அல்லாஹ்வின் நல்லடியார்கள் வெளி உலகுக்குத்தான் இறந்தவர்கள், உண்மையில் அவர்கள் கப்ருக்குள் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பலரின் கற்பனையாக இருக்கிறது. நபிமார்களோ, அல்லது அவ்லியாக்களோ மரணித்துவிட்டார்கள் என்று கூறப்பட்டால், அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதுதான் பொருள். அவர்கள் மரணித்த பிறகும் உயிருடன் இருக்கிறார்கள் என்று சொன்னால் அவர்களை அடக்கம் செய்த அனைவரும் உயிருடன் ஒருவரை கொலை செய்த குற்றத்தைத்தான் ஏற்கவேண்டிய நிலை ஏற்படும்.
ஆகவே நபிமார்கள், ஷஹீத்மார்கள், அவ்லியாக்கள் ஆகியோர் மரணித்து விட்டால், அவர்களின் உடல்களை கழுவிக் குளிப்பாட்டி கபனிட்டு ஜனாஸா தொழவைத்து அடக்கம் செய்தாக வேண்டும் என்று முஸ்லிம்கள் மீது இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.
وَلاَ تَقُولُواْ لِمَنْ يُقْتَلُ فِي سَبيلِ اللّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاء وَلَكِن لاَّ تَشْعُرُون َ
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள். அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ளமாட்டீர்கள். (2:154) எனினும் நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள் என்பதிலிருந்து அதனைப்பற்றிய அறிவை நமக்கு கொடுக்கப் படவில்லை என்பதை இதன் மூலம் விளங்கலாம்.
நிச்சயமாக ஷுஹதாக்கள் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் உயிர் பறவைகளின் உடல் கூட்டில் விடப்பட்டு சுவர்க்கத்தில் தனது விருப்பத்திற்கேற்ப உலாவிக் கொண்டிருக்கின்றன என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரலி) நூல்:முஸ்லிம்)
உங்கள் சகோதரர்கள் உஹது போரில் கொல்லப்பட்டபோது அல்லாஹ் அவர்களின் உயிர்களை பச்சைப் பறவையின் உடல் கூட்டில் அமைத்து விட்டான். அவை சுவர்க்கத்துடைய ஆறுகளில் தண்ணீர் அருந்திக் கொண்டும், சுவர்கத்தின் (மரங்களின்) பழங்களை புசித்துக் கொண்டுமிருக்கின்றன. (இப்னு அப்பாஸ்(ரலி) நூல்:அஹ்மத்
உயிர் தியாகம்(ஷஹீத்துகள்) செய்தவர்களைப் பற்றி அல்குர்ஆனில் "அவர்களை மரணித்து விட்டார்கள் என்று நீங்கள் கூறாதீர்கள்" என்று கூறி விட்டு "எனினும் அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் ஆனால் (இதனை) நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள் என்றும் கூறுகிற்து. ஆகவே நாம் கற்பனை செய்வதுபோல் அவர்கள் தமது கப்ருகளில் உயிராக இருந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தவறாகும். ஏனெனில் அவர்களின் நிலைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அறிவிப்பின் படி சுவர்க்கத்தின் பறவை அமைப்பில் அவர்கள் உலாவிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருப்பதால் இதுவே உண்மை என்பது தெளிவாகிறது.
மூமின்களின் உயிர் சுவர்க்கத்தின் மரத்தில் (உள்ளவற்றை) சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பறவையின் அமைப்பில் இருந்து கொண்டிருக்கும். பின்னர் அல்லாஹ் அவரை எழுப்பும்போது அவருடைய உடலில் அதை மீண்டும் கொண்டு வந்து சேர்ப்பான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (கஃபுபின் மாலிக்(ரலி) நூல்:அஹ்மத்)
ஏனைய மூமின்களாகிய நல்லடியார்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்.
கப்ரில் மனிதன் வைக்கப்பட்டு விசாரணைகள் முடிந்த உடன் "நான் எனது குடும்பத்தாரிடம் சென்று எனக்குக் கிடைத்த மகத்தான வாழ்வை பற்றி கூறிவிட்டு வருகிறேன்" என்று கேட்பார். (அதற்கு) புது மணமகனை போல் அயர்ந்து உறங்குவீராக! என்று அவருக்குக் கூறப்படும். ஆதாரம்: திர்மிதி அறி:அபூஹுரைரா(ரழி)
மேற்கூறிய நபிமொழிகளிலிருந்து இறந்துவிட்ட ஏனைய நல்லடியார்கள் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர் என்றே அறிய முடிகிறது.
மேலும் அறிய
0 comments:
Post a Comment