அல்லாஹ்வின் அழகிய பண்புகளை விவரிக்கும் அல்குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள்

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா


அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன்

هُوَ ٱلۡأَوَّلُ وَٱلۡأَخِرُ وَٱلظَّـٰهِرُ وَٱلۡبَاطِنُ‌ۖ وَهُوَ بِكُلِّ شَىۡءٍ عَلِيمٌ
அவனே முதலாமவன்; அவனே இறுதியானவன்; அவனே வெளிப்படையானவன்; அவனே மறைவானவன்; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன். (ஸூரா அல்ஹதீது 57:3)

يَعۡلَمُ مَا يَلِجُ فِى ٱلۡأَرۡضِ وَمَا يَخۡرُجُ مِنۡہَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعۡرُجُ فِيہَاۚ وَهُوَ ٱلرَّحِيمُ ٱلۡغَفُورُ
பூமிக்குள் பதிகின்ற (வித்து முதலிய)வைகளையும், அதிலிருந்து வெளிப்படும் (மரம், செடி முதலிய) இவைகளையும் வானத்திலிருந்து இறங்குபவைகளையும் அதன் பக்கம் ஏறுகின்றவைகளையும் அவன் நன்கறிவான். (ஸூரா ஸபா 34:2)

وَعِندَهُ ۥ مَفَاتِحُ ٱلۡغَيۡبِ لَا يَعۡلَمُهَآ إِلَّا هُوَ‌ۚ وَيَعۡلَمُ مَا فِى ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِ‌ۚ وَمَا تَسۡقُطُ مِن وَرَقَةٍ إِلَّا يَعۡلَمُهَا وَلَا حَبَّةٍ۬ فِى ظُلُمَـٰتِ ٱلۡأَرۡضِ وَلَا رَطۡبٍ۬ وَلَا يَابِسٍ إِلَّا فِى كِتَـٰبٍ۬ مُّبِينٍ۬
மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றிலுள்ளவற்)றை, அவனையன்றி வேறெவரும் அறியார். தரையிலும் கடலிலும், உள்ளவைகளையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் யாதொரு இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும். (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை. (ஸூரா அல்அன்ஆம் 6:59)

وَمَا تَحۡمِلُ مِنۡ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلۡمِهِۚۦ

...அவன் அறியாமல் யாதொரு பெண் கர்ப்பமாவதுமில்லை; பிரசவிப்பதுமில்லை... (ஸூரா ஃபாதிர் 35:11)

ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ سَبۡعَ سَمَـٰوَٲتٍ۬ وَمِنَ ٱلۡأَرۡضِ مِثۡلَهُنَّ يَتَنَزَّلُ ٱلۡأَمۡرُ بَيۡنَہُنَّ لِتَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىۡءٍ۬ قَدِيرٌ۬ وَأَنَّ ٱللَّهَ قَدۡ أَحَاطَ بِكُلِّ شَىۡءٍ عِلۡمَۢا

அல்லாஹ் தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியிலிருந்து அவற்றைப் போலவும் படைத்தான், நிச்சமயாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால் எல்லாப் பொருளையும் சூழ்ந்தறிகிறான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக, அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளையிறங்கிக் கொண்டேயிருக்கிறது. (ஸூரா அத்தலாக் 65:12)

وَرَبُّكَ يَعۡلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمۡ وَمَا يُعۡلِنُونَ
மேலும், உம்முடைய இறைவன் அவர்களுடைய இருதயங்கள் மறைத்து வைப்பதையும் அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிகிறான். (ஸூரா அல்கஸஸ் 28:69)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யா அல்லாஹ்! ஏழு வானங்கள், பூமியின் ரப்பே! மகத்தான அர்ஷின் ரப்பே! எங்களது ரப்பே! ஒவ்வொரு வஸ்துவின் ரப்பே! வித்துக்களையும், தானியங்களையும் உடைப்பவனே! தவ்ராத், இன்ஜீல், குர்ஆனை இறக்கியவனே! உன்னிடம், எனது நஃப்ஸின் தீங்கிலிருந்தும், நீ உச்சி முடியை பிடித்துள்ள ஒவ்வொரு ஊர்ந்து செல்லும் பிராணியின் தீங்கிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன். நீயே முதலாமவன். உனக்கு முன்பு எதுவுமில்லை. நீயே முடிவானவன். உனக்கு பின்பு எதுவுமில்லை. நீ வெளிப்படையானவன். உனக்கு மேல் எதுவுமில்லை. நீயே மறைந்தவன். உன்னை விட்டும் (மறைந்தது) எதுவுமில்லை. என் சார்பாக கடன் அனைத்தையும் நிறைவேற்றிவிடு. ஏழ்மையிலிருந்து (இரட்சித்து) என்னை பிறரின் தேவையற்றவனாக ஆக்கிவிடு! (ஸஹீஹ் முஸ்லிம்)

மேற்கூறப்பட்ட சான்றுகள் மூலம் தெரிந்துகொள்வதாவது:
1) அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.
2) இப்பிரபஞ்சத்திலுள்ள எந்த ஒன்றும் அவனது அறிவிலிருந்து தப்ப முடியாது.
3) வானங்களில் உள்ளதையும் வானங்களுக்குக் கீழ் உள்ளதையும், பூமிக்கு மேல் உள்ளதையும் பூமிக்கு கீழ் உள்ளதையும், வானம் பூமிக்கு இடையில் உள்ளதையும் அவன் பூரணமாக அறிந்தே இருக்கின்றான்.

العقيدة الواسطية
شيخ الإسلام ابن تيمية
DARUL HUDA

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த
பல ரக கேன்சர்கள் சத்தமே இல்லாமல் தாக்குவதுதான்..! அதனால் உடலில் ஏதாவது சின்ன மாறுதல் இருந்தால்கூட உடனே டாக்டரிடம் காட்டவேண்டும். என்கிறார் ப்ளட் கேன்சரைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் ராமனாதன். ஒரு விஷயம் தெரியுமா? மார்பகக் கேன்சர் ஒரு மார்பகத்திலிருந்து மற்றொரு மார்பகத்திற்கு பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆகவே எவ்வளவு சீக்கிரம் கண்டறிய வாய்ப்புள்ளதோ, அந்தளவுக்கு குணமாகும் வாய்ப்பும் அதிகம். என்கிறார் டாக்டர்.

யாருக்கெல்லாம் மார்பக புற்றுநோய் அதிகம் தாக்க சந்தர்ப்பங்கள் இருக்கிறது?

பெரும்பாலும், குழந்தையில்லாதவர்கள் அல்லது 30 வயதுக்கு மேலே குழந்தை பெற்றுக் கொள்பவர்கள். குறிப்பாக 12 வயதிற்கு முன்பே பருவம் அடையும் பெண்கள், அல்லது 55 வயதிற்கு மேலாகியும் மாதவிடாய் நிற்காத பெண்கள்.

ஈஸ்ட்ரோஜன் சுரப்பி அடங்கியுள்ள மாத்திரைகள் மற்றும் கர்ப்பத்தடை மாத்திரைகளை தொடர்ந்து எட்டு வருடங்களுக்கும் மேலாக உபயோகிக்கும் பெண்கள், புகையிலை மற்றும் மது பழக்கம் உள்ள பெண்கள்.

குடும்பத்தில் இதற்குமுன் பாட்டி, அம்மா, அக்கா என்று எவருக்காவது மார்பக கேன்சர் இருந்தாலும் கேன்சர் வர வாய்ப்பு இருக்கிறது.

மார்பகக் கேன்சரை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க முடியுமா?

முடியும்! மாதந்தோறும் மாதவிடாய் முடிந்த ஏழு நாட்களுக்குப் பிறகு உங்கள் மார்பகங்களை நீங்களே தடவிப் பார்த்து மார்பகத்தில் கட்டியோ அல்லது தோலில் தடிப்புகளோ தட்டுப்படுகிறதா எனப் பார்க்கலாம். வருடந்தோறும் மேமோகிராம் பரிசோதனை செய்து கொள்ளலாம். இதனால் ஆரம்பத்திலேயே மார்பகக் கேன்சரை கண்டுபிடித்து முழுதாக குணமாக்கிவிட முடியும்!

மார்பக சுய பரிசோதனை செய்வது முப்பது வயதைத் தாண்டிய ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்லது. இந்தப் பரிசோதனையை கண்ணாடி முன் நின்றும் செய்யலாம். படுத்துக்கொண்டும் சுய பரிசோதனை செய்யலாம்.

முதலில் கண்ணாடி முன் நின்று இரண்டு மார்பகங்களையும் நிதானமாக கூர்ந்து கவனிக்கவேண்டும். மார்பகங்களின் அளவிலோ, உருவிலோ மாற்றங்கள் தெரிகிறதா என்பது பார்க்கவேண்டும்.

அடுத்ததாக மார்புக் காம்பிலிருந்து நீர் அல்லது இரத்தம் கலந்த நீர் வடிகிறதா, மார்புக் காம்பைச் சுற்றியுள்ள கருமையான பகுதியில் புண் ஏதும் இருக்கிறதா, மார்புக் காம்பு உள்ளிழுக்கப்பட்டு இருக்கிறதா, மார்பகங்களில் மேலாகத் தோலின் நிறத்தில் மாறுபாடு தெரிகிறதா, அல்லது அந்த இடத்தில் சொரசொரப்பாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். பின்பு கைகளை தலைக்கு மேலாகத் தூக்கிக்கொண்டு இடது மார்பகத்தை (கடிகாரச் சுற்றில்) வட்ட வடிவில் லேசாக அழுத்தித் தடவி கட்டியோ, தடிப்போ தட்டுப்படுகிறதா என்று ஆராயவேண்டும்.

அதேபோல் இடது கையால் வலதுபுற மார்பகத்தை ஆராயவேண்டும். இப்படி செய்யும்போது, மார்பகத்தை ஒட்டிய அக்குள் பகுதிகளையும் தொட்டுப் பரிசோதனை செய்யவேண்டும். இப்படித் தடவி பரிசோதனை செய்யும்போது, விரலின் நுனிப் பகுதியைப் பயன்படுத்தக்கூடாது. பட்டையான விரல் பகுதியைத்தான் பயன்படுத்தவேண்டும்.

இப்படி தன்னைத்தானே மாதந்தோறும் பரிசோதித்துக் கொள்ளும்போது, சின்னதாக மிளகு சைஸில் ஒரு கட்டி இருந்தால்கூட கண்டுபிடித்துவிட முடியும்! அதனால் உடனடியாக ட்ரீட்மெண்டும் மேற்கொண்டு குணமாகும் வாய்ப்பும் உள்ளது! ஆனால், எப்போதாவது தன்னை சுயப் பரிசோதனை செய்யும் பெண்கள் கொண்டைக் கடலை அளவுக்குப் பெரிய கட்டியைத்தான் தடவி கண்டுபிடிக்க முடியும்! எப்போதுமே சுய பரிசோதனை செய்யாத பெண்கள் காலங் கடந்தே அதாவது கட்டி நாலணா அளவிற்குப் பெரிதான பின்பே பெரும்பாலும் கண்டுபிடிக்கிறார்கள்.

வருடத்திற்கு ஒருமுறை மேமோகிராம் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் ஆரம்பநிலையிலேயே மார்பகக் கேன்சரை கண்டுபிடிக்க முடியும்!

பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் வருடந்தோறும் மேமோகிராம் செய்து கொள்ள வேண்டும். 40 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த பரிசோதனை செய்தால், மார்பகச் சதை அடர்த்தியாக இருப்பதால் துல்லியமாக கண்டுபிடிக்கமுடியாது. அதனால் அந்த வயதினருக்கு சுய பரிசோதனை மிகவும் அவசியம்.

மார்பக கேன்சரால் பாதிக்கப்படும் பெண்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்த பின்பே மருத்துவரால் அதற்கேற்றபடி சிகிச்சை கொடுக்க முடியும்.

மார்பக கேன்சரின் பாதிப்பு நான்கு நிலைகளாகப் பார்க்கப்படுகிறது.

முதல் நிலையில் மார்பகத்தில் மட்டுமே கேன்சர் இருக்கும். இரண்டாம் நிலையில் மார்பகம் தவிர அக்குகளிலும் பரவி இருக்கும். மூன்றாம் நிலையில் கேன்சர் பாதிப்பு மார்பகத்திலிருந்து நெஞ்சு…… அக்குள் என்று மிக பலமாகப் பரவிட்டிருக்கும். நான்காவது நிலையில், மார்பகம் அருகேயுள்ள மற்ற உடற்பாகங்களை நுரையீரல், எலும்புகள் மற்றும் ஈரல் போன்றவற்றிலும் கேன்சர் ஊடுருவி பரவியிருக்கும்!

என்ன ட்ரீட்மெண்ட் தரப்படும்?

நிலை 1 : பாதிப்பைப் பொறுத்து அறுவை சிகிச்சையோ அல்லது கீமோதெரபியோ கொடுக்கப்படுகிறது.

நிலை 2 : அறுவை சிகிச்சைக்குப் பிறகு கீமோதெரசி கொடுக்கப்படும்.

நிலை 3 : முதலில் கீமோதெரபி சிகிச்சை கொடுத்த பின்பு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பிறகு மீண்டும் கீமோ தெரபி சிகிச்சையும் சில சமயங்களில் கதிரியக்க சிகிச்சையும் கொடுக்கப்படுகிறது.

நிலை: 4: இந்த நிலையில் நோயாளிக்கு கீமோ தெரபி சிகிச்சை மட்டும் அளிக்கப்படுகிறது.

இதில் முதல் மற்றும் இரண்டாம் நிலை மார்பகக் கேன்சர் உள்ள பெண்கள் எனில் 95 சதவீதத்திற்கு மேல் அவர்களை பூரணமாகக் குணப்படுத்திவிட முடியும் மூன்றாம் நிலை எனில் 50 சதவீதம் குணப்படுத்த முடியும்.

நான்காம் நிலையில் புற்று நோயை முழுவதுமாக குணப்படுத்த முடியாது! ஆனால் நோயின் தன்மையை கட்டுப்படுத்தி வலியில்லாமல் வாழ வைக்கலாம்!

கேன்சர் கட்டி, கடுகு அல்லது மிளகு சைஸில் இருக்கும்… கண்டுபிடித்து ட்ரீட்மெண்டுக்கு வந்தால், அறுவை சிகிச்சையினால் கட்டி… மட்டுமே அகற்றப்பட்டு பெண்களின் மார்பகம் காப்பாற்றப்படும்.

ஆனால், நம் நாட்டில் பெண்கள், பெரும்பாலும் தன் உடல்நிலை பற்றிய அக்கறையின்மையால் கவனிக்காமல் விட்டு கட்டி பெரிதான பின்பு தான் மருத்துவரிடமே வருகிறார்கள்! அதனால், பலருக்கு மார்பகத்தையே எடுக்கும் சூழ்நிலை உருவாகிறது! மார்பகத்தை எடுத்தப் பின்பு கேன்சர் மீண்டும் வராதபடி நெஞ்சுக் கட்டியும் கதிரியக்க சிகிச்சை கொடுக்கப்படும் இது, வலியில்லாத சிகிச்சைதான்! சிலருக்கு கீமோ தெரபி எனப்படும் கேன்சர் மருந்துகள் மூலமாகவும், இதற்காக மருந்துகளை ஊசி மூலம் செலுத்தியும் சிகிச்சைக் கொடுக்கப்படுகிறது.

இந்தச் சிகிச்சையில் முடிகொட்டுதல் போன்ற பின்விளைவுகள் ஏற்பட்டாலும் சிகிச்சை முடிந்த பின்னர் அந்தப் பெண் பழைய நிலைக்கு திரும்பி விடுவார்! அதனால், நோயை அறிந்து, அதிலும் முதலிலேயே அந்நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது நேரமும், சிரமும் பணமும் மிச்சமாகிறது. குணப்படுத்துவதும் நூறு சதவீதம் எளிதும் என்கிறார் டாக்டர் ராமனாதன்.

லட்சத்தில் ஒரு ஆணிற்கு மார்பக புற்று நோய் வரலாம். அதனால் ஆண்களுக்கு பெண்களைக் காட்டிலும் மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணம் குழந்தை பருவத்தில் மார்பகம் வளர்ந்திருந்து அவர்கள் இளைஞர்களான பின்னும் மார்பக வளர்ச்சி குறையாமல் அப்படியே இருந்தாலும், இத்தகையானவர்களுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம். குடும்பத்தில் தாய்க்கு மார்பகப் புற்றுநோய் இருந்து அந்த ஜீன் மகனுக்கு இருந்தாலும் இதற்கான வாய்ப்பு அதிகம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வந்தால் மிகச் சீக்கிரமாக வலுவாக வளரும்.
எப்படி எந்த நோக்கத்திற்காக ஹஜ் துவங்கிற்று என்பதை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலச்சூழ்நிலைகள் அறிவது அவசியம். இப்ராஹீம்(அலை) அவர்களின் மகனார் இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப்பிறகு அவர்களின் வழித்தோன்றல்கள் மார்க்கத்தில் எவ்வளவு காலம் நிலைத்து நின்றார்கள் என இறைவன்தான் அறிவான்! எப்படியோ சில நூற்றாண்டுகளில் இந்த மக்கள் வழிகேட்டில் புகுந்துவிட்டனர். ஒரே இறவனை வணங்குவதற்கும் அழைப்பதற்கும் அமைக்கப்பட்ட இறை ஆலயத்தில் நூற்றுக்கணக்கில் சிலைகள் வைக்கப்பட்டுவிட்டன.لًبّيْكَ اَللّهُمَّ لَبَّيْكَ ، لَبَّيْكَ لا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، اِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاشَرِيْكَ لَك“நான் வந்திருக்கிறேன். எனது இறைவனே! வந்திருக்கிறேன். உனக்கு இணை துணை கிடையாது. நான் வந்திருக்கிறேன். நிச்சயமாக புகழ் அனைத்தும் உனக்கே உரித்தானவை. அருட்கொடைகள் அனைத்தும் உன்னுடையவை. எல்லாவிதமான ஆட்சிகளும் உனக்கே உரித்தானவை. உனக்கு இணை எவரும் கிடையாது.”

இதில் விசித்திரம் என்னெவென்றால் சிலை வணக்கத்தை ஒழிப்பதற்காகவே தம் வாழ்நாளெல்லாம் உழைத்த இப்ராஹீம் நபி இஸ்மாயீல் நபி ஆகியோருக்கும் சிலைகள் தயாரிக்கப்பட்டு விட்டன. நேர்வழியில் நின்ற இப்ராஹீம் நபியின் சந்ததியினர் ‘லாத்’ ‘மனாத்’ ‘ஹூபல்’ ‘நஸ்ர்’ ‘யாகூது’ ‘உஸ்ஸா’ ‘அஸாப்’ ‘நாயிலா’ இப்படி பல பெயர்களில் சிலைகளை வடித்து வணங்கினார்கள். செவ்வாய், புதன், வெள்ளி, சனி இப்படி இன்னும் எந்த எந்தத் கோளங்களை அவர்கள் வணங்கினார்கள் என்றும் தெரியவில்லை. பேய், பிசாசு, வானவர்கள் இறந்து போன தங்களுடைய பெரியார்கள் ஆகியோரையும் அவர்கள் வணங்கினார்கள். அறியாமை இந்த அளவுக்கு முற்றிப் போயிருந்தது.

அவர்கள் வீட்டை விட்டு புறப்பட்டு விட்டால் பயணத்தில் வணங்குவதற்கு தெய்வச் சிலை இல்லாவிட்டால் கல் ஒன்று கிடைத்தாலும் வணங்க ஆரம்பித்து விடுவார்கள். கல்லும் கிடைக்கவில்லை என்றால் மண்ணைத் தண்ணீரில் குழைத்து உருவம் அமைத்து ஆட்டு பாலைத் தெளித்து வணங்குவார்கள்.

ஹஜ்ஜின் தவறான வடிவங்கள்:

அந்த அஞ்சான காலத்தில் ஹஜ்ஜின் கதி எப்படி இருந்தது என்பத எண்ணிப்பாருங்கள்; ஒவ்வொரு ஆண்டும் அங்கே ஒரு திருவிழா நடைபெற்றது. பல குலத்தவர்கள் தம் இனத்தாரோடு இங்கே வந்து தனித்தனியே முகாம் போடுவார்கள். அவரவர்கள் தங்களைச் சேர்ந்த கவிஞர்கள் அல்லது துதி பாடர்கள் தம்மிடமும் தம் குலத்தாரிடம் உள்ள பெருமைகளை பாடி பெருமையடித்துக் கொள்வதில் மற்றவர்களை முந்துவார்கள். இறுதியில் அவர்கள் ஒருவரையொருவர் இழித்துரைக்கும் அளவுக்கு நிலைமை முற்றிவிடும்.

அப்புறம் எவர் தர்மப்பிரபு எவர் கொடைவள்ளல் என்கிற போட்டி நடக்கும்! குலத்தலைவரும் தமது பெருமையை பறைசாற்ற சமையலில் பெரிய பெரிய அண்டாக்களையும் குண்டாக்களையும் வரிசை வரிசையாக அடுப்புகளில் ஏற்றுவார்கள். ஒருவரையொருவர் மிகைப்பதற்காக ஒட்டகத்திற்கு மேல் ஒட்டகத்தை அறுத்துக்கொண்டே போவார்கள். இந்த வீண் செலவுக்காண நோக்கம் இதுதான். இந்தத் தடவை நடந்த திரு விழாவில் இத்தனை பேருக்கு உணவளித்தார் என்று பிரசாரம் ஆகவேண்டும். இந்தக் கூட்டத்தில் மதுபானம், விபச்சாரம், இசை படுமோசமான செயல்கள் அனைத்தும் தாராளமாக நடந்து கொண்டிருந்தன.

நிர்வாணமாக வலம் வருதல்

காபாவை சுற்றி வலம் வருதலும் நடந்துகொண்டுதான் இிருந்தது. ஆனால் எப்படி நிர்வாணமாக சுற்றிக் கொண்டிருந்தார்கள்? எங்கள் அன்னையர் எங்களை எந்த நிலையில் பெற்றெடுத்தார்களோ அந்த நிலையில்தான் நாங்கள் இறைவன் முன் செல்வோம் என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.

இறைவன் பெயரால் பலியும் தியாகச் செயல்களும் கூடச் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் எப்படியென்றால் பலியிடப்பட்டவற்றின் இரத்ததை கஃபாவின் சுவர்களிலெல்லாம் தடவுவார்கள். மாமிசத்தை வாசலில் பரப்புவார்கள்; இந்த இரத்தமும் மாமிசமும் இறைவனுக்கு தேவை என்ற எண்ணத்தில்!

இப்ராஹீம் நபியவர்கள் ஹஜ்ஜின் நான்கு மாதங்களை தடுக்கப்பட்டவை என்றும், இந்த மாதங்களில் எந்த விதமான சண்டையும் வம்பும் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியிருந்தார்கள். இந்த மக்கள் ஏதோ அந்த மாதங்களின் கண்ணியத்தை சிறிதளவு மனத்தில் வைத்திருந்தார்கள். ஆனால் மனம் சண்டையிட விரும்பினால் துணிச்சலான சந்தர்ப்பவாதத்தை வைத்துக்கொண்டு ஓர் ஆண்டில் தடை செய்யப்பட்ட மாதத்தை அனுமதிக்கப்பட்டதாக்கிக் கொண்டு அடுத்த ஆண்டில் அதற்கு ஈடு செய்து கொள்வார்கள். அத்துடன் தமது மார்க்கத்தில் நல்லெண்ணம் கொண்டிருந்த அவர்களில் ஒரு சிலரும் தமது அறியாமையின் காரணத்தினால் நூதனமான புதிய முறைகளை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.

நூதனமான தடைகள்:

சிலர் வழிச்செலவுக்கு எவ்வித ஏற்பாடும் இல்லாமல் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு மற்றவர்களிடம் கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக் ெ காண்டே போய்க்கொண்டிருந்தார்கள். இது புண்ணியமான செயல் என்றும் நினைத்தார்கள். தாங்கள் இறைவன் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் எனவே உலகப் பொருள்களை நாங்கள் ஏன் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பொதுவாக ஹஜ் பயணத்தில் வணிகம் செய்வதும் சம்பாதிப்பதற்காக உழைப்பதும் தடுக்கப்பட்டவை என்று கருதிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலோர் உண்ணுவதையும், குடிப்பதையும் துறந்திருந்தார்கள். இதையும் இறை வழிபாடு என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

சிலர் ஹஜ்ஜுக்கு புறப்பட்டால் உரையாடலை நிறுத்திக் கொள்வார்கள். இதற்கு ‘ஹஜ்ஜெமுஸ்மித்’ மெளன ஹஜ் என்று பெயர். இப்படிப்பட்ட தவறான நடைமுறைகள் கணக்கின்றி இருந்தன.

இந்த நிலைமை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் இருந்தன. பின்னர் இப்ராஹீம் நபியின் வழித்தோன்றலில் இருந்து முழுமையான மனிதர் ஒருவர் தோன்றினார். அவர்களின் திருப்பெயர் முஹம்மது பின் அப்துல்லாஹ். எவ்வாறு இப்ராஹீம் நபி அவர்கள் பண்டிதர்களும் குருக்களும் கொண்ட குலத்தில் பிறந்தார்களோ அவ்வாறே முஹம்மத்(ஸல்) அவர்களும் பல நூற்றாண்டுகளாக கஃபாவுக்கு குருக்களாயிருக்கும் குடும்பத்தில் பிறந்தார்கள்.

இப்ராஹீம் நபியவர்கள் பொய்யான தவறான தெய்வ மூடக்கொள்கைகளை அழிக்க பெரும்பாடு பட்டதைப் போல் முஹம்மது(ஸல்) அவர்களும் தாங்கள் கொண்டு வந்த கலப்படமற்ற மார்க்கத்தை 21 ஆண்டு காலத்தில் இறைப்பணியை எல்லாம் செய்து முடித்தபோது அவர்கள் இறைக்கட்டளைப்படி முன்போலவே காபாவை முழு உலகத்துக்கும் இறைவனுக்கு வழிபட்டோருக்குரிய கேந்திரமாக எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஹஜ் செய்ய வாருங்கள் என முன்போலவே அறிவித்தார்கள்.

அந்த ஆலயத்திற்குச் சென்று வர மக்களில் எவர்கள் சக்தி பெற்றவர்களோ அவர்கள் ஹஜ் செய்வதானது அல்லாஹ்வுக்கு ஆற்றவேண்டிய கடமையாகும். ஆனால் யாரேனும் இக்கட்டளையைச் செயல்படுத்த மறுத்தால் (அவர் தெரிந்து கொள்ளட்டும்) உலகத்தார் அனைவரை விட்டும், நிச்சயம் அல்லாஹ் தேவையற்றவனாய் இருக்கின்றான். (3:97)

சிலை வணக்கம் ஒழிந்தது:

கஃபாவிலுள்ள சிலைகள் அனைத்தும் உடைத்து எறியப்பட்டன. இறைவனைத் தவிர மற்றவருக்கு செய்த வழிபாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இணைவைக்கும் பழக்கங்கள் அடியோடு அழிக்கப்பட்டன. இறைவன் பெயரால் திருவிழாக்களும், வேடிக்கைகளும் தடை செய்யப்பட்டன.

அவன் எவ்வாறு (தன்னை நினைவு கூறவேண்டுமென்று) உங்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றானோ அவ்வாறு அவனை நினைவு கூறுங்கள்! இதற்கு முன்னரோ நீங்கள் வழி தவறியவர்களாய் இருந்தீர்கள். (2:198)

அபத்தமான செயல்:

ஹஜ்ஜின்போது இச்சைகளைத் தூண்டக்கூடிய சொல் செயல் மற்றும் தீவினை சண்டை சச்சரவு ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது! (2:197)

பின்னர் நீங்கள் உங்களுடைய ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றி விட்டீர்களானால், நீங்கள் (முன்னர்) உங்கள் மூதாதையரை நினைவு கூர்ந்தது போல- ஏன், அதனைவிட அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். (2:200)

விளம்பரத்திற்காக தடை:

பெயருக்காகவும், விளம்பரத்துக்காகவும் செய்யப்பட்டு வந்த ஆடம்பரமான தான தர்ம போட்டிகள் அனைத்திற்கும் முடிவு கட்டப்பட்டது. இந்த இடத்தில் இப்ராஹீன் நபியவர்கள் காலத்திலிருந்த அதே செயல்முறை மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டது. இறைவனின் திருப்பெயர் கொண்டு பிராணிகளை அறுங்கள், வசதியுள்ளவர்களின் தியாகத்தால் ஹஜ்ஜுக்கு வருகிற ஏழைகளுக்கும் உண்ணும் வாய்ப்பு கிடைக்கட்டும்.

உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால் விரயம் செய்யாதீர்கள்! திண்ணமாக அல்லாஹ் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை. (7:31)

குர்பானியின் இரத்தத்தை பூசத் தடை:

குர்பானியின் இரத்தத்தை கஃபாவின் சுவர்களில் தடவுவதும், இறைச்சியை கொண்டு வந்து பரப்புவதும் நிறுத்தப்பட்டது.

அவற்றின் இறைச்சியும் இரத்தமும் அல்லாஹ்விடம் போய்ச் சேருவதில்லை. ஆயினும், உங்களின் இறையச்சமே அவனிடம் போய்ச் சேருகின்றது. (22:37)

நிர்வாணமாக வலம் வரத்தடை:

(நபியே! அவர்களிடம்) நீர் கேட்பீராக: அல்லாஹ் தன் அடிமைகளுக்காகத் தோற்றுவித்துள்ள (ஆடை) அலங்காரத்தை தடை செய்தது யார்? (7:32)

நீர் கூறும்: அல்லாஹ் மானக்கேடானவற்றைச் செய்யும்படி எப்போதும் கட்டளை இடுவதில்லை. (7:28)

புனித மாதங்களை மாற்றத் தடை:

ஏதேனும் ஓர் ஆண்டில் (போர் தடுக்கப்பட்ட) ஒரு மாதத்தை (போருக்காக) அவர்கள் அனுமதிக்கப்பட்டதாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் மறு ஆண்டில் அதே மாதத்தில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். எனெனில் அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்டுள்ள மாதங்களின் எண்ணிக்கையைப் பூர்த்தியாக்க வேண்டும் என்பதற்காக! (9:37)

வழிச்செலவுக்கு வசதியில்லாமல் ஹஜ்ஜுக்கு செல்வது தடுக்கப்பட்டது:

மேலும் நீங்க (ஹஜ்ஜுக்காக) வழித்துணைச் சாதனங்களைக் கொண்டு செல்லுங்கள்! உண்மை யாதெனில், வழித்துணைச் சாதனங்களில் எல்லாம் மிக மேலானது இறையச்சம்தான். (2:197)

ஹஜ் காலத்தில் வியாபார அனுமதி:

ஹஜ் பயணத்தில் சம்பாதிக்காமலிருப்பது நற்செயல் என்றும், வருமானம் தேடுவது ஆகாத செயல் என்றும் கருதப்பட்டு வந்தது.

(ஹஜ் பயணத்தில்) உங்கள் இறைவனின் அருளை தேடிக்கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. (2:198)

மெளன ஹஜ்ஜும். உண்ணாமலும், பருகாமலும் இதர அறியாமைச் சடங்குகள் அனைத்தும் அழித்து விட்டு இறையச்சம், ஒழுக்கம், தூய்மை எளிமை ஆகியவற்றின் முழு வடிவமாக ஹஜ் ஆக்கப்பட்டது.

கஃாபாவிற்கு வருகிற பாதைகள் அனைத்திலும் கஃபாவிலிருந்து இருபது மைலுக்கு அப்பால் ஒவ்வோர் எல்லை நிர்ணயிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் அல்லாஹ்வுடைய இல்லத்தில் எளியவராகவும், தாழ்மையுடையவராகவும் வருகை புரியவேண்டும். பணக்காரர்கள், ஏழைகள் எவராயினும் அந்த எல்லையை அடைந்ததும் ‘இஹ்ராம்’ எனும் எளிய உடைகளை அணியவேண்டும் எனக் கட்டளையிடப்பட்டது.

அமைதியான சூழ்நிலை ஏற்படுதல்:

சாந்தி சமாதானத்தை நேசிக்கும் மனப்பாங்கு ஏற்படவும் இறை ஆலயத்திற்கு வருவோர்க்கு எவராலும் எந்தத் தீங்கும் நிகழக்கூடாது என்பதற்காகவே ஹஜ்ஜுக்குறிய நான்கு மாதங்களை கண்ணியப்படுத்தி அம்மாதங்களில் போரிடுவது தடுக்கப்பட்டது. ஹாஜிகள் கஃபாவுக்கு வரும்போது அவர்களுக்கு அங்கே திருவிழாக்களோ, ஆடலோ பாடலோ இராது. மாறாக ஒவ்வோர் அடியிலும் இறைவனின் தியானம் இருக்கும்; தொழுகைகள் இருக்கும், வழிபாடுகள் இருக்கும்; தியாகங்கள் இருக்கும்; கஃபாவைச் சுற்றி வலம் வருதல் இருக்கும்; அங்கு உச்சரிக்கப்படும் வாக்கியங்கள் இவையே!

அபுல் அஃலா மெளதூதி
பகுத்தறிவுகாரர்கள் கண்னுக்குத் தெரியாத கடவுளை நம்புவது காட்டு மிராண்டித்தனம். பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. கடவுளைக் காட்டினால் நம்புகிறோம், லட்சக்கணக்கில் பணம் பரிசும் தருகிறோம் என்று சவால் விடுகிறார்கள். இதை உண்மையான பகுத்தறிவு என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? எந்த உண்மையான பகுத்தறிவுவாளனும் இதை பகுத்தறிவு என்று ஒப்புக் கொள்ளமாட்டான். இதனைப் பார்த்தறிவு அதாவது ஜயறிவு என்றே சொல்லுவான். இன்னும் பச்சையாகச் சொன்னால் இதை மிருக அறிவு என்றே சொல்ல வேண்டும்.

கண்ணியமிக்க ஒருவர் உங்களிடம் வந்து எதிர்வரும் ஒரு தேதியில் பெரிய தொரு விருந்துபசாரம் நடைபெற இருப்பதாகவும், அதில் நீங்கள் அவசியம் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுகிறார். பகுத்தறி ரீதியாக இதை எப்படி ஏற்பீர்கள்? அவர் வீட்டிற்குப் போய் அந்த விருந்துக்குறிய ஏற்பாடுகள் அனைத்தையும் கண்ணால் பார்த்த பின்னர்தான் ஏற்பீர்களா? அப்படியே அவர் வீட்டிற்குப் போய் நேரில் நீங்கள் பார்ப்பதால் நடைபெற இருக்கும் விருந்துக்குரிய அறிகுறிகள் ஏதும் அதற்கு முன்னரே உங்கள் பார்வையில் படுமா? இல்லையே?

அந்த கனவானின் நன்னடைத்தையில் நம்பிக்கை வைத்து பகுத்தறிவு ரீதியாகச் சிந்தித்து அவரது கூற்றிலுள்ள உண்மையை ஏற்றுக் கொள்கிறீர்கள். குறிப்பிட்ட தேதியில் அவர் வீடு சென்று பார்க்கும் போது விருந்துக்குறிய அத்தனை ஏற்படுகளையும் கண்ணால் பார்க்கிறீர்கள். மகிழ்சியுடன் உண்டு அனுபவிக்கிறீர்கள் இது யாருக்கு பொருந்தும் பகுத்தறிவுள்ள மனிதனுக்கு மட்டும் தானே பொருந்தும்! மிருகத்திற்குப் பொருந்துமா?

ஒரு மாட்டையோ , ஒரு ஆட்டையோ விழித்து ஏய்! மாடே அல்லது ஆடே உனக்காக இன்ன தேதியில் பெரியதொரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .நீ அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் அந்த மிருகத்திற்கு அது புரியுமா? ஜயறிவு மிருகமான அது பகுத்தறியும் திறன் பெற்றுள்ளதா? இல்லையே! அதற்கு முன்னால் ஒரு மரக்கொப்பைக் அசைத்துக் காட்டி அழைத்தால் அது வேகமாக ஓடிவரும். அதாவது கண்ணால் கண்டபின் வேகமாக ஓடிவரும். இது பகுத்தறிவு செயலா? பார்த்தறிவு செயலா -மிருக அறிவு செயலா? சிந்தியுங்கள்.

எனவே கடவுளை பார்த்துத்தான் ஏற்றுக்கொள்வேன் என்று அடம் பிடிப்பது பகுத்தறிவு வாதமேயல்ல; பார்த்தறிவு வாதம் அதாவது மிருகவாதம்! இதைப் பகுத்தறிவுடன் முடிச்சுப் போடுவது அதைவிட அறிவீனமாகும்.

இறைவனையும், மறுமையையும் கண்ணால் பார்த்த பின்னரே ஏற்பேன் என்பது பகுத்தறிவு வாதமே அல்ல. விருந்து கொடுத்த அந்த கண்ணியமான கனவானைப் போல் ஏன் அதைவிட ஆயிரம் மடங்கு கண்ணியத்திற்கும், உண்மைக்கும் உரித்தானவர்களான இறைத்தூதர்களை ஏற்று அவர்களின் உபதேசங்களை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து ஏற்பதே பகுத்தறிவாகும்.

விருந்துடைய குறிப்பிட்ட தேதிக்கு முன்னால் விருந்து கொடுப்பவரின் வீட்டுக்குப் பொயே விருந்துடைய ஏற்ப்பாட்டைக் கண்ணால் பார்க்க முடியவில்லையே. இந்த நிலையில் மரணத்திற்குப் பின்னுள்ள மறுமையின் வாழ்க்கையை இவ்வுலகிலிருந்து கொண்டே கண்ணால் பார்க்க முற்படுவது எவ்வளவு பெரிய மதியீனம் என்பதைச் சிந்தியுங்கள்.

மேலும் கண்ணால் கண்ட பின் ஏற்பதற்கு மனிதனுக்கு பகுத்தறிவு அவசியமில்லை. மிருகங்களுக்கு இருக்கும் ஜயறிவே தாரளாமாகப் போதும். இறைமறுப்பாளர்கள் பகுத்தறிவாளர்களா? அல்லது பார்த்தறிவாளர்களா அதாவது ஜயறிவாளர்களா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ”பரிந்துரை” செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆலு இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

3) உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

6) “”எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்”" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

விளக்கம்: படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான், குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளினான். ஆனால், முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன், தெரிந்தவர்களிடம் சென்று, குர்ஆனை கற்றுக் கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதர சகோதரிகள், குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு, நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி, எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களே! தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள், அதைப்படிப்பது மிகவும் அவசியமானது. அதைப்படிப்பது மிகவும் இலகுவானது. அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

திட்டமாக, நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? (அல்குர்ஆன் 54:22)

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)

நாம் இந்தக் குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அப்படிச் செயல்படாதவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? என்று கேட்கின்றான். அப்படி அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்படவில்லையே! ஏன் அதைப்படித்து செயல்படாமல் இருக்கின்றார்கள்? என அல்லாஹ் நமது சிந்தனையைத் தூண்டும் கேள்வியை கேட்கின்றான். ஆகவே, அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜமதுல் குர்ஆனின் மூலம் விளங்கிப் படியுங்கள். அதன் படி செயல்படுங்கள். விஷேசமாக குர்ஆன் இறங்கிய இந்த ரமளான் மாதத்தில் அதிகமாக ஓதுங்கள். ஒரு எழுத்தை ஓதினால் குறைந்தது பத்து நன்மை கிடைக்கின்றது. ஒரு நாளில் எத்தனையோ எழுத்துக்களை படிக்க நமக்கு வாய்ப்பிருக்கின்றது. சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். குர்ஆனைப் படித்து, அதன்படி நடந்து, ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!
பகுத்தறிவற்ற எண்ணற்ற பிராணிகளைப்போல், பகுத்தறிவுள்ள மனிதனும் ஒரு பிராணியே. சிலர் சொல்லுவது போல் அவனுக்கு மறுமை வாழ்க்கை என்று ஒன்றில்லை. மனிதன் மரணிப்பதோடு அவனது வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. மற்ற பிராணிகளைப் போல் அவனும் வாழந்து மடிந்து மண்ணாகிப் போவதே அவனது இறுதி முடிவு என்பது நாத்திக நண்பர்களின் உறுதியான முடிவு.

இந்த அவர்களின் முடிவின் அடிப்படையில் எமக்குச் சில ஐயங்கள் எழுகின்றன. அவற்றைத் தீர்த்து வைப்பது அவர்களின் கடமையாகும்.

நாத்திகர்கள் தாங்கள் தான் அசலான பகுத்தறிவாளர்கள் என்று பறைசாற்றிக் கொள்வது ஊர் அறிந்த உண்மை. எனவே எமது சில பகுத்தறிவுக் கேள்விகளுக்கு விடை தருவது அவர்கள் மீதுள்ள பொறுப்பாகும். அவர்கள் தரும் பதில்களிலிருந்து அவர்கள் பகுத்தறிவுப் பாசறையிலுள்ளவர்களா? அல்லது ஐயறிவு பாசறையிலுள்ளவர்களா? என்பதை எம்போன்றவர்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

உலகில் காணப்படும் கோடான கோடி ஜீவராசிகளைப் போல் அதாவது புழு பூச்சிகளைப் போல் மனிதனும் ஒரு புழு -பூச்சியே – ஒரு பிராணியே ஜீவராசியே! அனைத்து உயிரினங்களும் மடிந்து மண்ணணாகிப் போவது போல் மனிதனும் மடிந்து மண்ணாகி போகின்றவன்தான். மற்றபடி அவனுக்கொரு ஆத்மாவோ, மறுமை வாழ்க்கையோ இல்லை என்பதே நாத்திகர்களின் பகுத்தறிவு வாதம். அதாவது உலக வாழ்வோடு மனித வாழ்வு முற்றுப் பெற்று விடுகிறது. அதன் பின் ஒரு தொடர்ச்சியும் இல்லை என்பதே அவர்களின் வாதம். இப்போது அவர்களின் வாதத்தில் நமக்கு ஏற்படும் ஐயங்கள் இவைதான்.

மற்ற படைப்பினங்களைப் போன்றதொரு சராசரி படைப்பினமே மனிதன் எனும் போது மற்ற படைப்பினங்களுக்குரிய சட்டங்களே மனிதனுக்கும் பொருந்த வேண்டும். மற்ற படைப்பினங்களைப் பொருத்தமட்டிலும் “வல்லனவற்றின் வாழ்வு வளம்” (Survival of the fittest) என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே அவற்றின் வாழ்வு அமைந்துள்ளது. அதாவது வலிமையுள்ளவை வலிமையற்றவற்றை வீழ்த்தி, அல்லது அழித்து தம்மை வளப்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக பெரிய மீன்கள் சிறிய மீன்களைக் கொன்று தமக்கிரையாக்கி கொள்கின்றன. சிங்கம், புலி போன்றவை மான், மாடு போன்றவற்றைக் கொன்று தமக்கிரையாக்கிக் கொள்கின்றன. இந்த “வல்லனவற்றின் வாழ்வு வளம்” புழு, பூச்சியிலிருந்து, ஊர்வனவற்றிலிருந்து, நாலு கால் பிராணிகள் வரை பொருந்தும், தரையிலுள்ள பிராணிகளுக்கும் பொருந்தும். இந்த சித்தாந்தத்தை நாத்திக பகுத்தறிவாளர்கள் அநீதி என்று தீர்ப்பு அளிப்பதில்லை.

அப்படியானால், அந்த ஜீவராசிகளைப் போன்றதொரு புழு, பூச்சி-மிருகம் போன்ற ஜீவராசிதான் மனிதன் என்று நாத்திக பகுத்தறிவாளர்கள் கூறும் போது, அதே “வல்லனவற்றின் வாழ்வு வளம்” (Survival of the Fittest) என்ற சித்தாந்தம் மனிதனுக்கும் பொருந்திப் போக வேண்டுமல்லவா? மனிதர்களிலும் வலியவர்கள் வலிமை அற்றவர்களை வீழ்த்தி தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்வதை அநீதி என்று கூற முடியுமா? இல்லை; இது அநீதி என்று நாத்திகர்கள் கூறுவார்களேயானால், எந்த அடிப்படையில் அநீதி என்று கூறுகிறார்கள்? மற்ற படைப்பினங்களைப் போன்றதொரு, மண்ணோடு மண்ணாகிப் போகும் ஒரு படைப்புத்தானே – புழு பூச்சிதானே, மிருகம் போன்றவன்தானே மனிதனும் நாத்திகர்களின் கூற்றுப்படி அப்படியானால் மற்றப் படைப்பினங்களுக்குப் பொருந்திப் போகும் வல்லனவற்றின் வாழ்வு வளம் (Survival of the fittest) என்ற கோட்பாடு மனிதனுக்கு மட்டும் ஏன் பொருந்திப் போகாது? இதற்குரிய சரியான விளக்கத்தை பகுத்தறிவு அடிப்படையில் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள் நாத்திகர்கள். அது மட்டுமல்ல; மற்ற படைப்பினங்கள் விஷயத்தில் அது நீதியாகும்; மனிதப்படைப்பு விஷயத்தில் அது நீதியாகும்; மனிதப்படைப்பு விஷயத்தில் மட்டுமே அது அநீதியாகும் என்று பிரித்துச் சட்டம் சொன்ன அதிகாரம் பெற்ற சக்தி எது? இதற்கு பகுத்தறிவு ரீதியாக விளக்கம் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

நீதிக்கும், தர்மத்திற்கும் கட்டுப்பட்டு வாழ்பவர்களில் பெரும்பாலோர் வறுமையிலும், துன்பங்களிலும் சதா உழன்று மடிகிறார்கள். அவர்கள் நீதிக்கும், தர்மத்திற்கும் உட்பட்டு வாழ்ந்ததற்குரிய நற்பலனை இவ்வுலகில் அனுபவிக்கவில்லையே! அப்படியானால் எங்கே பெறுவார்கள்?

அடுத்து வலுவில்லாதவர்கள் வலுவானவர்களை அடக்கி ஒடுக்கி தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வது அநீதியே என்ற பகுத்தறிவு ரீதியாகவும் மனச்சாட்சியின் படியும் அப்பட்டமாக ஒப்புக் கொண்டிருக்கும் நாத்திகர்களில் பலர், இன்று அதற்கு மாறாக மக்களையும் அரசையும் அதிகாரிகளையும் ஏமாற்றி அல்லது லஞ்சம் கொடுத்து கோடி, கோடியாகக் கொள்ளை அடித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சொத்துக்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார்களே? இதற்குக் காரணம் என்ன? அவர்கள் அநீதி என்று ஒப்புக் கொண்டுள்ளதற்கு மாற்றமாக – மக்களிடம் அநீதி என்று அப்பட்டமாக அறிவிப்பதற்கு மாற்றமாக அந்த அநீதியான கொள்ளை அடிக்கும் செயலை செய்ய அவர்களைத் தூண்டும் சக்தி எது? அவர்களது பகுத்தறிவும், மனச்சாட்சியும் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமற்ற செயல் என்று ஒப்புக்கொள்ளும் குடி, விபச்சாரம், சூது போன்ற தீய காரியங்களில் அவர்களில் பலர் மூழ்கி இருக்கிறார்களே? இத்தீய செயல்களைச் செய்ய அவர்களைத் தூண்டும் சக்தி எது?

இறைவனையும், மறுமையையும் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களோ மனிதனின் உடம்பில் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் அவனது பகிரங்கப் பகைவனான ஷைத்தான் ஓடிக்கொண்டு மனிதனை வழிகெடுத்து நரகில் கொண்டு தள்ளி அதை நிரப்ப கங்கணம் கட்டிச் செயல்படுகிறான். அவனது வலையில் சிக்கியே மனிதன், தானே பாவம், அநீதி, அக்கிரமம், ஓழுக்கமற்ற செயல் என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் துர்ச்செயல்களைச் செய்து பாவியாக நேரிடுகிறது என்று கூறிவிடுவார்கள். நிச்சயமாக நாத்திகர்கள் இறைவனையும், மறுமையையும், ஷைத்தானையும் மறுப்பதால் இந்தக் காரணத்தை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள்; சொல்லவும் மாட்டார்கள். அப்படியானால் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமற்ற செயல் என்று மனிதனே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுவிட்டு, அடுத்த கனமே அவற்றைச் செய்வதற்குரிய காரணம் என்ன? பகுத்தறிவு செய்வதற்குரிய காரணம் என்ன? பகுத்தறிவு பாதையில் பயிற்சி பெற்ற நாத்திகர்கள் அதற்குரிய காரணம் கூறக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

அடுத்து அவர்களே பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டு விட்டு அதற்கு மாறாக அந்த பாவமான செயல்களை, அநீதியான செயல்களை, அக்கிரமமான, ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்து கோடி, கோடியாக கொள்ளை அடித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குவித்து வைத்துள்ளனர். அவர்களுக்கு இன்று மக்களுக்கு மத்தியில் பெருஞ்செல்வாக்கு ஆள், அம்பு, பட்டம், பதவி, பலவித அதிகார ஆதிக்கம், அரசியல் செல்வாக்கு என்று மன்னாதி மன்னர்கள் போல் உல்லாச புரிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வுலகில் வாழ்நாள் பூராவும் அவர்கள் கொள்ளை அடித்து சேர்த்த சொத்துக்கள் அவர்களுக்கு இவ்வுலகை சுவர்க்கப்பூமியாக ஆக்கித் தருகிறது.

அவர்கள் செய்த அநீதி, அக்கிரமம், பாவச் செயல்கள், கொலை, கொள்ளைகள் இவை காரணமாக இவ்வுலகில் எவ்வித தண்டனையோ, கஷ்டமோ, துன்பமோ அனுபவிக்காமல் சுவர்க்கவாசிகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பாடையில் வைத்து மண்ணறையில் கொண்டு தள்ளும் வரை அல்லது தீயிலிட்டுப் பொசுக்கும் வரை இன்பமே இன்பம்; மற்றபடி துன்பத்தின் சாயல் கூட படாதபடி வாழ்ந்து மடிகிறார்கள். பகுத்தறிவு நாத்திகர்கள் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்ட செயல்களைச் செய்தே அவர்கள் இவ்வுலகில் குபேர வாழ்க்கையை- சொர்க்கலோக வாழ்க்கையை அடைந்தார்கள்.

ஆனால் அவர்கள் செய்து முடித்த எந்த பாவமான செயலுக்கும், அநீதியான செயலுக்கும், அக்கிரமமான செயலுக்கும், ஒழுக்கமற்ற செயலுக்கும் அணுவத்தனை கூட தண்டனையோ துன்பமோ அனுபவிக்கவில்லை. மரணத்திற்குப் பின் மனிதனுக்கு வாழ்வு உண்டு என்று உறுதியாக நம்பும் முஸ்லிம்களோ நிச்சயமாக அப்படிப்பட்டவர்கள் இவ்வுலகளில் மக்களையும், அரசுகளையும், அதிகாரிகளையும் ஏமாற்றித் தப்பிக் கொண்டாலும் இறைவனுடைய தர்பாரில் தப்பவே முடியாது. அங்கு வசமாக மாட்டிக் கொள்வார்கள். கடுமையான தண்டனைகள் அவர்களது குற்றச் செயல்களுக்குக் காத்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லி விடுவார்கள். ஆனால் இறைவனையும், மறுமையையும் மறுக்கும் நாத்திகர்கள் இப்படிச் சொல்ல முடியாது.

அப்படியாயின் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கைப்படி இப்படிப்பட்ட பாவமான, அநீதியான, அக்கிரமமான, ஒழுக்கமற்ற செயல்களைச் செய்து வளமான வாழ்வை அமைத்துக் கொண்ட கொடியவர்கள் அதற்குரிய தண்டனையை அனுபவிப்பது எப்போது? பகுத்தறிவு ரீதியாக விடை தரக்கடமைப் பட்டிருக்கிறார்கள். ஒன்று புழு, பூச்சி, மிருகம் போன்ற படைப்பினங்களைப் போல், மனிதனும் “வல்லனவற்றின் வாழ்வு வளம்” (Survival of the fittest) என்ற கோட்பாட்டின்படி வாழக் கடமைப்பட்டவன் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லை அது பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று சொன்னால் இந்த சட்டத்தை வகுத்தளித்த சக்தி எது என்பதையாவது தெளிவு படுத்த வேண்டும்.

மேலும் அவர்களே அவர்களது மனட்சாட்சிப்படி பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று அப்பட்டமாக ஒப்புக் கொண்டுவிட்டு மறைமுகமாக அவற்றைச் செய்யத் தூண்டும் சக்தி எது என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். இப்படி மனட்சாட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டு சொத்துக்களை குவித்து உலகில் குபேர வாழ்க்கை, சொர்க்கலோக வாழ்க்கை வாழ்ந்து மடியும் சண்டாளர்கள் தங்களின் குற்றங்களுக்குரிய தண்டனைகளை அனுபவிப்பது எப்போது? எங்கே? என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். இந்த எமது சந்தேகங்களுக்கெல்லாம் பகுத்தறிவு ரீதியான விளக்கங்களை அவர்கள் தரவேண்டும், அப்படியானால் மட்டுமே அவர்களைப் பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்றவர்களாக உலகம் ஒப்புக் கொள்ளும். இல்லை என்றால் புறக்கண்ணால் பார்த்தே கடவுளை, மறுமையை ஏற்பேன் என்ற ஐயறிவு வாதத்தையே அவர்கள் முன் வைக்கிறார்கள் என்ற முடிவுக்கே முறையான பகுத்தறிறவை- நுண்ணறிவை உடையவர்கள் வர நேரிடும்.

பாவமான, அநீதமான, அக்கிரமமான, ஒழுக்கமற்ற செயல்களைச் செய்கிறவனின் மனச்சாட்சியே அவனைக் கொள்ளாமல் கொன்று கொண்டிருக்கும்; அதுவே அவனுக்குரிய தண்டனையாகும் என்ற பிதற்றலான, மழுப்பலான, நழுவலான பதிலை அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கவில்லை. காரணம் இந்த வாதம் உண்மையானால், இவ்வுலகிலும் அதே வாதப்படி அக்குற்றச் செயல்களுக்கு அரசுகளும் எவ்விதத் தண்டனையும் அளிக்கக் கூடாது. அவர்களின் மனட்சாட்சியே அக்கயவர்களை கொல்லாமல் கொள்வதே போதுமானதாகும் என்பதையும் நாத்திகர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்? எதைச் சரிகாணப்போகிறார்கள் நாத்திகர்கள்?
எல்லாம் வல்ல அல்லாஹ் மனிதனை படைத்தான். மனிதனை காலமெல்லாம் உலகில் வாழவைக்காமல் ஒரு குறிப்பிட்ட நாட்கள் மட்டும் வாழவைத்து பிறகு மரணமடையச் செய்கிறான். மனிதன் மட்டுமல்லாமல் அவன படைத்த அனைத்து படைப்புகளுக்கும் மரணத்தை அடையக்கூடியவைகளாக இருக்கின்றன. ஆனால் மனிதனை மட்டும் இவ்வுலகில் வாழும்போது அவனை வணங்கவும் அவனது தூதர்களை பின்பற்றி வாழ்ந்தாலும் வாழாவிட்டாலும் மரணத்திற்குப்பின் ஒரு சிறந்த வாழ்க்கையை நல்லவர்களுக்கும், தீயவர்களுக்கு நரகத்தையும் ஏற்படுத்தி உள்ளான்.

இவ்வுலகில் வாழும்போது குறிப்பாக முஸ்லிம்கள் எப்படி வாழவேண்டும் என்பதையும் மரணித்த பிறகு செய்யவேண்டிய அமல்கள் பற்றியும் இனி கான்போம். இறைவன் தன் திருமறையில் மனிதனின் படைப்பு பற்றி

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவாிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவாிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன் 4:1

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 21:35

நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே மாிக்கும்படிச் செய்கிறோம் அன்றியும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வர வேண்டியிருக்கிறது. அல்குர்ஆன் 50:43

மேற்கண்ட வசனங்களில் மரணத்தை பற்றியும், அல்லாஹ் நம்மை இவ்வுலகில் வாழவைத்து நன்மை தீமை செய்ய வைத்து நம்மை சோதிக்கிறான் என்பதை என்பதையும் விளங்கலாம்.

பெரிய மகான்கள், நபிமார்கள் நல்லடியார்கள் மரணிக்க மாட்டார்கள் என்று சிலர் கருதிவருகின்றார்கள். நபி(ஸல்) அவர்கள் இறந்தபோதுகூட உமர்(ரழி) அவர்கள் கூறினார்கள் “யாராவது நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறினால் அவர்கள் தலையை கொய்துவிடுவேன்” என்று நீட்டிய வாளுடன் நின்றார்கள். இரண்டு பிரிவினர்கள் இரு நிலைகளில் இருந்த சமயத்தில் அபூபக்கர்(ரழி) அவர்கள் அங்கு வந்து நிலைமையை பார்க்கிறார்கள். பிறகு அல்லாஹ்வின் 3.144 வசனத்தை ஓதியபிறகு உமர்(ரழி) தன் வாளை கீழே போடுகிறார்கள். நபித்தோழர்கள் அந்த அளவுக்கு குர்ஆனின் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்தார்கள். சிந்திக்க வேண்டிய சம்பவம் இது. 3:144 வசனத்தில், நபிமார்களும் மரணிப்பவர்களே என்று அல்லாஹ் கூறுகிறான்.

முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்;. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள். அல்குர்ஆன் 3:144

அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் – சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கினறன. அல்குர்ஆன் 39:42

மேற்கண்ட வசனங்கள் மூலம் ஒவ்வொருவருக்கும் மரணம் நிச்சயம் வந்தேதீரும் என்பதை பார்த்தோம். அடுத்து நாம் மரணித்துவிட்டால் நமக்கு செய்யவேண்டிய கடமை பற்றியும், மறுமையில் உள்ள வாழ்க்கை பற்றியும் பார்ப்போம்.

நாம் இறந்துவிட்டால் குளிப்பாட்டி கபனிட்டு விரைவாக சென்று நல்லடக்கம் செய்ய நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்று நாள் துக்கம் அனுசரிக்க கூறியுள்ளார்கள். மூன்று நாள் சமைப்பதை விட்டும் அக்கம் பக்கம் உறவினர்கள் வீட்டில் சமைத்து கொடுக்கவும் கட்டளையிட்டுள்ளார்கள். இறந்தவர் வீட்டில் ஒப்பாரி வைத்து அழுவதை கண்டித்துள்ளார்கள்.

எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வாக்கு பிரமாணம் (பைஅத்) எடுக்கும்போது நாங்கள் மையத்திற்காக ஓலமிட்டு அழக்கூடாது என்றும் வாக்கு பிரமாணம் எடுத்தார்கள். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்

அபூமூஸா(ரழி) அவர்கள் நோய்வாய்ப்பட்டு மயக்கத்திலிருக்கும்போது அவர் மனைவிகளில் ஒருவர் கூக்குரலிட்டு அழுதார். அவர் மயக்கம் தெளிந்த பிறகு தன் மனைவியை கண்டித்தார். துன்பங்களில் ஓலமிட்டு அழுவதையும், துயரங்களில் தனது தலையை சிரைத்துக் கொள்வதையும் தனது ஆடைகளை கிழ்த்துக்கொள்வதையும் விட்டு நபி(ஸல்) அவர்கள் விலக்கி இருந்தார்கள் என்று அபூமூஸா(ரழி) கூறினார்கள். நூல்: புகாரி

ஆனால் இன்று மார்ர்க்கத்தை போதிப்பதை விட்டு இறந்தவர் வீட்டில் கண்டதை கூறி கூலி வாங்கி இறந்து விட்டாலும் அந்த வீட்டில் பிரியாணி, பலவ்சோறு சமைக்கவும், 3,7,40 என்ற பெயரில் ஹத்தம் பாத்திஹா ஓதி பணம் சம்பாதித்து மக்களை மடையர்களாக்கி வருகின்றனர்.

இறந்தவர்களுக்கு எந்தப்பாத்திஹாவும் யாசீனும் போய்ச்சேராது. மாறாக இறந்தவர்களை சென்றடையும் விஷயங்களை நபி(ஸல்) அவர்கள் தெளிவாக கூறியுள்ளார்கள்.

ஆதமின் மகனே! மனிதன் இறந்து விட்டால், அவனது செயல்களும், அதற்குறிய நன்மைகளும் நின்று விடுகின்றன. இருப்பினும் மூன்றைத்தவிர என்று நபி(ஸல்) கூறினார்கள்.

1.நிலையான தர்மம், 2.பயனுள்ள கல்வி, 3.இவருக்காக இவரது ஸாலிஹான பிள்ளை செய்யும் துஆ. அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்

ஒருவர் உயிரோடு இருக்கும்வரை நல்லது கெட்டது எது செய்தாலும் அதை விமர்சனம் செய்வதும் குறைகளை சுட்டிக்க்காட்டுவதும் தவறில்லை. ஆனால் ஒருவர் மரணித்து விட்டால் அவரைப்பற்றி குறைகூறுவதை நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

இறந்தவர்களை திட்டாதீர்கள்: ஏனெனில் அவர்கள் என்னென்ன செய்தார்களோ அதன் பலனை அவர்கள் அடைந்து விட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) நூல்: அஹ்மத், புகாரி

ஜனஸாவிற்கு வந்து ஜனஸா தொழும்வரை எவர் அங்கிருக்கிறாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு. அடக்கம் செய்யும்வரை எவர் அங்கிருக்கிறாரோ அவருக்கு இரண்டு கிராத் நன்மையுண்டு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது இரண்டு கிராத் என்றால் என்ன? என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் மிகப்பெரும் இரு மலைகளின் அளவு என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி முஸ்லிம்

கிராத் என்றால் உஹத் மலை அளவு நன்மை என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்லிம் இப்னுமாஜ்ஜாவில் பதிவாகியுள்ளது.

ஒருவர் மரணித்துவிட்டால் அவர் குடும்பத்தினருக்கு சமைத்து கொடுக்கவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஜஃபர்(ரழி) அவர்கள் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது நபி(ஸல்) அவர்கள் ஜஃபர்(ரழி)யின் குடும்பத்தாருக்கு நீங்கள் உணவு தயார் செய்யுங்கள். அவர்கள் கவலையில் உள்ளனர் என்று மக்களிடம் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜாபர்(ரழி) நூல்: அபூதாவூத், அஹ்மத், திர்மிதி

நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி வந்து மறுமை நாள் எப்பொழுது வரும் என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அமானிதம் வீணடிக்கப்பட்டால் ‘மறுமையை எதிர்பார்’ என்று சொன்னார்கள். அது எப்படி வீணடிக்கப்படும் என்று கேட்டார். தகுதியில்லாதவரிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்பட்டால் மறுமை நாளை எதிர்பார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி


வானம் பிளந்து விடும்போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்ருகள் திறக்கப்படும் போது, ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது? அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான். எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான். இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள். நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர். (அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள். நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.
நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். .இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள். நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள். மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள். நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது? பின்னும் நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது? அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே. அல்குர்ஆன் 82:1-19

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குாிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. அல்குர்ஆன் 3:185

ஆகவே, (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய் என்று கூறியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்தவர்களாகி விட்டனர்; அவர்களிடம் மறுமை நாள் திடீரென வரும்பொழுது உலகில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கை சேதமே என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளை தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள்; அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். அல்குர்ஆன் 6:31

மறுமையைப்பற்றி மேலும் பல வசனங்கள் உள்ளன. இன்னும் மறுமையை நம்பாமல் உள்ள முஸ்லிம்கள் பலர் உள்ளனர். இவர்கள் நாம்தான் மரணித்து விடுவோமே பிறகு எப்படி மறுமையப்பற்றி தெரியும் என்கின்றனர். குர்ஆனை புரட்டிப்படிக்கும் யாரும் நாம் மரணித்து விட்டாலும் மண்ணோடு மண்ணாக மக்கி உடல் மடிந்து போனாலும் எல்லாம் வல்ல அல்லாஹ் மண்ணோடு மக்கிப்போன இவ்வுடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவான் என்பதை உணர்வார்கள். மறுமை வாழ்க்கை உண்டு என்றும் நம்புவார்கள். எனவே மறுமையை பயந்து இம்மையில் நற்காரியங்கள் செய்ய முயற்சி செய்யுங்கள்.

இன்னும் எவர் தங்கள் இறைவன் முன் (மறுமையில்) கொண்டு வரப்படுவது பற்றி பயப்படுகிறார்களோ அவர்களுக்கு (இவ்வேதத்தைக் கொண்டு) எச்சாிக்கை செய்யும் (பாவத்திலிருந்து நீங்கி) அவர்கள் பயபக்தியுடையோராகும் பொருட்டு; அவனைத் தவிர அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவரோ, பாிந்து பேசுபவரோ வேறு யாரும் இல்லை. அல்குர்ஆன் 6:51
உம்றாவுக்குச் செல்பவர் குறித்த எல்லையில் இஹ்றாம் அணிந்து..

لَبَّيْكَ عُمْرَةًஎன்று கூறிக்கொள்ள வேண்டும். ஏதேனும் நோய் ஆபத்து நேரலாம் எனப் பயந்தால்

اللَّهُمَّ مَحِلِّي حَيْثُ حَبَسْتَنِيஎண்று கூறிக்கொள்ள வேண்டும்.
‘யா அல்லாஹ்! நீ எந்த இடத்தில் என்னைத் தடுக்கின்றாயோ அதிலே நான் இஹ்றாம் களையும் இடமாகும் என்பது இதன் அர்த்தமாகும். இப்படிக் கூறியவர் ஏதேனும் காரணத்தால் உம்றாவை நிறைவேற்ற முடியாது போனால் அவர் தெண்டப் பரிகாரமாக பித்யா செலுத்தத் தேவையில்லை. அதனைத் தொடர்ந்து கஃபதுல்லாஹ்வைக் காணும் வரை ஆண்கள் சத்தமாகப் பின்வரும் தல்பியாவைக் கூறிக்கொண்டிருக்க வேண்டும்.

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ
இஹ்ராமுடன் தவிர்க்க வேண்டியவை:


இஹ்ராம் அணிந்தவர் பின்வருவனவற்றை தவிர்க்க வேண்டும்.

(1) உடலிலோ, உடையிலோ மனம் பூசுவது.

(2) முடிகளைக் களைவது. கத்தரிப்பது.

(3) நகங்களை வெட்டுவது.

(4) ஆண்கள் தைத்த ஆடைகள் அணிவது.

(5) ஆண்கள் தலையை (துணியாலோ, தொப்பியாலோ, தலைப்பாகையினாலோ) மறைப்பது.

(6) பெண்கள் முகத்தை மூடுவதும், கையுரைகளை அணிவதும்.

(7) தரையில் வேட்டையாடுவது.

(8) திருமணம் முடிப்பது, திருமணம் பேசுவது.

(9) உடலுறவில் ஈடுபடுவதும், அதைத் தூண்டும் செயல்களில் ஈடுபடுவதும்.

கஃபாவுக்குச் சென்றதும் எல்லாப் பள்ளிகளுக்கும் நுழைவது போல் வலது காலை முன்வைத்து..

بسم الله اللَّهُمَّ صلِّ على محمد اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
என்று கூறி நுழைய வேண்டும். பின்னர் கஃபாவின் கறுப்புக் கல்லை முத்தமிட்டு அல்லது அதன்பால் சைக்கினை செய்து..

بسم الله والله أكبر
எனக் கூறித் தவாஃப் ஆரம்பிக்க வேண்டும். றுக்னுல் யமானிக்கும், கறுப்புக் கல் அமைந்துள்ள மூலைக்கும் இடைப்பட்ட இடத்தில்..

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
என்று ஓதிக்கொள்ள வேண்டும். தவாப் முடிந்து மகாமு இப்றாஹீமுக்குப் பின்னால் 2 றகஅத்கள் தொழுது முடிந்த பின்னர் ஸஃபா-மர்வாவுக்கிடையில் ஸஈ செய்ய வேண்டும்.

ஸஈயை ஆரம்பிக்கும் போது ஸஃபாவிற்கு வந்து..


إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اوَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ

عْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا


என்ற வசனத்தை ஓத வேண்டும். பின்னர் பின்வருமாறு 3 முறை ஓத வேண்டும்.


‘الله أكبر، الله أكبر، الله أكبر
لا إله إلا الله وحده لا شريك له، له الملك و له الحمد يحي و يميت و هو على كل شيء قدير، لا إله إلا الله وحده لا شريك له، أنجز وعده، و نصر عبده، و هزم الأحزاب وحده

ஹஜ் செய்வோர்..

اللَّهُمَّ لَبَّيْكَ حَجًّا
என்றோ,

لَبَّيْكَ حَجًّاஎன்று சேர்த்தும் கூறலாம். மினா, அரஃபா, முஸ்தலிஃபா, மீண்டும் மினா என அனைத்து இடங்களிலும் அதிக திக்ர் செய்ய வேண்டும். 10 நாள் கல்லெறியும் வரை தல்பியாவை அதிகமதிகம் கூற வேண்டும். கலிமதுத் தவ்ஹீதை அதிகம் கூற வேண்டும்.
ரமளான் மாதத்தின் சிறப்பு
இஸ்லாம் - நபிமொழி
திங்கள், 24 ஆகஸ்டு 2009 20:23
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 4

வருடம் ஒன்று கடந்து செல்லும் பொழுது நம் வாழ்வில் இனித் திரும்பக் கிடைக்காத ரமளான் மாதம் ஒன்றும் சேர்ந்தே கடந்து செல்கின்றது. இதைக் குறித்த எவ்விதச் சிந்தனையும் இல்லாமல் இருப்பவர்கள் உண்மையில் மிகப்பெரிய நஷ்டவாளிகளே. இம்மாதத்தின் சிறப்பு என்னவென்பதைத் தெளிவாக உணர்ந்திருந்தால் ரமளான் கடந்து செல்லும் பொழுதும் அடுத்த ரமளான் வரும் பொழுதும் எவரும் தம் வாழ்வில் பெற வேண்டிய நல்ல மாற்றங்களைக் குறித்துச் சிந்திக்காமல் எவ்வித உணர்ச்சியுமற்று இருக்க மாட்டார்கள்.

ரமளான் மாதத்தின் சிறப்பு:

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். ( அல்குர்ஆன் 2: 185) .

வஹீ எனும் இறைவனின் வார்த்தைகள் இவ்வுலக மக்களுக்கு இறங்கிய மகத்தான மாதம்தான் ரமளான் மாதம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழியாக விண்ணுலகிலிருந்து மண்ணுலக மாந்தர்க்கு இறுதிநாள் வரைக்கும் வழிகாட்டுவதற்காக ஏற்பட்ட முதல் தொடர்பு, இம்மாதத்தில்தான் ஏற்பட்டது. அப்படிப்பட்ட முக்கியமான இம்மாதத்தின் ஆரம்பத்தில் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்படுவதாகவும் சுவர்க்கத்தின் அனைத்து வாயில்களும் திறக்கப்படுவதாகவும் மலக்குகள் இறங்கி வந்து பாவம் செய்பவரை பாவங்களை விட்டு விலகிக் கொள்ளவும் இறைவனிடம் பாவ மன்னிப்பிற்கு இறைஞ்சவும் அழைப்பு விடுவதாகவும் இம்மாதத்தில் எவர் ஈமானுடன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு நோற்கவும் இரவுத் தொழுகையைத் தொழவும் மகத்தான லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்கவும் செய்கின்றனரோ அவருடைய முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவுறுத்திய மாதம்.

பன்னிரண்டு மாதங்களில், பாவங்கள் மன்னிக்கப்படும் மாதமாகவும் கேட்பவை அனைத்தும் கிடைக்கப்பெறும் மாதமாகவும் அருட்கொடைகள் நிறைந்த மாதமாகவும் இந்த ஒரு புனித மாதம் திகழ்கிறது.

மேலும் ஆயிரம் மாதங்களை விட மேலானதான மகத்தான ஓர் இரவும் இம்மாதத்தில்தான் இருக்கிறது. திருக்குர்ஆன் இவ்வுலகிற்கு இறக்கப்பட்ட இவ்விரவைப் பற்றி,


நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ரு) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவின் சிறப்பு என்னவென்று உமக்குத் தெரியுமா? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும் தூய(ஆன்மா ஜிப்ரயீல் என்ப)வரும் தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகல செயல்(திட்டங்)களையும் தாங்க்கியவர்களாக (விண்ணுலகிலிருந்து) இறங்குகின்றனர். சாந்தி (நிலவும்) - விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன் 97: 1-5).


என்று அல்லாஹ் சிறப்பித்துக் கூறுகிறான்.

ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களுக்குச் சமம். ஒருவர் இவ்விரவு முழுவதும் இறை வணக்கத்தில் கழித்தால் அவர் சுமார் 83 வருடங்கள் இடைவிடாது இறைவணக்கத்தில் கழித்த கூலியை அடைந்து கொள்கின்றார். ஒருவர் இவ்விரவில் ஒரு ரக்அத் தொழுதால் அவர் சுமார் 83 வருடங்கள் ஒரு ரக்அத் தொழுததற்குரிய நன்மைகளைப் பெற்றுக் கொள்கின்றார்.

ஒருவரின் ஆயுள்காலம் சராசரியாக 70 வருடம் என வைத்துக் கொண்டு அவர் செய்யும் நல்லறங்களைக் கணக்கிட்டாலும்கூட இந்த ஓர் இரவில் ஒரு ரக்அத் தொழுவதனால் கிடைக்கக் கூடிய நன்மைகளுக்கு அது ஈடாகாது.

ஒருவருக்கு இவ்விரவு கிடைக்கப்பெறுவதைவிட மேலான மற்றொரு பாக்கியம் இவ்வுலகில் கிடைக்குமா? அத்துணை மகத்தான இரவைக் கொண்ட இப்புண்ணிய மாதம் ஒருவருக்கு கிடைக்கப்பெற்றும் அவர் செய்த பாவங்களுக்குப் பரிகாரத்தையும் கூடுதலாக சுவர்க்கத்தில் நுழைவதற்குரிய தகுதியையும் அடைந்து கொள்வதற்கு முயலவில்லை எனில் அவரை விட துர்பாக்கியசாலி இவ்வுலகில் வேறு ஒருவர் இருக்க முடியாது.

- தொடரும் இன்ஷா அல்லாஹ்.