பொறுமையால் சுவர்க்கம் நுழைந்த உம்மு சுபைர் (ரலி) அவர்கள்.

, , No Comments
பொறுமையால் சுவர்க்கம் நுழைந்த

உம்மு சுபைர் (ரலி) அவர்கள்.


தனது வாழ்வில் ஏற்படும் கஷடங்கள், துன்பங்கள் துயரங்களை தாங்கிக் கொள்ள முடியாத பலரைப் பார்த்திருக்கிறோம். இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அவை உடனடியாக நீங்கிவிட வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள். அதற்காக எவ்வளவு விலை கொடுக்கவும் முன்வருவார்கள்.


இதனால் தான் பல முஸ்லீம்கள் தங்கள் பிரச்சினைக்காக தர்காக்கள், ஜின் வைத்தியர்கள், போலி மதவாதிகள், மந்திரவாதிகள், மாயாஜால வித்தைக் காரர்களிடமெல்லாம் போய் தங்கள் செல்வத்தை இழப்பதுடன் அறிவையும் அடகு வைக்கிறார்கள்.

போலிகளின் பொய்யான பித்தளாட்ட நிகழ்சிகளைப் பார்த்து தங்கள் நோய்க்கும் இவர்களிடம் மருத்துவம் உண்டென்று நம்பிவிடுகிறார்கள்.


பொருமையாக இருந்து நோய்க்கு இஸ்லாம் அனுமதித்த முறையில் மருத்துவம் பார்த்து இறைவனிடம் கையேந்த வேண்டியவர்கள் பொருமையிலந்து அல்லாஹ்வுக்கு இணை வைத்து முஷ்ரிக்கான காரியங்கள் செய்து மருத்துவத்தை தேட முனைவதை நாம் காண்கிறோம்.



இப்படிப்பட்டவர்களுக்கு படிப்பினையாக இஸ்லாமிய வரலாற்றில் மிக அழகான ஒரு சம்பவம் இடம் பெற்றுள்ளது. பொருமையிலந்து இறைவனை மறந்து இறைவனுக்கு மாறு செய்யும் மக்களுக்கு மிகவும் அவசியமான படிப்பினையான சம்பவம் அது.

உம்மு ஸ{பைர் (ரலி) அவர்களின் வரலாற்றில் இடம் பெற்ற இந்த நிகழ்வு இன்றும் ஓர் நிகழ்கால அதிசயமாகும்.


சுவர்க்கத்திற்கு செல்லும் ஒரு பெண்மணியை நான் தெரிவிக்கட்டுமா? என்று என்னிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்டார்கள்.

நான் ஆம் தெரிவியுங்கள் என்றேன்.

இதோ இந்த கருப்பு நிற பெண்மணிதான் என்று (உம்மு ஸ{பைர் (ரலி) அவர்களை) சுட்டிக் காட்டினார்கள்.

இந்தப் பெண்மணி நபியவர்களிடம் வந்து எனக்க வலிப்பு நோய் ஏற்படுகிறது. இதனால் என் ஆடைகள் திறந்து கொள்கின்றன. எனவே எனக்காக(என் நோய் நீங்க) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள். என்று கூறினார். அதற்கு நபியவர்கள் (அல்லாஹ் இந்நோயை நீக்கும்வரை) நீ பொருமையை மேற்கொண்டால் உமக்கு சுவர்க்கம் உண்டு. நீ விரும்பினால் உமக்கு நிவாரணம் அளிக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன். (நீங்கள் எதை தேர்வு செய்கிறீர்கள்) என்று கூறினார்கள். அதற்கவர் நான் பொருமையை மேற்கொள்கிறேன்.(எனக்கு சுவர்க்கம் வேண்டும்) ஆனால் எனக்கு வலிப்பு ஏற்படும் போது ஆடை விலகிக் கொள்கிறது. அவை விலகாமல் இருக்க மாத்திரம் துஆ செய்யுங்கள் என்றார். நபியவர்கள் அதற்காக துஆ செய்தார்கள்.

அறிவிப்பவர் : அதா பின் ரபாஹ். நூல் : புகாரி, முஸ்லிம்.

உம்மு ஸ{பைர் (ரலி) அவர்கள் தனது நோய் நீங்க வேண்டும் அதற்காக துஆ செய்யுங்கள் என்று நபியவர்களிம் கேட்கிறார்கள். நபியவர்களோ பொருமையாக இருந்தால் உனக்கு சுவர்க்கம் கிடைக்கும் அல்லாஹ் உனது நோயை இலேசாக்குவான் பொருமையாக இருக்கிறாயா என்று கேட்கிறார்கள்.

அதற்கு அந்தப் பெண்மணி எனக்கு சுவர்க்கம் தான் முக்கியம் அதனால் நான் பொருமையாக இருக்கிறேன். ஆனால் எனது ஆடைகள் விலகுவதினால் அதற்கு மாத்திரம் இறைவனிடம் பிரார்த்தனை செய்து எனது மானம் காக்க உதவுங்கள் என்கிறார்கள் நபியவர்களும் பிரார்த்தனை செய்கிறார்கள்.

இன்று நாம் நமக்கு ஒரு பிரச்சினை அல்லது நோய் ஏற்பட்டால் இது போன்ற நிலையைத் தான் எடுக்கிறோமா? பொருமையாக இருக்கிறோமா? இல்லையே?

தனக்கு பிரச்சினை சிக்கள் என்று வரும் போது இறைவனை விடுத்து இணை வைக்கும் காரியத்தில் கூட சர்வ சாதாரணமாக நமது மக்கள் இறங்கி தங்கள் ஈமானை இழந்து இம்மையிலும் நஷ்டப் பட்டு மறுமை வாழ்வையும் அழித்துக் கொள்கிறார்கள்.

அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டிய அடிப்படையில் நமது பிரச்சினைகளை சிக்கள்களை எல்லாம் எதிர்கொண்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்து இம்மை மறுமையில் வெற்றி பெருவோமாக!


0 comments:

Post a Comment