Post image for இன்றைய இளம்பெண்கள்
ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும் என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல், ஹிஜாப் முறையை சரிவர பேணாமல், அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க / தொழில் வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம், ஆபிஸ், காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், ஆபிஸ் டூர் , ஷாப்பிங் என்று போகும் இடங்களில், மஹரம் இல்லாத ஆண்களுடனும் மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.
இதன் காரணமாக சில மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் பெண்களுக்கு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள். இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்றுமத இளைஞர்கள் காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.

இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக முதல் காரணமாக இது இருக்கிறது. விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், மொபைல் போன் இண்டெர்னெட் வடிவில் வந்துவிட்டது. முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலம் நேரடியாக அழைப்பு விடுகிறார்கள். நமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள்.
இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.
மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: “தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்;
தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்;
மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம்.
அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள். (அல்குர்ஆன் 24:31)
adiraisalafi
Post image for இஸ்லாமிய நூல்கள் – PDF

துஆ – பிரார்த்தனை

இஸ்லாமிய பார்வையில் ஜிஹாத் 
 
திருக்குர்ஆன் விளக்கவுரை (93-114)
 
இஸ்லாமிய சட்டங்கள் – ஆய்வுக் கட்டுரை
காப்பி அடிக்கும் நவீன முஜ்தஹிதுகள்!

நபிகளாரின் வாழ்க்கை வரலாறு

நபி(ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கை
எச்சரிக்கை வழிகேடன் அழைக்கிறான்

நபித்தோழர்கள் வரலாறு

இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்

அஷரதுல் முபஷ்ஷரா

உமர் இப்னுல் கத்தாப் (ரலி)

இமாம்கள் வரலாறு

கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் 
 
ஹஜ் உம்ரா ஜியாரத்

இதுதான் வெற்றிக்கு வழி

சத்திய மார்க்கம்

இஸ்லாம் ஒரு நோக்கு  
 
இஸ்லாம் உங்கள் பார்வைக்கு 
 
இந்து வேதங்களில் இஸ்லாம்

கொள்கைகள் சட்டங்கள் 
 
இறை நம்பிக்கையின் உண்மை நிலை 
 
சுன்னத்வல் ஜமாத்தினரின் அடிப்படை கொள்கை 
 
இஸ்லாமும் அதற்கு முரணானவையும்

இஸ்லாமும் இறை விசுவாசமும் 
 
ஏகத்துவ வழிகாட்டி 
 
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை 
 
லாயிலாஹ இல்லல்லாஹ் பற்றிய விளக்கம் 
 
இஸ்லாத்தில் இடைச்செருகள் வேண்டாம் 
 
தவ்ஹீதின் எதிர்ப்புக்கு தக்க பதில்கள் 
 
இறுதி நாள்

ஸுன்னாவின் அவசியமும் பித்அத்தின் எச்சரிக்கையும்  
 
தீண்டாமை ஒழிப்பு 
 
உனக்கோர் கடிதம் 
 
இஸ்லாமிய சட்டங்களும் ஒழுக்கங்களும் 
 
முக்கிய பாடங்களின் விரிவுரை 
 
முஸ்லிமின் வழிகாட்டி 
 
இஸ்லாத்தில் நற்குணங்கள் 
 
சாதாரணமாகிவிட்ட தீமைகள் 
 
இஸ்லாம் தந்த மனித உரிமைகள் 
 
தொழுகையும் அதன் சட்டங்களும் 
 
பிரார்த்தனைப் பேழை 
 
இறை நினைவு

ஸஜ்தா ஸஹ்வுடைய சட்டங்கள் 
 
உறுதி வழிமுறைகள்

ஹஜ்ஜும் உம்றாவும் நிறைவேற்றுவதெப்படி? 
 
இஸ்லாமியப் பெண்ணுக்கு ஒரு நூல் 
 
ஹிஜாப் ஒரு வணக்கம்

இஸ்லாத்தின் வழியே பெண்கள் சுத்தம் 
 
ஹிஜாப் – அதன் அவசியம் என்ன? 
 
சூனியமும் ஜோதிடமும் இஸ்லாம் கூறுவதென்ன? 
 
இஸ்லாத்தை தெரிந்துகொள்ளுங்கள் 
 
பாடத்திட்டம் 
 
முஸ்லிமின் வழிகாட்டி 
 
முஸ்லிம்களே! முஸ்லிம்களாக மட்டுமே வாழுங்கள்

நேர்வழி எது?

இமாம்களை அவமரியாதை செய்யாதீர்கள்

சிந்தித்துச் செயல்பட அழைக்கிறோம்

முஸ்லிம்களிடம் கிரேக்கத் தத்துவத்தின் தாக்கம்

இப்னு அரபியும் ஸுஃபிசமும்

அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத் ஓர் ஆய்வு

அன்றைய தாருந்நத்வா இன்றைய ஜமாஅத்துல் உலமா!

ஒரு மேலான சமுதாயத்தின் கீழான நிலை

மெளலவிகளுக்கும்,மதரஸாக்களுக்கும்

பல்சமயச் சிந்தனை

“தர்ஹா” வழிபாடு

முஸ்லிம்களே! நபி(ஸல்) அவர்களையே பின்பற்றுங்கள்

மீலாது, மவ்லிது, மார்க்கம் சொல்வதென்ன?

வீணாகும் நேரம் 
 
இறைமறையின் குறையற்ற பிறை! 
 
முஸ்லிம் சமுதாய சிந்தனைக்கு!

ஜமாஅத் அல் முஸ்லிமீன்!

மாநபி போதித்த மனித நேயம்

புரோகித மாயை
இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம் சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1433 ஹி

சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தஃவா நிலையம்)

நாள்: 06-09-2012 (19-10-1433-ஹி)

ஒளிப்பதிவு: அல்-ஜுபைல் மாநகர அழைப்புப்பணி உதவியாளர் குழுமம்

வீடியோ எடிட்டிங்: தென்காசி SA ஸித்திக்
 


Download mp4 HD video 795 MB
Audio Play:

Download mp3 audio
 
அஸ்ஸலாமு அலைக்கும்.
கேள்வி:-
நான் ஒரு முஸ்லிமாக இருந்துகொண்டு சாராயம் குடிக்கிறேன்; விபச்சாரம் செய்கிறேன். எனக்கு அதிலிருந்து பாவமன்னிப்பு கிடைக்குமா? தயவுசெய்து சொல்லுங்களேன். அவற்றிலிருந்து விலக எனக்கு என்ன வழியுள்ளது? எல்லாம் வல்ல அல்லாஹ் என்னை மன்னிப்பானா?.

- சகோதரர் முஹம்மது.

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

இந்தப் புனித மாதம் உங்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை உண்டாக்கட்டும் எனும் உளமார்ந்த பிரார்த்தனையோடு தங்கள் கேள்விக்கான பதில்:
பாவங்களைத் தொடர்ந்து செய்துகொண்டு, "கருணையாளானான அல்லாஹ் என்னை மன்னிப்பான்" என்ற அலட்சியமான போக்கைக் கைவிட்டு, "அல்லாஹ்வின் உதவியோடு பாவங்களிலிருந்து நான் மீளப்போகிறேன்" எனும் உறுதியான நிய்யத்தை உள்ளத்தின் பதித்துக்கொண்டு அயராது முயல்வீர்களாயின் பாவங்களிலிருந்து நீங்கள் மீள்வது திண்ணம் இன்ஷா அல்லாஹ்!
அல்லாஹ்வின் வசனங்களை முதலில் உங்கள் உள்ளத்தில் உறுதியுடன் பதித்துக் கொள்ளுங்கள்:
"மேலும், விபச்சாரத்தை நீங்கள் நெருங்காதீர். நிச்சயமாக அது மனக்கேடாதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது" (அல்குர்ஆன் 17:32).
அடுத்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் எச்சரிக்கையையும் கவனத்தில் கொள்ளுங்கள்:
"போதைப் பொருள் அனைத்தும் ஹராம்" (நபிமொழி).

இஸ்லாத்தின் பார்வையில் நீங்கள் செய்துகொண்டிருந்தவை பாவமான செயல்களாகும். அதோடு அல்லாஹ் விதித்த வரம்புகளை மீறி, நம்மைப் படைத்த இறைவனை அலட்சியப்படுத்துவதோடு, தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்வதுமாகும்!

நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் மணமுடித்துக் கொள்ளுங்கள்; விபச்சாரத்திலிருந்து விடுதலை பெறுவீர்கள். போதைப் பழக்கம் உள்ளவராக இருந்தால் போதைப் பொருளை இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது என்பதை இறையச்சத்துடன் நெஞ்சாரா ஏற்றுக்கொண்டால் குடிப்பழக்கத்திலிருந்தும் முற்றாக விலகிக்கொள்ளலாம்.
உங்களுடைய பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு, கறந்த பால் மீண்டும் மடிபுகாத தவ்பாவாக இருக்கவேண்டும். அதாவது "நான் இதுவரை செய்துவந்த பாவங்களை மீண்டும் செய்யமாட்டேன்" எனும் அசையாத நம்பிக்கையுடன் கூடிய தவ்பா. அடுத்து, "நான் இதுவரை செய்த பாவங்களை, கருணையாளன் அல்லாஹ் மன்னிப்பான்" எனும் அல்லாஹ்வின் அருளின் மீது உறுதியான நம்பிக்கை. ஏனெனில், எல்லாம் வல்ல அல்லாஹ் தனக்கு இணைவைக்கும் பாவத்தைத் தவிர - (பிறருக்கு அநீதி இழைத்தப் பாவத்தையும் தவிர) அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கிறேன் என்று வாக்களித்திருக்கின்றான்.


நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். அது அல்லாதவற்றைத் தான் நாடியவர்களுக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரும் பாவத்தையே கற்பனை செய்துவிட்டார் (அல்குர்ஆன் 4:48, 116).

...அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழப்பவர்கள் நிராகரிக்கும் கூட்டத்தினர்தாம் (அல்குர்ஆன் 12:87).

அல்லாஹ் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாவான். அல்லாஹ்வின் கருணைக்கு நிகராக எதையும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு அவனின் கருணை எவராலும் அளவிட முடியாதது. அல்லாஹ் தன் அடியார்கள் மீது வைத்திருக்கும் அன்பு - கருணை இவை குறித்து மனிதர்களுக்குப் புரிகின்ற உதாரணமாக தாய்மையின் அன்பைவிட மேலானது என்ற நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:

(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்கு(த் தன் குழந்தையைத் தேடினாள்) குழந்தை கிடைக்கவில்லை. (எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது எங்களிடம் நபி(ஸல்) அவர்கள், "இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!" என்றார்கள். நாங்கள், "மாட்டாள்; எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது" என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர்(ஸல்), "இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர் உமர் இப்னு கத்தாப் (ரலி) (நூல்கள் - புகாரி 5999, முஸ்லிம் 5315).

மேலும், அல்லாஹ்வின் கருணை பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது,

"எவருடைய நற்செயலும் அவரை சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது (மாறாக, அல்லாஹ்வின் தனிபெரும் கருணையாலேயே எவரும் சொர்க்க புகமுடியும்)" என்று கூறினார்கள்.

மக்கள், "தங்களையுமா
(தங்களின் நற்செயல் சொர்க்கத்தில் நுழைவிப்பதில்லை), இறைத்தூதர் அவர்களே?" என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், "(ஆம்) என்னையும்தான், அல்லாஹ் (தன்னுடைய) கருணையாலும் அருளாளலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர" என்று கூறிவிட்டு, "எனவே, நீங்கள் நேர்மையோடு (நடு நிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். உங்களில் எவரும் மரணத்தை விரும்பிட வேண்டாம். ஒருவர் (இயல்பில்) நல்லவராக இருப்பார், அவர் (உயிர் வாழ்வதன் மூலம்) நன்மையை அதிகமாக்கிக் கொள்ளக்கூடும். அல்லது (தீயவர்களின் நட்பால் இடையில்) தீயவராகி இருப்பார், அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் - புகாரி 5673, முஸ்லிம் 5423).

அல்லாஹ்வின் அன்பு - கருணை மற்றும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கும் இறைத்தன்மை பற்றி இங்கு எழுதியிருப்பது மிக மிகக் குறைவு. பாவம் செய்தபின் அதற்கான மன்னிப்பைக் கோரி, இறையச்சத்தால் அழுது கையேந்தி பிரார்த்திப்பதை இறைவனுக்கும் இறையடியானுக்குமுள்ள நெருக்கமாகும்.

எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும் அவற்றை மன்னித்திட அல்லாஹ் விரும்புகிறான் என்றிருக்க, அல்லாஹ்வின் மன்னிக்கும் தன்மையின் நம்பிக்கை இழப்பது அல்லாஹ்வை முறையாக நம்பியதாகாது. ஆகவே, விபச்சாரம் செய்துவிட்டேன். குடிப்பழக்கதிலிருக்கிறேன் என்னை அல்லாஹ் மன்னிப்பானா? என்கிற நம்பிக்கையற்ற பேச்சுக்கே இடமில்லை.
தமக்குத்தாமே (அநியாயம் செய்து) வரம்பு மீறிய என் அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்துவிட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையவன் என (நபியே) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 39:53).
தவ்பாவைப் பற்றிய நமது பதிவையும் கட்டாயம் படித்துக்கொள்ளுங்கள் (www.satyamargam.com/250). அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் பெருகி வழியும் மாதமாகிய இந்த ரமளானில் உங்களுடைய தவ்பா எனும் பாவமீட்சியை அவனிடம் அழுது கேளுங்கள். நிச்சயம் நீங்கள் பாவங்களிலிருந்து விலகுவதற்கு அவன் அருள் புரிவான், இன்ஷா அல்லாஹ்.

(இறைவன் மிக்க அறிந்தவன்).
நன்றி:satyamargam.com
எழுதியவர்/பதிந்தவர்/உரை
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
என்னுரை
எல்லாப்புகழும் ஏக வல்லவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே! அவனுடைய அன்பும் அருளும் உலகத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட நம் உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள், அவர்களைப் பின் தொடந்த தாபியீன்கள், நல்லடியார்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
அல்லாஹ் நம்மீது விதித்த கடமைகளில் ஒன்று ரமளான் மாதத்தின் நோன்பாகும். இம்மாதத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். அதன்படி நாமும் நடந்தால் இம்மாதத்தின் நலன்களைப் பெற்ற நன்மக்களாகலாம். இந்த உயரிய நோக்கோடு இச்சிறு புத்தகத்தை நான் எழுதியுள்ளேன். ஆகவே! இதைப்படித்து ரமளான் மாதத்தின் மூலம் அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெற்றவர்களாகுங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனின் அருளையும் பிழைபொறுப்பையும் தந்து, சுவர்க்கத்தில் நுழையும் வாய்ப்பையும் நரக வேதனையிலிருந்து பாதுகாப்பையும் தந்தருள்வானாக!
கே.எல்.எம் இப்றாஹிம் (மதனி)
ஜித்தா
மூன்றாம் பதிப்பு
10.07.1430ஹி (03.07.2009)


அட்டவணை
[01] ரமளான் மாதத்தின் நோன்பை நோற்பது கடமை
[02] ரமளான் மாதத்தின் சிறப்புகள்
[03] ரமளான் நோன்பின் சிறப்புகள்
[04] பிறை கண்ட பின்பே நோன்பும் பெருநாளும்
[05] சந்தேகமான நாட்களில் நோன்பு நோற்கக்கூடாது
[06] ஸஹர் உணவு உண்பதின் சிறப்பு
[07] ஸஹர் உணவை தாமதப்படுத்துதல்
[08] குளிப்பு கடமையான நிலையில் நோன்பு
[09] நோன்பை விட அனுமதிக்கப்பட்டவர்கள்
[10] நோன்பு நேரத்தில் தவறிலிருந்து விலகி இருத்தல்
[11] நோன்பாளி மறதியாக சாப்பிட்டால் அல்லது குடித்தால்
[12] நோன்பாளி குளிப்பதில் தவறில்லை
[13] நோன்பாளி பல் துலக்குவதில் குற்றமில்லை
[14] நோன்பாளியின் உளு
[15] நோன்பின் நிய்யத்தை பஜ்ருக்கு முன் வைப்பது அவசியம்
[16] பெருந்தொடக்குள்ள பெண்கள்
[17] விரைவாக நோன்பு திறப்பது சுன்னத்தாகும்
[18] பேரீத்தம் பழத்தால் நோன்பு திறப்பது சிறந்தது
[19] நோன்பு திறந்த பின் ஓதும் துஆ
[20] நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்
[21] நோன்பு திறக்க வைப்பதின் சிறப்புகள்
[22] லைலத்துல் கத்ரின் சிறப்புகள்
[23] இஃதிகாஃப்
[24] குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்
[25] ஸதகத்துல் ஃபித்ர்
[26] பெருநாள் தொழுகை
[27] நோன்பின் கடமைகள் (பர்ளுகள்)
[28] நோன்பை முறிக்கும் செயல்கள்
[29] நோன்பின் அனுமதிகள்
[30] நோன்பின் ஒழுக்கங்கள்
[31] ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள்
thanks to.islamkalvi.com
எழுதியவர்/பதிந்தவர்/உரை
“இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறவேண்டும் என்பதற்காக!” ( அல்குர்ஆன் 2:183)
நபி (ஸல்) கூறினார்கள்:
இதோ! ரமழான் மாதம் உங்களிடம் வந்துவிட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் உங்கள் மீது கடமையாக்கியுள்ளான். இம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அது ஆயிரம் மாதங்களை விட மேலானது. அந்த இரவில் பாக்கியம் பெறாதவர் ஒட்டு மொத்த பாக்கியத்தையும் இழந்தவராவார். (நஸயீ)
ரமழானின் சிறப்பு
இறைவன் ரமழானுக்கென்று சில சிறப்புகளை வழங்கியுள்ளான் அவற்றுள் சில:
- இம்மாதத்தில் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது,
- ஷைத்தான்களின் சூழ்ச்சிகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நன்மைகளை பெருக்கிக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது.
- ஆயிரம் மாதங்களைவிட மேலான இரவு இம்மாதத்தில்தான் உள்ளது. எனவே
குறைந்த வழிபாடுகளை செய்து நிறைந்த நன்மைகளை அடைய முடிகிறது,
- நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை இறைவனிடம் கஸ்தூரியை விட அதிக
மணமுடையது,
- இம்மாதத்தில் நோற்கும் நோன்பு 700 மடங்குக்கும் அதிகமாக கணக்கிலடங்காத நன்மைகளை வாரித்தருகிறது.
மேற்கண்ட அனைத்தும் குர்ஆன், சுன்னா ஆதாரங்களிலிருந்து தெரியவரும் உண்மைகளாகும்


ரமழானில் அமல்கள்
ரமழானில் செய்ய வேண்டிய சில முக்கிய அமல்கள் பின்வருமாறு:
1. தூய்மையான நோன்பு
“இறை நம்பிக்கையுடன் நன்மையைக் கருதி ரமழானில் நோன்பு நோற்பவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.” (புகாரி, முஸ்லிம்)
வெறுமெனே உண்ணாமல், பருகாமல் இருப்பதன் மூலம் மட்டும் இந்ந நன்மையை ஒரு நோன்பாளி அடைந்து விட முடியாது. ஏனெனில் நபி(ஸல்) கூறினார்கள்:
“பொய் பேசுவதையும் அதன் அடிப்படையில் செயல்படுவதையும் ஒரு நோன்பாளி தவிர்த்துக் கொள்ளவில்லையெனில் அவர் பசித்திருப்பதிலும், தாகித்திருப்பதிலும் இறைவனக்கு எந்தத் தேவையுமில்லை.” (புகாரி)
“நோன்பு ஒரு கேடையமாகும். எனவே உங்களில் நோன்பிருப்பவர் தீய வார்த்தைகளை பேசக்கூடாது, பாவச்செயல்கள் செய்யக்கூடாது. முட்டாள்தனமாக நடக்கக்கூடாது. யாரேனும் அவரை திட்டினால் “நான் ஒரு நோன்பாளி’ என்பதை மட்டுமே பதிலாகக் கூறவேண்டும். (புகாரி, முஸ்லிம்)
2. இரவு நேரத் தொழுகை
நபி (ஸல்) கூறினார்கள்:
“இறை நம்பிக்கையுடன் நன்மையைக்கருதி ரமழானில் இரவு நேரத் தொழுகையை நிறைவேற்றுபவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” (புகாரி, முஸ்லிம்)
இரவு நேரத்தொழுகை ரமழானல்லாத காலங்களிலும் செய்யப்படும் வழிபாடாக இருந்தாலும் ரமழானில் அது அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
“ரமழானிலும் ரமழானல்லாத காலங்களிலும் இரவுத்தொழுகையை நபி(ஸல்) அவர்கள் 11 ரக்அத்களுக்கு மேல் தொழுததேயில்லை” என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி)
3. தருமம்
“நபி (ஸல்) அவர்கள் காற்றைவிட வேகமாக ரமழானில் தருமம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் ரமழானில் நிறைவேற்றப்படும் தருமமே மேலான தருமம்” என்று கூறினார்கள். (திர்மிதி)
தருமத்தை பணமாகவோ அல்லது உணவாகவோ தரலாம். நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளிப்பதும் இதில் அடங்கும்.
“நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளித்தால் நோன்பாளிகளுக்கு கிடைக்கும் நன்மையைப் போல உணவளிப்பவருக்கும் கிடைக்கும்’ என நபி(ஸல்) கூறியுள்ளார்கள் (அஹ்மத்)
4. குர்ஆன் ஓதுதல்
ரமழான் குர்ஆன் இறங்கிய மாதமாதலால் இதில் குர்ஆனை அதிகமாக ஓதுவதும் அதன் பொருளுணர்ந்து சிந்திப்பதும், செயல்படுத்துவதும் மிகவும் அவசியமானதாகும். ஒவ்வொரு ரமழானிலும் ஜிப்ரீல் (அலை) வந்து நபி (ஸல்) அவர்களிடம் குர்ஆனை படித்துக் காண்பிப்பார்கள். இது குர்ஆனுக்கும் ரமழானுக்குமுள்ள தொடர்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.
5.இஃதிகாஃப்
நபி(ஸல்) ஒவ்வொரு ரமழானிலும் கடைசிப் பத்து நாட்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் (தங்கி வழிபடுதல்) செய்துள்ளார்கள்.
இந்த வழிபாடு ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானதாகும். எனவே இருபாலாருமே இதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.
6. உம்ரா
“ரமழானில் நிறைவேற்றப்படும் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகராகும்’ என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
(புகாரி, முஸ்லிம்)
7. லைலத்துல் கத்ரை அடைய முயற்சிப்பது
லைலத்துல் கத்ரின் சிறப்பு மேலே கூறப்பட்டுள்ளது. அது பிந்திய பத்து இரவுகளில் ஒற்றைப்படையான இரவில் இருப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே ரமழானின் பிந்திய 10 நாட்களில் அதிக வழிபாடுகள் செய்து அந்த பாக்கியத்தை அடைய முயற்சிக்க வேண்டும். இஃதிகாஃப் இருப்பது இதற்கு சிறந்த வழியாகும்.
8. பாவமன்னிப்புக் கோருதல்
“நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கப்படும் துஆ நிராகரிக்கப்படமாட்டாது’ என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். மேலும் ஸஹர் நேரத்தில் பாவமன்னிப்புக்கோருதல் திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் வலியுறுத்திக்கூறப்பட்டுள்ளது. (பார்க்க அல்குர்ஆன் 51:18)
எனவே இந்த நல்ல நேரங்களில் இஸ்திஃபார்களையும், துஆக்களையும் அதிகப்படுத்த வேண்டும். ஸஹர் நேரத்தில் டி.வி. சானல்களில் மூழ்கியிருப்பதை விட இதுவே மேலானது என்பதை சிந்திக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்டவை
நோன்பாளிகளுக்கு கீழ்கண்டவை குர்ஆன் சுன்னா அடிப்படையில் அனுமதிக்கப்பட்டவையாகும். இவற்றை மறுக்கும் உரிமை எவருக்கும் இல்லை.
-குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாம்.
நபி(ஸல்) அவர்கள் (ரமலான் இரவுகளில்) உடலுறவு கொண்ட பின் அதிகாலையில் குளிப்பு கடமையானவர்களாகவே ரமலான் நோன்பை நோற்பார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)
- பல்துலக்குவதில் ரமழான், ரமழானல்லாத காலம் என நபி(ஸல்) அவர்கள் வேறுபடுத்திக் கூறவில்லையென்பதால் ரமழான் காலங்களில் நன்கு பல்துலக்குவதில் தவறேதுமில்லை.
- உளுவின் போது வாய்க்கொப்பளிப்பதிலும் நாசிக்கு தண்ணீர் செலுத்துவதிலும் தண்ணீர் உள்ளே சென்றுவிடாத வகையில் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். (பார்க்க : அபூதாவூத்)
- எல்லை தாண்டாத அளவிற்கு சுயக்கட்டுப்பாடு உள்ளவர் நோன்பு நேரத்தில் மனைவியை அணைப்பதும் முத்தமிடுவதும் கூடும். (பார்க்க : அஹ்மத்)
- இரத்ததானம் செய்தல், ஊசி வழியாக உடம்பில் மருந்து செலுத்துதல், கண், காதுக்கு சொட்டு மருந்து விடுதல், எச்சில் விழுங்குதல், தொண்டைக்குழிக்குள் சென்றுவிடாத வகையில் உணவை ருசிபார்த்தல், வாந்தி எடுத்தல், பகல் வேளையில் குளித்தல், தலைவலி போன்றவற்றிற்கு களிம்பு தடவிக்
கொள்ளுதல், வாசனை திரவியங்கள் பூசுதல், நகம் களைதல், முடி வெட்டுதல், ஸ்கலிதம் ஏற்படுதல் ஆகிய எவையும் நோன்பை முறிக்கும் என்பதற்கு எந்த சரியான ஆதாரமும் இல்லை.
அனுமதிக்கப்படாதவை
- உண்ணுதல், பருகுதல், உடலுறவுக்கொள்ளுதல் ஆகிய மூன்றும் நோன்பை முறிக்கின்ற செயல்களாகும். (பார்க்க அல்குர்ஆன் 2:187)
எனவே இவற்றை ரமலானின் பகல் வேளையில் நோன்பாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். எனினும் ஒரு நோன்பாளி மறந்து உண்பதாலோ, பருகுவதாலே அவரது நோன்பு முறிந்து விடாது. தொடர்ந்து நோன்பை நிறைவு செய்ய வேண்டும். (ஆதாரம் : புகாரி முஸ்லிம்)
- இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒருவர் வேண்டுமென்றே செய்து நோன்பை முறித்துவிட்டால் அதற்கு பரிகாரமாக தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும் அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். பரிகாரம் செலுத்த சக்தியற்றவர்கள் முறிந்த நோன்பை மீண்டும் நோற்க வேண்டும். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்)
- வீண் விளையாட்டுகள், கேளிக்கைகள், சண்டையிடுதல் மற்றும் தீய வார்த்தைகள் ஆகியவற்றை நோன்பாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
சலுகையளிக்கப்பட்டவர்கள்
நோயாளிகள், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், பிரயாணிகள், தள்ளாத வயதினர்கள் ஆகியவர்களில் தள்ளாத வயதினர்கள் தவிர மற்ற அனைவரும் நோன்பை தள்ளிப் போடுவதற்கு அனுமதிக்கப் பட்டவர்கள். தள்ளாத வயதினர்கள் நோன்பை விட்டு விட்டு நோன்பொன்றுக்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
(பார்க்க அல்குர்ஆன் 2:184,185 மற்றும் புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ)
தடைசெய்யப்பட்டவர்கள்
மாதவிடாய் மற்றும் பிரசவத்தீட்டுள்ள பெண்கள் மீது நோன்பு நோற்பது தடையாகும். விடுபட்ட நோன்புகளை கணக்கிட்டு அவர்கள் சுத்தமான பிறகு மற்ற நாட்களில் நோற்க வேண்டும்.
(புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
நன்மைகளை அள்ளித்தரும் ரமழானில் சட்ட விதிகளைப் பேணி வழிபாடுகள் அதிகம் செய்து ஈருலகிலும் வெற்றியடைய முயற்சிப்போம், அல்லாஹ் மிக அறிந்தவன்.
இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள்.
தொகுப்பு : S.செய்யித் அலி ஃபைஸி
(மாநில துணைத் தலைவர் JAQH)
thanks to:islamkalvi.com