புகைப்பிடிக்கும் தாயால் குழந்தைக்கு இதய நோய் அபாயம்

, , No Comments
கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் புகை பிடிக்கும் பழக்கத்தால் கருவில் உள்ள குழந்தை பாதிக்கப்படுகிறது. சிகரெட் புகையில் உள்ள ரசாயனங்கள் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக கருவில் உள்ள குழந்தைக்கு நல்ல கொலஸ்ட்ரால்களை குறைத்து விடுகிறது. இந்த அளவு குறைவதால் பிறக்கும் குழந்தைகளுக்கு இதய நோய் ஏற்படுவது 10-15 சதவீதம் கூடுதலாக உள்ளது என புதிய ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வு அறிக்கை ஐரோப்பியா ஹார்ட்னுர்னலில் வெளியாகி உள்ளது. நமது உடலில் எச்.டி.எல் எனப்படும் உயர் அடர்த்தி லியோ புரோட்டின் உள்ளது.

இந்த நல்ல கொலஸ்ட்ரால் இதயத்தில் இருந்து உடல் உறுப்புகளுக்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்தக் குழாய்களில் சேதத்தை தடுக்கிறது. இதய நோய் ஏற்படுவதையும் தடுக்கிறது. உடலில் எல்.டி.எல் என்ற கெட்ட கொலஸ்ட்ராலும் உள்ளது. இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் புகைப்பிடிப்பதால் ரத்த அளவில் எச்.டி.எல்.லை குறைத்து விடுகிறது.  இந்த ஆய்வு அவுஸ்திரேலியா சிட்னி பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் செலி மேஜர் தலைமையில் நடந்தது. எச்.டி.எல் கொலஸ்ட்ரால் 2-3 சதவீதம் குறைவதன் மூலம் இதய பகுதி ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டு காரனோரி இதய நோய் அபாயம் ஏற்படுகிறது.

மேற்கத்திய நாடுகளில் 15 சதவீதப் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது புகைப்பிடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை கண்டு கொள்வது இல்லை. அவர்கள் கர்ப்பமாக இருக்கும் போது தொடர்ந்து புகைபிடிக்கிறார்கள்.

thanks to; z9tech.com

0 comments:

Post a Comment