கழுத்தில் தூக்குக்கயிறு இறுக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த இறுதித் தருணத்தில் படுகொலைக் கைதியை அவரால் கொல்லப்பட்ட இளைஞனின் தாய் முகத்தில் அறைந்து மன்னித்து நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் ஈரானில் இடம்பெற்றுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் இன்று வெள்ளிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
பலால் என சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் மேற்படி படுகொலையாளி 7 வருடங்களுக்கு முன் ஈரானிய ரோயன் நகரிலுள்ள வீதியொன்றில் இடம்பெற்ற மோதலின் போது 18 வயதான அப்துல்லாஹ் ஹ{ஸைன் சாதேவை
கத்தியால் குத்தி படுகொலை செய்திருந்தார். இதனையடுத்து பலால் கைது செய்யப்பட்டார்.
அவருக்கான மரண தண்டனை நிறைவேற்றம் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை கண்கள் கட்டப்பட்டு கதிரையொன்றில் தூக்குக் கயிறு கழுத்தை இறுக்க பலால் நாற்காலி ஒன்றின் மீது நின்று கொண்டிருந்தார். இதன்போது அருகில் வந்த அப்துல்லாஹ் ஹ{ஸைன் சாதேவின் தாயார் பலால் ஏறியிருந்த நாற்காலியை தள்ளிவலிடாமல் பலாலின் கன்னத்தில் அறைந்துள்ளார். பலாலின் உயிர் பிரியும் தருணத்தை காண அங்கிருந்தவர்கள் திகிலுடன் காத்திருந்த வேளையிலேயே மேற்படி திடீர் திருப்பம் இடம்பெற்றுள்ளது.
பலால் ஏறியிருந்த நாற்காலியைத் தள்ளி அவருக்கான மரண தண்டனையை நிறைவேற்ற அப்துல்லாஹ் ஹின் பெற்றோர் வரவழைக்கப்பட்ட போது அப்துல்லாஹ்வின் தாயார் கதிரையை தள்ளுவதற்கு பதிலாக பலாலின் கன்னத்தில் மாறி மாறி அறைந்து அவருக்கு மன்னிப்பளித்தார். மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த தினத்துக்கு மூன்று நாட்களின் முன் அப்துல்லாஹ் தனது தாயாரின் கனவில் தோன்றி தான் தற்போது நல்ல இடத்தில் இருப்பதாகவும் தனது மரணத்துக்கான பழிவாங்கலில் ஈடுபட வேண்டாம் எனவும் கூறி இருந்ததாகவும் அதனாலேயே அவனது தாய் மனம் மாறியதாகவும் அப்துல்லாஹ்வின் தந்தையான அப்துல் ஹனி தெரிவித்தார்.
அப்துல்லாஹ் கொல்லப்படுவதற்கு சிறிது காலத்திற்கு முன்னர் மேற்படி தம்பதியினர் 11 வயது இளைய மகனை வீதி விபத்தொன்றில் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீதி மோதலின் போது தற்செயலாகவே அப்துல்லாஹ்வை பலால் கொல்ல நேர்ந்ததாகவும் அப்துல் ஹனி கூறினார்.


தனது மகனைக் கொன்ற படுகொலையாளிக்கு மன்னிப்பளித்த பின் விம்மி அழுது கொண்டிருந்த அப்துல்லாஹ்வின் தாயை பலாலின் தாய் அன்புடன் ஆரத் தழுவி தனது நன்றியைத் தெரிவித்தார்.
மன்னிப்பளிக்கப்பட்ட பலால் விடுதலை செய்யப்படுவாரா இல்லையா ? என்பது
தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
Iran execution spared 1

Iran execution spared 2

Iran execution
Iran execution spared 6
Iranian execution spared
Iran execution spared 3
Iran execution spared 5
Iran execution spared 6
Iran execution
Iran execution