போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி)

, , No Comments
மனிதர்கள் போதை ஏறி தள்ளாடி தடுமாறி விழும் காட்சிகளை நீங்கள் நிறையவே பார்த்திருப்பீர்கள். ஆனால் காட்டு விலங்குகள் போதை ஏறி ஆடித்திரிவதை பார்த்திருக்க மாட்டீர்கள்.. காட்டு விலங்குகள் எப்படி போதை ஏற்றும் என்றுதானே யோசிக்கிறீர்கள்? ஆம் காட்டில் வளரும் ஒரு வகை மரத்தின் பழங்களில் தான் போதை காணப்படுகிறது. இது தெரியாமல் விலங்குகளும் அவற்றை புசித்து உண்டு போதை தலைக்கேறி தள்ளாடி விழுத்து திரிகின்றமையை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. குறிப்பிட்ட இந்தப்பழம் மருளா பழம் என்று அழைக்குப்படுகிறது. இவ்வகை பழங்கள் ஆபிரிக்க காடுகளில் அதிகம் காணப்படுகிறது. இந்தப்பழங்களை பறித்து ஆபிரிக்கர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மூலம் மதுபானங்களும் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆபிரிக்க காடுகளை அண்டி வாழும் குடிவாசிகளும் இவ்வகை பழங்களை புசித்து வருகிறார்கள். இந்தப்பழங்களை புசித்த யானை முதல் குரங்கு வரை போதையில் போடும் ஆட்டங்களை நீங்களும் ரசியுங்கள்…

thanks to.athirchi.com

0 comments:

Post a Comment