அஸ்ஸலாமு அலைக்கும்...

மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்களின் அருமையான கட்டுரை.
இது போன்ற செய்திகளை அதிகம் பரப்புங்கள்.
ஏனென்றால் நம்மிடையே ராமகோபாலன்கள் மட்டுமல்ல சுஜாதாக்களும் இருக்கிறார்கள்.
வஸ்ஸலாம்,
அப்துர் ரஹ்மான்.

பிரச்னை குர்ஆனில் இல்லை; நம்மிடம்தான் - திரு.சுஜாதா ரங்கராஜன்

பத்திரிக்கையாளர், பன்னூலாசிரியர்,கணிஞர், வசனகர்த்தா எனப் பன்முகம் கொண்ட,தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறிந்த சுஜாதா என்று அறியப்பட்டு சமீபத்தில் மறைந்த திரு.ரங்கராஜன் அவர்கள் எழுதிய ஓரிரு நாவல்களைப் படித்திருக்கிறேன். சுவாரஸ்யமான எழுத்துநடை, வியக்கவைக்கும் தகவல், முடிவில் பிரமிப்பு ஆகியவற்றால் தன் எழுத்துப் பணிகளில் தனக்கென தனிஇடத்தையும் தவிர்க்க முடியாத வாசகர் வட்டத்தையும் பெற்று சிறந்து விளங்கினார்.

குர்ஆனைப் படித்தவர்களெல்லாம் சிந்தனையாளர்களல்ல; ஆனால் சிந்தனையாளர்கள் குர்ஆனைப் பற்றி அறியாமலிருக்க முடியாது. ஆகவே தான் குர்ஆனின் கூப்பாடுகள் சிந்திப்பீராக/சிந்திக்க மாட்டீர்களா? என்று சிந்தனையாளர்களை நோக்கியே இருக்கின்றன. குர்ஆன்-003:058 என்ற திருக்குர்ஆன் வரிகளுக்கேற்ப சுஜாதாவும் திருக்குர்ஆனின் நறுமணத்தை நுகர்ந்தவர்களில் ஒருவர் என்ற தகவல் பலருக்குத் தெரிந்திருக்கக் கூடும்.
பொதுவாக அறிவுஜீவிகளாக இருப்பவர்கள் திறந்த மனதுடனே எதையும் அணுகுவார்கள். தமிழ்கூறும் நல்லுலகில் அறிவு ஜீவிகளில் ஒருவராக அறியப்பட்ட எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜன் திருக்குர்ஆன் பற்றியும் அது மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டது (வஹி) குறித்து "வஹி எனும் வேத வெளிப்பாட்டைப் பற்றிய குறிப்புகளையும் தகவல்களையும் வைத்துப் பார்க்கும் போது, குர்ஆன் வசனங்களும் அதன் வெளிப்பாடும் தனிமனித சாத்தியமற்றவை" என்பதை அதன் மொழியியல் முறைமையை (Linguistic Context) ஆராய்ந்தறிந்தவர்களால் எளிதில் உணர முடியும்" என்று குர்ஆன் வெளிப்பாட்டிற்கு சுஜாதாவும் நிகழ்காலச் சான்று பகர்ந்ததாக நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
சுஜாதா ரங்கராஜன் அவர்கள் தினமணி (2003) ரம்ஜான் மலருக்காக குர்ஆன் குறித்து எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். திரு.சுஜாதாவின் நேர்மையான மற்றும் வெளிப்படையான இந்தக் கட்டுரை அவர்மீதான நன்மதிப்பைக் கூட்டுகிறது. அண்ணாரின் இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் மன அமைதியை தரட்டுமென்று கூறி நன்றியுடன் மீள்பதிவு செய்கிறேன்.
---------
"திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று 'குர்ஆன் படிக்கலாம். அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா' என்றார்.
நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், 'தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்' என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் கருத்துக்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப் போல் உணர்ந்தோம்.
'வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!' என்று வியந்தோம்.
அதன்பின், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாஃபர்தீன் போன்ற நண்பர்கள் அனுப்பிய புத்தகங்களைப் படித்து வந்திருக்கிறேன். இஸ்லாமிய ட்ரஸ்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் 'அண்ணல் நபிகளார் வாழ்வினிலே' போன்ற புத்தகங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.
மலேசியப் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹம்மதின் சொற்பொழிவுகளின் தொகுப்பான 'இஸ்லாமியச் சிந்தனைகள்', நவீன உலகத்தின் முற்போக்குக்கு இஸ்லாம் தடையல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. குறிப்பாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மையத்தில் அவர் ஆற்றிய உரையில், இஸ்லாம் எப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பதைச் சொல்லியிருக்கிறார். இந்தியர்கள் அனைவரும் தவறாமல் படிக்கவேண்டும்.
எல்லா மதங்களும் நல்லதைத்தான் சொல்கின்றன. அவைகளின் ஆதார வார்த்தைகளில் பழுதில்லை. அவற்றைக் கடைப்பிடிக்கும் மனிதர்களிடம் தான் வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றன.
இஸ்லாம் என்பதற்குக் கீழ்ப்படிதல்,கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும். முழுமுதற் கடவுளாகிய அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுதல். அந்தக் கட்டளைகளை உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர்தான் அண்ணல் நபிகள்.
காளிதாசன் நாக்கில் சரஸ்வதி வந்ததும், அவன் சட்டென்று கவி புனைய ஆரம்பித்தது போல, அண்ணல் குகையில் இருந்து வெளிவந்ததும் சொன்ன வசனங்கள் இறைவனின் வசனங்கள். அவற்றின் எளிமையும் நேரடியான தாக்கமும் பிரமிக்க வைக்கும்.
'சிலைகள் உதவாதவை. அவற்றைக் கைவிடுங்கள். இந்த பூமி, இந்த நிலவு, கதிரவன், தாரகைகள், வானம், பூமியில் உள்ள சக்திகள் யாவும் ஒரே இறைவனின் படைப்புகள். அந்த இறைவனே உங்களையும் படைத்தவன். அவனே உணவளிப்பவன். அவனே உயிரை வாங்கவோ, உயிரை அளிக்கவோ செய்கிறான். மற்ற அனைத்தையும் விடுவித்து, அவனையே தொழுங்கள்!'
'திடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர்பொருள் முழுதுமாய் அவைதொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்தனன்' என்று நம்மாழ்வார் கூறியதும் அந்த இறைவனையே!
தற்பெருமை, கொடுமை, கோபம், பிறரைப் போல் பாவனை செய்தல், பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்தல், பொய், கெட்டவற்றைப் பேசுதல், இரட்டை வேடம் போடுதல், புறம் பேசுதல், தகாத ஆதரவு, பாரபட்சம், பொருத்தமற்ற புகழ்ச்சி, பொய் சாட்சி அளித்தல், பரிகாசம், வாக்குறுதி மீறல், சண்டை சச்சரவு, வாக்குவாதம், குறை கூறல், ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல், பொறாமை, கெட்ட பார்வை இவைகளைத் தீயகுணங்களாகப் பட்டியலிடுகிறார் பெருமகனார். கம்பீரம், நிதானம், எளிமை, தூய்மை, வணங்குவது, நாவடக்கம் போன்ற நல்ல குணங்களைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்.
திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்."
சுஜாதா (தினமணி ரம்ஜான் மலர் - 2003)
நன்றி:திரு.ரவிபிரகாஷ்

 
அல் குர்ஆனின் வழியில் அறிவியல்…
இவர்கள் பூமியில் சுற்றித்திரிந்து,
இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை பார்க்க வேண்டாமா? (முன் இருந்த) அவர்கள், இவர்களைவிட மிகுந்த பலசாலிகளா இருந்தனர். இவர்கள் எவ்வளவு பூமியை பண்படுத்தி விவசாயம் செய்து அபிவிருத்தி செய்தார்களோ அதை விட அதிகமாக (பூமியை) பண்படுத்தி அபிவிருத்தி செய்தவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.  அல்குர்ஆன். 30:9
இவ்வசனமானது  1400 ஆண்டுகளுக்கு முன்பு அரபு மக்களை நோக்கி இறங்கியது என்றாலும் இன்றுள்ள நமக்கும் சொல்லப்பட்ட செய்திதான். குறிப்பாக அல்லாஹ் நம்மிடம் கூருவது, “உங்களை நீங்களே பலசாலிகளாக நினைத்துக்கொள்ளாதீர்கள், நிலத்தை பண்படுத்தி விவசாயம் அதிகளவில் செய்வது நீங்கள் மட்டும்தான் என்று எண்ணாதீர்கள். உங்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் உங்களை விட பலசாலிகளாகவும், பூமியில் அதிகளவில் விவசாயம் செய்தவர்கள்.”
இது உண்மைதான், இன்றைய தொழில்நுட்ப அறிவு, மின்சாரம் எதுவும் இன்றி, தன உடல் பலத்தைக்கொண்டு பெரும் கட்டிடங்களையும், பிரமிடு போன்ற அதிசயங்களையும், மலைகளை குடைந்து மாளிகைகளையும் கட்டியவர்கள் முன்னோர்கள். அல்குர்ஆன்-26:128,129 – 26:149

பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்கள் அந்த நாட்டில் தான் வாழும் சூழலை ஒட்டிய நிலப்பரபிலேயே விவசாயம் செய்வார்கள். உதாரணமாக, காவேரி டெல்டா பகுதியில் பாசனம் செய்யும் தஞ்சை விவசாயி வட நாட்டிற்கு சென்று கங்கை டெல்டா பகுதியில் விவசாயம் செய்வதில்லை, அவர்கள் சார்ந்த ஊர்களை ஒட்டியே உள்ள விளைநிலங்களில் மட்டும் பயிறிடுவார்கள். இது தான் எங்கும் உள்ள நிலை.
உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் நேர்வழி காட்ட அல்லாஹ் ஏராளமான நபிமார்களை அவ்வப்போது அனுப்பியுள்ளான். பல்வேறு கால கட்டங்களில் அவர்கள் வந்து நேர்வழி காட்டினர். குறிப்பாக யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் என மூன்று மார்க்கங்களில் குறிப்பிடப்படும் பெரும்பாலான அறியப்பட்ட நபிமார்கள் அனைவரும், மத்திய கிழக்கு நாடுகளான  சிரியா, ஜோர்டான், பாலஸ்தீன், ஈரான், ஈராக், அரேபியா போன்ற இடங்களில் வாழ்ந்த மக்களிடையே சத்தியத்தை எடுத்துரைத்தனர். இந்த நபிமார்களை பொய்ப்பித்து தங்களுக்கு தாங்களே அநியாயம் செய்த மக்களை பற்றியே அல்லாஹ் இவ்வசனத்தில் (அல்குர்ஆன் 30:9) கூறுகிறான்.

இன்னும் (அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட) அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களிடம் வந்தனர். ஆகவே அல்லாஹ் ஒருபோதும் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்கவில்லை; எனினும் அவர்கள்(அந்நபிமார்களை
பொய்யாக்கி) தங்களுக்கு தாமே அநியாயம் செய்து கொண்டனர். – அல்குர்ஆன்-30:9
நபி(ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் குறிப்பாக சிரியா, ஜோர்டான், பாலஸ்தீன், ஈரான், ஈராக்கில் வாழ்ந்த அரேபியர்கள்தான் உலகில் அதிகமான பரப்பளவில் நிலத்தை பண்படுத்தி விவசாயம் செய்ததாக அல்லாஹ் கூறுகிறான். எப்படி என பார்ப்போம்.?
ஐரோப்பா கண்டத்தின் அன்றைய நிலை
சுமார் 8 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, ஐரோப்பாவில் வாழ்ந்த பூர்வகுடி ஐரோப்பியர்கள், காட்டு மிருகங்களை வேட்டையாடி உண்ணும் நாடோடிகளாக (Hunter &Gatherer) வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு அரிசி, கோதுமை போன்ற தானியப் பயிர், விவசாய விளைபொருள் உற்பத்தி முறை தெரிந்திருக்கவில்லை. மிருகங்களை வேட்டையாடி மிருகங்கள் போல் வாழ்ந்து வந்தனர். ஆனால் 7500 வருடங்களில் அதாவது 500 வருடங்களில் வேளாண் உற்பத்தி முறை அறிந்து பயிர்த்தொழில் சாகுபடி செய்து விவசாயிகளாக மாறிய நிகழ்ச்சி, மானிட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனை என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
விலங்கோடு விலங்காக வாழ்ந்த ஐரோப்பியர்கள் எப்படி விவசாயத்தை அறிந்தனர். ஒரு 500 வருடங்களுக்கு முன்பு பசுமைப்புரட்சி ஏற்பட காரணம் என்ன? விவசாயத்தை கற்றுக்கொடுத்தவர்கள் யார்? என்ற கேள்வி அறிஞர்கள், ஆய்வாளர்கள் மத்தியில் சுமார் ஒரு நூற்றாண்டு காலம் நீடித்து வந்தது. இன்றைய நவீன (GENETIC) மரபியல் சோதனை முடிவுகள் இக்கேள்விகளுக்கு உரிய பதிலை சமீபத்தில் வெளிப்படுத்தின.
ஆஸ்திரேலியா அடிலெய்டு பல்கலைக்கழகமும் மற்றும் (Australian Centre for Ancient DNA-ACAD) ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் எஸ்தோனியா நாட்டு ஆய்வாளர்கள் குழு ஒன்றிணைந்து ஜெர்மனி, ஹங்கேரி, இங்கிலாந்து நாட்டிலுள்ள பழம்பெரும் புதைகுழிகளை கல்லறைகளை ஆராய்தனர். அங்கு அடக்கப்பட்ட மனிதர்களின் எலும்புகளை சோதித்து அதன் DNA மூலக்கூறுகளை பிரித்தெடுத்தனர்.
இதே போல, இன்றுள்ள ஐரோப்பியர்களின் DNA மூலக்கூறுகளையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு முடிவுகள் வியப்பளிப்பதாக இருந்தது. ஏனெனில் சுமார் 7100 ஆண்டுகளுக்கு முன் இறந்த புராதன புதை குழிகளிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகளின் DNA மூலக்கூறு, இன்றைய ஐரோப்பியர்களின் DNA மூலக்கூறுடன் ஒத்துப்போகவில்லை. இருவரும் வேறு வேறு இனம் என்று DNA அடையாளம் காட்டியது. குறிப்பாக ஐரோப்பாவில் பல பாகங்களில் சுமார் 16 இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பழம் புதை குழி எலும்புகள் DNA பூர்வீக ஐரோப்பியர்களின் DNA உடன் பொருந்தவில்லை.
ஜெர்மனியின் பெர்லின் நகரிலிருந்து சுமார் 100 மைல் தொலைவில் உள்ள டிரன்பர்க் என்ற கிராமத்தில் இருந்த பழமை வாய்ந்த புதைகுழியிலிருந்து 22 எலும்புக்கூட்டை ஆராய்ந்தனர். இந்த எலும்புகளின் DNA எல்லாம் மைட்டோ காண்ரியல் (Y குரோமோஸோம் HAPLOTYPE) வகையாக இருந்தது. இந்த YY குரோமோஸோம்கள், பூர்வ குடி ஐரோப்பியர்களிடம் மிக அரிதாகவே இருந்தது. தற்போது ஐரோப்பா முழுவதும் வசிக்கும் 36 பிரதேச மக்களின் DNA க்களுடன் புராதன எலும்புகளின் DNA க்கள் ஒத்துப்போகவில்லை. இது மட்டும் அல்லாமல், இந்த எலும்புகளில் இருந்த ஸ்டிரோசியம், கால்சியம் விகிதாச்சாரமும் வேறுபட்டு இருந்தது.
பொதுவாக ஸ்டிரோசியம் ( Sr) என்ற தனிமம் Element நமது எலும்பில் உள்ளடங்கி உள்ளது. நீரில் உள்ள Sr ‘Sr’ ஆனது நாம் நீர் உட்கொள்ளும்போது உடம்பில் உள்ள எலும்பில் படிந்து விடும். இதுபோல் நீரருந்தும் விலங்குகள் தாவரங்களிலும் இந்த ஸ்டிரோசியம் படிவதுண்டு. தாவரங்களை உண்ணும ஆடு, மாடு போன்ற கால்நடைகளிலும் ஸ்டிரோசியம் படியும். ஆனால் கால்நடைகளின் கழிவில் பெரும்பாலான ஸ்டிரோசியம் வெளியேறிவிடும். எனவே இந்த விலங்குகளை வேட்டையாடி உண்ணும பழக்கமுள்ள ஐரோப்பிய பூர்வகுடி மனிதர்களின் எலும்புகளில் இந்த ஸ்டிரோசியத்தின் அளவு மிகக்குறைவாகவே இருந்துள்ளது. ஆனால் அதே சமயம் ஐரோப்பா முழுவதும் 16 இடங்களில் கண்டெடுக்கப்பட்ட புராதன புதைகுழி எலும்புகளில் இந்த ஸ்டிரோசியம் / கால்சியம் விகிதாச்சாரம் மிக அதிக அளவில் இருந்தது. காரணம் இம்மக்களது உணவுப்பழக்கம் தானியங்களாக இருந்ததுதான். ஆகவே இவர்கள் தான் ஐரோப்பாவிற்கு முதன் முதலில் விவசாயத்தை அறிமுகப்படுத்தியவர்கள் என்று அறிஞர்கள் உறுதிப்படுத்தினர்.
ஐரோப்பிய உள்ளூர் மக்களிடம் குறைவாக இருந்த ஸ்டிரோசியம் / கால்சியம் விகிதாச்சாரமும், Y குரோமஸோம்ஸ் DNA ( YY CHROMOSOMES HAPLOTYPE) மாதிரிகளும் பூர்வ புதைகுழி எலும்புகளின் மாதிரியுடன் ஒத்துபோகாமல் புதிய இனமாக அடையாளம் காட்டியது. யார் இவர்கள்? எங்கிருந்து வந்தனர் என்பதை ஆராய்வதற்காக, உலகம் முழுவதும் உள்ள மக்களின் DNA க்களை ஆய்வு செய்தனர்.(Genographic Consortium) என்ற அமைப்பின் மூலம் உலக மக்களின் DNA DNA க்களை ஆராய்தனர்.
நமது இந்திய மக்களின் DNA  பிரிவை, மதுரை காமராஜ் பல்கலை கழகம் ஆய்வு செய்தது.
இறுதியில் ஐரோப்பாவில் விவசாயம் செய்த முதல் விவசாயியின் DNA மாதிரிகளின் தொடர்ச்சி பிரான்ஸ், ஹங்கேரி, துருக்கி, சிரியா, ஜோர்டான், பாலஸ்தீன், ஈரான், ஈராக்கில் முடிந்தது. ஐரோப்பாவிற்கு விவசாயத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் மத்திய கிழக்கு அரபு மக்களே என்று அறிவியல் உலகம் ஒப்புகொண்டது.
நாடோடி ஐரோப்பியர்களுக்கு பயிர் செய்யும் முறையை கற்றுக்கொடுத்து, சமூக பொருளாதார, அறிவியல் வளர்ச்சிக்கு மாபெரும் பங்களிப்பை மத்திய கிழக்கு அரேபியர்களே செய்துள்ளனர் என்பதை நவீன அறிவியல் ஆய்வு நீறுபித்துள்ளது.

“நிராகரிப்பவர்களை சிதறடித்துப் பிரித்துவிட்டோம்”!
மத்திய கிழக்கில் வாழ்ந்த அரேபியர்கள் ஐரோப்பாவிற்கு செல்ல காரணம் என்ன?
மக்கள் இடப்பெயர்சிக்கு பல காரணங்கள் உள்ளன. இதற்கான காரணங்களை அல்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான். உதாரணமாக, தோப்புவாசிகளைப்பற்றிக் கூறும்போது நல்ல முறையில் விவசாயம் செய்த மக்கள், அல்லாஹ்வின் கட்டளைகளை புறக்கணித்ததன் காரணமாக ‘ம ஆரிப்’ எனும் அணையை உடைக்கக்கூடிய பெரு வெள்ளத்தை அனுப்பி அங்கு வேளாண்மை செய்ய முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு சோதிக்கப்பட்டதாக அல்குர்ஆன் 34:15,16  கூறுகிறது. இவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை தேடி இடம் பெயர்ந்திருக்கலாம்.

மேலும்
நிராகரிப்பவர்களை சிதரடித்ததற்கு காரணம், “இன்னும், அவர்களுக்கிடையேயும், நாம் பரக்கத் (அருள்) செய்திருந்த ஊர்களுக்கிடையேயும் வெளிப்படையாகத் தென்படக்கூடிய பல ஊர்களையும்  ஆக்கி, அவைகளில் பிரயாணத்தை நாம் அமைத்தோம்”.
“இரவுகளிலும், பகல்களிலும் அவற்றில் அச்சமற்றவர்களாகப் பிரயாணம் செய்யுங்கள் (என்று கூறினோம்)”

“ஆனால் அவர்கள், எங்கள் இரட்சகனே! எங்கள் யாத்திரைகளை நெடுந்தூரமாகும்படி செய்வாயாக! என்று கூறி தமக்கு தாமே அநியாயம் செய்து கொண்டனர்; ஆகவே அவர்களை செய்திகளாக்கிவிட்டோம், இன்னும் அவர்களை பல ஊர்களில் சிதறடித்துப்(பிரித்து) விட்டோம்.” அல்குர்ஆன் 34:19
அல்லாஹ்வின் கட்டளையைப் புறக்கணித்ததன் காரணமாக சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட மத்திய கிழக்கு அரேபியர்கள், தங்கள் வாழ்வாதாரங்களை தேடியும், தாங்கள் விரும்பியபடியும் நெடுந்தூர பயணத்தை தொடங்கினர். சிரியா, துருக்கி, பல்கேரியா, செர்பியா, ஆஸ்திரியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு பறந்த பயணத்தை மேற்கொண்டனர். தானிய விதைகளை தங்களுடன் கொண்டு சென்று நதிக்கரையோரம் விவசாயம் செய்தனர். குறுகிய 500 வருடங்களுக்குள் முழு ஐரோப்பாவிலும் விவசாயம் பெருந்தொழிலாக மாறியது.
ஆறாம் நூற்றாண்டில் இருண்ட கண்டமாக இருந்த ஐரோப்பாவில், முழு அறிவியல் புரட்சி ஏற்பட அடித்தளமாக இருந்தவர்கள் அரபு முஸ்லிம்கள், என்று சரித்திரம் சான்று பகர்வதை அனைவரும் அறிவோம். அறிவியல் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட அரேபியர்களே 8000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் பசுமை புரட்சிக்கும் விதையிட்டவர்கள் என்ற உண்மையை இன்றைய அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டது. இன்று அறிஞர்கள் ஏற்றுக்கொண்ட உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பு அல்குர்ஆனில் அல்லாஹ் கூறிவிட்டான்.
“இவர்கள் எவ்வளவு பூமியைப் பண்படுத்தி விவசாயம் செய்து அபிவிருத்தி செய்தார்களோ அதை விட அதிகமாகப் (ஐரோப்பா முழுவதும்) பண்படுத்தி அபிவிருத்தி
செய்தவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.” அல்குர்ஆன் 30:9

அரேபியர்கள் எந்தளவு விவசாயத்தில் ஆர்வம உடையவர்கள் என்றால், சொர்க்கம் சென்றாலும் கூட, அங்கும் விவசாயம் செய்ய விரும்புவார்கள் என்பதை நபிமொழி நன்கு உணர்த்துகிறது.
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்
சுவனவாசிகளில் உள்ள ஒருவர், ‘என் இறைவனே! நான் விவசாயம் செய்ய விரும்புகிறேன்,’ என்று கேட்பார். அதற்கு அல்லாஹ்,  ‘நீ விரும்பிய இன்பமெல்லாம் இங்கு கிடைக்கவில்லையா’? என்று கேட்பான். “எல்லாம் கிடைக்கிறது ஆனாலும் என் மனம் விரும்புகிறது” என்று அவர் கூறுவார். அல்லாஹ் அனுமதி கொடுத்தவுடன் விதையை போடுவார், அது உடனடியாக பயிராக வளர்ந்து தயாராகிவிடும். அல்லாஹ் கூறுவான், “ஆதமுடைய மகனே! எடுத்துக்கொள்! எதிலும் நீ திருப்தியடையமாட்டாய்!”
இதைக் கேட்ட ஒரு நபித்தோழர் கூறுவார் “அந்த சுவனவாசி
குறைஷிகளில்
ஒருவராகத்தான் இருப்பார்! நபி(ஸல்) அவர்கள் உடனே புன்முறுவல் செய்தார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரீ
S.ஹலரத் அலி,
ஜித்தா.
நாம் ஹிஜ்ரி 1433 ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். ஹிஜ்ரி என்ற சொல்லை, இஸ்லாமிய ஆண்டுக்குத் தேர்ந்தெடுத்திருப்பதற்கு ஒரு வரலாற்று நிகழ்ச்சியுண்டு. அவ்வரலாற்று நிகழ்ச்சியையும், அந் நிகழ்ச்சியின் போது, சில கட்டங்களில் , நபி(ஸல்) அவர்கள் கொண்டிருந்த நல்லியல்புகளையும் காண்போம்.
இஸ்லாமியருக்கென தனியொரு ஆண்டுக் கணக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம், கலீபா உமர்(ரழி) அவர்கள் காலத்தில் எழுந்தது. நபித் தோழர்கள், அதை எந்தக் காலகட்டத்திலிருந்து துவக்குவது என்று ஆலோசித்தனர். முக்கியமான பல நிகழ்ச்சிகள் நடந்திருப்பினும், அவற்றில் நபி(ஸல்) அவர்கள், முதன் முதலாக, மக்காவை விட்டு, வெளியேறிய நிகழ்ச்சியையே, இஸ்லாமிய ஆண்டின் துவக்கக் காலமாகக் காலக்கட்டமாகக் கொள்ளலாமெனத் தீர்மானித்தனர்.

இஸ்லாமிய வரலாற்றில் , பல முக்கிய போர்கள் நிகழ்ந்துள்ளன. பல உடன்படிக்கைகள் நடந்துள்ளன. இவற்றிலொன்றை நினைவு கூர்ந்து, அதையே இஸ்லாமிய ஆண்டிற்குப் பெயராகவும், துவக்க கால கட்டமாகவும் வைத்திருக்கலாம். ஆனால், நபித் தோழர்கள், நபி(ஸல்) அவர்களின் மக்கத்து வெளியேற்றத்தையே (ஹிஜ்ரத்தையே) நமது ஆண்டின் துவக்க காலமாகவும், பெயராகவும் வைக்கத் தீர்மானித்தனர்.
நபி(ஸல்) அவர்கள், தோழர் அபூபக்கர்(ரழி) ஆகிய இருவர் மட்டுமே, மக்காவை விட்டு வெளியேறினர். மதீனாவுக்கு வந்த பின்பு தான், பத்ரு, உஹது மற்றும் பல தற்காப்புப் போர்கள் நடந்தன. இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது. பல உயிர்த் தியாகங்கள், சிறப்புமிக்க உடன்படிக்கைகள் நிகழ்ந்தன. இறுதியாக சுமார் பல ஆயிரக்கணக்கான மக்களுடன் மக்கா நகர் சென்று, அங்கும் இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது.
இவ்வனைத்து நிகழ்ச்சிகளுக்கும் துவக்கமாக இருந்தது. நபி(ஸல்) அவர்களின் மக்கத்து வெளியேற்ற நிகழ்ச்சி தான். அந்நிகழ்ச்சி நடந்திராவிடில், மேற்காணும் நிகழ்ச்சிகளுக்கு இடமேது? அன்று நபி(ஸல்) அவர்களின் உயிருக்கே ஆபத்து வந்த போது, உயிர், உடமை உறவு அனைத்தையும் துறந்து , பிறந்த மண்ணையும் விட்டு, வெளியேறிய தியாகத்திற்கும், செயலுக்கும் முன்பாக, வேறெந்தச் செயலையும், வேறெவர் தியாகத்தையும், அருமை நபித் தோழர்கள், உயர்வாகக் கருதவில்லை.
அம்மாநபியின் தியாக, புனித வெளியேற்றமே இஸ்லாமிய மறு மலர்ச்சிக்காகவும், அதன் வரலாற்றில் ஓர் திருப்புமுனையாகவும் அமைந்தது, அத்தகைய ஹிஜ்ரத் நிகழ்ச்சியை இஸ்லாமிய ஆண்டுக்கு துவக்க காலமாகவும், ஹிஜ்ரத் என்ற சொல்லையே ஹிஜ்ரி ஆண்டின் பெயராகவும் வைத்தனர். இவ்வெளியேற்ற நிகழ்ச்சியின் சில கட்டங்களில் நபி(ஸல்) அவர்களின் நற்பண்பையும், நம்பிக்கை, உறுதியையும், இந்த ஹிஜ்ரி புத்தாண்டில் நினைவு கூர்வோம்.
நபி(ஸல்) அவர்களின் நேர்மையெனும் நற்பண்பு:-
நபி(ஸல்) அவர்களின் இல்லத்தை மக்கத்து காபிர்கள் முற்றுகையிட்டு, அவர்களைக் கொல்ல வாளேந்தி நிற்கின்றனர். வீட்டின் உள்ளே இருப்பவர்களின் நிலை எவ்வளவு பதட்டமாக இருந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இறைவனது கட்டளைக் கிணங்க வெளியேறும் அந்த பதட்டமான, இக்கட்டான நிலையிலும், நபி(ஸல்) அவர்கள் அலி(ரழி) அவர்களை அழைக்கிறார்கள். தாம் பிறரிடமிருந்து பெற்று, பாதுகாத்து வரும் அமானிதப் பொருட்களின் விபரத்தைக் கூறி அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பை அவர்களிடம் கொடுக்கிறார்கள்.
எத்தகைய ஆபத்தான மிக நெருக்கடியான சூழ்நிலையிலும் நபி(ஸல்) அவர்கள் தமது நேர்மை நிலையைப் பொறுப்புக்களை ஒப்படைக்கும் வகையில் கடைப்பிடித்திருக்கிறார்கள். மக்கா நகரில் தரம் அங்கிருந்த போது மட்டுமின்றி, தாம் வெளியேறிய பின்னரும் அஸ்ஸாதிக், அல் அமீன் எனும் தமது அருந்தகுதிக்கு இழுக்கு ஏற்படாவண்ணம் செய்து காட்டியதையுணர்ந்து அவ்வுன்னத நடைமுறையை நமது வாழ்வில் கடைபிடித் தொழுக வேண்டும்.
ஆனால் இன்று அமானிதப் பொருளை மோசடி செய்வதும், அமானித நிலையில் தமது பொறுப்பிலுள்ள அநாதைகள், விதவைகள் முதலியோரின் சொத்துக்களை விழுங்குவதும், பிறருக்குக் கடன் பட்டதை, தீர்க்க வேண்டும் என்ற பொறுப்புணர்வின்றி, தமக்கு வியாபாரத்தில் ஏற்பட்டதோர் கஷ்டத்தைக் காரணம் காட்டி கொடுத்தவரின் பொருட்களை கபளீகரம் செய்துவிடும் ஏமாற்றுச் செயல்களையும் நாம் காண முடிகிறது.
இவ்வாறு அமானிதப் பொருட்களை பேணிக் காக்காமல் இருக்கும் பொறுப்பில்லாத தன்மையை, செயலை வல்ல அல்லாஹ் குர்ஆனில் எச்சரிப்பதைப் பார்ப்போம்.
“(விசுவாசிகளே! நிச்சயமாக நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விட வேண்டும்” என அல்லாஹ் கட்டளையிடுகிறான்.(4:58)
“தவிர நீங்கள் (செய்வது அக்கிரமம் என) அறிந்து கொண்டே உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்.” (8 : 27)
“நீங்கள் அநாதைகளின் பொருட்களை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்,(அவற்றிலுள்ள) நல்லதுக்குப் பதிலாக கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய பொருட்களை உங்களுடைய பொருட்களுடன் (சேர்ந்து) விழுங்கி விடாதீர்கள். நிச்சயமாக இது மாபெரும் பாவமாகும்.” ( 4:2)
இன்னும் எவர்கள் தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருட்களையும், வாக்குறுதிகளையும் பேணி, சாட்சியத்தில் தவறிழைக்காமலும், தொழுகையைப் பேணியும் வருகிறார்களோ, இத்தகையோர் தாம் சுவனபதியில் மிக்க கண்ணியப்படுத்தப்படுவார்கள். (70:32-35)
அல்லாஹ்வின் வல்லமையும் , அவனது தூதர் நபி(ஸல்) அவர்களின் ஈமான் உறுதியும்
நபி(ஸல்) அவர்கள் தமது இல்லத்திலிருந்து வெளியேறி விட்டதை உணர்ந்து கொண்டவுடன், அந்த மக்கா காபிர்கள், அவர்கள் சென்ற பாதையைப் பின் தொடர்கின்றனர். நபி(ஸல்) அவர்களும், அபூபக்கர்(ரழி) அவர்களும் மக்காவின் அருகிலுள்ள ஒரு குகையில் மறைந்திருக்கின்றனர். குகையின் மேற்புறத்தில் நடமாடும் காபிர்கள் தற்செயலாகக் குனிந்தாலும் இருவரும் தென்பட்டு விடும் அமைப்பில் மிக அபாய நிலையில் இருவரும் உள்ளே அமர்ந்திருந்தார்கள்.
தோழர் அபூபக்கர்(ரழி) அவர்கள் நபி அவர்களே! நாம் இப்போது இருவர் மட்டுமே இவ்விடத்திலிருக்கிறோம், அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறதே என கலக்கமுற்றார்கள்.
இதோ எல்லாம் வல்ல அல்லாஹ் தனது வல்லமையால், தனது தூதர் நபி(ஸல்) அவர்களையும், அவர்கள் தம் தோழர் அபூபக்கர் (ரழி) அவர்களையும் மிக அற்புதமாகக் காப்பாற்றிய நிலையை வெகு அழகாகச் சொல்லிக் காட்டுகிறான்.
(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால் (அவருக்கு யாதொரு இழப்பும் இல்லை) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றிய போது, நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கிறான். குகையில் (அவனது நபி), இருவரில் ஒருவராக இருந்தபோது தமது தோழரிடம் “கவலைப்படாதீர் நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்.” என்று கூறினார் (அப்போது) அவர் மீது அல்லாஹ் தம் சாந்தியை இறக்கி வைத்தான். மேலும் நீங்கள் பார்க்க முடியாத படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான். நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான். (ஏனெனில்) அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும். அல்லாஹ் யாவற்றையும் மிகைப்போனும், ஞானமிக்கோனுமாவான். (9:40)
நபி(ஸல்) அவர்கள் இத்தகைய பேராபத்தான நிலையிலும் தமது நிலை தடுமாறி விடாது, வல்ல அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடையவர்களாக, அவன் ஒருவனே அன்றி தமக்கு பாதுகாவலர் வேறு யாருமில்லை எனும் நம்பிக்கையை ஊர்ஜிதம் செய்தவர்களாக, அருமை நண்பர் அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்களுக்கு பயப்படாதீர்! அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் வல்ல நாயன் நலமுடன் இருக்கும் பொழுது நாம் கவலைப்படுவானேன்? என்று அல்லாஹ்வைக் கூறி ஆறுதல் செய்ததை அனைவரும் உணர்ந்து படிப்பினை பெறுவோமாக.
ஆனால் இன்றைக்கு மக்கள் தமக்கேற்படும் துன்பம் துயரங்களை அகற்ற, வல்லமைமிக்க அல்லாஹ்வின் அபார சக்திகளை மறந்துவிட்டு, அவனது படைப்பினங்களிடம் பாதுகாப்புத் தேடியலையும் பரிதாப நிலையைப் பார்க்கிறோம். அவ்வாறு செய்வது பெருங்குற்றமான இணை வைத்தலில் சேர்க்கும் என்பதையும், இணைவைத்தல் ஒரு போதும் மன்னிக்கபடுவதில்லை என்பதையும் அவர்கள் உணர்வதில்லை.
இதோ வல்ல அல்லாஹ் தனது சிறிதும் ஐயமில்லாத சிறப்புமிகு வேதத்தில் அறிவிக்கின்றான்.
“இணை வைத்தல் மன்னிப்பில்லாக் குற்றம்”
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை அறவே மன்னிக்க மாட்டான்; அதல்லாதவற்றை தான் நாடியோருக்கு மன்னிப்பான், யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கிறார்கள். (4 : 48)
உதவியும், பாதுகாப்பும் :-
நிச்சயமாக அல்லாஹ்வின் ஆட்சி வானங்களிலும், பூமியிலும் உள்ளது. அவனைத் தவிர உங்களுக்குப் பாதுகாவலனோ துணை செய்பவனோ வேறு எவருமில்லை. இதை நீங்கள் அறியவில்லையா? (2 : 107)
எனினும், நீங்கள் அவனையே அழைப்பீர்கள், அப்போது அவன் எதற்காக அவனை அழைத்தீர்களோ, அத்துன்பத்தை தான் நாடினால் நீக்கி விடுவான். ( 6 : 41)
(நபியே!) நீர் கூறும் அல்லாஹ்வையன்றி நீங்கள் (பாதுகாவலர் என) எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ, அவர்களை உங்கள் கஷ்டங்களை நீக்க அழைத்துப் பாருங்கள். (அவ்வாறு அழைத்தால்) அவர்கள் உங்களது யாதொரு கஷ்டத்தை நீக்கி வைக்கவோ, அல்லது திருப்பி விடவோ சக்தி அற்றவர்கள் (என்பதை உணர்வீர்கள்) (17 : 56)
நபி(ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் ஓர் திருப்பு முனையாக அமைந்துள்ளது போன்று, அவர்களின் வாழ்க்கை முறையும் மனித சமுதாயத்திற்கு ஒரு வழி காட்டலாக அமைந்திருப்பதை நாம் அறிந்திருந்தும் 1408 ஆண்டுகள் கழிந்த பிறகும் கூட நமது சமுதாயத்தில் உண்மையான இஸ்லாமியத் தன்மை உருவாக்கியுள்ளதா? அதன் தூய வாழ்வு துவங்கியிருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்த்து இப்புத்தாண்டில் நமது வாழ்வை இஸ்லாமிய நெறிகளின் பால் செலுத்தி சீர்படும் எண்ணத்துடன் அதை வரவேற்பதில் தான் உண்மையான புத்தாண்டின் மகிழ்வு அமைந்திருக்கிறது. வல்ல நாயன் நல்லதோர் திருப்புமுனையை நமது வாழ்விலும் நல்கி, நலம் பல பெற அருள் புரிவானாக! ஆமீன்.
இப்னு ஷேக்
Post image for BLACK HOLE – கருந்துளை மர்மங்கள்
அல்குர்ஆனின் வழியில் அறிவியல்…
அறிவார்ந்த நெறிநூலான அல்குர்ஆனில் ஏராளமான அறிவியல் உண்மைகளை உலக மக்களுக்குக் கூறி நேர்வழிக்கு அல்லாஹ் அழைக்கின்றான். போலி பொய்த் தெய்வங்களைப் புறந்தள்ளி, உங்களையும், உலகத்தையும், மாபெரும் பிரபஞ்சத்திலுள்ள சூரிய சந்திர, நட்சத்திரங்கள், கலாக்ஸிகளைப் படைத்தவனை மட்டும் வணங்குங்கள் என்று அறிவியல் உண்மைகளைக் கொண்டு உரைக்கின்றான்.
மனித சமுதாயம் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக அல்குர்ஆனில் தனது வழிகாட்டும் வசனங்களை விவரித்துக் கூறுகிறான். தான் கூறும் உண்மைகளை மேலும் உறுதிப்படுத்து வதற்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதற்கும், தான் படைத்த படைப்புக்கள் மீது சத்தியமிட்டு சொல்கிறான். படைப்புக்கள் மீது சத்தியம் செய்யும் வசனங்களை குர்ஆனில் பரவ லாகக் காணலாம். உதாரணமாக, காலத்தின் மீது சத்தியமாக 103:1 இரவு, பகல் மீது சத்தியமாக 92:1 வானத்தின் மீது 86:1 மறுமை நாள் மீது 75:1 என்று பல்வேறு இடங்களில் தன் படைப்புகளின் மீது சத்தியமிட்டுச் சொல்கிறான். குர்ஆனில் அல்லாஹ் சொல்லும் சத்தியங்களிலேயே மிக மகத்தான சத்தியமாக ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறான்.


நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன். நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தானது என்பதை தெரிந்து கொள்வீர்கள்.அல்குர்ஆன் 56:75, 76
(ஒளி இழந்து) விழுந்து மறையும் நட்சத்திரங்கள் மீது சத்தியமாக!” அல்குர்ஆன் 53:1
“”நிச்சயமாக நாம் தாழ்வாக உள்ள வானத்தைச் சுடரிடும் நட்சத்திரங்களைக் கொண்டு அழகுபடுத்தி வைத்துள்ளோம்” என்று 37:6ல் அல்லாஹ் கூறுகிறான்.
 இரவில் வானத்தைப் பார்த்தால் கோடானு கோடி நட்சத்திரங்கள் நம்மை பார்த்து கண்சிமிட்டுகின்றன. இதற்குக் காரணம் நட்சத்திரங்களில் ஏற்படும் அணுப் பிளவின் காரணமாக வெப்பமும் ஒளியும் உண் டாகிறது. நமது சூரியனும் ஒரு சிறிய நட்சத்திரமாகும். நமது சூரியனை விட கோடானு கோடி மடங்கு மிகப் பிரமாண்டமான நட்சத் திரங்கள் தங்களிடமுள்ள எரிபொருளான ஹைட்ரஜன், ஹிலியம் வாயுவை இழந்து முற்றிலும் அழியும் நிலையில் அதனுடைய அடர்த்தி அதிகரிக்கும்; அத்துடன் அதன் உள் ஈர்ப்பு விசை ஆற்றல் பன்மடங்காக பெருகி விடும். அதனுள் ஈர்க்கப்படும் எப்பொருளும் மீண்டு வருவதில்லை. இவ்வாறு எரிதிறனை இழந்து அழிந்து மறையும் நட்சத்திரம் கருந்துளையாக மாறுகிறது.
கருந்துளை எனும் மர்மக் குகை:

20ம் நூற்றாண்டில் விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரியமான அதிசயங்களில் பிரதானமாக விளங்குவது கருந்துளைகள் மட்டுமே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கருந்துளைகள், மிகப் பிரமாண்டமான நட்சத்திரங்களின் இறுதி கட்ட நிகழ்வாக கருதப்படுகிறது. இதற்கு கன அளவோ மேற் பரப்போ கிடையாது. கண்ணாலோ, தொலை நோக்கியாலோ எவரும் பார்க்க முடியாது.
கருந்துளையின் எல்லைக்குச் செல்லும் ஒளி உட்பட எப்பொருளும் மீண்டு வெளியேற முடியாது. இவற்றின் ஈர்ப்பு ஆற்றலைக் கணக்கிட ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.
பொதுவாக நமது பூமிக்கும் புவியீர்ப்பு ஆற்றல் உள்ளது. எப்பொருளையும் நாம் ஆகாயத்தை நோக்கி எறிந்தால் அது மீண்டும் பூமியில் விழுந்து விடும். இந்த புவியீர்ப்பு விசையை மீறிச் செல்ல வேண்டுமாயின் ஒரு வினாடிக்கு 11 கிலோ மீட்டர் வேகம் வேண்டும். (மணிக்கு 40,000வது-24000 மைல்) பூமியில் இருந்து விண்ணை நோக்கி செலுத்தப்படும் செயற்கை கோள் ராக்கெட்டுகள் வினாடிக்கு 11வது வேகத்திலேயே செலுத்தப்பட்டு வருகின்றன. பிரபஞ்சத்தில் உள்ள வேகங்களில் மிக உயர்ந்தபட்ச வேகம் ஒளியின் வேகம்தான். ஒளி ஒரு வினாடியில் 1,86000 மைல் (3,00000km) செல்கிறது. நமது கருந்துளையின் ஈர்ப்பு ஆற்றல் விசையும் 1,86000 மைல்/ வினாடியில் உள்ளது. எனவே கருந்துளைக்குள் செல்லும் ஒளி மீண்டு வருவதில்லை. கருந்துளை எனும் குகைக்குள் செல்லும் எதுவும் மீண்டு வர முடியாது. அங்கு என்ன நடக்கிறது என்பதும் எவர்க்கும் புரியாத புதிர். நட்சத்திரங்கள் மறைந்து அழிந்து தோன்றும் கருந்துளையின் மீது அல்லாஹ் மகத்தான சத்தியம் செய்வதிலிருந்து இதன் பிரமாண்டத்தை புரிந்து கொள்ளலாம்.
கடந்த 2008 மார்ச் 18ல், நமது பிரபஞ்சத்திலேயே மிகப் பிரமாண்டமான “”கலாக்ஸி கிளாசிக்” (Galaxy Classic)) எனும் கருந்துளையை ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர்.
இந்த கருந்துளையின் பரிமாணம் மிகப் பிரமாண்டமானது. நமது சூரியன் விட்டம் 1,39,0000 வது. இதைவிட 1800 கோடி மடங்கு மிகப் பெரியது. நமது பூமியில் இருந்து 3.5 பில்லியன் அதாவது 350 கோடி ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. ஒளி ஆண்டு என்பது, ஒளி ஒரு வினாடியில் 1,86000 மைல் தூரம் செல்லும் இந்த வேகத்திலேயே தொடர்ந்து 1 வருடம் எவ்வளவு தூரம் பயணம் செய்யுமோ அதுவே ஒரு ஒளி ஆண்டு தூரம். சொற்ப அறிவு கொடுக்கப்பட்ட நமக்கு இதன் பிரமாண்டம் நம் கற்பனைக்கு எட்டாத ஒன்று.
கருந்துளைகளை நம் கண்களால் காண முடியாது என்றாலும் இதன் நிகழ்வெல்லைக்கு (Event Horizon)அப்பால் இருக்கும் பிற நட்சத்திரங்கள், மற்ற விண் பொருட்களின் மீது அவை கொண்டுள்ள தாக்கங்கள் மூலம் கருந்துளை இருப்பிடத்தை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக ஒரு தொகுதி விண்மீன்கள் கருந்துளையின் ஈர்ப்புக்கு உட்பட்டு அதன் மையத்தைச் சுற்றி வருவது உண்டு. இவ்வாறான விண்மீன்களின் இயக்கத்தை கூர்ந்து நோக்குவதன் மூலம் கருந்துளையின் இருப்பையும் அதன் அமைவிடத்தையும் அறிந்து கொள்ளலாம். சில வேளைகளில் கருந்துளைகள் அண்டவெளியில் இருந்து அல்லது அண்மையில் இருக்கும் விண்மீன்களில் இருந்து வரும் வளிமத்தூசுகளை கவர்ந்து இழுக்கின்றன. இவ்வளிமங்கள் கருந்துளையைச் சுற்றி வேகமாக உட்செல்லும் போது வெப்பநிலை அதிகரிப்பதனால் பெருமளவு கதிர்வீச்சு வெளிப்படுகிறது. இவற்றை புவி, அல்லது விண்வெளி தொலை நோக்கி மூலம் உணர முடியும்.
வானில் உள்ள கோடானு கோடி நட்சத்திரங்களில் அல்லாஹ் நாடியவை தன் எரிபொருளை இழந்து அடர்த்தி அதிகமாகி கருந்துளையாக மாறலாம். பிரபஞ்சத்தில் ஏராளமான கருந்துளை உள்ளன. மற்ற நட்சத்திரங்கள், அல்லாஹ் கூறும் (கியாமத் நாள்) இறுதி நாளில் ஒளி இழந்து உதிரும். நமது சூரியனின் இறுதி முடிவும் இவ்வாறே. அல்லாஹ் அறிந்தவன்!
“நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது, மேலும் வானம் பிளக்கப்படும் போது, அன்றியும் மலைகள் (தூசுகளைப் போல்) பறக்கப்படும்போது” 77:8,9
(அந்நாளில்) சந்திரன் ஒளி மங்கி, சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும். அல்குர்ஆன் 75:4,9

S.ஹலரத் அலி, ஜித்தா
Post image for குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள்
குடும்ப வாழ்க்கையின் அவசியம் குறித்து நாம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். நமது குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும் நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம்.
ஆனால் மற்றவர்களின் குடும்பங்களைப் பற்றி நமக்கு இத்தகைய நல்லெண்ணம் இருப்பதில்லை.
ஒரு ஆணைப் பற்றியோ பெண்ணைப் பற்றியோ ஏதேனும் சிறு குறை நமக்குத் தெரியவந்தால் நம்மால் இயன்ற அளவுக்கு அதைப் பெரிதாக்குகிறோம். கணவனின் குறையை மனைவியிடமும் மனைவியின் குறையைக் கணவனிடமும் பன்மடங்கு அதிகப்படுத்தி பற்ற வைக்கிறோம். இருக்கின்ற குறைகளை மட்டுமின்றி இல்லாத வதந்திகளையும் கூட உண்மை போல சித்திரித்து அதனைப் பரப்புவதில் இன்பம் காண்கிறோம்.
இதனால் நமக்கு கிடைக்கும் லாபம் என்ன? நன்மை என்ன? ஒன்றுமே இல்லை. ஆனாலும் இச்செயலில் ஈடுபடுவதில் அளவிலாத ஆனந்தம் அடைகிறோம்.

நமது குடும்பத்தைப் பற்றிப் பரப்பப்படும் வதந்திகளால் நமது நிம்மதி குறைந்தால் நமது நிலை என்ன? அதே நிலையைத் தானே மற்றவர்களும் அடைவார்கள் என்றெல்லாம் நாம் சிந்திப்பதில்லை.
இந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள் பலபடிகள் மேலே உள்ளனர். ஒரு பெண்ணின் குறைகளைப் பெரிதுபடுத்துவதிலும் வதந்திகளைப் பரப்புவதிலும் இவர்களுக்குக் கிடைக்கும் ஆனந்தமே அலாதியானது.
மற்றவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் மறுமை வாழ்க்கையைப் பூரணமாக நம்பக்கூடியவர்கள் இந்தச் செயலின் பயங்கர விளைவுகளைப் பற்றி அறிந்து கொண்டால் குடும்பங்களைப் பிரிக்கின்ற கொடுஞ்செயலில் இறங்க மாட்டார்கள்.
இத்தகைய மக்களுக்கு இந்த வசனத்தில் போதுமான எச்சரிக்கை இருக்கிறது. குடும்பங்களுக்கிடையே பிளவு ஏற்படுவது ஷைத்தானின் செயல்பாடுகள் என்று இவ்வசனம் கூறுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் கிடையாது என்று இவ்வசனம் கடுமையாக எச்சரிக்கிறது. மனிதர்கள் செய்யும் காரியங்களில் மகா கெட்ட காரியம் இது எனவும் இவ்வசனம் அறிவுறுத்துகிறது.
எந்தச் செயலில் ஷைத்தான் அதிகமாக திருப்தியடைகிறானோ அந்தச் செயல் அல்லாஹ்வின் கடும் கோபத்திற்குரியதாகும் என்பதை நாம் அறிவோம். ஷைத்தான்கள் மிகமிக மகிழ்ச்சியடையும் காரியங்களில் முதலிடம் தம்பதியருக்கிடையே பிளவை ஏற்படுத்தும் இந்தச் செயலுக்கே உள்ளது. இதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
(ஷைத்தான்களின் தலைவனாகிய) இப்லீஸ் தனது சிம்மாசனத்தை தண்ணீரில் அமைத்துக் கொள்கிறான். அங்கிருந்து கொண்டு (மக்களை வழி கெடுப்பதற்காக) தனது படையினரை அனுப்புகிறான். பெரிய அளவில் குழப்பம் ஏற்படுத்துபவரே அவனுக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள். ஒரு ஷைத்தான் வந்து நான் இன்னின்ன காரியங்களைச் செய்தேன் என்று இப்லீசிடம் கூறுவான். அதற்கு இப்லீஸ் ‘நீ ஒன்றுமே செய்யவில்லை’ எனக் கூறுவான். மற்றொரு ஷைத்தான் வந்து ‘நான் கணவன் மனைவிக்கிடையே பிரிவை ஏற்படுத்தி விட்டேன்’ என்பான். அதைக் கேட்ட இப்லீஸ் அவனைத் தன்னருகில் நிறுத்திக் கொள்வான். நீயே சிறந்தவன் எனவும் கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)
இப்லீஸ் மிகவும் மகிழ்ச்சியடையும் காரியம் செய்பவர்கள் கணவன் மனைவியரிடையே பிரிவை ஏற்படுத்துவோர் தான் என்பதைவிட கடுமையான எச்சரிக்கை வேறு என்ன இருக்க முடியும்? இத்தகைய காரியத்தில் ஈடுபடுவோர் தாங்கள் ஷைத்தானுக்குத் துணை செய்கின்றனர் என்பதை உணர வேண்டும்.
மற்றொரு நபிமொழியைப் பாருங்கள்! ‘அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் கெட்டவர்கள் கோள் சொல்லித் திரிபவர்களும் நேசமாக இருப்பவர்களிடையே பிரிவை ஏற்படுத்துபவர்களும் தான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் கனம் (ரலி), நூல்: அஹ்மத்
அன்னியோன்யமாக இருப்பவர்களைப் பிரிப்பது தான் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பூட்டும் என்பதை இதிலிருந்து உணரலாம். மேலும் கோள் சொல்லித் திரிபவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்றும் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (புகாரி)
அன்னியோன்யமாக இருப்பவர்கள் என்பது பலதரப்பினரைக் குறிக்கும் என்றாலும் கணவன் மனைவியர் தான் இதில் முதலிடம் வகிப்பவர்கள். அவர்களுக்கிடையே உள்ள நெருக்கம் வேறு எவருக்கிடையேயும் இருக்க முடியாது.
மேலும் இல்லாத குற்றங்களைக் கற்பனை செய்து வதந்திகளைப் பரப்பி குடும்பங்களைப் பிரிப்பதையும் நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
கற்பனை செய்வதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். கற்பனை செய்வது தான் மிகப் பெரிய பொய்யாகும். மேலும் பிறர் குறைகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள் என்பதும் நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களாகிய எங்களிடம் உறுதிமொழி எடுத்தனர். நாங்கள் இட்டுக் கட்டி அவதூறுகளைப் பரப்புவது கூடாது என்பதும் அந்த உறுதி மொழியில் அடங்கும். (அறிவிப்பவர்: உமைமா பின்த் ரகீகா, நூல்: அஹ்மத்)
குடும்பங்களில் பிரிவை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கு அவதூறுக்கு உண்டு. கற்பொழுக்கமுள்ள பெண்களைப் பற்றி அவதூறு கூறுவது எந்த அளவுக்கு குற்றமாகக் கருதப்படுகிறது என்றால் அவ்வாறு அவதூறு கூறுவோர் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அவர்களுக்கு 80 கசையடிகள் அளிக்கப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் (24:04) கூறுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
ஒரு பெண் மீது களங்கம சுமத்துவோர் இதற்கு நான்கு நேரடி சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் எனவும் அந்த வசனம் (24:04) கூறுகிறது. ஒரு பெண்ணின் தவறான நடத்தையை ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவர் நேரடியாகக் கண்டால் கூட அதை அவர்கள் பகிரங்கப்படுத்தினால் அவர்கள் அவதூறு கூறியவர்களாகவே கருதப்படுவார்கள்.
அவதூறின் காரணமாக ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கும். குடும்பம் பிளவுபடும். அதை அறவே தவிர்ப்பதற்காகத் தான் இதற்கு மட்டும் நான்கு சாட்சிகள் தேவை என்று குர்ஆன் கூறுகிறது. ஏனைய எந்தக குற்றச் செயலுக்கும் இரண்டு சாட்சிகள் போதும் எனக்கூறும் இஸ்லாம் இந்த விஷயத்தில் மட்டும் நான்கு சாட்சியம் தேவை எனக் கூறுவது ஏன் என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
நேருக்கு நேர் கண்ட நடத்தை கெட்ட செயலைக் கூட பரப்பக்கூடாது. குறைந்த பட்சம் நான்கு பேருக்கு முன்னிலையில் நடந்தால் மட்டுமே அது குறித்துப் பேசவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
ஒரு பெண்ணிடம் நாம் கண்ட இழிசெயலையே கூறக்கூடாது என்றால் இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து கூறி பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்குவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை சொல்லத் தேவையில்லை.
ஒரு வீட்டிலிருந்து ஒரு ஆண் வெளியே வருவதைக் காண்கிறோம். அவன் எதற்குச் சென்றான் என்பது நமக்குத் தெரியாது. உள்ளே வேறு யாரெல்லாம் இருந்தார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால் இந்தக் காட்சிக்கு கண், காது, மூக்கு வைத்து ஊரெல்லாம் பரப்பி விடுகிறோம். இஸ்லாமிய ஆட்சி நடந்தால் நமக்கு 80 கசையடி வழங்கப்பட்டிருக்கும். இவ்வளவு பெரிய குற்றத்தை சர்வ சாதாரணமாக நாம் செய்து வருகிறோம்.
தன் மீது இப்படி ஒரு பழி சுமத்தப்பட்டால் தனது நிலை என்ன என்று எந்த பெண்ணும் சிந்திப்பதில்லை. தன் குடும்பத்துப் பெண்கள் மீது இத்தகைய அவதூறு பரப்பப்பட்டால் தனது நிலை என்ன என்பதை எந்த ஆணும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இன்னும் சொல்வதாக இருந்தால் தம்பதியரிடையே மனக்கசப்பு இருந்தால் அதை நீக்கி இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே முஸ்லிம்களின் பணியாக இருக்க வேண்டும். இந்தப் பணிக்காக பொய் கூட கூறலாம் என்று இஸ்லாம் கூறுகிறது.
மனிதர்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக ஒருவர் எதைக் கூறினாலும் அவர் பொய்யரல்ல என்பது நபிமொழி. அறிவிப்பவர்: உம்மு குல்சூம் (ரலி), நூல்கள்: அஹ்மத், புகாரி
பிரிந்து கிடப்பவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக பொய்களைக் கூட கூறலாம் என்றால் இணக்கம் ஏற்படுத்துவது எந்த அளவு இறைவனுக்கு உகந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இறைவன் தனக்குப் பிடிக்காத பொய்யைக் நட நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக அனுமதிக்கிறான்.
இந்த நல்ல நோக்கத்திற்காகத் தான் நாம் கற்பனை செய்யலாம். கசப்பை நீக்க உதவும் எத்தகைய பொய்யையும் கூறலாம். ஆனால் நாமோ பிரிப்பதற்காக இதைச் செய்து கொண்டிருக்கிறோம்.
தொழுகை, நோன்பு, தர்மம் ஆகிய காரியங்களை இறைதிருப்திக்காக நாம் செய்கிறோம். மறுமையில் நல்ல நிலையைப் பெறுவதற்காக இந்தக் காரியங்களில் ஏற்படும் சிரமங்களைச் சகித்துக் கொள்கிறோம்.
இதை விட சிறந்த காரியம் ஏதும் இருக்க முடியுமா? இருக்கிறது அதுதான் குடும்பத்தார்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவது.
நோன்பு, தொழுகை, தர்மம் ஆகியவற்றுக்காக கிடைக்கும் மதிப்பை விட சிறந்த மதிப்பைப் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை நான் உங்களுக்குக் கூறட்டுமா என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். அது தான் குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்துதல் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் குடும்பங்களில் பிளவை ஏற்படுத்துவது நல்லறங்களை அழித்து விடக்கூடியது எனவும் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி), நூல்கள்: திர்மிதி, அபூதாவூத்)
ஆகவே பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்போம். நல்லறங்களைப் பாழாக்கும் குடும்பப் பிரிவினை செய்வதைத தவிர்ப்போம்.

இஸ்லாமிய‌தாவா.காம
நடுநிலையோடு சிந்திப்பவர்களுக்கு இன்றைய உலகின் நிலை தெளிவாகவே விளங்கும். மனிதன் செய்யக் கூடாதவை எவை எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் பெருமையுடன் செய்யும் இழி நிலைக்கு இன்று மனித குலம் தள்ளப்பட்டுள்ளது. நான்கு கால் மிருகங்களை விட கேடு கெட்ட வாழ்க்கையை இரண்டு கால் மனிதன் செய்யும் நிலைக்கு மனிதன் தாழ்ந்துள்ளான்.
1500 வருடங்களுக்கு முன்னால் மடமை நிறைந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். குடிப்பதில் பெருமை, விபச்சாரம் செய்வதில் பெருமை, கொள்ளை அடிப்பதில் பெருமை, கொலை செய்வதில் பெருமை, சூதாடுவதில் பெருமை, மூட நம்பிக்கைகளில் பெருமை என அனைத்து வகை ஒழுங்கீனங்களிலும் பெருமை பேசும் சமுதாயமாக மனித சமுதாயம் வாழ்ந்து கொண்டிருந்த காலம்.

தகப்பனுக்குப் பின்னால், தகப்பனின் மனைவிகளையே தாரமாக்கிக் கொள்ளும் மடமை. அளவுக்கதிகமான பெண்களை தாரமாக்கிக் கொள்வதில் பெருமை, பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், பெண் சிசுக்களை உயிரோடு குழிதோண்டிப் புதைக்கும் அராஜகம், அற்ப காரணங்களுக்காக தலைமுறை தலைமுறையாகச் சண்டையிட்டுக் கொள்ளும் கோரம், இப்படி அன்றைய மனித குலம் நரக விளிம்பில் நின்று கொண்டிருந்தது. இந்த நிலையை இறைவனது இறுதி வாழ்க்கை வழி காட்டி நெறிநூல் 3:103வது இறைவாக்கில் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
மனித சமுதாயத்தின் இந்த வழிகேட்டிற்கு முழுமுதல் காரணமாக இருந்தவர்கள் இறைவ னுக்கும் அடியானுக்கும் இடையில் தரகர்களாகப் புகுந்து மக்களை வஞ்சித்துக் கொண்டிருந்த மத குருமார்கள்; அதிகாரம் வகித்தவர்கள். இந்த நிலையில் எல்லாம் வல்ல ஏகன் இறைவன் தனது இறுதித் தூதரை அனுப்பி, அவருக்கு தனது இறுதி வழிகாட்டி நெறிநூல் அல்குர்ஆனை சிறிது சிறிதாக அருளினான். பல்லாயிரம் இறைத் தூதர்களுக்கு அருளப்பட்ட பதியப்படாத நெறி நூல்களுக்கு மாறாக, மார்க்கம் நிறைவு பெற்று விட்ட தால் அது உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கவும் பட்டுவிட்டது. கடந்த 1432 ஆண்டுகளாக அதன் ஒரு புள்ளியையும் இந்த மதகுருமார்களால் மாற்ற முடியவில்லை.
23 வருட கடும் முயற்சியில், எண்ணற்ற பெரும் தியாகங்களுக்குப் பின்னர், மடமையில் ஆழ்ந்து கிடந்த அந்த மக்களில் இறைவன் நாடிய சிலர், உண்மையை உணர்ந்து உயர்ந்தார்கள். அகில உலகிற்கும் வழிகாட்டிகள் என்ற ஒப்பற்ற மேலான நிலையை அடைந்தார்கள். முஸ்லிம்கள் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் போதனைப்படி நடந்த காலம் எல்லாம், அகில உலக மக்களையும் வழிநடத்திச் செல்லும் பேறு பெற்றார்கள்.
என்று ஷைத்தானின் நேரடி முகவர்களான இந்த மதகுருமார்கள் திருட்டுத்தனமாக முஸ்லிம் சமுதாயத்திலும் நுழைந்தார்களோ அன்றிலிருந்து முஸ்லிம்களின் அழிவு காலம் தொடங்கியது. உலக மக்களை வழிநடத்திச் செல்லக் கடமைப்பட்ட முஸ்லிம் சமுதாயம், இந்த மத குருமார்களின் பெரும் சதியால், வழி கேட்டில் சென்று கொண்டிருக்கும் இதர சமூகங்கள் பின்னால் செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டு விட்டது.
இன்று பல பிரிவுகளாகச் சிதறிக் கிடக்கும்  இயக்கங்கள் நடத்தும், ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த, மறியல், பேரணி, வாழ்வுரிமை போராட்டம், இருப்பதைக் காக்க, இழந்ததை மீட்க என்றெல்லாம் முழக்கமிட்டு முஸ்லிம் ஆண்களையும், பெண்களையும் நடுவீதிக்குக் கொண்டு வரும் கோரக் காட்சிகள் எல்லாம் மாற்றாரைப் பின்பற்றியே அல்லாமல் இறைவன் காட்டிய வழியில் அல்ல என்பது மட்டுமில்லாமல் இறைக் கட்டளை களை நிராகரித்துச் செயல்படும் கொடிய செயல்கள் என்பதை அல்குர்ஆன் 3:186, 13:26, 16:71, 17:30, 28:82, 29:62, 30:37, 34:36,39, 39:52, 41:34,35, 42:12 போன்ற இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது; இறைவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது என்பதில் நம்பிக்கையற்ற நாத்திகச் சிந்தனையே இதற்கு காரணம்! ஷைத்தான் இச் செயல்களை அவர்களுக்கு அழகாகக் காட்டுகிறான்.
முஸ்லிம்கள் அல்லாஹ் வழிகாட்டியபடி நடந்து உலகை வழி நடத்திச் செல்லத் தவறியதால், மீண்டும் இவ்வுலகம் நரக விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. அன்று காணப்பட்ட அனைத்து மிருகச் செயல்களும் இன்றைய மனித சமுதாயத்தில் நீக்கமற காணப்படுகின்றன. இந்து மதகுருமார்கள் கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து, அவற்றை வழிபட்டு, தங்களுக்கு தட்சணை கொடுப்பதோடு, கோவில் உண்டியல்களில், அவர்கள் கொள்ளையடித்ததில் ஒரு பகுதியை போட்டுவிட்டால், அவர்கள் செய்த கொடூர குற்றங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து சுவர்க்கம் அனுப்பிவிடுவான் என்ற மூட நம்பிக்கையை வளர்த்து வருகிறார்கள். அதனால் இந்து பெருங்கூட்டம் வழிகேட்டில் சென்று கொண்டிருக்கிறது.
அடுத்து கிறித்தவ மதகுருமார்கள் போதனைப்படி, அவர்களை நம்பியுள்ள கிறித்தவ மக்கள் எப்படிப்பட்ட பாதகச் செயல்களில் ஈடுபட்டாலும், மதகுருவிடம் வந்து காணிக்கை செலுத்தி, தான் செய்த குற்றங்களைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுவிட்டால் (Confession) இறைவன் மன்னித்து விடுவான் என்ற மூட நம்பிக்கையில் மூழ்கி துணிந்து பல ஒழுங்கீனங்களை, பாவங்களை செய்து வருகின்றனர். அவர்களும் வழிகேட்டிலேயே செல்கின்றனர்.
அடுத்து முஸ்லிம் மதகுருமார்களை நம்பியுள்ள முஸ்லிம்கள் குர்ஆன் கூறும் நேரடி கருத்துக்களை நிராகரித்துவிட்டு, இந்த மதகுருமார்கள் கூறும் கோணல் வழிகளை நேர்வழியாகக் கொண்டிருக்கின்றனர். இந்த மதகுருமார்களின் ஆதரவு இல்லாமல் இறைவனின் பொருத்தம் கிடைக்காது. சுவர்க்கம் புக முடியாது என்ற மூட நம்பிக்கையில் மூழ்கி அவர்களின் சுயநலப் பொய்க் கூற்றுகளை ஏற்று அவர்களுக்கு வாரி வழங்குவதோடு, முஸ்லிம்களும் பல கொடூர குற்றச் செயல்களில் மூழ்கின்றனர். மதகுருமார்கள் பின்னால் செல்லும் முஸ்லிம்களும் வழிகேட்டிலேயே இருக்கின்றனர்.
இப்படி அனைத்து மதகுருமார்களும் இறைவனுக்கு இணை வைக்கும் நிலையில் பலகோடி பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து அவற்றின் உண்டியல்களை நிறைத்து, இம்மத குருமார்களுக்கும் கை நிறையத் தட்சிணைக் கொடுத்து விட்டால் எப்படிப்பட்ட கொடூர, பாவமான, இழிசெயல்களைச் செய்தாலும் இப்பொய்க் கட வுள்களின் ஆசியால் இறைவன் அனைத்தையும் மன்னித்து சுவர்க்கம் அனுப்பிவிடுவான் என்ற மூடநம்பிக்கையில் மூழ்கி பஞ்சமா பாவங்களையும் துணிந்து செய்து வருகின்றனர். அதனால் உலகே அழிவின் விளிம்பில் நிற்கிறது.
இது போதாதென்று இந்த மதகுருமார்களின் அட்டூழியங்களைத் தாங்க இயலாத சில அறிவு ஜீவிகள் கடவுள் என்று ஒன்று இருக்கப் போய்த் தானே இந்த மதகுருமார்கள் கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றி வஞ்சித்து வருகிறார்கள். கட வுளே இல்லை என்று நிலை நாட்டிவிட்டால் கட வுளின் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள், அநியாயங்கள், அக்கிரமங்கள் அனைத்தையும் ஒழித்து விடலாம் என சாத்தியமே இல்லாத ஒன்றை மூடத்தனமாக நம்பி கடவுளை மற, மனிதனை நினை. கடவுளை கற்பிப்பவன் முட்டாள், கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி என முழக்கமிடுகின்றனர். பொய்க் கடவுள்களையும், மதகுருமார்களையும் ஒழித்துக் கட்ட திராணியற்ற இந்த நாத்திகர்களின் தவறான போதனையால், மதகுருமார்கள் ஏற்படுத்தும் பெரும் தீங்குகளை விட, நாத்திகர்களின் கடவுள், மறுமை மறுப்பு முழக்கம் மெகா மெகா தீங்குகளை இவ்வுலகில் ஏற்படுத்தி வருகிறது.
கடவுளோ, மறுமையோ இல்லை. அதனால் நாம் எப்படிப்பட்ட கொடூரமான பெரும் குற்றங்களைச் செய்தாலும் நமக்கு எவ்வித ஆபத்துமில்லை. எப்படியும், வரம்பு மீறியும் இவ்வுலகில் வாழலாம்; அனுபவிக்கலாம். நாம் இவ்வுலகில் ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் நமது திறமையால் ஏமாற்றிவிட்டால், அல்லது கொள்ளையடிப்பதில் ஒரு பகுதியை ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கையூட்டாகக் கொடுத்து விட்டால் தப்பி விடலாம்; குபேர வாழ்க்கை வாழலாம் என மனப்பால் குடிக்கின்றனர். போலி பொய்க் கடவுள்களின் உண்டியலில் கொள்ளை அடித்ததில் ஒரு பகுதியைப் போட்டுவிட்டால் தப்பி விடலாம் என்று விபரம் கெட்ட ஆத்திகர்கள் மதகுருமார்களை நம்பி ஏமாறுவதுபோல், நாத்திகர்களும், நாத்திக மத குருமார்களை நம்பி ஏமாறுகின்றனர். தமிழகத்தில் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்து நூறு தலைமுறைக்கும் மேலாக பல்லாயிரம் கோடிகளைக் குவித்து வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பெரியாரை ஆசானாகக் கொண்ட நாத்திகச் சிந்தனையுடையவர்களே என்பதை இங்கு அவதானிக்கவும்.
தங்கள் பகுத்தறிவுக்கும், மனசாட்சிக்கும் விரோதமாக இம்மாபாதகச் செயலை செய்யத் தூண்டும் தீய சக்தி எது என சிந்திக்கவும் உணரவும் தவறுகின்றனர் நாத்திகர்கள். ஆக பல தெய்வ நம்பிக்கை ஆத்திகர்களாலும், நாத்திக நம்பிக்கையாளர்களாலும் இன்று உலகே நாசக்காடாக ஆகிக் கொண்டிருக்கிறது. நான்கு கால் மிருகங்கள் வாழும் காடுகளை விட இரண்டு கால் மிருகங்கள் வாழும் நாடுகள் கேடு கெட்டுக் காணப்படுகின்றன. முறையான சிந்தனையையும், பகுத்தறிவையும் கொண்டுள்ள மனிதர்கள் வேதனையில் வெந்து நூலாகிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலை மாறி மீண்டும் உலகில் சுபீட்சம் துளிர்க்க வேண்டும் என்றால், மனிதன் உண்மையிலேயே மனிதனாக வாழவேண்டும் என்றால் அதற்குரிய வேறு வழியே இல்லாத ஒரே வழி இறைவன் நம்மைப் படைத்து நமக்குக் காட்டியுள்ள அந்த ஒரே வழிதான். 1450 வருடங்களுக்கு முன்னர் இன்று போல் அன்று நரகின் விளிம்பில் நின்று கொண்டிருந்த மக்களை, மனித குலத்திற்கென்றே இறைவன் இறக்கி அருளிய நெறிநூலே காப்பாற்றி உயர் நிலைக்கு உயர்த்தியது. அதுபோல் இன்றும் மனிதனின் சுய கற்பனைகள் அனைத்தையும் புறந்தள்ளி அந்த ஒரே இறைவன் அருளிய இறுதி நெறிநூல் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து, அதன் போதனைப்படி மனிதன் நடக்க முன்வந்தால் மட்டுமே உலகு உய்ய வழி பிறக்கும். வேறு வழியே இல்லை; இது உறுதி. அறிவு ஜீவிகளே முறையாகச் சிந்தியுங்கள்.
அந்நஜாத்
لاَإِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ
وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ


என்ற திக்ரை ஒரு நாளைக்கு நூறு தடவை கூறுபவருக்கு பத்து அடிமைகளை
உரிமைவிட்ட நன்மை கிடைக்கிறது. அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படுகிறது.
நூறு தீமைகள் அழிக்கப்படுகிறது. மாலை வரை ஷைத்தானைவிட்டும் பாதுகாப்புக்
கிடைக்கிறது. இதனை விடவும் அதிகமாக திக்ர் (அமல்) செய்தவரைத் தவிர மற்ற
எவரும் இவரைவிடச் சிறந்தசெயல் செய்தவராக முடியாது என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்கள்: புஹாரி, முஸ்லிம்)


سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ

என்று ஒரு நாளைக்கு நூறு தடவைக் கூறினால் அவருடைய பாவங்கள் கடல் நுரையளவு
இருந்தாலும் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நுல்கள்: புஹாரி, முஸ்லிம்)

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه

என்று காலையிலும் மாலையிலும் நூறு தடவை கூறுபவரைவிட மறுமை நாளில் சிறந்த
செயலுடன் யாரும் வரமாட்டார். ஆனால் இவரைப் போன்றோ அல்லது இவரைவிட
அதிகமாகவோ திக்ர் செய்தவரைத் தவிர என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

لاَإِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ
وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ


என்று பத்துத் தடவை கூறுபவர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியரில்
(அடிமையாகியுள்ள) நான்கு அடிமைகளை உரிமை விட்டவரைப் போன்றவராவார் என
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல்அன்ஸாரி(ரலி), நூல்கள்: புஹாரி, முஸ்லிம்)

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ

இந்த இரண்டு வார்த்தைகளும் சொல்வதற்கு மிக எளிதானவை. இறைவனின் தராசில்
மிக கனமானவை. இறைவனிடம் மிக விருப்பத்திற்குரியவை என நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்கள்: புஹாரி, முஸ்லிம்)

سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ ، وَلاَ إِلَهَ إِلاَّ اللهُ،
وَاللهُ أَكْبَرُ

என்று நான் கூறுவது சூரியன் உதயமாகும் இவ்வுலகத்தை விட எனக்கு மிகவும்
பிரியமானதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

நாங்கள் நபி(ஸல்) அவர்களோடு அமர்ந்திருந்தபோது, உங்களில் எவரேனும்
ஒருநாளில் ஆயிரம் நன்மைகள் சம்பாதிக்க முடியுமா? என்று கேட்டார்கள்.
ஆயிரம் நன்மைகள் எப்படி சம்பாதிக்க முடியும்? என்று ஒரு தோழர் கேட்க,
நூறு தடவை தஸ்பீஹ் செய்யுங்கள். ஆயிரம் நன்மைகள் எழுதப்படும் அல்லது
ஆயிரம் தீமைகள் அழிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஸஃது(ரலி), நூல்:முஸ்லிம்)

سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ وَبِحَمْدِهِ

என்று கூறினால் சொர்க்கத்தில் ஒரு பேரீத்த மரம் நாட்டப்படுகிறது என
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: திர்மிதி)

அப்துல்லாஹ் இப்னு கைஸே! உனக்கு சொர்க்கத்துப் பொக்கிஷம் ஒன்றை
அறிவிக்கட்டுமா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்
அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள் என்றார்.
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ
என்று கூறுவீராக! என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் கைஸ்(ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம்)

سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ ، وَلاَ إِلَهَ إِلاَّ اللهُ،
وَاللهُ أَكْبَرُ

இவை இறைவனின் மிகப் பிரியமான நான்கு வார்த்தைகளாகும். இதில் எந்த
வார்த்தையையும் முதலாவதாக கூறலாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு ஏதேனும் திக்ரைக் கற்றுத்
தாருங்கள் என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள்
لاَإِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، اَللهُ أَكْبَرُ
كَبِيْرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيْرًا، سُبْحَانَ اللهِ رَبِّ
الْعَالَمِيْنَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ الْعَزِيْزِ
الْحَكِيْمِ

என்பதைக் கற்றுக்கொடுத்தார்கள். அதற்கு அவர் இவைகள் இறைவனைப்
புகழ்வதற்காக உள்ளவை. எனக்காக எதுவும் இல்லையா? என்றார். அதற்கு நபி(ஸல்)
அவர்கள் இதனைக் கற்றுக் கொடுத்தார்கள்.

أَللَّهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاهْدِنِيْ وَارْزُقْنِيْ

(அறிவிப்பவர்: ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)

ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் நபி(ஸல்) அவர்கள் அவருக்கு தொழுகையைக் கற்றுக்
கொடுப்பார்கள். பிறகு இவ்வார்த்தையைக் கொண்டு பிரார்த்திக்கச்
சொல்வார்கள்.

أَللَّهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاهْدِنِيْ وَعَافِنِيْ
وَارْزُقْنِيْ


(அறிவிப்பவர்: தாரிக் அல்அஸ்ஜயீ(ரலி), நூற்கள்: புஹாரி, முஸ்லிம்)

اَلْحَمْدُ لِلَّهِ

சிறந்த துஆ ஆகும்.

لاَ إِلَهَ إِلاَّ اللهُ

சிறந்த திக்ர் ஆகும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: திர்மிதி, இப்னுமாஜா)

தஸ்பீஹ் செய்யும் முறை

நபி(ஸல்) அவர்கள் தம் வலது கை விரலால் தஸ்பீஹை எண்ணுவதை நான்
பார்த்திருக்கிறேன் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) கூறுகிறார்கள்.
(நூல்: அபூதாவூத், திர்மிதி)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


கீரிட          வைத்தது நமது அலுவலகத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பு...          ""சார்... என் மனைவிக்கு          உடம்பு சரியில்லைன்னு அந்த பிரபல மருத்துவமனைக்கு கூட்டிட்டுப்          போயிருந்தேன். செக்கப் பண்ற அறைக்கு கூட்டிட்டுப் போயி உடைகளை எல்லாம்          கழட்டி டாக்டர் செக்கப் பண்ணியிருக்காங்க. பிறகு,          இடுப்புல இன்ஜெக்ஷன் போடும்போது எதார்த்தமா பார்த்தவ அதிர்ச்சி          யாயிருக்கா. அவ ஆடைகள் இல்லாம படுத்துருக்குற பெட்டுக்கு நேரா கேமரா          இருந்திருக்கு. பார்த்துட்டு வந்தவ எங்கிட்ட சொல்லி அழுதுக்கிட்டிருக்கா          சார். பெண்களை பரிசோதனை பண்ணி இன்ஜெக்ஷன் போடுற அறையில எதுக்கு சார்          கேமரா? அதுவும் பெண்களுக்கான          சிறப்பு மருத்துவமனையில். என் மனைவி மாதிரி எத்தனை பெண்களோட அந்தரங்          கத்தை ரகசியமா படம்பிடிச்சு மிஸ்யூஸ் பண்றாங் கன்னு தெரியல. இந்த          கொடூரக் குற்றத்தை நக்கீரன்தான் சார் அம்பலப்படுத்தி... அந்த வக்கிர          மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வைக்க ணும்''          -என்றார் தழுதழுத்த குரலில் ஒருவர்.


அந்த நபர் குறிப்பிட்டது சென்னை ஆவடிக்குப் பக்கத்திலுள்ள          பட்டாபிராம் ரயில்வே கேட் அருகில் இருக்கும் பிரபல கிரேஸ் மல்டி          ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைதான். பிரசவத்துக்குப் பெயர் பெற்ற          மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் இளம்பெண்களின் அந்தரங்கங்களை          ரகசியமாக படம்பிடிக்கிறார்களா? என்கிற அதிர்ச்சியுடனும்... அந்த மருத்துவமனையின் புகழைக்          கெடுக்க தவறான தகவலை கொடுத்திருப்பாரா?          என்கிற சந்தேகத்துடனும் அந்த மருத்துவமனையை நோட்டமிடக்          கிளம்பினோம். நமக்கு தகவல் வந்த 21-ந்தேதி மதியமே.
சி.டி.ஹெச். மெயின்ரோட்டிலிருந்து நாம் உள்ளே நுழையும்போதே          மருத்துவமனை கேமரா கண் இமைக்காமல் முறைத்தபடி நம்மை கண்காணித்துக்          கொண்டிருந்தது. ரிசப்ஷனில் இன்னொரு கேமரா. மதிய நேரம் கூட்டம் எதுவும்          இல்லாததால் மருத்துவமனை ஊழியர்களின் கண்கள் நம்மை சந்தேகத்துடன்          பார்க்க... வெளியில் வந்து காத்திருந்தோம்.
          
மணி... மாலை 6. இளம்பெண்களின் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. கர்ப்பிணி          மனைவியை அழைத்து வந்த கணவர்களில் ஒருவரைப்போல் உள்ளே நுழைந்து          ரிசப்ஷனில் நின்றோம். ரிசப்ஷனின் இடதுபுறத்தில் ஃபார்மஸிக்கு பக்கத்து          அறையில்தான் கேமரா பொருத்தப் பட்டிருப்பதாக நமக்கு வந்த தகவல். டாக்டரை          பார்த்துவிட்டு வரும் இளம் கர்ப்பிணி பெண்கள்... திருமணமாகாத          இளம்பெண்கள்... அந்த அறைக்கு சென்று பரிசோதனை + சிகிச்சை பெற்றபடி          வெளியே வந்து கொண்டிருந்தனர்.
அந்த நேரம் பார்த்து ஒரு வயதான பாட்டி சிகிச்சைக்காக அந்த          அறைக்குள் நுழைய... பட்டென்று அந்தப் பாட்டியின் பேரன்களைப் போல் உள்ளே          நுழைந்து "பாட்டிக்கு எப்படிங்க          இருக்கு?' என்று நர்ஸிடம் பேச்சு          கொடுத்தபடியே அந்த அறையில் கண்களை சுழல விட்டோம்.
அடிவயிற்றில் ஆணி அடித்தது போல் இருந்தது. பாட்டி பெட்டில்          படுத்திருக்க... அவரின் கால் வைத்திருப்பதற்கு நேராக மேலே சி.சி.டி.வி.          கேமரா பொருத்தப்பட்டிருப்பது நம் கண்ணில் பட்டுவிட்டது. அதற்குள்""சரிங்க... நீங்க வெளியில்          போங்க சார்... பாட்டிக்கு இன்ஜெக்ஷன் போடப் போறோம்''          என்றபடி நர்ஸ் கதவை சாத்த அடப்பாவமே... எத்தனை எத்தனை          இளம்பெண்கள் இந்த இடத்திலே ஆடைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில்          பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்?          இதையெல்லாம் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டு யார் யார்          பார்க்கிறார்களோ... என்கிற பதைபதைப்புடனும் அந்த வீடியோ கேமரா          பொருத்தப்பட்டிருப்பதை எப்படியாவது ஃபோட்டோ எடுக்க வேண்டுமே என்கிற          படபடப்புடனும்... பாட்டியைப் பற்றி விசாரிப்பது போல் திரும்பவும் அந்த          அறைக்கு உள்ளே நுழைய முயற்சிக்க... அதற்குள் அந்த பாட்டிக்கு சிகிச்சை          முடிந்து ஒரிஜினல் பேரன்கள் பாட்டியை அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள்.
இனி வேறு இளம்பெண் அந்த அறைக்குள் சிகிச்சை பெறும்போது நாம்          கேமராவுடன் உள்ளே நுழைந்தால் பரபரப்பாகிவிடும்... என்ன செய்வது?          நகத்தை கடித்துத் துப்பிக் கொண்டிருக்கும் போதே... ஒரு          சின்ன "கேப்'          கிடைத்தது.
நர்ஸ் மருந்து எடுக்க... வேறு அறைக்குப் போக... பெண்          நோயாளியும் அந்த அறையில் இல்லாத நேரம்... பட்டென்று அந்த அறைக்குள்          நுழைந்து... கண்காணித்துக் கொண்டிருக்கும் கேமராவையே"க்ளிக் க்ளிக்'          என்று ஃப்ளாஷ் போட்டு க்ளிக்கினார் நமது புகைப்படக் கலைஞர்.
அடிவயிற்றில் ஜிலிருடன்... நாம் அந்த அறையிலிருந்து          வெளியேற... நல்லவேளை ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண்களும்,          ஊழியர்களும் அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில்          சீரியலை சீரியஸாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வெளியேறிய நாம்... க்ரேஸ் மருத்துவ மனையின் எம்.டி.யும்...          மகப்பேறு மருத்துவ நிபுணருமான டாக்டர் செல்லராணியை 044-26853808          என்ற மருத்துவமனை எண்ணில் தொடர்பு கொண்டோம் -சிகிச்சைக்கு          கர்ப்பிணி மனைவியை அழைத்து வந்த கணவனைப் போல்.
          ""எதுவா இருந்தாலும்          மேடம்கிட்ட நேர்ல வந்து பேசிக் கோங்க''          என்று மருத்துவமனை ஊழியர் சொல்ல... நாம் விடாப் பிடியாக          கெஞ்சி டாக்டரை லைனில் பிடித்தோம்... நைஸாக.
          ""ஹலோ வணக்கம்... டாக்டர்          செல்லராணி மேடம்ங்களா?''
          ""ம்...?''
          ""ஆஹ்... நேத்து என்          மனைவியை ட்ரீட்மெண்ட் டுக்காக உங்கக்கிட்ட கூட்டிட்டு வந்தேன் மேடம்...''
          ""சரி...''
          ""அது... வந்து...          இன்ஜெக்ஷன் போடுற ரூம்ல கேமரா இருக்கிறதை பார்த்துட்டு வந்து அழுறா          மேடம்.''
          ""அப்படியெல்லாம் எதுவும்          கேமரா வைக்கலையே?''
          ""கேமரா இருக்குங்களே மேடம்?''
          ""ப்ச்... கேமரா          வைக்கலேங்குறேன்ல'' (டென்ஷனாகிறார்.)
          ""அதில்ல மேடம்... நானும்          வந்து பார்த்தேன் மேடம்... கேமரா இருக்குறதை. எனக்கென்னன்னா... நீங்க          டாக்டர், பார்க்கலாம். ஆனா... வேற          யாராவது பார்ப்பாங்களேன் னுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு''.
          ""இங்க பாருங்க... கேமரா          கண்ட்ரோல் என் ரூம்லதான் இருக்கு. நான் மட்டும்தான் வாட்ச் பண்ணுவேன்.          வேற எங்கயும் டிஸ்ப்ளே பண்றதில்ல...''.
          ""ஓ... அப்படிங்களா?          ட்ரீட்மெண்ட் ரூம்ல கேமரா வெச்சிருக்கீங்களே தப்பில்லையா          மேடம்?''.
          ""இதுல என்ன தப்பு இருக்கு?          இந்த ஹாஸ்பிட்டலில் 14 கேமரா இருக்கு. நீங்க சொல்ற அந்த அறையில் இருக்கிறது சின்ன          கேமராதான். ஸ்டாஃப்கள் வேலை பார்க்குறதை கண்காணிக்கத்தான் கேமரா          வெச்சிருக்கோம் என்றபடி போனை துண்டித்தார். நக்கீரன்தான் வந்து ஃபோட்டோ          எடுத்திருக்கிறார்கள் என்று முன்பே தெரிந்திருந்தால் மருத்துவமனை நிர்வாகம்          உஷாராகியிருக்கும். மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்          செல்லராணி டேவிட்டின் "கேமரா பொருத்தப்பட்டிருப்பது உண்மைதான்'          என்ற ஒப்புதல் வாக்குமூலமும் நக்கீரனுக்கு கிடைத்திருக்காதே?          அதனால்தான் இந்த சைலண்ட் ஆபரேஷன்.
கிரேஷ் மருத்துவமனை ஊழியர் ஒருவரோ""எல்லா ரூம்லேயும்          சி.சி.டி.வி. கேமரா வெச்சிருக்குறதால... நர்ஸ்,          லேப் டெக்னீஷியன்கள்னு வேலை பார்க்குற பொம்பளப் பிள்ளைங்க          ட்ரெஸ் மாத்துறது கூட இந்த கேமராவில் பதிவாகுது. பாவம்... அந்தப்          பிள்ளைங்களுக்கு தெரியாது. இவங்களோட இன்னொரு கிரேஸ் ஹாஸ்பிட்டல்          பக்கத்துல இருக்கிறதால... டாக்டர் செல்லராணி அங்கே போய்டுவாங்க. அந்த          நேரத்துல அவருடைய கணவர் டேவிட்தான் கேமரா மானிட்டரில்          உட்கார்ந்திருப்பாரு. அவர் டாக்டருமில்ல... ஆனா... இப்படி எல்லா          ரூம்லயும் என்ன நடக்குதுன்னு பார்ப்பாரு. கேமராவில் பதிவானதைக்          காண்பித்து ப்ளாக் மெயில் பண்ணியே சில சீனியர் டாக்டர்கள் அந்தப்          பெண்களை தங்கள் வலையில் வீழ்த்தியிருக்காங்க. கர்ப்பிணி பெண்கள்          மட்டுமில்ல... திருமணமாகாத இளம்பெண்களும்,          கல்லூரி மாணவிகளும் இந்த மருத்துவமனைக்கு வந்து அந்த          அறையில்தான் சிகிச்சை எடுத்துக்குறாங்க''          என்று வேதனையுடன் சொன்னவர் ""ஏற்கனவே நோயாளியின் கிட்னியை திருடியதா பெரும்          பரபரப்பானாங்க இந்த டாக்டர். அப்புறம் இளம்பெண்ணுக்கு ஆபரேஷன் பண்றேன்னு          பாதி ஆபரேஷன் பண்ணிட்டு மீதியை வேற ஹாஸ் பிட்டலுக்குப் போயி          பண்ணிக்கோங்கன்னு திடீர்னு கைவிரிக்க... அந்த இளம்பெண்          இறந்துட்டாங்க.... இவ்வளவு நடந்தும் இந்த மருத்துவமனைக்கு பெண்கள்          கூட்டம் குவியும். அதை இப்படி வக்கிரமா வீடியோ பதிவு செஞ்சு கணவனை          ரசிக்க வைக்கிறாங்களே ச்சே'' என்கிறார் நொந்தபடி.
          ""கூச்சம்,          பயம் காரணமாக ஒரு நோயாளி தனது உடலை காண்பிக்க          மறுத்துவிட்டால்... வற்புறுத்தி டாக்டர் பரிசோதனை செய்வதே சட்டப்படி          குற்றம். அப்படியிருக்க... அதே அந்தரங்கத்தை நோயாளிகளுக்கு தெரியாமலேயே          இரகசியமாக படம்பிடித்து டாக்டரோ அல்லது வேறு யாரோ ரசிப்பது... மிஸ் யூஸ்          பண்ணுவது பெரும் குற்றம்'' என்கிறார்கள் பிரபல மருத்துவர்கள்.
கிரேஸ் என்றால் மகிமை என்று அர்த்தம். இப்படிப்பட்ட வக்கிர          கேமராவால் மகிமை இழந்து நிற்கிறது கிரேஸ் மருத்துவமனை. காவல்துறைதான்          கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அல்லாஹ் தான் நம்மையும் நம் குடும்பத்தார்களையும் பாதுகாக்க போதுமானவன். இதற்கு இன்னுமொரு காரணம் நம் சமூதாயத்தில் மருத்துவர்கள் மிகவும் குறைவாக இருப்பது தான், இதை கவனத்தில் கொண்டு நாம் நமது சமுதாயத்தில் அதிக மருத்துவர்களை உருவாக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ். எந்த மருத்துவரிடம் சென்றாலும் அந்த மருத்துவரைப்பற்றி நன்றாக தெரிந்த பின்னரே குடும்ப பெண்களை அழைத்து செல்லுங்கள். இந்த விஷயத்தில் பெண்களை தனியாக அனுப்ப வேண்டாம். கூடுமானவரை பெண்களை பெண் மருத்துவரிடமே அழைத்து செல்லுங்கள். அல்லாஹ்விடம் அதிகமதிகம் துவா செய்யுங்கள்.

இஸ்லாம் என் இயக்கம்! நபி[ஸல்] என் ஒரே தலைவர்!! அஞ்சுவதும்அடிபனிவதும் அல்லாஹ் ஒருவணுக்கே!
நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதம் குர்ஆன்.
1806. ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன.
அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது. எனக்கு
வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு (வஹீ)
தான். எனவே, நபிமார்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள
நபியாக நான் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன் என அபூ ஹுரைரா(ரலி)
அறிவித்தார்.

1807. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் அல்லாஹ், தன் தூதர்(ஸல்)
அவர்கள் இறக்கும் வரையிலும் அவர்களுக்குத் தொடர்ந்து 'வஹீ' (வேத
அறிவிப்பை) அருளினான். அவர்கள் இறப்பதற்குச் சற்று முன்பு அருளப்பெற்ற
வேத அறிவிப்பு (மற்ற காலங்களில் அருளப்பெற்றதை விட) அதிகமாக இருந்தது.
அதற்குப் பின்னரே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
குர்ஆன் ஏழு முறைகளில் (வட்டார வழக்கு முறைப்படி) அருளப்பட்டது.


1808. உமர்பின் கத்தாப்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களின்
வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம்(ரலி) 'அல்ஃபுர்கான்' எனும் (25 வது)
அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். அவரின் ஓதலை நான்
செவிதாழ்த்திக் கேட்டபோது எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓதிக்
காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அதை அவர் ஓதிக்கொண்டிருந்தார்.
தொழுகையில் வைத்தே நான் அவரைத் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து)
அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும்வரை பொறுத்துக் கொண்டேன்.
(அவர் தொழுது முடித்த) பிறகு அவரின் மேல் துண்டைக் கழுத்தில் போட்டுப்
பிடித்து, 'நீர் ஓதியபோது நான் செவியுற்ற இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக்
காண்பித்தது யார்?' என்று கேட்டேன். அவர், 'இதை எனக்கு இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் தாம் ஒதிக் காண்பித்தார்கள்'' என்று பதிலளித்தார். உடனே நான்,
'நீர் பொய் சொல்லிவிட்டீர்! என்று கூறியபடி அவரை இழுத்துக் கொண்டு
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம், '(இறைத்தூதர்
அவர்களே!) தாங்கள் எனக்கு ஓதிக்கொடுக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில்
'அல்ஃபுர்கான்' அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன்'' என்று சொன்னேன்.
அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவரை விடுங்கள்!'' என்று கூறிவிட்டு
(ஹிஷாம் அவர்களை நோக்கி), 'ஹிஷாமே, நீங்கள் ஓதுங்கள்!'' என்றார்கள். அவர்
என்னிடம் ஓதியது போன்றே நபி(ஸல்) அவர்களுக்கு முன்னாலும் ஓதிக்
காட்டினார். (இதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த
அத்தியாயம்) அருளப்பெற்றது'' என்று கூறினார்கள். பிறகு (என்னைப்
பார்த்து), 'உமரே, ஓதுங்கள்!'' என்று கூறினார்கள். எனக்கு அவர்கள்
ஓதிக்கொடுத்திருந்த ஓதல்முறைப்படி நான் ஓதினேன். (அதைக்கேட்ட) இறைத்
தூதர்(ஸல்) அவர்கள், 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது.
இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு
அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்களை, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் குர்ஆனை ஓதச்செய்து
வந்தார்கள்.
1809. ஃபாத்திமா(ரலி) கூறினார்: நபி(ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக,
'(வானவர்) ஜிப்ரீல் என்னை ஒவ்வோர் ஆண்டும் ஒருமுறை குர்ஆனை ஓதச் செய்து
வந்தார்கள். இந்த ஆண்டு மட்டும் அவர்கள் என்னை அதை இருமுறை ஓதச்
செய்தார்கள். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்துவிட்ட(தைக்
குறிப்ப)தாகவே அதை கருதுகிறேன்'' என்று தெரிவித்தார்கள்.
1810. ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அறிவித்தார் எங்களிடையே அப்துல்லாஹ் இப்னு
மஸ்வூத்(ரலி) உரையாற்றினார்கள். அப்போது, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான்
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாயிலிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட
அத்தியாயங்களைக் கேட்டறிந்துள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக, தங்களிலேயே
அல்லாஹ்வின் வேத குர்ஆனை நபித்தோழர்கள் நன்கறிவார்கள். (அதற்காக
எல்லாவகையிலும்) நான் அவர்களில் சிறந்தவன் அல்லன்'' என்று
குறிப்பிட்டார்கள். (இது குறித்து) மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள்
என்பதைச் செவிமடுத்தவாறே அந்த அவையில் நான் அமர்ந்திருந்தேன். இப்னு
மஸ்வூத்(ரலி) சொன்னதை மறுத்து வேறுவிதமாகப் பேசியதை யாரிடமிருந்தும் நான்
கேட்கவில்லை.
1811. அல்கமா இப்னு கைஸ் அந்நகஈ(ரஹ்) அறிவித்தார் நாங்கள் (சிரியா
நாட்டின் பிரபல நகரமான) ஹிம்ஸில் இருந்துகொண்டிருந்தோம். (ஒரு சமயம்)
இப்னு மஸ்வூத்(ரலி) 'யூசுஃப்' எனும் (12 வது) அத்தியாயத்தை ஓதினார்கள்.
அப்போது ஒருவர் (அதனை ஆட்சேபிக்கும் விதமாக) 'இவ்வாறு இந்த அத்தியாயம்
அருளப்படவில்லை'' என்று கூறினார். இப்னு மஸ்வூத்(ரலி), '(இவ்வாறுதான்)
நான் இறைத்தூதர்(ஸல்) முன்னிலையில் ஓதினேன். அவர்களும், 'மிகச் சரியாக
ஓதினாய்' என்று கூறினார்கள்'' என்று பதிலளித்தார்கள். அப்போது
(ஆட்சேபிக்க வந்த) அந்த மனிதரின் வாயிலிருந்து மதுவின் வாடை வருவதைக்
கண்டார்கள். 'மதுவையும் அருந்திக்கொண்டு அல்லாஹ்வின் வேதத்தை மறுக்கவும்
முனைகிறாயா?' என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறிவிட்டு, அந்த மனிதருக்கு (மது
அருந்திய குற்றத்திற்கான) தண்டனையை நிறைவேற்றும்படி செய்தார்கள்.
'குல் ஹுவல்லாஹு அஹத்' எனும் (112 வது) அத்தியாயத்தின் சிறப்பு.
1812. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார் ஒருவர் 'குல்ஹுவல்லாஹு
அஹத்' எனும் (112 வது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப
ஓதிக்கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார். (இதைக்கேட்ட) அந்த
மனிதர் விடிந்ததும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக்
கூறினார். அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப அவர் ஓதியதை)
இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போல் தெரிந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் , 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த
அத்தியாயமும் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடானதாகும்'' என்று
கூறினார்கள்.
1813. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் தம்
தோழர்களை நோக்கி, 'ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில்
ஒருவரால் ஓத முடியாதா?' என்று கேட்டார்கள். அதனைச் சிரமமாகக் கருதிய
நபித்தோழர்கள், 'எங்களில் யாருக்கு இந்தச் சக்தி உண்டு, இறைத்தூதர்
அவர்களே!'' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்
ஒருவனே. அல்லாஹ் தேவையற்றவன்' (என்று தொடங்கும் 112 வது அத்தியாயம்)
குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும்' என்று கூறினார்கள்.
1814. ஆயிஷா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் தங்களின் படுக்கைக்கு
(உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து, அதில்
'குல் ஹுவல்லாஹு அஹத்', 'குல் அஊது பிரப்பில் ஃபலக்', ' குல் அஊது
பிரப்பின்னாஸ்' ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி
ஊதிக்கொள்வார்கள். பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம்
உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து,
பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக்
கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.
குர்ஆன் ஓதும்போது மனஅமைதியும் வானவர்களும் இறங்குதல்.
1815. உசைத் இப்னு ஹுளைர்(ரலி) அறிவித்தார் நான் இரவு நேரத்தில் (என்
வீட்டில்) 'அல்பகரா' எனும் (2 வது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தேன்.
என்னுடைய குதிரை எனக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. திடீரென அந்தக்
குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்திக் கொண்டேன்.
மீண்டும் ஓதினேன். குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை
நிறுத்தினேன். குதிரை அமைதியாகிவிட்டது. பிறகு ஓதினேன். அப்போது குதிரை
(முன் போன்றே) மிரண்டது. நான் ஓதுவதை நிறுத்தினேன். குதிரையும்
அமைதியானது. மீண்டும் நான் ஓதியபோது குதிரை மிரண்டது. நான் திரும்பிப்
பார்த்தேன் அப்போது என் மகன் யஹ்யா குதிரைக்குப் பக்கத்தில் இருந்தான்.
அவனை அது (மிதித்துக்) காயப்படுத்தி விடுமோ என்று அஞ்சினேன். எனவே, அவனை
(அந்த இடத்திலிருந்து) இழுத்துவிட்டு வானை நோக்கித் தலையைத் தூக்கினேன்.
அங்கு (விளக்குகள் நிறைந்த மேகம் போன்றதொரு பொருள் வானில் மறைந்தது.
அதனால்) அதைக் காணமுடியவில்லை. காலை நேரமானதுபோது நான் நபி(ஸல்)
அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம் 'இப்னு ஹுளைரே!
தொடர்ந்து ஓதியிருக்கலாமே! இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே (ஏன்
ஓதுவதை நிறுத்தினீர்கள்?)'' என்று கேட்டார்கள். நான், என் மகன் யஹ்யாவைக்
குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன். இறைத்தூதர் அவர்களே! அவன் அதன்
பக்கத்தில் இருந்தான். எனவே, நான் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு அவன்
அருகில் சென்றேன். பிறகு, நான் வானை நெருங்கியபோது அங்கு மேகம் போன்றதொரு
பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள்
இருந்தன. உடனே நான் வெளியே வந்(து பார்த்)தபோது அதைக் காணவில்லை'' என்று
சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அது என்னவென்று நீ அறிவாயா?' என்று
கேட்டார்கள். நான், 'இல்லை (தெரியாது)'' என்று சொன்னேன். நபி(ஸல்)
அவர்கள் 'உன் குரலைக் கேட்டு நெருங்கிவந்த வானவர்கள் தாம் அவர்கள். நீ
தொடர்ந்து ஓதிக்கொண்டிருந்திருந்தால் காலையில் மக்களும் அதைப்
பார்த்திருப்பார்கள்; மக்களை விட்டும் அது மறைந்திருக்காது'' என்று
கூறினார்கள். இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் தமக்குக்
கிடைத்துள்ளதாக அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னுல் ஹாதி(ரஹ்)
கூறினார்கள்.
1816. இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக்கூடாது. 1.
ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுத் தந்தான். அவர் அதனை இரவு, பகல்
எல்லா நேரங்களிலும் ஓதிவருகிறார். இதைக் கேள்விப்பட்டு அவரின் அண்டை
வீட்டுக்காரர், 'இன்னாருக்குக் வழங்கப்பட்டது போல் எனக்கும்
வழங்கப்பட்டிருந்தால் நானும் அவர் செயல்படுவது (ஓதுவது) போல்
செயல்பட்டிருப்பேனே (ஓதியிருப்பேனே)!'' என்று கூறுகிறார். 2. இன்னொரு
மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அவர் அதனை நேர் வழியில்
செலவிட்டு வருகிறார். (இதைக் காணும்) ஒருவர், 'இன்னாருக்கு வழங்கப்பட்டது
போல் எனக்கும் (செல்வம்) வழங்கப்பட்டிருக்குமானால் அவர் (தர்மம்) செய்தது
போல் நானும் செய்திருப்பேனே'' என்று கூறுகிறார் என்று இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
குர்ஆனைத் தாமும் கற்று அதனைப் பிறருக்கும் கற்பித்தவரே உங்களில்
சிறந்தவர்.
1817. குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களில்
சிறந்தவர் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை உஸ்மான்(ரலி)
அவர்களிடமிருந்து அபூ அப்திர் ரஹ்மான் வழியாக ஸஅத் இப்னு உபைதா(ரஹ்)
அறிவித்தார். உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் அபூ
அப்திர்ரஹ்மான்(ரஹ்) (மக்களுக்கு) குர்ஆனைக் கற்றுக் கொடுத்துவந்தார்கள்.
ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் (இராக்கின் ஆட்சியாளராக) ஆகும் வரையில் இது
தொடர்ந்து. அபூ அப்திர்ரஹ்மான் அவர்கள், '(குர்ஆனின் சிறப்பு குறித்துக்
கூறப்பட்ட) இந்த நபிமொழியே என்னை (மக்களுக்குக் கற்றுத்தரும்) இந்த
இடத்தில் உட்கார வைத்தது'' என்று கூறினார்கள்.
1818. குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதைக் கற்றுக் கொடுத்தவரே
உங்களில் சிறந்தவர் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என
உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அறிவித்தார்.
குர்ஆனை நினைவுப்படுத்திக் கொள்வதும் அதனுடனான தொடர்பைப் புதுப்பித்துக்
கொள்வதும்.
1819. குர்ஆனை(ப் பார்த்தோ மனப்பாடமாகவோ) ஓதுகிறவரின் நிலையெல்லாம்,
கயிற்றால் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தின் உரிமையாளரின் நிலையை
ஒத்திருக்கிறது. அதனை அவர் கண்காணித்து வந்தால் தன்னிடமே அதை அவர்
தக்கவைத்துக் கொள்ளலாம். அதை அவிழ்த்து விட்டுவிட்டாலோ அது
ஓடிப்போய்விடும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு
உமர்(ரலி) அறிவித்தார்.
1820. ''இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான் மறந்துவிட்டேன்'' என்று ஒருவர்
கூறுவதுதான் அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தைகளிலேயே
மிகவும் மோசமான வார்த்தையாகும். வேண்டுமானால், 'மறக்க வைக்கப்பட்டு
விட்டது' என்று அவர் கூறட்டும்! குர்ஆனைத் தொடர்ந்து (ஓதி) நினைவுபடுத்தி
வாருங்கள். ஏனெனில், ஒட்டகங்களை விடவும் வேகமாக மனிதர்களின்
நெஞ்சங்களிலிருந்து குர்ஆன் தப்பக்கூடியதாகும் என்று இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
இந்த நபிமொழி, வேறு சில அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
1821. குர்ஆனை (ஓதி அதை)க் கவனித்து வாருங்கள். ஏனெனில், என் உயிர் எவன்
கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! கயிற்றில் கட்டிவைக்கப்பட்டுள்ள
ஒட்டகத்தை விட மிக வேகமாகக் குர்ஆன் (நினைவிலிருந்து) தப்பக்கூடியதாகும்
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா(ரலி)
அறிவித்தார்.
1822. கத்தாதா(ரஹ்) அறிவித்தார் ''நபி(ஸல்) அவர்களின் ஓதுதல் முறை
எப்படியிருந்தது?' என அனஸ்(ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள்,
'நீட்டி ஓதலே அவர்களின் வழக்கம் என்று கூறிவிட்டு, 'பிஸ்மில்லாஹிர்
ரஹ்மானிர் ரஹீம்' என்பதில் 'பிஸ்மில்லா..ஹ்' என நீட்டுவார்கள்,
'அர்ரஹ்மா..ன்' என்றும் நீட்டுவார்கள். 'அர்ரஹீ...ம்' என்றும்
நீட்டுவார்கள்'' என்று பதிலளித்தார்கள்.
இனிய குரலில் குர்ஆனை ஓதுதல்.
1823. அபூ மூஸா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில்
குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) 'அபூ மூஸா! (இறைத்தூதர்) தாவூத் (அலை)
அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும்
வழங்கப்பட்டுள்ளது'' என என்னிடம் கூறினார்கள்.
1824. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் பாரம்பரியமிக்க ஒரு
பெண்ணை என் தந்தை எனக்கு மணமுடித்து வைத்தார்கள். (என் தந்தை) அமர்(ரலி)
தம் மருமகளை அணுகி அவளுடைய கணவர் குறித்துக் கேட்பது (அதாவது என்னைப்
பற்றி விசாரிப்பது) வழக்கம். அப்போது அவள், 'அவர் நல்ல மனிதர் தாம்;
(ஆனால்,) அவர் படுக்கைக்கு வரவுமில்லை. அவரிடம் நான் வந்து சேர்ந்தது
முதல் எனக்காகத் திரைச் சீலையை அவர் இழுத்து மூடவுமில்லை'' என்று
சொல்வாள். இதே நிலை நீடித்தபோது, (என் தந்தை) அம்ர்(ரலி) நபி(ஸல்)
அவர்களிடம் (இதைப் பற்றிக்) கூறினார்கள். அப்போது, 'என்னை வந்து
சந்திக்குமாறு உங்கள் மகனிடம் சொல்லுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள். பிறகு நான் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்தேன்.
அப்போது அவர்கள், 'நீ எப்படி நோன்பு நோற்கிறாய்?' என்று கேட்டார்கள்.
நான், 'தினந்தோறும் நோன்பு நோற்கிறேன்'' என்று சொன்னேன். (''குர்ஆனை)
எப்படி ஓதி முடிக்கிறாய்'' என்று கேட்டார்கள். நான், 'ஒவ்வோர் இரவிலும்
(குர்ஆனை ஓதி முடிக்கிறேன்)'' என்று சொன்னேன். அவர்கள், 'மாதந்தோறும்
மூன்று நாள்கள் நோன்பு நோற்றுக்கொள். குர்ஆனை ஒவ்வொரு மாதமும் (ஒரு முறை
முழுமையாக) ஓதிக்கொள்'' என்று கூறினார்கள். 'நான் இதைவிட அதிகமாக (நோன்பு
நோற்க) சக்தி பெற்றுள்ளேன்'' என்று கூறினேன். 'இரண்டு நாள்கள் நோன்பை
விட்டுவிட்டு, ஒரு நாள் நோற்றுக்கொள்!'' என்று கூறினார்கள். நான்
இதைவிடவும் அதிகமாக (நோன்பு நோற்க) சக்தி பெற்றுள்ளேன்'' என்று கூறினேன்.
நபி(ஸல்) அவர்கள், '(இறைத்தூதர்) தாவூத்(அலை) அவர்களின் உயர்ந்த நோன்பு
வழக்கப்படி, ஒரு நாள்விட்டு ஒரு நாள் நோன்பு நோற்றுக் கொள்! மேலும்,
ஒவ்வோர் ஏழு இரவுகளிலும் (ஒரு முறை குர்ஆனை) ஓதி(முடித்து)க் கொள்''
என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வழங்கிய இந்தச் சலுகையை
நான் ஏற்று நடந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்! காரணம் நான் (இப்போது)
தள்ளாமை வயதையடைந்து மிகவும் பலவீனம் அடைந்துவிட்டேன்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) கூறினார்கள்:) அப்துல்லாஹ்
இப்னு அம்ர்(ரலி) (தம் முதுமையில்) குர்ஆனில் ஏழில் ஒரு பாகத்தை (அதாவது
ஒரு மன்ஸிலை) தம் வீட்டாரில் சிலரிடம் பகலில் ஓதிக் காட்டுவார்கள்.
(இரவில்) ஓதவேண்டுமென அவர்கள் விரும்பிய பாகத்தையே (இவ்வாறு) பகலில்
ஓதிக் காட்டுவார்கள். இரவில் (ஓதும்போது) சுபலமாக இருக்கட்டும் என்பதே
இதற்குக் காரணம். அன்னார் (நோன்பு நோற்க) சக்தி பெறவேண்டும் என
விரும்பும் போது, பல நாள்கள் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு அந்நாள்களைக்
கணக்கில் வைத்துக் கொள்வார்கள். பிறகு (வசதிப்படும்போது) அதே அளவு
நாள்கள் நோன்பு நோற்பார்கள். நபி(ஸல்) அவர்களிடமிருந்து பிரிந்தபோது (-
நபியவர்கள் இறந்தபோது) தாம் செய்து வந்த எந்த வழிபாட்டையும் கைவிடுவதை
அன்னார் விரும்பாததே இதற்குக் காரணம்.
1825. உங்களிடையே ஒரு கூட்டத்தினர் கிளம்புவார்கள். அவர்களின்
தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களின் நோன்புடன் உங்களுடைய
நோன்பையும், அவர்களின் நற்செயல்களுடன் உங்களின் நற்செயல்களையும்
ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகை, நோன்பு மற்றும் நற்செயல்களை
அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு
களைகட்டியிருக்கும்.) மேலும், அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது
அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப்
பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபுறம்)
வெளிப்பட்டு சென்று விடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள்
வெளியேறி விடுவார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து
வெளிவந்ததற்கான அடையாளம் ஏதுமிருக்கிறதா என்று) அம்பின் முனையைப்
பார்ப்பார். அதில் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். பிறகு அம்பின்
(அடிப்பாகக்) குச்சியைப் பார்ப்பார். அதிலும் (அடையாளம்) ஏதும்
காணமாட்டார். அம்பி(ன் முனையி)ல் நாணைப் பொருத்தும் இடம் தொடர்பாகவும்
(அது வேட்டைப் பிராணியைத் தைத்ததா) என்று சந்தேகம் கொள்வார். (அந்த
அளவிற்கு அம்பில் எந்தத் சுவடும் இராது.) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
1826. குர்ஆனை ஓதி அதன்படி செயலும் ஆற்றக்கூடிய இறைநம்பிக்கையாளர்
எலுமிச்சை போன்றவர்; அதன் சுவையும் நன்று. வாசனையும் நன்று. குர்ஆனை
ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், பேரீச்சம் (பழம்) போன்றவர்.
அதன் சுவை நன்று. (ஆனால்,) அதற்கு மணமில்லை. குர்ஆனை ஓதுகிற நயவஞ்சகனின்
நிலை, துளசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று. அதன்
சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை, குமட்டிக்காய்
போன்றதாகும். அதன் சுவையும் 'கசப்பானது' அல்லது 'அருவருப்பானது' அதன்
வாடையும் வெறுப்பானது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ
மூஸா(ரலி) அறிவித்தார்.
1827. உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஒதுங்கள்.
(அதன் கருத்தை அறிவதில்) நீங்கள் கருத்து வேறுபட்டால் அ(ந்த
இடத்)தைவிட்டு எழுந்து (சென்று) விடுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறினார்கள் என ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். இது மற்ற
அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.


மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான உணவு ஆட்டுப் பாலும்  வேர்க்கடலையும். வேர்க்கடலையில் அப்படியென்ன இருக்கிறது? என்று  கேட்கிறீர்களா? உங்களுடைய கேள்விகளுக்கான பதிலை பிரபல ஊட்டச்சத்து நிபுணர்  அனிதா அவர்கள், “சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், புற்றுநோய், நரம்புமண்டல  நோய்கள், ஞாபக மறதி நோய் போன்ற பல நோய்களைத் தடுக்கும் சக்தி  வேர்க்கடலைக்கு உள்ளது” என்றார்.
தஞ்சை “பாரத் காலேஜ் ஆஃப் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட்” – இல் 5  ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டச்சத்துத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த  அவர், தற்போது இருப்பது வேலூர் பாகாயம் பகுதியில். ஊட்டச் சத்து ஆலோசகரான  அவரிடம் பேசியதிலிருந்து…

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்?


வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு  வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். வேர்க்கடலை, கடலை எண்ணெயைப்  பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம்  பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு.  உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச்  சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல,  30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை  வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.
சர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது?
நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு  சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து  வைத்திருக்கிறார்கள். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள்.
வேர்க்கடலையில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. அதாவது, வேர்க்கடலை  சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக்  குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப்  பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம். மேலும் வேர்க்கடலையில் உள்ள  மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும்  தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.
வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன?
ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது.  வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்க்கடலை சாப்பிடுவதால்  ரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.
வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. உடல் பருமன் குறையும்.
இன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், “சாப்பிட்டது போதும்” என்ற  திருப்தி மிக விரைவில் வந்துவிடும். எனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு  முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. இதனால்  சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும். அடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது  கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.
வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை  அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது.  இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக்  கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம்  சாப்பிட வேண்டும்.
வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன. அவை மனித உடலில்  புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக  மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப்பை புற்றுநோய்  போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப்  பொருட்கள் அழித்துவிடுகின்றன.
வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச்  சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை  விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.
நாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின்  வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன. இந்த  நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள். இப்படி வளர்சிதை மாற்றம்  நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக்  கொண்டிருக்கும். பின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.
ஆனால் வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள்  இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை  கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி  வெளியேறிவிடும்.
வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள்  குறைந்துவிடும். பார்க்கின்ஸன், அல்ஸ“மர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல்  தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள்  நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள்  நன்றாகக் செயல்படுகின்றன.
இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது.
வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே? அது உடலுக்குக் கெடுதி இல்லையா?
தண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி  சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும். இதை  நீரின் கொதிநிலை என்பார்கள். அதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக்  பாயிண்ட் என்பார்கள்.
எண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.
கடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம். பிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது.
ஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320. இதனால் கடலை எண்ணெய்யைச்  சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதிநிலையை அடையாது. அதாவது  கெட்ட கொழுப்புகள் உருவாகாது. அதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல  கொழுப்பு அப்படியே இருக்கும். இப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெயை  சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா?
ஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.
சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு  இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும்  சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால்  உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய  வாய்ப்பு உள்ளது.
வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?
வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ,  வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச்  சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும்.  ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.
ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.
வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த  வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின்  என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது.  எனவே புத்தம் புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.
-kadayanllur.org