போலி ஜம் ஜம் தண்ணீர்

, , No Comments
ஆதிக்க சக்திகள் இஸ்லாத்திற்கு ஏதிராக என்னென்ன செயல்கள் எல்லாம் செய்யலாமோ அத்தனையும் செய்து விட்டது. இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்டப்பின் மேலை நாடுகளில் பல மதத்தவர்கள் இஸ்லாத்தினை அதிகஅதிகமாக மனமார ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். இதனை பிடிக்காத மேலை நாட்டின் ஆதிக்க சக்திகள் இஸ்லாம் ஒரு தீவிரவாதம். இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்று சொல்லிக்கொண்டு பல நாடுகளை சுரண்டிக்கொண்டு அந்நாட்டின் பொருளாதாரத்தினை மெய்ந்து வருகிறது. அத்துடன் எந்த விதமான காரணமும் இல்லாமல் குழந்தைகளையும் மற்றும் பெண்களையும் கொலை செய்தும் வருகிறார்கள். போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொலை செய்ய கூடாது என்று மார்க்கம் சொல்கிறது. ஆப்கானிஸ்தான், ஈராக், பாலஸ்தீனம், போன்ற நாடுகளில் அட்டூழியம் செய்துக்கொண்டு இருக்கும் மேலை நாடுகள் ஈரானையும் மற்றும் சிரியாவையும் தாக்குவதற்கு தாக்க தருணம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. அங்குள்ள மக்களிடமும் ஒற்றுமையானதும், அங்குள்ள ஆட்சியாளர்களிடமும் பலமும் இருப்பதால் அங்கு அவர்கள் வாலை ஆட்ட முடிய வில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எதிரிகளுடன் போரிடுவதற்கு அல்லாஹ்வின் திருப்பெயர் மொழிந்தும் அவனது பேருதவி மற்றும் ஒத்தாசையுடனும் இறைத்தூதர் காண்பித்துத் தந்த நெறியின் மீது நிலைத்திருந்து கொண்டும் புறப்படுங்கள். (ஆனால் போரிடும் போது) இயலாத நிலையில் உள்ள முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் ஆகியோர்களின் மீது கை வைக்காதீர்கள். போரில் கைப்பற்றப்படும் பொருள்களில் மோசடி செய்யாதீர்கள். கைவசம் வருகின்ற அனைத்துப் பொருள்களையும் ஓரிடத்தில் ஒன்று திரட்டுங்கள். நன்மையின் பாதையை, இஹ்ஸானுடைய நெறியை மேற் கொள்ளுங்கள். நற்பணியாற்றுவொரைத் திண்ணமாக அல்லாஹ் நேசிக்கின்றான். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)

சென்ற மாதம் எந்த விதமான முன்னெறிவிப்பு இல்லாமல் அமெரிக்க அதிபர் ஈராக் நாட்டிற்கு விஜயம் செய்து உள்ளார். அங்குள்ள படை வீரர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் நான் எந்த விதமான முன்னெறிவிப்பும் செய்ய வில்லை என்று அவர் கூறினார். சாதாரணமான நாமே எங்கேயாவது வெளியே செல்லும் போது யாரிடமாவது நான் இங்கு போகிறேன்.. அங்கு போகிறேன் என்று சொல்லி விட்டு தான் செல்வோம். ஆனால் நாட்டின் அதிபர் எப்படி ஒரு கீழ்தரமாக நடந்துக் கொண்டு உள்ளார். பாருங்கள்..

2003ல் 45,000 படைகளை ஈராக்கிற்கு அனுப்பிய இங்கிலாந்து நாட்டின் பிரதமர் சென்ற வாரம், ஈராக்கிலிருந்து அதிகமான படைகளை வாபஸ் பெற வேண்டும் என்பதற்காக சென்ற வாரம் ஈராக் நாட்டிற்கு சென்று, அங்குள்ள ஆட்சியாளர்களிடம் இது பற்றி கருத்து கூறியுள்ளார். அதுபோல் படைகளும் வாபஸ் பெறப்பட்டது.

மேலை நாட்டு விமான நிலையங்களில் இஸ்லாமியர்கள் படும் அல்லல்கள் சொல்லி மாளாது. அவர்கள் பாஸ்போர்ட்டு ஒரிஜினலா, விசா ஒரிஜினலா என்று துருவி துருவி விசாரிக்கிறார்கள். முஹம்மது என்று பெயரினை கண்டால் போது அவர்களுக்கு ஏற்படும் எரிச்சல்களை எண்ணிலடங்காது. நீ எங்கு இருந்து வருகிறாய்.. எவ்வளவு பணம் உள்ளது.. எத்தனை நாளைக்கு இங்கு தங்குவாய்.. உன்னுடைய ஸ்பான்ஸர் யார்.. இங்கு வருவதற்கு என்ன துணிச்சல் உனக்கு என்று பல வீணான கேள்விகள்.. இது போல் பல கேள்விகள் அதிகமாய் இருக்கும். மற்றும் முஹம்மது என்ற பெயரில் யாராவது பேங்கிலிருந்து அதிகமாக பணம் எடுக்கிறார்களா..? என்ற விசாரிக்கவும் பல கேமரா கண்கள்..இருக்கின்றன.

உலக மக்கள் அனைவருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடிய இறுதித்தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை, அவர்கள் சித்திரமாக வரைந்தனர். அதன் பின்னர் நடந்த சம்பங்கள் நமக்கு மனதில் ஒரு வேதனையினை தந்தது. (நன்றி : இது தான் இஸ்லாம் இணையத்தளம் - மாற்றங்கள் அவசியமானது என்ற கட்டுரை பகுதியின் சில பகுதிகள்..)இந்த சம்பவத்தினை நடத்திய நாடுகள் டென்மார்க் மற்றும் சுவீடன் நாடுகள் என்பதும் நமக்கு தெரிந்தது தான்.

தற்போது அவர்கள் கையில் எடுத்து இருப்பது என்னவென்றால்.. இஸ்லாமியர்கள் புனித நீராக கருதும் ஜாம் ஜாம் தண்ணீரினை. ஆம்.. லண்டனில் ஜாம் ஜாம் தண்ணீரை போலியாக தயாரித்து மக்களிடம் விற்று பல கோடிகளை சம்பாதித்து உள்ளது சில கேடிகள். சவூதி அரேபியாவிலிருந்து வந்த சுத்தமான ஜாம் ஜாம் தண்ணீரில், லண்டனில் உள்ள குழாய் தண்ணீரை சேர்த்தும் மற்றும் உப்பினையும் சேர்த்து அங்குள்ள மக்களிடம் ஒரு சிறிய அளவிலான பாக்கட் தண்ணீரை மூன்று பவுண்ட் என்ற கணக்கில் விற்பனை செய்து உள்ளார்கள். அதனை அறியாத இங்கிலாந்து முஸ்லிம் உள்ளங்கள் அதனை வாங்கி குடித்து உள்ளனர். இந்த விற்பனையில் பல லாபங்களை சம்பாதித்து உள்ளன அங்குள்ள சில புல்லுருவிகள். மக்கள் புனிதமாக கருதும் ஜாம் ஜாம் நீரினை குடிப்பதால் எந்த விதமான பயனும் கிடையாது என்ற மாயையினை உண்டாக்க வேண்டும் என்பதும் தான் அவர்களின் நோக்கம். ஆனால் அல்லாஹ்வின் அருட்கொடையால் அந்த ஏமாற்றமானது அவர்களின் முகங்களை கிழித்து விட்டது என்றால் மிகையாகாது.

லண்டனில், மத்திய பள்ளி வளாகத்தில் உள்ள புத்தக கடை ஒன்றில் ஒரு வாரத்தில் மட்டும் 20,000 லிட்டர் அளவானது போலி ஜாம் ஜாம் தண்ணீர் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர். யூனுஸ் டினாஷ் (Dr- Yunes Teinaz – Environmental Health Expert) அவர்கள் குறிப்பிடுகையில், இந்த போலியான தண்ணீரை குடிப்பதால் உடல் நலத்திற்கு கேடினைத்தான் தரும். கள்ளச் சந்தைக்காரர்கள் தாங்களின் விற்பனையை மேன்படுத்த வேண்டும் என்பதற்காக இது போல் சிலர் சில்லரைத்தனமாக செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆகையால், லண்டனில் மக்களே.. தாங்கள் உஷாராக இருக்கவும் என்றும் சொன்னார். ஒரு சில கயவர்கள் செய்யும் செயலால் இது போல் அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. எது உண்மையானது எது போலியானது என்பதினை நாம் காண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆரோக்கியம் இல்லாத நீரினை குடிப்பதால், உலகில் பல குழந்தைகள் இறக்க நேரிடுகிறார்கள். முக்கியமாக ஆறு மாத கைக்குழந்தைகளையும் மற்றும் சிறுவர்களை வெகு விரைவில் நோயானது தாக்க வாய்ப்பு உண்டாகிறது. நைட்ரஜன் கலக்காத நீரினை குடிக்காத பட்சத்தில் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பல சிறார்கள் இறக்கிறார்கள்.

1971 ஆம் ஆண்டு உண்மையான ஜாம் ஜாம் தண்ணீரானது ஆராய்ச்சியாளர்களால் ஆராயப்பட்டது. சாதாரண தண்ணீரை விட அதிகமான கால்சியம் மெக்னியம் மற்றும் உள்ள தாதுப்பொருட்கள் ஜாம் ஜாம் தண்ணீரில் உள்ளது. ஆகையால் மக்கள் அதனை பருகலாம் என்றும் கூறப்பட்டது. அத்துடன் புனித யாத்திரைக்கு மக்கா மற்றும் மதீனா செல்லும் அவர்கள் அதனை அதிகமாக குடிப்பதால் அவர்கள் எப்போது சோர்வு அடையாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கிறார்கள் என்றும் அந்த ஆய்வானது குறிப்பிட்டது.

லண்டனில் உள்ள உணவுக்கட்டுப்பாடு வாரியமானாது அங்குள்ள மக்களிடம் எச்சரிக்கை ஒன்றினை விடுத்து உள்ளது. இது போல் கள்ள சந்தைகளில் வரும் எந்த பொருளையும் மக்கள் வாங்க வேண்டாம். அதனை தவிர்த்துக் கொள்ளவும் என்றும் கூறி உள்ளது.

இந்த எச்சரிக்கையானது லண்டனில் உள்ள மக்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் தான். விழிப்புணர்வு என்பது நம்மிடம் எப்போது இருக்க வேண்டும். அப்போது தான் ஆதிக்க சக்திகள் நம்மீது தொடுக்கும் எல்லா வகையான எதிர்ப்புகளையும் சந்திக்க முடியும். இஸ்லாமிய மக்களே.. தாங்களும் ஆதிக்க சக்திகள் நாட்டின் போலி பொருள்களை வாங்குவதையும், உபயோகப்படுத்துவதையும் தவிர்த்துக்கொள்ளவும். கவர்ச்சிகரமான முறையில் அந்த பொருட்கள் இருக்கும். ஆனால் அந்த பொருளினால் எந்த விதமான பயனும் நமக்கு கிடைப்பதில்லை.

(விசுவாசங்கொண்டோரே) உங்களில் ஒரு கூட்டத்தார், அவர்கள் (மனிதர்களை) நன்மையின் பால் அழைக்கின்றவர்களாகவும்,நல்லதைக்கொண்டு (மக்களை) ஏவுகின்றவர்களாகவும், தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்குகின்றவர்களாகவும் இருக்கட்டும், அவர்களே தாம் வெற்றி பெற்றோர்.சங்கைமிகு அல்குர்ஆன் 3:104

0 comments:

Post a Comment