Post image for பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவம்

அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவமாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற)
எதனையும் தான் நாடி யோருக்கு மன்னிப்பான். (4:48,116)

அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதமின் மகனே! என்னிடம் ஆதரவு வைத்து
என்னை நீ அழைத்தால் நீ செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்து விடுகிறேன், நான்
எதையும் பொருட்படுத்த மாட்டேன். ஆதமுடைய மகனே! நீ செய்த பாவங்கள் வானம் நிரம்ப
இருந்தாலும் பிறகு என்னிடம் நீ மன்னிப்புக் கோரினால் நான் உன்னை மன்னித்து விடுகிறேன்.

நான் எதை யும் பொருட்படுத்த மாட்டேன். நீ இப்பூமி நிரம்ப பாவங்கள்
செய்து எனக்கு எதையும் இணை வைக்காமல் என்னை சந்தித்தால் இப்பூமி நிறைய மன்னிப்பை
உனக்கு வழங் குவேன். அறிவிப்பவர்:அனஸ்(ரழி) நூல்:திர்மிதி


சிலர் அல்லாஹ்வின் அருள் குறித்து நம்பிக்கை இழந்து விடுகின்றனர். காரணம் அதிகம்
பாவம் செய்ததனால் அல்லது ஒரு முறையோ பல முறையோ தவ்பா செய்து விட்ட பிறகு மீண்டும்
பாவம் செய்து விடுவதனால் அல்லாஹ் நம்மை மன்னிக்க மாட்டான் என்று கருதிக் கொண்டு
தொடர்ந்து பாவங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். தவ்பா செய்து அல்லாஹ்விடமே திரும்பி
விடு வதை விட்டுவிடுகிறார்கள். இது மாபெரும் தவறாகும். ஏனென்றால் அல்லாஹ்வின் அருள்
குறித்து நம்பிக்கை இழப்பவர்கள் காஃபிர்கள் தாம்.
அல்லாஹ் கூறுகிறான்: தங்களுக்குத் தாங் களே அநீதி இழைத்துவிட்ட எனது அடியார் களே!
அல்லாஹ்வின் அருளில், அன்பில் நம் பிக்கை இழைத்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ்
அனைத்துப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப் பவனும்
கருணையாளனுமாவான். (39:53) மேலும் கூறுகிறான்: அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை
இழப்பவர்கள் அவனை நிராகரித்த மக்களே! (12:87)
அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ் வின் கருணை-அருள் நன்னடத்தையுள்ள மக்க ளுக்கு
அருகில் இருக்கிறது. (7:56)
அடக்கத்தலங்களை வணங்குவது “ஷிர்க்”
இறந்துவிட்ட இறைநேசர்களால் நமது தேவைகளை நிறைவேற்றவோ, சிரமங்களை நீக்கவோ முடியும்
என்று நம்புவது, அவர்களிடம் உதவி கோரி பிரார்த்திப்பது, பாதுகாப்புத் தேடுவது,
அவர்களைப் பரிந்துரைக்கச் சொல்வது, அவர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேட்பது
போன்ற செயல்கள் அனைத்தும் “ஷிர்க் ஆகும். ஏனென்றால், இவ்வகையான செயல்கள் அனைத்தும்
மார்க்கத்தில் வணக்க வழிபாடுகளாகக் கருதப்படுகின்றன. வணக்க வழிபாடுகளை அல்லாஹ்
தனக்கு மட்டுமே செய்ய வேண்டுமென அல்குர்ஆனின் பல வசனங்களில் தெளிவாகக்
கட்டளையிடுகின்றான். (17:23, 98:5)
அல்லாஹ்வின் தூதர்களையோ, (அவ்லியாக்கள்) இறைநேசர்களையோ சிபாரிசுக்காக அழைப்பதும்
துன்பங்களிலிருந்து விடுதலை பெற அவர்களிடம் பிரார்த்திப்பதும் “ஷிர்க்” ஆகும்.
(27:62, 39:44, 2:255)
சிலர் உட்காரும்போதும், எழும்போதும் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து முறையிடுவதை
வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
உதாரணமாக: யா முஹம்மது, யாமுஹ்யித்தீன் என்றெல்லாம் அழைக்கிறார்கள். இவ்வாறு
அழைப்பது “ஷிர்க் ஆகும். இதைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான். (7:194, 13:14)
அடக்கத்தலத்தை(கப்ரை) வணங்கும் சிலர் அதைச் சுற்றி வலம் வருகிறார்கள். அங்குள்ள
தூண்களையும், சுவர்களையும் தொட்டுத் தடவுகிறார்கள்; முத்தமிடுகிறார்கள்; அதன் மண்ணை
எடுத்துப் பூசிக் கொள்கிறார்கள்; ஸஜ்தா செய்கிறார்கள், அங்குப் பயத்துடனும்
பணிவுடனும் நிற்கிறார்கள். தங்கள் தேவையை முறையிட்டு, அதை நிறைவேற்றும்படிக்
கோருகிறார்கள்.
சிலர் உடல் நலத்தையும் குழந்தைப் பாக்கியத்தையும் கோருகிறார்கள். சிலர்
“”யாஸய்யிதீ! தொலைவான ஊரிலிருந்து உங்களை நாடி வந்துள்ளேன். என்னை நிராசையாக்கி
விடாதீர்கள்’ என்றெல்லாம் கூறுகிறார்கள்.
இவர்களைக் கண்டித்தே அல்லாஹ் கூறுகிறான். (46:5)
சிலர் கப்ருகளுக்குச் சென்று அங்கு அடங்கி இருப்போருக்காக மொட்டை அடிப்பது.
சிலர் நன்மையை நாடி கப்ருகள், தர்க்காக்களுக்குப் பயணிக்கிறார்கள்.
சிலர் இறை நேசர்கள் இவ்வுலகில் ஆதிக்கம் செலுத்தி, உலகின் இயக்கத்தில் பங்கு
கொள்வதாகவும், அவர்களால் நன்மை, தீமை அளிக்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.
இவர்களைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான். (10:107)
அல்லாஹ் அல்லாதவர்களுக்கு நேர்ச்சை செய்வது “ஷிர்க்”
நேர்ச்சை என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய வணக்கமாகும். அதை அவனுக்கே செய்ய
வேண்டும்.
சிலர் “கப்ருக்களுக்கு விளக்கேற்றுகிறோம்; பத்தி கொளுத்துகிறோம்; காணிக்கை
செலுத்துகிறோம் என்றெல்லாம் நேர்ச்சை செய்வது “ஷிர்க்
நேர்ச்சையும் வணக்கமே என்பதற்குப் பின் வரும் வசனங்கள் சான்றளிக்கின்றன.
அல்லாஹ் கூறுகின்றான் : (76:7, 2:270)
அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுவது “ஷிர்க்
அல்லாஹ் கூறுகின்றான் (108:2)
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “”அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுபவனை
அல்லாஹ் சபிக்கின்றான்” (முஸ்லிம்)
அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுவது குற்றம்.
அல்லாஹ் அல்லாதவர்களின் பெயரைக் கூறுவது குற்றம்.
சிலர் வீட்டையோ நிலத்தையோ வாங்கினால் அல்லது கிணறு தோண்டுவதாக இருந் தால் அங்குள்ள
ஜின்(பேய், பிசாசு)களின் தீங்குகளை விட்டுப் பாதுகாப்புத் தேடுவதற் காகப் பிராணிகளை
அறுத்துப் பலியிடுகிறார் கள். இதுவும் “ஷிர்க்” ஆகும்.
அல்லாஹ் விலக்கியதை ஆகுமாக்குவது, அல்லாஹ் ஆகுமாக்கியதை விலக்கிக் கொள்வது “ஷிர்க்
; அல்லாஹ் கூறுகின்றான் : 9:31
அதி இப்னு ஹாத்திம்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் இவ்வசனத்தை ஓதிக்
காட்டியபோது “கிறித்தவர்கள் தங்கள் பாதிரிகளையும், சன்னியாசிகளையும் வணங்கவில்லையே’
என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம்! எனினும் அல்லாஹ் விலக்கியதை
பாதிரிகள் ஆகுமாக்கி வைக்கும்போது அதை மற்றவர்களும் ஆகுமானதாக எண்ணுகிறார்கள்.
அல்லாஹ் ஆகுமாக்கியதை அப்பாதிரிகள் விலக்கும்போது அதை மக்கள், விலக்கப்பட்டதாக
ஏற்றுக் கொள்கிறார்கள். எனவே, இதுதான் கிறித்தவர்கள் தங்களது பாதிரிகளுக்கும்
துறவிகளுக்கும் செய்த (இபாதத்) வணக்கமாகும்” என்று கூறினார்கள். (ஸுனனுத் திர்மிதி)
இந்த 9:31 இறைக் கட்டளை மற்றும் ஹதீஸ் படி அல்லாமா, ஷேக், ஹஜ்ரத் என்று நம்பி அவர்
கள் கூறும் சுய விளக்கங்களை அப்படியே எடுத்து நடப்பதும் “”ஷிர்க்’ ஆகும்.
மேலும் இம்மதகுருமார்கள் குர்ஆன், ஹதீஸ் ஆதாரமில்லாமல் மனம் போன போக்கில் ஹராம்,
ஹலால் என ஃபத்வா கொடுப்பது 42:21 இறைவாக்குப்படி தங்களையே அல்லாஹ்வாக்கிக் கொள்ளும்
மிகப் பெரும் ஷிர்க் ஆகும்.
“தற்கொலை’ செய்து கொள்வது “ஷிர்க்’ அல்லாஹ் கூறுகிறான். (4:29, 4:30)
நமக்கு உயிர் கொடுப்பவனும் அவனே, உயிரை எடுப்பவனும் அவனே. எனவே ஒருவன் தற்கொலை
செய்து கொள்வது, அல்லாஹ்விற் குரிய அதிகாரத்தை எடுத்துக் கொள்வது போல் ஆகும். எனவே
“தற்கொலை செய்து கொள்வதும் “இணைவைத்தலை’ சேர்ந்ததேயாகும்.
அல்லாஹ் அனுமதிக்காதவற்றில் பலன்களைத் தேடுவது “ஷிர்க்”
சிலர் தாயத்து, கயிறு, வளையம் போன்றவற்றை ஆபத்து நீக்குவதற்கும் அது வராமல்
தடுத்துக் கொள்வதற்கும் அணிவது “ஷிர்க்்கில்’ உட்பட்டதாகும். அல்லாஹ் கூறுகிறான்.
(12:106, 10:107)
நபி(ஸல்) அவர்கள் ஒருவரை அவர் கையில் பித்தளை வளையம் இருப்பதைக் கண்டு இது என்ன?
என்று வினவினார்கள். அதற்கு அம் மனிதர் வாஹினாவின்(கழுத்தில் கையில் உண்டாகும்
நோயின்) காரணமாக அணிந்துள்ளேன்” என்று பதில் கூறினார். அது சமயம் நபி(ஸல்) அவர்கள்
அவரை நோக்கி “நீர் அதை கழற்றி விடும், இது உமக்கு பலகீனத்தைத் தான் அதிகப்படுத்தும்.
இந் நிலையில் நீர் மரணித்தால் நிச்சயமாக நீர் வெற்றி பெறவே மாட்டீர்” என்று
கூறினார்கள்.
இம்ரான் இப்னு ஹுசைன்(ரழி) நூல் : முஸ்னத், அஹ்மத்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தாவீஸை தொங்கவிட்டா(அணிந்தா)ரோ அவர் “ஷிர்க்’
செய்தவராவார்.” (நூல்: அஹமது)
பகட்டுக்காக வணங்குவது “ஷிர்க்”
நற்செயல்கள் அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி மனத்தூய்மையடன் செய்யப்பட வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் பகட்டுக்காக (பிறர் பார்த்து புகழ வேண்டுமென்பதற் காக) செய்வது
“ஷிர்க்”ஆகும்.
அல்லாஹ் கூறுகிறான் : (4:142)
நபி(ஸல்) கூறினார்கள்:
பிறர் புகழ்வதற்காக எவன் வணங்குகிறானோ அவனை அல்லாஹ் தண்டிப்பான். பகட்டுக்காக எவன்
வணங்குகிறானோ அவனையும் அல்லாஹ் தண்டிப்பான். (புகாரி, முஸ்லிம்)
ஒருவர் ஒரு நற்செயலை அல்லாஹ்வின் திருப்தியையும் மக்களின் புகழ் மொழிகளையும் நாடிச்
செய்வாரேயானால் அவரின் அந்த நற்செயல் வீணானதே!
அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “”இணை வைப்பவர்களின் இணையை விட்டு
நான் முற்றிலும் தேவையற் றவன். எவன் தனது நற்செயலில் என்னுடன் பிறரை இணைத்துக்
கொண்டானோ அவனை அவனது இணைவைக்கும் செயலுடன் விட்டு விடுகிறேன். (முஸ்லிம்)
ஒருவர் ஒரு நற்செயலை அல்லாஹ்வுக்காகத் தொடங்குகிறார். பிறகு அவரது உள்ளத்தில் பகட்டு
எண்ணம் ஏற்படுகிறது. உடனே அவர்அந்தத் தீய எண்ணத்தை மனதிலிருந்து அகற்றிட முயற்சி
செய்வாரெனில் அவரது நற்செயல் வீணாகிவிடாது.
ஆனால் அந்தத் தவறான எண்ணம் வரும் போது அதைத் தடுப்பதற்கு முயற்சி செய்யாமலிருந்தால்
அந்த நற்செயல் வீணாகிவிடும்.
சகுனம் பார்ப்பது “ஷிர்க்”
அறியாமைக்கால அரபியர்கள் ஏதேனும் ஒரு செயலைச் செய்ய நாடினால் ஒரு பறவையை பிடித்து
அதைப் பறக்க விடுவார்கள். அது வலப் பக்கமாகப் பறந்தால் அதை நல்ல சகுனமாக நம்பி
அந்தக் காரியத்தைச் செய்வார்கள். இடப் பக்கம் பறந்தால் அதைத் துர்ச்சகுணம் என நம்பி
அக்காரியத்தைத் தவிர்த்து விடுவார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: (7:131)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சகுனம் பார்ப்பது “ஷிர்க்’ ஆகும். (அஹ்மது, திர்மிதி)
சகுனம் பார்ப்பவனும் யாருக்காக சகுனம் பார்க்கப்படுகிறதோ அவனும், சோதிடம்
பார்ப்பவனும் யாருக்காகச் சோதிடம் பார்க்கப்படுகிறதோ அவனும் சூனியம் செய்பவனும் எவன்
சார்பாக சூனியம் செய்யப்படுகிறதோ அவனும் நம்மைச் சேர்ந்தவன் அல்லன்” (திர்மிதி)
“”துர்ச்சகுனம் ஒருவனை அவனது காரியத்தை விட்டு தடுத்து விட்டால் அவன் இணை வைத்து
விட்டான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அதனைக் கேட்ட) தோழர்கள், “”அல்லாஹ்வின்
தூதரே! அதற்கான பரிகாரம் என்ன?” என்று வினவினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள்
அல்லாஹும்ம லா கைர இல்லா கைருக; வலா தய்ர இல்லா தய்ருக, வலா இலாஹ ஙைருக்க”
(அல்லாஹ்வே! உனது நன்மையைத் தவிர வேறு எந்த நன்மையும் இல்லை, உனது சகுன மின்றி
வேறந்தச் சகுனமும் இல்லை; உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரு மில்லை) என்று
சொல்லி விடும்” எனக் கூறி னார்கள் (முஸ்னது அஹ்மது)
அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வது “ஷிர்க்”
அல்லாஹ் தன்னுடைய படைப்பினங்களில் எதன் மீதும் சத்தியம் செய்வான். ஆனால், நாம்
அல்லாஹ்வைத் தவிர வேறு எதன்மீதும் சத்தியம் செய்வதை அல்லாஹ் தடை செய்துள்ளான்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள்
உங்கள் மூதாதையர் மீது சத்தியம் செய்வதைத் தடை செய்கிறான். எவராவது சத்தியம் செய்வ
தாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி
இருக்கட்டும்.(புகாரி)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “”அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தவன்
நிச்ச யமாக ஷிர்க்” இணை வைத்து விட்டான். (முஸ்னது அஹ்மது)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: லாத், உஸ்ஸாவின் மீது சத்தியம் செய்தவர் லா இலாஹ
இல்லல்லாஹ்’ என்று கூறிவிடட்டும். (புகாரி)
ஷிர்க்கை ஏற்படுத்தும் சில வாக்கியங்கள்.
அல்லாஹ்வாலும் உங்களாலும் இது எனக்குக் கிடைத்தது,
காலத்தைக் குறை கூறிப் பேசுவதும் குற்றம்.
அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர் கள்
கூறினார்கள், “”ஆதமின் மகன் எனக்கு நோவினை தருகிறான். அவன் காலத்தைத் திட்டுகிறான்.
நானே காலத்தைப் படைத்தவன்; எனது கையில்தான் அனைத்தின் அதிகாரமும் இருக்கிறது. நானே
இரவையும் பகலையும் மாறி வரச் செய்கிறேன்”.
உதாரணமாக: இது என் கெட்ட காலம்
வரம்பு மீறிப் புகழாதீர்.
சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ”அல்லா ஹ்வின் தூதரே! எங்களில் மிகச் சிறந்தவரே!
எங்களில் சிறந்தவரின் மகனாரே! எங்களின் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எனக்
கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் “”மக்களே உங்களின் சொற்களைக் கூறுங்கள்.
ஆனால் ஷைத்தானின் வலையில் விழுந்து விடாதீர்கள். நான் முஹம்மது, அல்லாஹ்வின் அடிமை.
அவனின் தூதர்; எனக்குக் கொடுக்கப்பட்ட மதிப்பை விட என்னை உயர்த்துவதை நான்
விரும்பவில்லை” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரழி) நூல்: நஸாயீ
மர்யம்(அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்களை கிறித்தவர்கள் மிகப்படுத்திப்
புகழ்வதைப் போல் என்னை நீங்களும் மிகப்படுத்திப் புகழாதீர்கள்.
ஆதாரம்:புகாரீ, திர்மிதி.
நானொரு அடியானே! (என்னை) அல்லாஹ் வின் அடிமை என்றும், அவனின் தூதர் என்றும்
கூறுங்கள். நீங்கள் மிகைப்படுத்துவதை அஞ்சி (எச்சரிக்கையாக இருந்து) கொள்ளுங்கள்.
இப்படி மிகைப்படுத்தியது தான் உங்களுக்கு முன் சென்றவர்களை அழித்தது” என்று நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர்(ரழி) நூல்:ரஜீன்
ஆளுமையில் இணைவைத்தல்
ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருப்பதாக நம்புவது, அல்லாஹ்வுக்குப் பெற்றோர், கணவன்,
மனைவி, மக்கள் இருப்பதாக நம்புவது “ஷிர்க்’ ஆகும். அல்லாஹ் கூறுகின்றான்:
(12:39,40, 112:3)
மனிதர்கள் அல்லது மிருகங்களின் உருவத் திலோ அல்லது ஏனையபடைப்புகளின் வடிவத் திலோ
இறைவன் இவ்வுலகில் தோன்றுவதாக (அவதாரம் எடுப்பதாக) நம்புவது “ஷிர்க்”
அல்லாஹ் கூறுகின்றான்: (20:5, 32:4)
அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்திருக்கின்றான். ஆனால் ஒவ்வொரு காரியத்தையும் நன்கறிந்த
வனாகயிருக்கிறான்.
அல்லாஹ் கூறுகின்றான்: 32:5, 6:56, 6:103)
போன்ற குர்ஆன் வசனமும் சான்று. பூமியில் நடப்பவற்றை அறிவதற்கு அவன் அவதாரம் எடுக்க
வேண்டிய அவசியமும் இல்லை, தேவை யுமில்லை. அதையே குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
(6:80)
இறைவன் தூணிலும் துரும்பிலும் இருக்கிறான் என்ற கொள்கை இங்கு செல்லாது; ஏனென்றால்
இறைவன், யாவற்றையும் படைத்து பின் “அர்ஷின்’ மீது அமைந்து விட்டதாக குர்ஆன்
கூறுகிறது. ஆனால் அவனின் சக்தி அனைத்திலும் பரவி, ஊடுருவிச் செல்லுகிறது.
அல்லாஹ் கூறுகிறான்: 32:6
எனவே இறைவன் (எதன் வடிவிலும்) அவதாரம் எடுத்து பூமியில் தோன்ற வேண்டுமென்பதற்கு
அவசியமில்லை. அவ்வாறு நடப்பதும் கிடையாது.
தன்மைகளில் இணை வைத்தல்
இறைவனுக்கு எவ்விதம் யாருடைய துணையுமின்றி அனைத்தையும், அறிகின்ற, பார்க்கின்ற,
கேட்கின்ற ஆற்றல் உண்டோ, அத்தகைய ஆற்றல்(தன்மை) மற்றவர்களுக்கும் உண்டு என நம்புவது
“இணை வைத்தல்’ ஆகும்.
அல்லாஹ் கூறுகின்றான். 27:65, 32:6, 6:59, 6:73, 11:123, 20:7, 6:50, 3:44, 39:46
போன்ற பல குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் அறிகின்ற சக்தி இறைவனுக்கு மட்டுமே உரியது
என்பதற்கு சான்று பகர்கின்றன.
அல்லாஹ் கூறுகின்றான். 20:46, 42:11
எனவே இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அனைத்தையும் அறிகின்ற, பார்க்கின்ற, கேட் கின்ற
ஆற்றல் கிடையாது. உண்டு என நினைப் பதும், நம்புவதும் “ஷிர்க்’ ஆகும்.

M.S அஹமது அலி ஆவடி, சென்னை

Post image for இம்மை வாழ்வு!
உலகில் பிறந்த மனிதர் எல்லாருக்கும் இம்மை வாழ்வும் உண்டு. மறுமை வாழ்வும் உண்டு, இம்மையை விட மறுமையே மிக உயர்ந்ததாகும் என எல்லாம் வல்ல அல்லாஹ் பல இடங்களில் திருமறையிலே தெளிவுபடுத்திக் காட்டுகின்றான்.
“(மனிதர்களே!) நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்; உறுதியாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண் விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமும்தான். அன்றி (அது) உங்களுக்கிடையில் (வீண்) பொறாமையேற்படுத்துவதாகவும், பொருள்களிலும், சந்ததிகளிலும் போட்டியே ஏற்படுத்துவதாகவும் (இருக்கின்றது; இதன் உதாரணமாவது) ஒரு மழையின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது, அதன் (உதவியால் முளைத்த) பயிர்கள் (நன்கு வளர்ந்து) விவசாயிக்குப் களிப்பையுண்டு பண்ணிக் கொண்டிருக்கின்றன. அது காய்ந்த பின்னர், மஞ்சனித்து விடுவதை நீர் காண்கின்றீர். பின்னர் அது சருகுகளாகி விடுகின்றது. (இவ்வுலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கின்றது) மறுமையிலோ (அவர்களுள் பலருக்குக்) கொடிய வேதனையும் (சிலருக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும் திருப்பொருத்தமும் கிடைக்கின்றன. ஆகவே இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் (சொற்ப) இன்பமேயன்றி வேறன்று” (அல்குர்ஆன் 57:20)
நீர்க்குமிழி போன்று தோன்றி மறையும் இவ்வுலக வாழ்வில்தான் மனிதர்களுக்குள் எத்தனைப் போட்டிகள்? பொறாமைகள்? அற்ப ஆசைக்காக, மனிதன் தன்னை மறந்த நிலையில் தன் வரம்பையே மீறியவனாகின்றான்.
அற்ப இவ்வுலக இன்பத்தை நுகர்தற் பொருட்டு, குறுக்கு வழிகளில் பணம் தேடி-மாட மாளிகைகளைக் கட்டி-ஆரணங்குகளின் அணைப்பில் பஞ்சணையில் புரளுவதையே நிலையான இன்பமாகக் கருதுகின்றான். காரணம் பெரும்பாலோர்க்கு நன்றியுணர்வும், சிந்தனை வலிமையும் குறைவு!
தன்னைப் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்ட மனிதன், அவனை மறந்த நிலையில், தான் தோன்றித் தனமாகவும், சிந்தித்துச் செயல்படுகின்ற வலிமை குன்றியும் செயல்படுகின்றான். இந்நிலையில் , அற்ப இன்பமே அவனுக்குப் பெரிதாகப்படுகின்றது. நிலையான பேரின்ப மறுமை வாழ்வைப்பற்றி, அவன் எண்ணிப் பார்க்காதது மட்டுமன்று! மறுமை வாழ்வு உண்டா? என்பதிலும் ஐயம் கொள்கின்றான்.
“வெந்ததைத் தின்று விதி வந்தால் மாள்வோம்” என்னும் அசட்டுத் துணிச்சல் உள்ள மனிதர்களிடத்து, நம்பிக்கையின்மை வியப்பானதன்று!

எவரேனும், இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும்(மட்டும்) விரும்பினால், அவர்கள் செயலுக்குரிய பலனை இ(வ்வுலகத்)திலேயே நாம் முழுமையாக அவர்களுக்குக் கொடுத்திடுவோம், அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.” (அல்குர்ஆன் 11: 15)
“(எனினும்) மறுமையிலோ, இத்தகையோருக்கு (நரக) நெருப்பைத் தவிர வேறொன்றுமில்லை; அவர்கள் செய்தவை யாவும் இங்கு அழிந்துவிட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே”.(அல்குர்ஆன் 11: 16)
மேற்கூறிய இறைவசனங்கள் தெளிவாகவே நமக்கு அறிவித்து விட்டன. இம்மையை மட்டும் விரும்புவோர்க்கு விரும்பியவை யாவும் இங்கேயே கொடுக்கப்படும் என்றும், மறுமையில் எப்பயனும் அவர்களுக்கு இல்லை என்றும், இம்மையில் அவர்கள் செய்த – செய்கின்ற செய்யப் போகின்ற காரியங்கள் யாவும் அழிந்து விடக்கூடியவைகளே மேலும் வீணானவைகளே; என்பதும் வெள்ளிடை மலையாக விளங்கி விட்டது.
“எவன் மறுமையின் பயிரை விரும்புகிறானோ, அவனுடைய பயிரை(விளைச்சலை) நாம் அவனுக்காக அதிகப்படுத்துகிறோம்; எவன் இம்மையின் பயிரை (மட்டும்) விரும்புகின்றானோ; நாம் அவனுக்கு அதிலிருந்து ஓரளவு கொடுக்கின்றோம். எனினும், அவனுக்கு மறுமையில் யாதொரு பங்குமில்லை.” (அல்குர்ஆன் 42:20)
“மறுமையின் வாழ்க்கைதான் மிக்க மேலானதும் நிலையானதுமாகும்”. (அல்குர்ஆன் 87:17)
தெள்ளத் தெளிவான இவ்வசனங்களின் மூலம் நாம், மறுமை வாழ்வின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டோம்.
இவண், இன்னொன்றையும் நாம் நோக்க வேண்டும். மறுமையின் சுக வாழ்வைப் பெற, இம்மையில் இறை ஆணைக்குட்பட்டு – நபிவழி பேணி நற்செயல்களை நாம் மிகுதமாகவே புரிய வேண்டும். இம்மை விதைக்கும் இடம்; மறுமை அறுவடை செய்யும் இடம். பொல்லாங்கு தரும் போல் வாழ்க்கையைக் கண்டு இம்மையில் மயக்கம் கொள்ளாது அசலான – நிலையான வாழ்வைப் பெற, இம்மையில் இறைவன் இட்ட கட்டளைக்கிணங்க செயற்பட்டு, அமைதியான – அடக்கமான வாழ்வைப் பேண வேண்டும்.
இவ்வுலகில், நாம் செய்யும் ஆகுமான – ஹலாலான தொழிலால் ஈட்டுகின்ற செல்வங்களை நாம் – நம் குடும்பம் என்று மட்டும் அனுபவிக்காமல், உற்றார்-உறவினர், இல்லையென்று இரப்போர் முதலியோர்க்குரிய பங்கினையும் கொடுத்து இறைவனுக்கு அஞ்சி வாழ்தல் சிறப்புக்குரிய செயலாகும்.
‘மனிதன்’ என்பவன் மாண்புமிக்கவன்! சொல்லுக்கு ஏற்ற பொருளுடன் மனிதன் வாழ விரும்புதல் வேண்டும். இல்லையேல், மனிதஇனம் மாசுபடிந்த – கறை படிந்த இனமாகிவிடும்! மனிதன் பெற்ற பகுத்தறிவு பயனற்றதாகி, விலங்கினங்கள் மேன்மை பெற்றுவிடும்.
ஆம்! ‘சமூகம்” என்னும் சங்கமத்தில் அங்கம் வகிக்கும் மனிதர் ஒவ்வொருவரும் பகுத்தறிவுடன் சிறந்து விளங்க வேண்டாமா? இம்மையை மறுமைக்குரிய விளை நிலமாக்க முயற்சி செய்ய வேண்டாமா? (வளரும்)
புலவர்
செ. ஜஃபர்
அலி, பி.லிட்.,
கும்பகோணம்
ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:—
1.சதக்கத்துல் ஜாரியா 2.பலன் தரும் கல்வி 3.பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்
ஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும்.
இரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.
மூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும்.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களை அணுகி ‘என்னுடைய தந்தையார் மரண சாசனமும் அறிவிக்காமல் அவருடைய சொத்துக்களை விட்டு விட்டு இறந்து விட்டார். நான் அவருடைய சார்பில் ‘சதக்கா’ (தர்மம்) கொடுத்தால் அவரது பாவச் சுமைகளிலிருந்து அவருக்கு விடுதலை கிடைக்குமா?” என வினவினார். நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்’ என பதிலளித்தார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்)
வேறொரு நபிமொழி கீழ்வருமாறு அறிவிக்கப்படுகிறது:
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் “என்னுடைய தாயார் மரண சாசனம் அறிவிக்காமல் திடீரென மரணம் எய்திவிட்டார்கள். இறப்பதற்கு முன் பேச வாய்ப்பிருந்திருக்குமேயானால் அவர்கள் ‘சதக்கா’ செய்வது பற்றி கூறி இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். அவர்களுடைய சார்பில் நான் சதக்கா செய்தால் அவர்களுக்கு நன்மை கிட்டுமா?” என வினவினார். நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்’ என்றார்கள். (ஆயிஷா (ரலி) முஸ்லிம்
மேலே கூறிய நபிமொழி ஒருவர் செய்யும் நற்செயல்கள் தமது வாழ்நாளில் தமக்கு நன்மை பயப்பதுடன், தாம் இறந்த பின்பும் தமக்கு நன்மைகள் கிடைத்துக்கொண்டிருக்கும் என அறிந்து செயல்பட ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. இறந்தவர்களுக்காக அவர்களது சார்பில் தர்மம் செய்வது கட்டாயக் கடமை அல்லவெனினும் அவர்களது சார்பில் செய்யும் தர்மங்களால் இறந்தவர்களுக்கு நன்மை கிடைக்க வழி செய்வதோடு தானும் நன்மை அடைகிறார்.
இறந்தவர் வாரிசுகளின் மீது சாட்டப்படும் கடமை யாதெனில், இறந்தவர் சொத்தின் மீது ஜகாத் கடமையாகி நிறைவேற்றாமல் இருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். இறந்தவர் உயில் எழுதியிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரது கடன்களை அவரது சொத்திலிருந்து அடைத்து விடவேண்டும். இவைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான அளவு அவரது சொத்துக்களில் மதிப்பு இல்லையெனில் அவைகளை நிறைவேற்றுவது வாரிசுகளுக்கு கடமை இல்லை. இருப்பினும் வாரிசுகள் தாம் ஈட்டிய பொருளிலிருந்து நிறைவேற்றுவார்களாயின் அது மிகச் சிறப்புடைய செயலாகும்.
ஆனால், நம்மில் பெரும்பாலோர் துரதிஷ்டவசமாக இவை போன்ற நபிமொழிகளின் கருத்துக்களை அறியாமலும், உணராமலும் மார்க்கத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இறந்தவர்களுக்கு நன்மை சேர்ப்பதாக எண்ணி 3ம், 7ம், 40ம் நாள் பாத்திஹா, வருடப் பாத்திஹா மற்றும் மெளலிதுகள் ஓதி சடங்குகள் செய்கின்றனர். இச்சடங்குகளால் இறந்தவர்கள் நன்மை அடைவர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இவற்றால் பொருள் நேரம் சக்தி விரயமாவதுடன் அல்லாஹ்வின் வெறுப்பிற்கும் ஆளாகி விடுகிறார்கள் என்பதை உணரவேண்டும்.
இத்தகைய சடங்குகள் இறந்தவர்களுக்கு நன்மையாக இருப்பின் நபி(ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் செய்து காட்டி இருப்பார்கள். அவர்களின் மற்ற நற்செயல்களின் முறையும் ஹதீதுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் இத்தைகைய சடங்குகள் நிறைவேற்றப்பட்டதாக எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே இவை நிச்சயமாக தவிர்க்கப்படவேண்டியவை.
அன்புச் சகோதரர்களே! மேற்கூறிய நபிமொழிகளில் கூறப்பபட்டிருப்பவைகளில் தான், நாம் இறந்தவர்களுக்கு நன்மை செய்ய முடியும். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.
எவன் நேரான வழியில் செல்லுகிறானோ, அவன் தன்னுடைய நன்மைக்காக நேரான வழியில் செல்லுகிறான்; எவன் வழிகேட்டில் செல்லுகின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; ஒருவனுடைய பாவச்சுமையை மற்றெருவன் சுமக்க மாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை. (அல்குர்ஆன் 17:15)
அல்லாஹ் நம் அனைவரையும் நல்வழியில் செலுத்துவானாக!

 
Post image for திக்ர் என்ற பெயரால்…..
திக்ர் என்ற பெயரால் அரங்கேற்றப்படும் அணாச்சாரங்கள். ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்மா பரிசுத்தப்பட வேண்டும் இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் தீமை, பாவங்களின் கரைகள் கழுவப்பட்டு அதிலிருந்து பாதுகாப்பும் பெறவேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றது. மிகக் கெட்டவனாக இருந்தபோதிலும் எப்போதவது அவன் உள்ளம் இப்படி சிந்திப்பதுண்டு. இறைநினைவு ஒன்று மட்டுமே இத்தீய நிலைகளிலிருந்து காப்பாற்றி… தன்னை மகிழ்வுடனும், அமைதியுடனும் வாழச்செய்யும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

ஆனால் இறைநினைவு வரவேண்டும் என்று சொல்லி தம்மைத்தாமே வருந்தித் கொள்வதும் இயல்புக்கு மாற்றமாக செயல்படுவதும் நாம் காண்கிறோம். துறவரம் தானே வகுத்துக்கொண்டு அதை தாமே மீறுபவர்களை பற்றி ”குர்ஆன்” குறிப்பிடும்போது அவர்களாகவே தங்களை கஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள் என்கிறது. இவை இறைநினைவா? உண்மையில் இறைநினைவு என்றால் என்ன, என்பதை இரத்தின சுருக்கமாக இங்கு நாம் காண்போம்.

இறைவனை நினைவு கூர்வதன் மூலம் உள்ளங்கள் திருப்தி அடையவில்லைய? (13:28) என்று அல்லாஹ் கேட்கிறான். மேலும் அல்லாஹ் கூறுகிறான்.
அதிகமதிகம் இறைவனை நினைவு கூறுங்கள் திக்ர் செய்யுங்கள்!(62:10)
இறைவனை மறந்துவிட்ட மக்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள் இறைவன் அவருடைய ஆன்மாக்களையே அவர்களை மறக்கடிக்க வைத்துவிட்டான்.(59:19)
என்னுடைய நினைவை அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.(20:42) மேலும் அல்லாஹ் கூறுகிறான்.
ஈமான் கொண்டவர்களே! பொருட் செல்வமும், குழந்தை செல்வமும், அல்லாஹ்வை தீக்ர் செய்வதை விட்டும் உங்களை அலட்சியப்படுத்திவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.(63:09)
திக்ரைப்பற்றி ஓரு சில ஹதீஸ்களைப் காண்போம். முஃபர்ரித்துன் முன்னேறிச் சென்றுவிட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னபோது, யாரஸுலல்லாஹ்! முஃபர்ரித்துன் யார்? என ஸஹாபிகள் கேட்டனர் ”அல்லாஹுதலாவின் திக்ருக்காகத் தம்மைத் தாமே அர்ப்பணித்துக் கொண்டவர்கள், திக்ரு அவர்களின் சுமையைக் குறைத்துவிடும். எனவே, கியாமத் நாளன்று அவர்கள் சுமை குறைந்தவர்களாக வருவார்கள். என நபி (ஸல்} அவர்கள் கூறியதாக, அபூஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்.(திர்மீதி)
”என் அடியான் என்னை நினைத்து, அவன் உதடுகள் என் நினைவில் அசைந்து கொண்டிருக்கும் போது, நான் அவனுடன் இருக்கிறேன்” என்று அல்லாஹுதலா கூறுவதாக நபி (ஸல்) சொன்னார்கள்.(இப்னுமாஜா)
”எவர் அல்லாஹ்வைய் திக்ரு செய்து, பின்பு அல்லாஹ்வின் அச்சத்தால் கண்ணீர் பூமியில் விழும்வரை கண்ணீர் சிந்து வாரோ அவரை கியாமத் நாளன்று அல்லாஹ் வேதனை செய்ய மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(ஹாகிம்) இவைப்போன்ற ஏராளமான குர்ஆன் வசனங்கள், ஹதிஸ்கள் பல இருக்கின்றன.
அல்லரஹ்வும், அவனுடைய தூதரும் சொல்லித் தந்த முறைப்படி திக்ர் அமைய வேண்டும். அதல்லாமல், நமது நாவுகளில் பொருளற்ற ”ஹா,ஹு” ”ஹீ,ஹு யா மன் ஹு” ”ஹக்து ஹக்” ”அஹ்,அஹ்” இருட்டு அவ்லியா என்ற பெயரால் இருட்டில் உட்காந்திருந்து ’4444: சலவாத்து என்று இதையெல்லாம் திக்ர் என்று கூறுகின்றனர். இது அல்லாஹ்யும் அவனுடைய தூதரும் காட்டித்தராதவையாகும். இன்று திக்ர் என்ற பெயரால் அறங்கேற்றப்படும் அணாச்சாரம் (பித்அத்) நம் சமுகத்தில் மலிந்து கிடக்கின்றன, இதையெல்லாம் ஓதுக்கி தள்ளிவிட்டு அல்லாஹ் மற்றம் அவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில், அச்சத்தோடும், அமைதியாகவும், உரக்க சப்தமில்லாமலும் அல்லாஹ்வை திக்ரு செய்யும் நல்வழியில் நம்மை சேர்த்தருள அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
இமாம் பிர் முஹம்மது,( JAQH )மர்கஸ் ஏர்வாடி
படைத்தவனிடம் பாவமன்னிப்பு தேடுவோம்
அல்லாஹ் தனது திருமறையில் 48:2 வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டதாகக் கூறுகின்றான். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றாடம் பாவம் செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால் அதே சமயம் அன்றாடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தார்கள்.

“அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’ (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6307

“எனது உள்ளத்தில் கவனக்குறைவு ஏற்படுகின்றது. நிச்சயமாக நான் அல்லாஹ்விடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி), நூல் : முஸ்லிம் 4870

“மக்களே! அல்லஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள். நான் அவனிடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி), நூல் : முஸ்லிம் 4871

எப்போதும் இறைச் சிந்தனையில் இருக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உள்ளம் கொஞ்சம் அந்தச் சிந்தனையை விட்டு விலகினால் கூட அதற்காக பாவமன்னிப்பு தேடுகின்றார்கள். ஆனால் நாம் சிறு சிறு பாவங்களால் முற்றுகையிடப்பட்டுள்ளோம். அன்றாடம் ஆயிரக்கணக்கான பாவங்களைச் செய்து விட்டு கல்லாக உட்கார்ந்திருக்கின்றோம். அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவது கிடையாது. ஒரு மாதிரியான மிதப்பில் இருக்கின்றோம். இது போன்ற பாவங்களை விட்டு விலகுவதுடன் அன்றாடம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி அதற்குரிய பலன்களை அடைய வேண்டும்.

வேதனையை விட்டும் பாதுகாவல்

(முஹம்மதே!) நீர் அவர்களுடன் இருக்கும் போது அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவனாக இல்லை. அவர்கள் பாவ மன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும் போதும் அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை. (அல்குர்ஆன் 8:33)

பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தண்டனை இறங்காது என்பதை இந்த வசனம் உணர்த்துகின்றது.

மக்கள் செல்வமும், மழை நீர் வளமும்

உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான். செல்வங்கள் மூலமும், மக்கள் மூலமும் உங்களுக்கு உதவுவான். உங்களுக்காக சோலைகளை ஏற்படுத்துவான். உங்களுக்காக நதிகளையும் ஏற்படுத்துவான். (அல்குர்ஆன் 71:10-12)

அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடினால் அவன் மழை, செல்வங்கள், மக்கள் ஆகியவற்றைக் கொண்டு நமக்கு உதவுவான் என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

ஸஹர் நேரத்தில்…

அவர்கள் இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள். (அல்குர்ஆன் 51:18)
(அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல் வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவ மன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.)

(அல்குர்ஆன் 3:17)

இந்த வசனங்களில் இறை நம்பிக்கையாளர்களின் பண்புகளைப் பற்றி சொல்லும் போது, ஸஹர் நேரத்தில் அவர்கள் பாவமன்னிப்பு தேடுவார்கள் என்று வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனங்களுக்கு விளக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இரவின் பிற்பகுதியில் பாவமன்னிப்பு தேடுவதை வயுறுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கின்றேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன்” என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 1145

சுவனத்தைப் பெற்றுத் தரும் ஸய்யிதுல் இஸ்திஃக்ஃபார்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“அல்லாஹும்ம அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க. வ வஃதிக்க மஸ்ததஃத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஃத்து. அபூஉ லக்க பி நிஃமத்திக்க அலைய்ய வ அபூஉ லக்க பி தன்பீ. ஃபஃக்ஃபிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த.” (பொருள் : அல்லாஹ்வே! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமையாவேன். நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதிமொழியையும், வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோருகின்றேன். நீ (எனக்கு) அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கின்றேன். நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் ஒப்புக் கொள்கின்றேன். ஆகவே. என்னை நீ மன்னிப்பாயாக. ஏனெனில் பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை.)

என்று ஒருவர் கூறுவதே தலை சிறந்த பாவமன்னிப்பு கோரல் (ஸய்யிதுல் இஸ்திஃக்ஃபார்) ஆகும். யார் இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும், தூய்மையான எண்ணத்தோடும் பகல் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டு, காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகின்றாரோ அவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.

அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி), நூல் : புகாரி (6306)

தொழுகையில் ஸலாம் கொடுத்ததும்…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பும் போது மூன்று தடவை (அஸ்தஃக்ஃபிருல்லாஹ் என்று) பாவமன்னிப்பு தேடுவார்கள்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி), நூல் : முஸ்லிம் 931
1) ஷிர்க் எனும் இணைவைத்தல்!
“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்” (அல்-குர்ஆன் 4:48)

2) சூன்யம், ஜோதிடம் மற்றும் குறிபார்த்தல்!

“யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதை நிராகரித்தவர் ஆவார்” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் அபூதாவுத்.

“குறி சொல்பவனும் அதைக் கேட்பவனும், எதிர்காலத்தை கணித்துக் கூறுபவனும் அதைக் கேட்பவனும், சூன்யம் செய்பவனும், அதைச் செய்யச் சொன்னவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அல் பஸ்ஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3) கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் நன்மை செய்வதாக நம்புதல்!

நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ‘உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்” என்று அல்லாஹ் கூறினான்” எனக் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: ஸைத் இப்னு காலித் (ரலி), ஆதாரம்: புஹாரி

4) பாதுகாப்பு வேண்டி தாயத்து, கயிறு, வளையம் அணிதல்!

நபி (ஸல்) அவர்களுடன் சில பயணங்களில் நான் சென்றிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு தூதுவரை அனுப்பி ஒட்டகக் கழுத்தில் (கண் திருஷ்டிக்காகக் கட்டப்பட்டு) உள்ள வில் கயிற்றினாலான மாலையை அல்லது (வில் கயிற்றினாலான மாலையென குறிப்பிடாது பொதுவான) எந்த மாலையையும் துண்டிக்காமல் நீர் விட்டு விட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் அம்மனிதருக்கு கூறியதாக அபூபஷீர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி)

(ஷிர்க்கான வார்த்தைகளைக் கூறி) மந்திரித்தல், தாயத்துகள், (ஏலஸ்கள் கட்டுதல். தாவீசுகள்) திவலாக்கள் ஆகிய அனைத்தும் ஷிர்க்காகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத், அபூதாவூத்)

5) துர்ச்சகுனம் பார்த்தல்!

(இஸ்லாத்தில்) தொற்றுநோய் என்பதில்லை; துர்ச்சகுனம் பார்ப்பது கூடாது; ஆந்தை சாஸ்திரம் பார்ப்பதும் கூடாது; சஃபர் என்பதும் கிடையாது; நட்சத்திர சகுனம் பார்ப்பதும் கூடாது; கொள்ளி வாய்ப் பிசாசுமில்லை’ என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹூரைரா – (ரலி) நூல்: புகாரீ, முஸ்லிம்

எவர் ஒருவருடைய (அவர்பார்த்த) சகுனம் அவருடைய தேவையை (நிறைவேற்றி முடிப்பதை) விட்டும் திருப்பி விடுகிறதோ அவர் அல்லாஹ்வுக்கு இணைக் கற்பித்து விட்டார்’ என நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதனுடைய பரிகாரமென்ன? என்று (நபித் தோழர்களான) அவாகள் கேட்டார்கள் அ(தற்கு நபிய)வர்கள் அல்லாஹூம்ம லா கைர இல்லா கைருக்க, வலா தைர இல்லா தைருக்க, வலா இலாஹ இல்லா கைருக்க.

(பொருள்: யாஅல்லாஹ்! உன் நன்மையன்றி வேறு நன்மையில்லை உன் சகுனமின்றி வேறு சகுனமில்லை உன்னையன்றி வணங்கப்படுவதற்கு தகுதியானவன் வேறில்லை) என நீர் வுறுவதாகும் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஃபள்லு இப்னு அப்பாஸ் – ரலி நூல்: அஹ்மது

6) முகஸ்துதி (பிறருக்கு காண்பிப்பதற்காக அமல் செய்தல்)!

“நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் – மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை” (அல்-குர்ஆன் 4:142)

‘என்னிடம் தஜ்ஜாலை விடவும் (அவனால் உங்களுக்கு ஏற்படும் தீமையை விடவும்) உங்கள் மீது அதிகம் பயப்படத்தக்க ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வினவினார்கள். ஆம்! தெரிவியுங்கள் என (தோழர்களான)அவர்கள் கூறினார்கள். அ(தற்கு நபிய)வர்கள், (நான் பெரிதும் உங்கள் மீது பயப்படும் தீங்கு) மறைமுக ஷிர்க்காகும் (அது யாதெனில்) ஒருவர் தொழுகையை நிறைவேற்ற நிற்கிறார். தன்னை மற்றவர் பார்ப்பதை கண்டு தனது தொழுகையை (நீட்டி நிறுத்தி) அழகுபடுத்துகிறார் (முகஸ்துதியான இதுவே மறைமுக ஷிர்க்காகும்) எனக் கூறினார்கள்.

7) காலத்தை ஏசுதல்!

காலத்தைத் திட்டுவதின் மூலம் மனிதர்கள் என்னை சங்கடப்படுத்திவிடுகிறார்கள் காலத்திற்குச் சொந்தக்காரன் நானே! இரவையும் பகலையும் மாறிவரச் செய்பவனும் நானே என அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹூரைரா – ரலி நூல்: புகாரி.

8.) அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப்பலியிடுதல்!

‘அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்தவரை அல்லாஹ் சபிப்பானாக’ அறிவிப்பவர் : அலி (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

9) கப்றுகளில் கட்டங்கள் எழுப்புதல்!

அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும் போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இவாகளின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்வர்கள் அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் புகாரி மற்றும் முஸ்லிம்.

10) கப்றுகளுக்காக விழா நடத்துதல்!

எனது கப்ரை (கந்தூரி) விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்து சொல்லுங்கள். அது என்னை வந்தடையும் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத்.

11) சமாதி வழிபாடு!

யஹுதிகளும், நஸராக்களும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடங்களாக ஆக்கிக்கொண்டனர். அல்லாஹ் அவர்களைச் சபிப்பானாக அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்.

“அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே!” (அல்-குர்ஆன் 7:194)

12) அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப்பலியிடுதல்!

“உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!” (அல்-குர்ஆன் 108:2)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்தவரை அல்லாஹ் சபிப்பானாக!” அறிவிப்பவர் : அலி (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

13) அல்லாஹ் அல்லாதவருக்காக நேர்ச்சை செய்தல்!

“இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர்” (அல்-குர்ஆன் 2:270)

“அல்லாஹ்வுக்கு வழிபடுவதை நேர்ச்சை செய்தவர், (அதை நிறைவேற்றி) அவனுக்கு வழிபடுவாராக! அல்லாஹ்வுக்கு மாறுசெய்ய நேர்ச்சை செய்தவர்; (அவ்வாறு அதை நிறை வேற்றி) அவனுக்கு மாறுசெய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர்; ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர்: ஆயிஷா – ரலியல்லாஹூ அன்ஹு. ஆதாரம் : புகாரீ, அஹ்மது, நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா

14) இறைவனல்லாத பிறரை (அவுலியா, இறைநேசர்கள் போன்றவர்களை) அழைத்து உதவி தேடுதல்!

“கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது” (அல்-குர்ஆன் 46:5)

“அல்லாஹ்வை விடுத்து அவனுக்கு இணையாக ஒருவரைப் பிரார்த்தித்த நிலையில் எவன் இறந்து விடுகின்றானோ அவன் நரகில் நுழைவார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி.


15) அல்லாஹ் அல்லாதவர் ஹலாலை ஹராமாக்குவதையும் ஹராமை ஹலாலாக்குவதையும் ஏற்றுக்கொள்ளுதல்!

“(நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக்

கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?” (அல்-குர்ஆன் 10:59)

அதிய்யி பின் ஹாதிம் – ரலி அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள் (நான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தேன் அது சமயம், வேதக்காரர்களான) ‘அவர்கள் அல்லாஹ்வையன்றி தங்களுடைய பாதிரிமார்களையும், தங்களுடைய சந்நியாசிகளையும், மர்யமுடைய மகனார் மஸீஹையும் (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர்’ (9:31) என்ற பொருளுடைய வசனத்தை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதக் கேட்டு, ‘நிச்சயமாக நாங்கள் அவர்களை வணங்குபவர்களாக இருந்ததில்லையே! எனக் கூறினேன் அதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அ(ந்தக் குருமார்களான)வர்கள் அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றை அவர்கள் ஹராமாக்கி, அதனால் நீங்கள் அதை ஹராமாக்கவில்லையா? மேலும், அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றை அவர்கள் ஹலாலாக்கி, அதனால் நீங்கள் அதை ஹலாலாக்கவில்லையா?’ எனக் கேட்டார்கள். ஆம்! என நான் கூறினேன். (ஹலாலாக்குவது மற்றும் ஹராமாக்குவதின் விஷயத்தில் அவர்களை பின்பற்றி நடப்பதான) இதுவே அவர்களை நீங்கள் வணங்குவதாகும் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நூல்: அஹ்மது.

16) தொழுகையை விட்டுவிடுதல்!

‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ‘அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ‘(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். ‘இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். ‘உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்’ எனக் கூறுவர்). (அல்-குர்ஆன் 74:42-47)

ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். (ஆதாரம்: முஸ்லிம்)

17) தொழுகையில் பொடுபோக்காக, அலட்சியமாக இருத்தல்!

இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். ” (அல்-குர்ஆன் 107:4-5)

அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)

18) அவசர அவசரமாக தொழுதல்!

“முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் : ‘திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்’ என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்? என்று நபித் தோழர்கள் கேட்டனர். ‘தனது ருகூவையும், ஸுஜுதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்’ என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் பதிலளித்தாகள். (அறிவிப்பவர் : அபூகதாதா ரலி, நூற்கள் அஹ்மத், ஹாகிம், தப்ரானி)

“ருகூவை பூரணமாக செய்யாத, ஸஜ்தாவை மிக குறுகிய நேரத்திலும் செய்த ஒருவரைப் பார்த்து, “இந்த நிலையிலேயே தொழக்கூடியவர்கள் இறக்க நேரிட்டால், அவர் முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்களின் மார்க்கத்தை விட்டு விட்டு வேறு மார்க்கத்தை நிலைநாட்டியவராகத்தான் மரணிப்பார்” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.

19) அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தல்!

“அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தவர் இணைவைத்து விட்டார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர் : இப்னு உமர் (ஸலி), ஆதாரம் : அபூதாவுத், அஹ்மத். (என் தந்தை) உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் பயணிகள் சிலரிடையே இருந்து கொண்டிருந்தபோது அவர்களை அடைந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் தம் தந்தையின் மீது சத்தியம் செய்தார்கள். உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களை அழைத்து, ‘அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துவிட்டான். சத்தியம் செய்யமுற்படுபவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மெளனமாக இருந்துவிடட்டும்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :இப்னு உமர் (ரலி), ஆதாரம் : புகாரி.

20) வேண்டுமென்றே ஜமாஅத் தொழுகையை தவறவிடுதல்!

நீங்கள் தொழுகையையும் நிலைநாட்டுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். மேலும் என் முன்னிலையில் (தலை சாய்த்து) ருகூஉ செய்பவர்களுடன் நீஙகளும் சேர்ந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2 : 43)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஜமாஅத்தாகத் தொழுவது தனித்துத் தொழுவதையும் விட இருபத்தி ஏழு மடங்கு சிறப்பிற்குரியதாகும். நான் தொழுகைக்கு ஏவி, தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக யாரையேனும் நியமித்து விட்டு ஜமாஅத்துத் தொழுகைக்கு வராதோரின் இல்லங்களுக்கு நானே சென்று அவர்கள் அங்கிருக்கும் நிலையில் அவ்வில்லங்களுக்குத் தீ வைக்க விழைகின்றேன். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

21) தொழுகையில் இமாமை முந்துதல்!


முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் “உங்களுடைய செயல்களை இமாமுக்கு முன்னால் ஆக்காதீர்கள்! இமாம் ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூறினால் நீங்களும் ‘அல்லாஹ் அக்பர்’ என்று சொல்லுங்கள்; இமாம் ‘வலழ்ழாலீன்’ என்று கூறினால் நீங்கள் “ஆமீன்” என்று சொல்லுங்கள்”. மற்றொரு அறிவிப்பில், ‘நிச்சயமாக இமாமைப் பின்பற்ற வேண்டும்’ என்று கூறினார்கள். மேலும், ‘இமாமுக்கு முந்தி தலையை உயர்த்துபவர் மறுமையில் அவருடைய தலையை கழுதையின் தலையைப் போல் அல்லாஹ் ஆக்கிவிடுவான் என்று அவர் பயந்துக்கொள்ள வேண்டாமா?” என்றார்கள்.

22) கொலை செய்தல்!

“எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்” (அல்-குர்ஆன் 4:93)

‘நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்’ (அல்-குர்ஆன் 5:32)

23) விபச்சாரம் செய்தல்!

“நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது” (அல்-குர்ஆன் 17:32)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ‘மூன்று நபர்கள், மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுமுண்டு. அவர்கள் விபச்சாரம் புரியும் வயோதிகன், பொய்யனான அரசன், பெருமையடிக்கும் ஏழை.” (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்)

24) ஓரினப் புணர்ச்சி (ஆணும் ஆணும் புணர்ச்சி) செய்தல்!

“மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: ‘நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள். நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்’ என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: ‘நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக’ என்பது தவிர வேறு எதுவுமில்லை” (அல்-குர்ஆன் 29:28-29)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘லூத் (அலை) சமுதாயத்தினர் செய்த செயலை செய்யக்கூடியவர்களைக் கண்டால் செய்தவனையும் செய்யப்பட்டவனையும் கொன்றுவிடுங்கள்’ அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாம் : அஹ்மத்.

25) வட்டி வாங்குதல், கொடுத்தல், வட்டி சம்பந்தமான தொழில்களில் பணிபுரிதல்!

“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் – முதல் – உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்” (அல்-குர்ஆன் 2:278-2:279)

“வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.

26) மது அருந்துதல்!

மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)

மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி(ஸல்)அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)

27) சூதாட்டத்தில் ஈடுபடுதல்!

“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)

28) பொய் பேசுதல்!

நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

29) திருடுதல்!

“திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 5:38)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘திருடுபவனை அல்லாஹ் சபிப்பானாக! ஒரு முட்டையைத் திருடினாலும் அவனுடைய கை துண்டிக்கப்படும். கயிற்றைத் திருடினாலும் அவனுடைய கை துண்டிக்கப்படும்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

30) லஞ்சம் கொடுத்தல், லஞ்சம் வாங்குதல்!

“அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்” (அல்-குர்ஆன் 2:188)

‘லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), ஆதாரம் : இப்னுமாஜா.

31) பொய்சாட்சி கூறுதல்!

அபூபக்ரா (ரலி) பெரும் பாவங்களில் மிகப்பெரும் பாவத்தை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரை நிந்திப்பது, என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய்சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள் பொய் சொல்வதும் பொய்சாட்சி கூறுவதும் தான்’ என்று கூறினார்கள். ‘நிறுத்த மாட்டார்களா? என நாங்கள் கூறும் அளவுக்கு அவற்றை திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். ஆதாரம் : புகாரி.

32) அவதூறு கூறுதல்!

எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள். (அல்-குர்ஆன் 24:4)

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (அல்-குர்ஆன் 24:23)

33) அநாதைகளின் சொத்துக்களை அபகரித்தல்!

“நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் – இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள். (அல்-குர்ஆன் 4:10)

‘அழிக்கக் கூடிய ஏழு விஷயங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது நாங்கள் அவை என்னென்ன? என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், சூனியம் செய்தல், நியாயமாகவேயன்றி அல்லாஹ் ஹராமாக்கிய உயிரை கொலை செய்தல், வட்டியின் மூலம் சாப்பிடுதல், அனாதைகளின் பொருளை சாப்பிடுதல், போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடுதல், கற்புள்ள பேதைப் பெண்களின் மீது அவதூறு கூறுதல்’ என்று பதிலளித்தார்கள்.

34) கர்வம் கொள்ளுதல்!

“நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை” (அல்-குர்ஆன் 4:36)

அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: ‘எவன் தன் தலைமுடியை வாரி அழகுபடுத்தி நல்ல ஆடைகளை அணிந்து கர்வத்துடன் தலை நிமிர்ந்து தன்னில் தானே பூரிப்பு அடைந்த வண்ணம் நடந்து செல்கின்றானோ அவன் பூமியில் திடுமெனச் செருகப்பட்டு மறுமை நாள் வரை அதன் அதலபாதாளத்தில் முட்டி மோதி மூழ்கடிக்கப்பட்டு விடுபவன் போலாவான்’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)

35) தற்பெருமை, ஆணவம் கொள்ளுதல்!

‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்-குர்ஆன் 31:18)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ”எவர் தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுகிறாரோ அல்லது தனது நடையில் ஆணவம் கொள்கிறாரோ அவர் அல்லாஹவை சந்திக்கும் நாளில் அல்லாஹ அவர் மீது கோபம் கொண்ட நிலையில் சந்திப்பார்.” (ஆதாரம் : அல் அதபுல் முஃப்ரத்)

36) அளவு நிறுவையில் மோசடி செய்தல்!

“அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா? (அல்-குர்ஆன் 83:1-4)

“மேலும், வானம் – அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக. ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்” (அல்-குர்ஆன் 55:7-9)

37) பிறர் சொத்தை அபகரித்தல்!

அபூ ஸலமா(ரலி) அறிவித்தார்கள் : “எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், ‘ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்” என்று கூறினார்கள்.

38) மோசடி செய்தல்!

“எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 3:161)

“நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (அல்-குர்ஆன் 8:58)

39) அநீதி இழைத்தல்!

“அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி), ஆதாரம் : புகாரி.

40) புறம் பேசுதல்!

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
கஞ்சத்தனம்

இறைவன் நமக்குத் தந்திருக்கும் செல்வத்தை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்தளித்து, நாமும் இன்பம் பெற்று மற்றவர்களையும் மகிழ்விக்கும் எண்ணம் எல்லா மனிதர்களிடமும் இருக்கவேண்டும். ஆனால் பணத்தை நல்வழியில் செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்து நல்வாழ்க்கை வாழலாம் என்பவர்களுக்கு திருக்குர்ஆனும் நபிமொழியும் கடுமையான எச்சரிக்கை விடுக்கின்றன.

அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத் தனம் செய்வோர், அது தங்களுக்குச் சிறந்தது’ என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 3:180)

“கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்து வரை இரும்பாலான அங்கிகளணிந்த இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும் பொழுதெல்லாம் அவரது அங்கி விரிந்து, விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (1433, 1444)

கஞ்சத்தனம் செய்து சேமித்து வைக்கும் பலரின் பணம் இரவோடு இரவாக திருடப்பட்டு விடுவதையும், அவர்களுக்குப் பெரும் செலவை இழுத்து வைக்கும் நோய்கள் வருவதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சந்தேகம் கொள்வது

நமக்குள் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்குக் காரணம் தவறான வீண் சந்தேகம் தான். கணவன், மனைவி, நண்பர்கள், நிர்வாகம் என அனைத்து மட்டத்திலும் கட்டமைப்பை சீர்குலைக்கக் கூடிய கொடிய நோயாக உள்ளது இந்த சந்தேகம் தான்.
ஒருவர் ஒரு நேரத்தில் செய்த தவறான நடவடிக்கைகளை வைத்து அவருடைய அனைத்துச் செயல்களையும் குற்ற உணர்வோடு நம்முடைய மனதில் நாமே ஒரு மாயையை உருவாக்கி அதற்குச் செயல் வடிவம் கொடுத்து விடுகிறோம். இது தவறிலிருந்து ஒருவர் திருந்தாமல் மீண்டும் அவர் அந்தத் தவறைச் செய்வதற்குத் தூண்டுவதாகவும் அமைந்து விடும்.

இதனால் தான் இஸ்லாம், அவர் தவறு செய்யும் கட்டத்தில் உள்ள அந்த நிலையை மட்டும் எடுத்துக் கொள்ளச் சொல்கிறது சாட்சி இருந்தால் தான் அந்தத் தவறைக் கூட உண்மைப்படுத்துகிறது. பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தையும் நபிகளாரின் பொன்மொழிகளையும் பாருங்கள்:

நம்பிக்கை கொண்டோரே! ஊகங் களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 49:12)

“(பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம் தான் பேச்சுகலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்கன் குற்றங் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். (நூல்: புகாரி 5143)
எந்த அடிப்படையும் இல்லாமல் தவறான எண்ணம் கொள்வது மிகப் பெரிய பொய் செல்வதைப் போன்றதாகும் என்று நபிகளார் எச்சரித்துள்ளதைக் கவனத்தில் கொள்க!

தீய பேச்சுக்கள்

நம் நாவிலிருந்து உதிரும் பேச்சின் கடினத்தை விளங்காமல் அடுத்தவரது நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுபவர்களுக்கு நபியவர்கள் விடுக்கும் எச்சரிக்கை இதோ:

“ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசி விடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவை விட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (6477)

இதைப் போன்று, ஒருவர் செய்த தவறுக்காக அவரின் பெற்றோரைத் திட்டும் பழக்கம் நம்மிடம் உள்ளது. இவைகள் அறியாமைக் காலப் பழக்கங்கள் என்ற நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நான் அபூதர் (ரலி) அவர்களை (மதீனாவிற்கு மூன்று மைல் தொலைவிலுள்ள) ரபதா’ எனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது அவர் மீது (பழையதும் புதியதுமாக) ஒரு ஜோடி ஆடையும் (அதே போன்று) அவருடைய அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைக் கண்டேன். நான் (அடிமையும் எஜமானரும் ஒரே போல உடையணிந்திருப்பதைக் கண்டு வியந்தவனாக) அதைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: நான் (ஒரு முறை) ஒரு மனிதரை ஏசிக் கொண்டிருக்கையில் அவருடைய தாயை இழிவுபடுத்திப் பேசி விட்டேன். அப்போது என்னைப் பார்த்து நபியவர்கள் “அபூதர்! அவரையும் அவருடைய தாயையும் இழிவுபடுத்திப் பேசினீரா? நீர் அறியாமைக் காலத்துப் பழக்கமொன்றைக் கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்; ஊழியர்களுமாவர். அல்லாஹ் தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தான். எனவே தம் சகோதரரை தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உண்ணத் தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படி (அவர்களின் சக்திக்கு மீறிய) பணியில் அவர்களை நீங்கள் ஈடுபடுத்தினால் (அதைச் செய்வதில்) அவர்களுக்கு நீங்கள் உதவுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஉரூர், நூல்: புகாரி (30)

மோசடி

நம்பிக்கை மோசடி இன்று சர்வ சாதாரணமாக நடக்கிறது. வியாபாரம் என்றால் அதில் பல வகையில் நூதனமாக மோசடி செய்கிறார்கள். இவ்வாறு மோசடி செய்து பணம் சம்பாதிப்பவர்கள் நபிகளாரின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்ளட்டும். மறுமை நாளில் நரகத்தின் அடித்தட்டில் கடும் வேதனைப்படும் நயவஞ்சகர்கள் தான் இவ்வாறு செய்வார்கள் என்று கூறியுள்ளார்கள். நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும் போது பொய் பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (3333)

முகஸ்துதி

தனிமையில் ஒரு நன்மையைச் செய்வதை விட, பிறர் இருக்கும் போது தான் அதில் அதிக ஈடுபாடு காட்டி செய்கிறோம். ஏன்? அடுத்துவர்கள் மெச்சம் வேண்டும் என்தற்காக! வேலை செய்யாமல் சோம்பாலாக இருக்கும் தொண்டர்கள், தலைவர் வந்தால் சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்வார்கள். அவரிடத்தில் நற்பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக! இவ்வாறு மறுமை வெற்றியை முன்னிலைப் படுத்தாமல், மறுமையில் நன்மை தரும் செயல்களில் முகஸ்துதியை விரும்பினால், அதனால் நன்மை கிடைக்காததோடு தண்டனையும் கிடைக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

நம் இறைவன் (காட்சியப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெப்படுத்தும் அந்த (மறுமை) நால், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்கன் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறி விடும்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: புகாரி (4919)

நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் “யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நால்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நால்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி (6499)

மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும்போது, அவருக்குத் தான் வழங்கி யிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்” என்று பதிலளிப்பார்.

இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, மாவீரன்’ என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

பிறகு கல்வியைத் தாமும் கற்று, அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டு வரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். அறிஞர்’ என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; குர்ஆன் அறிஞர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்” என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய் இவர் ஒரு புரவலர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப் படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது” என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (3865)

பேராசை

செல்வத்தைத் தேடலாம். ஆனால் செல்வமே வாழ்க்கை என்று அதைத் தேடுவதிலேயே முழுக் கவனம் செலுத்தி இறைக்கடமைகளை புறக்கணித்து விடக் கூடாது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பேராசைக் கொண்டு அலைந்தால் மனநிம்மதியும் இழந்து மார்க்க ஒழுங்களை நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். இது தொடர்பாக நபிகளாரின் பொன்மொழிகளை பாருங்கள்.

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் அமர்ந்து) “இறைவன் உங்களுக்காக வெக் கொணரும் பூமியின் வளங்களைத்தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகி றேன்” என்று சொன்னார்கள். “பூமியின் வளங்கள் எவை?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் “(கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய) இவ்வுலகக் கவர்ச்சிப் பொருட்கள்(தாம் அவை)” என்று பதிலத்தார்கள். அப்போது ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கடம் “(செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா?” என்று வினவினார். அதற்கு (பதிலக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறதோ என்று நாங்கள் நினைத்தோம். பிறகு, தமது நெற்றியைத் துடைக்கலானார்கள். பின்னர் “கேள்வி கேட்டவர் எங்கே?” என்று வினவினார்கள். அம்மனிதர் “(இதோ) நான் (இங்கிருக்கிறேன்)” என்று கூறினார். அந்த பதில் வெப்பட்டதற்காக அவரை நாங்கள் மெச்சினோம்.

நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நன்மையால் நன்மையே விளையும். இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். வாய்க்கால் மூலம் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறு புடைக்கத் தின்ன வைத்துக் கொன்று விடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் சென்று விடுகின்றன. பசுமையான புல்லைத் தின்னும் கால்நடைகளைத் தவிர. (அவை மடிவதில்லை. ஏனெனில்,) அவை (புல்லைத்) தின்று வயிறு நிரம்பி விடும் போது சூரியனை நோக்கி(ப் படுத்து)க்கொண்டு அசை போடுகின்றன. (இதனால் நன்கு சீரணமாகி) சாணமும் சிறுநீரும் வெயேறுகின்றன. பின்னர் (வயிறு காலியானவுடன்) மறுபடியும் சென்று மேய்கின்றன.

இந்த (உலகின்) செல்வம் இனிமையானதாகும். யார் இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகின்றாரோ அவருக்கு அது நல்லுதவியாக அமையும். யார் இதை முறையற்ற வழிகல் சம்பாதிக்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி (6427)

“ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்கலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி (6436)

“(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (6446)

உண்மை பேசுக!
அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119

நேர்மையாக பேசுக!
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.

அழகானதைப் பேசுக!
பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83

கனிவாகப் பேசுக!
உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8


நியாயமாகப் பேசுக!
நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள். 6:152

அன்பாகப் பேசுக!
அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36

வீண் பேச்சை தவிர்த்துடுக!
நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68

பொய் பேசாதீர்!
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116

புறம் பேசாதீர்!
உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12

ஆதாரமின்றி பேசாதீர்!
யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35

அவதூறு பேசாதீர்!
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23