்டி வரும்.

[நபித்தோழர் வாஇல் இப்னு ஹுஜ்ரு (ரலி) அவர்களது ஆதாரப் பூர்வமான இந்த அறிவிப்பை இமாம் இப்னு ஹுஸைமா, பஸ்ஸார் ஆகிய இருவரும் பதிவு செய்திருக்கிறார்கள். நபித்தோழர் ஹல்புத் தாஇ (ரலி) அவர்களின் ஆதாரப் பூர்வமான அறிவிப்பை இமாம் அஹ்மது அவர்கள் தங்களது முஸ்னதில் பதிவு செய்திருக்கிறார்கள். இவ்வனைத்தையும் புகாரீ ஹதீஸ் எண் 698க்கு விரிவுரையாக ஃபத்ஹுல் பாரீயில் இமாம் அஸ்கலானீ அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளார்கள்.]

மேலும், கைகளிலோ ஸ்டாண்டிலோ குர் ஆன் பிரதிகளை வைத்துக் கொண்டு, அதில் பார்வையைச் செலுத்தி ஓதும்போது நமது கவனம் முழுவதும் காற்றடித்தால் குர்ஆனின் பக்கங்கள் மாறிவிடுமோ என்ற எண்ணத்திலும் அது கீழே விழுந்து விடாமல் இருப்பதிலும் குவிக்கப்படும். இதுவும் தொழுகையின் ஒழுங்குகளுக்கு மாற்றமானதாகும்.

"நல்லது, நன்மையானது" என்று நாமாக நினைத்துக் கொண்டு, வணக்க-வழிபாடுகளில் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத எதையும் புகுத்தி விடக் கூடாது. "நீண்ட குர்ஆன் வசனங்கள் மனப்பாடம் இல்லையென்றால் குர்ஆன் பிரதிகளைப் பார்த்துத்தான் ஓதியாக வேண்டும்" என்று இஸ்லாம் நம்மைக் கட்டாயப் படுத்தவே இல்லை. மேலும் நீண்ட குர்ஆன் வசனங்கள் ஓதித்தான் தொழ வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. மாறாக, ஒரு இஷாத் தொழுகையில் நீண்ட அத்தியாயமான சூரத்துல் பகரா முழுவதையும் ஓதித் தொழ வைத்த முஆத் இபுனு ஜபல் (ரலி) அவர்களைப் பற்றி "தொழுகையை அளவுக்கதிகம் நீட்டுகிறார்" என்று புகார் சொல்லப் பட்டவேளை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களைக் கடிந்து கொண்டார்கள். மேலும், "அவ்வாறு நீட்ட வேண்டாம்; அஷ்ஷம்ஸு, அல்-லைல், அல்-அஃலா, ஆகிய அத்தியாயங்களை ஓதிப் போதுமாக்கிக் கொள்க" என்று அறிவுரை கூறினார்கள். [புகாரீ ஹதீஸ் எண் 660] எனும்போது, இஸ்லாத்தில் இல்லாத வழிகளை நாமாக ஏற்படுத்திக் கொண்டு, அதன் மூலம் நமக்கு நாமே தொல்லைகளைச் சுமக்க வேண்டுவதில்லை.

"மார்க்கம் எளிமையானது; அதை (உங்களுக்கு நீங்களே) கடினமாக்கிக் கொள்ளாதீர்கள்" [புகாரீ ஹதீஸ் எண் 38] என்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைப்படி, தொழும்போது குர்ஆன் பிரதிகளைப் பார்த்து ஓதுவதற்குக் கட்டாயப் படுத்தும் இஸ்லாமிய வழிகாட்டல் ஏதுமில்லாததால் அதைத் தவிர்த்துக் கொண்டு, எளிமையான இஸ்லாத்தைக் கடினமாக்காமல் நடைமுறைப் படுத்துவதே சரியான நபிவழியாகும்.

முற்றாக அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!
satyamargam.com
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பிறந்தநாள், திருமணநாள் போன்ற வைபவங்களை வீட்டில் உள்ள உறுப்பினர்கள் மட்டும் எளிமையாகக் கொண்டாடி மகிழ இஸ்லாம் அனுமதிக்கிறதா? இத்தகைய வைபவங்களை மனதில் கொண்டு உணவு சமைத்து குடும்பத்தினர் ஒன்று கூடி உண்டு மகிழ்வது மட்டுமே எங்கள் நிய்யத் ஆக உள்ளது. குர் ஆன் ஹதீஸ் ஒளியில் தெளிவுறுத்தவும். நன்றி!

ஜஸாக்கல்லாஹ் கைரன்.

மின்னஞ்சல் வழியாக சகோதரி ரஹ்மத்.

தெளிவு:

வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்...

பிறந்த நாள், திருமண நாள் வைபவங்களைச் சிறப்பித்துக் கொண்டாடுவது ஒருவரைப் பார்த்து மற்றவர் காப்பியடித்து, வழக்கமாக்கிக் கொண்டாதாகும். பிறந்த நாள், திருமண நாள் மட்டுமல்ல இன்னும் மே தினம், காதலர் தினம், மகளிர் தினம் என உலகில் கொண்டாடப்படும் பல தினங்கள் மனிதனாக ஏற்படுத்திக் கொண்டவை! இதற்கும் குர்ஆன், சுன்னாவுக்கும் எந்த ஒட்டுமில்லை! - அதாவது அவை இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத கொண்டாட்டங்கள்.

ஒரு குழந்தை பிறந்து விட்டதால் அது பிறந்த நாளுக்கு எந்தச் சிறப்பும் இல்லை! அந்த நாளில் பிறந்ததால் அக்குழந்தைக்கும் எவ்வித சிறப்பும் ஏற்பட்டு விடுவதில்லை! இவ்வகையில் மண நாளுக்கும் எச்சிறப்பும் இல்லை! இவை காலச் சுழற்சியில், காலத்தின் ஒரு நேரத்தில் நிகழும் சம்பவமாகும். ஒவ்வொரு வருடமும் இந்நாட்களை வைபவங்களாகக் கொண்டாடுவதற்கு மார்க்க அங்கீகாரம் எதுவுமில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

படிப்பினை

''எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதை நான் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் 'இப்ராஹீம்' என அக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். பிறகு, பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதை இட்டார்கள். மேலும், அதற்காக சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு என்னிடம் கொடுத்துவிட்டார்கள்.'' அறிவிப்பாளர் அபூமூஸா (ரலி) (நூல்கள்: புகாரி, 5467. முஸ்லிம் 4342 )

குழந்தை பிறந்தவுடன் அதன் வாயில் இனிப்பை ஊட்டவேண்டும் என்ற கருத்தில் அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரி 5469. முஸ்லிம் 4343, 4344 இடம்பெற்றுள்ளன. அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி: புகாரி 5470. முஸ்லிம் 4340.

''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பிறந்த) குழந்தைகள் கொண்டு வரப்படுவதுண்டு. அப்போது அவற்றுக்காக (பரகத்) அருள்வளம் வேண்டி பிரார்த்திப்பார்கள். பேரீச்சம் பழத்தை மென்று அதைக் குழந்தையின் வாயில் தடவுவார்கள்.'' அறிவிப்பாளர் ஆயிஷா (ரலி) (நூல்: முஸ்லிம் 4345).

குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்காக அருள்வளம் வேண்டிப் பிராத்திப்பதும் இனிப்பு ஊட்டுவதும் (பின்னர் அகீகா கொடுப்பதும்) இவை நபிவழியாகும். வருடா வருடம் பிறந்த நாளை குறிப்பிட்டு அதைச் சிறப்பிக்கவோ அந்நாட்களைக் கொண்டாடவோ நபிவழியில் எந்தச் சான்றும் இல்லை. திருமணம் முடிந்து வலீமா - விருந்து அதுவும் ஒருமுறை கொடுப்பதற்கு நபிவழியில் ஆதாரங்கள் உள்ளன. மண நாளையும் வருடா வருடம் வைபவமாகக் கொண்டாட மார்க்கத்தில் எந்தச் சான்றுமில்லை!

பிறந்த நாள், திருமண நாள் வைபவங்களை ஊரறியக் கொண்டாடவும் அல்லது வீட்டிற்குள் மட்டும் கொண்டாடவும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை. மனிதர்களால் உண்டாக்கப்பட்ட இந்த வைபவங்களை நீங்கள் யாரிடமிருந்து கற்றுக்கொண்டீர்களோ அது போன்று உங்களிடமிருந்து உங்கள் சந்ததிகளும் கற்று, நாளை இவ்வைபவங்களை வெகு விமரிசையாகக் கொண்டாடுவர். அதனால் இதை நீங்களும் தவிர்த்து உங்கள் சந்ததியினரையும் தவிர்க்கும்படித் தூண்டுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்.

மதர்ஸ் டே, ஃபாதர்ஸ் டே என்று பெற்றோருக்குக் கூட "ஒரு நாள்" குறித்து அன்பை பரிமாறிக் கொள்வதன் மூலம் சமூக சீர்கேட்டை விளைவிக்கும் மேலை நாட்டு மோகம் நம் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பிட்ட ஒரு காரணத்தைக் கூறிக் கொண்டு அந்நாளில் அன்பை (!) பரிமாறிவிட்டு மற்ற தினங்களில் மறந்து போகும் ஃபார்மாலிட்டி சித்தாந்தத்தை இஸ்லாம் ஏற்பதில்லை. வருடா வருடம் பிறந்த நாள், திருமண நாள் விருந்து என்று இல்லாமல், உறவினர்கள் அனைவரும் பங்கு கொள்ளும் 'கெட் டு கெதர்' போன்று பொதுவான விருந்து என்பது நமக்கு வசதிப்படும் எந்த நாளிலும் கொடுக்கலாம்.

(இறைவன் மிக்க அறிந்தவன்)

satyamargam.com
ஐயம்:

அஸ்ஸலாமு அலைக்கும்


என் பெயர் ரியாஸ். துபையில் ஒரு நிறுவனத்தில் புதிதாக இணைந்து பணி புரிகிறேன்.

வெள்ளிக்கிழமைகளிலும் வேலை செய்யும்படியான என் பணிச்சூழலில், ஜும்மா தொழுகைக்கு பள்ளிக்குச் செல்ல என்னை அனுமதிக்க வேண்டும் என்று என் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்திருந்தேன்.


--------------------------------------------------------------------------------

ஆனால், வேலைக்கு சேர்ந்தபின்னர் என்னை ஜும்மா தொழுகையை (4 கி.மீ தொலைவில் உள்ள) பள்ளிக்குச் சென்று தொழ அனுமதிக்க என் மேலாளர் மறுக்கிறார். நிறுவன வளாகத்திலுள்ள தொழும் அறையில் சென்று தொழ மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதனால், கடந்த வாரம் முதல் ஜும்மா தொழுகையை லுஹர் தொழுகையாக மட்டுமே தொழுது வருகிறேன்.

மூன்று ஜும்மா தொழுகைகளை தொடர்ச்சியாக விட்டுவிட்டால் காஃபிர் என்ற ஹதீஸை அறிந்த காரணத்தால் அஞ்சுகிறேன். தயவு செய்து அறிவுறுத்துங்கள். (தமிழில் தட்டச்சு செய்யாமைக்கு மன்னிக்கவும்.) நன்றி.

மின்னஞ்சல் வழியாக ரியாஸ் அஹ்மத்.

தெளிவு:

வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்...

அன்புச் சகோதரருக்கு, இது குறித்து முன்பு சீனாவிலிருந்து கேள்வி அனுப்பிய ்mohideen s.fareed என்ற சகோதரருக்கு அளித்த விளக்கத்தைப் படித்துக் கொள்ளுங்கள். ஜுமுஆத் தொழுகைகளை அலட்சியப்படுத்தியவரின் நிலை என்ன?

உங்களைப் பொருத்த வரை தனி முஸ்லிமாக சீனாவில் ஒரு கிராமத்தில் வாழும் சகோதரரின் நிலை உங்களுக்கு இல்லை! ஜும்ஆப் பள்ளி நான்கு கீ.மீ தூரத்தில் இருக்கும் போது அங்கு சென்று வர (வாடகை மற்றும் சொந்தமாக) வாகன வசதி இருந்தால் நீங்கள் அப்பள்ளிக்குச் சென்று ஜும்ஆவில் கலந்துகொள்ள வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் அயல் நாடுகளுக்கு பணிக்குச் செல்பவர் சிலருக்கு இது போன்ற இடையூறுகள் ஏற்படுவதுண்டு. உலக வாழ்க்கையில் இடையூறு ஏற்படுகிறதென்றால் சகித்துக்கொள்ளலாம். இபாதத் - இறைவணக்க வழிபாடுகளில் இடையூறு செய்யப்பட்டால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.

நீங்கள் பணியில் சேரும்போது வெள்ளிக்கிழமைத் தொழுகைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றே நிறுவனத்தடன் ஒப்பந்தம் செய்துள்ளீர்கள். இப்போது நிறுவனத்தினரால் ஒப்பந்தம் மீறப்படுகிறது. ஒப்பந்த அடிப்படையில் இதை எதிர்க்க உங்களுக்கு உரிமையுண்டு.

வெள்ளிக்கிழமை மட்டும் உங்கள் பணியிடத்தில் வேறு ஒரு பிறமத சகோதரரை நியமிக்க முடியுமென்றால் அவ்வாறு செய்துகொள்ள நிறுவனத்துடன் பேசிப் பாருங்கள். தொடர்ந்து ஜும்ஆத் தொழுகையில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை எனில், இபாதத்துக்கு குறைவு ஏற்படுத்தாத வேறு வேலையை விரைவில் தேடிக்கொள்ளுங்கள்! இது உங்கள் நிலைமை அறிந்து நீங்களே முடிவு செய்யும் பிரச்சனை என்பதைக் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்!

(இறைவன் மிக்க அறிந்தவன்)

satyamargam.com


ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்.சஜ்தா திலாவத் எப்படி செய்ய வேண்டும். குரானை ஒளு இல்லாமல் ஓதலாம் என்றால், குரானில் சஜ்தா என்ற வார்த்தை வரும்பொழுது ஒளு இல்லாமல் சஜ்தா செய்யலாமா? (மின்னஞ்சல் வழியாக சகோதரி ஃபர்வின்)





தெளிவு:

வஅலைக்குமுஸ் ஸலாம் வரஹ்...

"ஸஜ்தா திலாவத்"தைத் தொழுகையில் நாம் செய்யும் ஸஜ்தாவைப் போன்று செய்ய வேண்டும். இதனைச் செய்வதற்குத் தொழுகைக்காக நாம் செய்யும் ஒளுவைப் போன்று ஒளு செய்ய வேண்டிய தேவை இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில நேரங்களில் குர்ஆன் ஓதி ஸஜ்தா வசனத்தைக் கடந்து செல்கையில் எங்களுடன் சேர்ந்து ஸஜ்தாச் செய்வார்கள். அப்போது இட நெருக்கடி ஏற்பட்டு எங்களில் ஒருவருக்கு ஸஜ்தாச் செய்யக்கூட இடம் கிடைக்காது. தொழுகையல்லாத நேரங்களில் இவ்வாறு நடைபெற்றது! அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) (நூலகள்: புகாரி, 1075. முஸ்லிம், 1006)

திருமறையை ஓதிக்கொண்டிருக்கும் பொழுது, ஸஜ்தா வசனங்களை ஓதினால் ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்று ஹதீஸ்களிலிருந்து அறிய முடிகிறது. திருமறையை ஒளுவின்றி ஓதலாம் எனும்போது, ஸஜ்தா திலாவத்தையும் ஒளுவின்றிச் செய்யலாம். ஸஜ்தா வசனங்களை ஓதியதற்காக எழுந்து சென்று ஒளுச் செய்து வந்து ஸஜ்தா செய்யவேண்டும் என சட்டம் இயற்ற எந்த ஆதாரமும் இல்லை!

தொழுகையில் குர்ஆனை ஓதும்போது ஸஜ்தா வசனங்களை ஓதுமிடத்தில் அதற்கென ஸஜ்தா செய்யவேண்டும். இங்கு தொழுகைக்கென ஒளு அவசியம் என்பதால் ஸஜ்தாச் செய்வதும் தொழுகையின் ஒரு பகுதி எனக்கருதி தொழுகைக்கு வெளியே செய்யும் ஸஜ்தா திலாவத்துக்கும் ஒளு அவசியமோ என்ற மன ஊசலாட்டம் ஏற்படுகின்றது! ஸஜ்தா என்பது தொழுகையின் உள்ளே செய்யப்படும் ஒரு செயல் தான். ஆனால் அதனை மட்டும் செய்வதற்கு ஒளுவின் தேவை இல்லை. ஏனெனில், ஒருவர் ஸஜ்தா மட்டும் செய்கிறார் என்றால், நாம் ஒரு போதும் அவர் தொழுகிறார் என்று கூற மாட்டோம்.

ஒருவர் தொழுகையில் நுழைய வேண்டுமெனில், அதன் ஆரம்ப அடிப்படையான ஒளு வேண்டும். ஸஜ்தா என்பது இறைவனுக்குச் சிரம்பணிதல் மட்டுமே. இதனைத் தொழுகை என்ற வரம்பிற்குள் கொண்டு வர இயலாது. தொழுகை வேறு, ஸஜ்தா மட்டும் வேறு என்பதை விளங்கினால் இதில் குழப்பம் நீங்கிவிடும்!

குர்ஆனில் வரும் ஸஜ்தா வசனங்களுக்குத் தொழுகைக்கு வெளியே இருக்கும் போது கண்டிப்பாக ஸஜ்தா செய்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை.

நபி(ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்தார்கள். ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்துத் தம் நெற்றிக்குக் கொண்டு சென்று 'இவ்வாறு செய்வது எனக்குப் போதும்' என்று கூறினார். பின்னர் அவர் காஃபிராகக் கொல்லப் பட்டதை பார்த்தேன். அறிவிப்பாளர் இப்னு மஸ்வூத் (ரலி) (நூல்கள்: புகாரி, 1070, 3972 முஸ்லிம், 1007)

நபி(ஸல்) அவர்கள் நஜ்மு அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும், இணைவைப்பவர்களும் ஏனைய மக்களும் ஜின்களும் ஸஜ்தாச் செய்தனர். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்கள்: புகாரி, 1071. திர்மிதீ, 524)

நான் நபி(ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை. அறிவிப்பவர் ஸைத் இப்னு ஸாயித்(ரலி) (நூல்கள்: புகாரி, 1072. முஸ்லிம், 1008. திர்மிதீ, 525)

நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு வெளியே குர்ஆனில் ஸஜ்தா வசனங்களை ஓதியதற்காக ஸஜ்தாச் செய்திருக்கிறார்கள்; ஸஜ்தாச் செய்யாமலும் இருந்திருக்கிறார்கள். நபியவர்களைப் பின்பற்றி நபித்தோழர் உமர் (ரலி) அவர்களும் ஒரே வசனத்துக்கு ஸஜ்தாச் செய்தும், செய்யாமலும் விட்டிருக்கிறார்கள்.

உமர்(ரலி) ஒரு வெள்ளிக்கிழமை மிம்பரில் நின்று நஹ்ல் அத்தியாயத்தை ஓதினார்கள். (அதிலுள்ள) ஸஜ்தா வசனத்தை அடைந்ததும் இறங்கி ஸஜ்தாச் செய்தார்கள். மக்களும் ஸஜ்தாச் செய்தனர். அடுத்த ஜும்ஆ வந்தபோது அதே அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது ஸஜ்தா வசனத்தை அடைந்ததும் (மக்களை நோக்கி) 'மனிதர்களே! நாம் ஸஜ்தா வசனத்தை ஓதியிருக்கிறோம். ஸஜ்தாச் செய்கிறவர் நல்லதைச் செய்தவராவார். அவரின் மீது எந்தக் குற்றமுமில்லை' என்று கூறினார்கள். மேலும் அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை. நாமாக விரும்பிச் செய்தால் தவிர ஸஜ்தாவை அல்லாஹ் நம்மீது கடமையாக்கவில்லை என்று இப்னு உமர்(ரலி) கூறினார் என நாபிஃஉ குறிப்பிட்டார்கள். (புகாரி, 1077)

இதிலிருந்து தொழுகைக்கு வெளியே, குர்ஆனை ஓதும் போது ஸஜ்தா திலாவத் வரும் வசனங்களில் ஸஜ்தா செய்வது கட்டாயக் கடமை இல்லை, விரும்பினால் ஸஜ்தாச் செய்யலாம் என்றே விளங்க முடிகிறது.

தொழுகையில் செய்யும் ஸஜ்தா போன்றே, குர்ஆன் ஓதியதற்கான ஸஜ்தா திலாவத்தைத் தொழுகைக்கு வெளியேயும் (ஒரு ஸஜ்தா மட்டும்) செய்ய வேண்டும். இந்த ஸஜ்தாவிற்கு தொழுகையில் செய்வது போன்று தக்பீர் கூறவேண்டுமென்றோ, ஸஜ்தாவில் ஓதவேண்டுமென்றோ ஆதாரங்கள் எதுவும் நாமறியவில்லை!

'இன்னும் அர்ரஹ்மானுக்கு நீங்கள் ஸஜ்தா செய்யுங்கள்' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் 'அர்ரஹ்மான் என்பவன் யார்? நீர் கட்டளையிடக் கூடியவனுக்கு நாங்கள் ஸஜ்தா செய்வோமா?' என்று கேட்கிறார்கள் இன்னும், இது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்திவிட்டது. (அல்குர்ஆன் 25:60)

திருமறையின் ஸஜ்தா வசனங்களை நாம் ஓதும் வேளைகளில் ஸஜ்தா செய்வதன் மூலமாக, படைத்த இறைவனுக்கு உடனடியாக சிரவணக்கம் செய்து திருமறையின் கட்டளையை நிறைவேற்றுகின்றோம் அவ்வளவே. மற்றபடி, திருகுர்ஆனின் ஸஜ்தா வசனங்களுக்குச் செய்யும் ஸஜ்தாவிற்கும் தொழுகையில் செய்யும் ஸஜ்தாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.


(இறைவன் மிக்க அறிந்தவன்)
satyamargam.com


The links of the RSS to terror stand exposed, as does the incompetence and complicity of the Indian state.

It is difficult to overestimate the importance of the confession made by Swami Aseemananda relating to the planning and execution of the bomb blasts in Malegaon (2006 and 2008), on the Samjhauta Express (2006), and in Mecca Masjid (2007)and Ajmer Sharif (2007).



What is even more significant is that Aseemananda’s confession was made voluntarily before a magistrate, after he was kept away from the police, in judicial custody for two days, to ensure that it was not being made under duress.


Aseemananda is no ordinary person. He is a Rashtriya Swayamsevak Sangh (RSS) pracharak, head of the RSS-affiliated Vanvasi Kalyan Ashram in Gujarat and he runs a religious centre in the Dangs district of Gujarat. He is powerful enough to have Gujarat Chief Minister Narendra Modi visit him and share the dais with him on frequent occasions.

In his confession, Aseemananda has laid bare the entire conspiracy, and he has named the people involved. His sudden decision to confess voluntarily is melodramatic, and somewhat suspicious.
This swami apparently met, in a Hyderabad jail, one among the young boys who were arrested by the police after the Mecca Masjid blast and tortured. This young boy, Abdul Kaleem, impressed Aseemananda so much with his behaviour and kindness, that when he came to know that Kaleem spent a year and a half in jail and suffered police “interrogation”, he wanted to repent and thus came his confession. Whatever be the reason, Aseemananda has detailed in a sworn testimony to a magistrate the entire working of RSS-inspired Hindutva terrorism in India.



Such a confession before a magistrate has weight in the court of law, but more importantly it gives the investigating authorities the full picture of the entire conspiracy, its execution and the people involved. It, therefore, makes it that much easier for them to find the substantiating evidence to charge sheet all those involved and obtain convictions. In sum, Aseemananda’s confession has shown that a large number of terror strikes in India have been the handiwork of Hindutva terrorists who have close organisational and ideological links with the RSS and its front, the Vishwa Hindu Parishad. The jigsaw puzzle, which was being slowly pieced together by the police of different states, after the stellar investigative work of Hemant Karkare and his team in Maharashtra, has suddenly all fallen into place thanks to this five-hour confession.



However, it is hardly a certainty that this confession will lead to convictions and punishment of the
guilty. Far less probable is that there will be any serious action against the RSS and its “parivar”, which have now, once again, been shown to be dangerously violent and a threat to the republic. In their
actions following each of these cases of terror, most of the police and the other investigative agencies have shown themselves to be thoroughly incompetent, politically compromised and infiltrated by the personnel and ideologies of this very Hindutva brigade.



In each of the cases, where now evidence has been found of the involvement of Hindutva groups, the police had instinctively arrested Muslims and put out elaborate stories about Islamic terrorist groups planning and executing these attacks. Hundreds of young men were arrested, tortured into giving false “confessions” and hauled up in courts, which in turn happily carried on with this charade. (The media has emerged no less honourably; it was ever ready to swallow police theories of Islamic fundamentalists from Bangladesh to Pakistan as masterminds and painted grand theories of syncretic Islam being threatened by these extremists.) Now that we have Aseemananda’s confession, reading those police accounts of how Islamic terrorists executed these attacks shows the extent of the incompetence and duplicity of our men in khaki. To expect them, as an institution, to take the prosecution to a successful conclusion is perhaps asking for too much. In addition to all its innate failings, the law and order machinery may not even receive sufficient political backing from the government, as it takes on India’s principal opposition party’s paterfamilias, the RSS.

The Congress as a party and the government under its dispensation have, at best, been indecisive in their approach to Hindutva violence. Congress administrations have been known for their ambivalent and often complicit behaviour when dealing with RSS-inspired anti-Muslim violence, whether it was in Ahmedabad in 1969, Hyderabad in 1978, Meerut in 1987, or the post-Babri masjid demolition riots in Mumbai, Surat and other places. Lastly, it should be remembered that in Andhra Pradesh and Maharashtra, it was the police under Congress or coalition administrations which arrested and tortured innocent men whose only crime was their religion. Given such a track record, it is but obvious that suspicions will remain about the ability of the present governments, both at the centre and in states like Rajasthan, Maharashtra and Andhra Pradesh, to successfully prosecute those named by Aseemananda
and, further, to investigate the actual involvement of the RSS and its affiliates in these terror acts.

Within a month of Aseemananda’s confession, the usual play-acting has started. The RSS and its affiliate, the Bharatiya Janata Party (BJP), have denied the charges and attacked the Central Bureau of Investigation for playing Congress politics. They have claimed that the Congress is using this to divert attention from corruption and inflation. The media in its stilted attempt to balance the story has downplayed the culpability of the RSS. In any case, this is not the first time that the RSS has been exposed for its violent, communal and destructive politics, and given its deep penetration of social and political institutions, it has managed to come out of such situations in the past too.



This battle against the RSS and the world view it represents has to be won politically. Aseemananda’s confession will hopefully disabuse many of those who have come to view the RSS, through its electoral affiliate – the BJP – as a legitimate organisation and expose once again its true character. If popular political pressure, combined with media scrutiny and civil society activism, can be sustained, there is a possibility that those guilty of the present round of terror acts may be punished. This itself will be a major achievement.

Finally, we must now ask Prime Minister Manmohan Singh which is the “biggest internal security threat” to the idea of India. Is Maoism, as he often says, a basic threat to India, or, on the basis of the mass of evidence of right wing extremist involvement in terror, can it be Hindutva? Perhaps Congress Party General Secretary Rahul Gandhi shows greater awareness of the reality.



Editorial - Economic & Political Weekly EPW january 15, 2011 vol xlvI no 3

http://epw.in/epw/uploads/articles/15600.pdf
கேள்வி: என் கணவர் நல்ல மனிதர். எங்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் முடிந்தது. எனக்காக அவரும், அவருக்காக நானும் படைக்கப்பட்டது போல் ஒருவரை ஒருவர் நேசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடந்த ஒரு வருட காலமாக அவருடைய நடத்தை மோசமாக இருக்கிறது.

பிற பெண்களுடன் 'சாட்" பண்ணுகிறார். செக்ஸ்மூவி பார்க்கிறார். கேட்டால் பொழுது போக்கு என்கிறார். என்னால் இதை அலட்சியப் படுத்த முடியவில்லை. நான் கண்டித்தாலோ, கத்தினாலோ அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு 'இனி செய்ய மாட்டேன்" என்கிறார். ஆனால் மீண்டும் செய்கிறார்.

அவரது நடவடிக்கையில் எனக்கு கடும் கோபம் வருகிறது. குழந்தைகளின் எதிர்காலத்தையும் என் வாழ்க்கையையும் நினைத்து நான் குழம்புகிறேன். நான் என்ன செய்வது..? எனக்காக துஆ செய்யுங்கள். (வாசகர் நலம் கருதி பெயர் குறிப்பிடப்படவில்லை)

பதில்: நாம் அளவு கடந்து நேசிக்கும் எது ஒன்றும் ஒரு சின்னஞ்சிறிய அளவு நம் விருப்பத்துக்கு மாற்றமாக நடந்தாலும் அது பெருமளவு நம்மை பாதித்து விடும். நீங்கள் உங்கள் கணவரை அளவு கடந்து நேசித்துள்ளீர்கள். இன்றும் நேசிக்கிறீர்கள். அதனால் தான் அவர் சின்னதாக கருதும் தவறு கூட உங்களை பெருமளவு பாதித்துள்ளது.

உங்கள் கணவர் அன்னியப் பெண்ணைப் பார்க்கும் போதோ - பேசும்போதோ உங்கள் மனதில் விதவிதமான குழப்பம் எழும்.

'நான் அழகாக இல்லையோ..

என் அழகு குறைந்துப் போய் விட்டதோ..

அவர் என்னை வெறுத்து விடுவாரோ..

என்னை பிடிக்காமல் போனதால் தான் மற்றப் பெண்களிடம் பேசுகிறாரோ.."

என்றெல்லாம் உங்கள் மனதில் ஏக சங்கடங்கள் தலை விரித்தாடும். தெளிவு கிடைக்க வழி தெரியாத இந்த குழப்பங்கள்தான் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பின்னாளில் வாழ்வில் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தும் ஆயுதம். இதற்கெல்லாம் இடங்கொடுத்து விடாமல் இருப்பதுதான் இன்றைக்குறிய முதல் தேவை.

எதையும் நிதானமாக அணுகும் பக்குவம் நமக்கு கிடைத்து விட்டால் பாதி பிரச்சனைகள் தலைத் தூக்காமலே போய்விடும்.

என்னதான் புரிந்து நேசித்து மன உவப்புடன் கணவன் மனைவியாக இணைந்தாலும் ஆணின் இயல்பும் பெண்ணின் இயல்பும் வெவ்வேறானவை என்பது மட்டும் மாறிவிடப் போவதில்லை. தன் இயல்புக்கு தக்கவாறு கணவன் மனைவியையோ, மனiவி கணவனையோ மாற்றி விடுவது என்பது சாத்தியப்படாதவைகளாகும்.

அன்னியப் பெண்களை பார்ப்பது என்பது ஆண்களுக்கு விருப்பமானதாகும். ''என் சமூகத்தில் எனக்கு பின் ஆண்களுக்குறிய பெரும் சோதனை பெண்கள் தான்" என்பது நபி மொழி (புகாரி)

இந்த சோதனையிலிருந்து ஆண்கள் தவிர்ந்து நிற்பது அவரவர்களின் இறை நம்பிக்கையைப் பொருத்ததாகும். என்னதான் பாசமிகு மனைவி பக்கத்திலிருந்தாலும் பிற பெண்களால் ஆண் கவரப்படத்தான் செய்வான். ஆண்கள் விஷயத்தில் ஷைத்தானின் பலமே பெண்கள் தான்.

உங்கள் கணவருக்கு இறை நம்பிக்கையை அதிகப்படுத்த பாடுபடுங்கள். இறை நம்பிக்கையாளர்களிடம் ஷைத்தான் ஊடுருவும் போது அவர்களின் நிலை எப்படி இருக்க வேண்டும் என்பதை இறைவன் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

''(நபியே!) ஷைத்தான் ஏதாவது (தவறான) எண்ணத்தை உம் மனதில் ஊசலாட செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால் அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும் யாவற்றையயும் அறிபவனாகவும் இருக்கிறான். (அல் குர்ஆன் 7:200)

''நிச்சயமாக எவர்கள் (இறைவனுக்கு) அஞ்சுகிறார்களோ அவர்களை ஷைத்தான் தீண்டி தவறான எண்ணத்தை ஊட்டினால் அவர்கள் (இறைவனை) நினைக்கிறார்கள். துரிதமாக விழிப்படைந்துக் கொள்கிறார்கள்.'' (அல் குர்ஆன் 7:201)

இந்த வசனங்களை பார்த்தால் உங்கள் கணவர் படிப்பினை பெரும் வாய்ப்புள்ளது. சுட்டிக் காட்டுங்கள். முக்கியமாக உங்களைப் போன்ற சகோதரிகளுக்கு நாம் சுட்டிக் காட்ட ஆசைப்படுவது என்னவென்றால் கணவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை அலட்சியப்படுத்துங்கள் என்பதேயாகும். அலட்சியப் படுத்துங்கள் என்பதன் பொருள் அலட்சியப்படுத்துவது போன்று நடிப்பதாகும். நடிப்பது என்பதன் பொருள் நேரம் வாய்க்கும் போது அவரது தவறை பக்குவமாக சுட்டிக் காட்டுவதற்குறிய பயிற்சியாகும்.

இன்னொரு முக்கிய விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தான் தான் விரும்புவது போல் வாழ்க்கை அமைய வேண்டும் என்றே ஆசைப்படுவான். அனால் அப்படி அமைவது வெகு வெகு சொற்பமே.. இறைவன் நாடிய படிதான் வாழ்க்கை அமையும்.

நமது விருப்பத்திற்கு மாற்றமாக, நாம் விரும்பாத ஏதாவது நடக்கும் போது 'இது இறைவன் புறத்திலிருந்து வந்துள்ள சோதனையாகும்" என்று அதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பல வழிகளில் நாம் மனிதனை சோதிப்போம் என்று இறைவன் கூறுகிறான் (பார்க்க அல் குர்ஆன் 2:155) சோதனைகள் வித்தியாசப்படலாம். ஆனால் சோதனைக்கு உட்படுத்தப்படாத மனிதர் எவருமில்லை.

இதுபோன்ற காரியங்களுக்காக கணவணுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தால் அவர் தான் செய்யும் தவறில் மேலும் முன்னேற வழிவகுத்து விடும். அதனால் அத்தகைய காரியங்களில் ஈடுபட மாட்டீர்கள் என்று நம்புகிறோம். கணவருக்காக இறைவனிடம் முறையிடுங்கள்.
''Jazaakallaahu khairan'' www.tamilmuslim.com
கேள்வி: நான் ''அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹு அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ'' என்று மனதலவில் ஏற்றுக் கொண்டேன். ஆனால் எனது பெற்றோர் உற்றார் உறவினர்கள் நான் இஸ்லாத்துக்கு மாறுவதை கண்டிப்பாக ஏற்க மாட்டார்கள். நான் என்னுடைய இஸ்லாமிய ஏற்பை பகிரங்கமாக அறிவிக்க முடியாமல் மிகுந்த மன வேதனையில் தவிக்கிறேன். என்னுடைய கேள்வி நான் இஸ்லாத்தை ஏற்றதை பகிரங்கமாக அறிவிக்காததற்காக மறுமையில் தண்டிக்கப்படுவேனா?
இறைவன் அவனை நம்பிய அடியார்களை கைவிடுவதில்லை. இறை நம்பிக்கைக் கொண்டுள்ள நமக்கு சில பொழுதுகளில் சில காரியங்கள் நெருக்கடியாக தெரிந்தாலும் அதற்காக நாம் மனம் சஞ்சலப்பட்டாலும் இறை நம்பிக்கையில் உறுதியுடன் நிலைப்பெற்றிருந்தால் அதற்கும் இறைவன் புறத்திலிருந்து கூலி கிடைத்து விடும் என்பதை இஸ்லாம் தெளிவாகவே சொல்லியுள்ளது.

இன்றைக்கு உங்களுக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கு மட்டும் ஏற்பட்டுள்ள நிலையல்ல. இஸ்லாத்துடைய ஆரம்ப கால வரலாற்றை எடுத்து பார்த்தால் அன்றைய இறை நம்பிக்கையாளர்கள் கடின நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இஸ்லாத்தின் பகிரங்க எதிரியாக இருந்த உமர் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு வரை மக்காவில் மனம் மாறி இஸ்லாத்தை ஏற்றவர்களில் பெரும்பாலோர் உமர் போன்றவர்களுக்கு பயந்து தங்கள் இறை நம்பிக்கையை மறைத்தே வைத்திருந்தனர். இதற்கு இறைத்தூதர் அனுமதியும் அளித்தார்கள். உமர் இஸ்லாத்தை ஏற்ற பிறகு தான் அங்கு அனைவரின் இறை நம்பிக்கையும் பகிரங்க அறிவிப்பாகின.

சில நெருக்கடிகளை சமாளிப்பதற்காக இறை நம்பிக்கையில் - இஸ்லாத்தில் - அசைக்க முடியாத நம்பிக்கை உள்ள நிலையில் அதை வெளிக் காட்டாமல் மறைத்துக் கொள்வதற்கு இஸ்லாம் அனுமதியளிக்கவே செய்கிறது. கீழுள்ள இறை வசனம் அதை தெளிவாக அறிவிக்கிறது பாருங்கள்.

எவர் (ஈமான்) இஸ்லாமிய நம்பிக்கைக் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) - எவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் இறை நிராகரிப்பைக் கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு (அல் குர்ஆன் 16:106)

இஸ்லாமிய ''நான் இறை நம்பிக்கையாளன் தான்" என்று உள்ளத்தில் இஸ்லாம் இல்லாத நிலையில் யார் கிண்டலாக இறை நம்பிக்கையை எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை இந்த வசனம் முன் வைக்கும் அதே வேளை, இக்கட்டான சூழ்நிலைக்காக தனது இஸ்லாமிய நம்பிக்கையை தற்ாகலிகமாக மறைத்துக் கொள்வது எந்த விதத்திலும் பாவமான காரியமல்ல. என்பதையும் இறைவன் தெளிவுப்படுத்தியுள்ளான். இந்த வசனத்தில் இடம் பெறும் "எவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை)" என்ற வாசகம் உங்கள் மன அமைதிக்குரியது.
ஆனாலும் இஸ்லாம் ஒரு வாசனை மலருக்கு ஒப்பானது. அது உங்கள் வழியாக தனது வாசனையை வெளிப்படுத்தித் தான் தீரும். இறைவன் உங்களுக்கு அருள் புரிந்துள்ளான். உங்கள் வழியாக எத்துனைப் பேருக்கு இந்த பெரும்பாக்கியம் கிடைக்கப் போகிறது என்பதை அவன் தான் அறிவான்.

மிகவும் அமைதியாக சூழ்நிலையை அணுகுங்கள். எடுத்தேன் - கவிழ்த்தேன் என்ற அவசர பேர்வழிகளிடம் முதலில் உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தாமல் நிதானமாக சிந்திக்கக் கூடியவர்களிடம் வெளிபடுத்துங்கள். எந்த சந்தர்பத்திலும் நிதானம் இழந்து விடாதீர்கள்.

ஒருவேளை கடைசிவரை உங்கள் இஸ்லாமிய நம்பிக்கையை வெளிபடுத்த முடியாத நிலை ஏற்பட்டாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள் உங்கள் எண்ணத்திற்கும், முயற்சிக்கும் தகுந்த பலன் கிடைத்து விடும்.

இறைவனின் உவப்பிற்குரியவர்களே நேர்வழிப் பெறுவார்கள். அந்த வகையில் நீங்கள் பாக்கியம் பெற்று விட்டீர்கள். வாழ்த்துக்கள். உங்களுக்காக நாங்களும் இறைவனைப் புகழ்கிறோம். அவனுக்கு நன்றி செலுத்துகிறோம். எப்போதும் அவனுடன் தொடர்புடன் இருங்கள்.

''Jazaakallaahu khairan'' www.tamilmuslim.com
கேள்வி: குத்ப்மார்கள் என்றால் யார்? நபிமார்களில் சிலர் இன்றைய குத்ப்மார்களின் தரத்தை விட குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்று மறை ஞானப் பேழையில் படித்தேன். இது எப்படி சரியாகும்?!
பதில்: இஸ்லாத்தின் உயிரோட்டமான ஏகத்துவத்தில் களங்கம் ஏற்படுத்தி - தனிமனித வழிபாட்டை ஊக்குவித்து - பல தெய்வ கொள்கைக்கு வழி வகுக்கும் அத்வைத கோட்பாடு (இறைவனும் மனிதனும் இரண்டற கலந்துவிட முடியும் என்ற கேடுகெட்ட சித்தாந்தம் தான் அத்வைதம்) தான் நீங்கள் படித்த பைத்தியக்காரத்தனமான உளறல்களை உள்ளடக்கியுள்ளது.

குத்புகள், அவ்லியாக்கள், ஷேக்குகள், மகான்கள், ஞானிகள் என்றெல்லாம் வார்த்தைகளை கண்டுபிடித்து அவற்றை சிலருக்கு சூட்டி மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த அத்வைத தீய கொள்கையுடையோர்.
நபிமார்களின் தகுதியை மனித சமுதாயத்தில் யாருமே அடைய முடியாது என்பது மிகத் தெளிவான விஷயமாகும்.

ஏனெனில் அவர்கள் இறைவனோடு வஹியின் தொடர்பில் இருந்தவர்கள். பாவமான செயல்களோ, எண்ணங்களோ உதித்தால் கூட இறைவனால் அவை சுட்டிக் காட்டப்பட்டு சீர் திருத்தப்பட்டவர்கள். இறைவேத அடிப்படையில் வாழ்ந்தவர்கள். இப்படிப்பட்ட இறைத்தூதர்களையே ஒரு கொள்கை குறைத்து மதிப்பிடுகிறது என்றால் அது எத்தகைய கொள்கை என்பதை நாம் மேலதிகமாக விளக்க வேண்டுமா..?

இறைத்தூதர்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அனைத்துப் புகழுக்கும் உரியவன் இறைவன். (அல் குர்ஆன் 37:181,182)

நபிமார்களை விடுங்கள் இந்த தீய கொள்கையுடையோர் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் குத்புகள் - அவ்லியாக்கள் - மகான்கள் - ஷேக்குகள் எல்லாம் குறைந்த பட்சம் நபித் தோழர்களின் இடத்தையாவது பிடிக்க முடியுமா..? நிச்சயம் முடியவே முடியாது.

ஏன் அவ்வளவுக்கு போக வேண்டும்? குர்ஆனையும் நபிமொழிகளையும் தெளிவாக விளங்கி அதில் உள்ளதை மட்டும் கூடுதல் குறைச்சல் இல்லாமல் நீங்களும் நாமும் பின் பற்றினால் நம் இடத்தைக் கூட இவர்களால் (போலி ஷேக்குகளால்) பிடிக்க முடியாது. ஏனெனில் இவர்கள் இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்தில் இல்லாத கொள்கையைப் பின்பற்றுகிறார்கள்.

இத்தகைய கொள்கைக்காரர்களையும், அந்த கொள்கையை பரப்பும் மீடியாக்களையும் பகிரங்கமாக இனம் காட்டும் கடமை நமக்கு உண்டு என்பதை மறந்து விட வேண்டாம்.

''Jazaakallaahu khairan''

www.tamilmuslim.com/
கேள்வி: தொழுகையின் குறுக்கே செல்லக் கூடாது என்பது எந்த இடத்தை குறிக்கிறது.? ஸஜ்தா செய்யும் இடம் வரையிலா..? அல்லது அவருக்கு முன்னால் உள்ள பகுதி அனைத்துமா..? ''உங்களுக்கு முன் தடுப்பு வைத்துக் கொண்டு தொழும் போது யாராவது குறுக்கே செல்ல முயன்றால் அவரை தடுக்க வேண்டும். அதை அவர் தடுத்தால் அவருடன் சண்டையிட வேண்டும். ஏனெனில் அவர் ஷைத்தானாவார்'' என்பது நபிமொழி. (அபூஸயீத் அல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 509)

''தொழுபவருக்கு குறுக்கே செல்பவர் அதனால் தமக்கு ஏற்படும் கெடுதியை பாவத்தை அறிந்தால் அவருக்கு குறுக்கே செல்வதற்கு பதில் நாற்பது நாட்கள் நின்றுக் கொண்டிருப்பது அவருக்கு நல்லதாக தோன்றும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.'' (ஜுஹைம் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 510)

இந்த ஹதீஸ்களை மேலோட்டமாகப் பார்த்து தொழுபவருக்கு குறுக்கே எந்தப் பகுதியிலும் செல்லக் கூடாது என்று சிலர் விளங்கிக் கொண்டு பள்ளியில் தடுமாறி நிற்பதை காண்கிறோம். முதல் ஹதீஸின் வாசகத்தையும் இது பற்றி வந்துள்ள இதர ஹதீஸ்களையும் பார்த்தால் குறுக்கே செல்லக் கூடாத பகுதி எது என்று தெளிவாகி விடும்.

முதல் ஹதீஸில் ''தொழுபவர் தடுப்பு வைத்துக் கொண்டு தொழும் போது" என்ற வாசகம் வந்துள்ளது. இதிலிருந்து தடுப்பு வைக்கப்பட்டிருந்தால் அந்த தடுப்பிற்கு உள்ளேதான் செல்லக் கூடாது என்பதை விளங்கலாம். அவர் தொழுவதற்கு முன்னாலுள்ள எந்த பகுதியிலும் செல்லக் கூடாது என்பது சட்டமானால் தடுப்பு வைத்துக் கொள்ளட்டும் என்பது அர்த்தமில்லாமல் போய்விடும். தடுப்பு வைக்காமல் தொழும் போது எந்த பகுதியிலும் கடந்து செல்லலாம் என்பதையும் இந்த செய்தியிலிருந்து புரியலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமக்கு முன்னால் தடுப்பு வைக்காமல் தொழுததில்லை. தடுப்பு வைத்துக் கொள்வதில் மிக கவனமாக இருந்துள்ளார்கள்.
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் ஒட்டகத்தை குறுக்கே தடுப்பாக நிறுத்தி அதை நோக்கி தொழுவார்கள் என்றும் ஒட்டகம் மிரண்டு நகர்ந்தால் அதன் மீதுள்ள சேனத்தை தடுப்பாக்கிக் கொள்வார்கள்'' என்றும் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (புகாரி 507)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் கைத்தடியை தடுப்பாக வைத்து பத்ஹா என்ற இடத்தில் தொழுதார்கள் என்று அபூ ஜுஹைஃபா ரளியல்லாஹு அன்ஹு, அறிவிக்கிறார்கள். (புகாரி 501) பள்ளியில் உள்ள தூண்களை தடுப்பாக்கிக் கொண்டு தொழுத விபரம் (புகாரி 502) கிடைக்கிறது.

சுவரை தடுப்பாக்கிக் கொண்டு தொழுத விபரம், ஈட்டியை நட்டி அதை தடுப்பாக்கி தொழுத விபரம் கிடைக்கின்றன. (புகாரி 495,496,498,499)

''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கைத்தடியை தடுப்பாக்கி பத்ஹாவில் தொழுதார்கள். அதற்கு முன் பெண்கள் நடந்து செல்லுவார்கள், கழுதைகள் கூட நடந்து செல்லும்'' என்று அபூ ஜூஹ்பா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (புகாரி 495, 499)

''தொழும் திடலுக்கு வந்து ஈட்டியை முன்னால் நட்டி வைத்து பெருநாள் தொழுகையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழவைத்துள்ளார்கள்''. (இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 494)

இந்த ஹதீஸ்களிலிருந்து தடுப்பு வைப்பதன் அவசியத்தை உணரலாம். பள்ளிகளில் தடுப்பு இல்லாமல் தொழும் போது குறுக்கே செல்பவருடன் சண்டையிடுவது ஹதீஸுக்கு மாற்றமாகும். தடுப்பையும் கூட நாம் நினைத்த இடத்தில் வைத்துக் கொண்டு பிறருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது.

முதல் ஹதீஸில் தடுப்பு வைத்துக் கொண்டு தொழுபவருக்கு குறுக்கே சென்றால் தடுங்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து நம்மால் தடுக்க முடியும் என்ற எல்லையில் தான் தடுப்பு வைக்க வேண்டும் என்பதை விளங்கலாம். நம்மால் தடுக்க முடியும் என்ற எல்லை கையை நீட்டி தடுக்கும் எல்லைதான். தெளிவாக சொல்லப் போனால் நாம் 'ஸஜ்தா" செய்யும் இடம்தான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழும் (அதாவது ஸஜ்தா செய்யும்) இடத்திற்கும் சுவற்றிற்கும் இடையே ஒரு ஆடு நடந்து செல்லும் இடமிருக்கும் என்று ஸஃது பின் ஸஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (புகாரி 496)
பள்ளிகள் இல்லாமல் மற்ற இடங்களில் தொழ நேர்ந்தால் ஸஜ்தா செய்யும் இடத்திற்கு சற்று அருகில் தடுப்பு வைத்துக் கொண்டுதான் தொழ வேண்டும்

உங்களில் ஒருவர் தமக்கு முன்னால் எதையாவது தடுப்பு வைத்துக் கொண்டு தொழட்டும். அதற்கப்பால் நடந்து செல்பவர் பற்றி அவர் பொருட்படுத்த வேண்டாம் என்பது நபிமொழி (தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு, திர்மிதி 334)
எனவே குறுக்கே செல்லக் கூடாது என்பது ஸஜ்தா செய்யும் இடத்திற்குள் செல்வதைதான் குறிக்கிறதே தவிர அதற்கப்பால் செல்வதையல்ல.

இதுவும் கூட முன்னால் தடுப்பு இருக்கும் பொது தான் பொருந்தும். தடுப்பு இல்லாமல் இருக்கும் போது எவராவது இந்த எல்லையை கடந்து சென்றால் செல்பவர் மீது குற்றமில்லை.

''Jazaakallaahu khairan''

www.tamilmuslim.com
கேள்வி: ''நபிகளாரின் காலத்தில் ஸஹாபாக்கள் தொழுதிருக்கின்றார்கள்'' எனக் கூறி தற்கொலையாளிக்கு தொழவைக்க முடியுமென வெளிநாட்டில் படித்து முடித்த ஆலிம் சொல்கிறார், இது சரியா?
பதில்: தற்கொலையாளிக்கு ஜனாஸாத் தொழுகை தொழ வைக்க முடியாது. இதனை பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.

''ஒரு மனிதர் நோயுற்றபோது அவர் திடுக்கத்துக்குள்ளானார். அவருடைய அண்டை வீட்டுக்காரர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ''அவர் இறந்து விட்டார்'' என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''அவர் இறந்தது உனக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள்.

''நான் அவரை (இறந்திருக்கக்) கண்டேன்'' என்று அம்மனிதர் கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''அவர் இறக்கவில்லை'' என்று சொன்னார்கள்.
பிறகு அம்மனிதர் (நோயாளியிடம்) வந்ததும் அவர் கூரான ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதைக் கண்டார். உடனே அம்மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ''அவர் இறந்து விட்டார்'' என்று தெரிவித்தார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

''அவர் இறந்தது உனக்கு எப்படித் தெரியும்?'' என்று கேட்டார்கள்.
அதற்கு அம்மனிதர் ''அவர் தன்னிடமிருந்த கூரிய முனையுள்ள ஈட்டியால் அறுத்துக் கொள்வதை நான் பார்த்தேன்.'' என்றார்.

''நீ பார்த்தாயா?'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்க அவர் ஆம் என்றார். ''அப்படியானால் நான் அவருக்குத் தொழுவிக்க மாட்டேன்'' என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் சமுரா ரலியல்லாஹு அன்ஹு நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1779 அபூதாவூத் 3185)
மேற்குறித்த ஹதீதிலிருந்து தற்கொலை செய்தவருக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடாத்தவில்லை என்பது தெளிவாகின்றது. அத்தோடு ''நான் தொழ வைக்கவும் மாட்டேன்'' என்று வேறு கூறுகின்றார்கள். மார்க்கத்தை மக்களின் விருப்பு வெறுப்பிற்கேற்ப வளைக்கும் சில உலமாக்கள் தெளிவான இந்த சட்டத்திற்கு மாற்றமாக நடந்து கொள்கின்றார்கள்.

''மார்க்க சட்டங்களை விளக்குகின்றோம்'' எனும் பெயரில் நபிகளார் மீதும் அவர்களது கண்னியமான தோழர்கள் மீதும் வீண் அபாண்டங்களை கூறுகின்றார்கள். ''நபிகளார் காலத்தில் தற்கொலையாளிக்கு ஸஹாபாக்கள் தொழுகை நடாத்தியதாகவோ அல்லது நபிகளார்தான் தொழுகை நடத்தாமல் மற்றவர்களை தொழுமாறு பணித்ததாகவோ ஹதீத் கிரந்தங்களில் எவ்வித ஆதாரங்களையும் காண முடியவில்லை.
ஒரு மார்க்க அறிஞர் அவர் வெளிநாட்டில் படித்து முடித்தவர் என்பதால் அவர் சொல்லும் ஃபத்வாக்கள் அனைத்தும் சரி என்று ஆகிவிடாது. மாறாக அவர் எங்கு படித்திருந்தாலும் பரவாயில்லை சொல்லும் சட்டம் அல்குர்ஆனிலிருந்தும் ஆதார பூர்வமான ஹதீஸ்களிலிருந்தும் மாத்திரம் முன்வைக்கப் பட்டாலே அதை முஸ்லிம்கள் அங்கீகரிக்க வேண்டும்.

ஒருவரின் பட்டம் பதவிகள் சத்தியத்தை தீர்மானிப்பவையல்ல. வெளிநாடுகளில் படித்து முடித்த எத்தனையோ மார்க்க அறிஞர்கள் ''தெள்ளத் தெளிவாக ஹராமாக்கப்பட்ட வரதட்சனையை வாங்க வில்லையா?'' சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நபிகளார் காலத்தில் தற்கொலையாளிக்கு நபித்தோழர்கள் தொழுகை நடத்தினார்கள் என்பது அப்பட்டமான பொய்யாகும். கொஞ்சம் கூட அல்லாஹ்வின் மீது அச்சமில்லாமல் தான் அந்த மௌலவி இப்படியொரு பொய்யை கூறியிருக்க வேண்டும்.

இவ்வாறான தவறான ஃபத்வாக்களைச் சொல்லும் ஆலிம்கள் இது தொடர்பில் ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் ஹதீஸ்களை ஒரு முறை பரிசீலித்து விட்டு தீர்ப்புக்களைச் சொன்னால் முஸ்லிம் சமூகத்திற்கு அது ஆரோக்கியமாக இருக்கும்.

சட்டங்களை அவர்கள் வெளியிடும்போது ஆதாரங்களை அவற்றுக்கு சமர்ப்பிக்கின்றார்களா? என கூர்ந்து கவனியுங்கள்.

''Jazaakallaahu khairan'' dharulathar.com
கேள்வி 1 : என் மனைவிக்கு ஒரு தங்கை இருக்கிறாள். திருமணமானவள். அவள் என்னிடம் பேசும் போதும், பழகும் போதும் ஹிஜாப் இல்லாமல் பழகுகிறாள். அவளுக்கு நான் மச்சான் என்கிற முறையில்(அண்ணனாக நினைத்து) தொட்டும் பழகுகிறாள். இரு மார்க்கத்தில் கூடுமா? கேள்வி 2 : எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். என்னுடன் தான் தங்குகிறான். 18 வயதை கடந்தவன் . என் மனைவி அவன் முன்பாக வரும்போது (அவனை அந்நிய ஆணாக நினைத்து) ஹிஜாப் அணிய வேண்டுமா? அல்லது அவள் சொந்த தம்பியிடம் பழகுவது போன்று பழகலாமா?

பதில்: இஸ்லாம் ஆண், பெண் உறவுகளில் மணமுடிக்கத் தடைசெய்யப்பட்ட உறவை ''மஹ்ரம்'' என்ற எல்லையாக விதித்துள்ளது. மஹ்ரம் இரத்தத் தொடர்பான உறவிலும், பால்குடி உறவிலும் ஏற்படும். மஹ்ரம் என்ற உறவில் வராதவர்கள் அன்னியர்களாகவே கருதப்படுவர். எல்லாக் காலத்திலும் திருமணம் செய்ய விலக்கப்பட்ட, தவறி மணம்முடித்திருந்தாலும் தெரிந்தபின் அது தாகாத உறவு என அத்திருமண உறவு இரத்து செய்யப்படும். - திருமணத்தில் இணைய முடியாத உறவே மஹ்ரம் என்று கொள்க! உங்கள் நால்வருக்குள்ளும் மஹ்ரம் உறவு இல்லை என்பதால் நீங்கள் உங்கள் மைத்துனி, உங்கள் தம்பி, உங்கள் மனைவிக்கிடையே அன்னியருக்கான சட்டத்தையே கடைபிடிக்க வேண்டும். இந்தியாவில் முஸ்லிம்கள் அண்ணன், தம்பி, மைத்துனர், மைத்துனி என கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்குப் பழகிவிட்டதால் விதார்ப்பமாகத் தெரியவில்லை. மஹ்ரம் உறவு இல்லாத இவர்கள் தனிமையில் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும். (அல்லாஹ் மிக அறிந்தவன்)

ஆதாரங்கள்:

பார்க்க, *இறைமறை வசனங்கள் 004:023, 024

(புகாரி, பாகம் 3, அத்தியாயம் 57, எண் 3105)

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள். *(ஒருமுறை) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் இருந்தார்கள். அப்போது ஒருவர் ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டிற்குள் செல்ல அனுமதி கேட்டுக் கொண்டிருக்கும் குரலை செவியுற்றேன்.

உடனே நான், 'இறைத்தூதர் அவர்களே! இதோ, ஒருவர் தங்கள் வீட்டினுள் நுழைய அனுமதி கேட்கிறார்" என்று கூறினேன்.

அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'அவரை இன்னார் - ஹஃப்ஸாவின் தந்தைக்குப் பால்குடிச் சகோதரர் - என்று கருதுகிறேன்; (ஒருவரின் வயிற்றில்) பிறப்பது எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத் தகாத) புனித உறவுகளாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் (ஒருவரிடம்) பால்குடிப்பதும் புனிதமானவையாக்கி விடும்" என்று கூறினார்கள்.

(புகாரி, பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5232)

உக்பா இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள் *இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் '(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள். Posted by:

www.nidur.info
பள்ளிவாசலில் விற்பதும் வாங்குவதும்

சமீர் அஹ்மத்

பள்ளிவாசலில் கவிதைகள் இயற்றுவதையும், விற்பதையும் வாங்குவதையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள் (நூல் திர்மிதி 296)

மற்றுமோர் ஹதீஸின்படி, பொது நலன் சார்ந்த பள்ளிவாசல் நிர்வாகம் சார்ந்த பொருட்களை விற்பதையும் வாங்குவதையும் இது கட்டுப்படுத்தாது.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ''நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு போரில் (பங்கு கொண்டுவிட்டுத் திரும்பி வந்து கொண்டு) இருந்தேன்; அப்போது எனது ஒட்டகம் களைத்து பலமிழந்துபோனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வந்து, ஜாபிரா? என்று கேட்டார்கள். நான், ஆம்! என்றேன். என்ன விஷயம்(ஏன் பின்தங்கிவிட்டீர்)? என்று கேட்டார்கள். என் ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கிவிட்டேன்! என்றேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கீழே இறங்கிதலைப் பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் எனது ஒட்டகத்தைத் தட்டி(எழுப்பி)னார்கள். பிறகு (உமது வாகனத்தில்) ஏறுவீராக!என்றார்கள். நான் (வாகனத்தில்) ஏறினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்களைவிட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீர் மணமுடித்துவிட்டீரா? என்று கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். கன்னியையா? கன்னிகழிந்த பெண்ணையா? என்று கேட்டார்கள். கன்னிகழிந்த பெண்ணைத்தான்!என்று நான் கூறினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள், கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கூடிக்குலாவி மகிழலாமே''! என்று கூறினார்கள்.நான், எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர்! அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்!என்றேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்கள், இப்போது ஊருக்கு செல்லப் போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்துகொள்வீராக! நிதானத்துடன் நடந்துகொள்வீராக! என்று கூறிவிட்டு பின்னர், உமது ஒட்டகத்தை எனக்கு விற்றுவிடுகிறீரா? என்று கேட்டார்கள். நான், சரி (விற்று விடுகிறேன்!) என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஒரு ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கிக் கொண்டார்கள். பிறகு, எனக்கு முன்பே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (மதீனாவுக்கு) சென்றுவிட்டார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்த போது அதன் நுழைவாயிலில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். இப்போது தான் வருகிறீரா? என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று சொன்னார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்கள் எனக்காக ஒரு ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எடை போட்டுச்சற்று தாரளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச்சென்றுவிட்டேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்! என்றார்கள். நான் (மனத்திற்குள்) இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டுவிடும்; அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை என்று கூறிக் கொண்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உமது ஒட்டகத்தை எடுத்துக்கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக்கொள்வீராக! என்று சொன்னார்கள். (புகாரி 2097)

பைத்துல் மால் பொது நிதியில் இருந்து ஒட்டகத்தை வாங்கியுள்ளதால் ஜமாஅத் நன்மை சமுதாய நன்மை சார்ந்த் வியாபாரம் பள்ளிவாசலில் செய்ய தடை இல்லை.

source: http://kadayanalluraqsha.com/?p=2880
லால்பேட்டை ''மன்பஉல் அன்வார் அரபிக் கல்லூரி''யின் ஃபத்வா

மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ள சக்திக்கு உட்பட்டு ஒருவருக்கொருவர் உதவி கேட்பதும் உதவி பெறுவதும் ஆகுமான செயலாகும்.

மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயலில், அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட வேண்டும்.

அது துஆவாகும்.

துஆ இபாதத் ஆகும்.

இபாதத் அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானது.

இறைத்தூதர்களையும், இறைநேசர்களையும் அழைத்து அவர்களிடம் உதவி கேட்பது அல்லாஹ்வுக்கு நிகராக அவர்களை ஆக்கியதாக ஆகிவிடும்.

எங்கிருநது யார் அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும் அத்தனை பேருடைய வேண்டுதலையும், ஒரே நேரத்தில் கேட்கும் சக்தியும், அதை அறியும் ஆற்றலும் அல்லாஹ்வின் பண்பாகும்.

இந்த பண்பில் அல்லாஹ்வுக்கு கூட்டாக எவரை ஆக்கினாலும் அது அந்த பண்பில் அல்லாஹ்வுக்கு ஷிர்க் வைத்ததாக ஆகிவிடும்.

இறந்துவிட்ட நல்லடியார்கள் தங்களை யார் எங்கிருந்து அழைத்தாலும் அந்த அழைப்பை கேட்கிறார்கள் என்று நம்புவது ஈமானை பறித்துவிடும். ஏனென்றால் ஆற்றல் அல்லாஹ்வுக்க மட்டுமே சொந்தமானது.

''வலிமார்களின் ஆன்மாக்கள் ஆஜராகின்றன - நம் கோரிக்கையை அறிகின்றன என்று ஒருவர் நம்பினால் அவர் காஃபிராகி விடுவார்'' என பஸாஸியா எனும் ஹனஃபி ஃபத்வா கிதாபில் உள்ளது.

மவ்லவி, லியாகத் அலீ மன்பஈ ஜமா அத்துல் உலமா மாத இதழ் - ஏப்ரல் 2010

இன்ஷா அல்லாஹ்… ஃபத்வாக்கள் தொடரும்.
ஒரு கிராமவாசி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரஸூலல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''கேளுங்கள்'' என்றார்கள்.

1 நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ? o நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்காரராகிவிடுவீர்கள்.

2 மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?
o தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.

3 நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?
o ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்

4 நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.
o ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.

5 நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன்!

o நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்.

6 நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ? o அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்

7 அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ?
o அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள்

8 ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி ?
o எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் இருங்கள்



9 துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ? o ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

10 முழுமையான ஈமானுடையவராக என்ன வழி ?
o நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்.

11 கியாமத்தில் அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன் ?
o குளிப்பு கடமையானவுடன் குளித்து விடுங்கள்

12 பாவங்கள் குறைய வழி என்ன ?
o அதிகமாக அல்லாஹ்விடன் பாவ மன்னிப்புத் தேடுங்கள்

13 கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன ?
o அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்

14 அல்லாஹ் என் குறைகளை மறைக்க வழி என்ன ?
o பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள்

15 உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது ?
o விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்


16 அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக வழி என்ன ? o அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள்



17 அல்லாஹ், ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக வழி என்ன ? o பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள்

18 நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன ?
o அல்லாஹ்வை பார்ப்பதாக என்ணி வணங்குங்கள் (அல்லது) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள்


19 பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய வஸ்த்துக்கள் என்ன ? o கண்ணீர், பலஹீனம், நோய்

20 நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக் கூடியது எது ?
o இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின் மீது பொறுமையாக இருப்பது

21 அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர வைக்கும் ?
o மறைவான நிலையில் தர்மம் செய்வது - சொந்த பந்தங்களை ஆதரிப்பது

22 எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது ?
o கெட்ட குணம் - கஞ்சத்தனம்

23 எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது ?
o நற்குணம் - பொறுமை - பணிவு

24 அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன ?
o மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள்

( ஆதாரம் : முஸ்னது அஹ்மது - கன்ஸுல் உம்மால் )


கேள்வி : முஸ்லிம்களில் பலர் அடிப்படைவாதிகளாகவும் - பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?.

பதில் : உலக விஷயங்கள் பற்றி விவாதிக்கும் பொழுதும் மதங்களை பற்றி விவாதிக்கும் பொழுதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முஸ்லீம்கள் அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் சுட்டிக்காட்டப் படுகின்றனர்.

இஸ்லாத்தின் எதிரிகள் உலகத்தில் உள்ள எல்லா ஊடகங்களின் வாயிலாகவும் முஸ்லீம்களை அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் தவறாக அடையாளம் காண்பிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

மேற்படி தவறான தகவல் மற்றும் தவறான பிரச்சாரம் - முஸ்லீம்கள் தாக்கப்படுவதற்கும் தவறாக விமரிசிக்கப்படுவதற்கும் காரணங்களாக அமைந்து விடுகின்றன. உதாரணத்திற்கு அமெரிக்காவின் ஒக்லகாமா நகரில் நடந்த வெடி குண்டு விபத்தின் பின்னனியில் "மத்திய கிழக்கு நாடுகளின்" கைவரிசை இருக்கிறது என அமெரிக்காவின் அனைத்து ஊடகங்களும் போட்டி போட்டுக்கொண்டு அறிவிப்பு செய்தன. ஆனால் அந்த வெடிகுண்டு வெடிக்க காரணமாயிருந்த குற்றவாளி அமெரிக்காவின் ஆயுதபடையைச் சார்ந்த ஒருவன்தான் என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்து முஸ்லீம்கள் மீது சுமத்தப்படும்; "அடிப்படைவாதம்" பற்றியும் - "தீவிரவாதம்" பற்றியும் நாம் ஆராய்வோம்.

1. அடிப்படைவாதத்திற்கான விளக்கம்:

தான் சார்ந்திருக்கும் கொள்கையை மன உறுதியுடன் பற்றிப் பிடித்து அந்த கொள்கையை தன் வாழ்க்கையில் மிகச் சரியாக நடைமுறைபடுத்துபவனுக்கு அடிப்படைவாதி என்று பெயர். உதாரணத்திற்கு மருத்துவர் ஒருவர் சிறந்த மருத்துவர் என பெயர் பெற வேண்டுமெனில் - அவர் சார்ந்திருக்கும் மருத்துவ கொள்கையின் அடிப்படையை அறிந்து - அறிந்த மருத்துவ கொள்கையை பின்பற்றி - அதை நடைமுறைபடுத்தினால் அவர் ஒரு சிறந்த மருத்துவர் என்று அழைக்கப்படுவார்.

இதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் - மருத்துவதுறையில் அவர் ஒரு அடிப்படைவாதி. கணிதத் துறையில் ஒருவர் சிறந்த கணித மேதை என பெயர் பெற வேண்டுமெனில் - அவர் சார்ந்திருக்கும் கணிதக் கொள்கையின் அடிப்படையை அறிந்து - அவர் அறிந்த கணிதக் கொள்கையை பின்பற்றி - அதை நடைமுறைபடுத்தினால் அவர் ஒரு சிறந்த கணித மேதை என்று அழைக்கப்படுவார்.

இதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் - கணிதத்துறையில் அவர் ஒரு அடிப்படைவாதி. . அறிவியல் துறையில் ஒருவர் சிறந்த அறிவியல் மேதை என பெயர் பெற வேண்டுமெனில் - அவர் சார்ந்திருக்கும் அறிவியல் கொள்கையின் அடிப்படையை அறிந்து - அறிந்த அறிவியல் கொள்கையை பின்பற்றி - அதை நடைமுறைபடுத்தினால் அவர் ஒரு சிறந்த அறிவியல் மேதை என்று அழைக்கப்படுவார். இதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் - அறிவியல் துறையில் அவர் ஒரு அடிப்படைவாதி.

2. எல்லா அடிப்படைவாதிகளும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல.

எல்லா அடிப்படைவாதிகளுக்கும் ஒரே வர்ணம் ப+சக் கூடாது. எல்லா அடிப்படைவாதிகளும் நல்லவர்கள் என்றோ அல்லது கெட்டவர்கள் என்றோ வகைப்படுத்த முடியாது. அவர்கள் சார்ந்திருக்கும் துறை அல்லது அவர்களால் செய்யப்படும் செயல் ஆகியவற்றைக் கொண்டே அவர்கள் நல்ல அடிப்படைவாதியா அல்லது கெட்ட அடிப்படைவாதியா என்பதை வகைப்படுத்த வேண்டும்.

கொள்ளையடிக்கும் - சிறற்த கொள்ளைக்காரன் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிப்பதால் அவனை ஒரு கெட்ட அடிப்படைவாதி என்று கொள்ளலாம். அதே சமயம் ஒரு சிறந்த மருத்துவர் சமுதாயத்திற்கு பயனுள்ளவராக இருப்பதால் அவர் ஒரு நல்ல அடிப்படைவாதி மருத்துவர் என கொள்ளலாம்.

3. நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்.

இறைவனி;ன் மாபெரும் கிருபையினால் - நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி. இஸ்லாத்தின் அடிப்படை விதிகளை அறிந்து - அறிந்த விதிகளை பின்பற்றி - அந்த விதிகளை எனது வாழ்க்கையிலும் நடைமுறைபடுத்துகிறேன். ஓரு உண்மையான இஸ்லாமியன் தான் ஒரு அடிப்படைவாதியாக இருப்பதில் ஒருபோதும் வெட்கமுற மாட்டான்.

நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி என்பதில் பெருமை கொள்கிறேன். ஏனெனில் - இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் அனைத்தும் உலகம் முழுவதுமுள்ள மனித குலத்திற்கு பயன் தரக் கூடியவை. இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் எதுவுமே மனித குலத்திற்கு தீழங்கிழைப்பவையோ அல்லது மனித குலத்திற்கு எதிரானவையோ அல்ல. இஸ்லாத்தின் செயல்பாடுகள் சரியானவை அல்ல. மாறாக தவறானவை என்று ஏராளமானபேர் இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை கொண்டிருக்கின்றனர்.

இந்த தவறான எண்ணம் ஏனெனில் - இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் அறைகுறையாக அறிந்து வைத்திருப்பதே காரணமாகும். ஓருவர் இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்களை திறந்த மனதுடனும் - மிகக் கவனத்தோடும் பகுத்தாய்வார் எனில் இஸ்லாம் தனி மனிதனுக்கும் - மொத்த மனித சமுதாயத்திற்கும் - முழு பயனுள்ளது என்ற உண்மையை அறிவதிலிருந்து தவற முடியாது.

4. "அடிப்படைவாதத்திற்கு" டிக்ஷ்னரி தரும் விளக்கம்:

அடிப்படைவாதத்திற்கு வெப்ஸ்டர் டிக்ஷ்னரி தரும் விளக்கம் என்னவென்றால் "பாதுகாக்கும் கொள்கையை" அடிப்படையாக கொண்டு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் தோன்றிய இயக்கம் என்பதாகும். நவீன நாகரீகத்தை எதிர்த்தும் பைபிளின் கொள்கைகளான - நம்பிக்கை மற்றும் ஒழுக்கங்கள் மட்டுமல்லாது - வரலாற்று உண்மைகளையும் பைபிளிள் உள்ளபடியே நிலை நிறுத்த வேண்டியும் தோன்றிய இயக்கமாகும். "கடவுளால் எழுத்து வடிவில் அருளப்பட்ட கட்டளைகளே பைபிள்" என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்கி வரும் இயக்கமாகும். எனவே ஆரம்ப காலங்களில் அடிப்படைவாதம் என்றால் மேற்குறிப்பிட்ட கொள்கைகளை அடிப்படையக கொண்டு இயங்கி வந்த இயக்கம் என்று பொருள் கொள்ளப்பட்டது.

அடிப்படைவாதத்திற்கு ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரி தரும் விளக்கம் என்னவெனில் "மதங்களின் தொன்மையான அல்லது அடிப்படையான கோட்பாடுகளை நெறி பிறழாது நடைமுறைபடுத்துவது - குறிப்பாக இஸ்லாமிய மத கோட்பாடுகள்" என்பதாகும்.

இன்றைக்கு ஒரு மனிதன் "அடிப்படைவாதம்" என்ற வார்த்தையை உபயோகிக்கும்போது உடனே அவனது எண்ணத்தில் இஸ்லாமியன் - ஒரு பயங்கரவாதியாக தோன்றிவிடுகிறான்.

5. ஒவ்வொரு முஸ்லீமும் ஒரு பயங்கரவாதியாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு முஸ்லீமும் ஒரு பயங்கரவாதியாக இருக்க வேண்டும். பயத்துக்கு காரணமானவன் பயங்கரவாதி. காவல்துறையை பார்த்தவுடன் கொள்ளையடிப்பவர்கள் பயப்படுகின்றனர். எனவே கொள்ளையருக்கு காவல் துறையினர் பயங்கரவாதிகள். அதேபோல திருட்டு கொள்ளை மற்றும் வல்லுறவு போன்ற சமுதாயத்தின் குற்றங்களைச் செய்யும் ஒவ்வொரு குற்றவாளிக்கும் - ஒவ்வொரு முஸ்லீமும் ஓர் பயங்கரவாதியாக தோன்ற வேண்டும்.

சமுதாயக் குற்றவாளிகள் - ஒரு முஸ்லீமை காணும்போதெல்லாம் பயப்படவேண்டும். சமுதாயத்தில் உள்ள எல்லா மனிதர்ளுக்கும் மத்தியில் தீங்கு இழைப்பவனுக்கு பயங்கரவாதி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவது உண்மை. ஆனால் ஒரு உண்மையான முஸ்லிம் சமுதாயத்தில் குறிப்பிட்டவர்களுக்கு - அதாவது சமுதாய குற்றவாளிகளுக்கு - மாத்திரம் பயங்கரவாதியாக தோன்ற வேண்டுமே தவிர சமுதாயத்தின் அப்பாவி பொதுமக்களுக்கு அல்ல. மாறாக ஒரு முஸ்லீம்- அப்பாவி பொதுமக்களுக்கு மத்தியில் அமைதியை நிலைநாட்டுபவனாக இருக்க வேண்டும்.

6. மனிதர்கள் செய்கிற ஒரே வகையான செயலுக்கு - "பயங்கரவாதிகள்" என்றும் "விடுதலைப் போராட்ட வீரர்கள்" என்றும் இரண்டு வகையான முத்திரைகள்.

வெள்ளையர்களால் ஆளப்பட்டுக் கொண்டிருந்த இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் - இந்திய சுதந்திரத்திற்காகப் போராடியவர்களை பயங்கரவாதிகள் என பிரிட்டிஷ் அரசாங்கம் முத்திரை குத்தியது. ஆனால் அதே வீரர்கள் இந்தியர்களால் - சுதந்திர போராட்ட வீரர்கள் என அழைக்கப் பட்டார்கள். இவ்வாறு ஒரே வகையான மனிதர்கள் - அவர்கள் செய்த ஒரே வகையான செயலுக்கு இரண்டு வகையான முத்திரைகள் குத்தப்பட்டார்கள்.

அவர்கள் "பயங்கரவாதிகள்" என்று ஒரு தரப்பினராலும் - "சுதந்திரப் போராட்ட வீரர்கள்" என்று மறு தரப்பினராலும் அழைக்கப்பட்டார்கள். இந்தியாவை ஆள பிரிட்டிஷ்க்கு உரிமை இருக்கிறது என்ற கருத்தைக் கொண்டவர்கள் அவர்களை "பயங்கரவாதிகள்" என்று அழைத்தனர். இந்தியாவை ஆள பிரிட்டிஷ்க்கு உரிமை இல்லை என்ற கருத்தைக் கொண்டவர்கள் அவர்களை "சுதந்திரப் போராட்ட வீரர்கள்" என்று அழைத்தனர்.

எனவே ஒரு மனிதனைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால் - அவனது கருத்தையும் அறிவது அவசியம். இரண்டு தரப்புகளும் தீர விசாரிக்கப்பட்டு - விசாரணையின் முடிவுகள் அலசி ஆராயப்பட்டு - அதற்கான காரண காரியங்கள் மற்றும் செயலுக்கான நோக்கம் அனைத்தையும் அறிந்த பின்புதான் அந்த மனிதனைப்பற்றி ஒரு நிலையான முடிவு க்கு வரவேண்டும்.

7. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்.

குறைவதுடன் "இஸ்லாம்" என்ற வார்த்தை "ஸலாம்" என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ஸலாம் என்றால் அமைதி என்று பொருள். இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் - இஸ்லாத்தை பின்பற்றுவோர் அமைதியை கடைபிடிக்குமாறு போதிப்பதுடன் உலகம் முழுவதும் அமைதியை நிலை நாட்டுமாறும் போதிக்கிறது.

இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாம் அமைதியை கடைபிடிப்பதில் ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு அடிப்படைவாதியே. சமுதாயத்தில் அமைதியையும் - நீதியையும் நிலைநாட்டுதல் வேண்டி - ஒவ்வொரு இஸ்லாமியனும் - சமுதாயக் கொடுமைகளுக்கு எதிரான ஒரு தீவிரவாதியாக இருக்க வேண்டும்.

கேள்வி : இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்? பதில்: இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டிருக்காமல் இருந்தால் - உலகம் முழுவதிலும் இஸ்லாத்திற்கு ஆதரவாக இத்தனை கோடிக்கணக்கானவர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்பது சில மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் இயற்கையாகவே அறிவுபூர்வமான மார்க்கம். இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில் விரைவாக வேறூன்றியது என்பதை நான் மேலும் எடுத்து வைக்க போகும் விபரங்கள் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

1. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள் இஸ்லாம் என்ற வார்த்தை "ஸலாம்" என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. "ஸலாம்" என்றால் அமைதி என்று பொருள். ஸலாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவருடைய விருப்பம் அனைத்தையும் இறைவனுக்காகவே விரும்புவது என்ற மற்றொரு பொருளும் உண்டு. இவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் என்பது அமைதியான மார்க்கமாகும்.

2. சில வேளைகளில் அமைதியை நிலைநாட்ட நிர்ப்பந்தம் அவசியமாகிறது.

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் அமைதியையும் - இணக்கத்தையும் நடைமுறைப் படுத்த ஆதாரவாக இருப்பதில்லை. உலகில் உள்ளவர்களில் சிலர் தங்களது சுயலாபம் கருதி - குழப்பம் விளைவிப்பதையே விரும்புகின்றனர். இது போன்ற வேளைகளில் - உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

எனவேதான் அமைதியை நிலைநாட்டவும் - சமுதாய எதிரிகளை அடக்கவும் - குற்றவாளிகளை தண்டிக்கவும் காவல்துறை என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ளது. இஸ்லாம் அமைதியை விரும்பும் அதே வேளையில் எங்கெல்லாம் அநியாயம் நடக்கின்றதோ - அந்த அநியாயங்களை எதிர்த்து இஸ்லாமியர்களை போராட வலியுறுத்துகிறது. அநியாயத்தை எதிர்த்து போராட வேண்டிய நேரங்களில் - நிர்ப்பந்தம் அவசியமாகிறது. அமைதியையும் - நீதியையும் நிலை நாட்ட மாத்திரமே நிர்ப்பந்திக்கலாம் என இஸ்லாமிய மார்க்கம் அனுமதியளிக்கிறது.

3. வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரியின் கருத்து.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்பது தவறான கருத்து என்பதை நீரூபிக்க -பிரபல வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ'லியரி எழுதிய "இஸ்லாம் கடந்து வந்த பாதை" என்ற புத்தகத்தின் 8வது பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

குறைவதுடன் "இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கருத்து மீண்டும் - மீண்டும் உலகிற்கு தெரிவிக்கப் பட்டுக் கொண்டிருப்பது - வரலாற்று ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டக் கட்டுக்கதையேயன்றி வேறொன்றும் இல்லை என்பதை தெளிவான வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகின்றது."

4. ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி 800 ஆண்டுகளாக இருந்தது.

ஸ்பெயின் நாட்டை இஸ்லாமியர்கள் 800 ஆண்டுகளாக அரசாட்சி செய்தனர். ஸ்பெயின் நாட்டு முஸ்லிம்கள் எவரும் - ஸ்பெயின் நாட்டில் உள்ள மாற்று மதத்தவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறச் சொல்லி வாள் கொண்டு நிர்ப்பந்திக்கவில்லை. ஆனால் பின்னால் வந்த கிறிஸ்தவர்கள் சிலுவைப் போர் என்ற பெயரில் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தனர். இன்றைக்கு ஸ்பெயினில் இறைவனை தொழுவதற்கு அழைக்கவென ஒரு முஸ்லிம் கூட இல்லை.

5. அரேபியர்களில் 1 கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள்.

கடந்த 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்கள் ஆண்டு வருகின்றனர். இடையில் சில ஆண்டுகள் - பிரிட்டிஷ்காரர்களும் - சில ஆண்டுகள் பிரெஞ்சுகாரர்களும் அரபு தீபகற்பத்தை ஆண்டனர். ஆனால் மொத்தத்தில் 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்களே ஆட்சி செய்து வருகின்றார்கள்.

இருப்பினும் - இன்று கூட - 1கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். இஸ்லாமியர்கள் வாளைக் கொண்டு நிர்ப்பந்தித்து இருந்தால் - இன்றைக்கு அரபு தீபகற்பத்தில் ஒருவர் கூட கிறிஸ்துவராக இருக்க மாட்டார். அனைவரும் முஸ்லிம்காகத்தான் இருந்திருப்பர்.

6. இந்திய மக்கள் தொகையில் எண்பது சதவீத மக்கள் முஸ்லிம் அல்லாதோர்களே!.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். அவர்கள் விரும்பியிருந்தால் - முஸ்லிம் அல்லாதோர்களை - தங்களது ஆட்சி பலம் மற்றும் படை பலம் கொண்டு இஸ்லாமியர்களாக மாற்றியிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு இந்தியாவின் மக்கள் தொகையில் எண்பது சதவீதம் பேர் முஸ்லிம் அல்லாதோர்கள்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் ண்பது சதவீத முஸ்லிம் அல்லாதோர்களே - இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அல்ல என்பதற்கு சாட்சிகளாவர்.

7. இந்தோனேஷியாவும் - மலேசியாவும்.

இன்றைக்கு உலகில் உள்ள நாடுகளில் இந்தோனேஷியாவும் - மலேசியாவும்தான் அதிகமான முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள். எந்த இஸ்லாமிய படைகள் இந்தோனேஷியாவிற்கும் - மலேசியாவுக்கும் சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

8. ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகள்
அதே போன்று ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் இஸ்லாம் துரிதமாக பரவி இருக்கிறது. எந்த இஸ்லாமிய படைகள் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளுக்கு சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

9. இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.

எந்த வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது?. அப்படி ஒரு வாள் இருந்தாலும் - இஸ்லாத்தை பரப்புவதற்காக அந்த வாளை இஸ்லாமியர்கள் பயன் படுத்தியிருக்கமுடியாது. ஏனெனில் கீழ்க்காணும் அருள்மறை குர்ஆனின் வசனம் அதனை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது.

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமும் இல்லை: வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. (அல்-குர்ஆன் 02வது அத்தியாயம் - 256வது வசனம்)

10. அறிவார்ந்த கொள்கை என்னும் வாள்:

அறிவார்ந்த கொள்கை என்பதுதான் அற்த வாள். மனிதர்களின் எண்ணங்களையும் - உள்ளங்களையும் கொள்ளை கொண்டது அறிவார்ந்த கொள்கை என்ற அந்த வாள். அருள்மறை குர்ஆனின் 16வது அத்தியாயத்தின் 125வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது.

"(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!. அவர்களிடத்தில் மிக அழகிய முறையில் நீர் தர்க்கிப்பீராக!. மெய்யாக உம் இறைவன் அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்."

11. 1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டுவரை கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக மதங்களின் வளர்ச்சி.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் (1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை) உலகில் உள்ள முக்கிய மதங்களின் வளர்ச்சி பற்றிய புள்ளிவிபத்தை 1986 ஆம் ஆண்டு ர்Pடர்ஸ் டைஜஸ்ட் பத்திக்கையின் ஆண்டு மலரான "அல்மனாக்" பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. மேற்படி புள்ளிவிபரத்தை உள்ளடக்கிய கட்டுரை "தி ப்ளெய்ன் டிரத்" என்ற ஆங்கில பத்திரிக்கையிலும் வெளியாகியிருந்தது.

உலக மதங்களில் அதிகமான வளர்ச்சி அடைந்து முதலிடத்தை பிடித்திருப்பது இஸ்லாமிய மார்க்கமே. அதனுடைய வளர்ச்சி கடந்த 50 ஆண்டுகளில் 235 சதவீதமாக இருந்தது. கிறிஸ்துவ மார்க்கம் 47 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது. லட்சக் கணக்கானவர்களை இஸ்லாத்தில் மாற்ற வேண்டி இந்த நூற்றாண்டில் எந்த போர் நடந்தது?.

12. அமெரிக்காவிலும் - ஐரோப்பாவிலும் இஸ்லாமிய மார்க்கம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது:

இன்று அமெரிக்காவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். அதே போல் ஐரோப்பாவிலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். எந்த வாள் மேற்கத்தியர்களை நிர்ப்பந்தப்படுத்தி மிக அதிக அளவில் இஸ்லாத்தில் இணையச் செய்தது?.

13. டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன்
குறைவதுடன் "ஒருநாள் அரபுலகத்தின் கையில் அணுஆயுதம் சென்றுச் சேரும் என்று கவலைப்படுபவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரபகத்தில் பிறந்த அன்றே இஸ்லாம் என்ற அணுகுண்டு இந்த உலகத்தில் போடப்பட்டாகி விட்டது என்பதை உணரத் தவறிவிட்டார்கள்." என்று டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன் சரியாகத்தான் சொன்னார்.