ஸஹாபாக்களை பின்பற்றலாமா?

, , No Comments
ஆம், நிச்சயமாக பின்பற்றலாம்.*இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், இன்னும் நற்செயலைக்கொண்டு அவர்களைப் பின்பற்றியவர்கள் (ஆகிய) அவர்களைக்கொண்டு அல்லாஹ் பொருந்திக்கொண்டான். அவர்களும் அவனை பொருந்திக்கொண்டார்கள். அவர்களுக்காக சொர்க்கங்களையும், அவன் தயார் செய்து வைத்துள்ளான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவற்றில் எப்பொழுதும் அவர்கள் நிறந்தரமாக இருப்பார்கள். இது மகத்தான வெற்றியாகும்.


(அல் குர்ஆன் 9:100)


*கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் கூறினார்கள்:


எனது தோழர்கள் நட்சத்திரங்களை போன்றவர்களாவார்கள். எனவே அவர்களில் நீங்கள் யாரை பின்பற்றினாலும் நேர்வழி அடைவீர்கள்.


மிஷ்காத் 6018


* கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் கூறினார்கள்:


" மேலும் எனக்குப் பின்னால் உங்களில் ஜீவித்து இருப்பவர்கள் அதிகப்படியான குழப்பங்களை காண்பீர்கள். அந்நேரத்தில் என் ஸுன்னத்தையும் நேர்வழி பெற்ற வழிக்காட்டிகளான என் கலீபாக்களின் ஸுன்னத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் அவற்றின் மீது உங்களின் கடைவாய்ப்பற்களை வைத்து கடித்து பிடித்துக் கொள்ளுங்கள்.


திர்மிதி 2676, இப்னு மாஜா 42, அபூதாவுத் 4607, முஸ்னத் அஹ்மத் 4 - 126, மிஷ்காத் 165


*கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் கூறினார்கள்:


" எனது ஸஹாபாக்களை சங்கை செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் தான் உங்களில் மிக சங்கையானவர்கள் ஆவார்கள்."


மிஷ்காத்: 6012, முஸ்னத் அஹ்மத்: 1 - 26


இந்த உலகத்தில் ஸஹாபாக்களை பின்பற்றியவர்கள் தாபியீன்கள், தபஅத்தாபியீன்கள், இமாம்கள், உலமாக்கள், ஸாலிஹீன்கள், மூமினான முஸ்லிம்கள்.


ஆனால் ஸஹாபாக்களை பின்பற்றாதவர்கள் முஹ்தஸிலாக்கள், கவாரிஜியாக்கள், ஷியாக்கள், காதியானிகள், வஹாபிகள்


0 comments:

Post a Comment