மாரடைப்புக்கு அருமருந்து இஞ்சி!
மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.


“இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.
இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது.” என்று இந்திய மருத்துவக் கழக இதழில் டாக்டர் SK வர்மா தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான 30 நபர்களிடம் இஞ்சியின் மருத்துவகுணத்தைக் குறித்து அறிய சோதனை நடத்தப்பட்டது. முதல் வாரத்தில் 50 கிராம் வெண்ணையும், 4 ரொட்டித்துண்டுகளும் அவர்களுக்குக் கொடுக்கபட்டன. அடுத்த வாரம் அதனுடன் ஐந்து கிராம் இஞ்சி சேர்த்து கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த வாரம் அவர்களின் இரத்தம் சோதிக்கப்பட்டது. அவர்களின் இரத்த நாளத்தின் முதல் வார இயக்கம் 18.8 சதவிகிதம் குறைந்து இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த வாரம் 6.7 சதவிகிதம் அதிகரித்து இருந்தது.
இதன் மூலம் இரத்தநாளங்களின் செயல்பாட்டிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சியின் பயன்பாடு தெளிவாக நிரூபிக்கப்பட்டது. மாரடைப்பு ஏற்படுவதற்கு, இரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பும், அவற்றில் ஏற்படும் இரத்தக் கட்டும் மிக முக்கிய காரணம் ஆகும்.
கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இதற்கு இரத்தநாளங்களின் சுவர்களில் கொழுப்பு படிந்து இரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தின் வேகத்தை அது பாதிப்பதும் காரணமாகும். மேற்கண்ட ஆய்வின் மூலம் இரத்தநாளங்களின் வலுவிற்கும், சரியான இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சி வெகுவாக உதவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.
இந்த இஞ்சியின் பலன்கள் இதோடு நின்றுவிடவில்லை. மேலும் பல நோய்களுக்கு அருமருந்தாக இது உள்ளது.
- சளிப்பிடித்தல் / ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது.
- இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி
- இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.
- மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.
- செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.
- மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.
- தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும்.
- மூட்டுவலிக்கும் இது நன்மருந்தாக இருப்பதால் ஆஸ்பிரின் ஒவ்வாதவர்களுக்கு இது நல்லதொரு அருட்கொடையாகும்.
எனவே ஒவ்வொரு நாள் உணவிலும் இஞ்சியை சேர்த்துக்கொள்வது உடலுக்கு பாதுகாப்பானது என மருத்துவ ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.
Posted by மு.ஜபருல்லாஹ்
--
என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்..

அஸ்கர்
மாதவலாயம்.[ ஷார்ஜா - அமீரகம் ]
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"எங்கள் இறைவா!  என்னையும்,  என் பெற்றோர்களையும்,  முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக"
அல் குர்ஆன் 14:41.
اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”  ஆமீன்.
உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.

'கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம். கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி.


சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது.
பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டு. உடலில் உள்ள மொத்த ரத்தமும், சிறுநீரகம் வழியே செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும், ரசாயனங்களையும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்க, சிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறது. அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள், ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றன. சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில், பரம்பரையாகத் தடை கொண்டவர்களுக்கு, கல் உருவாவது சகஜம். அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீர் அடர்த்தியாக இருந்தாலோ, அடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட, கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும்.
எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே, கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, இது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறு, டாக்டர் பரிந்துரைப்பார். சில நேரங்களில், ஐ.வி.பி., என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்தையும், அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கற்களை நீக்க, பெரும்பாலான நேரங்களில் கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு, நான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் வெளியேறி விடும். வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம். கல்லில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்து கொண்டால், அதை வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகளை டாக்டர் பரிந்துரைப்பார். தொடர்ந்து கடும் வலி, மிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அதை அகற்ற முடியும். கல் வளர்ந்து கொண்டே இருப்பது, தொடர் தொற்று ஆகியவை, சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற நிலைகளில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரகத்தை திறந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லை. கல் இருக்கும் இடத்தில், உடலின் மேற்புறம், மின் அலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அதிர்வலைகள், கல்லைத் தாக்கி, அதை உடைக்கின்றன. பொடியான கற்கள், சிறுநீர் வழியே வெளியேறி விடும். சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால், செயற்கை குழாய் பொருத்தி கல்லை அகற்றலாம். வேறு சிகிச்சை முறைகளும் உள்ளன. இந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத வேண்டாம். 7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது. தற்போது சிறு வயதினர், குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதை காணப்படுகிறது. சீனாவில், பால் பவுடரில் உள்ள மெலாமைன் என்ற பொருளால், குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால், கல் உருவாகிறது.

சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன.
* பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும். அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும்.
* சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது.
* வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும்.
* மட்டன், மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும்.
* தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. கூடவே, தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்குவ துநல்லது
நன்றி : தமிழ் மருத்துவம்
--

என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்..

அஸ்கர்
மாதவலாயம்.[ ஷார்ஜா - அமீரகம் ]
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"எங்கள் இறைவா!  என்னையும்,  என் பெற்றோர்களையும்,  முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக"
அல் குர்ஆன் 14:41.
اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”  ஆமீன்.

வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதாப இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் (அல்சர்) இருக்கலாம், என்கிறார் சென்னை அண்ணா நகரில் உள்ள கொலேரேக்டல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன். அவர் மேலும் கூறியதாவது:-
இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற் பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டும். இதை அமில குடல் புண் நோய் என்றும் அழைக்கிறோம்.


1) குடல் புண் எதனால் ஏற்படுகிறது?:
*மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவுகள், இரவில் தாமதமாக சாப்பிடுவது, இறைச்சி, கோழி உணவுகள், கார உணவுகள் போன்றவை அல்சருக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
**புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.
2) குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்:

1. வாய்வுக் கோளாறில் ஏற்படும் குடல் புண்.
2. சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.
3) குடல் புண்ணின் அறிகுறிகள்:

காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாக அர்த்தம்.
இந்தப் பகுதியில் ஏற்படும் அசவுகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம்.
சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ்வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாக காணப்படுகிறது.
4) குடல் புண்ணோடு சேர்ந்து நெஞ்செரிச்சல்:
சிலநேரங்களில் அமில நீரானது, வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம்.வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும்.
இந்த மாதிரியான அசவுகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒரு நபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார் என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும்.
சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.
5) குடல் புண்ணினால் ஏற்படும் ரத்தப் போக்கு:
சிலருக்கு வயிற்று வலி குறிப்பிட்ட இடைவெளி விட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாக கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம். மருத்துவம் செய்யா விட்டால் குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யா விட்டால் ரத்தக் கசிவும் சமயத்தில் ரத்தப் போக்கும் ஏற்படும்.
இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புகள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.
ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படு கிறது. அதனால் வயிற்றை அறை தோல்களில் வீக்கம் ஏற்படு கிறது. இதை உடனடி அறுவை சிகிச்சை மூலமே குணப் படுத்த முடியும். சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது. இதுவும் அறுவைச் சிகிச்சையால் தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
6) குடல் புண் குணமடைய செய்ய வேண்டியவை:

குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும். தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவைட்டிய லஸ்சி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும். மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.
*1.வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.
*2.மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.
*3.பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.
*4.பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்ட வுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.
*5.இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப் படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்தி கொள்ளலாம். யோகாசனம், தியானம் முதலியவற்றை பயில வேண்டும்.
*6.எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும். முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதை தவிர்க்க வேண்டும்.
*7.புகை பிடிக்கக் கூடாது, மது, காபி பானங்கள் குடிக்க கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக் கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது. அதிகமாகக சாப்பிடக் கூடாது. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.
7) குடல் புண்ணுக்கு நவீன சிகிச்சைகள்:
1.செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிறு வலி போன்றவை அடிக்கடி வந்தால் அல்சர் இருப்பது நிச்சயம். எனவே இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக வயிறு தொடர்பான சிறப்பு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
*2.வயிற்றில் சில அமிலங்கள் அதிகமாக சுரந்தாலும் அல்சர் ஏற்படும். இதை மாத்திரைகள் மூலம் குறைக்க முடியும். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
*3.அல்சரை குணப்படுத்த தற்போது புதுவித மருந்து, மாத்திரைகள் உள்ளன. அவற்றை வயிறு தொடர்பான சிறப்பு மருத்து வர்கள் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது நல்லது. மருந்து கடைக்காரர்களிடம் சென்று ஏதாவது சில மாத்திரைகளை வாங்கி உட் கொள்வது ஆபத்தானது.
*4. நவீன சிகிச்சை மூலம் சென்னையை சேர்ந்த பல அல்சர் நோயாளிகள் குணமடைந் துள்ளனர். அல்சர் நோயாளிகள் தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது.
*5.குடல் புண் உள்ளவர்களுக்கு உரிய ஆகாரம் என்னப பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளை சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.
*6.குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம், காபி, மது, கார்பண்டை ஆக்சைடு அடைக்கப்பட்ட குளிர் பானங் களை தவிர்க்க வேண்டும், டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ****நன்றி : களஞ்சியம்
--


என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்..

அஸ்கர்
மாதவலாயம்.[ ஷார்ஜா - அமீரகம் ]
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"எங்கள் இறைவா!  என்னையும்,  என் பெற்றோர்களையும்,  முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக"
அல் குர்ஆன் 14:41.
اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”  ஆமீன்.
பாழாக்கப்ப​டும் ஃபஜ்ர் தொழுகை

தொழுகை என்பது இஸ்லாத்தின் தூண் என்று போற்றப்படும் ஒரு சிறப்புமிக்க
வணக்கம் என்பதை அனைத்து இஸ்லாமியர்களும் அறிந்து வைத்திருக்கின்றார்கள்.
இதையும் தாண்டி தொழுகை, இறைவனுக்கு மிகவும் விருப்பமானதாகும்.
இறைவனிடத்தில் மிக நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

மறுமை நாளில் முதன் முதலாய் இறைவன் நம்மிடம் விசாரிப்பது இந்த தொழுகையைப்
பற்றிதான். இதற்கான பதில் சரியாய் அமைந்து விடுமாயின் பின்னுள்ள அனைத்து
கேள்விகளுக்கும் திருப்திகரமான பதிலை கொடுத்து வெற்றிக்கனியை
எட்டிப்பறித்து விடுவோம். மாறாக, தொழுகையின் கேள்விக்கு சரியான பதில்
நம்மிடத்தில் இல்லை என்றால் நாம் தோல்வியை தழுவுவது சர்வநிச்சயம்.
இவ்வாறு தொழுகையின் அவசியத்தை நபி(ஸல்) அவர்கள் நமக்கு பல்வேறு
சந்தர்ப்பத்தில் விளக்கியுள்ளார்கள்.

என்னதான் தொழுகையைப்பற்றி பல சமயங்களில் கேள்விப்பட்டாலும் நாம்
தொழுகையில் போதிய அக்கறை இல்லாதவர்களாக இருக்கின்றோம். இஸ்லாத்தின்
தூண்களில் ஒன்றான தொழுகை நம்மிடத்தில் பெரிதும் ஆட்டம் காணக்கூடியதாகவே
இருக்கின்றது.நபி(ஸல்) அவர்கள் தனது மரணத்தருவாயில் கூட இந்த தொழுகையை பற்றி நினைவூட்ட
தவறவில்லை என்ற செய்தியை குறிப்பிட்டாலும் அதனால் என்ன? என்பது போல்
தொழுகை விஷயத்தில் மிகவும் அலட்சியமாக நமது செயல்பாடு
அமைந்திருக்கின்றது. அதிலும் குறிப்பாக நம்மில் ஏராளமானோர் ஃபஜ்ர்
தொழுகையை சர்வ சாதரணமாய் தவறவிட்டு விடுகிறோம். அதை பெரிதாய் அலட்டிக்
கொள்வதாகத் தெரியவில்லை. இன்னும் பலர் சுப்;ஹ் தொழுகையை விடுவதை அன்றாட
வழக்கமாக ஆக்கி கொள்கின்றனர். ஏனைய தொழுகைகளை தவறாமல தொழுவார்கள். ஆனால்
சுப்ஹ் தொழுகையை தவறியும் தொழ மாட்டார்கள்.


சுப்ஹ் தொழுகையும் மறுமை பரிசுகளும்

ஒன்றின் உண்மையான மதிப்பை உணர்ந்தால் தான் அதை சரியான முறையில் பேணும்
பழக்கம் நம்மிடத்தில் தழையோடும். இது போலத்தான் சுப்ஹ் தொழுகையை சரிவர
பேணாமல் இருப்பதோடு, அதைப்பற்றி சற்றும் கண்டு கொள்ளாமல் இருப்பது அதன்
மதிப்பை நாம் சரிவர உணரவில்லை என்பதே காரணமாகும்.

'இஷாத்தொழுகையிலும், ஃபஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையை மக்கள்
அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது வந்து விடுவார்கள்'.
(அபூஹூரைரா(ரலி) புகாரி 615


மலக்குமார்களின் நற்சான்று

'இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும்
தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக உங்களிடையே வருகின்றனர். ஃபஜ்ர்
தொழுகையிலும் அஸர் தொழுகையிலும் ஒன்று கூடுகின்றார்கள். பிறகு,
உங்களிடையே இரவு தங்கிவர்கள் மேலேறி செல்கின்றனர். அப்போது மக்களைப்பற்றி
மிகவும் அறிந்தவனான அல்லாஹ் அவர்(வானவர்)களிடம் (பூமியில் உள்ள) என்
அடியார்களை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்? என்ற கேட்பதற்க்கு அவர்கள்,
அவர்களை உன்னைத் தொழுகின்ற நிலையில் விட்டு வந்தோம்: அவர்கள் தொழுதுக்
கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்
என்பார்கள்' (அபூஹூரைரா(ரலி) புகாரி 555

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் சுப்ஹ் தொழுகையை நாம்
பங்கெடுத்தவர்களாக இருந்தால் அம்மலக்குமார்கள் நம்மை பற்றி இறைவனிடம்
சொல்லும்போது உன்னுடைய அடியார்களை உன்னை தொழுத நிலையில் அவர்களிடம்
சென்றோம். தொழுத நிலையிலேயே அவர்களை விட்டு பிரிந்து வந்தோம் என்பதாக
நற்சான்று கொடுப்பார்களாம்.  இந்த புனிதமிக்க சபையில் நாம்
பங்கெடுக்காதவர்களாக இருந்தால் இந்த  கண்ணியமிக்க மலக்குமார்களின்
நற்சான்றை இழந்த கைசேதவான்களாக ஆகி விடுவோம். மேலும் நாம் சுப்ஹ்
தொழுகைகளை நிறைவேற்றினால், நாம் கற்பனை செய்திடாத பல மகத்தான பரிசுகளை
உள்ளடக்கியிருக்கும் சொர்க்கத்தையே பரிசாக தருகிறான்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'பகலின் இரு ஓரங்களிலுள்ள (ஃபஜ்ர் அஸர் ஆகிய) இரு நேரத் தொழுகைகளை யார்
தொழுகின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்'.   அபூமூசா (ரலி) புகாரி 574

இப்படிப்பட்ட பாக்கியத்தை நாம் இனியும் இழக்கலாமா? சொர்க்கம் செல்ல
வேண்டும் என்ற நம்முடைய தீராத ஆசையை இந்த சுப்ஹ் தொழுகையின் மூலம்
நிறைவேற்ற முடியும் என்பதை அறிந்த பிறகும் இதை கோட்டை விடலாமா? சுப்ஹ்
தொழுகையின் மூலம் இறைவன் தரும் பரிசை நாம் பெற்று விடக்கூடாது
என்பதற்காகவே ஷைத்தான் இந்த தொழுகையில் பார்த்து நமக்கு வேட்டு
வைக்கிறான்.  ஷைத்தானின் சதிவலையை அறுத்தெறிந்தால் மட்டுமே சொர்க்கத்தின்
கதவை திறக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சொர்க்கத்திற்கான
முன்பதிவு டிக்கெட்டை சுப்ஹ் தொழுகையின் மூலம் பெற்றிடுங்கள்.


இறைபொறுப்பில் சுப்ஹ் தொழுத அடியார்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:   'சுப்ஹ் தொழுகையைத் தொழுதவர்
அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். இவ்வாறு அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள
ஒன்றைக் குறித்து அவன் உங்களிடம் விசாரனை செய்(யும் நிலையை நீங்கள்
ஏற்படுத்)திட வேண்டாம். ஏனெனில் அவன் தன் பொறுப்பிலுள்ள ஒன்றைக் குறித்து
ஒருவரிடம் விசாரிக்கத் தொடங்கினால் அதைக் கண்டுபிடித்தே தீருவான்.
பின்னர்(வரம்பு மீறி நடந்துக் கொண்ட) அவனை நரக நெருப்பில் முகங் குப்புற
தள்ளிவிடுவான்'(முஸ்லிம் 1164)

நம்மை படைத்த இறைவனே நமக்கு பொறுப்பாளியாக மாறும் பெரும்பாக்கியம் இந்த
சுப்ஹ் தொழுகையில் இருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்கும்போது உண்மையில்
மெய்சிலிர்த்து போகின்றோம். எனவே, நம்மை இறைவன் தன் பொறுப்பில் எடுத்துக்
கொள்ள விரும்புவர்கள் சுப்ஹ் தொழுகையை பேணி தொழுபவர்களாக மாற வேண்டும்.
மேலும், 'உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் மஃக்ரிப் தொழுகைக்குப்
பிறகு பள்ளிவாசலுக்கு வந்து தனியாக அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம்
சென்று நானும் அமர்ந்தேன். அப்போது அவர்கள், என் சகோதரரின் மகனே!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன்
தொழுகின்றவர், பாதி இரவு வரை நின்று வணங்கியவரைப் போன்றவராவார். சுப்ஹ்
தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றவர், இரவு முழுவதும் நின்று வணங்கியவரை
போன்றவர் ஆவார்' என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
(முஸ்லிம் : 1162)

ஜமாஅத்துடன் சுப்ஹ் தொழுகையை நிறைவேற்றினால் முழு இரவும் நின்று வணங்கிய
நன்மையை இறைவன் வாரி வழங்குகின்றான். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
நாம் ஒரு காலத்திலும் செய்ய முடியாத நன்மையை இறைவன் இந்த சுப்ஹ்
தொழுவதின் மூலமே தந்து விடுகின்றான் எனும்போது சுப்ஹ் தொழுகையின்
மகத்துவம் இப்போது புரிகிறதல்லவா?

நன்மையை அதிகமதிகம் கொள்ளையடிக்க விரும்பினால் முழு இரவும் நின்று
வணங்கிய நன்மையை பெற வேண்டும் என்று ஆசை கொண்டால் சுப்ஹ் தொழுகையை
ஜமாஅத்துடன் தொழுதாலே போதுமானது. இதையெல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல்
சர்வசாதாரணமாய் இந்த தொழுகையை புறக்கணித்தால் இந்த தொழுகையை நிறைவேற்ற
இனியும் முன்வரவில்லை என்றால் நம்மை விட துர்பாக்கியவான்கள் வேறு
யாருமில்லை.


ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் உற்சாக நன்மையும்

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உங்களில் ஒருவர் உறங்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான்
மூன்று முடிச்சுகளை பொட்டு விடுகின்றான். ஒவ்வொரு முடிச்சின்போதும்,
இன்னும் உனக்கு நீண்ட இரவு இருக்கிறது. ஆகவே நீ உறங்கு! என்று கூறி
விடுகிறான். நிங்கள் கண் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு
முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் உளு செய்தால் மற்றொரு முடிச்சு
அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் தொழுது விட்டால் முடிச்சுகள் முழுவதும்
அவிழ்ந்து விடுகின்றன. நீங்கள் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் காலைப்
பொழுதை அடைவீர்கள். இல்லையெனில் மனக் குழப்பத்துடனும், சோம்பலுடனும்
காலைப் பொழுதை அடைவீர்கள்' (அபூஹூரைரா(ரலி) புகாரி 1142

இறைவனை நினைவு கூர்ந்து உளு செய்து சுப்ஹ் தொழுது விட்டால் சுறுசுறுப்பு
கிடைப்பதோடு ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்பும் கிடைத்து
விடுகின்றது. அதே நேரம் சுப்;ஹ் தொழாமல் உறங்கி விட்டால் சோம்பலுடனே
எழுவதாக நபி (ஸல்) கூறுகின்றார்கள். இந்த சுப்ஹ் தொழுகை நமக்கு பல
நன்மைகளை பெரிதும் பெற்றுத் தருவதோடு உற்சாகத்தையும் பெற்று தரும் என்று
கேட்டாலே நம்மையும் அறியாமல் நம்மிடையே உற்சாகம் தொற்றிக் கொள்ளத்தான்
செய்கிறதல்லவா?

நபித்தோழியர்களின் பங்கெடுப்பு

'நம்பிக்கையுள்ள பெண்கள் தங்களை கம்பளி ஆடைகளால் போர்த்திக் கொண்டு
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் கலந்துக்
கொள்வார்கள். தொழுகையை முடித்துக் கொண்டு தங்கள் இல்லங்களுக்கு
திரும்பிச் செல்வார்கள். இருட்டின் காரணமாக அவர்களை யாரும் அறிந்துக்
கொள்ள முடியாது. (ஆயிஷா(ரலி) புகாரி 578

உமர்(ரலீ) அவர்களின் மனைவியரில் (ஆத்திகா எனும்) ஒருவர் சுப்ஹ், இஷா
ஆகியத் தொழுகையைப் பள்ளியில் தொழச் செல்வார். அவரிடம், (உங்கள் கணவர்)
உமர்(ரலி) அவர்கள் இதை வெறுக்கிறார்கள்: ரோஷப்படுகிறார்கள் என்று தாங்கள்
அறிந்திருந்தும் நீங்கள் ஏன் (பள்ளிக்கு) செல்கிறீர்கள்? என்று
கேட்கப்பட்டது. அதற்கு அவர், (என்னைப் பள்ளிக்குச் செல்ல விடாமல்) அவரை
எது தடுக்கிறது? என்ற கேட்க, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பெண்கள்
பள்ளிவாசலுக்கு வருவதை தடுக்காதீர்கள் என்ற கூறியதே உமர்(ரலி) அவர்களை
தடுக்கிறது என்று பதில் வந்தது. (இப்னு உமர்(ரலி) புகாரி 900

சுப்ஹ் தொழுவதின் மூலம் அபரிமிதமான நன்மைகளை பெற்றுவிட முடியும் என்று
அறிந்து, அதை அடைந்தே தீர வேண்டும் என்பதற்காக இந்த நபித்தோழியர்கள்
பங்கெடுத்துள்ளார்கள். பெண்கள் வீட்டில் இருந்து கொண்டே தொழலாம்
என்றாலும் மற்ற தொழுகைகளை தொழுகிறார்களா? என்பதே கேள்விக்குறி எனும் போது
சுப்ஹ் தொழுகையை பற்றி விளக்கி கூற வேண்டிய அவசியமில்லை. வீட்டு
வேலைகளையும் குழந்தைகளையும் காரணம் காட்டுவதை விடுத்து, எவ்வாறு அந்த
நபித்தோழியர்கள் இந்த சுப்ஹ் தொழுகையில் பங்கெடுக்க ஆர்வம்
செலுத்தினார்களோ அதுபோல இன்றைய பெண்களும் சரி ஆண்களும் சரி பெரிதும்
கவனம் செலுத்திட வேண்டும்


சுப்ஹ் தொழாதவருக்குரிய தண்டனை

சுப்ஹ் தொழுகையை நிறைவேற்றினால் நாம் இது வரையிலும் எண்ணிப்பார்த்திராத
பெருவாரியான வெகுமதிகள் கிடைக்கும் என்பதை நபிகளாரின்
பொன்மொழிகளிலிருந்து விளங்கி விட்டோம். இதையெல்லாம் அறிந்த பிறகும்
சுப்ஹ் தொழுகையை கோட்டை விடும் பாக்கியவான்கள்? இருக்கத்தான்
செய்வார்கள். இவர்களுக்கு சுப்ஹ் தொழுகையின் நன்மைகள் பெரிதாய் தெரியாது.
மாறாக, அந்த சொற்ப நேரத்து தூக்கமே பெரும் சுகமாய் இருக்கும்.
இதற்கிடையில் அந்த தூக்கத்தின் சிற்றின்பத்தை அனுபவிக்க நமக்கும் அழைப்பு
விடுப்பார்கள். இவ்வாறாக சுப்ஹ் தொழுகையை பாழாக்கியவர்களின் மறுமை நிலையை
நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கின்றார்கள்.

நபி(ஸல்) அவர்கள் தாம் கனவில் கண்ட கல்லால் தலை நசுக்கப்படும் மனிதரைப்
பற்றி குறிப்பிடுகையில், அவர் குர்ஆனைக் கற்று அ(தன் செயல்படுவ)தை விட்டு
விட்டவர். கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர் என்று கூறினார்கள்.
(சமூரா பின் ஜூன்துப் (ரலி) புகாரி 1143
லேசான தலைவலி ஏற்பட்டாலே நம்மால் தாங்க இயலவில்லை. பெரும் பாறையினால்
நமது தலை நசுக்கப்படுவதை எப்படி தாங்க முடியும். இந்த கடுமையான
தண்டனையிலிருந்து நம்மை காத்துக் கொள்ள சுப்ஹ் தொழுகையை பேணி கொள்வோம்.
இத்தனை வெகுமதிகளை உள்ளடக்கியுள்ள இந்த தொழுகைக்காக அற்ப தூக்கத்தை
கலைப்போமாக!
நன்றி : சத்தியப்பாதை
Helping Fund

சவூதி அரேபியாவின் ஜித்தா நகர காவல்துறை சமீபத்தில் ஒரு அதிர்ச்சியான புள்ளி விவரத்தை வெளியிட்டு அரபுநாட்டு ஆண்களை ஆடிப்போக வைத்துள்ளது.
“கணவன்மார்களை அடித்து வெளுத்து வாங்கும் பெண்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக்கிறது என்பது தான் அந்த அதிர்ச்சியான புள்ளிவிவரம். ஒரு மாதத்திற்கு 145 ஆண்கள் அடியின் வேதனை தாங்க முடியாமல் காவல்துறையில் புகார் அளிக்கின்றனர் என்றும் இந்தக் கொடுமை ஆண்டுக்கு 20 சதவிகித அளவிற்கு அதிகரித்து வருகிறது என்றும் ஜித்தா நகர காவல்துறை தெரிவிக்கிறது.
“இதுபோன்ற வன்முறையை யார் செய்தாலும் அது குற்றம் தான் என்றாலும் பெண்கள் தங்களால் தாங்க முடியாத வேதனையை அனுபவிக்கும் போது தான் இவ்வாறு எல்லை மீறுகின்றனர் என்று இதற்கான காரணத்தை கூறுகின்றார் சவூதியின் பெண்ணுரிமை ஆர்வலரான ஃபாத்திஹா.
ஏராளமான குடும்பவியல் ஆலோசனை மையங்கள் திறக்கப்பட வேண்டும் என்றும் ஃபாத்திஹா கூறுகிறார்.


ஜித்தா நீதிமன்றத்தில் குடும்பவியல் வழக்குகளில் ஆலோசகராக உள்ள முகம்மது மவ்லு£து அவர்கள், தாங்கள் சந்தித்த இரண்டு வித்தியாசமான வழக்குகள் குறித்துக் கூறி பெருகி வரும் இந்தப் பிரச்சனையின் உள்ளார்ந்த காரணத்தை வெளிப்படுத்துகிறார்.
ஒரு கணவன் அளித்த புகாரில்….
“காலம் முழுவதும் என் மனைவி அடிக்கின்ற அடியைப் பொறுத்துக் கொண்டு தான் இவ்வளவு நாளும் வாழ்க்கையை ஓட்டினேன். ஆனால் இப்போது என் உறவுகாரர்கள் முன்பாகவும் என்னை என் மனைவி அடிக்கத் தொடங்கி விட்டாள். அதுதான் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை” என்று கூறியிருந்தாராம். மற்றொரு கணவன் அளித்த புகார் சற்று வித்தியாசமாக இருந்தது.
“என் மனைவி என்னை கண்மண் தெரியாமல் போட்டு துவைத்து எடுக்கிறாள். நான் எந்தக் குற்றமும் செய்வதில்லை. காலையில் ஃபஜர் தொழுகைக்கு எழுப்பும் போது “நல்ல து£க்கத்தில் இருக்கும் என்னை எப்படி எழுப்பலாம்”என்று காலையில் தொடங்குகிற அடி அன்று முழுவதும் இடியாக இறங்குகிறது என்று புகார் அளித்திருந்தாராம். தக்க ஆலோசனை மூலம் அந்த பெண்களுக்கும் கணவன்மார்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது என்று கூறினார் முஹம்மதுமவ்லூது.
அடி விவகாரம் அரபுநாடு முழுவதும் பெருகி வருகிறது. பலர் ஏற்கனவே இதை அனுபவித்து வந்தாலும் வெளிப்படுத்தாமல் இருந்தனர். இப்போது புகார்கள் குவியத் தொடங்கி விட்டன.
துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் வணக்கங்கள், உழ்ஹிய்யாவின் சட்டங்கள், அரஃபா நோன்பின் சிறப்புகள் மற்றம் ஈதுல் அல்ஹாவின் சட்டங்கள்
வழங்குபவர்: இப்ராஹீம் மதனீ
நாள்: 11-11-2010
இடம்: இஸ்லாமிய வழிகாட்டி மையம், ஸனாய்யியா, ஜித்தா

துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் வணக்கங்கள் from islamkalvi

Download video – Size: 133 MB

குஜராத் நேஷனல் லா யுனிவர்சிட்டியில் சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், நீதித்துறை, அரசுத் துறைகள் தனியார், சட்ட நிறுவனங்கள் ஆகியவற்றில் வளாகத் தேர்வு மூலம் வேலைகிடைத்துள்ளது.
அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.14 இலட்சம் ஊதியத்தில் வேலை கொடுக்க பிரபல சட்ட நிறுவனங்கள் முன்வந்துள்ளன. சில சட்ட நிறுவனங்கள் ரூ.12 இலட்சம், ரூ.8 இலட்சம் என்ற ஊதியத்தில் மாணவர்களை போட்டி போட்டுக் கொண்டு வேலைக்கு தேர்வு செய்துள்ளன. வளாக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவரின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.4 இலட்சம் ஆகும்.
 எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி (இலங்கை)
முஹம்மத் நபி அவர்கள் உயர்குலமான குரைஷிப்பரம்ரையில் ஆமினா என்ற பெண்ணுக்கு கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தை அப்துல்லாஹ்வையும், பிறந்து சில மாதங்களில் தனது தாய் ஆமினாவையும் இழந்தார்கள். அநாதையான இவரை அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் என்பவர் பெறுப்பேற்று வளர்த்தார்கள்.
பொதுவாக அநாதையாக வாழும் குழந்தைகளுக்கு சிறுவர் துஷ்பிரயோகங்கள், மற்றும் சீரில்லாத நடத்தைகளுக்கு ஆட்படுவதுண்டு. ஆனால் முஹம்மத் நபி அவர்கள் அவ்வாறான எவ்வித தீய நடத்தைகளையும் சந்திக்கவுமில்லை. அரங்கேற்றவுமில்லை. மக்காவில் வாழ்ந்த மக்கள் அவர்களை நற்பண்புள்ளவர், நம்பிக்கையாளர், உண்மையாளர் என அழைத்ததன் மூலம் இதை நாம் அறிந்து கொள்ளலாம்.


இவர்கள் பிறந்த காலத்தில் மக்கள் கடவுளின் நேரடியான வழிகாட்டல்களை விட்டும் திசைதிரும்பிய மிருகங்களாக வாழ்ந்து வந்தனர், பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர், மது குடித்தனர், மனித உயிர்களை துச்சமாக மதித்தனர், பெண்களை வெறுத்தனர், சாதராண விஷயத்திற்காக பலஆண்டுகள் தொடராக சண்டை இட்டுக் கொண்டனர், நிறவெற, கோத்திரவெறி, தேசியவாதம், சாதியம் போன்ற தீய பண்புகளால் மனிதர்களை அடிமையாக்கி வாழ்ந்தனர்.
விடிவைத்தேடியும், நிம்மதியைத்தேடியும் மக்கள் அலைந்திரியும் இந்த கால கட்டத்தில்தான் முஹம்மத் நபி அவர்கள் ஏக இறைவனின் தூதராக வந்து அம்மக்களுக்குப் போதனை செய்தார்கள். மக்கா என்ற ஊரில் இருந்து கருத்துரிமை பறிக்கப்பட்ட இவர்கள் மதீனா என்ற நகரைத் தேர்வு செய்து அங்கு இஸ்லாமிய அரசையும் நிறுவினார்கள்.
நல்ல பல திட்டங்களை அறிமுகப்படுத்தி சாதி, நிற, கோத்திர வேறூடற்ற சமூகமாகவும், சகோதரர்களாகவும் அவர்களை மாற்றினார்கள். ஆரம்பத்தில் அவர்களை எதிர்த்த மக்களின் பல்லாயிரக் கணக்கானோர் பிற்காலத்தில் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்று முஹம்மத் நபியுடன் இணைந்தார்கள்.
மதீனாவில் 10 ஆண்டுகள் வாழ்ந்த முஹம்மத் நபி அவர்கள் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமையை மதீனா சென்ற பத்தாவது வருடம் துல்ஹஜ் என்ற மாதத்தில் நிறைவேற்றப்போவதாக அறிவிப்பு விடுத்தார்கள். பல்லாயிரக்கணக்கனானோர் அதில் கலந்து கொள்ள மதீனா வந்தனர். அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு மக்கா வந்து அங்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்த பின்னர் மக்காவில் இருந்து கிட்டத்தட்ட 16 கி. மீட்டர்களுக்கு அப்பால் உள்ள அரஃபா என்ற முற்றவெளியில் ஒரு பள்ளத்தாக்கருகில் துல்ஹஜ் பிறை ஒன்பதில் அவர்களை ஒன்றிணைத்து ஒரு பேருரையும் நிகழ்த்தினார்கள். அதில் மனித உரிமை, கொலையாளிகளை மன்னித்தல், வட்டித்தொழிலுக்குத் தடை விதிப்பு, நிற, கோத்திர, குலப்பேதங்களுக்கு முடிவு போன்ற பல அம்சங்கள் உள்ளடங்கி இருந்தன. அவை பற்றி இங்கு சுருக்கமாகக் கவனிப்போம்.
1- மற்றவர் மானம், மரியாதை, சொத்துக்கள் புனிதமானவை
மக்களே அறிந்து கொள்ளுங்கள்! இந்த தினம் எவ்வளவு புனிதமாதோ, இந்த இந்தப் பிரதேசம் எவ்வளவு புனிதமானதோ அதே போன்று உங்களது இரத்தங்களும், உங்களது செல்வங்களும் மற்றவர் மீது -ஹராம்- முழுமையாக விலக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரையை நபித்தோழர்களுக்கு அன்றுதான் போதித்தார்கள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மாற்றமாக இருபத்தி மூன்று ஆண்டுகள் அவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் இது பற்றி எச்சரித்திருக்கின்றார்கள்.
ஹுதைபியாவில் ஒரு நிகழ்வு:
ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு ஹுதைபியா என்ற இடத்தில் நபிகள் நாயகம் அவர்களுக்கும், மக்கா இறை நிராகரிப்பாளர்களுக்கும் இடையில் ஓர் சமரச நிகழ்வு கையெழுத்தானது. உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபி என்பவர் (இஸ்லாத்தைப் பின்புகு ஏற்றவர்) மக்காவாசிகள் சார்பாக கலந்து கொண்டார். அவர் சமரச நிகழ்வின் இடையில் பாசமாக நபிகள் நாயகத்தின் முகத்தை தடவ தனது கையைக் கொண்டு சென்றார். முகீரா பின் ஷுஃபா என்ற நபித்தோழர் இவரது கையை ஒரு முறைக்குப் பலமுறை தட்டிவிடுகின்றார். இதை அவதானித்த அவர், யார் இவர் ? எனக் கேட்டபோது , (இவரைத்தெரியாதா) இவர்தான் உங்கள் சகோதரரின் மகன் முகீரா என்று கூறப்பட்டது. உடனே அவர்! ஏ! மோசடிக்காரனே! உனது மோசடி விஷயமாக நான் பல தடவைகள் முயற்சி செய்து பலனற்றுப் போனது உனக்கு நினைவில்லையோ எனக் கூறினார். இந்த முகீரா என்பவர் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னால் ஜாஹிலிய்ய மக்களுடன் பயணம் சென்று, அவர்களின் பணங்களைத் திருடிக் கொண்டு இஸ்லாத்தில் இணைந்திருந்தார். இஸ்லாத்தை நான் அங்கீகரிக்கின்றேன், ஆனால் அந்த பொருள் தொடர்பானதற்கு நான் பொறுப்பல்ல என நபி (ஸல்) அவர்கள் அழுத்தமாகக் கூறினார்கள். (புகாரி).
பிறிதொரு சந்தர்ப்பத்தில் தனது தோழர்களிடம் உங்களில் யாராவது மற்ற சகோதரனுக்கு மானம், மற்றும் அதுவல்லாத எதிலாவது அநீதி இழைத்திருப்பின் அதிலிந்து இவ்வுலகியே நிரபராதியாகிக் கொள்ளுங்கள். மரணத்தின் பின் வரும் அந்நாளில் தீர்ப்பளிக்கப்படுகின்ற போது உங்களிடம் உள்ள தங்கம், வெள்ளிக் காசுகளைக் கொடுத்து விடுதலை பெறமுடியாது எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).
இஸ்லாமில் ஒரு முஸ்லிம் மனிதர்களுக்கும், பிற படைப்பினங்களுக்கும் அநீதி செய்வது முழுமையாக் தடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரையின் அடிப்படையில் நடப்பவர்கள் உண்மை முஸ்லிம்கள். இவ்வளவு பெரிய அறிவுரையை 1500 ஆண்டுகளுக்கு முன்னால் நபிகள் நாயகம் அவர்கள் பிரகடனம் செய்தார்கள். அவர்கள் தனது இருபத்தி மூன்று ஆண்டு கால நபித்துவ வாழ்க்கையில் பத்தொன்பது போர்கள் புரிந்தார்கள். அதில் 1220 பேர் வரைதான் கொல்லப்பட்டதாக வரலாறு சொல்கின்றது. ஆனால் 1990ல் ஈராக் மீது அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடையால் மாத்திரம் 500,000. (ஐந்து இலட்சம்) குழந்தைகள் மரணித்தார்கள்.
2003ல் உலக நாடுகளின் காதுகளில் பூச்சுற்றிய அமெரிக்காவின் ஆக்கிரிமிப்பால் 17 இலட்சத்திற்கும் அதிகமான ஈராக்கியர்கள் மாண்டிருக்கின்றார்கள். நாள்தோரும் பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றது. நூற்றுக்கணக்கானோர் அங்கவீனர்களாக்கப்படுகின்றனர். இப்படியான செயற்பாடுகளை நபிகள் நாயகம் அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார்கள்.
ஒரு போர் களத்தில் கற்பமான ஒரு பெண்ணை ஒருவர் அடிமையாக சிறைப்பிடித்து தனது கூடாரத்தினுள் கட்டிவைத்திருந்தார். இவரது நோக்கம் இந்தப் பெண்ணுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதாக இருந்தது. இதனை அவதானித்த நபிகள் நாயகம் அவர்கள் என்ன இவர் இந்தப் பெண்ணுடன் உடலு உறவில் ஈடுபட நாடி இருக்கின்றார் போலும் என அங்குள்ள மக்களிடம் கேட்டார்கள். அவர்கள் ஆம் ! அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள். எனக்கு அறிந்துதான் இதைக் கேட்டேன். இவர் இந்தப் பெண்ணுடன் நடந்து தனது வாரிசல்லாத ஒருவரை தனக்குரிய வாரிசு எனக் கூறப்போகின்றாரா? அல்லது மற்றவன் வாரிசை தனதாக்கிக் கொள்ளப்போகின்றாரா? என உரத்த குரலில் பேசி விட்டு, இவர் அவ்வாறு நடந்திப்பின் நான் சாபத்தைச் செய்திருப்பேன்; அது அவரை மண்ணறைக்குக் கொண்டு சென்றிருக்கும் எனக் கூறினார்கள். (முஸ்லிம்).
ஜனநாயகம், முதலாளித்துவம் என்றெல்லாம் வாய்கிளியப் பீற்றிக் கொள்ளும் அமெரிக்கப்படைகள் ஈராக்கிலுள்ள அபூகிரைப் சிறைக்கைதிகளுடன், குவாண்டனாமோவிலுள்ள கைதிகளுடன், ஆப்கானில் பாக்ராமிலுள்ள கைதிகளுடன் நடந்து கொள்ளும் முறை பற்றி உலகம் காறித்துப்பியது. நடுநிலையான மீடியாக்களும், நாளேடுகளும் பக்கம் பக்கமாக வெளிச்சம் போட்டுக்காட்டின. இவ்வளவும் மற்றநாடுகளின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக வீணாக ஓட்டப்பட்ட இரத்தங்களாகும் என்பதை உலகுக்குத் தெரியும் என்பதை அமெரிக்கர்கள் தெரிந்து கொண்டே இந்தக் கொள்ளையிலும், கொலையிலும் தம்மை வெட்கமின்றி ஈடுபடுத்திக் கொண்டனர்.
2- குல, கோத்திர, நிற, சாதிவேறுபாடு, அல்லாஹ்வுக்கு தரகர் ஏற்படுத்துதல் போன்ற அறியாமைக்கால அனைத்து பண்பாடுகளும் மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டு விட்டதை அறிவித்தமை.
நிரம், கோத்திரம், சாதி வேறுபாடுகளுடன், மனிதர்களை அடிமையாக்குதல், மற்றவர்களின் உரிமைகளைப் பறித்தல், வீட்டோ பவர் நடைமுறையை ஒத்த நடைமுறை, மற்றவர்களைக் கேவலமாக நினைத்தல், அல்லாஹ்வுக்கு இடைத்தரகர்களை உண்டு பண்ணி அவனது கண்ணியத்தைக் குறைத்தல் போன்ற தரம் கெட்ட வேலைகள் ஜாஹிலிய்யப் பண்பாடு என்றே அழைக்கப்படுகின்றது. இவ்வாறான அனைத்து விதமாகன பழக்கங்களும் புதை குழிக்கு அனுப்பப்படுவதாகக் கூறினார்கள்.
ஒரு தாய் மக்கள் நாமென்போம் என்ற உண்மையினை 1500 ஆண்டுகளுக்கு முன்னால் அண்ணல் நபி அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. நீங்கள் ஒவ்வொரும் ஆதாமின் பிள்ளைகள், ஆதாம் மண்ணில் இருந்து படைக்கப்பட்டார்,
அபீஸீனியக் கருப்பு அடிமையான பிலால் (ரழி) அவர்கள் அதான் எனப்படும் தொழுகை அழைப்பிற்கு தலைமை முஅத்தினாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். இஸ்லாமல்லாத மதத்தில் பல சாதிகள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் மற்றவரது கோயிலுக்குக் கூட செல்லமுடியாத நிலை. இந்தியாவில் தலித்துக்கள் என்ற பிரிவினர் தீண்டத்தகாதர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் கிரிஸ்தவ மதத்திற்கோ, அல்லது புத்த மதத்திற்கோ சென்றாலும் அவர்களின் சாதி ஒழிவதில்லை. நேற்றுவரை முடிவெட்டிக் கொண்டிருந்த ஒருவன் இஸ்லாத்தின் இணைந்த மறு நிமிடமே முஸ்லிம் செல்வந்தரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து ஒன்றரக்கலந்து உறவாடுகின்றான்.
நிற, கோத்திர, தேசிய வெறிகளும், வாதங்களும் இஸ்லாத்தில் இருந்து ஓரம் கட்டப்பட்டவையாகும். உலகுக்கு நாகரீகத்தைக் கற்றுக் கொடுப்பதாகக் கூறும் அமெரிக்காவில் இருக்கும் வெள்ளை மாளிகை என்ற பெயர் கருப்பின மக்களுக்கு எதிராக சூடப்பட்டதாகும் என்பதாக மால்கம் எக்ஸ் என்ற அறிஞர் பற்றிய ஆய்வின் குலாம் முகம்மத் என்ற எழுத்தாளர் குறிப்பிடுகின்றார்.
நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்க கருப்பின மக்களின் விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். கிரிஸ்தவர்கள் மத்தியில் புரொடெஸ்டான்ட், கத்தலிக் என்ற இரு வர்க்க முரண்பாட்டடினால் பல ஆண்டுகள் சண்டை நடைபெற்றதாக வரலாறு சொல்கின்றது.
3- தனது குடும்பக் கொலையாளிகளை முதலாவதாக மன்னித்ததாக அறிவித்தமை.
நபிகள் நாயகத்தின் அரஃபாத்தின பேருரையில் உரையில் உள்ளடங்கி இருந்து அம்சங்களில் கொலை குற்றம் புரிந்தோரை மன்னித்ததாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அறிவித்ததும் ஒன்றாகும். இதை சம்பிரதாய அறிவிப்பாகவோ, அல்லது பிறரின் குற்றவாளிகளை மன்னித்தாகவோ விளங்கிக் கொள்ளக் கூடாது.
மாற்றமாக தனது உறவினர்களில் ஒருவரைக் கொலை செய்தமைக்கான மன்னிப்பாகும். இயாஸ் பின் ரபீஆ என்பவர் சிறு வயதில் பனூஸஃத் கோத்திரத்தில் செவிலித்தாய் மூலம் பால்குடித்து வாழ்ந்து கொண்டிருந்த போது ஹுஸைல் என்ற கோத்திரத்தினர் இவரைக் கொலை செய்து விடுகின்றனர். இதற்கு குழுமக் கொலை என்று சொல்வார்கள். இவருக்காக அந்தக் கோத்திரத்தினர் நபிகள் நாயகத்தின் கை ஓங்கி இருப்பதால் நாம் கொலை செய்யப்படுவோம் என்ற பீதியில் வாழ்ந்து வந்தனர். பலிக்குப்பலி தீர்ப்பு தொடர்பில் நமது இரத்தம் தொடர்பானதை முதலவதாக தாம் மன்னித்ததாக நபி நாயகம் அவர்கள் அறிவிப்புச் செய்தததை எவ்வளவு பெரிய மனித நேயப் பண்பாடு என்று சிந்தியுங்கள்.
குஜ்ராத் முஸ்லிம்களை தீயிலிட்டுக் கொழுத்தி, பெண்களின் கற்புகளைச் சூரையாடி இந்து வெறியர்களை அதன் பின்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கொல்லப்பட்டவர்களை முஸ்லிம்கள் மனித நேயத்துடன் நடத்தவில்லையா?
இன்று, ஒரு முஸ்லிம் நாடு மற்றொரு நாட்டையோ, அல்லது ஒரு நாட்டில் வாழும் முஸ்லிம்கள் சக சமுதாயத்தவரையோ ஆக்கிரிமிதட்ததாகவோ, குண்டுவைத்துக் கொண்டார்கள் என்றோ ஒரு ஆதாரம் கூட இல்லாத நிலையிலும் உலகில் கருணையையும், அன்பையும் போதித்த நபிகள் நாயகத்தையும், அவரைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதில் மீடியாக்கள் போட்டி போட்டுக்கொள்கின்றன.
மாவோஸ்டிகள், நக்ஸலைட்டுகள், குஜ்ராத் குண்டர்கள், புலிப்பயங்கரவாதிகள் பற்றி மௌனமாக இருக்கும் பத்திரிக்கைகள் முஸ்லிம்களை எப்படி சீண்டுகின்றார்கள் என்று பாருங்கள்.
4- வட்டி என்ற வன்கொடுமை ஒழிப்புப் பிரகடனம்.
மனிதனை கெளரவமாக ஏமாற்றும் யூதத் தொழில்தான் வட்டி, வட்டித்தொழிலை உலகில் ஆரம்பித்தவர்கள் யூதர்களே! ஏழை மனிதர்களின் உதிரங்களை உரிஞ்சி, அவர்களைக் கசைந்து பிழியும் பாதுகாப்புடன் நடந்தேறும் மிகப் பெரும் கொள்ளை. இந்தக் கொள்ளையால் எத்துணை தற்கொலைகள், எத்துணை குடும்பத்தகராறுகள், எத்துணை சமூகக் கொடுமைகள் நாளாந்தம் அரங்கேறுகின்றன என்பதை நாம் அறிவோம்.
இதையும் மண்ணோடு புதைக்கப்படுகின்றது என அறிவித்து தனது சிறிய தந்தையர்களில் ஒருவரான அப்பாஸ் என்பவர் கொடுத்த வட்டியைத் தள்ளுபடி செய்வதாக தனது குடும்பத்தில் இருந்தே ஆரம்பம் செய்தார்கள்.
இந்தியாவில் வருடந்தோறும் விவசாசிகள் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர், காரணம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலை என்கின்றனர், ஒன்றோ குலம், ஒருவனே தேவன் என வாயளவிலும், ஏட்டளவிலும் கோட்பாடுகள் புதைந்து போய் இருப்பதும், ஒருவனுக்குச் செய்கின்ற பண உதவிக்காக பல ரூபாய்களை கொள்ளை அடிப்பதும் இதற்கான காரணங்களில் ஒன்றாகும்.
வட்டித் தொழில் அல்லாஹ்வோடும், அவனது தூதரோடும் போராடுவதற்குச் சமமான பெரும் பாவங்களில் ஒன்று என இஸ்லாம் ஆணித்தராமகக் கூறுவதுடன் வட்டி என்றோ ஒரு நாள் அழிக்கப்படும், தர்மம் உயிர் வாழும், கடனாளியை மன்னிப்பதால் மறுமையில் அல்லாஹ்வின் நிழலின் கீழ் கௌரவம். கடனாளி திருப்பித் தரமுடியாமல் இருப்பின் காலக்கெடு வழங்குதல், ஈ அல்லது அரைவாசியை மன்னித்து, மீதியைப் பெறுதல் போன்ற மனிதர்களுக்கு ஏதுவான பல நடைமுறைகளை அறிமுகம் செய்துள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வட்டி என்றோ ஒரு நாள் நஷ்டத்தைத் தழுவும் என்பதை அமெரிக்காவில் இந்த வருடத்தில் மாத்திரம் 123 வட்டி வங்கிகள் மூடப்பட்டிருப்பதும், வட்டி வங்கிகளின் ஒரு அங்கமாக அமைக்கப்படுவதும், இஸ்லாமியப் பொருளாதார முறை பற்றி அடிக்கடி பேசப்படுவதும் வட்டியின் தாக்கங்களில் உள்ளவையாகும்.
5- பெண்களின் உரிமைகளைப் பேணுமாறு உரைத்தமை.
நபிகள் நாயகம் அவர்கள் அரஃபா தினப் பேருரையில் : பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள், நிச்சயமாக நீங்கள் அவர்களை அல்லாஹ்வின் அமானிதமாகக் கைப்பிடித்துள்ளீர்கள், அவர்களின் மர்மஸ்தானங்களை அல்லாஹ்வின் வார்த்தை மூலம் ஆகுமாக்கிக் கொண்டீர்கள், நீங்கள் நியாயமான முறையில் அவர்களுக்கு ஆடைய வாங்கிக் கொடுப்பதும், உண்ணக் கொடுப்பதும் உங்கள் மீதுள்ள கடமையாகும். நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் வீடுகளில் நுழைவிப்பது அவர்களுக்கு ஆகுமானதல்ல, உங்களை மீறி செயல்பட்டால் காயம் ஏற்படாதவாறு அவர்களை நீங்கள் அடியுங்கள் எனப் பிரஸ்தாபித்தார்கள்.
ஆண்கள் பெண்களை நடாத்தும் முறை, அவர்கள் மீது கணவன்மாருக்குரிய கடமைகள், மனைவியர் கணவன் விஷயத்தில் நடந்து கொள்ளும் முறை பற்றி மேலும் பல வழிமுறைகள் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளன. அவை அனைத்தும் ஒரு குடும்பத்தின் சுபீட்சமான வாழ்வை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
நவீன பெண்ணியம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், அது இஸ்லாத்தின் எதிரிகளின் மிகப்பெரிய ஆயுதம். இஸ்லாமியப் பெண்ணியம் என்ற புதிய சொற்றடர் அமெரிக்காவில் பரவலாக பேசப்படுகின்றது.
பெண்களைப் பாவிகளாக, உயிரற்ற சடங்களாக மதிக்கின்ற மதநூல்களைப்படித்துவிட்டு இஸ்லாத்திலும் இப்படித்தான் இருக்கும் என்ற தப்பெண்ணத்தில், இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை, அடிமைகள் போல நடத்தப்படுகின்றார்கள் என்றெல்லாம் தப்புப் பிரச்சாரம் செய்கின்றனர். அதனால் இஸ்லாமியப் பெண்ணியம் பற்றி அடிக்கடி அலட்டிக் கொள்கின்றனர். அதனால் என்ன விரும்புகின்றார்கள்.! பெண்களின் விடுதலையா என்றால் ஆம், ஆனால் பின்வருமாறு.
 • முறையற்ற திருமண முறை. இதை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளில் ‘ஒற்றைப் பெற்றோர் முறை’ என்கிறார்கள். (Single parenthood).
 • கருப்பைச் சுதந்திரம். (கண்டவனுடன் படுத்து உறங்கும் உரிமை, பெண்களை பெண்கள் திருமணம் செய்யும் உரிமை)
 • பெண் தான் விரும்பும் இடம் செல்ல அனுமதித்தல்
 • அன்னிய ஆடவர் ஒருவனுடன் தனிமையில் இருந்து சல்லாபம் செய்தல்,
 • மதம், மொழிகளுக்கு அப்பால் நின்று கணவனைத் தெரிவு செய்தல் போன்ற பெண்ணின் கௌரவத்தைக் குறைத்து நடுவீதியில் சீரழிய வைக்கும் நாகரிகம்.
பெண்ணுரிமைப் பற்றி பேசுவோர் பெண்களை மதித்த விதம் தெரியுமா?
 • ஆதாமைக் கெடுத்தது ஏவாள். (பைபிள்)
 • பெண் தீமைகளின் ஊற்றுக்கண். (கிரேக்கர்களின் ஆரம்ப கால நம்பிக்கை)
 • பெண்களுக்கு ஆண்மா உண்டா ? இல்லையா ? என்ற கட்டயப் பஞ்சாயத்து.
 • ஹிஜாப் அணியும் பெண்ணுக்கு அபராதம் விதிக்கும் ஃபிரான்ஸில் 1939 வருடம் வரை ஒரு பெண் விற்பதும், வாங்குவதும் குற்றமாகும். கணவனே அதைச் செய்ய முழு உரிமையுடைவன், அதில் கணவனின் உத்தரவின்றி எவ்வித கையாடலும் செய்யமுடியாது என்ற சட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. பின்பு ஆணாதிக்கத்தைப் பிரதிபலிக்கும் சில நிபந்தனைகளுடன் அது மாற்றமடைந்தது.
 • ஒரு பெண் சொத்துக்களை தனக்கென வைத்திருக்க முடியாது என்ற நடைமுறை ஜேர்மனியில் 1959 வருடம் வரை நிலவியது. மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் சம்பள முறையே அங்கும் பின்பற்றப்படுகின்றது. அதாவது: ஒரு பெண்ணிண் ஊதியம் ஒரு ஆணின் ஓதியத்தின் அரைவாசி என்ற நடை முறை. பிரட்டனில் இன்றும் ஆண்களுக்கு சரிசமமான பதவிகளில் இருக்கும் 75 வீதம் பேர் பெண்களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தை விட அரைவாசியாகும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
 • இந்தியாவில் உயர்ஜாதியினரின் நாய்க்கு உணவு கொடுத்த தலித் பெண்ணுக்கு ரூபா பதினைந்தாயிரம் அபராதம். நாயும் அவள் வீட்டில் விடப்பட்டது என்ற அசிங்கமான நடைமுறை, இது இவ்வாண்டின் ஹாட் நிவ்ஸ்.
உனது மனைவியின் வாயில் நீ ஊட்டி விடுகின்ற ஒரு கவள உணவும் தர்மமே! போதனை செய்கின்ற மார்க்கம் இஸ்லாம். தலாக் என்ற விவாகரத்து செய்யப்படும் பெண் அவளது விவாகம் ரத்தாகியதா? இல்லையா என்பதை நீதிபதி தீர்மானிப்பதற்கு முன்னால் அவள் தனது கணவனின் பொறுப்பில், அவனது செலவில் பராமரிக்கப்பட வேண்டும், அவனே குடியிருப்பு வசதி செய்து தர வேண்டும் என்றும் கூறும் இந்த அற்புதமான மார்க்கத்தில் பெண்களுக்கு எப்படி எல்லாம் உரிமைகள் வழங்கப்பட்டிருக்கும் என்பதை நடுநிலையோடு சிந்தியுங்கள்.
அல்லாஹ்வால் விசாரிக்கப்படுவதை அஞ்சியமை
இதுவும் நபிகள் நாயகத்தின் உரையில் இறுதியாக உள்ளடங்கி இருந்த அம்சமாகும். இப்படியாதொரு நடைமுறை உலகில் எந்தத் தலைவரிடமும் காணமுடியாதாகும். என்ன சொன்னார்கள் என்பதைக் கவனியுங்கள்!
நான் இவ்வாண்டின் பின் உங்களை சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது. மறுமையில் அல்லாஹ் உங்களிடம் என்னைப் பற்றிக் கேட்பான், நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள் எனக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் உங்கள் பணியை சரியாகவும், நிரப்பமாகவும் செய்தீர்கள் என்று அல்லாஹ்விடம் நாம் சாட்சி கூறுவோம் எனக் கூறினார்கள், அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள், வானின் பக்கமாக தனது ஆட்காட்டி விரலை அசைத்து, பின்பு அதை மக்கள் பக்கம் காட்டடியவர்களாக அல்லாஹ்வே! நீயே சாட்சியாக இரு! நீயே சாட்சியாக இரு! நீயே சாட்சியாக இரு! மூன்று தடவைகள் அல்லாஹ்வை வேண்டி விடை பெற்றார்கள்

ஆடையணிவதின் ஒழுக்கங்கள்


ஆடை இறைவனின் அருளாகும்

ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது. (அல்குர்ஆன் 7 : 26)
வெப்பத் தி­ருந்து உங்களைக் காக்கும் சட்டைக ளையும், போரில் உங்களைக் காக்கும் கவச உடைகளையும் அவன் ஏற்படுத்தி னான். நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன் தனது அருட் கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தினான் (அல்குர்ஆன் 16 : 81 )

அழகிய ஆடை அணிதல்
இப்னு மஸ்வூத் (ர­) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ”ஒரு மனிதர் தன்னுடைய ஆடையும் , காலணியும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இது பெருமையா? எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ” அல்லாஹ் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான்” என்று கூறினார்கள்.  நூல் : முஸ்­ம் (131)


தூய்மையான ஆடையை அணிய வேண்டும்
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் அழுக்கான ஆடை அணிந்தவராக நிற்பதைப் பார்த்தார்கள். அப்போது ” இவர் தனது ஆடையை தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு பொருளை பெற்றுக் கொள்ளவில்லையா?” என்று  கூறினார்கள்
அறிவிப்பவர் : ஜாபிர் (ர­)  நூல் : அபூதாவூத் (3540)


ஆடையணியும் போது வலது புறமாகத் துவங்குதல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீங்கள் ஆடையணியும் போதும், உளூச் செய்யும் போதும் உங்களுடைய வலது புறங்களி­ருந்தே ஆரம்பம் செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ர­)  நூல் : அபூ தாவூத் (3612)


புத்தாடை அணியும் போது ஓதவேண்டிய துஆ
நபி (ஸல்) அவர்கள் புத்தாடை அணியும் போது தலைப்பாகை, சட்டை என்று அந்த ஆடையின் பெயரைக் கூறி பிறகு ” அல்லாஹ‎ýம்ம லகல் ஹம்து. அன்த கஸவ்தனீஹி, அஸ் அலுக ஹைரகு வஹைர மாஸ‎ýனிஅ லஹ‎ý. வ அவூது பிக மின் ஷர்ரிஹி வ ஷர்ரி மாஸ‎ýனிஅ லஹ‎ý” என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ர­)  நூல் : திர்மிதி (1689 )
பொருள் : அல்லாஹ்வே இந்த ஆடையை எனக்கு அணிவித்த உனக்கே புகழ் அனைத்தும். இந்த ஆடையின் நன்மையையும் இது எதற்காக தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையையும் உன்னிடம் நான் கேட்கிறேன். இதனுடைய தீமையையும் இது எதற்காக தயாரிக்கப்பட்டதோ அதனுடைய தீங்கி­ருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.


மேற்கண்ட ஹதீஸ்களி­ருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
1.    ஆடை இறைவன் இந்த மனித சமுதாயத்திற்கு வழங்கிய மிகப்பெரும் அருட்கொடையாகும்.
2.    அழகிய முறையில் ஆடையணிவது இறைவனுடைய விருப்பத்திற்குரியதாகும்
3.    அழுக்கான ஆடையை தூய்மையாக்கிய பிறகுதான் அணியவேண்டும். தூய்மையற்ற ஆடை அணிவதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள்.
4.    ஆடையை அணியத் துவங்கும் போது வலது புறத்தி­ருந்து ஆரம்பம் செய்ய வேண்டும்
5.    புத்தாடை அணியும் போது ஓதவேண்டிய துஆவை தெரிந்து கொள்ள வேண்டும்.


ஆடையணிவதில் தடைசெய்யப்பட்ட முறைகள்

ஆடையை தரையில் படுமாறு இழுத்துக் கொண்டு செல்லுதல்

” மூன்று (வகையான) நபர்களிடம் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான் இன்னும் அவர்களுக்கு கடுமையான வேதனையும் இருக்கின்றது ” என்ற இறைவசனத்தை நபியவர்கள் மூன்று முறை ஓதினார்கள். அப்போது அபூதர் (ர­) ” அவர்கள் தோல்வியடைந்துவிட்டார்கள், நஷ்டமடைந்துவிட்டாகள்” என்று கூறிவிட்டு ”அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் 1. தன்னுடைய கணுக்காலுக்கு கீழ் ஆடையை இழுத்துக் கொண்டு செல்பவன் 2. செய்த உதவியை சொல்­க்காட்டக் கூடியவன் 3. பொய்சத்தியம் செய்து தன்னுடைய பொருளை விற்கக்கூடியவன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர­) நூல் : முஸ்­ம் (154)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” இறைநம்பிக்கையாளனின் ஆடை கணுக்கா­ன் பாதிவரை ஆகும்”
அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ர­) நூல் : அபூ தாவூத் (3570)

நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள், ”கணுக்கால்களுக்கு கீழே தொங்கும் (கையில் ) கீழங்கி(யை அணிகின்றவர்) நரகத்தில் (புகுவார்).
அறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ர­) நூல் : புகாரி (5787)

நபி (ஸல் ) அவர்கள் ” யார் தனது ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கின்றாரோ அவரை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.” என்று கூறினார்கள். அபூ பக்ர் (ர­) ” அல்லாஹ்வின் தூதரே நான் கவனமாக இல்லாவிட்டால் எனது கீழங்கியின் இருபக்கங்களில் ஒன்று கீழே சரிந்து விடுகின்றது” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” நீஙகள் தற்பெருமையுடன் அப்படிச் செய்பவர் அல்லர்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர­) நூல் : புகாரி (5784)

கையை வெளியே எடுக்க இயலாத அளவிற்கு இறுக்கமாக ஆடையைச் சுற்றிக் கொள்வதையும் ஒரே ஆடையை அணிந்திருக்கும் போது . மர்மஸ்தானம் தெரியும்படியாக இரு முழங்கால்களையும் நாட்டி வைத்து உட்காருவதையும் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ர­) நூல் : புகாரி (367)

ஒப்பனை செய்தல்
நபி (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் ,  பெண்களில் ஆண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர­) நூல் : புகாரி (5885)
மேற்கண்ட ஹதீஸ்களி­ருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
1.    கணுக்கா­ன் பாதி வரைதான் ஆடைஇறுக்க வேண்டும்.
2.    பெருமையோடு ஆடையை இழுத்துச் செல்பவனை அல்லாஹ் மறுமையில் பார்க்கவும் மாட்டான் பேசவும் மாட்டான் பரிசுத்தப்படுத்தசவும் மாட்டான். இதி­ருந்து இது எவ்வளவு கடுமையான பாவம் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்
3.    கைகளை வெளியே எடுக்க இயலாத அளவிற்கு இறுக்கமான ஆடைகளை அணிவது கூடாது.,
4.    ஆண்கள் பெண்களைப் போல் ஒப்பனை செய்வதும் பெண்கள் ஆண்களைப் போல் ஒப்பனை செய்வதும் கூடாது. இவ்வாறு செய்பவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.வெள்ளை ஆடையும் காவி ஆடையும்
வெள்ளை ஆடை அணிதல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” வெண்மையான ஆடைகளை அணியுங்கள் ஏனெனில் அதுதான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். மேலும் இறந்தவர்களையும் வெள்ளை ஆடைகளில் கஃபனிடுங்கள்.”
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர­) நூல் : திர்மிதி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” வெள்ளை ஆடையை அணியுங்கள். அது மிகத் தூய்மையானதும் மணமிக்கதும் ஆகும்.”
அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜ‎ýன்துப் (ர­) நூல் : திர்மிதி (2734)

காவி ஆடை அணிவது கூடாது.

அம்ருப்னு ஆஸ் (ர­) அவர்கள் அறிவிக்கிறார்கள் . நபி (ஸல்) அவர்கள் என்மீது இரண்டு காவி ஆடைகளைக் கண்டார்கள். அப்போது ” இது இறைமறுப்பாளர்களின் ஆடையாகும். இதை அணியாதே என்று கூறினார்கள்.”
நூல் : முஸ்­ம் (3872)
அம்ருப்னு ஆஸ் (ர­) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் என்மீது இரண்டு காவி ஆடைகளைக் கண்டார்கள். அப்போது (கோபமாக) ” உன்னுடைய தாயா இதை (அணியுமாறு) ஏவினார்கள்?” என்று கேட்டார்கள். நான் ”இதை துவைத்து (நிறத்தை மாற்றி) விடட்டுமா?” என்று கேட்டேன். நபியவர்கள் ”இல்லை அதை எரித்து விடு” என்று கூறினார்கள்.
நூல் : முஸ்­ம் (3873)
மேற்கண்ட ஹதீஸ்களி­ருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
1.    வெள்ளை ஆடை அணிவது தூய்மையானதும் சிறப்பிற்குரியதும் ஆகும்.
2.    காவி ஆடை அணிவது கூடாது. அது இறைமறுப்பாளர்களின் ஆடையாகும்.
3.    காவி நம்மிடம் இருந்தால் அதை எரித்து விடவேண்டும்.


பட்டாடை அணிதல்
பட்டாடை ஆண்களுக்கு ஹராம் ஆகும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” பட்டாடை அணிவதும் . தங்கமும் என்னுடைய சமுதாயத்தில் ஆண்களுக்கு ஹராம் (தடைசெய்யப்பட்டது) ஆகும். பெண்களுக்கு ஹலால் (ஆகுமாக்கப்பட்டது) ஆகும்.”
அறிவிப்பவர் : அபூ மூஸா (ர­) நூல் : திர்மிதி (1642)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ”சாதரணப்பட்டையோ அலங்காரப்பட்டையோ அணியாதீர்கள். தங்கம் மற்றும் வெள்ளித் தட்டுகளில் சாப்பிடாதீர்கள். அவை இம்மையில் இறைமறுப்பாளர்களாகிய அவர்களுக்கும் மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான) நமக்கும் உரியதாகும்.”
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (ர­) நூல் : புகாரி (5426)

பட்டாடையின் மீது அமர்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்
அறிவிப்பவர் : ஹ‎ýதைஃபா அல்யமான் (ர­) நூல் : புகாரி (5837)
நபி (ஸல்) அவர்கள் ” இம்மையில் (ஆண்கள்) பட்டு அணிந்தால் மறுமையில் அதி­ருந்து சிறிதளவும் அணியவே முடியாது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர் (ர­)  நூல் : புகாரி (5830)

ஆடையில் ஓரிரு வரிகள் பட்டு இருந்தால் அதை ஆண்கள் அணிந்து கொள்ளலாம்
நபி (ஸல்) அவர்கள் (ஆண்களுக்கு) பட்டு அணிவதைத் தடைசெய்தார்கள். இந்த அளவைத் தவிர. (இதைக் கூறியபோது) பெருவிரலை அடுத்துள்ள (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய ) இருவிரல்களால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர் : உமர் (ர­)  நூல் : புகாரி (5828)
மருத்துவத்திற்காக பட்டாடையை ஆண்கள் அணிந்து கொள்ளலாம்
அனஸ் (ர­) அவர்கள் அறிவிக்கிறார்கள். ” அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ர­), ஸ‎ýபைர் (ர­) ஆகியோருக்கிருந்த சிரங்கு நோயின் காரணத்தினால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.
நூல் : புகாரி (2919 )
மேற்கண்ட ஹதீஸ்களி­ருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
பட்டாடை அணிவதின் சட்டங்கள்
1.    பட்டாடை ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டதாகும். பெண்கள் பட்டாடை அணிவது கூடும்.
2.    ஆடையில் ஓரிரு வரிகள் அளவிற்கு பட்டு கலந்திருந்தால் அதனை ஆண்கள் அணிந்து கொள்ளலாம்,
3.    அதைப் போன்று மருத்துவத்திற்காகவும் ஆண்கள் பட்டாடை அணிந்து கொள்ளலாம்.
4.    மேற்சொல்லப்பட்ட காரணங்கள் தவிர வேண்டுமென்றே பட்டாடை அணிபவன் மறுமையில் அதனை அணியமாட்டான். அதாவது நரகம் புகுவான்.
5.    பட்டாடையின் மீது அமர்வதும் தடைசெய்யப்பட்டதாகும்பெண்கள் ஆடை அணியும் முறை
பர்தா அணிந்துதான் வெளியே செல்ல வேண்டும்
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24 : 31)
ஆயிஷா (ர­) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள். மூமினான பெண்கள் ஆடைகளால் தங்கள் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக அவர்களுடன் தொழுவார்கள். பின்னர் வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். அவர்கள் யார் யார் என்பதை யாரும் அறியமாட்டார்கள்.  றீல் : புகாரி (372)

கணுக்காலுக்கு கீழ் ஆடை அணிவது கூடாது
நபி (ஸல்) அவர்கள் ” யார் பெருமையுடன் தன்னுடைய ஆடையை இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.” அப்போது உம்மு ஸலமா (ர­) அவர்கள் ”அப்படியென்றால் பெண்கள் தங்கள் ஆடைகளின் ஒரங்களை எப்படி விடுவார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ” (முழங்கா­ருந்து ) ஒரு ஜான் இறக்கிக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள். அதற்கவர்கள் ” அப்போதும்  அவர்களுடைய பாதங்கள் வெளிப்பட்டால் (என்ன செய்ய வேண்டும்?)” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ”(முழங்கா­­ருந்து) ஒரு முழம் இறக்கிக் கொள்ளட்டும். அதற்கு மேல் அதிகமாக்க வேண்டாம்” என்று கூறினாôகள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர­)  நூல் : திர்மிதி( 1653)

ஒ­ எழுப்பக் கூடிய சலங்கைகள் அணிந்து வெளியே செல்லக் கூடாது
அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். (அல்குர்ஆன் 24 : 31
பின்வரக்கூடியவர்களுக்கு முன்னால் பர்தா அணியாமல் இருக்கலாம்
தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள்,107 ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். ( அல் குர்ஆன் 24 : 31)

பருவமடைந்த பெண் முக்காடின்றி தொழுவது கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” பருவமடைந்த பெண் முக்காடின்றி தொழுவது ஏற்றுக் கொள்ளப்படாது”
அறிவிப்பவர் : ஆயிஷா (ர­) நூல் : திர்மிதி(344)
மேற்கண்ட ஹதீஸ்களி­ருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
1.    பெண்கள் வெளியே செல்லும் போது பர்தா அணிந்துதான் செல்ல வேண்டும். பர்தா என்பது முகம், இரு முன்கைகள், பாதங்கள் ஆகியவற்றை தவிர மற்ற உடலுறுப்பகளை வெளியே தெரியாத வண்ணம் மறைக்கக் கூடிய ஆடையாகும்.
2.    பெண்கள் குர்ஆனில் கூறப்பட்டவர்களைத் தவிர வேறு எவர் முன்னாலும் பர்தா இல்லாமல் இருப்பது கூடாது.
3.    ஒ­ எழுப்பக் கூடிய சலங்கை போன்றவைகளை அணிந்து கொண்டு வெளியே செல்லக் கூடாது.
4.    பருவமடைந்த பெண் முக்காடின்றி தொழுதால் அந்தத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.
5.    கணுக்காலுக்கு கீழ் ஆடை அணிவது கூடாது

.
செருப்பணிதல்
செருப்பணியும் பொழுது முத­ல் வலது புறத்தை முற்படுத்த வேண்டும்.
ஆயிஷா (ர­) அவர்கள் அறிவிக்கிறார்கள் ” நபி (ஸல்) அவர்கள் உளூச்செய்யும் போதும், தலைவாரிக் கொள்ளும் போதும் , காலணி அணிந்து கொள்ளும் போதும் வலப்பக்கத்தி­ருந்து தொடங்குவதையே விரும்பி வந்தார்கள்.”  நூல் : புகாரி ‏5854)

கழற்றும் போது இடது புறத்தை முற்படுத்த வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” நீங்கள் செருப்பணியும் போது முத­ல் வலது கா­ல் அணியுங்கள். அதைக் கழற்றும் போது முத­ல் இடது கா­ல் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும் , கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்.
அறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ர­) நூல் : புகாரி (5856)

ஒரு கால் செருப்பில் நடப்பது கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” நீங்கள் ஒரே ஒரு செருப்பில் நடக்க வேண்டாம். ஒன்று, இரு செருப்புக்களையும் ஒரு சேரக் கழற்றி விடுங்கள். அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள்
அறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ர­)  நூல் : புகாரி (5856)

செருப்பணிந்தும் தொழலாம்
சயீத் அபூ மஸ்லமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள் நான் அனஸ் (ர­) அவர்களிடம் ” நபி(ஸல்) அவர்கள் தம் காலணிகளுடன் தொழுது வந்தார்களா?” என்று கேட்டேன். அவர்கள் ” ஆம் (தொழுது வந்தார்கள்) என்று சொன்னார்கள்.  நூல் : புகாரி (5850)
மேற்கண்ட ஹதீஸ்களி­ருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
செருப்பணித­ன் ஒழுக்கங்கள்.
1.    அணியும் போது வலது காலை முற்படுத்த வேண்டும்.
2.    கழற்றும் போது இடது காலை முற்படுத்த வேண்டும்.
3.    ஒரு கா­ல் மட்டும் செருப்பணிந்து நடப்பது கூடாது.
4.    செருப்பணிந்து தொழுவது கூடும். ஆனால் செருப்பில் அசுத்தங்கள் இருப்பது கூடாது.. மேலும் இன்றைய காலங்களில் பள்ளிவாசல்களில் தூய்மையான விரிபபுகள் விரிக்கப்பட்டிருப்பதால் செருப்பணிந்து சென்றால் அவை மிகவும் அசுத்தமாகும். எனவே பள்ளிவாசல் போன்ற தூய்மையான இடங்களில் செருப்பணிவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
thanks to:hakkem.blogspotcom
Download Center- மவ்லவீ அபூநதா எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ
ஹஜ் முகவர்கள் பலர் பிரசுரிக்கும் பெரிய நூல்களில் காணப்படும் ஆதாரமற்ற, மற்றும் மார்க்கத்திற்கு நேர்முரணான மாபெரும் தவறுகள் அல்லாஹ்வின் உதவியால் இதில் இருக்கவே முடியாது. உங்களின் ‘ஹஜ்’ அங்கீகரிக்கப்;பட்ட ஹஜ்ஜாக மாறவேண்டும் என்பதே எமது ஆழ்மனதில் வேரூன்றிய எண்ணமாகும். பல அறிஞர்களின் நூல்களின் துணை கொண்டே இது தொகுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும்.
Download PDF format book
நூறு ஆண்டுகள் நிலைத்து நின்றேன்!
என்னுள் நீங்கள் அல்லாஹ்வைத் தொழுது வந்தீர்கள்..
வரலாறாய் வாழ்ந்து கொண்டிருந்தேன்.
அமைதியாக நின்று கொண்டிருந்த என் மேல்
சில கழுகுப் பார்வைகள் விழத்தொடங்கின.
என்னை இந்தியாவின் அவமான சின்னம் என்றார்கள்,
நான் களங்கப் படுத்தபட்டேன்
என்னை இடித்துத் தரைமட்டம் ஆக்கினார்கள்!

நான் ஷஹீது ஆக்கபட்டேன்....
அல்லாஹுவைத் துதித்து வந்த என் இடத்தின்மேல்
காவிகளின் களியாட்டம் நடக்குதே!


ஓ, இந்திய முஸ்லிமே! நான் இந்தியாவின்
நினைவுச் சின்னம் மட்டும் அல்ல;
நான் ஜனநாயக இந்தியாவின் இதயம்...
என்னை நீ இழந்துவிடத் துணிந்துவிட்டால்
இந்தியா இன்னும் பல இறையில்லங்களை இழந்துவிடும்.

என்னை நீ மறந்து விட்டால் ...
நீயும் மறக்கடிக்கப்படுவாய்!
ஓ, இந்திய முஸ்லிமே! நீ தூங்கிவிட்டால்
எதிரிகள் விழித்து கொள்வார்கள்
நீ உன் பணியை நிறுத்திக் கொண்டால்
நான் அவமானச் சின்னம் என்ற பொய்யை
உண்மை ஆக்கிவிடுவார்கள்.

ஓ! இந்திய முஸ்லிமே!
என்னுடைய அழுகை சப்தம்
உன் செவிகளை எட்டவில்லையா?
அநியாயக்காரர்களின் பிடியிலிருந்து
என்னை நீ மீட்டு எடுக்கும் காலம் எப்பொழுது?

oOo
ஓ,பாபரியே! உன் அழுகை சப்தம்
எங்கள் காதுகளில் விழுகிறது
நாங்கள் எங்களை வருத்தி, உன் கண்ணீரைத் துடைப்போம்!
எங்கள் உதிரத்தைச் சிந்தி, உன் மினாராவை எழுப்புவோம்!
எங்களை மண்ணில் புதைத்து, உன்னைக் கட்டி எழுப்புவோம்!
இன்னும் கொஞ்ச காலத்தில், இன்ஷா அல்லாஹ்!


- திருவை அன்ஸர்
வாய்ப்புண் தொந்தரவால் பலர் அடிக்கடி அவதியுறுபவர். அனைவருக்குமுள்ள ஒரு பொதுவான விஷயம் என்றாலும் அவதி... அவதிதான். தெரியாதவர்கள் "இதுக்கு போயி பெரிசா அலட்டிக்கிறே!" என்றால் "வாய்ப்புண் உனக்கு வந்தா தெரியும்!" என்பர். பாதிப்படைந்த சிறிய பகுதி என்றாலும் அந்த அளவிற்கு முகத்தை வாட வைக்கும் இந்த வாய்ப்புண் பற்றிச் சில விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டால் நமக்கு மட்டுமின்றி, பாதிப்படைந்தவர்களுக்கும் உதவிடலாமே? இது, சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்காக சகோ. அபூஸாலிஹா ஆக்கியளித்த மருத்துவக் கட்டுரை.

வாய்ப்புண் (Mouth Ulcer) என்றால் என்ன?
வாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் "சுர்ர்" என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும்.

யாருக்கு வாய்ப்புண் ஏற்படும்?

வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக விட்டமின் B12, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.

வாய்ப்புண் ஏற்பட என்ன காரணம்?
 1. மருந்துகள்: ஆச்சரியப்பட வைக்கும் வகையில் வேறொரு நோய்க்காக உட்கொண்டு வரும் மருந்துகள், ஒருவருக்கு வாய்ப்புண் ஏற்படக் காரணமாக அமைகின்றன. நீங்கள் உட்கொண்டு வரும் ஏதேனும் ஒரு மருந்து இத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்துகிறதா? எனப் பரிசோதியுங்கள்.
 2. பரம்பரை / மரபு நோய்: பெற்றோரில் எவரேனும் ஒருவருக்கு வாய்ப்புண் வாடிக்கையான நிகழ்வாக இருந்திருந்தால், பிள்ளைகளுக்கும் அவை தொடரும் என்பது புள்ளிவிபரங்கள் தரும் செய்தி.
 3. ஹார்மோன் மாற்றங்கள்: ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக அறிக்கைகள் சொல்கின்றன. பிரசவ காலங்களிலும் இறுதி மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வாய்ப்புண்களை தோற்றுவித்து விடுகின்றனவாம்.
 4. உணவு ஒவ்வாமை (அலர்ஜி): உணவு ஒவ்வாமையினால்கூட வாய்ப்புண்கள் ஏற்படுவதாக மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன.
 5. காயம்: உணவை மெல்லும்போது தவறுதலாகக் கன்னத்தின் உட்புறத்தில் சில நேரங்களில் கடித்துக் கொள்வதுண்டு. முரட்டுத்தனமாகப் பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷைக் கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படுகிறதாம்.
 6. பாக்டீரியா: வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள். வினை வாயிலேயே உள்ளது என்ற நினைப்பைக் கொண்டு சுத்தப்படுத்துதலைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் அவசியம்.
 7. இயந்திர வாழ்க்கை முறை: அதிக அளவில் உணர்ச்சி வசப்படுவதாலோ, மன அழுத்தம் அதிகரிப்பதாலோ வருகிறதாம். பரபரப்பாக மாறிவிட்ட நம் இயந்திர வாழ்க்கை முறையில் நிதானித்து, மனத்தை இலேசாக்கும் விஷயங்களில் ஈடுபடுவது குறைந்து விட்டதும் ஒரு காரணம்.
 8. உணவுப் பழக்கம் (டயட்): முறையற்ற உணவு முறை முக்கியக் காரணமாம். அத்துடன் முட்டை, காஃபி, உறைபாலேடு (சீஸ்), ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்ணுவதால் வாய்ப்புண் ஏற்படுகிறது.
 9. பற்பசை (டூத் பேஸ்ட்): Sodium lauryl sulphate அதிக அளவில் கலந்துள்ள சில பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் ஏற்படுகிறது.
 10. மாற்றங்கள்: திடீரென கைவிடப்படும் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. என்றாலும், இத்தகைய வாய்ப்புண்கள் தற்காலிகமானவையே.

தடுக்க வழியுண்டா?

அறவே ஒழிக்க முடியாவிட்டாலும் கீழ்க்கண்டவற்றைக் கடைபிடித்து வருவதன் மூலம் வாய்ப்புண்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம்:

- நல்ல உணவுப் பழக்க வழக்கம்
- தினசரி மிதமான உடற்பயிற்சி
- மன அழுத்தத்தைக் குறைப்பது
- தேவையான அளவு தூங்கி ஓய்வெடுப்பது

இத்துடன், உப்பு நீர் அல்லது நுண் கிருமிகளை அழிக்கவல்ல ஆண்ட்டி பாக்டீரியா (மவுத்வாஷ்) கொண்டு வாயைக் கொப்பளித்தல், வாயை இயன்றவரையில் சுத்தமாக வைத்திருத்தல், தினமும் காலையிலும் இரவில் உறங்குவதற்கு முன்னும் மருத்துவர் பரிந்துரைக்கும் முறையில் பல் துலக்குதல் போன்றவை வாய்ப்புண் அண்டாமல் தடுக்கும்.

வாய்ப்புண்ணுக்காக வீட்டு வைத்தியம் ஏதாவது?

வாய்ப்புண் வலியால் அவதிப்படுபவர்கள் கீழ்க்கண்டவற்றில் எளிமையானதொரு வீட்டு வைத்தியத்தைத் தேர்ந்தெடுத்து செய்து பார்க்கலாம்.
 1. தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.
 2. வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.
 3. தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும்.
 4. மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும்.
 5. மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.
 6. மாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்.
கவனத்தில் கொள்ள வேண்டியது:

வாய்ப்புண் என்பது தற்காலிகமான நோயாகும். வேறொரு செயல் மூலம் ஏற்படுவதாகும். குறைந்த பட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் பத்து நாட்களில் வாய்ப்புண் குணமாகி விட வேண்டும். அதுவல்லாமல் வாய்ப்புண் தொடர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில் தாமதிக்காமல் உடனடியாகப் பல் மருத்துவரை அணுகி முழுமையான பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
- அபூ ஸாலிஹா
ஜாமிஆ மில்லியா கமாலியா
(இஸ்லாமியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம்)
GOLDEN CITY, PERIYAKULAM - 625601 THENI Dt.
cell :
95664 63856 Email : kamaaliya@gmail.com

"சுவர்க்க நகைகள்" குடும்ப பெண்களுக்கான தபால் வழி இஸ்லாமியப் படிப்பு

திருமணத்தை எதிர்நோக்கி வீட்டில் இருக்கும் இளம்பெண்கள், திருமணமான பெண்களுக்கான மார்க்கக் கல்வியும், உலகக் கல்வியும் இணைந்த பயனுள்ள படிப்பு.
தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான பெற்றோர்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள், உலமாக்களின் வரவேற்பையும், பாராட்டுதலையும் பெற்ற படிப்பு.
அல்லாஹ் நாடிய ஒருவருக்கு ரொக்கப்பரிசு ரூ. 5000/-
இன்றே உங்கள் பிள்ளைகளையும் இப்படிப்பில் இணையுங்கள்
12 வயதுக்கு மேற்பட்டு தமிழ் எழுத, வாசிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. வீட்டிலிருந்தே படித்து, தேர்வு எழுதி சான்றிதழ் பெறலாம். வெளியில் எங்கும் செல்ல வேண்டியதில்லை.
இரண்டு வருடப்படிப்பு,
படிப்புக்கட்டணம் ரூ. 100/- மட்டும்.
பாடத்திட்டம்:
இந்த படிப்பு இருபாலருக்கும் பொதுவானது. பெண்களுக்காக சில சிறப்பு பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இஸ்லாம்: குரான், ஹதீஸ், ஷரீஅத், சட்டம் பற்றிய பாடங்கள், குடும்பம், தொழிலில் எற்படும் நெருக்கடி, குழப்பம் பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண குரான், ஹதீஸ் கூறும் பரிகாரமுறைகள்:
மகளிர் மருத்துவம் : வயதுக்கு வந்ததிலிருந்து திருமணமாகி ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை ஒவ்வொரு பெண்ணும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய பருவ கால இடர்பாடுகள் - பரிகார முறைகள், உடல் ஊனம், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், பிறப்பை தடுப்பதற்க்கான வழி முறைகள், கர்ப்ப கால - பிரசவ கால பாதுகாப்பு நடைமுறைகள் பற்றிய மருத்துவ நிபுணர்களின் அரிய ஆலோசனைகள்.
குடும்ப இயல்: குடும்ப நிர்வாக இயல், மாமியார், நாத்தனாரிடத்தில் நல்ல பெயர் எடுக்க ஆலோசனைகள், பிள்ளைகளை அறிவாளிகளாக வளர்க்க கல்வி நிபுணர்களின் ஆலோசனைகள், பிள்ளைகளை உயர்கல்வி, தொழிற் கல்வி படிக்க வைக்க, கல்வி நிறுவனங்களின், படிப்பு, அங்குள்ள படிப்பில் சேரும் முறை,
தகுதிகள் பற்றிய விரிவான விபரங்கள், அழகுக்கலை, சமையல்கலை மற்றும் ஏராளமான பொது அறிவுப் பாடங்கள்.
சுவர்க்க நகைகள் பற்றிய மேல் விபரங்கள்
இந்தப் படிப்பு ஸுன்னத்வல்ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், தப்லீக் ஜமாஅத் அனைவருக்கும் பொதுவான படிப்பாகும். கொள்கை வேறுபாடுகள், கருத்து வேறுபாடுகள் சம்பந்தமான எந்த விசயங்களும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய பொதுவான விஷயங்களே பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இன்றையச் சூழ்நிலையில் குடும்பத்தினருக்கு தீனை நினைவு படுத்திக் கொண்டிருப்பது அவர்களது ஈருலக் பாதுகாப்புக்கு் நல்லது.
வெளிநாட்டில் பணிபுரிவோர் தங்கள் குடும்பத்தினருக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
படிப்புக் கட்டணத்தை ஊரிலிருந்து M.O.மூலம் ஜாமிஆவுக்கு அனுப்பி வைக்கலாம்.


- ஜாமிஆ மில்லியா கமாலியா
வாழத் தெரிந்தால் வாழலாம்...! வழியா இல்லை வையகத்தில்...?
முனைவர் A.P. முஹம்மது அலி, PhD., I.P.S (Rநவீன உலகில் வாழ்க்கை கடினமானதும், சவாலானதும் ஆகும். ஆனால் திறமையிருந்தால் சமாளிக்கலாம் என்ற கருத்துடன் எழுதப்பட்டது இந்தக் கட்டுரை.
அதிர்ஷ்ட்டத்தினை நம்பியிருக்கிறவனுக்கும், அதிர்ஸ்ட்ட தேவதை அவன் கதவைத் தட்டினாலும் அதனை சமாளிக்க சிலருக்குத் தெரியாது.
ஒருவனுக்கு ஒரு நகைக்கடை பரிசுக் கூப்பனால் ஒரு பி.எம்.டபுள்யு கார் பரிசாக கிடைக்கிறது என்ற வைத்துக் கொள்வோம். படகு போன்ற பளபளப்பான காரை சாலையில் செலுத்தும் போது அந்தக் காரையும் அதனை ஓட்டுகின்றவரையும் ஆண், பெண் என்ற பலரின் கவனம் கவரும். அவருக்கு பல புது நண்பர்கள் கூடுவார்கள். அவர்களை ஏற்றிக் கொண்டு மகிழ்ச்சியிடன் பல சுற்றுலா தளங்களுக்குச் செல்வார்.

அதனால் பெட்ரோலுக்கும், மற்ற செலவினங்களுக்கு காசு கரையும். சிறிது நாட்கள் நகன்ற பின்பு காரும் பழுது படும். அதற்கான பராமரிப்பு செலவும் பண்மடங்காகும். அதனால் ஏற்படுகின்ற மன உலச்சல் பெரிய பாரமாக அமையம். ஆகவே அதிர்ஸ்டம் மூலம் வருகின்ற பொருளாதாரம் உண்மையான சந்தோசத்தினைத் தருவதிற்குப் பதிலாக சோகத்தின் எல்லைக்கே அலைத்துச் செல்லும்.
சிலருக்கு நோய்கள் வந்தால் ஒடிந்து மூலையில் முடங்கி விடுவர். ஆனால் அந்த நோயையே வென்று உலகப் புகழ் ஏணிக்கு எட்டியுள்ள ஒரு பெண்மணியின் கதையினை இங்கே சொல்வது பொருத்தமாக அமையும் என எண்ணுகிறேன். அவருடைய படத்தினையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
Rabia
32 வயதான ராபியா கேரள மாநிலம் மலப்புர மாவட்டம் திருராங்காடிக்கு அருகில் உள்ள வெள்ளிக்காடு என்ற இடத்தில் பிறந்த ராபியா சிறு வயதில் இளம் பிள்ளை வாத்தால் பாதிக்கப் பட்டதால் 14 வயதிலிருந்து நடக்க முடியாது.. அத்துடன் அவரை புற்று நோயும் துன்பத்தில் ஆழ்த்தியது.
பட்ட காலிலே படும் என்ற பழமொழிக்கிணங்ககுளியல் அறையில் விழுந்து கழுத்து எழும்பு முறிவு ஏற்பட்டு துண்பப்பட்டார். அத்துடன் தனது நோயிற்காக சாப்பிட்ட மருந்துகளால் குடல் அலர்ச்சி நோயால் அவதிப்படுகிறார். இத்தனை இருந்து அவரின் காலத்தினை வெல்வேன்என்ற உறுதியான நம்பிக்கையால் அவர் போன்ற வாத நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆறு பள்ளிக்கூடங்கள் தன்னார்வ தொண்டர்களுடன் நடத்துகிறார். அவருடைய சேவையினை கேரளாவில் உள்ள நான்கு மற்றும் ஐந்தாவது பள்ளி மாணவர்களுக்க பாடமாக வைத்துள்ளார்கள் என்றால் பாருங்களேன். அவர் மட்டும் கிறித்துவராக இருந்திருந்தால் அவரை அன்னை தெராசாவாக சித்தரித்திருப்பார்கள்.
அவருடைய சேவையினை பாராட்டி1993 வருட தேசிய இளைஞர் பரிசும், 1999ஆம் வருடம் கண்ணகி ஸ்ரீசக்தி பரிசும், 2000 ஆம் வருடம் ஐ.நா. சபையின் பரிசும், 2010 ஆம் வருடம் ஜோசப் முண்டேஸ்வரி பரிசினையும் தட்டிச் சென்றுள்ளார். ஆகவே ராபியா நோயினால் மன உலச்சலில் இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவ வேண்டுமென்ற அசையா நம்பிக்கையால் தன்போன்ற பல குழந்தைகளுக்க உதவி செய்து புகழ் ஏணியில் ஏறியுள்ளார்.
சிலருடைய முயற்சிகளில் தோல்வி ஏற்பட்டால் அதற்கு காரணத்தினைத் தேடி அதனை நிவர்த்தி செய்யாமல் இறைவனை நொந்து கொள்வார்கள். ஒரு டாக்டருக்கு புகை பிடிப்பதாலும், மது அருந்துவதாலும் ஏற்படும் புற்றுநோய் உற்பட்ட பல நோய்கள் தன்னை வந்து சேரும் என தெரியும்.
ஆனால் சில டாக்டர்களால் அதனை நிறுத்த முடியவில்லை. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம். தாங்கள் பணியின் பிரஷ்சரில் புகை பிடிப்பதாக கூறுகிறார்கள். ஆனால் புற்று நோய் வரும் போது இறைவனை குறைகூறுகிறார்கள். மன உலச்சலில் உள்ளவர்கள் தங்களின் தவறான செயல் முறைகளை மாற்றினால் அந்த மன உலச்சலிருந்து விலகலாம்.
சிலர் வருங்காலத்திற்கு வேண்டுமென்று பெரும் பொருளை சேர்க்க ஓடி, ஓடி உழைக்கின்றனர்.. ஆதனால் அன்றைய உலகில் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ மறந்து விடுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு யுகோஸ்லேவியாவினைச் சார்ந்த அன்னை தெராசா அமெரிக்காவிற்கு முதல் தடவையாக சென்றார். அங்குள்ளவர்களைப் பார்த்து விட்டு இந்தியாவிற்கு வந்த பின்னர் அவர் பேட்டி கொடுக்கும் போது. இந்தியாவில் பலர் பட்டிணியால் வாடுகின்றனர்.
ஆனால் அமெரிக்காவில் பலர் மன உலச்சலாலும், இறை பக்தி இல்லாததாலும் வாடுகின்றனர்என்றார் இது எதனைக் காட்டுகின்றது என்றால் வளர்ந்த நாடுகளிலெல்லாம் மக்கள் மன உலச்சலால் ஒரு வகையில் சந்தோசத்தினையும், அமைதியான வாழ்வினையும் இழந்து உள்ளனர் என உங்களுக்கு புரிந்திருக்கும்.
மனிதனுக்கு ஒரு பதவி கொடுத்தாலும், அல்லது ஒரு ஆட்சி அமைந்தாலும் அது நிலையாக இருக்கின்றதா என்றால் இல்லையே! உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் மந்திய பகுதியில் உள்ள வறண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்த தலித் இனத்தினைச் சார்ந்த ராஜாவிற்கு இந்திய தேசத்தின் உயர்ந்த கேபினட் அந்தஸ்து பதவி கொடுத்து அலங்கரிக்கப்பட்டார்.
ஆனால் அவர் தன் சொந்த நலனுக்காக பல கோடி ஊழலில் உழன்றார். என்னானது அவர் அரசியல் வாழ்வு? தேனடையெடுத்தவன் புறங்கையினை நக்கிய கதையாகி திகார் சிறைக்கூடத்தில் தன் பதவியும் இழந்து கம்பி எண்ணுகிறார். அதே போன்று மங்கோலிய செங்கிஸ்கான், ஜூலியர் சீசர் மற்றும் அலெக்ஸாண்டர் ஆகியோருடைய சாம்ராஜ்யங்கள் இன்று நிலைத்திருக்கின்றதா இல்லையே!
ஏன் 20ஆம் நூற்றாண்டின் சர்வாதிகாரிகளான ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின், ஜியாவுல் ஹக், முஸ்ரப், 21ஆம் நூற்றாணடின் சர்வ வல்லமை படைத்த ஆடசியாளர்களாக கருதப் பட்ட ஜார்ஜ் புஷ், டோனி பிளேர் போன்றவர்களாவது தங்களது கட்சி ஆட்சியினை தக்க வைக்க முடிந்ததா இல்லையே!
ஒரு மனிதனுக்கு காம சுகத்தால் இன்பமளிக்க முடியுமா? காம சுகத்தால் பதவியிழந்தோர் எத்தனையோ மனிதர்களும், ஆட்சியாளர்களையும் நாம் படித்திருக்கிறோம். வயாகாரா மாத்திரையினால் நிரந்தர காம சுகம் தர முடியுமா? முடியாதே! ஒரு மனிதனுக்குத் தேவை சுகாதாரமான உடல், நன்னடத்தை, தியான வாழ்வு, சுய நலமின்று வாழ்தல் மகிழ்ச்சியினைத் தறும்.
ஒருவர் பல்வேறு பிரச்னைகளை மனதில் போட்டு அழுத்திக் கொண்டு இருந்தால் மன உலச்சல் ஏற்படும். மாறாக தங்களுடைய பிரச்னைகளை தங்கள் நம்பிக்கையாளவர்களுடன் கலந்து கொண்டால் அது மனதுக்கு சற்று ஆறுதல் தரும்.
என்னை பிறர் எப்படி நடத்தினார்களோ அதன் படியே நானும் அவர்களை நடத்துவேன் என்ற குரோத மனப்பான்மை நிம்மதியினைக் கெடுக்கும். மாறாக தீங்கு செய்தவர்களுக்கும் உதவி செய்தால் அது ஒரு புண்ணுக்கு மறுந்து போடுவது போல ஆகும்.
ஆனால் சிலர் தங்கள் பெற்றோர், சகோதர, சகோதரிகள், நண்பர்கள் சிறிய வயதில் தங்களுக்கு செய்த சிறிய தவறுகளைக் கூட பெரியவனான பின்பும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதனால் அவர்கள் மற்றவர்கள் முன்னால் பரிதாபமாக கருதப்படுவார்கள். ஆகவே அவைகளை மறக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
1) உங்களுக்கு நேர்ந்த மனக் காயங்களை நீங்கள் மறக்காவிட்டால் நீங்கள் ஏற்படுத்திய காயங்கள் மறையாது.
2) உங்களை அவமானப்படுத்தியவரை, ஏமாற்றியவரை, உங்களை குறை சொல்பவரை அவர் ஆச்சரியப்படுமளவிற்கு அழைத்து ஒரு கப் டீ கொடுங்கள். அவர் உங்களை மேலானவர் என்று போற்றுவார்.
3) ஒருவருக்கு ஹெப்பாடிடிஸ் ஈரல் நோயிருந்து அவருடைய உடலிலிருந்து கெட்டுப் போன பழைய ரத்தத்தினை டயாலிசிஸ மூலம் எடுத்து விட்டு புது ரத்தத்தினை உடலில் செலுத்துவது போல உங்கள் உள்ளம் புத்துணர்வு பெற பழைய கசப்பினை மறந்து புதிய வாழ்விற்கு வித்திடுங்கள்.
4) ஒரு கலைஞர் முன்னுக்கு வருமுன்பு பழைய சட்டையுடனும், பசியுடனும், குடிசையிலும் வாழ்வார்கள். ஒரு தெற்கித்திய முன்னுக்கு வந்த சினிமா டைரக்டர் ஆரம்ப காலத்தில் தன் தங்கை திருமணத்திற்கு ஒரு பொட்டு நகை கூட போட முடியவில்லை என்று வருத்தப்பட்டு பேட்டி கொடுத்திருந்தார். அவர் ஒரு குறிக்கோளுடன் செயலாற்றினதால் தான் அவர் முன்னேற முடிந்தது. அது போல ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோள் இருக்க வேண்டும்.
5) ஒரு தாயார் தங்கள் குழந்தைகளுக்குள் ஏற்படும் சண்டையினையும், மன வேறுபாடுகளையும் களைய பாடுபடுவது போல ஒரு சமுதாயத்தில் ஏற்படும் சண்டை, சச்சரவுகளை, மன வேறுபாடுகளை களைந்து சமாதானத்திற்கும், சமுதாய அமைப்பின் அமைதிக்கும் இணைப்பு பாலமாக செயல்படுங்கள்.
மேற்கொண்ட செயல்கள் மூலம் நீங்கள் வெற்றி பெற்ற மனிதவர்களாக உங்களை மாற்ற முடியும் என்றால் சரியாகுமா?
- Mohammed Rafi
--------------
நன்றி
தமிழில்: Mufti
(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை)
அழகிய முகமன்
 • வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.
 • மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி ‘முஸாபஹா’ செய்யலாம்.
 • வெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காகத் தள்ளி வையுங்கள்.
இனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்
 • நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.
 • உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.
 • தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.
 • மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.
நட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும்
 • மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.
 • நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 • நீங்களிருவரும் ஆனந்தமாகக் கழித்த அனுபவங்களை இருவரும் தனித்து இருக்கும்பொழுது மீட்டிப் பாருங்களேன்.
விளையாட்டும் கவன ஈர்ப்பும்
 • நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.
 • ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பந்தயங்களில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ, குர்ஆன், நபிமொழி, பொதுஅறிவு போன்ற கல்விகளைக் கற்பதிலோ அல்லது வேலை செய்வதிலோ இருக்கலாம்.
 • இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை (விளையாட்டுப் போட்டிகள் போன்றவை…) பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.
 • இஸ்லாம் அனுமதிக்காத ‘பொழுது போக்கு” விஷயங்களில் (சினிமா, ஸீரியல்கள் போன்றவற்றில்) உள்ள தீங்குகளை எடுத்துச் சொல்லி அவற்றை மறக்கடியுங்கள்.
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ
 • வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயுற்றோ களைப்படைந்தோ இருந்தால்.
 • கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.
இனியவளின் ஆலோசனை
 • குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடிஆலோசனை செய்யுங்கள்.
 • அவளிடம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் சிறப்புத் தருணங்களில் அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் (பிள்ளைகளின் திருமண விஷயங்கள் போன்றவை)
 • மனைவியின் கருத்துக்களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரிசோதியுங்கள்.
 • மனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளிவிட்டு) அவளின் கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்.
 • ஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.
பிறரைக் காணச் செல்லும்பொழுது
 • மார்க்கத்தில்/பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களைப் பார்க்கச் செல்வதால் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள் (பார்க்கச் சென்றவர்களிடம் வீணான பேச்சுக்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கினால் கண்டியுங்கள்).
 • அங்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பேணப்படுகின்றனவா என கவனித்துக் கொள்ளுங்கள்.
 • அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துவது நல்லதல்ல.
உங்களின் வெளியூர் பயணத்தின்பொழுது
 • மனைவிக்குத் தேவையான நல்ல அறிவுரைகளைக் கூறிவிட்டு அழகான முறையில் விடைபெறுங்கள்.
 • உங்களுக்காக இறைவனிடம் துஆ செய்யச் சொல்லுங்கள்.
 • நீங்கள் வீட்டில் இல்லாதபொழுது இரத்தபந்த உறவினர்களிடம் அவளுக்குத் தேவையான அவசியமான உதவிகளைச் செய்து தரும்படி கேட்டுக்கொள்ளலாம்.
 • குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துச் செல்லுங்கள்.
 • நீங்கள் வெளியூரில் இருக்கும் நாட்களில் டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக மனைவியுடன் தொடர்பு கொள்ளுங்கள் (பிரிவின்பொழுதுதான் இருவருக்குமே ஒவ்வொருவரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப்பொழுது இவற்றின் மூலமாக நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வு, உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்).
 • முடிந்தவரை சீக்கிரம் ஊர் திரும்ப முயற்சி செய்யுங்கள்.
 • திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம்.
 • எதிர்பாராத நேரத்திலோ இரவு நேரத்திலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (உங்களுக்காக அலங்கரித்துக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சங்டத்தை ஏற்படுத்தும்).
 • பிரச்சினைகள் எதுவும் வராது என எண்ணினால் மனைவியையும் உடன் அழைத்துச் செல்லலாம்.
பொருளாதார உதவி
 • கணவன் என்பவன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்பவனாக இருத்தல் வேண்டும்; மாறாக, கஞ்சத்தனம் செய்யக் கூடாது. (வீண் விரயமும் செய்யக் கூடாது).
 • அவளுக்கு ஊட்டிவிடும் உணவு முதல் அவளுக்காகச் செய்யும் அவசியச் செலவுகள்வரை அனைத்திற்கும் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
 • அவசியத் தேவைக்கான பணத்தை உங்களிடம் கேட்பதற்கு முன்னரே கொடுப்பதுதான் சிறந்தது.
அழகும் நறுமணமும்
 • நபிவழியின்படி அக்குள்முடி மற்றும் மறைவான பகுதியில் உள்ள முடிகளை நீக்கிவிடுவது.
 • எப்பொழுதும் நேர்த்தியாக அழகுபடுத்திக் கொண்டு சுத்தமாக இருப்பது.
 • அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள்.
தாம்பத்யம்
 • மனைவிக்கு தாம்பத்ய சுகம் கொடுக்க வேண்டியது கணவனின் கடமை என்பதை நினைவில் வையுங்கள் (இருவரில் ஒருவரின் உடல்நலக்குறைவு காரணமாகத் தள்ளிப் போட்டுக் கொள்ளலாம்).
 • பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருநாமத்தால்) என்று சொல்லி ஆதாரப்பூர்வமான பிரார்த்தனையைச் (ஷைத்தானின் தீங்கைவிட்டு இறைவனிடம் பிரார்த்தனை) செய்தவாறு ஆரம்பியுங்கள்.
 • இறைவன் படைத்திருக்கும் இன உறுப்பைத் தவிர்த்து வேறு வகைகளில் இல்லறச் சுகம் அனுபவிக்கக் கூடாது (மலப்பாதையின் வழியாக ஈடுபடுவது ஹராம்).
 • காதல் வார்த்தைகளுடன் முன்விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.
 • அவளை திருப்திப்படுத்தும் வரை தொடருங்கள்.
 • அமைதிக்குப் பிறகு நகைச்சுவையால் அவ்விடத்தைக் கலகலப்பாக்குங்கள்.
 • மாதவிடாய்க் காலத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவது ஹராம் (தடுக்கப்பட்டது).
 • பெண் என்பவள் அதிகம் வெட்கப்படுபவள். எனவே அவளின் கூச்சத்தை நீக்குவதில் எல்லை கடந்துவிடாதீர்கள்.
 • மனைவிக்கு விருப்பமற்ற, கஷ்டமான கோணங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.
 • அவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.
இரகசியங்களைப் பாதுகாத்தல்
 • படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை பிறரிடம் எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தாதீர்கள்.
இறைவனுக்கு கட்டுப்படும் விஷயங்களில் உதவியாக இருப்பது
 • தஹஜ்ஜத் (இரவு) தொழுகைக்காக இரவின் கடைசிப்பகுதியில் எழுப்புங்கள்.
 • உங்களுக்குத் தெரிந்த திருக்குர்ஆன் அறிவை அவளுக்கும் போதியுங்கள்.
 • காலை-மாலை நேரங்களில் ஓதக்கூடிய திக்ரு (இறைநினைவுகளை – நபியவர்கள் காட்டித் தந்தவைகளை மட்டும்) அவளுக்கு போதியுங்கள்.
 • இறைவனின் பாதையில் செலவு செய்வதற்கு ஆர்வமூட்டுங்கள்.
 • ஹஜ்/உம்ராவிற்கு (பணம் மற்றும் உடல்) சக்தி பெற்றிருந்தால் அழைத்துச் செல்லுங்கள்.
 • மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்யுங்கள்.
 • அவளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்.
 • உங்களின் வீட்டுக்குவர அவர்களுக்கு அழைப்புக் கொடுங்கள். அப்படி வரும்பொழுது அன்புடன் வரவேற்று உபசரியுங்கள்.
 • அவசியமான தருணங்களில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருங்கள்.
 • பொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்குட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள்.
 • உங்களுக்கு முன் மனைவி மரணித்துவிட்டால் நபியவர்களின் வழிமுறையைப் பேணி மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மனைவி (உயிருடன் இருக்கும்பொழுது) உதவி செய்ததுபோல் செய்து அன்பு பாராட்டுங்கள்.
இஸ்லாமியப் பயிற்சி
கீழே கொடுக்கப்பட்டவைகளை அறிந்து கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது :
 • இஸ்லாத்தின் அடிப்படை
 • அவளின் பணிகள் மற்றும் உரிமைகள்
 • படித்தல் மற்றும் எழுதுதல்
 • இஸ்லாமியப் பாடங்களை மற்றும் அதன் நுணுக்கங்களை படிப்பதற்காக ஆர்வமூட்டுவது
 • பெண்கள் சம்பந்தமான இஸ்லாமிய சட்டங்கள்
 • வீட்டின் இஸ்லாமிய நூலகத்திற்காக புத்தகங்கள் மற்றும் கேஸட்டுகள் வாங்குவது.
மேன்மையான அக்கறை
 • வெளியில் போகும்பொழுது இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்திருக்கின்றாளா எனக் கவனித்துக் கொள்வது.
 • மஹரம் அல்லாத ஆண்களின் மத்தியில் கலந்திருப்பதைக் கண்டிப்பது. (அவளின் சிறிய மற்றும் பெரிய தந்தை மகன்களாக இருந்தாலும் சின்னம்மா பெரியம்மா மகன்களாக இருந்தாலும் உங்களின் தம்பியாக இருந்தாலும் தவறுதான்).
 • அதிகப்படியாகத் துருவி ஆராய்தலைத் தவிர்ந்து கொள்வது. (உதாரணமாக, அவளின் ஒவ்வொரு பேச்சிலும் குற்றங்குறைகளை ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள். மனப்பூர்வமாக இல்லாமல் வாய் தவறிக்கூட பிழையாகப் பேசியிருக்கலாம்).
 • அவசர விஷயத்திற்காக அண்மையில் உள்ள இடங்களுக்குப் போவதைத் தடுக்காதீர்கள். (ஆனால் ஹிஜாப் பேணப்பட வேண்டும்)
 • நீங்கள் அருகில் இல்லாததால், தொலைப்பேசிக்கு பதில் அளித்ததற்காக கண்டிக்காதீர்கள். (குழைந்து பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்யுங்கள்)
பொறுமையும் சாந்தமும்
 • மணவாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வருவது சாதாரண விஷயம்தான் (வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல ஒவ்வொரு வீட்டிலும் இவை ஒவ்வொரு உருவத்தில் உலாவருகின்றன). அதிகப்படியான பொறுப்புகளில் உட்படுத்துவதும் சிறிய விஷயங்களைப் பெரிதாக்குவதும் போன்றவைதாம் திருமண பந்தத்தை முறித்துவிடும் அளவுக்குச் சென்று விடுகிறது.
 • இறைவன் விதித்த வரம்புகளை மீறும்போது கோபம் காட்டப்பட வேண்டும். (உதாரணமாக தொழுகையைத் தாமதப்படுத்துதல், புறம் பேசுதல், தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களை டி.வியில் பார்த்தல் இது போன்றவை).
 • உங்களின் விஷயங்களில் செய்த தவறுகளை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுங்கள்.
தவறுகளைத் திருத்துதல்
 • முதலில் (முழுமனதோடு) நல்லுபதேசம் செய்யுங்கள்.
 • அதிலும் திருந்தாவிட்டால், தாம்பத்யத்தில் ஈடுபடாது கட்டிலில் திரும்பிப் படுத்துக் கொள்ளுங்கள். (உங்களின் கோப உணர்வை இவ்வாறு வெளிப்படுத்துவது) அதற்காக, படுக்கையறையை விட்டு வெளியேறுவதோ, வீட்டைவிட்டு வெளியில் சென்றுவிடுவதோ அல்லது அவளிடம் பேசாமல் இருப்பதோ அல்ல.
 • அதிலும் திருந்தாவிட்டால், கடைசி முயற்சியாக காயம் ஏற்படாமல் இலேசாக அடிக்கலாம் (அதற்கு அவள் தகுதியானவளாக இருந்தால் மட்டும்).
 • மனைவியை அடிப்பது நபிவழியில் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்றும் நபியவர்கள் மனைவியை அடிப்பவர்களாக இருக்கவில்லை என்பதையும் ஒவ்வொரு கணவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
 • மனைவி (எந்தக் காரணமும் இன்றி தாம்பத்தியத்திற்கு மறுத்தல், தொடர்ந்து தொழுகையை அதன் நேரத்தில் தொழாமல் இருத்தல், கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு அதிக நேரத்திற்கு வெளியில் செல்லுதல் அல்லது எங்கே சென்றிருந்தாள் என்பதைக் கணவனுக்குச் சொல்ல மறுத்தல் இது போன்ற விஷயங்களில்) கட்டுப்பட மறுத்தால் கணவர் இந்த அனுமதியைப் பயன்படுத்தலாம்.
 • குர்ஆனில் (4-வது அத்தியாயம் 34-ம் வசனத்தில்) கூறப்பட்டதுபோல் அவளுக்கு நல்லுபதேசம் செய்து படுக்கையிலிருந்து விலக்கி அதில் திருந்தாவிட்டால்தான் அடிக்கும் அனுமதியை கணவர் பயன்படுத்தலாம்.
 • காயம் உண்டாகும்படியோ முகத்திலோ மற்றும் மென்மையான பகுதியிலோ அடிக்கக் கூடாது.
 • செருப்பினால் அடிப்பது போன்ற மானபங்கப்படுத்தும் செயல்களில் ஒருக்காலும் ஈடுபடக் கூடாது.
மன்னிப்பும் கண்டிப்பும்
 • பெரிய தவறுகளை மட்டும் கணக்கில் எடுங்கள்.
 • உங்களின் விஷயத்தில் தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள். இறைவனின் விஷயங்களில் தவறு செய்தால் கண்டிக்கத் தவறாதீர்கள்.
 • தவறு செய்யக்கூடிய நேரங்களில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மற்றும் அவளின் நற்பண்புகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் (உங்களின் கோபம் குறையலாம்).
 • எல்லா மனிதர்களும் தவறு செய்யக்கூடியவர்கள்தாம். எனவே மன்னிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். (மனச்சோர்வு, களைப்பு, மாதவிடாய் போன்றவற்றின் மன-உடல் உளைச்சல்களினால் தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு).
 • சமையல் சரியில்லை என்ற காரணத்திற்காக மனைவியைக் கடிந்து கொள்ளாதீர்கள். நபியவர்கள் சமையல் விஷயத்திற்காக மனைவியைக் கண்டித்ததே இல்லை. பிடித்தால் சாப்பிடுவார்கள், பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருந்துவிடுவார்கள்; தவிர எந்த விமர்சனமும் செய்ய மாட்டார்கள்.
 • தவறுகளை நேரிடையாக அவளிடம் வெளிப்படுத்துவதற்குமுன் வேறுவழியில் நயமாகச் சுட்டிக்காட்டுங்கள். ஏனென்றால் சில நேரத்தில் இது பயனுள்ளதாக இருக்கும்.
 • அவமரியாதை செய்யக்கூடிய வகையில் மனைவியைத் திட்டுவதைத் தவிர்ந்துக் கொள்ளுங்கள்.
 • பிரச்சினை பேசி தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்தால், தனிமை கிடைக்கும்வரை பொருத்திருங்கள்.
 • மனைவிமீது கோபம் ஏற்பட்டால், உங்களை சரியான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவற்காக கோபம் குறையும்வரை சற்றுப் பொறுமை கொள்ளுங்கள்.
(உங்கள் இல்லறம் இனிமையாகத் தொடர நல்வாழ்த்துகள்!)
The above article is a summary of the book “How to make your wife happy” by Sheikh Mohammed Abdul Haleem Hamed. English Translator brother Abu Talhah, reviewer Brother Adam Qurashi of Muslim Students’ Association University of Alberta Edmonton, Canada. Tamil Translator (from English) : Mufti, Jeddah, K.S.A.