இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு

, , No Comments
இணைய மறதியால் அவதிப்படகூடாது என்று நினைத்தாலோ அல்லது இணைய நினைவுகள் அனைத்தையும் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தாலோ பேட்ச் லைப் இணைய சேவையை உபயோகப்படுத்தலாம்.

காரணம் இணைய தருணங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொள்ள இந்த சேவை உதவுகிறது. அதாவது பேஸ்புக், டிவிட்டர் மற்றும் வலைப்பதிவு என இணையத்தில் பல இடங்களில் பல விதமாக நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை ஒரே இடத்தில் சேமித்து வைக்க இந்த சேவை வழி செய்கிறது.

இந்த சேவையின் அருமையை உணர அதனை பயன்படுத்தி பார்க்க வேண்டும். ஒரு முறை இந்த சேவையை பயன்படுத்தி பார்த்தீர்கள் என்றால் இது போன்ற சேவை இல்லவே இல்லை என்று மனதார பாராட்டுவீர்கள். இன்னும் சிலர் இது போன்ற சேவையை தான் எதிர்பார்த்திருந்தோம் என்று மகிழ்ச்சி அடைவார்கள்.

அந்த அளவுக்கு மிக அழகாக ஒருவரின் இணைய சுவடுகளை பதிவு செய்து கொள்ள இந்த சேவை உதவுகிறது. இணைய சுவடுகள் என்றால் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் சேவை தளங்களில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள்.

இப்போது பெரும்பாலானோருக்கு பேஸ்புக் பக்கம் இருக்கிறது. பலர் டிவிட்டரிலும் குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் வலைப்பதிவு வைத்திருக்கின்றனர். ஆக கருத்துக்களையோ அனுபவங்களையோ பதிவு செய்வதோ பகிர்ந்து கொள்வதோ இன்று மிகவும் சுலமாகியிருக்கிறது.

ஆனால் பிரச்சனை என்னவென்றால் இவற்றையெல்லாம் தொகுக்கவோ நினைவில் கொள்ளவோ வழியில்லை. உதாரணத்திற்கு பேஸ்புக்கில் சில மாதங்களுக்கு முன் ஒரு தகவலை பகிர்ந்து கொண்டிருப்பீர்கள். அது என்ன என்று இப்போது யோசித்து பார்த்தால் நினைவுக்கு வர மறுக்கும்.
பேஸ்புக்கிலேயே பின்னோக்கி போய் தேடலாம் என்றாலும் அது அத்தனை சுலபமானது அல்ல. ஆனால் பேட்ச் லைப் சேவையை நீங்கள் பயன்படுத்தும் பட்சத்தில் இப்படி தேடுவது கூகுலில் தேடுவதை விடவும் எளிதானது.

ஏன் என்றால் பேஸ்ட் லைப் தளத்தில் உங்கள் பேஸ்புக் பதிவுகள் அனைத்தும் திகதி வாரியாக பதிவாகியிருக்கும். நீங்கள் தேட விரும்பும் நாளுக்கான பக்கத்தை கிளிக் செய்தால் அன்றைய பதிவுகள் முழுவதையுமே பார்க்க முடியும்.

பேஸ்புக்கில் உங்களுக்கு வந்த பின்னூட்டங்கள், புகைப்படங்கள் மற்றும் இணைப்புகள் என எல்லாவற்றையுமே பார்க்கலாம். எதையுமே மறக்க வேண்டியதில்லை. இதே போலவே டிவிட்டரில் செயல்படுபவர்கள் தங்கள் குறும்பதிவுகள் அனைத்தையும் திகதி வாரியாக அணுகலாம்.

பேட்ச் லைப் தளத்தில் நுழைந்ததுமே தோன்றும் பக்கத்தில் இடது பக்கத்தில் நாட்காட்டி இடம் பெற்றிருக்கும். அதில் மாதத்தையும் திகதியையும் தேர்வு செய்து கிளிக்கினால் அன்றைய தினத்துக்கான பதிவுகள் வலதுபுறத்தில் தோன்றும்.

பேஸ்புக், டிவிட்டர் மற்றும் வலைப்பதிவு என பல சேவைகளை பயன்படுத்துபவர்கள் அவை அனைத்தையும் ஒரே இடத்தில் அணுக முடியும். பேட்ச் லைப்பில் முகவரி கணக்கை துவக்கிவிட்டு பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சேவைகளை அணுக அனுமதி அளித்து விட்டால் அதன் பிறகு தானாகவே உங்கள் பதிவுகள் இங்கே சேமிக்கப்பட்டு விடும்.
அதன் பிறகு உங்கள் இணைய நடவடிக்கையை திரும்பி பார்க்க விரும்பினால் எளிதாக அதை நிறைவேற்றி கொள்ளலாம். ஏதாவது சந்தேகம் எழுந்தாலும் அதை தீர்த்து கொள்ளலாம்.

இப்படி ஒரே இடத்தில் அனைத்து இணைய பகிர்வுகளையும் தொகுத்து தருவதோடு இதிலேயே தனியே உள்ள குறிப்பேடு வசதியை பயன்படுத்தி மனதில் தோன்றும் எண்ணங்கள் அல்லது சிறப்பு நிகழ்வுகளை பதிவு செய்து கொள்ளலாம்.

இணையதள முகவரி

thanks to http://www.z9tech.com/

0 comments:

Post a Comment