ஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள்!!! ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்...

இன்றைய சூழ்நிலையில் நமது சமதாயம் விழிப்புணர்வுடன் இருக்க பல்வேறு இணையதளத்திலும் , ஈமெயிலிலும் வந்த பல செய்தி/ கட்டுரைகளை இங்கே சமர்ப்பித்துள்ளோம். இதனை அனைவருக்கும் எத்தி வைக்க இறைவனுக்காக கேட்டுக்கொள்கிறோம்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில், பயிலும் நமது இஸ்லாமிய சகோதரிகளிடம் கனிவாகப்பேசி, காதல் வயப்படுத்தி காபிர்களாக ஆக்க வேண்டும். வாழ்வை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கயவர் கூட்டங்கள் நீண்ட சதியின் அடிப்படையில் செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்த ஒன்றே. தற்பொழுது இந்த சதிவேலை பெருகி வருகின்றது என்பதனை ஒரு எச்சரிக்கையாக உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம். சமீபத்தில் இந்து முன்ணனி தலைவர் இராமகோபாலன் "ஒரு முஸ்லிம் பெண்னை காதலித்து, ஹிந்துவாக்கி மணம் புரியும் ஆணுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு" என அறிவித்துள்ளான். அத்துடன் எப்படி முஸ்லிம் பெண்களை தங்கள் காதல் வலையில் வீழ்த்தி அவர்களின் கற்பை சூறையாடுவது என்ற பயிற்சியும் இந்து இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் என்றுமில்லாத வகையில் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது.


இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இதுவரை நமது கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மட்டும் பல முஸ்லிம் பெண்கள மாற்று மத ஆண்களுடன் ஓடிப்போய் இந்துவாக மதம் மாறி திருமண ம் முடித்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இதற்கு இந்து அமைப்புக்களும், ஓட்டைகள் பல கொண்ட நமது சட்டமும் துனை போகின்றது.

முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும் , நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்தாமல் உடனே செய்ய வேண்டும்.இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள் :

1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.

2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.

3. மொபைல் போனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவனிக்காமல் இருப்பது.

4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.

5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.

6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது.

7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது

8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:-

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:

இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன்: 24:37)

நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்;) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்;) இருக்கின்றதோ அத்தகய;)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)

1.அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது;) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.

2.ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

3.தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்;) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.

4.வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனiவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.

5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கித் தற வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.

6.வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைகாரர் என யாருக்கும் தர வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை தர வேண்டாம்.

7.தெரியாத எண்களில் இருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளாச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள். ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர் அன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்பக்களோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.

8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்பததினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.

9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன் , பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.

10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை தராதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என் அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நன்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்னிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.

11. தோழிகள் துனைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நன்பர்களுடன் நீங்கள் வெளியே செலவதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.

12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெரிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் - இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.

14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முiறாயன ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்ஸியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.

15. வட்டிக்கு வாங்குவது. தவணை முறையில் வாங்குவது (பைனான்ஸ்;) போன்வற்றை தவிருங்கள்,

அந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை :

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காவி கூட்டத்தால் பயிற்றுவிக்கப்பட்ட காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உரவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.

ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றால். இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவிக்கும் அந்த காவி காமுகன் பின்னர் இவளை தங்கள் கூட்டத்தினருக்கு இரையாக்குகின்றான். அவளது கர்ப்பை சுவைத்தபின்னர் சக்கையான இவள் தூக்கி வீசப்படுகின்றாள். இறுதியல் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றால்.

இவள் நம்பிச் சென்ற காவி காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான் ஏனென்றால் இவனுக்கு இந்து முன்னனி போன்ற அமைப்புகள் ஒரு முஸ்லிம் பெண்னிற்கு 1 லட்சம் என்றும் எந்த போலிஸ் கேஸ் ஆனாலும் பார்த்தும் விடுகின்றார்கள். ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உரவினர்களை துறந்து சென்ற பெண்ணின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.

இது போன்ற காமுகர்களின் இச்சைக்கு ஆளாகி கணவனின் செல்வத்தோடும், நகைகளோடும் குழந்தைகளை கூட விட்டு விட்டு ஓடிப்போகும் பெண்னின் நிலை...???
You need Adobe Flash Player to view this content.

நோன்பின் அவசியம்
   
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள்மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)
ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். (2:185)
நோன்பின் நோக்கம்
   
யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணுவதையும் பருகுவதையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்:புகாரி, அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்போது யாரேனும் அவரிடம் முட்டாள் தனமாக நடந்து கொண்டால் ‘நான் நோன்பாளி’ என்று அவர் கூறி விடட்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: திர்மிதீ
  
   
நோன்பின் சிறப்பு
   
ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் நூறு மடங்குவரை கூலி கொடுக்கப்படுகின்றது. ‘நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறு மணத்தை விட சிறந்ததாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ
   
சுவர்க்கத்தில் ‘ரய்யான்’ என்றொரு வாசல் உள்ளது. அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டும்) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது. அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ
   
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறவனை சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ
   
காலம் முழுவதும் நோற்றாலும் ஈடாகாது
   
அல்லாஹ் அனுமதித்த காரணங்களின்றி எவர் வேண்டுமென்றே ரமழானின் ஒரு நோன்பை விட்டாலும் அதற்குப் பகரமாக காலம் முழுதும் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது. ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜ்ஜா
   
நோன்பு நோற்க கடமைபட்டவர்கள்,
நோன்பிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள்
   
எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பை) பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை (அல்குர்ஆன் 2:185)
   
பயணம் மேற்கொண்டதும் அவர் நோன்பை விட்டுவிடும் சலுகையைப் பெறுகிறார்.
   
பழைய மிஸ்ர் எனும் நகரில் நான் அபூபுஸ்ரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுடன் கப்பலில் ஏறினேன். அவர்கள் புறப்படலானார்கள். பிறகு காலை உணவைக் கொண்டு வரச் செய்து ‘அருகில் வாரும்’ என்றார்கள். அபோது நான் நீங்கள் ஊருக்குள்ளே தானே இருக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள் நபி صلى الله عليه وسلم அவர்களின் சுன்னத்தை (வழிமுறையை) நீர் புறக்கணிக்க போகிறீரா என்று திருப்பிக் கேட்டார்கள் என உபைத் பின் ஜப்ர் என்பார் அறிவிக்கிறார்கள். நூல்கள்:அஹமது, அபூதாவூத்
மக்கா மாநகரம் வெற்றிக் கொள்ளப்பட்ட ஆண்டு ரமழான் மாதத்தில் நபி صلى الله عليه وسلم அவர்கள் அங்கு புறப்பட்டனர், குராவுல் கமீம் என்ற டத்திற்குச் செல்லும் வரை அவர்கள் நோன்போடு சென்றார்கள். மக்களும் நோன்போடு ருந்தனர். பின்னர் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒரு கோப்பையில் நீர் கொணரச் செய்து மக்கள் அனைவரும் பார்க்கும் அளவுக்கு கோப்பையை உயர்த்தி, மக்கள் அதனைப்பார்த்த பின்னர் அதனைப் பருகினார். தன் பின் மக்களில் சிலர் நோன்போடு ருப்பதாக நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் “அத்தகையோர் பாவிகளே! அத்தகையோர் பாவிகளே!” என்று கூறினர். (ஜாபிர்رَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம், திர்மிதீ)
   
“இதன் பிறகு நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் பிரயாணத்தில் நோன்பு நோற்றிருக்கிறோம்” என்று அபூஸயீத் அல் குத்ரீُ அறிவிக்கும் ஹதீஸ் நூல்கள்: முஸ்லிம், அஹமது, அபூதாவூத்
   
மக்கா வெற்றிக்கு பின்னர் மேற்கொண்ட பிரயாணத்தில் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் நோன்பு நோற்றதாக அபூஸயீத் அல் குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ குறிப்பிடுவதால் பிரயாணத்தில் நோன்பு வைக்கத் தடையில்லை என்பதையும் பிரயாணத்திற்குரிய சலுகையே இது என்பதையும் அறியலாம்.
மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள்
   
நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பைக் களா செய்யுமாறு நபி صلى الله عليه وسلم அவர்கள் எங்களுக்கு கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் களாச் செய்யுமாறு கட்டளையிடமாட்டார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா
   
கர்ப்பிணிகள், பாலூட்டும் அன்னையர்
   
கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் நோன்பிலிருந்து நபி صلى الله عليه وسلم அவர்கள் சலுகையளித்தனர். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், நஸயீ, அஹமது, இப்னுமாஜ்ஜா
சலுகை என்பது ரமளானில் விட்டு விட்டு வேறு நாட்களில் நோற்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
   
நோயாளிகள், முதியவர்கள்
   
நோன்பு நோற்க இயலாத நோயாளிகளும் நோன்பை விட்டுவிட சலுகை வழங்கப்பட்டுள்ளர். முதியவர்களும் நோன்பை விட்டு விட சலுகை பெற்றுள்ளனர். நோன்பு நோற்க சக்தி பெற்றவர்கள் மீது ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற வசனம் பற்றி இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறும்போது, இது மாற்றப்படவில்லை. நோன்பு நோற்க சக்தியிழந்த முதிய கிழவரும், கிழவியும் ஒவ்வொரு நாளுக்கு ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளனர். நூல்: புகாரி
   
நோன்பின் நேரம்
   
சுப்ஹு நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது சுப்ஹு நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருக்க வேண்டும்.
ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர் இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். (2:187)
      
ஸஹர் உணவு
   
நீங்கள் ஸஹர் உணவு உண்ணுங்கள், ஏனெனில் ஸஹர் உணவில் நிச்சயமாக பரகத் உள்ளது என்பது நபிமொழி. அறிவிப்பவர்:அனஸ் பின் மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ
    
நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு பிறகு (சுப்ஹு) தொழுகைக்கு ஆயத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறினார்கள். (ஸஹர் முடித்து சுப்ஹு வரை) எவ்வளவு நேரம் இருக்கும் என்று அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு (நேரம்) என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, திர்மிதீ
   
(ஐம்பது வசனங்களை நிறுத்தி நிதானமாக ஓத பத்து நிமிடங்களுக்கு மேல் செல்லாது.)
   
ஸஹருக்காக அறிவிப்புச் செய்தல்
   
மக்கள் உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால் மக்களுக்கு இது பற்றி அறிவிப்புச் செய்து விழிக்கச் செய்வது நபி வழியாகும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் பிலால் رَضِيَ اللَّهُ عَنْهُ, அப்துல்லாஹ் பின் உம்மி மக்தும் رَضِيَ اللَّهُ عَنْهُ ஆகிய இரண்டு முஅத்தின்களை நியமனம் செய்திருந்தார்கள். பிலால் அவர்கள் ஸஹரின் கடைசி நேரத்தில் பாங்கு சொல்வார். இது பஜ்ரு தொழுகைக்கானது அல்ல. மக்கள் ஸஹர் செய்வதற்கான அறிவிப்பாகும். அதன் பின்னர் பஜ்ரு நேரம் வந்ததும் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் மற்றொரு பாங்கு சொல்வார். இது பஜ்ரு தொழுகைக்கான அழைப்பாகும்.
   
பிலாலின் பாங்கு உங்களை ஸஹர் செய்வதிலிருந்து தடுக்காது. அவர் நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும், உறங்குபவர் விழிப்பதற்காகவுமே இரவில் பாங்கு சொல்வார். நபிமொழி அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்
   
பிலால் இரவில் பாங்கு சொல்வார். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்வது வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்!. ஆயிஷா வழியாகவும், இப்னு உமர் வழியாகவும் அறிவிக்கப்படுகிறது. நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ
   
பாங்கு மூலம் மக்களை விழித்தெழச் செய்யும் இந்த சுன்னத் இன்று நடமுறையில் இல்லை. முஸ்லிம்கள் இந்த சுன்னத்தை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்.
   
விடி ஸஹர்
  
விடி ஷஹர் என்ற பெயரில் சிலர் உறங்கிவிட்டு சுப்ஹு நேரம் வந்ததும் விழித்ததும் அவசர அவசரமாக எதையாவது சாப்பிட்டு நோன்பு நோற்கிறார்கள். இது நோன்பாகாது. இந்தப் பழக்கம் தவறானதாகும். ஏனெனில் பஜ்ரு நேரம் வந்து விட்டால் எதையுமே சாப்பிடக்கூடாது என்று குர்ஆனில் கட்டளை உள்ளது. எனவே தாமதமாக விழிப்பவர்கள் எதையுமே உண்ணாமல், பருகாமல் நோன்பைத் தொடர வேண்டும்.
   
பசி முன்னிற்கும்போது
   
உங்களில் ஒருவர் உணவில் இருக்கும்போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டாலும் உணவுத் தேவையை முடிக்கும் வரை தொழுகைக்கு விரையவேண்டாம். என்பது நபிமொழி அறிவிப்பவர்: இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
   
மலஜலத்தை அடக்கிய நிலையிலும் உணவு முன்னே இருக்கும்போதும் எந்தத் தொழுகையும் இல்லை என்பது நபிமொழி அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்
   
மறதியாக உண்பதும், பருகுவதும்
   
ஒருவர் நோன்பாளியாக இருக்கும்போது மறந்து சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும், பருகவும் அளித்துள்ளான். நபிமொழி அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜ்ஜா
   
வேண்டுமென்றே நோன்பை முறிப்பவர்
   
வேண்டுமென்றே நோன்பை முறிப்பவர்கள் அந்த நோன்புக்கு ஈடாக ஒரு அடிமையை விடுதலை செய்யவேண்டும். இயலாதவர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்கவேண்டும். அதற்கும் இயலாதவர்கள் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
   
ஒரு மனிதர் صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்” என்றார். என்ன அழிந்து விட்டீர்? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் அவரிடம் கேட்டார்கள். “ரமலானில் என் மனைவியுடன் உறவு கொண்டு விட்டேன்” என்று அவர் கூறினார். ஒரு அடிமையை விடுதலை செய்ய இயலுமா? என்று அவரிடம் நபி صلى الله عليه وسلم கேட்டார்கள். அவர் ‘இயலாது’ என்றார். அப்படியானால் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க இயலுமா? என்று கேட்டார்கள். அவர் இயலாது என்றார். அப்படியானால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க இயலுமா? என்று கேட்டார்கள். அதற்கும் இயலாது என்றார்.
   
பின்னர் அவர் (அங்கேயே) அமர்ந்துவிட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்களிடம் பேரிச்சம் பழம் நிரம்பிய சாக்கு ஒன்று கொண்டு வரப்பட்டது. நபி صلى الله عليه وسلم அவர்கள் அதை அவரிடம் வழங்கி ‘இதை தர்மம் செய்வீராக’ என்றனர். அதற்கவர் “எங்களைவிட ஏழைகளுக்கா? இந்த மதீனாவுக்குள் எங்களைவிட ஏழைகள் எவருமில்லையே” என்றார். அதை கேட்ட நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவு சிரித்தார்கள். நீர் சென்று உமது குடும்பத்தாருக்கு இதை வழங்குவீராக எனவும் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜ்ஜா
   
குளிப்பு கடமையானவர் நோன்பு நோற்பது
   
நபி صلى الله عليه وسلم அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டுவிட்டு குளிக்காமலே நோன்பு நோற்பார்கள். சுபுஹ் வேளை வந்ததும் தொழுகைக்காக குளிப்பார்கள்; என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பல உள்ளன.
நபி صلى الله عليه وسلم அவர்கள் உடலுறவின் மூலம் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹூ நேரத்தை அடைவார்கள். ரமழானில் நோன்பு நோற்பார்கள். அறிவிப்பவர்கள்: ஆயிஸா رَضِيَ اللَّهُ عَنْهُ, உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
   
நோன்பாளி குளிக்கலாம், பல் துலக்கலாம்
   
நபி صلى الله عليه وسلم அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டதை நான் பார்த்திருக்கிறேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.
நபி صلى الله عليه وسلم அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னால் எண்ணிச் சொல்ல முடியாத அளவு பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன். அறிவிப்பவர்: அமீர் பின் ரபிஆ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ
   
இரத்தம் குத்தி எடுத்தல்
   
ஆரம்பத்தில் ஜஃபர் பின் அபீதாலிப் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது அவரைக் கடந்து சென்ற நபி صلى الله عليه وسلم அவர்கள் இரத்தம் கொடுத்தவரும், எடுத்தவரும் நோன்பை விட்டுவிட்டனர் என்றார்கள். பிறகு நோன்பாளி இரத்தம் கொடுப்பதை அனுமதியளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ்
رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: தாரகுத்னீ

நபி صلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் நோன்பாளி இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுப்பவர்களாக இருந்தீர்களா? என்று அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் “பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதனை வெறுத்தோம்” என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஸாபித் அல் புன்னாளி நூல்கள்: புகாரி
   
மருத்துவ போன்ற காரனங்களுக்காக நோன்பாளி இரத்தம் கொடுத்தால் நோன்பு முறியாது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
   
நோன்பு துறத்தல்
   
நோன்பு துறத்தலை (தாமதமின்றி) விரைந்து செய்யும்வரை மக்கள் நன்மையைச் செய்பவர்களாகிறார்கள் என நபி صلى الله عليه وسلم கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
   
உங்களில் ஒருவர் நோன்பு துறக்கும்போது பேரித்தம் பழத்தின் மூலம் நோன்பு துறக்கவும்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கவும்! ஏனெனில் தண்ணீர் தூய்மைப்படுத்தக் கூடியதாகும் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா, முஸ்னத் அஹ்மத்

thanks to readislam
Post image for பிறை பார்த்தல்!

மனிதனைப் படைத்த இறைவன் ஆதம்(அலை) அவர்களிலிருந்து மனிதனுக்கு கொடுத்தது இஸ்லாம்| என்ற சாந்தி, நேர்வழி மார்க்கத்தையே. அந்த இஸ்லாம் மார்க்கம் 1432 ஆண்டுகளுக்கு முன்னர் அல்லாஹ்வால் சம்பூரணமாக நிறைவு பெற்றுவிட்டது. அதன் பின்னர் இஸ்லாம் என்ற சாந்தி மார்க்கத்தில் மேல் அதிகமாகச் சேர்ப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த உண்மையை அல்குர்ஆன் 5:3, 3:19,85, 33:36, 59:7 இறைவாக்குகளை விளங்குகிறவர்கள் சந்தேகத்திற்கிடமின்றி ஒப்புக் கொள்வார்கள்.

இறைவனால் நாளை மறுமையில் மார்க்கமாக ஒப்புக் கொள்ளப்படும் இஸ்லாம் என்ற சாந்தி-நேர்வழி மார்க்கத்தில்தான் எவ்வித மாற்றமும் செய்ய யாரும் அனுமதி பெற மாட்டார்களே தவிர, இவ்வுலக வாழ்க்கையில் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மூலம் ஏற்படும் அனுகூலங்ளை, வசதி வாய்ப்புகளை மனிதன் ஏற்று நடப்பதில் மறுப்போ, ஆட்சேபணையோ இஸ்லாம் மார்க்கத்தில் இல்லவே இல்லை.


உதாரணமாக 1432 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாம் என்ற சாந்தி மார்க்கத்தை வஹீ மூலம் அல்லாஹ் அறிவித்து அது மக்களிடையே அல்குர்ஆனாக இருந்து வருகிறது. இது நபி(ஸல்) அவர்களுக்கு ஒலி வடிவில் ஜிப்ரயீல்(அலை) என்ற வானவர் மூலம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. அல்குர்ஆனின் உச்சரிப்பின் அடிப்படையில் அது கூறும் கருத்தின் அடிப்படையில் அதில் எவ்வித மாற்றமும் இல்லாமல், அன்றிருந்த வசதிக்கேற்ப தோலிலும், எலும்புத் துண்டுகளிலும் அரபியில் பதிவு செய்யப்பட்டது. அன்று அரபி லிபி எவ்வாறு இருந்ததோ அதே அரபி லிபியில் பதியப்பட்டது.

அதன் பின்னர் அரபி லிபியில் ஏற்பட்ட மாற்றத்திற்கு ஏற்ப எழுத்து வடிவில் மாற்றம் ஏற்பட்டதே அல்லாமல், அதன் ஒலியில் அதாவது உச்சரிப்பில் அணுவளவும் மாற்றம் ஏற்படவில்லை. கருத்திலும் அணுவளவும் மாற்றம் ஏற்படவில்லை. எழுதிப்பாதுகாக்க தாள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தாளில் அல்குர்ஆன் எழுதிப் பாதுகாக்கப்பட்டது. பின்னர் அச்சடிக்கும் எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டபின் அல்குர்ஆன் அச்சுப் பதிப்பில் வெளியானது.

இஸ்லாம் உலகளாவிய அளவில் பரவிய பின்னர் அல்குர்ஆன் அந்தந்தப் பகுதி மக்கள் விளங்கிக் கொள்ள வசதியாக அவரவர்களின் மொழியில் அரபி மூலத்துடன் மொழி பெயர்த்துக் கொடுக்கப்பட்டது. மொழி பெயர்ப்புகளில் சிறிய பெரிய தவறுகள் காணப்பட்டனவே அல்லாமல் அரபி மூலத்தில் யாராலும் எப்படிப்பட்ட திரிபு வேலையையும் செய்ய முடியவில்லை.

விஞ்ஞான வளர்ச்சி காரணமாக இன்று அல்குர்ஆன் அரபி மூலமும், அதன் மொழி பெயர்ப்புகளும் ஒலி, ஒளி நாடாக்களிலும், குறுந்தகடுகளிலும் இன்னும் பல வடிவுகளிலும் வந்துவிட்டன. இன்னும் பல முன்னேற்றங்கள் ஏற்படலாம். ஆனால் நாம் விளங்க வேண்டியது இப்படிப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் இஸ்லாமிய மார்க்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அல்ல.

அன்று அல்குர்ஆன் எப்படி உச்சரிக்கப்பட்டதோ, எப்பொருள்களைத் தந்ததோ அவற்றில் அணுவளவும் மாற்றம் இல்லவே இல்லை. அவற்றைப் பதிந்து பாதுகாப்பதில்தான் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இவற்றை பித்அத்-வழிகேடு-நரகில் கொண்டு சேர்ப்பவை என்று ஒரு போதும் சொல்ல முடியாது.
ஆனால் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்கள் தங்களின் சுயநலம் கருதி, இப்படிப்பட்ட உலகியல் மாற்றங்களைக் காட்டி, அல்குர்ஆன் கூறும் அசலான கருத்துக்களிலும் மாற்றங்களைக் கொண்டு வந்து பித்அத்களை-வழிகேடுகளை நரகில் சேர்ப்பவைகளை நியாயப்படுத்த முற்படுவர்.

இன்னொரு தந்திரத்தையும் இப்புரோகிதர்கள் கையாள்வர். அதாவது எவை எல்லாம் மார்க்கத்திற்கு உட்பட்டவை இல்லையோ, கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப கடைபிடிக்கப்பட்டவையோ அவற்றை மார்க்கமாகச் சொல்லி குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பார்கள்.

உதாரணமாக உயரத்தில் ஏறி நின்று பாங்கு சொல்வது,
ஜும்ஆ உரையின்போது கையில் ஒரு தடியையோ, வாளையோ பிடித்துக் கொண்டு நிற்பது,

அரபி மொழி தெரியாத தமிழ் மட்டும் தெரிந்த மக்களை நோக்கி நின்று கொண்டு, அவர்களுக்கு விளங்காத நிலையில் அரபியில் ஜும்ஆ உரை நிகழ்த்துவது,
சூரியனின் ஓட்டத்தைக் கண்ணால் பார்த்துத்தான் தொழுகை நேரத்தை அறிந்து தொழ வேண்டும் என்று முன்னர் அடம் பிடித்தது,

சந்திரனைப் புறக்கண்ணால் பார்த்தே மாதம் பிறப்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்று இப்போது அடம் பிடிப்பது,

இத்தியாதி, இத்தியாதி பொருள்களில் அதாவது மார்க்கத்திற்கு உட்படாத பொருள்களில் அவற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளனர். அதே சமயம் மார்க்கத்திற்கு உட்பட்டவை -அவற்றில் அணுவளவும் மாற்றத்திற்கு இடமே இல்லை என்று திட்டமாக அல்குர்ஆன் கூறுபவற்றில், மனம் போன போக்கில் மாற்றத்தை உண்டாக்குவதில் புரோகிதர்கள் முன்னணியில் இருக்கின்றனர்.

எண்ணற்ற அல்குர்ஆன் வசனங்களுக்கு சுய விளக்கம் கொடுத்து, மார்க்கத்தைப் பிழைப்புக்குரிய வழியாக அவர்கள் கொண்டிருப்பதால்தான் அவர்களுக்கு இப்படிப்பட்ட கேடுகெட்ட புத்தி ஏற்படுகிறது. விஞ்ஞான வளர்ச்சி இல்லாத 1432 ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் இருந்த நிலையில், சூரியனின் ஓட்டத்தைப் பார்த்து நேரத்தை அறியும் கட்டாய நிலை இருந்தது.
சந்திரனின் ஓட்டத்தைப் பார்த்து மாதத்தை அறியும் கட்டாய நிலை இருந்தது. தொலைவிலிருந்து ஹஜ்ஜுக்கு ஒட்டகத்தில் செல்லும் கட்டாய நிலை இருந்தது.

தொலைவில் ஏற்படும் மரணம் போன்ற முக்கிய சம்பவத்தையும் காலம் தாழ்ந்த நிலையில் ஆள் நேரில் வந்து சொல்லி அறியும் கட்டாய நிலை இருந்தது. அன்றைக்கு இவை தவிர வேறு மாற்று வழி இல்லை. மேலும் இவை அனைத்தும் மார்க்கத்தின் சில கடமைகளை நிறைவேற்ற உதவும் வழிகளாக இருந்தனவே அல்லாமல் மார்க்கத்திற்கு உட்பட்டவையாக இருக்கவில்லை.
அதனால்தான் அன்று சூரிய ஓட்டத்தைப் பார்த்து நேரத்தை அறிந்து தொழுதவர்கள், இன்று கடிகாரத்தைப் பார்த்து நேரத்தை அறியும் வகையில் விஞ்ஞான முன்னேற்றம் ஏற்பட்டதால் சூரியனைப் பார்ப்பதை விட்டு விட்டார்கள்.

அன்று தொலைவிலிருந்து ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்குப் போனவர்கள், நவீன வாகன வசதிகள் ஏற்பட்டுவிட்டதால், ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்குச் செல்வதை விட்டுவிட்டார்கள்.

அன்று மரண செய்தியை காலம் தாழ்ந்து நேரில் ஆள் வந்து சொல்வதன் மூலம் அறிந்து செயல்பட்ட நிலை மாறி, தொலை தகவல்கள் மூலம் கிடைப்பதால், ஆளை எதிர் பார்த்துக் காத்திருப்பதில்லை.

அதேபோல் அன்று மாதம் பிறந்ததை முதல் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து முடிவு செய்ததற்கு மாறாக இன்று கணினி கணக்கீட்டின் மூலம் எதிர்வரும் நூறு ஆண்டுகளின் 12 மாதங்களின் தலைப் பிறையை இன்றே மிகத் துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறும் அளவில் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டு விட்டதால், இன்று பிறையைப் புறக்கண்ணால் பார்க்கக் காத்திருக்கத் தேவையே இல்லை.

சில நடுநிலை அறிஞர்கள் இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) போன்ற பேரறிஞர்கள் கணிப்பின் அடிப்படையில் மாதம் பிறப்பதை அறிவது ஏற்கத்தக்கதல்ல என்று கூறி இருப்பதை பெரிய ஆதாரமாகக் கொண்டு நிலை தடுமாறுகிறார்கள். உண்மை இதுதான். அந்த அறிஞர்கள் காலத்தில் கணினி(Computer) கண்டுபிடிக்கப் படவில்லை. துல்லியமாகக் கணக்கிடும் கணக்கு முறையும் இருக்கவில்லை. நபி(ஸல்) காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வரும் கணிப்பு முறையைத்தான் அந்த அறிஞர்கள் மறுத்துள்ளனர். தோராய கணிப்பிற்கும் துல்லிய கணக்கீட்டு முறைக்குமுள்ள வேறுபாட்டை அறிந்து கொண்டால் இப்படி தடுமாற்றம் நடுநிலை அறிஞர்களுக்கு ஏற்படாது.

ஆனால் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்கள், தங்களின் தொழிலுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தில் ஒவ்வொரு விஞ்ஞான கண்டு பிடிப்பின்போதும் அதை மறுத்து அலறுவது வாடிக்கை. காலப்போக்கில் வேறு வழியின்றி அவர்களும் அந்த விஞ்ஞான உண்மைகளை ஏற்கும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

சூரியனைப் பார்த்து நேரம் அறிந்து தொழும் நிலை முதன் முதலாக மாறி கடிகாரத்தைப் பார்த்து தொழும் நிலை ஏற்பட்டவுடன் இப்படி அலறினார்கள். பின்னர் அதை ஒப்புக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

அதேபோல் ஒட்டகத்தில் பிரயாணம் செய்யும் நிலை முதன் முதலாக மாறி நவீன வாகனத்தில் ஹஜ்ஜுக்குச் செல்ல ஆரம்பித்தவுடன் இவ்வாறே அலறினார்கள். பின்னர் அதை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
மரணச் செய்தியை ஆள் நேரில் வந்து சொன்ன நிலை முதன் முதலாக மாறி தகவல் தொடர்பு மூலம் உடனடியாக அறிந்து செயல்பட முற்பட்ட போதும் இவ்வாறே அலறினார்கள். பின்னர் அதை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

அதேபோல் இன்று கணினி கணக்கீட்டின் மூலம் முன்கூட்டியே மாதம் பிறப்பதை துல்லியமாக அறிவிக்கும் நிலையை மறுத்து அலறுகிறார்கள்.
காலம் போக போக அவர்களே இக்கணக்கீட்டை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். எனவே இந்த சுயநலப் புரோகிதர்களின் வெற்றுக் கூச்சலை முஸ்லிம்கள் பொருட்படுத்த வேண்டியதே இல்லை.

 

Post image for மறந்துவிட்ட  மன்னிக்கும் தன்மை!

விட்டுக் கொடுக்கும் தன்மை – முஸ்லிம்களிடத்தில் இது குறைந்து வருவதனால் தான் இன்று நம்மிடையே பகைமை உணர்வுகள் அதிகம் ஏற்பட்டு பல பிணக்குகளும் பிரிவுகளும் உண்டாகியிருக்கின்றன. இதில் வேதனையான விசயம் என்னவென்றால் குர்ஆன், ஹதீஸ் என்று வாய்கிழியப் பேசுபவர்கள் தான… இத்தகைய விட்டுக்கொடுக்கும் தன்மை சிறிதும் அற்றவர்களாக அதிகம் காணப்படுகின்றனர். இவர்கள் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு பலியாகி அவனின் மாயவலையில் விழுந்திருக்கிறார்கள். ஆயினும் மனிதர்களின் உள்ளங்களைப் புரட்டி நேர்வழிப்படுத்துபவனான வல்ல அல்லாஹ்வின்,

“நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக” (87:9) மற்றும்
“நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்” (51:55)


போன்ற அறிவுரைகளுக்கேற்ப பகைமை உணர்வு, பலிவாங்கும் உணர்வு, பிரிவினைகளை ஏற்படுத்தும் செயல் ஆகிய அனைத்தையும் தவிடுபொடியாக்குகின்ற, இறைவனால் பெரிதும் விரும்பப்படுகின்ற பிறர் குறைகளை மன்னித்து விட்டுக்கொடுக்கும் தன்மையையும் அதன் அவசியத்தையும் பற்றிய இச்சிறிய நினைவூட்டலை பகிர்ந்துக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.

நபி (ஸல்) அவர்களால் வார்த்தெடுக்கப்பட்ட சத்திய சீலர்களான ஸஹாபா பெருமக்களின் பிறர் தவறுகளை மன்னிக்கும் தன்மையை நாம் உற்று நோக்கினால் ஆச்சரியப்படும் அளவிற்கான சிறந்த படிப்பினைகள் நமக்கு கிடைக்கின்றன.

ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள்: உஹுதுப் போரின் (தொடக்கத்தின்)போது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது இப்லீஸ், அல்லாஹ் அவனைக் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! ‘அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்” என்று கத்தினான். உடனே, முஸ்லிம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி, பின் அணியினரை நோக்கித்) திரும்பிச் செல்ல, பின் அணியினருடன் போரிட்டுக் கொண்டனர். அப்போது ஹுதைஃபா(ரலி), தம் தந்தை யமான் அவர்கள் அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார்கள். எனவே, ‘அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை! என் தந்தை!” என்று (உரக்கக்) கூவினார்கள். (ஆனால்) அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரைவிட்டும்) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா(ரலி) (தம் தந்தையைக் கொன்றவர்களை நோக்கி), ‘அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுதைஃபா(ரலி) (இவ்வாறு மன்னித்தால் அவர்கள்) அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை அவர்களிடம் நல்ல பலன் இருந்து கொண்டேயிருந்தது. (ஆதாரம் : புகாரி)

தம் தந்தையைக் கொன்றவர்களிடத்திலும் ஹுதைஃபா (ரலி) அவர்கள் காட்டிய பரிவு மேலும் அவர்களின் பாவம் மன்னிக்கப்படவேண்டும் என்று அவர்கள் செய்த துஆ! – இதிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினைகள் ஏராளம். உன்னைத் திட்டினால் நீ அவனைத் திட்டாதே!

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: – ‘எவரேனும் சரி உன்னிடமுள்ள குறைகளைச் சொல்லி உன்னைத் திட்டினால் நீ அவனுடைய குறைகளைச் சொல்லி திட்டாதே! காரணம் அந்த பாவம் அவனையே சாரும்’ ஆதாரம் : அபூதாவுத்.

நிந்தித்தவரையே சென்றடையும் நிந்தனை! “பிறர் தம்மைப் பற்றி சில செய்திகள் கூறிவிட்டார்; அவரை நான் பலிவாங்க வேண்டும்; அவரை நான் எவ்வாறு நோகடிக்கின்றேன் பார்” என்ற வெறியுடன் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பலவாறாக பேசி விடுகிறோம். ஆனால் அது எவ்வளவு பயங்கரமானது? அதன் பின்விளைவுகள் என்ன என்பதைப் பற்றி சிறிது கூட நாம் கவலைப்படுவதில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: – “மற்றவரை ஒருவர் நிந்திக்கும் போது அது வானத்திற்குச் செல்கின்றது. அங்கே வானத்தின் கதவுகள் மூடி இருக்கின்றன. பின்பு அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடி இருக்கின்றன். பின்பு அது வலபுறம் இடபுறம் அலைந்து திரிகின்றது. எங்குமே அதற்கு இடமில்லாமல் அது – எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேருகிறது”. ஆதாரம் : அபூதாவுத்.

உண்மையான வீரன் யார்? நம்மிடம் வம்புக்கிழுப்பவர்களோடு மோதி அவர்களை வீழ்த்துவதான் வீரமல்ல! மாறாக அவர்களின் தவறுகளை மன்னிக்கும் தன்மையே சிறந்த வீரமாகும். ஏனென்றால் தம்மோடு வம்புக்கு வருபவரோடு மோதுவது என்பது பொதுவாக அனைவரின் செயலாகும். ஆனால் அவற்றை மன்னித்து ஏற்பதற்கு மிகுந்த தைரியம் வேண்டும். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் தம்மைக் கட்டுப்படுத்தி கோபத்தை அடக்கி கொள்பரை சிறப்பித்து பின்வருமாறு கூறுகிறார்கள்: -

“மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.ஆதாரம் : புகாரி.
மூன்று இரவு, மூன்று பகல்களுக்கு மேல் பகைமை கொண்ட நிலையில் மரணிப்பவன் நரகம் புகுவான்! மேலும் சகோதர முஸ்லிம்களுக்கிமையில் மூன்று நாட்களுக்கு மேல் பகைமை கொண்ட நிலையிலேயே மரணிப்பவர் நரகம் புகுவார்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.

‘தனது முஸ்லிம் சகோதரனுடன் மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருப்பது கூடாத செயலாகும். எனவே மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருக்கும் நிலையில் மரணிப்பவன் நரகம் நுழைவான்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : அஹ்மது, அபூதாவுத்.

எனவே சகோதர சகோதரிகளே! சத்தியத் திருத்தூதரின் வாக்கை உண்மையென நம்பும் நாம் உடனடியாக நமது தவறுகளிலிருந்து விடுபட்டு சகோதர முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக வாழ முயற்சிக்க வேண்டும். சகோதர முஸ்லிம்களுடன் மூன்று நாட்களுக்கு மேல் நாம் பேசாமல் பகைத்து இருக்கக் கூடாது என்ற நபி (ஸல்) அவர்கள் இட்ட கட்டளையை அறிந்து உண்மையை நாம் உணர்ந்து கொண்ட போதிலும் ஷைத்தான் நம்மிடம் குறிக்கிட்டு அவர்கள் தானே முதலில் வம்புக்கிழுத்தார்கள்! எனவே அவர்கள் முதலில் பேசட்டும்; பிறகு நாம் பேசலாம் என்ற எண்ணத்தை தோற்றுவிப்பான். ஷைத்தானின் இந்த மாயவலையில் நாம் சிக்கிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரியவர்களாக நாம் பெருந்தண்மையுடன் அவர்கள் நமக்கு செய்த தீமைகளை மன்னித்து மறந்து விட்டு நாம் முதலில் பேச ஆரம்பிப்போமேயானால் அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னித்து அதற்காக நமக்கு நிறைய வெகுமதிகளை தருவான். இவ்வாறு பிணக்கிற்குப் பிறகு முதலில் பேசுபவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறிய ஹதீஸ் ஸஹீஹூல் புகாரியில் வந்திருக்கிறது.

“ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி), ஆதாரம் : புகாரி.

பகைவரும் உற்ற நன்பர் போல் ஆகவேண்டுமா? நம்மில் சிலர், நான் ஒன்றுமே செய்யவில்லை! தவறுகள் முழுவதும் மற்றவருடையது தான். அவராகத் தான் என்னிடம் வம்புகள் செய்து பிரிந்துவிட்டார். நான் என்ன செய்வது? என்று கேட்கின்றனர். மேலும், இப்போது கூட நான் அவர்களைப் பற்றி ஒன்றுமே கூறுவதில்லை! ஆனால் அவர்களோ என்னைப் பற்றி அநியாயத்திற்கும் இல்லாததையும் பொல்லாததையும் பிறரிடம் கூறி என்னை மனவருத்தத்திற்குள்ளாகின்றனர் என்றும் கூறி மன வருத்தமடைகின்றனர். இவர்களுக்கான அழகிய தீர்வை நம்மையும் அவதூறு கூறும் அவர்களையும் படைத்தவனும் நம் அனைவரது உள்ளங்களைப் புரட்டக் கூடியவனாகிய அல்லாஹ் கூறுகிறான்: -

“நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 41:34-35)

அல்லாஹ் கூறுகின்றான்: “அவர்கள் எத்தகையோரென்றால் செல்வ நிலைமையிலும் வறுமை நிலைமையிலும் தானம் செய்துகொண்டேயிருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான்“. (அல்குர்ஆன் 3:134)

வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் பிறர் குறைகளை மன்னிக்கும் தன்மையை அளித்து அதன் மூலம் நம் குறைகளை அவன் மன்னித்தருள்வானாகவும்.

கடலூர் சகோதர்கள்
thanks to read islam
22 ஜூலை 2011, நோர்வே நாட்டின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் உலகை உலுக்கி விட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகல், நகர மத்தியில் அமைந்துள்ள அரச கட்டிடங்களை இலக்கு வைத்து கார்க் குண்டு வெடித்துள்ளது. பிரதமர் அலுவலகமும், சில அமைச்சு அலுவலகங்களும், குண்டுவெடிப்பால் சேதமடைந்துள்ளன. கட்டிடங்கள் தகர்ந்துள்ள போதிலும், இரு வழிப்போக்கர்கள் மட்டுமே அகால மரணமடைந்துள்ளனர். அரச ஊழியர்களின் இழப்பு குறித்த தகவல்கள் தெரியவில்லை. பிரதமர் இரகசியமான இடத்தில் பத்திரமாக இருப்பதாக அறிக்கைகள் விடப்பட்டன. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், நோர்வேயில் இடம்பெற்ற முதலாவது குண்டுவெடிப்புச் சம்பவம் இதுவாகும். சமாதான விரும்பிகளின் நாடு என்ற விம்பத்தை தகர்த்த, குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள் யார், என்ற ஊகங்கள் நாலாபக்கமும் இருந்து கிளம்பின. ஊடகங்கள் வழமை போல அல்கைதாவை குற்றம் சுமத்தின. "நோர்வே ஆப்கானிஸ்தான் போரில் ஈடுபட்டிருப்பதால் பழிவாங்கத் துடித்த அல்கைதா..." "ஈராக்கிய இஸ்லாமிய மதத் தீவிரவாதி முல்லா நாடுகடத்தப்படவிருந்ததால், நோர்வே அரசியல்வாதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார்..." "லிபியா மீதான நேட்டோ குண்டுவீச்சில் நோர்வே பங்கெடுப்பதால், எச்சரிக்கை விடுத்த கடாபியின் கைக்கூலிகள்..." இவ்வாறு அனைவரின் கவனமும் மத்திய கிழக்கு, அல்கைதா அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பக்கமே குவிந்திருந்தது. "உள்ளூர் பயங்கரவாதிகள்" என்று பல தசாப்தங்களாக நோர்வேயில் வாழும் பாகிஸ்தானிய சமூகமும் குற்றம் சாட்டப்பட்டது.
பி.பி.சி. உலகச் சேவையில் தோன்றிய, நிபுணர் என்று அழைத்துக் கொள்ளும் ஒருவர், "சந்தேகத்திற்கிடமின்றி இது அல்கைதாவின் செயல் தான்." என்று பிதற்றினார். உலகில் இதற்கு முன்னர் இடம்பெற்ற "அல்கைதா குண்டுவெடிப்புகள்" அதிகளவு பொதுமக்களின் இழப்புகளை ஏற்படுத்திய "மென்மையான இலக்குகள்" என்ற உண்மை அந்த நிபுணருக்கு தெரியவில்லை. ஓரிரு மணிநேரத்தின் பின்னர், நோர்வேயில் இருந்து இன்னொரு தகவல் வந்தது. குண்டுவெடிப்பை தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது. ஆளும்கட்சியின் கூட்டம் ஒன்றில், சரமாரியாக சுட்டுத்தள்ளிய நபர், போலிஸ் உடையில் வந்த நோர்வீஜிய தோற்றம் கொண்ட வெள்ளையினத்தவர். பிபி.சி. அந்த செய்தியை அறிவித்ததும், மீண்டும் "பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்" என்ற பைத்தியம் உளற ஆரம்பித்து விட்டது. "அல்கைதா இப்போதெல்லாம் வெள்ளை இனத்தவர்களை சேர்த்து வருகின்றனர். பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக, அத்தகைய நபர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்."

ஆனால், அடுத்த நாள் பொழுது புலர்ந்த வேளை, உண்மை என்னவென்று உலகம் அறிந்து கொண்டது. கடந்த பத்து வருடங்களாக, சர்வதேச ஊடகங்கள் செய்து வரும் இனவாதப் பிரச்சாரம், இம்முறை ஆதாரங்களுடன் அம்பலமாகியது. ஆயினும் என்ன? தாக்குதல்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வேலை இல்லை என்று நிரூபிக்கப் பட்டவுடன், அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டன. 90 பேர்களின் மரணத்திற்கு காரணமான கொலைகாரன் ஒரு வெள்ளையின நோர்வேஜியன் என்பதால், அவன் ஒரு புத்தி பிறழ்ந்தவன் என்று கதையை முடித்து விட்டார்கள். ஒரு வேளை, தாக்குதலை நடத்தியது ஒரு முஸ்லிம் என்றால், "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் அவசியம்" குறித்து ஒபாமா விரிவுரை ஆற்றியிருப்பார். வெளிநாட்டுக் குடியேறிகளை கட்டுப்படுத்துமாறு, வலதுசாரிகள் நோர்வே அரசுக்கு அழுத்தம் கொடுத்திருப்பார்கள். தற்போது உள்நாட்டை சேர்ந்த தீவிர வலதுசாரி அரசியல் சக்திகள் தான் இந்த பயங்கரவாத செயலை புரிந்துள்ளமை நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கும், நேரமும் முன்கூட்டியே நன்கு திட்டமிடப் பட்டுள்ளன. அரச அலுவலகங்களில் பணிபுரிவோர், மற்றும் பிரதமரை கொலை செய்யும் நோக்கில் குண்டு வெடிக்கப் பட்டிருக்கலாம்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் என்பதால் மட்டுமல்ல, நோர்வேயில் தற்போது கோடை கால விடுமுறைக் காலம் என்பதாலும், தெருவில் சன நடமாட்டம் குறைவு.
ஆகையினால், தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் சாதாரண பொதுமக்களின் இழப்பை குறைக்க விரும்பியுள்ளனர். அல்கைதா பாணி தீவிரவாதிகள் என்றால், "மத நம்பிக்கையற்ற எல்லோரும் பரலோகம் போக வேண்டும்..." என்று விரும்பியிருப்பார்கள். பிற்காலத்தில் மக்கள் ஆதரவை இழக்க விரும்பாத உள்நாட்டு அரசியல் சக்தி ஒன்று தான் இந்த தாக்குதலை திட்டமிட்டிருக்கும். உள்நாட்டில் வளர்ந்து வரும் நவ-நாஜிச அல்லது தீவிர வலதுசாரிக் குழுக்கள் மீது தான் இயல்பான சந்தேகம் திரும்புகின்றது.

நோர்வேயில் நவ நாசிச கொள்கை கொண்ட குழுக்கள் தடை செய்யப் பட்டிருந்த போதிலும், "வெகுஜன அரசியல்" செய்யும் Fremskrittspartiet போன்ற கட்சிகள் வளர்ந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர், "நோர்வேயின் பிற நகரங்களும் ஒஸ்லோ போன்று மாறி வருகின்றன... வெளிநாட்டவர் தொல்லை அதிகரிக்கின்றது... கிரிமினல்கள், விபச்சாரிகள், பிச்சைக்காரர்கள், அகதிகள் பெருகி வருகின்றனர்." என்று உள்ளூர் நாளிதழ் ஒன்றில் ஒப்பாரி வைத்தது. அவர்களைப் பொறுத்த வரையில், இந்த தீமைகளுக்கெல்லாம் ஆளும் தொழிலாளர் கட்சியின் (Arbeiderpartiet) தவறான கொள்கை காரணமாகும். குறிப்பாக "முஸ்லிம் குடியேற்றவாசிகள் பெருகி வருவதால், நோர்வேயில் குண்டு வெடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை..." என்று இனவாதக் கருத்துகளை பரப்பி வருகின்றது.

தற்போது நடந்துள்ள குண்டுவெடிப்புக்கு தீவிர வலதுசாரி கொள்கை கொண்டோரே காரணம் என்பதால், நோர்வே மக்கள் மத்தியில் அவர்களுக்கான ஆதரவு குறையலாம். ஆனால், நீண்ட கால நோக்கில், தீவிரவாத எண்ணம் கொண்டோருக்கு மக்கள் ஆதரவு அதிகரிக்கலாம். எப்படியும் "வீர சாகசங்களைப் புரியும் செயல்வீரர்கள்" மீது மக்கள் மதிப்பு வைக்கலாமல்லவா? பொலிசாரினால் கைது செய்யப்பட்ட, தாக்குதலில் ஈடுபட்ட Anders Behring Brevik என்ற 32 வயது இளைஞனின் கொள்கையும் அதுவாக இருந்துள்ளது. அந்த நபரின் பேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களில் காணப்பட்ட வாசகங்கள் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ளன. "ஒரு மத நம்பிக்கையாளன், வெறும் நலன்களை மட்டுமே பேணும் ஒரு இலட்சம் படைவீரருக்கு சமமானவன்." என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரேயொரு வாசகம் மட்டுமே டிவிட்டரில் காணப்பட்டது. இதை விட, இணைய விவாதங்களில் கலந்து கொண்டு, கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் கருத்துகளை உதிர்த்துள்ளார். நெதர்லாந்தின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல்வாதி கெர்ட் வில்டர்ஸ், மறைந்த பிரித்தானிய பிரதமர் சேர்ச்சில் ஆகியோரின் அபிமானியாக இருந்துள்ளார். முகநூலில் சிறந்த நூலுக்கான இவரது தெரிவாக ஆர்வேல் எழுதிய "1984" காணப்படுகின்றது. இவர் தன்னை ஒரு நோர்வீஜிய தேசியவாதியாக இனங்காட்டியுள்ளார். தற்காலத்தில் நடப்பது முதலாளித்துவத்திற்கு எதிரான போர் இல்லை. மாறாக, சர்வதேசியத்திற்கு எதிரான தேசியவாத சக்திகளின் போர்." என்று அந்த வெள்ளையின பயங்கரவாதி தத்துவ முத்துகளை உதிர்த்துள்ளார்.

ஒஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பை அடுத்து, அங்கிருந்து 40 கி.மி. தூரத்தில் உள்ள "உத்தேயா" (Utøya) என்னும் தீவில் தான் அதிகளவு மரணங்கள் சம்பவித்துள்ளன. ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் இளைஞர் அணியின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வுகள் அந்தத் தீவில் நடந்து கொண்டிருந்தன. நாடு முழுவதிலும் இருந்து, இளம் வயது கட்சி உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர். தொழிலாளர் கட்சி இன்று ஒரு வலதுசாரி சந்தர்ப்பவாதக் கட்சியாக மாறி விட்டாலும், வெளிநாட்டவர் மத்தியில் மத்திய-இடதுசாரிக் கட்சியாக பார்க்கப்பட்டது. இதனால் பல அந்நிய குடியேறிகளின் சமூகங்களை சேர்ந்த இளைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர். தொழிலாளர் கட்சியின் கோடைகால முகாம் நடைபெற்ற இடத்திற்கு, கொலைகாரன் பொலிஸ் உடையில் சென்றுள்ளான். "ஒஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பந்தமாக, பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க அனுப்பப் பட்டதாக..." கூறியுள்ளான். தொடர்ந்து, கண்மூடித் தனமாக சுட்டதில் 90 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் அந்த இடத்திற்கு விரைந்த பொலிஸ் படையினர், Anders Brevik என்ற கொலைகாரனை மடக்கிப் பிடித்துள்ளனர். இருப்பினும், ஒரேயொரு நபர், ஒரு தானியங்கி துப்பாக்கி மூலம், 90 பேரை சுட்டுக் கொன்றமை நம்புவதற்கு கடினமானது. துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இன்னொரு நபரும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், பிறிதொரு இடத்தில் கைது செய்ததாகவும் அறிவித்தார்கள். ஆரம்பத்தில், தாக்குதல்கள் "ஒரு மனநோயாளியின்" செயல் என்று தெரிவித்தார்கள். போலிசிடம் அகப்பட்ட பயங்கரவாதி ஒரு "வெள்ளையின, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி" என்பதால், ஊடகங்களும் அதிகம் ஆராயவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் வெறும் கருவிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது. இவர்களுக்குப் பின்னால், ஒரு இயக்கம், அல்லது அரசியல் சக்தி இருக்கக் கூடும்.

தாக்குதல்கள் யாவும், ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியை குறி வைத்தே இடம்பெற்றுள்ளன. இதனால், இந்த சம்பவம் காரணமாக தொழிலாளர் கட்சிக்கு வருங்கால தேர்தல்களில் அனுதாப வாக்குகளை பெற்றுத் தரலாம். இருப்பினும், இளைஞர் அணியை சேர்ந்த 90 உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அந்தக் கட்சிக்கு பின்னடைவை தோற்றுவிக்கலாம். இன்றைய இளைஞர்கள், நாளைய தலைவர்கள். இதனால், தூர நோக்கில் தொழிலாளர் கட்சியை நோர்வேயில் இல்லாதொழிக்கும் நோக்கம் தெரிகின்றது. தொழிலாளர் கட்சியின் மீது யாருக்கு அவ்வளவு கோபம்? தொழிலாளர் கட்சி வலதுசாரி சந்தர்ப்பவாதப் பாதையில் சென்ற போதிலும், இளைஞர் அணியினர் மத்தியில் இடதுசாரிப் போக்கும் காணப்படுகின்றது. சமீப காலமாக,"பாலஸ்தீன சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டும். இஸ்ரேலிய பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும்." என்பன போன்ற குரல்கள் கேட்கின்றன. மேலும், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்த தினத்தன்று, முன்னாள் நோர்வே பிரதமர் வருகை தருவதாக ஏற்பாடாகியிருந்தது. இன்றைய பிரதமர் அப்பட்டமான வலதுசாரி என்பதும், முன்னை நாள் பிரதமர் ஓரளவு இடதுசாரி பக்கம் சாய்பவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இதற்கு முன்னர் குறிப்பிட்ட தீவிர வலதுசாரியினர், நவநாஜிகள் மட்டுமல்லாது, வேறு சக்திகள் சம்பந்தப் பட்டுள்ளனவா? நோர்வே வட அட்லாண்டிக் இராணுவக் கூட்டில் (நேட்டோ) அங்கம் வகிக்கின்றது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, நோர்வே விமானங்கள் லிபியா மீது குண்டுகளை வீசி வந்துள்ளன. நேட்டோ இராணுவ நடவடிக்கையின் ஓரங்கமாக நோர்வே செயற்பட்டு வந்தாலும், இந்த வாரம் குண்டுவீச்சை நிறுத்திக் கொள்வதென்று தன்னிச்சையாக அறிவித்தது. அதாவது, வருகிற ஆகஸ்ட் முதலாம் தேதியில் இருந்து, நோர்வே விமானங்கள் போர் நடவடிக்கையில் ஈடுபட மாட்டா. இதனால், நோர்வே அரசுக்கும், பிற நேட்டோ உறுப்பினர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் தாக்குதல் நடந்திருக்கலாம். நேட்டோ, அல்லது நோர்வே அரச மட்டத்தை சேர்ந்த ஏகாதிபத்திய ஆதரவாளர்கள், தாக்குதலில் சம்பந்தப் பட்டிருக்கலாம். நேட்டோ ஐரோப்பாவில் இரகசியமாக ஒரு பயங்கரவாத அமைப்பை (Gladio) உருவாக்கி வைத்துள்ளது. அந்த இரகசிய அமைப்பு இத்தாலி போன்ற நாடுகளில் குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளது. இதுவரை குண்டுகளை வைத்தவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. அதே போல, ஒஸ்லோ குண்டுவெடிப்பை நடத்திய சூத்திரதாரிகள், அவர்களின் நோக்கங்கள் என்பன இனி ஒரு காலமும் வெளிவராமல் போகலாம்.

நன்றி : KALAIYAGAM
அடுத்த உதயம் வரை
அடர்ந்துவிட்ட இருளைப் பொறு,
விருட்சம் விளையும் வரை
விழுந்த விதையைப் பொறு!

பூக்கும் காலம் வரை
பூமொட்டுகள் பொறு,
பூப்பூத்த காலங்களில்
பிள்ளைகளின் பிழைகள் பொறு!


கைகளில் கனியும் வரை
கிளையில் காயைப் பொறு,
கண்ணுக்குள் உனைக் காத்த
வயோதிகத் தாயைப் பொறு!

மரணத்தின் அண்மை வரை
மூத்தவர் முனகல் பொறு,
இறுதிநாள் தட்டும் வரை
இதயத்தின் இச்சை பொறு!


திறக்காத கதவில்லை
திறக்கும் வரை திசைகள் பொறு,
திறக்க நீயும் முயன்றுவிட்டால்
திக்குகள் துலங்கும் பொறு!

பச்சைக்கு மாறும் வரை
'சிக்னலில்' சிகப்பைப் பொறு,
உனக்கான நேரம் வரை
உலகிலே காலம் பொறு!

கொள்கையில் நிலைக்கும் வரை
கொடிய உன் கோபம் பொறு,
தொட்டது துலங்கும் வரை
சுட்டுவர் சொற்கள் பொறு!

உண்மைகள் ஜெயிக்கும் வரை
உருப்படாப் பொய்யைப் பொறு,
நண்மைகள் நிலைக்கும் வரை
தீமையின் தீங்கைப் பொறு!

உழைக்கும் உடல் இருக்கும் வரை
தோளில் உன் சுமையைப் பொறு,
பிழைக்க வழி கிடைக்கும் வரை
படைத்தவனின் சோதனை பொறு!

நினைத்ததை முடிக்கும் வரை
நகைப்பவர் நக்கல் பொறு,
காரியம் கைகூடி
கயமையும் அழியும் பொறு!

பொறு!
புயலின் பொறுமையே
பூந்தென்றல்,
பூகம்பத்தின் பொறுமையே
புவியின் மெல்லதிர்வு ,
தீயின் பொறுமையே
தீபம்,
மனிதா உன்
மனத்தின் பொறுமையே
மனிதம்!

- சபீர்
ஒருவர் தம் உணவு (வாழ்வாதாரம்) தமக்கு அதிகரிக்கப்படவும், தம் ஆயுள் தமக்கு நீட்டிக்கப்படவும் விரும்பினால் அவர் தம் உறவினரை இணைத்து வாழட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்

நிச்சயமாக அல்லாஹ், படைப்புகளைப் படைத்து முடித்தபோது `உறவு எழுந்து நின்றது. (என்னைத்) துண்டித்துக் கொள்வதைவிட்டு உன்னிடம் பாதுகாப்புக் கோரும் இடம் இது என்று கூறியது. ஆம் உன்னைச் சேர்த்துக்கொள்பவனை நானும் சேர்ப்பேன். உன்னைத் துண்டிப்பவனை நானும் துண்டிப்பேன் என்பதை நீ திருப்தியுறவில்லையா? என்று அல்லாஹ் கேட்டான். திருப்திதான் என உறவு கூறியதும், உனக்கு அது உண்டு என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்பு, நீங்கள் விரும்பினால் (பின்வரும்) இறைவசனத்தை ஓதுங்கள் என்றும் கூறினார்கள்.

நீங்கள் பொறுப்பாளர்களாக வந்துவிட்டால் பூமியில் நீங்கள் குழப்பம் செய்திடவும், உங்களின் இரத்தத் தொடர்புடையவர்களை நீங்கள் துண்டித்துக் கொள்ளவும் விரும்புகிறீர்களா? (துண்டிக்கும்) அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான். அவர்களைச் செவிடாக்கிவிட்டான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கி விட்டான். (47: 22-23) அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்


உறவு என்பது, அர்ஷைப் பிடித்துக்கொண்டு, என்னை இணைத்து வாழ்பவரை அல்லாஹ் இணைத்துக்கொள்வான். என்னைப் பிரித்துவிடுபவரை அல்லாஹ்வும் பிரித்துவிடுவான் என்று கூறும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்
பிரதி உபகாரம் (உதவிக்கு உதவி) என வாழ்பவர், உறவை இணைத்து வாழ்பவர் அல்லர். எனினும் தன் உறவினர் தம்மைத் துண்டித்தாலும், இணைத்து வாழ்பவரே உறவை இணைத்து வாழ்பவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி), நூல்: புகாரீ

நபி (ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! சொர்க்கத்தில் என்னை நுழையச் செய்கின்ற, நரகத்திலிருந்து என்னைத் தூரமாக்கிவிடுகின்ற ஒரு செயலை என்னிடம் கூறுங்கள் என்று ஒருவர் கேட்டார். நீர் அல்லாஹ்வை வணங்குவீர்; எதையும் அவனுக்கு இணையாக்காதீர்; தொழுகையைப் பேணுவீர்; ஸகாத்தைக் கொடுப்பீர்; உறவினரை இணைத்து வாழ்வீர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: காலித் இப்னு ஸைத் அல்அன்ஸாரீ (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்

உங்களுள் ஒருவர் நோன்பு துறந்தால், ஒரு பேரீத்தம் பழத்தால் நோன்பைத் துறக்கட்டும். அதுவே அபிவிருத்தி தரும். ஒரு பேரீத்தம் பழம் இல்லையென்றால், தண்ணீர் (மூலம் நோன்பு துறக்கட்டும்); அதுவே சுகாதாரமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ஏழைக்குத் தர்மம் தருவது, ஒரு தர்ம(க் கூலி)தான். உறவினருக்குத் தர்மம் வழங்குவது இரண்டு (கூலி)களாகும். ஒன்று தர்மம்; மற்றொன்று உறவை இணைத்து வாழ்தல் என்றும் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: சல்மான் இப்னு ஆமிர் (ரலி), நூல்: திர்மிதீ
தொகுப்பு:
Mohamed Faizal
இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘மலக்குல் மவ்த்’க்கு நண்பராக இருந்தார்களாம்! “மரணத்தை அனுபவ ரீதியில் உணர தாம் விரும்புவதாக “மலக்குல் மவ்திடம் கேட்டுக்கொண்டார்களாம்! அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மலக்குல் மவ்த், இத்ரீஸ் நபியை மரணமடையச் செய்து பின்பு உயிர்பித்தார்களாம்!” தான் நரகத்தை கண்கூடாக காணவேண்டும்.
 என்று இரண்டாவது கோரிக்கையை மலக்குல் மவ்திடம் சமர்பித்தார்களாம்! தமது இறக்கையில் இத்ரீஸ் நபியைச் சுமந்து சென்று நரகத்தை மலக்குல் மவ்த் சுற்றிக் காண்பித்தார்களாம்! தாம் சுவர்க்கத்தைக் காண விரும்புவதாக மூன்றாவது கோரிக்கையை முன்னே வைக்க, அதையும் மலக்குல் மவ்த் நிறை வேற்றினார்களாம். சுவர்க்கத்தைச் சுற்றிப் பார்த்தபின், சுவனத்திலிருந்து வெளியே வர மறுத்துவிட்டு இன்று வரை சுவர்க்கத்திலேயே இருக்கிறார்களாம்.இப்படி ஒரு கதை பரவலாகச் சொல்லப்படுகின்றது. இந்தக் கதை உண்மை தானா? என்று நாம் ஆராய்வோம். இந்தக் கதையில் சொல்லப்படுகின்ற மலக்குல் மவ்த், சுவர்க்கம், நரகம் போன்றவை சம்பந்தப்பட்டுள்ளன.

இது போன்ற நிகழ்ச்சி நடந்திருக்குமானால், அல்லாஹ்வும், அவனது திருத்தூதரும் தான் நமக்குச் சொல்லித் தரமுடியும். நம்முடைய அறிவு, அனுமானம் கொண்டோ, இவைகளை நாம் அறிய முடியாது.

அல்லாஹ் இது போல் நடந்ததாக திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் சொல்லவில்லை.” அல்லாஹ்வின் தூதராவது இதைச் சொல்லி இருக்கிறார்களா? என்று ஆராய்ந்தால், இப்படி அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களும் சொல்லவில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறியதாக இப்றாஹீம் இப்னு அப்துல்லாஹ் இப்னு காலித் என்பவர் மூலமாக இமாம் தப்ரானி அவர்கள் பதிவு செய்துள்ளனர். மேற்கூறிய இப்றாஹீமைப் பற்றி “பெரும் பொய்யன்” என்று ஹாபிழ் ஹைஸமீ(ரஹ்) அவர்கள் குறீப்பிடுகிறார்கள்.

இமாம் ஹாகிம் அவர்கள் “இவரது எல்லா ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவையே” என்று கூறுகிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்யே தவிர இதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது.

“அல்லாஹ்வும், அவனது திருத்தூதரும் இதைச் சொல்லவில்லை” என்பதே இந்தக் கதை பொய்யானது என்பதற்கு போதிய ஆதாரம் என்றாலும், திருக்குர்ஆன் வசனங்களுக்கும் எவ்வாறு இந்தக் கதை முரண்படுகின்றது என்பதைப் பார்ப்போம்.
“இத்ரீஸ் நபியவர்கள் திட்டமிட்டு மலக்குல் மவ்த்தை ஏமாற்றினார்கள்” என்ற கருத்தை இந்தக் கதை வெளிப்படுத்துகின்றது. “சுற்றிப் பார்த்துவிட்டு வருவதாகக்” கூறிவிட்டு, சுவர்க்கத்திலிருந்து வெளியேர மறுத்ததன் மூலம் ஒரு மலக்கையே ஏமாற்றினார்கள் என்பது நபிமார்கள்களின் பண்பாக இருக்க முடியுமா?

“(நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் ஸித்தீக்காக (மிக்க சத்தியவானாக) நபியாக இருந்தார்.”

என்று இத்ரீஸ் நபியைப் பற்றி அல்லாஹ் புகழ்ந்து கூறி இருக்கும்போது, (அல்குர்ஆன் 19:56) உண்மைக்கு மாற்றமாக அவர்கள் எப்படி பேசி இருக்க முடியும்? அதுவும் அல்லாஹ்வினால் நியமிக்கப்பட்ட ‘மலக்’கிடம் பொய் சொன்னது அல்லாஹ்விடமே பொய் சொன்னதாக ஆகாதா?

நபிமார்களின் பண்புகளையும், மலக்குகளின் பண்புகளையும் உணர்ந்தவர்கள் இதை எப்படி உண்மை என்று நம்ப முடியும்?
“எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்

என்ற
கருத்தைத் திருக்குர்ஆனின் 39:73 வசனம் சொல்கின்றது. இந்தக் குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாக தனி நபராக இத்ரீஸ் நபியவர்கள் எப்படி சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பார்கள்? அவர்களுக்கு மட்டு இந்தப் பொது விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தால் அல்லாஹ்வோ, அவனது தூதரோ அல்லவா அதைச் சொல்ல முடியும்!

    நரகத்திற்கென்று தனியாக அல்லாஹ் சில மலக்குகளை நியமனம் செய்திருக்கிறான், அவர்கள் கடின சித்தமுடையவர்கள். எவருக்காகவும் பரிதாபப்பட மாட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு உத்தரவிட்டதில் ஒரு சிறிதும் மாறு செய்ய மாட்டார்கள்! தங்களூக்கு இடப்பட்ட கட்டளைகளையே செய்து வருவார்கள்

என்ற கருத்தைத் திருக்குர்ஆனின் 66:6 வசனம் நமக்குச் சொல்கிறது.
நரகத்தின் காவலர்களின் கட்டுப்பாட்டை மீறி மலக்குல் மவ்த் அவர்கள் எப்படி நரகத்திற்கு அழைத்துச் சென்றிருக்க இயலும்? உயிரை வாங்குவதற்காக நியமனம் செய்யப்பட்ட மலக்குகள், தங்களுக்கு கட்டளை இடப்படாதவைகளைச் செய்ய மாட்டார்கள்.

இடப்பட்ட கட்டளைகளையே செய்வார்கள் என்ற கருத்தைக் குர்ஆனின் 21:27 வசனம் சொல்லும் போது மலக்குல் மவ்த் இதைச் செய்திருக்க மாட்டார்கள் என்று தெளிவாக உணரலாம்.

நரகத்தின் காவலர்களாக உள்ள மலக்குகளின் அதிகாரத்தில் மலக்குல் மவ்த் தலையிட்டிருக்க மாட்டார்கள் என்று எவரும் உணரமுடியும். நாம் எடுத்துக் காட்டிய திருக்குர்ஆனின் வசனங்களுடன் முரண்படுவதாலும் இந்தக் கதை பொய்யானது என்று தெளிவாகின்றது.

சுவன வாழ்வை அடைய இப்படி ஒரு குறுக்கு வழியை அல்லாஹ் ஏற்படுத்தித் தரவில்லை. நல் அமல்கள் செய்து வல்ல ரஹ்மானிடம் சுவன வாழ்வைத் தரும்படி பிரார்த்தனை செய்வது தான் ஒரு முஸ்லிம் செய்ய கடமையாகும். நபிமார்கள் இப்படித்தான் செய்துள்ளனர்.

குறுக்கு வழிகள் இருப்பதாக நம்பி ஏமாந்துவிடாமல், அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் காட்டிய வழியில் நாம் நடப்போமாக. அல்லாஹ் அதற்குத் துணை செய்வானாகவும். – ஆமீன் -

P.J
நாம் முஸ்லிம்களாக பிறந்தும் அதன் அருமைப் பெருமையை உணராமல் வாழ்ந்து இருக்கிறோம். கடந்த காலங்களில் அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளோ மிக அதிகம். பொன்னான நேரத்தை வீணாக்கினோம். மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தோம். அல்லாஹ்வை மறந்து ஷைத்தானின் அடிச்சுவடியைப் பின்பற்றினோம்.

ஆனால் இன்று நாம் தொழுகிறோம், நோன்பு வைக்கிறோம் இன்னும் குர்ஆன் ஹதீஸ்களை படிக்கிறோம். ஆனால் இவைகளை ஒருகாலத்தில் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. நாம் இன்று திருந்தி வாழ்ந்தாலும் ஏனோ நாம் கடந்து வந்த பாதையை எண்ணிப்பார்த்தால் உள்ளம் நடுங்குகிறது. எப்படி எப்படியெல்லாம் நம் வாழ்க்கையில் நடந்து விட்டது. இப்படி நம் வாழ்க்கையில் எதுவும் நடக்காமலிருந்தால் நல்லாயிருக்குமே. ஆனால் நடந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறோம்.

இறைவன் நம் பாவங்களை மன்னிப்பானா? மன்னிக்கமாட்டானா? மன்னித்து நம்மை சுவர்க்கத்தில் நுழையவைப்பானா? அல்லது நரகில் தள்ளுவானா? போன்ற கவலைகள் நம் உள்ளத்தில் தேங்கியுள்ளது. நம்மில் எழும் இக்கேள்விகளுக்கெல்லாம் எல்லாம் வல்ல இறைவன் தன் இறுதி வேதத்தில் இவ்வாறு பதில் கூறுகிறான்.


7:153. ஆனால் தீய செயல்கள் செய்து கொண்டிருந்தோர் (மனந்திருந்தி), தவ்பா செய்து (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அதன்பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்பவனாகவுமிருக்கின்றான்.

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் அன்றைய அரபு மக்கள் அனாச்சாரங்களில் ஈடுபட்டிருந்தனர். என்பதை யாவரும் அறிவர். கொலை கொள்ளை, குடி, விபச்சாரம் போன்ற எல்லா பாவங்களையும் செய்தும் வந்தனர். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் திருந்தி உண்மையான இஸ்லாத்தின் பக்கம் வந்த பின் அவர்களைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

25:68. அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப்பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்யமாட்டார்கள் ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நோிடும்.

25:69. கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.

25:70.ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமான் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.

இவ்வசனத்தை அறிந்த அன்றைய அரபு மக்களில் ஒரு சிலர் ரசூல் (ஸல்) அவர்களிடம் வந்து தாங்கள் இஸ்லாத்தில் இணைவதற்குமுன் கொலை கொள்ளை விபச்சாரங்களில் அதிகமாக ஈடுபட்டிருந்ததாகவும் மேற்படி வசனப்படி இறையடியாளர்களாக முடியுமா? அதற்கு ஏதும் பரிகாரமுள்ளதா? எங்களூக்கு அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் கிடைக்குமா? என வினவினார்கள். அதற்கு பதிலாக அல்லாஹ் அருளிய இறைவசனத்தை நபி(ஸல்) அவர்கள் ஓதி காட்டினார்கள்.

39:53 என் அடியாளர்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்து கொண்டபோதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் நம்பிக்கை இழந்து விடவேண்டாம். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுடைவன் என்று நபியே நீர் கூறுவீராக.
மேலும் அல்லாஹ் தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவன் என்பதை அல்குர்ஆனில் நூற்றுக்கணக்கான வசனங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன.

9:104 நிச்சயமாக அல்லாஹ் தன் அடியாளர்களிடமிருந்து தவ்பாவை – மன்னிப்பு கோருதலை ஒப்புக் கொள்கிறான் என்பதையும், தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள்புரிபவன்.

3:89. எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோாித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக்கிடைக்கக்கூடும்) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான்.

4:110. எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர்(மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.
Post image for சேவையைப் பிழைப்பாக மாற்றிக் கொள்ளும் புரோகிதரர்கள்!

இறைவன் எந்த நோக்கத்திற்காக மனிதனைப் படைத்திருக்கிறானோ அந்த நோக்கம் நிறைவேற மனிதன் மனிதனாக வாழவேண்டும். அப்போதுதான் மனிதன் இவ்வுலகிலும் மறு உலகிலும் வெற்றிப் பாதையை அடையமுடியும்.

ஆயினும் மனிதன் அந்த வெற்றிப் பாதையில் நடைபோட ஷைத்தான் தடையாக இருக்கிறான். அவனது சபதம் எப்படியும் மனித வர்க்கத்தை எரியும் கொடும் நரகில் கொண்டு தள்ளுவதே. எந்த மனிதனின் காரணமாக தனக்கு நரக தண்டனை கிடைத்ததோ அந்த மனிதனையும் நரகத்தில் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்று அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறான் ஷைத்தான்.
   
இவ்வுலக வாழ்க்கை சோதனை வாழ்க்கையாக இருப்பதால் பரிட்சையின்
நிமித்தம் அல்லாஹ் மனிதனுக்கு அவனது விருப்பங்களை நிறைவு செய்து கொள்ள இரண்டு வழிகளைக் கொடுத்துள்ளான்.

ஒரு வழி அவனை சுவர்க்கத்தில் கொண்டு சேர்க்கும். இரண்டாவது வழி அவனை நரகில் கொண்டு சேர்க்கும். மனிதனின் படைப்பில் அடிப்படையில் அவனுக்கு இயற்கையான பல உணர்வுகள் இருக்கின்றன. பசி உணர்வு, காம உணர்வு, இன உணர்வு, மொழி உணர்வு, பிரதேச உணர்வு, தேச உணர்வு என்றெல்லாம் அந்த உணர்வுகள் பரிணமிக்கின்றன.

ஷைத்தான் இந்த உணர்வுகளை வெறியாகத் தூண்டிவிட்டு மனிதனை மனித நிலையிலிருந்து மிருக நிலைக்கு மாற்றி விடுகிறான்.
   
ஷைத்தானின் இந்த முயற்சிக்கு மனித இனத்திலிருந்தே சிலர் துணை போகிறார்கள். அவர்கள் மறுமையை மறந்து இவ்வுலக சுகத்தில் மயங்கி தறி கெட்டுச் செல்கிறார்கள். இவர்களில் முன்னணியில் நிற்பவர்கள் மதப்புரோகிதரர்கள், அரசியல்வாதிகள்.

இறைவனை நெருங்கச் செய்வதாக கூறிக்கொள்ளும் புரோகிதரர்கள் அவர்கள் உண்டு கொழுப்பதற்கும், உலக சுகங்களை அடைவதற்கும் சேவையைப் பிழைப்பாக மாற்றிக் கொள்கிறார்கள். எனவே அவர்கள் மக்களின் உணர்வுகளை வெறியாகத் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள்; உலக ஆதாயம் அடைகிறார்கள்.
   
இதே போல் அரசியல்வாதிகளும் ஆட்சியில் அமரும் ஆசையில் மக்களின் வாக்குச் சீட்டைக் குறியாகக் கொண்டு இன, மொழி பிரதேச உணர்வுகளை தூண்டி விடுகின்றனர். உணர்வுகள் மிதமாக இருக்கும்போது மனித வர்க்கம் பலன் பெறுகிறது. அவை வெறிகளாக மாறும்போது மனிதனே மனிதனை வெட்டிச் சாய்க்கும், மனித இரத்தத்தை ஆறாக ஓடச் செய்யும் நிலை ஏற்படுகிறது.
   
புரோகிதரர்களும், அரசியல்வாதிகளும் தங்களின் அற்ப சுகங்களை தியாகம் செய்து மக்களின் நல்வாழ்வுக்கு துணை செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது குதிரைக் கொம்பாகும். எனவே மக்களே அவர்களின் கெடுதிகளைப் புரிந்து அவர்களை ஓரம் கட்டவேண்டும். ஆனால் கைசேதம் கசாப்புக் கடைக்காரர் பின்னால் செல்லும் ஆடுகளைப்போல், மக்கள் வெள்ளமும் இந்த புரோகிதரர்களின் பின்னாலும் அரசியல்வாதிகளின் பின்னாலும் செல்லுவது அதிகரித்தே வருகிறது. காரணம் மக்களிடையே போதிய சுய சிந்தனை இல்லை.
   
மக்களின் இந்த நிலையை மாற்றிட ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி அவனது போதனைகளை கடைப்பிடிப்பதின் மூலம்தான் இவர்களிடமிருந்து இந்த மனித சமுதாயம் விடுபட முடியும்.

எனவே அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இந்த சுயநல வாதிகளான அரசியல் தலைவர்களையும் மதப்புரோகிதரர்களையும் நம்பிச் செயல்படுவதைக் கைவிடுங்கள். உங்களை ஏமாற்றி அவர்கள் ஆதாயம் அடைவதில் இந்த இருசாரரும் கூட்டுள்ளவர்கள்தான்.

இந்த நிலை மாற வேண்டுமானால் மக்கள் இந்த அரசியல் தலைவர்கள் பின்னாலும், மதப்புரோகிதரர்கள் பின்னாலும் கண்ணை மூடிக்கொண்டு குருட்டுத் தனமாகச் செல்வதைக் கைவிட வேண்டும். ஒவ்வோரு ஆணும், பெண்ணும் சுய சிந்தனையாளர்களாக மாற வேண்டும்.
 7:3 اتَّبِعُوا مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ ۗ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ
7:3. (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.
 
thanksto:READISLAM

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சனி கிரகத்தில் உள்ள என்செலாடஸ் என்ற சந்திரனில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வெந்நீர் ஊற்றுகளும், ஐஸ் கட்டிகளும் இருப்பதை கண்டறிந்தனர்.

இந்த நிலையில் ஜேர்மனியைச் சேர்ந்த ஹெய் டெல்பெர்க் பல்கலைக்கழக வானவியல் விஞ்ஞானி பிராங்க் போஸ்ட் பெர்க் தலைமையில் நிபுணர்கள் அந்த நீர் ஊற்றுகள் அங்குள்ள ஏரியில் இருந்து உற்பத்தி ஆவதாக கண்டுபிடித்துள்ளனர்.இதற்கு முன்பு என்செலாடஸ் சந்திரனில் இருக்கும் ஐஸ் படிவங்களை நாசா விண்வெளி மையத்தின் காசினி விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பியது. அதன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் அந்த ஐஸ் கட்டியில் அதிக அளவு உப்பு படிவங்கள் இருப்பதை விஞ்ஞானி பிராங்க் போஸ்ட் பெர்க் தலைமையிலான நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே இங்கு உப்பு நீர் ஏரி இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த உப்பு படிவங்களில் 30 சதவீதம் என்செலாடஸ் சந்திரனின் நீரூற்றுகளில் உள்ளது. நீரூற்றுகள் 2 ஏரிகளில் இருந்து வருகின்றன.

அதில் ஒன்று என்செலாடஸ் மேற்பரப்பின் அருகே அமைந்திருக்க வேண்டும் என்றும் இது மிகவும் பெரியதாகவும், ஆழமாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

thanks t; z9tech.com

கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் புகை பிடிக்கும் பழக்கத்தால் கருவில் உள்ள குழந்தை பாதிக்கப்படுகிறது. சிகரெட் புகையில் உள்ள ரசாயனங்கள் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக கருவில் உள்ள குழந்தைக்கு நல்ல கொலஸ்ட்ரால்களை குறைத்து விடுகிறது. இந்த அளவு குறைவதால் பிறக்கும் குழந்தைகளுக்கு இதய நோய் ஏற்படுவது 10-15 சதவீதம் கூடுதலாக உள்ளது என புதிய ஆய்வு கூறுகிறது.


இந்த ஆய்வு அறிக்கை ஐரோப்பியா ஹார்ட்னுர்னலில் வெளியாகி உள்ளது. நமது உடலில் எச்.டி.எல் எனப்படும் உயர் அடர்த்தி லியோ புரோட்டின் உள்ளது.

இந்த நல்ல கொலஸ்ட்ரால் இதயத்தில் இருந்து உடல் உறுப்புகளுக்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்தக் குழாய்களில் சேதத்தை தடுக்கிறது. இதய நோய் ஏற்படுவதையும் தடுக்கிறது. உடலில் எல்.டி.எல் என்ற கெட்ட கொலஸ்ட்ராலும் உள்ளது. இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் புகைப்பிடிப்பதால் ரத்த அளவில் எச்.டி.எல்.லை குறைத்து விடுகிறது. இந்த ஆய்வு அவுஸ்திரேலியா சிட்னி பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் செலி மேஜர் தலைமையில் நடந்தது. எச்.டி.எல் கொலஸ்ட்ரால் 2-3 சதவீதம் குறைவதன் மூலம் இதய பகுதி ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டு காரனோரி இதய நோய் அபாயம் ஏற்படுகிறது.

மேற்கத்திய நாடுகளில் 15 சதவீதப் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது புகைப்பிடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை கண்டு கொள்வது இல்லை. அவர்கள் கர்ப்பமாக இருக்கும் போது தொடர்ந்து புகைபிடிக்கிறார்கள்.

thanks to; z9tech.com

பூமியின் காந்த ஈர்ப்பு தன்மையை உணரும் சக்தி மனித கண்களில் உள்ள புரதத்திற்கு உள்ளது. பறந்து செல்லும் பூச்சிகளின் கண்களில் காந்தப்புலம் தெரிவது இல்லை.

அதே பூச்சிகளுக்கு மனித கண் புரதத்தை செலுத்திய போது அந்த பூச்சிகள் பூமியின் காந்த புல பகுதியை கடக்கும் போது பதில் அளிப்பதாக இருந்தது. காந்த திசையை காட்டும் கருவியாக மனித கண் புரதம் இருக்கும் என்ற ஆய்வு விவரம் நேச்சர் கொம்யூனிகேஷன்ஸ் ஆய்வு இதழில் வெளியாகி உள்ளது.இந்த ஆய்வு குறித்த சர்ச்சை நீடித்த போதும் புதிய கண்டுபிடிப்பு ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. மனிதர்களை போல இடம்பெயரும் பறவைகளுக்கு பதிவு செய்யும் கிரிப்டோகிராம் மூலக்கூறு இருப்பது தெரியவந்துள்ளது.

1980ம் ஆண்டு முதல் மனித கண் புரதம் குறித்து மான்செஸ்டர் பல்கலைகழக பேராசிரியர் ரொபின் பேக்கர் ஆய்வு மேற்கொண்டு இருந்தார். அதில் மனிதர்களுக்கு காந்த சக்தி அறியும் ஆற்றல் இருப்பதையும் கண்டறிந்தார்.

பழமை வாய்ந்த புரதம் பெரும் வடிவ நிலைகளாக இருக்கும் போது கிரிப்டோ கிராம் என அழைக்கப்படுகின்றன. பூமியில் ஒவ்வொரு விலங்குக்கும் இந்த புரதம் உள்ளது.

இடம்பெயரும் பறவைகள், மொனார்கோ பட்டாம்பூச்சி, பழப்பூச்சிகள் ஆகியவற்றுக்கு தாங்கள் செல்லும் பாதையை கண்டறிய கண்ணில் உள்ள கிரிப்டோகிராம் புரதம் உதவுகிறது.

thanks to;z9tech.com

கையடக்கத் தொலைபேசியின் பற்றரி சார்ஜ் குறைந்து விட்டால் அதை மீண்டும் சார்ஜ் செய்வதற்கான புது வகை T-ஷேர்ட் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்தப் புதிய கண்டு பிடிப்பு இவ்வார இறுதியில் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது. தொலைத்தொடர்புத் துறை ஜாம்பவான்களான ஒரேன்ஜ் நிறுவனமே இந்த புதிய கண்டுபிடிப்பை அறிமுகம் செய்யவுள்ளது.


தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் தாங்கள் அணிந்திருக்கும் இந்த T-ஷேர்ட்டில் போனை இணைத்து சார்ஜ் செய்து கொள்ளலாம்.

இவ்வார இறுதியில் இடம்பெறவுள்ள கிளஸ்டென்பரி திருவிழாவில் இந்த T-ஷேர்ட் செய்முறை ரீதியாக அறிமுகப்படுத்தப்படும். ஓசை அலைகளை அடிப்படையாகக் கொண்டு மிக இலகுவான தொழில் நுட்பத்தில் இந்த T-ஷேர்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

ஓசை அலைகளின் அழுத்தங்களை உள்வாங்கி அதை மின்சக்தியாக மாற்றி பற்றரிக்குள் செலுத்தி அதற்கு வலுவூட்டுவது தான் இந்தத் தொழில் நுட்பம. இதன்படி அதிக சத்தத்தோடு இசையை உள்வாங்கி அதிலிருந்து கிடைக்கும் அழுத்தங்களை சக்தியாக மாற்ற முடியும்.

எனவே இந்த T-ஷேர்ட்டை அணிந்து கொண்டு எவ்வளவு சத்தமாக இசையைக் கேட்கின்றோமோ, அவ்வளவு விரைவாக பற்றரியை சார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும் உற்பத்தியாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
வார இறுதியில் இடம்பெறவுள்ள கிளஸ்டென்பரி திருவிழாவின் போது ஒரேன்ஜ் நிறுவனம் பலருக்கு இந்த உற்பத்தியை அணிவித்து நேரடியாக அதன் செயற்பாட்டைப் பரீட்சிக்கவுள்ளது.

thanks to;z9tech.com

நாம் அனைவரும் வீடியோவினை பார்க்க அதிகமாக நாடும் தளம் யூடியூப் ஆகும். இந்த தளத்தில் எண்ணற்ற வீடியோக்கள் உள்ளன.
அவற்றில் ஒரு சில வீடியோக்களை புக்மார்க் செய்து வைத்திருப்போம்.

யூடியூப் வீடியோவினை நாம் முழுத்திரையிலையோ அல்லது குறிப்பிட்ட வடிவில் மட்டுமே பார்க்க முடியும். யூடியூப் வீடியோக்களை ஓன்லைனில் இருந்த படியே நமக்கு விருப்பமான வடிவில் பார்க்க முடியும். மேலும் இதனுடைய தோற்ற திரையையும் நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.இதற்கு Youtube Embeded Code என்னும் மென்பொருள் உதவி செய்கிறது.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பின் ஒப்பன் செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான யூடியூப் வீடியோவில் URLயை உள்ளிடவும்.

பின் அகலம், உயரம், நிறம் போன்றவற்றை மாற்றியமைத்துக் கொள்ளவும். பின் Generate Code என்னும் பொத்தானை அழுத்தி அந்த XHTML கோடினை கணணியில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

வேண்டுமெனில் குறிப்பிட்ட திரையிலேயே Perview பார்த்துக் கொள்ளவும் முடியும். பின் சேமித்த XHTML கோப்பை உலவியில் ஒப்பன் செயதால் நீங்கள் வடிவமைத்த வடிவில் வீடியோவானது இருக்கும். இனி வழக்கம் போல வீடியோவினை காண முடியும்.

இணையதள முகவரி

thanks to;z9tech.com

ஆரோக்கியமாக இருப்பவர்கள் உடல் பருமனை பற்றி கவலைப்பட வேண்டாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாநில பொது மருத்துவ மற்றும் பல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உடல் பருமன் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ஆதர்ஷ் குப்தா தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 454 பேரின் மருத்துவ குறிப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர்களிடமும் பரிசோதனைகள் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.ஆய்வு சொல்லும் தகவல்கள் வருமாறு: உடல் எடையை உயரத்தின் இரு மடங்கால் வகுத்து கிடைக்கும் தொகை பி.எம்.ஐ(பாடி மாஸ் இண்டக்ஸ்) எனப்படுகிறது. இது 18.5 முதல் 25 வரை இருப்பது நார்மல் என கருதப்படுகிறது. குறைந்தால் ஒல்லி என்றும் அதிகரித்தால் குண்டு என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

25-30 இருப்பது அதிக எடை என்றும், 30-35 இருப்பது சுமார் குண்டு, 35-40 என்பது அதிக குண்டு, 40-க்கு மேல் இருந்தால் அதிகபட்ச குண்டு என்றும் கூறப்படுகிறது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 454 பேரில் 135 பேரின் பி.எம்.ஐ அதிகமாக இருந்தது. பருமனாக இருந்தாலும் அவர்கள் ஆரோக்கியமாகவே இருந்தனர்.

thanks to;z9tech.com

தற்போதைய அறிவியல் யுகத்தில் உடலில் இழந்த உறுப்புகளை மீண்டும் புதிதாக பொருத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கண்டுபிடிப்பை மருத்துவ உலகம் கண்டுவருகிறது.

நமது உடலில் மிக மென்மையான பகுதி கண்ணாகும். வயதான காலத்தில் பாரம்பரியம் காரணமாக பார்வை இழப்பு ஏற்படுவதுண்டு. இந்த பார்வை இழப்பை சரி செய்து பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் பார்வை பெற புதிய ஆதார செல்களை(ஸ்டெம் செல்) கண்களுக்குள் செலுத்தும் சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பார்வை இழந்த இரண்டு பெண்களுக்கு லட்சக்கணக்கான கரு ஆதார செல்கள் செலுத்தப்பட்டு அவர்களுக்கு பார்வை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கண்களுக்குள் ஆதார செல்களை செலுத்தும் துவக்க கட்ட சோதனை அமெரிக்காவில் நடைபெறுகிறது.இருப்பினும் இந்த ஆதார செல் சோதனை பிரிட்டன் நோயாளிகளுக்கு வரவிருக்கும் இளவேனிற்காலத்தின் போது மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பார்வை இழப்பு ஏற்பட்ட விலங்குகளுக்கு ஆதார செல் செலுத்தும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் போது மிக அற்புதமான முடிவு கிடைத்தது. ஆதார செல்கள் செலுத்தப்பட்ட விலங்குகள் புதிய கண் பார்வை பெற்றுள்ளன. இந்த அதிநவீனமான சிகிச்சை மனிதர்களுக்கு மேற்கொள்ளப்படும் போது நல்ல பலனளிக்கும் என மருத்துவ விஞ்ஞானிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆதார செல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இரண்டாவது பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்படுகிறது. முதல் பரிசோதனை கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்றது.

புதிய சிகிச்சை முறை குறித்து மாசாசூட்ஸ் அதிநவீன செல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் மருத்துவர் லாங்சா கூறுகையில்,"முற்றும் சிகிச்சை அளிக்க முடியாத நோய்களுக்கு மட்டுமல்லாமல் பலவீனம் அடைந்த கண் நோய்களுக்கும் சிகிச்சையை இந்த ஆதார செல்கள் மூலம் அளிக்க முடியும்" என்றார்.

thanks to;z9tech.com

ஆங்கில வார்த்தைக்கு தமிழ் மொழி பெயர்ப்பு கொடுக்க பல தளங்கள் உள்ள நிலையில் தமிழ் வார்த்தைக்கு விரிவான விளக்கம் கொடுப்பதற்கு ஓன்லைன் தமிழ் அகராதி உதவுகிறது.

அழகு கொஞ்சும் தமிழில் உள்ள வார்த்தைகளை பல நேரங்களில் நமக்கு விளக்கம் தெரியாமல் முழித்து கொண்டு இருப்போம்.

இணையதளங்களில் தேடினாலும் இதற்கான விளக்கம் பல நேரங்களில் தெரிவதில்லை. ஆனால் இனி தமிழ் வார்தைக்கு உண்டான விளக்கத்தை எளிதாக புரியும் படி அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.தமிழ் வார்த்தைகளுக்கான விளக்கத்தை அனைவரும் நொடியில் அறிந்து கொள்ளும் பொருட்டு தமிழ் அகராதி 2004ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தமிழ் அகராதியில் நாம் முந்தைய காலத்தில் பயன்படுத்தி வந்த அரிய தமிழ் வார்த்தைகளுக்கான விளக்கத்தை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். கூடவே நாம் கொடுக்கும் வார்த்தைக்கு இணையான வார்த்தையையும் காட்டுகிறது.

திருக்குறளில் கூட பல வார்த்தைகளுக்கு விளக்கத்தை தேடும் நமக்கு இத்தளம் ஒரு அரிய பொக்கிஷம் தான். தமிழ் பேராசியர்கள் மற்றும் தமிழ் துறையில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கும் இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி

thanks to:z9tech.com