கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...!

, , No Comments
{mosimage}காஃபி கண் இமைகளின் தசையினைப் பாதிக்கும் ப்ளிபரோஸ்பாஸம் (Blepharospasm) என்ற நோயை தடுக்க வல்லது என்று புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்நோய் பாதிக்கப்பட்டவரின் கண்இமைத் தசைகள் மூளையின் கட்டுப்பாடு இல்லாமல் தன்னிச்சையாக அசைந்து கொண்டே இருக்கும். இது சில வேளைகளில் நல்ல ஆரோக்கியமான கண்பார்வை இருந்தும் இமைகளைத் திறக்க இயலாத வகையில் பார்வையை மறைக்கும் மோசமான நோயாகும். தினமும் ஒன்று அல்லது இரண்டு குவளை காஃபி தொடர்ச்சியாகக் குடிப்பதன் மூலம் கண்ணிருந்தும் குருடாக்கும் (functionally blind) இந்நோயை நல்ல முறையில் கட்டுப்படுத்தலாம் என இத்தாலிய மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

நரம்பு மண்டலத்தில் உண்டாகும் கோளாறுகள் மூலம் ஏற்படும் இந்த ப்ளிபரோஸ்பாஸம் (Blepharospasm) நோய், 50 க்கும் 60 க்கும் இடைப்பட்ட வயதினரை அதிகமாக தாக்கும். காஃபியில் அடங்கியுள்ள கஃபைன் (caffeine) என்ற வேதிப்பொருள் தான் இந்நோயை கட்டுப்படுத்த உதவுகிறது எனக் கருதப்படுகின்றது. இத்துறையில் மேலும் அதிக அளவில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டியுள்ளது என இத்தாலியில் உள்ள நரம்பியல் மற்றும் மனவியல் (Neurolgical and psychiatric Sciences) பல்கலைக்கழகப் பேராசிரியர் டி பாஸியோ கூறியுள்ளார்.

அதேபோல மூளையின் கட்டுப்பாடு இழந்து இயக்கு தசைகள் (Voluntary muscles) தன்னிச்சையாக (குறிப்பாக முகத்தசைகள்) இயங்கும் நோய்க்குறியீடான பார்க்கின்சன் நோய் (Parkinson's disease) ஏற்படுவதையும் கஃபைன் தடுக்க வல்லது என்றும் இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment