செய்யதுனா ஈசா நபியும் வாகனமும்
ஒருநாள் செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்களிடம் அவர்களின் சீடர்களில் ஒருவர் "எப்போது பார்த்தாலும் நடந்து கொண்டே இருக்கிறீர்களே, வாகனத்தில் ஏறி சென்றால் நலமாக இருக்குமே" என்று கூறினார்.
அதற்கு செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள் "என்னிடம் வாகனம் வாங்க பணம் இல்லையே" என்று கூறினர். அது கேட்ட அவர் உடனே ஒரு கழுதையை வாங்கி அவர்களுக்கு அன்பளிப்பு செய்தார். அதிலே ஏறி அவர்கள் இவர்ந்து சென்றனர்.
இரவானதும் அதற்கு தீனி போடுவது பற்றிய கவலை அவர்களுக்கு ஏற்பட்டது. உடனே அக்கழுதையை தந்தவரிடமே திருப்பி கொடுத்து, "என்னுடைய கவனத்தை அல்லாஹ்வை விட்டும் திருப்பக்கூடிய எதுவும் எனக்கு தேவை இல்லை" என்று கூறிவிட்டனர்.

0 comments:
Post a Comment