அல்ஹதீஸ் ஒரு பார்வை

, , No Comments
அல்ஹதீஸ் ஒரு பார்வை
‘அல்-ஹதீஸ்” என்பது அண்ணல் (நபி) அவர்கள்
சொன்னவை (கவ்லீ)
செய்தவை (பிஃலீ)
அங்கீகரித்தவை (தக்ரீரி)
இவை அனைத்தும் ஹதீஸ் எனப்படும்.
இது திருக்குர் ஆனுக்கும் ஒரு விளக்கமாக அமைந்துள்ளது. இறை வேதத்துக்கு அடுத்தபடியாக கொள்ளத்தக்கது இதுவேயாகும்.
ஹதீஸ் இரு வகைப்படும்
அவை:
1. ஹதீஸ் குத்ஸீ:
இறைவனின் கருத்தை ஜிப்ரீல் (அலை) தம் சொல்லால் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கூறியதாகும்.
2. ஹதீஸ் நபவீ:
அண்ணல் நபி அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் ஹதீஸ் நபவீ என்றும் (ஹதீஸ் கைர குத்ஸீ என்றும்) வழங்கப்படும்.
முதலில் ஹதீஸ்கள் ஏன் நூல் வடிவில் தொகுக்கப்படவில்லை?
இறைவசனற்களோடு நபிமொழிகள் ஒன்றறக் கலந்து விடக்கூடாது என்பதற்காகவும், எல்லாப் பிரச்சனைகளுக்கும் பரிகாரம் கூறக்கூடிய அல்லாஹ்வின் திருத்தூதர் மக்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்ததாலும், ஆயிரக்கணக்கான மக்களின் உள்ளங்களில் பதிந்திருந்தாலும் ஆரம்பகாலத்தில் ஹதீஸ்கள் நூல்வடிவில் தொகுக்கப்படவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
பின்னர் தொகுக்கப்பட வேண்டிய அவசியம் என்ன?
நபிகள் நாயகத்தின் மறைவிற்க்குப் பிறகு இலட்சக்கணக்கான ஹதீஸ்களை மனனம் செய்த நாயகத்தோழர்கள் மார்க்கப் பிரச்சாரத் திற்காக பல்வேறு நாடுகளுக்குப் பயணமாகிக் கெண்டிருந்தார்கள். பலர் இஸ்லாமியப் போர்களில் கலந்து கொண்டு இறப்பெய்திக் கொண்டுமி ருந்தார்கள். அதனால் நபிமொழிகள் தொகுக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
“நான் சொல்லாதவற்றை சொன்னதாக யார் சொல்கிறார்களோ அவர்கள் தங்கள் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்.”
என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையால் அபூபக்கரு (ரலி), உமர் (ரலி) போன்ற ஸஹாபாக்கள் ஹதீஸ்களை தொகுக்கும் முயற்சியில் முனையவில்லை. பின்னர் இதன் தேவை உணரப்பட்டதும் பல நல்லோர் இதனை தொகுப்பதில் முயற்ச்சிகளை மேற்கொண்டனர்.
இத்துறையில் முதன் முதலில் கவனம் செலுத்தி ஆவனை செய்தவர் இரண்டாவத உமர் என அழைக்கப்படும் கலீபா உமர் இப்னு அப்துல் அஜீஸ்(ரஹ்) ஆவார்.
ஹிஜ்ரி 100 முதல் 200 வரை ஹதீஸ் நூல்கள்
கலீபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களின் ஆணைப்படி அன்று மதீனாவின் கவர்னராக இருந்த ஆபூபக்கர் இப்னு ஹஸம் (ரஹ்) அப்பணியை மேற்கொண்டனர். இமாம்களான இப்னு இஸ்ஹாக், இப்னு ஜூரைஜ், ஸூஃப்யானுத் தவ்ரீ, அப்துல்லாஹ் இப்னு முபாரக், இப்னு ஜரீர் அத்தபரீ, அவ்ஸாயீ, ஹம்மாத், அஸ்ஸூஹ்ரீ, போன்றோர் அப்பணியில் ஈடுபட்டு ஹிஜ்ரி 100 முதல் 200 வறை சிறிதும் பெரிதுமாக சுமார் 20 ஹதீஸ் நூல்களைத் தொகுத்தனர்.
அதன் பிறகு இமாம் மாலிக், இமாம் ஷாபியீ, இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்,ஆகியோர் முறையே முவத்தா, முஸ்னத் ஷாஃபியீ, முஸ்னத் அஹ்மத் போன்ற ஆதாரபூர்வமான ஹதீஸ் நூல்களைத் தொகுத்தனர்
பொற்காலமும் ஆறு திரட்டுகளும்
அதன் பிறகு ஸிஹாஹ் ஸித்தா என்னும் ஆறு திரட்டுகளை உருவாக்கிய இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், இமாம் அபூ தாவூது, இமாம் திர்மிதீ, இமாம் நஸயீ, இமாம் இப்னு மாஜா ஆகியோர் இப் பெரும் பணியில் ஈடுபட்டனர். இவர்களின் காலமே ஹதீஸ் கலையின் பொற்காலமாகும்.
அரசியல் காரணங்களுக்காகவும், இஸ்லாத்திற்கு ஊறுவிளைவிக்க வேண்டுமென்ற குரோத நோக்கத்துடனும் பல்லாயிரக்கணக்கான பொய்யான ஹதீஸ்களை புனைந்து உண்மையான ஹதீஸ்களுடன் கலந்துவிடப்பட்டி ருந்ததால் பொய்யான ஹதீஸ்களில் இருந்து உண்மையான ஹதீஸூகளை தரம் பிரிப்பது இவர்களுக்கு மிகவும் கடினமான வேலையாக இருந்தது.
நம் முன்னோர்கள் ஹதீஸ்களை ஒருவரிடம் கேட்டார்கள், உடனே எழுதிவைத்துவிட்டுப் போய்விட்டார்கள் என்ற அளவில் ஹதீஸ்கள் தொகுக்கப்படவில்லை.
உதாரணமாக நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாக கேட்டவர் யார்? அவரிடம் கேட்டவர் யார்? என்று கடைசிவரை அறிவித்தவர் யார்? அவர்களின் நினைவாற்றல், நல்லொழுக்கம், பிறப்பு, இறப்பு, வரலாறு ஆகியவற்றை ஐயமறத் தெரிந்து தெளிந்து தேர்ந்த பின்னரே ஒரு ஹதீஸை தேர்ந்தெடுக்கப்படும்.
இவ்வாறு பல்லாண்டுகள் ஆயிரக்கணக்கான மைல்கள் கால்நடை யாகப் பயணம் செய்து பல இலட்சம் ஹதீஸ்களை சேகரித்து தங்களின் கடினமான விதிகளால் அவற்றிலிருந்து சில ஆயிரம் ஹதீஸ்களை தேர்வு செய்தனர். (தொடரும்)

0 comments:

Post a Comment