சுவர்க்க லோக தலைவி அன்னை பாத்திமா நாயகியாரின் -

, , No Comments
ஊரெங்கும் நாளை வர இருக்கும் பெருநாளுக்காக சந்தூஷமும், குதூகலமும் கொப்பளிக்க மக்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர். இருலோக இரட்சகரான முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் அருந்தவப்புதல்வி சுவர்கலோக தலைவி பாத்திமா நாயகி திருக்குர்ஆன் வசனங்களை ஓதியவர்களாக எளிய ஒட்டுப்போட்ட ஆடையில் திரிகையில் கோதுமை அரைத்தவகர்கலாக உள்ளார்கள். இந்த கோதுமையும் எப்படி வந்தது என்றால்...

வெளிய சென்று வீடுதிரும்பிய அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பாத்திமா உண்பதற்கு ஏதும் உணவு இருக்கின்றதா? என வினவ இருவேளை பட்டினிதான், குழந்தைகளும் பட்டினியோடு தான் விளையாண்டு கொண்டுள்ளனர். கோதுமையோ, மாவோ எதுவும் இல்லை என பாத்திமா நாயகியார் பணிவுடன் பதிலளிகிரார்கள். உடனே வெளியே கிளம்பிய அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எதாவது வேலை கிடைக்குமா என்று தேடி அலைகின்றார்கள். முடிவில் ஒரு யூதன் தன ஒட்டகத்திலிருந்து ஏராளமான மூட்டைகளை இறக்குவதற்கு யோசனையில் இருக்கையில் அய்யா ! ஏதும் வேலை இருக்கின்றதா ? என்று குரல் கேட்டு திரும்பிய யூதன் ஆம் அந்த பொதி மூட்டைகளை இறக்கி உள்ளே அடுக்க வேண்டும்.

அடுத்த சில நிமிடங்களில் பசியையும் பொருட்படுத்தாது வேலையை கட்சிதமாக முடித்து வேர்வை வழிய தம்முன் நின்ற அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கையில் ஒரு திர்ஹம் தருகிறான் அந்த யஹூதி. சட்டென்று தம் உள்ளங்கைகளை மூடியவர்களாக விருவிருவென நடக்க ஆரம்பித்தார்கள்.

பேரம் ஏதும் பேசாமல் கொடுத்ததை வாங்கிக் கொண்டு போகிறாரே என யஹூதி திகைப்புடன் விழிகள் விரிய நிற்கின்றான். அவனுக்கு எங்கே தெரியபோகின்றது... அவசரமாக போனால் தனி கடை மூடும் முன் கோதுமையோ, மாவோ வாங்க முடியும். தேடிப்பிடித்து அவ்வாறே கடைசியாக சாதபூகும் முன் ஒரு டிர்ஹதை கடைக்காரனிடம் கொடுத்தால் கடைக்காரன் அதற்கு சிறிது கோதுமையை தருகின்றான். ஓட்டமும் நடையுமாக வீடு வந்து கொடுத்த கோதுமைதான் பாத்திமா நாயகி அவர்கள் அரைத்துக் கொண்டுள்ள கோதுமை. இது மாவனா பின்பு ரொட்டி சுட்டு எல்லோரம் பசியாற வேண்டும்.

இந்நிலையில் விடிந்தால் பெருநாள், பெருமானாரின் கண்மணிகளான இமாம் ஹசனாரும், ஹுசைனாரும் துள்ளி குதித்தவாறே உள்ளே வந்தார்கள். அன்னை பாத்திமாவை கட்டி அணைதவர்களாக அம்மா பெருநாளுக்கு உடுத்தி கொள்ள எங்களுக்கு புத்தாடைகள் இருக்கின்றனவா? என ஆவலுடன் கேட்டனர். சுவனத்தின் தலைவி பாத்திமா நாயகி ஆம் அல்லாஹ் தருவான் என பதில் உரைத்தார்கள். இப்பதிலில் திருப்தி அடைதவர்கலாக பாத்திமா நாயகியின் குலக்கொளுந்துகலான இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

சுப்ஹு தொழுகைக்கு தயாராகி செவ்வனே தொழுகையை முடித்து தம் இரு கரமேந்தியவர்களாக, யா அல்லாஹ் ! அகிலங்கள் அனைத்தையும் படைத்தது பிரபாலிப்பவனே ! உன் சிருஷ்டிகள் மீது உன்னையன்றி யார் கருணை புரிவார், உன் ஹபிபும் மஹ்பூபுமான ரசூல்லுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பொருட்டால் பிள்ளைகள் இருவருக்கும் புத்தாடை வழங்குவாயாக ! என்னை இக்கட்டிலிருந்து காப்பாற்றுவாயாக ! என இறையஞ்சியாவரே இருக்கையில் வாசலில் யாரோ அழைக்கும் குரல் கேட்டு விரைகிறார்கள். தூய வெள்ளாடை உடுத்திய பெரியவர் இந்தாருங்கள் என பொட்டலத்தினை அளிக்கிறார்கள். பொட்டலத்தை பிரித்து பார்க்கையில்... அம்மா புத்தாடைகள் எங்களுக்கு தாருங்கள் நாங்கள் குளித்து விட்டோம் ! என சந்தோசத்துடன் கூறிய குழந்தைகளுக்கு புத்தாடைகளை எடுத்து அளிக்கின்றார்கள். வல்ல நாயனுக்கு நன்றி செய்தவர்களாக.


அருமை நண்பர்களே ! நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ஈரக்குலைக்கு ஒப்பான அன்பு மகள் பாத்திமா நாயகி அவர்களுக்கு செல்வதிருக்கோ, தேவையானவற்றை அளிப்பதிலோ எந்த குறையும் வைக்க மாட்டான் வல்ல நாயன். எனினும் வறுமையை அவர்களாகவே விரும்பி ஏற்றி கொண்ட ஒன்று. அவ்வாறு உலக ஆசைகளையும், தேவைகளையும் வெறுத்தார்கள். எளிமையே விரும்பினார்கள். பணிவும் ஷுகூர் செய்யும் பண்பும் தவக்களும் மிகைத்தவர்களாக வாழ்ந்தார்கள். எல்லாவற்றிக்கும் மேலாக வஸிலா தேடுவதின் பாங்கையும், சிறப்பையும் இங்கே நாம் அனைவரும் உணர வேண்டும்.

நாகத்தின் பொருட்டாலும், சுவர்கலோகத் தலைவி அன்னை பாத்திமா நயகியாரின் பொருட்டாலும் இருலோக நன்மைகளை நம் அனைவருக்கும் அல்லாஹ் வழங்குவானாக !!! ஆமீன் ! ஆமீன் ! ஆமீன் ! பி ஜாஹே சையதில் முர்ஸலீன் !!!
--- Retrieved information from - "Dargah" Quaterly Magazine --- March - 2010

0 comments:

Post a Comment