ஒதுங்குவதற்கு நிழல்

, , No Comments
ஒரு நாள் செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள் வெட்ட வெளியில் கடும் மழையில் அகப்பட்டு கொண்டனர். ஒதுங்குவதற்கு இடம் தேடியபோது அங்கு ஒரு குடில் தென்பட்டது. அதை நோக்கி சென்றனர். அதில் ஒரு பெண் இருந்தாள். அதில் அவர்கள் நுழையாது வேறிடம் தேடி சென்றனர். ஒரு குகையை கண்டு அதற்குள் எட்டி பார்த்தனர். அங்கு ஒரு சிங்கம் கர்ச்சித்து கொண்டு இருந்தது.

அப்போது செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள் அல்லாஹ்வை நோக்கி, "யா அல்லாஹ்! உன்னுடைய படைப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் இடத்தில் ஒதுங்கி கொண்டு உள்ளன. அவற்றிற்கு நீயே இடங்களை ஒதுக்கி கொடுத்து உள்ளாய். எனினும் எனக்குத்தான் ஒதுங்க ஓர் இடமும் இல்லை" என்று கூறினர்.

அதற்கு அல்லாஹ், "ஈசா! ஒதுங்குவதற்கு உமக்கா இடமில்லை? என்னுடைய ஆழமான அன்பு உமக்கு என்றென்றும் உண்டு. என்னுடைய அன்பு நிழலில்தான் நீர் எப்போதும் ஒதுங்கி நிற்க வேண்டும். இம்மை உமக்கு வேண்டாம். இம்மையின் ஆயுளை விட மறுமையின் ஆயுள் மிக பெரியது. இம்மையில் ஒரு மனிதனின் முழு ஆயுளை மறுமையில் ஒரு தினத்துக்கு ஒப்பிடலாம்" என்று பதிலிறுத்தான். அப்பொழுது அவர்களின் கண்முன் அழகிய மாளிகை ஒன்று காட்சியளித்தது. அல்லாஹ் மீண்டும் அவர்களை நோக்கி "ஈசா! இம்மாளிகை வேண்டுமாயின் உமக்கு கிடைக்கும். ஆனால் நாம் உமக்கு தந்துள்ள நபித்துவமானது இதைவிட எத்துனை மடங்கு மாண்புடையது" என்று கூறினான்

0 comments:

Post a Comment