கேள்வி: சில ஊர்களில் குர்பானி கொடுக்கும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் பங்குவைக்கின்றார்களே! இதற்கு அனுமதி உண்டா? பதில்: அல்லாஹ்வும் அவனது தூதரும் இது போன்ற மூட நம்பிக்கைகளை நமக்குக் கற்றுத் தரவில்லை.

கேள்வி: பள்ளிவாசல், மத்ரஸா போன்றவற்றை நிர்வகிப்பவர் எப்படிப்பட்ட தகுதிகள் கொண்டவராக இருக்க வேண்டும்? மதுக்கடை வைத்திருப்பவர்கள், சினிமா தியேட்டர்கள் உரிமையாளர்கள் போன்றவர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகளாக இருக்கலாமா?

பதில்: பள்ளிவாசலை நிர்வாகம் செய்வோரின் தகுதிகளை அல்லாஹ் தெளிவாகக் கூறுகின்றான்.

"அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தையும் கொடுத்து, அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாமல் இருப்பவர்கள் தான் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்ய வேண்டும்." (அல்குர்ஆன் 9:18)
இந்த ஒரு வசனம் உங்கள் கேள்வி அனைத்துக்கும் போதுமான பதிலாகும்.

கேள்வி: ஹஜ்ஜுக்குச் செல்வோரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் சிலர் ஸலாம் சொல்லி அனுப்புகிறார்களே! ஸஹாபாக்கள் அப்படிச் சொல்லிவிட்டனரா? பதில்: ஹஜ்ஜுக்குச் செல்பரிடம் தனக்காக அங்கே துஆ செய்யும்படி சொல்ல ஆதாரம் உண்டு! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உம்ராவுக்குச் சென்றபோது தனக்காக துஆ செய்யும்படி கேட்டுள்ளார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸஹாபாக்கள் ஸலாம் சொல்லிவிட்டதாக எந்த ஆதாரத்தையும் நாம் காணவில்லை.

கேள்வி: இமாம் அபூஹனீபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஒரே இரவில் முழுக் குர்ஆனையும் ஓதித் தொழுவார்கள் என்று ஒரு ஆலிம் பயான் செய்தார்?

பதில்: பச்சைப் பொய்! ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "எவர் மூன்று நாட்களுக்குக் குறைவாக, குர்ஆனை ஓதி முடிக்கின்றாரோ அவர் குர்ஆனைப் புரிந்து கொள்ளவில்லை" என்று கூறியுள்ளனர். இமாம் அபூஹனீபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குர்ஆனைப் புரிந்து கொள்ளாதவர் என்று நம்மால் எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை. கேள்வி: கஃபாவை நோக்கி நாம் காலை நீட்டுவதில்லை. "நீங்கள் ஒரு குறிப்பிட்ட திசைக்கு மட்டும்தான் மரியாதை செய்கிறீர்கள்! அங்கு மட்டும் தான் இறைவன் இருக்கின்றானா?" என்று இந்து நண்பர் ஒருவர் கேட்கிறார். அதற்கு என்ன சொல்வது?

பதில்: கஃபாவை நோக்கி காலை நீட்டக் கூடாது என்று எந்த தடையும் கிடையாது. நீங்கள் விரும்பினால் கஃபாவை நோக்கிக் காலை நீட்டலாம்.

கேள்வி: ஒரு பெண் இறந்த பின் அவருக்காக அவரது மகள் குர்ஆன் ஓதி வருகிறார். அந்தப் பெண் கனவில் தோன்றி "குர்ஆன் ஓதுவதை நிறுத்தி விடாதே! அதனால் எனக்கு கம்பளம் விரித்து, கெளரவம் அளிக்கப்படுகிறது" என்று கூறியதாக சொல்லப்படுகின்றதே! அது உண்மையா!

பதில்: கனவில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். கனவுகள் மார்க்கத்தில் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

கேள்வி: சிராத்துல் முஸ்தஹீம் என்ற பாலம் பற்றி, கண் முடியை ஏழாகப் பிளந்த அளவு மெல்லியதாக இருக்கும் என்றும் அதன் கீழ் நரகம் இருக்கும் என்றும் சொல்கிறார்களே! அது உண்மையா?

பதில்: உங்களில் எவரும் அந்த நரகத்தைக் கடந்தே ஆக வேண்டும் என்பது திருக்குர்ஆனின் கருத்து. (மர்யம் 71) இதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாலத்தைக் கடந்து செல்வது என்று விளக்கம் தந்துள்ளனர். (அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
எவராக இருந்தாலும் "சிராத்" (பாலத்)தைக் கடந்தாக வேண்டும் என்பது குர்ஆன் ஹதீஸிலிருந்து தேளிவாகின்றது. ‘சிராதுல் முஸ்தகீம்’ என்று பெயர் அதற்கு இருப்பதாக நாம் அறிந்தவரை காண முடியவில்லை. முடியை விடவும் ெமல்லியதாக இருக்கும் என்பதற்கும் எவ்வித சஹீஹான ஹதீஸையும் நாம் காணவில்லை.

கேள்வி: பாங்கு சொல்லும் போது வீட்டின் முன் வாயிலைத் திறந்து பின்வாயிலை அடைகின்றனர். முன்வாயில் வழியாக ரஹ்மத்துடைய மலக்குகள் வருவார்களாம். பின்வாயில் திறந்திருந்தால் அந்த விழியே அவர்கள் சென்று விடுவார்களாம். அதற்காகத் தான் இந்த முன்னெச்சரிக்கை என்றும் கூறுகின்றனர். சரியா?

பதில்: இதற்கெல்லாம் ஆதாரம் எதுவும் கிடையாது. மலக்குகள் வர, போக இந்த வாசல்கள் எதுவும் தேவை இல்லை. கதவை இறுக்கமாக அடைத்து விட்டால் ‘மலக்குல் மவ்த்’ வரமாட்டார் என்று சொல்லாத வரை சரிதான்.


கேள்வி: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் முஸ்லிம்களா?

பதில்: அபூபக்ருல் கதீப், அபுல் காசிம் சுஹைலீ, ஆபூ அப்துல்லாஹ் குர்துபீ ஆகியோர் "திரும்பவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெற்றோர் உயிர் கொடுக்கப்பட்டு இஸ்லாத்தைத் தழுவினர்" என்பதாக அறிவித்துள்ளனர்.

அதன் அறிவிப்பாளர் வரிசையில் வருகின்ற பலர் ஹதீஸ்கலை வல்லுனர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். இது திட்டமிட்டு இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ் என்பதில் ஹதீஸ்கலை வல்லுனர்களில் எவரும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை. இமாம் சுயூத்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மட்டும் இந்த இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் அடிப்படையில் இதை நிலை நிறுத்த முயன்றுள்ளார்கள். ஸஸீஹான ஹதீஸ்களைப் பார்ப்போம். "ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து என் தந்தை எங்கே இருக்கின்றார்?" என்று கேட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நரகில் இருப்பதாக கூறினார்கள். அவர் திரும்பிச் செல்லும்போது அவரை அழைத்து ‘என் தந்தையும், உன் தந்தையும் நரகில்தான் உள்ளனர்’ என்று கூறினாாகள். (முஸ்லிம்)

"என் தாயின் கப்ரை ஜியாரத் செய்ய அல்லாஹ்விடம் அனுமதி வேண்டினேன். அல்லாஹ் அனுமதி அளித்தான். என் தாய்க்காப் பாவமன்னிப்புக் கோர என் இறைவனிடம் அனுமதி கோரினேன். என் இறைவன் மறுத்து விட்டான்" என்பதும் நபிமொழி. (முஸ்லிம்) இவற்றிலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் முஸ்லிம்களல்லர் என்பதைத் தெளிவாகப் புரியலாம்.
கேள்வி: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் பெண்களை உயிருடன் புதைக்கக் காரணம் என்ன?

பதில்: எல்லா அரபிகளும் பெண்களை உயிருடன் புதைத்துக் கொண்டிருந்ததில்லை. அப்படி இருந்தால் பெண்களே உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும்தான் அவ்வாறு செய்துள்ளனர். அவர்களிடம் எத்தகைய சமுதாயக் கொடுமை நடந்ததோ தெரியவில்லை. "என்ன காரணத்திற்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தை விசரிக்கப்படுவாள்" (அல்குர்ஆன் 81:8) என்ற வசனத்திலிருந்து எவ்விதக் காரணமின்றி அறியாமையின் காரணமாகவே அவர்கள் செய்திருக்கக் கூடும் என்று அறிய முடிகின்றது.


பல்வேறு சஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து தாங்கள் அறியாமைக் காலத்தில் தங்கள் பெண் குழந்தைகளைப் புதைத்து விட்டதாகச் சொல்லி வருந்தி இருக்கின்றனர். அவர்களெல்லாம் அறியாமையைத் தான் காரணமாகக் காட்டியுள்ளனர்.

பொதுவாகவே மனித இயல்பை உற்று நோக்கினால், பெரும்பாலும் ஆண் குழந்தையை விரும்பும் தன்மையிலும், பெண் குழந்தையை வெறுக்கும் தன்மையிலும் அமைந்துள்ளதைக் காண முடிகின்றது.

இதற்கு அறிவு பூர்வமாக எந்தக் காரணத்தையும் சொல்ல முடியாது. அவ்வாறே அன்றைய அரபிகளில் சிலர் செய்து வந்ததற்கும் அறிவு பூர்வமான காரணங்களை வரையறுத்துச் சொல்ல முடியாது. என்ன காரணம் கூறப்பட்டாலும், அது மனிதர்களால் செய்யப்படும் அனுமானமாகத்தான் இருக்குமே தவிர சரியானதென்று உறுதி சொல்ல முடியாது. கேள்வி: வீடுகளில் புறா, முயல் போன்றவை வளர்க்கலாமா? அதனால் முஸீபத் ஏற்படுமாமே!

பதில்: பாங்கோசை கேட்காத இடத்தில் ஒருவன் தனித்துத் தொழுதாலும் பாங்கு சொல்வதே சிறப்பு. "ஒரு மலை உச்சியில் ஆடு மேய்த்துக் கொண்டிருப்பவர் தொழுகைக்காக பாங்கு சொல்லி பின்னர் தொழுவதைப் பற்றி அல்லாஹ் மலக்குளிடம் புகழ்ந்துரைக்கிறான்" என்று "நஸயீ" யில் ஹதீஸ் உள்ளது. அதுபோல் இகாமத் சொல்வதற்கும் ஹதீஸ் உள்ளது. உங்களின் கடைசி கேள்விக்குத் தனியாக ஒரு கட்டுரை விரைவில் வெளிவரும்.

கேள்வி: "தப்பத் யதா" என்ற சூராவை அடிக்கடி ஓதக் கூடாது என்கிறார்களே! ஏன்?

பதில்: ஏனோ தெரியவில்லை. பரவலாக அப்படிப் பேசிக் கொள்கின்றனர். நாம் அறிந்தவரை அப்படி ஒரு ஹதீஸைக் காணவில்லை. குர்ஆனில் தனக்குத் தெரிந்ததை ஓதும்படிப் பொதுவாகத் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர்.

கேள்வி: பாங்கு சொல்லும் போது நாம் மல ஜலம் கழித்துக் கொண்டோ, பெருந்தொடக்காகவோ, மாதவிலக்காகவோ இருந்தால் பாங்கைக் கேட்கும் போது ஓத வேண்டிய திக்ருகளைச் செய்யலாமா? இந்த நேரங்களில் ஸலாம் கூறலாமா?

பதில்: மல ஜலம் கழிக்கும் போது எந்த திக்ருகளையும் சொல்லக் கூடாது. இரண்டு நபர்கள் மல ஜலம் கழிக்கும் போது பேசிக் கொண்டிருப்பதையே அல்லாஹ் வெறுக்கிறான் என்பது நபி மொழி. (அஹ்மத், அபூதாவூத், இப்னுமாஜா) உலகப் பேச்சுக்களையே பேசக்கூடாது என்னும் போது திக்ருகள் செய்யலாகாது என்பதை எவரும் உணரலாம். மேலும் மலஜலம் கழிக்கும்போது ஸலாம் சொல்லவும் கூடாது.

யாரேனும் ஸலாம் சொன்னால் அந்த நேரத்தில் அதற்குப் பதில் சொல்லவும் கூடாது. "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறுநீர் கழிக்கும் போது ஒருவர் ஸலாம் கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதற்குப் பதில் கூறவில்லை" என்ற ஹதீஸ் இப்னு உமர்ரளியல்லாஹு அன்ஹு அவர்களால் அறிவிக்கப்பட்டு ‘நஸயீ’யில் இடம் பெற்றுள்ளது.

பெருந்தொடக்காகவோ, மாதவிடாயாகவோ, இருப்பவர் தொழுவது நோன்பு நோற்பது, தவாபு செய்வது, குர்ஆன் ஒதுவதைத் தவிர மற்ற திக்ருகள் செய்யலாம்; ஸலாம் கூறலாம். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவைகளுக்குத்தான் தடை விதித்துள்ளனர். கேள்வி: ரமலான் மாதத்தில் முழுகுர்ஆனையும் ஓதிக் கேட்டுத் தான் ஆக வேண்டுமா?

27-க்குப் பிறகு உள்ள மூன்று நாட்களில் ‘சபீனா’ என்ற பெயரில் முழு குர்ஆனையும் தராவீஹில் ஓதுகின்றனரே! இதற்கு ஆதாரம் உண்டா? பெருநாள் தொழுகை முடிந்ததும் கபரஸ்தானுக்குச் சென்று பாத்திஹா ஓத வேண்டும் என்கின்றனர். இதற்கும் ஆதாரம் உண்டா? மூன்று கேள்விகளுக்கும், விரிவாக விளக்கமாகப் பதில் தரும்படி கேட்கிறேன்.

பதில்: ஆதாரம் இல்லாதவைகளுக்கு விரிவாக எப்படிப் பதில் தர முடியும்? நீங்கள் குறிப்பிட்ட மூன்று விஷயங்களுக்கும் எவ்வித ஆதாரமும் நாம் காணவில்லை. யார் இப்படிச் செய்கிறார்களோ அவர்களிடம் தான் நீங்கள் ஆதாரம் கேட்க வேண்டும்.

கேள்வி: இறந்து போனவர்களை அடக்கம் செய்துவிட்டு இஷாவிலிருந்து சுபுஹ் வரை மூன்று நாட்கள் குர்ஆன் ஓதுகிறார்களே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஸஹாபாக்கள் காலத்தில் இப்படி நடந்துள்ளதா?

பதில்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்திலோ, ஸஹாபாக்கள் காலத்திலோ இப்படி நடக்கவில்லை. மக்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் பிற்காலத்தில் நுழைக்கப்பட்ட பழக்கமே இது. கேள்வி: தாய், தந்தை இவர்களின் கால்களில் விழலாமா? ஆதாரத்துடன் விளக்கம் தரவும்?

பதில்: கூடாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கோ, அவர்களின் அன்பு தோழர்களுக்கோ அவர்களின் பிள்ளைகள் இவ்வாறு செய்ததில்லை."தன் சகோதரனையோ, நண்பனையோ , சந்திக்கும் போது அவனுக்காகக் குனிந்து மரியாதை செய்யலாமா? என்று ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது,"கூடாது" என்று கூறினார். அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி

குனிந்து செய்யும் மரியாதையைக் கூட ஒரு மனிதனுக்குச் செய்யக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளனர் என்னும் போது நீங்கள் கேட்டது நிச்சயமாகக் கூடாது!

கேள்வி: ‘முபஸ்மிலன், முஹம்திலன், முஸல்லியன், முஸல்லிமா’ என்று சில திருமணப் பத்திரிகைகளில் காணப்படுகின்றதே! அதன் பொருள் என்ன?

பதில்: பிஸ்மில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், ஸலவாத் சொல்லித் துவக்குகிறோம் என்று பொருள்
கேள்வி: "இகாமத் சொன்னதும் உடனே எழக்கூடாது; ஹய்ய அலஸ்ஸலாஹ் என்று கூறும்போதே எழ வேண்டும்" என்று எங்கள் இமாம் பயான் செய்தார்! சரிதானா?

பதில்: தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் என்னைக் காணும் வரை நீங்கள் எழ வேண்டாம்’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவுது, நஸயீ, திர்மிதீ, அஹ்மத், தாரமீ. இதிலிருந்து, இமாம் தொழ வைக்கின்ற இடத்திற்கு வந்துவிட்டால் நாம் எழ வேண்டும் என்பதை விளங்கலாம்.
கேள்வி: ரமலான் மாதத்தில், மாதவிடாய் வருவதைத் தவிர்ப்பதற்குள்ள மாத்திரைகளைச் சாப்பிட்டு, நோன்பு வைக்க மார்க்கத்தில் உரிமை உண்டா?

பதில்: மாதவிடாய் காரணமாகப் பெண்கள் விடுகின்ற நோன்பைப் பிறகு "களா" செய்ய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர். அல்லாஹ் அவர்களுக்கு அதே கூலியை வழங்குவான். (இன்ஷா அல்லாஹ்) அவ்வாறிருக்க அல்லாஹ்வும், அவனது தூதரும் வழங்கிய சலுகைகளைப் பயன்படுத்துவதுதான் பெண்கள் செய்யவேண்டியது.

அல்லாஹ்வுடைய சலுகைகளைப் புறக்கணித்து நன்மை என்ற பெயரால் செயற்கை முறைகளைக் கையாள்வது முறையற்றது. பல சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வின் சலுகைகளைப் பயன்படுத்தாதவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டித்துள்ளனர்.

கேள்வி: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 40 வயதிலதான் நபியாக்கப்பட்டார்கள். எனவே 40 வயதில் தான் தாடியும் வைத்திருப்பார்கள். அதுபோல் இளைஞர்கள் தாடி வைக்காமல் இருந்துவிட்டு 40 வயதில் வைத்தால் போதுமல்லவா? தாடி வைப்பது சுன்னத் என்று யார் மூலமாகச் சொல்லப் படுகிறது?ஆதாரம் தேவை.

பதில்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 40 வயதில் தான் தொழுதார்கள் என்று சொல்லி நீங்களும் 40 வயதில் தான் தொழ ஆரம்பிப்பீர்களோ? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 40 வயதில் நபியானாலும் அவர்களின் உத்தரவுகள் பருவமடைந்த ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்தும். கேள்வி: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா பெண் என்பதால் அவர் சொல்கின்ற 11ரக்அத் பற்றிய ஹதீஸை சேலம் அரபிக்கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் பகிரங்கமாக மறுக்கிறார். பெண்களாக இருந்தால் இரு சாட்சிகள் வேண்டும்; ஒரு பெண் சொல்வதை ஏற்க முடியாது என்கிறார். இதற்கு உங்கள் பதில் என்ன?

பதில்: அல்லாஹ் அவரை மன்னிப்பானாக! அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மூலமாக இஸ்லாத்தின் சுமார் பாதிச் சட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. அனைத்தையும் அவர் மறுத்தாலும் மறுக்கலாம். மேலும் அவர் கூறுவதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத் தவிர இன்னும் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, உபை இப்னு கஃபு ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் தராவீஹ் 8ரக்அத் என்று அறிவித்துள்ள ஹதீஸ்களை என்ன செய்யப் போகிறாராம்?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றைவிடத் தங்களின் மனோ இச்சை அவர்களுக்குப் பெரிதாக தோன்றுகிறது.

கேள்வி: அத்தஹியாயத்தில் ‘அல்லாஹும்மஃபீர்லி வலிவாலிதைய்ய’ என்ற துஆ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லித் தந்ததா?

பதில்: பல்வேறு துஆக்களை அத்தஹியாயத்தில் ஓதும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அவற்றில் நீங்கள் குறிப்பிட்ட துஆவைக் காண முடியவில்லை. (அல்லாஹ் மிக அறிந்தவன்)

கேள்வி: பொது அனுமதி இல்லாத இடங்களில் ஜும்ஆ நடத்தக் கூடாது என்று பல மதரஸாக்கள் பத்வா வழங்குகின்றனவே! இது சரிதானா?

பதில்: சரியில்லை. ஜும்ஆ விஷயத்தில் தேயைற்ற பல நிபந்தனைகளை விதித்துள்ளது சரியானதன்று! அன்றைய முஸ்லிம்(?) மன்னர்கள், தங்கள் ஆட்சி ஜும்ஆ பிரசங்கத்தில் விமர்சிக்கப்படலாம் என்று அஞ்சி, தங்கள் அனுமதி இல்லாமல் ஜும்ஆ நடத்தக் கூடாது என்று சட்டமியற்றினர். அதற்கு அன்றைய அறிஞர்களில் பெரும்பான்மையோர் துணைபோயினர்.

எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகின்றாரோ அவர் மீது ஜும்ஆ கடமையாகும். நோயாளி, பிரயாணி, பெண், சிறுவன், அடிமை ஆகியோர் நீங்கலாக மற்ற அனைவர் மீதும் ஜும்ஆ கடமையாகும் என்பது நபிமொழி. (அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : தாரகுத்னீ.)ஜும்ஆ ஜமாஅத்துடன் தொழுவது நால்வர் நீங்கலாக அனைவர் மீதும் கடமையாகும். 1) அடிமை. 2) பெண் 3) சிறுவர் 4)நோயாளி என்பதும் நபிமொழி. அறிவிப்பவர் : தாரிக் இப்னு ஷிஹாப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூது.ஜும்ஆவுக்கு ஆஜராவது கடமையாகும். அறிவிப்பவர் : அன்னை ஹப்ஸா ரளியல்லாஹு அன்ஹா, நூல் : நஸயீ. மேற்கூறிய நபிமொழிகள் உங்களுக்குப் போதுமானதாகும். மனிதர்களின் சொந்த அபிப்பிராயங்களுக்கு நீங்கள் செவி சாய்க்க வேண்டாம்.

கேள்வி: தனியாக ஜும்ஆ நடத்தலாமா? குத்பா எப்படி ஓத வேண்டும்? எத்தனை பேர் வேண்டும்?

பதில்: இதற்கு முன்னால் உள்ள பதிலைப் பாருங்கள்! ஜும்ஆ ஜமாஅத்துடன் தொழ வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை எழுதியிருக்கின்றோம். தனியாகத் தொழ முடியாது. உங்களுடன் இன்னொருவரைச் சேர்த்துக் கொண்டால் ஜமாஅத்தாகி விடும்.

அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறி இறையச்சத்தை ஏற்படுத்துகின்ற விதமாக, குர்ஆன் ஹதீஸ்களைக் கூறுங்கள்! கொஞ்சம் உயரமான இடத்தில் நின்று கொள்ளுங்கள். இரண்டு குத்பாவுக்கு இடையே சிறிது அமர்ந்து கொள்ளுங்கள். நீங்களே ஜும்ஆ நடத்திடலாம். கேள்வி: ஜும்ஆ தினத்தில் தொழுகை முடிந்து தான் வெளியூர் செல்ல வேண்டும்; அன்று காலையில் எந்த வெளியூருக்கும் செல்லக் கூடாது என்கிறார்களே! சரிதானா?

பாங்கு முடிந்தபின்தான் வெளியே செல்ல வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றார்களே! சரிதானா?

பாங்கு சொல்லப்படும் போது வெளியில் செல்லக் கூடாது என்றும், பாங்கு முடிந்தபின் தான் வெளியே செல்ல வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றார்கள். அப்படி மீறி நடந்தால் பல வியாதிகள் ஏற்படும் என்கிறார்களே? சரிதானா?

பதில்: ஜும்ஆ கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும். சின்னசின்ன காரணங்களுக்காக அதை விட முடியாது. எனினும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே, வெள்ளிக்கிழமையன்று அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரளியல்லாஹு அன்ஹு என்பவரை ஒரு சிறு படையுடன் அனுப்பி வைத்துள்ளனர். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதீ.
தவிர்க்க இயலாத காரணங்கள் இருந்தால் அன்று வெளியூர் செல்லத் தடை ஏதும் இல்லை. பாங்கு சொல்லப்படும்போது வெளியே செல்லக் கூடாது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இருந்ததாகத் தெரியவில்லை. மாறாக, பாங்கோசை கேட்டதும் தொழுகைக்காக அவன் புறப்பட்டுச் செல்வதுதான் முறை. வியாதி ஏற்படும் என்பதெல்லாம் நம்பக்கூடாதவை.

கேள்வி: ஆறு நோன்பில் இரண்டு தான் வைத்தேன். இன்னும் நான்கு நோன்பு வைக்கவில்லை. ‘களா’ செய்யலாமா?

பதில்: ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்பது சுன்னத். தவறவிட்டுவிட்டால் ‘களா’ செய்வதற்கு எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் காணப்படவில்லை.

கேள்வி: பால், வாசனைப் பொருட்கள், பெண்கள் இம்மூன்றும் எனக்கு மிகவும் விருப்பமானவை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஒரு ஆலிம் பயான் செய்தார். அந்த ஹதீஸ் உண்மையானதுதானா? உண்மையானது என்றால் ‘பெண்கள்’ என்று கூறியிருப்பதின் உட்கருத்து என்ன?
பதில்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னது இப்படித்தான். "பெண்களும் வாசனைப் பொருட்களும் உலகப் பொருட்களில் எனக்கு விருப்பமுடையதாக்கப்பட்டுள்ளன; என் கண் குளிர்ச்சி தொழுகையில் தான் உண்டு." அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் :நஸயீ .இங்கே பெண்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டது தம் மனைவியரைப் பற்றித்தான். பொதுவாக எந்த ஆண் மகனுக்கும் மனைவியர் விருப்பமுடையவர்களாகத் தானிருப்பார்கள்.

இதில் தவறு எதுவும் கிடையாது. ஒளிவு மறைவில்லாமல் தனது நிலையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளிப் படுத்துகின்றார்கள்.

மேலும் அந்த ஹதீஸின் வாசகத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். பெண்களும் வாசனைப் பொருட்களும் எனக்கு விருப்பமுடையன என்றாலும் தொழுகையில் தான் கண் குளிர்ச்சியும் மன மகிழ்ச்சியும் உண்டு. நான் விரும்புகின்ற மனைவியரை விடவும் இறைவனுடன் உரையாடும் தொழுகை எனக்கு விருப்பமானது என்பதை இலக்கிய நயத்துடன் சொல்லிக்காட்டுகின்றனர். ‘பால்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாகக் காணமுடியவில்லை. கேள்வி: தர்ஹாவுக்குச் செல்வதைத் தடுக்கும் நீங்கள் கஃபாவில் உண்ண ‘ஹஜருல் அஸ்வத்’தை முத்தமிடுகிறீர்களே! அது ஷிர்க் அல்லவா? என்று என் முஸ்லிம் நண்பரே கேட்கிறாரே! அவருக்கு என்ன பதில் சொல்வது?

பதில்: "நீ ஒரு கல் எனக்கு நிச்சயமாகத் தெரியும். உன்னால் நன்மை தீமையைக் கொண்டு வரவோ, தடுக்கவோ இயலாது என்பது எனக்குத் தெரியும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னை முத்தமிட்டதை நான் கண்டிராவிட்டால் உன்னை முத்தமிடமாட்டேன்" என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘ஹஜருல் அஸ்வத்’ கல்லைப் பார்த்துச் சொல்வது போல் நம்மவர்க்குப் புரிய வைத்தார்களே, அதை அவருக்கும் சொல்லுங்கள்! (ஆதார நூல் : புகாரி, முஸ்ரிம், அஹ்மத், தாரமி)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏன் முத்தமிட்டார்கள் என்கிறீர்களா? "ஹஜருல் அஸ்வத்" சுவர்க்கத்திலிருந்து உலகுக்குக் கொண்டுவரப் பட்ட பொருளாகும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே காரணத்தையும் கூறிவிட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நுால்: நஸயீ)

இந்த உலகிலேயே இருக்கின்ற சுவர்க்கத்துப் பொருள் சுவர்க்கத்து மண் கொண்டு கட்டப்பட்டவை அல்ல.) கண் தானம் பற்றிய உங்கள் கேள்விக்கு இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்ஸ கேள்வி: நபி, ரசூல் வேறுபாடு என்ன? நபிமார்கள் எத்தனை? ரசூல்மார்கள் எத்தனை?

பதில்: முந்திய சமுதாயத்துக்கு இருந்த சட்டங்களில் சில மாறுதல்களுடன் புதிய சட்டங்கள் கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட இறைதூதரை ரசூல் என்று கூறுகிறோம். ஒரு ரசூல் கொண்டு வந்த சட்டங்கள் மறக்கப்பட்டு விட்ட கால கட்டத்தில் அந்தச் சட்டங்களுக்குப் புத்துயிர் ஊட்ட இறைவனால் அனுப்பபட்டவர் நபி எனப்படுவார். எண்ணிக்கை பற்றி பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. அல்லாஹ் அனுப்பிய அனைவரையும் ஏற்றுக் கொள்வதாகப் பொதுப்படையாக நாம் நம்பிக்க கொள்ளவேண்டும். அல்லாஹ்வும், அவனது ரசூல் என்று கூறினார்களோ அவர்களை அவ்வாறே ஏற்க வேண்டும்.

கேள்வி: அஹ்மது கபீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ‘ரவ்லா’வில் நின்று கொண்டு "கையை நீட்டுங்கள்" என்று கூறியவுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கையை நீட்டியதாகவும் அதனை அவர்கள் முத்தமிட்டதாகவும் அல்லாஹ் அவர்களுக்கு சுல்தானுல் ஆரிபீன் என்று பட்டம் வழங்கியதாகவும் கூறப்படுகிறதே! உண்மையா?

பதில்: அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருக்குமானால், அதனைப் பல்லாயிரம் பேர் பார்த்திருப்பார்கள். உலக வரலாற்றில் அதிசய நிகழ்ச்சியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும்!

அஹ்மது கபீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களை விடப் பல்லாயிரம் மடங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அன்பு வைத்திருந்த அருமை ஸஹாபாக்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குச் சொல்லித் தரவுமில்லை. ஸலாம் சொல்லும்படித்தான் சொல்லிச் சென்றனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தராத எதனையும் அஹ்மது கபீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்றவர்கள் செய்ய மாட்டார்கள். நல்லவர்கள் பெயரால் இது போன்ற கதைகள் ஏராளம்!

அல்லாஹ் ‘சுல்தானுல் ஆரிபின்’ என்று அஹ்மது கபீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்குப் பட்டம் வழங்கியதாகக் குர்ஆனில் எந்த ஒரு ஆயத்தையும் காண முடியவில்லை. ஹதீஸையும் காணோம். அல்லாஹ் சொல்வதை, குர்ஆன் மூலமும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமும் தான் நாம் அறிய முடியும். கேள்வி: ஆண், பெண் இருபாலரும் சுற்றுலா செல்லலாமா?

நாம் இருட்டில் தொழலாமா?

பெண்கள் கோழி அறுக்கலாமா?

பதில்: ‘ஹிஜாப்’ புக்குரிய சட்டப்படி செல்ல முடியுமென்றால் கணவன், சகோதரன், தந்தை போன்றவர்களுடன் செல்லலாம். அது பெரும்பாலும் சாத்தியமாகும் என்று சொல்ல முடியாது.

விளக்கு எதுவும் இல்லாமல் இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதிருக்கிறார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள் : புகாரி, முஸ்லிம்) எனவே இருட்டில் தொழலாம்.

ஒரு பெண்மணி காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாள். ஒரு ஆடு மரணத் தறுவாயை நெருங்கியபோது, கூர்மையான ஒரு கல் மூலம் அந்த ஆட்டை அறுத்தாள். பிறகு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அதைச் சாப்பிடலாமா என்று கேட்டாள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதனைச் சாப்பிடும்படி அனுமதி தந்தனர்.அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி. எனவே கோழிஅறுப்பதில் தவறு இல்லை. கேள்வி: சிலர் தொழுது முடிந்ததும், பள்ளியில் இரண்டு அடி முன்னால் நடந்து, பிறகு திரும்புகிறார்களே! ஹதீஸில் இப்படி செய்ய வேண்டும் என்று உள்ளதா?

பதில்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களின் அருமைத் தோழர்களும் செய்யாத பித்அத்தாகும்.

பதில்கள்: மவ்லவி P ஜைனுல் ஆபிதீன்
முஸ்லீம்கள் ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்யலாமா?
ஷேர் மார்க்கெட் ஹலாலா? ஹராமா? என்பதை ஆய்வு செய்வதற்கு முன் ஷேர் மார்க்கெட் என்றால் என்ன? அதனால் பொது மக்களுக்கு என்ன பயன் என்பதை அறிய வேண்டும்! அலசுவோம் வாருங்கள்!

வியாபாரம்

வியாபாரம் செய்யப்படும் முறையை 4 வகைப்படுத்தலாம்

1. தனி நபர் நிறுவனம், 2. கூட்டு நிறுவனம், 3. வரையறுக்கப்பட்ட பங்கு நிறுவனம், 4. பொதுத்துறை நிறுவனம்

தனி நபர் நிறுவனம் (PROPRIETORSHIP CONCERN) உங்களிடம் 5 இலட்ச ரூபாய் உள்ளது ஒரு நிறுவனத்தை நடத்த விரும்புகிறீர்கள் ஆனால் அந்த நிறுவனத்தின் இலாபம் நட்டம் உங்கள் ஒருவரை மட்டுமே சார்ந்தது காரணம் நீங்கள் நேரடியாக அந்த நிறுவனத்தின் முதலாளி ஆகிறீர்கள். நட்டம் ஏற்பட்டால் நீங்கள மட்டுமே நேரடியாக பொறுப்பு மேலும் நட்டத்திற்கான உண்மை காரணம் உங்களுக்கு தெரியும்! கூட்டு நிறுவனம் (PARTNERSHIP CONCERN)

உங்கள் தனி நபர் நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்த 5 இலட்ச ரூபாய் குறைவாக உள்ளது ஆனால் இலாபம் அதிகமாகவும் நட்டம் குறைவாகவும் வரவேண்டும் என்ற எண்ணம் வருகிறது, உடனே உங்கள் நெருங்கிய சகோதரரையோ நண்பரையோ உங்கள் வியாபாரத்தில் கூட்டாளியாக்கிக் கொள்கிறீர்கள் இப்போது உங்கள் தனி நபர் நிறுவனம் கூட்டாண்மையாக மாறுகிறது அதே சமயம் உங்கள் கூட்டு நிறுவனம் திவாலானாலோ, கடன் சுமை அதிகரித்தாலோ கூட்டாளிகளாகிய நீங்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் சொத்தைக்கூட இழக்க நேரிடும்! நட்டம் ஏற்பட்டால் நீங்களும் உங்கள் கூட்டாளியுமே நேரடியாக பொறுப்பு! மேலும் நட்டத்திற்கான உண்மை காரணம் உங்கள் இருவருக்கும் தெரியும்!

லிமிடெட் கம்பெனி வரையறுக்கப்பட்ட (பங்கு) நிறுவனம்)

உங்கள் கூட்டு நிறுவனம் அதாவது பார்ட்னர் சிப் நிறுவனத்தில் நீங்கள் இருவரும் முதலீடு செய்த 10 இலட்சம் போதவில்லை முதலீடு 50 இலட்சமாக அதிகரிக்க வேண்டும் ஆனால் கடன் வாங்கி நட்டம் வந்துவிட்டால் இருவருமே திவாலாகி விடுவீர்கள் என்ற பயம் வருகிறது உடனே நீங்கள் உங்கள் நிறுவனத்தை லிமிடெட் கம்பெனியாக மாற்றுகிறீர்கள் இப்போது உங்கள் கம்பெனி என்பது ஒரு தனி நபராகக் கருதப்படுகிறது இப்படிப்பட்ட நிலையில் கம்பெனியின் கடனுக்கு நீங்கள் இருவரும் நேரடியாக பொறுப்பாகமாட்டீர்கள்! சரி! உங்களுக்குத் தேவையான 50 இலட்ச ரூபாயை முதலீடு செய்பவர்கள் யார்? நட்டம் யாரை சார்ந்தது என்பதை அறிய வேண்டுமா? அதற்கு கம்பெனியின் கீழ்கண்ட இரு பிரிவுகளை அறிவது ஒன்றே வழி!

A) பிரைவேட் லிமிடெட் கம்பெனி (தனியார் பங்கு நிறுவனம்)
பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் உள்ள பங்குதாரர்கள் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டுமே இடம் பெறுவார்கள் காரணம் லாபம் வெளியே சென்றுவிடக் கூடாதே! அதே சமயம் இந்த பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் தனது பங்குகளை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய முடியாது! இந்த வியாபார முறையில் உறவினராகிய உங்கள் பங்குதாரர் தான் இட்ட முதலீட்டின் அளவு வரை மட்டுமே கம்பெனியின் கடன்களுக்குப் பொறுப்பாளியாவார். நட்டம் ஏற்பட்டால் நீங்களும் உங்கள் குடும்ப, நண்பர்களான பங்குதாரர்கள் மட்டுமே நேரடியாக பொறுப்பு! மேலும் நட்டத்திற்கான உண்மை காரணம் உங்களுக்கும், குடும்ப, நண்பர்களான பங்குதாரர்களுக்கும் நன்றாகவே தெரியும்!

B) பப்ளிக் லிமிடெட் கம்பெனி (பொதுப் பங்கு நிறுவனம்)
1000 ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலை வேண்டும் உலகம் முழுவதும் உங்கள் பொருட்கள் விற்பனையாக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கும் உங்கள் குடும்ப, நண்பர்களான பங்குதாரர்களுக்கும் வருகிறது அதற்கு 1000 கோடி முதலீடு தேவை ஆனால் முதலீடு செய்ய யாரும் கிடையாது இப்படிப்பட்ட நிலையில் உங்கள் சொந்த குடும்ப, நண்பர்களுடன் உருவான உங்கள் பிரைவேட் லிமிடெட் கம்பெனி உங்களுடைய ஒத்துழைப்புடன் அரசாங்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக மாற்றப்படும். இத்தகைய பப்ளிக் லிமிடெட் கம்பெனி பங்குச்சந்தையில் பங்குகளை விற்கமுடியும். அப்பாவி பொதுமக்கள் உங்கள் நிறும பங்குகளை வாங்குவார்கள்! வாங்கிய 1000 கோடி ரூபாயில் இலாபம் அதிகரித்தால் உங்கள் நிறுவனத்திற்கு பண்ணாட்டு அங்கீகாரம் கிடைக்கும் பேரும் புகழும் தேடி வரும் ஆனால் பெரும் நட்டம் எற்பட்டால் உங்களிடம் முதலீடு செய்த பொதுமக்கள் தலை உருளும்.

ஷேர் மார்க்கெட்! ஷேர் என்பது பங்கு! மார்க்கெட் என்பது சந்தை! முழுவதுமாக கூறுவதாக இருந்தால் பங்குச் சந்தை என்று பொருள். இந்த ஷேர் மார்க்கெட்டில் யார் பங்குகளை வெளியிட முடியும்? யார் வாங்க முடியும் என்பதை பார்ப்போம் வாருங்கள்! பங்குகளை வெளியிடும் அதிகாரம் பப்ளிக் லிமிடெட் கம்பெனிக்கு மட்டுமே உரியது. இந்த பப்ளிக் லிமிடென் நிறுவனங்களைத் தவிர வேறு எந்த நிறுவனங்களும் பங்குகளை பொதுமக்கள் முன் வெளியிட முடியாது! சரி பங்குகள் என்றால் என்ன?

பங்கு மற்றும் பங்குதாரர் என்றால் என்ன?

கம்பனிகள் முகம் தெரியாத பலரை சேர்க்க வெளியிடப்படும் சேர்களுக்கு (shares) பங்கு என்று பொருள். முகம் தெரியாத முதலீட்டாளர்களே பங்குதாரர்கள் அதாவது ஏமாற்ற தகுதி வாய்ந்தவர்கள்! இவர்கள் நீதிமன்றத்தை அணுகி னாலும் நீதி கிடைக்காது காரணம் தெரிந்தே கையொப்ப மிடுகிறார்கள் சவக்குழிக்குள் தங்கள் கால்களை நுழைக் கிறார்கள்!

சுரண்டலுக்கு சுவையான வியாயபாரம் பங்கு வணிகம்

பங்குசந்தை மோசடிதனி நிறுவனம் இலாப நட்டம் உங்களுக்கு மட்டுமே!

பார்ட்னர் சிப் (கூட்டாண்மை நிறுவனம்)

இலாப நட்டம் உங்களுக்கும் உங்கள் கூட்டாளிகளுக்கும்!

பிரைவேட் லிமிடெட் கம்பெனி (தனியார் பங்கு நிறுவனம்)

இலாப நட்டம் உங்களுடன் இருக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே!

பப்ளிக் லிமிடெட் கம்பெனி (பொதுப் பங்கு நிறுவனம்)

இலாபம் உங்களுக்கும் நட்டம் உங்களிடம் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்களுக்கு மட்டுமே!

கூட்டாளி, சொந்த நண்பன் போன்ற முகம் தெரிந்த நபர்களுடன் நடைபெற்ற வர்த்தகத்தில் நட்டம் வந்தால் பொதுவாக அமர்ந்து பேசி இறுதியாக முடிவுக்கு வரலாம் ஆனால் முகம் தெரியாத நபர்களுடன் நடைபெற்ற வர்த்தகத்தில் யாரிடம் சென்று நீதி கேட்பீர்கள்? தூக்குக் கயிறுதான் இன்றைய பங்குதாரர்களின் இறுதி முடிவாக உள்ளது! அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.

முஸ்லீம்கள் ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்யலாமா?

ஷேர் மார்க்கெட் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது?

நீங்கள் ரூபாய் 10 இலட்சத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்து ஒரு பங்கு நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் கீழ்கண்ட கேள்விகளுக்கு பங்குதாரர் என்ற வகையில் உங்களால் என்ன பதில் தர இயலும்

1. உங்கள் முதலீட்டை வைத்துக்கொண்டு ஹலாலான முறைப்படி அந்த நிறுவனம் பொருள் உற்பத்தி செய்து ஹலாலான முறையில் விற்பனை செய்கிறதா?
2. இன்று எத்தனையோ குளிர்பாணங்கள் சந்தையில் உள்ளன அவற்றில் ஒருவகையான பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்படு வதாகவும் அதை குடித்தால் மக்களுக்கு உடல்நலக் கேடு ஏற்படுவதாகவும் எத்தனையோ ஆய்வறிக்கைகள் வெளியிடப் படுகின்றன இப்படிப்பட்ட நிலையில் அந்த நிறும பங்குதாரர் என்ற அடிப்படையில் நீங்களும் உடந்தைதானே?

3. நீங்கள் 10 இலட்சத்திற்கு பங்குகளை வாங்கி 15 இலட்சத்திற்கு விற்கறீர்கள் அதே நேரம் 15 இலட்சத்திற்கு உங்கள் சகோதரர் பங்குகளை வாங்குகிறார் ஆனால் 10 இலட்சத்திற்கு பங்கு மதிப்பு குறைகிறது நட்டம் ஏற்படுகிறது! இது எந்தவகை வியாபாரம்?
4. ஒரு நிறுமத்தில் நீங்கள் பங்குதாரர் என்று வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் ஆலோசனைகளை அவர்கள் ஏற்பார்களா?

5. உங்கள் பங்கு நிறுமம் தொழில் நடத்த ஒருபக்கம் வங்கியில் வட்டிக்கு கடன் வாங்கியும் மற்றொரு பக்கம் உங்கள் பங்கு முதலீட்டை பெற்றும் தொழில் நடத்தும் இப்போது பங்குதாரர் என்ற முறையில் நீங்களும் வட்டி வாங்க உடந்தைதானே?

6. எந்த ஒரு நிறுவனமும் குறைந்தது 10 துணை நிறுவனங் களையாவது வைத்திருக்கும் அவற்றில் மதுபாண தயாரிப்பு, மதுபான விற்பனை போன்ற துணை நிறுவனங்கள் இருக்கத்தான் செய்யும். இது போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து அவர்களை வளர நீங்கள் உதவி செய்வீர்களா? காசுக்கு காசு மற்றும் திர்ஹமுக்கு திர்ஹம் ஒரு தொழிலா?

பங்குச் சந்தையில் 10 இலடசம் முதலீடு செய்து 15 இலட்சம் பெறுவதாக இருந்தால் அது காசுக்கு காசை விற்கும் தொழில் அல்லவா அப்படியானால் இதோ கீழ்கண்ட நபிமொழியை படியுங்கள்

தாவூஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்; ''உணவுப் பொருள் கைக்கு வந்து சேர்வதற்கு முன்பு அதை விற்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடைவிதித்தார்கள்!" என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார். ‘அது எவ்வாறு?’ என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு ''உணவுப் பொருள் அதை வாங்கியவரின் கைக்குப் போய்ச் சேராத (நிலையில் விற்கப்படுவ)தால் இது (உண்மையில்) காசுக்குக் காசை விற்பதாகும்" என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி 2138 Volume:2 Book:34)

அபூ ஸயீத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்; ''பலதரப்பட்ட பேரீச்சம் பழங்களின் கலவை எங்களுக்கு வழங்கப்படும்; அதை ஒரு ஸாவுக்கு இரண்டு ஸாவு என்ற அடிப்படையில் நாங்கள் விற்பனை செய்வோம். அப்போது நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஒரு ஸாவுக்கு இரண்டு ஸாவும் கூடாது; இரண்டு திர்ஹங்களுக்கு ஒரு திர்ஹமும் கூடாது!" என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி 2080. Volume:2 Book:34)
வியாபாரத்தில் பெருந்தன்மை கடைபிடிக்க வேண்டும்!

பங்குகளை வாங்குகிறீர்கள், விற்கிறீர்கள் இவற்றிற்கு இடையில் ஒருவருக்கு இலாபமும் மற்றொருவருக்கு ஏமாற்றமும்தான் மிஞ்சும் இப்படிப்பட்ட நிலையில் நிறுவனம் பெருந்தன்மையாக நடக்காமல் போனால் அந்த தொழிலில் அல்லாஹ்வின் அருள் கிடைக்காதே! அல்லாஹ்வின் அருள் கிடைக்காத வணிகம் நமக்கு எதற்கு?

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ''வாங்கும் பொழுதும் விற்கும் பொழுதும் வழக்குரைக்கும் பொழுதும் பெருநதன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!" என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (ஸஹீஹுல் புகாரி 2076. Volume:2 Book:34)
வியாபாரத்தில் உண்மையை கடைபிடிக்க வேண்டும்!

பங்கு வணிகத்தில் உண்மை பேசி வியாபாரம் நடைபெற்றால் பரவாயில்லை மாறாக ஒவ்வொரு தொலைக்காட்சி விளம்பரத்திலும் அடுக்கடுக்கான பொய்தான் வருகிறது. உதாரணமாக வெயில் காலங்களில் ஒருவகை பவுடர் விளம்பரம் செய்யப்படும் அதை தடவிக்கொண்டால் பனிக்கட்டியின் குளுமை கிடைக்கும் என்பார்கள் உண்மையில் அப்படி குளுமை கிடைக்கிறதா?

ஒரு பைக் விளம்பரம் வரும் அதில் 140கி.மி. வேகத்தில் கடற்கரையில் பறந்து டைவ் அடிப்பதை போன்று காட்டுவார்கள் அது போன்று கடற்கரையில் உங்களால் பறக்க முடியுமா?

பபுல்கம் (சிவிங்கம்) விளம்பரம் வரும் அதை சாப்பிட்டால் மாடுகளின் பற்கள் கூட பளிச்சிடும் என்பார்கள் அவ்வாறு நடக்குமா?

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; "விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக்குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!" என ஹகீம் இப்னு ஹிஸாம் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (ஸஹீஹுல் புகாரி 2079. Volume:2 Book:34) நட்டம் வரும் என்பதை அறிந்தே ஏமாற கூடாது!

பங்கு வணிகத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் ஏமாற்றத்தைத் தான் காண்பார்கள் ஏதோ ஒரு சிலர் இலாபம் காண்பார்கள். பங்கு வர்த்தகம் என்பது ஏமாற்று வேலை என்பதை தெரிந்தே அதில் நுழையலாமா? முஸ்லிம்கள் பொதுவாக ஏமாறவும் கூடாது, ஏமாற்றவும் கூடாது என்பதை அறிவுறுத்தும் நபிமொழி

அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்; ''ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தாம் வியாபாரத்தின்போது ஏமாற்றப்படுவதாகக் கூறினார்; அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ‘நீர் எதையேனும் விற்றால் அல்லது வாங்கினால் ‘ஏமாற்றுதல் இருக்கக் கூடாது!" என்று கூறிவிடுவீராக! (ஏமாற்றியது தெரியவந்தால் உமக்கு வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமையுண்டு!)" என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி 2117 Volume:2 Book:34) வேண்டுமென்றே விலை ஏற்றுவதற்காக தரகர்களை நியமிப்பது கூடாது

பங்குதாரர்களுக்கும், பங்கு நிறுமத்திற்கும் இடையில் இருப்ப வர்கள் இடைத்தரகர்கள் ஆவார்கள். இவர்கள் தான் பங்குகளின் விலை உயர்வுக்கும் விலை குறைப்புக்கும் மூலகாரணமாகிறார்கள். இந்த இடைத்தரகர்களில் ஒருவன்தான் உலகம் அறிந்த ஹர்சத் மேத்தா அவன் செய்த ஊழல் உங்களுக்குத் தெரியாதா என்ன? இப்படிப்பட்ட விலை ஏற்றத்தையும் அதற்கான இடைத்தரகர்களையும் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே வேண்டாம் என்று தடுத்தது நம்முடைய மார்க்கம் இஸ்லாம். ஆதாரம் வேண்டுமா? கீழே உள்ளது படியுங்கள்!

அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்; "கிராமத்திலிருந்து (விற்பனைக்காகச் சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்! வாங்கும் எண்ணமின்றி விலை எற்றி விடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! (விலை உயர்த்தி விற்பதற்காக, அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! (விலை உயர்த்தி விற்பதற்காக, ஆளை ஏற்பாடு செய்து, அதிக விலைக்குக் கேட்கச் செய்வதும் கூடாது!) ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிட வேண்டாம்! ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது, இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்! ஒரு பெண், தன் சகோதரியை தலாக் (விவாகரத்து செய்து) விடுமாறு (கணவனிடம்) கேட்டுத் தன்னுடைய பாத்திரத்தை நிரப்பிக் கொள்ள வேண்டாம்!" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை விதித்தார்கள்!" (ஸஹீஹுல் புகாரி 2140 Volume:2 Book:34)

கட்டுரையின் தொடர்ச்சிக்கு:

http://islamicparadise.wordpress.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/
ஆண்கள் கவரிங் நகை அணியலாமா? விற்கலாமா?

தங்க நகைகள் விற்பது போலவே கவரிங் நகைகளையும் விற்கலாம். மார்க்கத்தில் கவரிங் நகைகளை விற்கலாகாது என்று எந்தத் தடையும் இல்லை.

(வாங்குவோரை) ஏமாற்றும் வியாபாரத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 2783)
கவரிங் நகைகளைத் தங்க நகை என்று சொல்லியோ, அல்லது அதில் கலந்துள்ள தங்கத்தின் அளவை விட அதிக அளவு தங்கம் உள்ளதாகச் சொல்லியோ விற்றால் அது கூடாது. அதன் தரம் என்னவோ அதைச் சொல்லி விற்பதில் தவறில்லை.

பட்டாடை, தங்கம் அணிய ஆண்கள் தடுக்கப்பட்டுள்ளனர். ஆயினும் அவற்றில் விதி விலக்குகளும் உள்ளன. தங்கத்தில் சிறிய அளவைத் தவிர நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தனர். (அறிவிப்பவர் : முஆவியா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத் 16230, 16241, 16261, 16297, 16304 அபூதாவூத் 3701, நஸயீ 5060, 5061, 5068, 5069) இந்த அடிப்படையில் கவரிங், ஐம்பொன் போன்றவற்றை ஆண்கள் அணியலாம். ஏனெனில் இவற்றில் அடங்கியுள்ள தங்கம் இவற்றில் அடங்கியுள்ள மற்ற உலோகங்களுடன் ஒப்பிடும் போது சிறிதளவே உள்ளது.

பாதி தங்கமும், பாதி செம்பும் கலந்திருந்தால் அதில் உள்ள தங்கத்தை சிறிதளவு என்று யாரும் கூறுவதில்லை. அதனால் அதை ஆண்கள் அணியலாகாது.

அதிக விலையைக் காரணம் காட்டி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கத்தைத் தடுக்கவில்லை. தங்கம் இலவசமாகக் கிடைக்கும் காலம் வந்தாலும் அப்போதும் ஆண்கள் தங்கம் அணியக் கூடாது. தங்கத்திற்குத் தடை விதித்தால் அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். பிளாட்டினம், வைரம் மற்றும் அதை விட மதிப்புள்ள பொருட்கள் எதுவானாலும் அணியலாம். இதையெல்லாம் கூடாது என்றால் அதை அல்லாஹ் சொல்லியிருப்பான்.

"உமது இறைவன் எதையும் மறப்பவனல்லன்'' (அல்குர்ஆன் 19:64)
கேள்வி: பெண்ணுக்குத் தெரியாத மாப்பிள்ளைக்கும், மாப்பிள்ளைக்குத் தெரியாத பெண்ணுக்கும்; இடையே மணமுடித்து வைக்கின்றனர். வாழ வேண்டியது நாங்களா? மணமுடித்து வைப்பவர்களா? இருவரையும் பழக விட்டு ஒருவர் மற்றவரை புரிந்து கொண்டு பிறகு ஏன் திருமணம் நிச்சயிக்கப் படக்கூடாது?

பதில்: பெண்ணும் ஆணும் பார்த்துக் கொள்ளாமல் திருமணம் முடிப்பதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.

ஒருவர் தனக்கு திருமணம் நடக்கவிருப்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறியபோது ‘மணப்பெண்ணைப் பார்த்துவிட்டாயா?’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டனர். அவர் ‘இல்லை’ என்றார். ‘முதலில் பெண்ணைப் பார். இதுதான் உங்களிடையே அன்பை ஏற்படுத்தும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒருவரை மற்றவர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு. மார்க்கம் அறியாதவர்கள் இதை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் இஸ்லாத்தின் நிலை இதுதான்.

அதுபோல் திருமணம் செய்து வைக்கும் பொருப்பாளர் பெண்ணின் பரிபூரண சம்மதத்தை பெறாமல் திருமணம் நடத்தி வைக்க முடியாது. இவ்வாறு நடத்தி வைக்கப்பட்டால் அதை ரத்து செய்யும் அதிகாரம் தலைவருக்கு உண்டு.

தனக்கு விருப்பமில்லாத ஒருவருக்கு தன்னை தன் தந்தை மணமுடித்து வைத்துவிட்டதாக ஒரு பெண் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறையிட்டார். இத் திருமணத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரத்து செய்வதாகக் கூறினார்கள். பெண்களுக்கு மணவாளனை தேர்வு செய்வதில் உள்ள உரிமையை வெளிப்படுத்தவே இவ்வாறு கூறினேன். நான் அவருடனேயே வாழ்ந்து கொள்றேன் என்று அந்த பெண் கூறினார். (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல் நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா)
ஆணையும் பெண்ணையும் பழகவிட்டு ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ளலாம் என்று நீங்கள் கூறுவதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்;லை. பழகும்போது அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிட்டால் அடுத்த நிமிடமே ஆண்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்வார்கள். 90 சதவீதம் பேர்களின் நிலை இதுதான்.

அசம்பாவிதம் நடந்த பின் சம்பத்தப் பட்டவனையே அடைய வேண்டும் என்று விரும்புவது பெண்களின் இயல்பு. ஆண்களின் இயல்போ இதற்கு நேர் முரணானது.

எத்தனையோ பெண்கள் ஆண்களால் ஏமாற்றப்பட்டு வாழ்விழந்து நிற்கிறார்கள் என்பதை நாம் அன்றாடம் அறிந்து வருகிறோம். எனவேதான், பார்ப்பதுடன் நிறுத்திக் கொள்ள இஸ்லாம் கட்டளையிடுகிறது.

மேலும் பழகிப் புரிந்து கொண்டு விட்டதாகக் கூறிக்கொள்வோரின் திருமணம்தான் விவாகரத்தில் முடிகின்றது. அறிவுப்பூர்வமாக சிந்தித்து சீர்தூக்கிப் பார்க்காத இனக்கவர்ச்சி மட்டுமே மேலோங்கி நிற்கின்ற பருவத்தில் யாரும் யரையும் சரியாக புரிந்து கொள்ள முடியாது. உடலைப்பற்றித்தான் புரிந்து கொள்ள முடியுமே தவிர உள்ளத்தைப் புரிந்து கொள்ள முடியாது. பெண்களைப் பாதுகாக்கவே இஸ்லாம் பழகிப் புரிந்து கொள்வதை அனுமதிக்க மறுக்கின்றது.

நன்றி: சொர்க்கத்தோழி

www.nidur.info
ஹாஃபிஸ், எஸ்.இ.எம். ஷெய்கப்துல் காதிர் மிஸ்பாஹி

கேள்வி: கண் திருஷ்டியின் உண்மை நிலை என்ன? பொறாமைக்காரர்கள் பொறாமைக் கொள்ளும்போது ஏற்படும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்) (அத்: 114 வச: 5) என்ற இறை வசனத்தின் கருத்து என்ன?

‘கப்றுகளிலுள்ள மூன்றில் ஒரு பகுதி கண்திருஷ்டியிலுள்ளதாகும்’ என்று பொருள் தொனிக்கும் ஹதீஸ் ஸஹீஹானதா?

ஒருவர் பொறாமைக்கொள்கிறார் என சந்தேகம் வரும்போது ஒரு முஸ்லீம் (தன்னைக் காத்துக்கொள்ளும் பொருட்டு செய்ய வேண்டியது என்ன?

கண்திருஷ்டியிட்டவரின் உடலைக் கழுவப்பட்ட நீரைக் மொண்டு பாதிக்கப்பட்டவரின் உடலில் கொட்டிவிடுவதால் நிவாரணம் கிடைத்துவிடுமா? அந்த நீரை பீடிக்கப்பட்டவரின் உடலில் ஊற்றுவதா? அல்லது அவருக்குப் பருகக் கொடுக்க வேண்டுமா?

பதில்: ஃபத்வா சுருக்கம்

பிறர் கண்பட்டதினால் ஏற்படும் விளைவுக்கு ‘கண் திருஷ்டி’ எனக் கூறப்படும். அதாவது ஒரு பொருளை ஆச்சர்யப்பட்டுப் பார்க்கும்போது அப் பார்வையின் தீய விஷ சக்தி பார்க்கப்படும் பொருள் மீது பாய்ந்து அதனால் ஏற்படும் விபரீதத்திற்குத் தான் ‘கண்ணேறு’ அல்லது ‘கண்திருஷ்டி’ என பொருள் கொள்ளப்படும்.

கேள்வியில் குறிப்பிட்டுள்ள இறைவசனத்தில் ‘பொறாமைக்காரன் பொறாமைக் கொள்ளும்போது விளைந்திடும் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடிக்கொள்ளும்படி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைவன் ஏவியுள்ளான்.

‘கண்திருஷ்டியிடுபவர்கள் எல்லோருமே பொறாமைக்காரர்கள்தான். ஆனால் பொறாமைக்காரர்கள் அனைவரும் கண்திருஷ்டியிடுபவர்கள் அல்ல’ என்ற பொது நியதியின் அடிப்படையில்தான் கண்ணேறிடுதல் என்ற தீய குணத்தின் பொருளையும் பொறிந்துள்ள பொறாமைக் குணமுடையோரை விட்டும் பாதுகாப்பு தேடிட இறைவன் பணிக்கின்றான். ஒருவனது பார்வையிலிருந்து வெளியிடும் திருஷ்டி என்ற விஷம் தோய்ந்த அம்பு, சிலநேரம் எய்தவனையே தாக்கிடவும், சிலவேளை குறி தவறிடவும்; வாய்ப்புண்டு. அதாவது பாதுகாப்புக்கவசம் இல்லாதபோது தாக்கி விடுவதும், தற்காப்புடனிருக்கும் போது தாக்கிட எவ்வித முகாந்திரமுமின்றி எறிந்தவனையே திரும்பித் தாக்கிடும் குணமுடையதாகும்.

‘கண்திருஷ்டி படாமலிருக்க பாதுகாப்பு வசனங்களை ஓதிக் கொள்ளும்படி ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை ஏவிக்கொண்டிருந்தார்கள்’ என அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸும், ‘கண்ணேரு உண்மையானது, விதியை ஏதாவது போட்டியிடுவதாகக் கொண்டால், கண்திருஷ்டி அதனை முந்திவிடும். (உங்களால் பிறருக்கு திருஷ்டி ஏற்பட்டு அதனை நீக்கும் பொருட்டு) உங்கள் உடலைக் கழுவிக்கொள்ள வேண்டப்பட்டால் கழுவிக் கொள்ளுங்கள்’ என்ற இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸும் முறையே புகாரி, முஸ்லிம், திர்மிதீ மற்றும் முஸ்னத் அஹமது போன்ற ஸஹீஸான நூல்களில் ரிவாயத்து செய்யப்பட்டு, ‘கண்திருஷ்டி உண்மை’ என ஊர்ஜிதமாக்கப்பட்டுள்ளது.
‘உண்மையில் மகள் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், ‘நபியே! ஜாபிரின் பிள்ளைகளுக்கு திருஷ்டி பட்டுள்ளது. அவர்களுக்காக (பாதுகாப்பு வசனங்களை ஓதி) மந்திரிக்கலாமா?’ என்று வினவ, ‘ஆம்! விதியை ஏதாவது பொருள் பேட்டியிடுமாயின், கண்திருஷ்டி அதனை முந்திவிடும்’ என்ற ஹதீஸை இமாம் இஹமதிப்னு ஹம்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி, திர்மிதீ ரஹ்மதுல்லாஹி அலைஹி ஆகியோர் ரிவாயத்து செய்துள்ளனர்.

‘திருஷ்டியிடப்பட்டவரை உளூ செய்யக்கூறி அந்நீரைக்கொண்டு பாதிக்கப்பட்டவரைக் கழுவ வேண்டும்’ என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்ததாக அபூதாவூது ரஹ்மதுல்லாஹி அலைஹிஅவர்கள் ரிவாயத்து செய்கிறார்கள். ‘ஒருமுறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளயே செல்லும்போது ஸஹல்பின் ஹனீஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் மக்காவை நோக்கி உடன் நடந்து வந்தார்கள். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும், ஸஹல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குளித்தார்கள். மிக அழகிய உடல்கட்டும், வெண்மை நிறமுடைய ஸஹல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் உடல் வனப்பைக் கண்ட பனீ ஆத்தி குழுவைச் சேர்ந்த ஆமிர் பின் ரபிஆ ரளியல்லாஹு அன்ஹு, ‘இன்றுபோல் என்றும் முடிப் பொதிந்த கட்டான தேகத்தைக் கண்டதில்லை’ என்று கூறியதுதான் தாமதம், ஸஹல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்படியே மயக்கமுற்று விட்டார்கள்.

இவ்விஷயம் உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ‘நபியே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஸஹல் (ரளியல்லாஹு அன்ஹு) தலை தூக்க முடியாமல் அவதியுறுகிறார். அவர் விஷயத்தில் ஏதேனும் உபாயம் உண்டா?’ என (அங்குள்ளவர்கள்) கேட்டார்கள். ‘இது சம்மந்தமாக யாரையேனும் நீங்கள் சந்தேகிக்கிறீர்களா?’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வினவ ‘ஆம்! ஆமிர் பின் ரபிஆ தான் அவரைப் பார்த்தார்’ எனக் கூறப்பட்டதும், ‘உங்களின் சகோதரரை யாரேனும் எதற்காக கொல்ல வேண்டும்? உங்களை ஆச்சரியத்தில் அழ்த்திடவல்ல ஏதாவதொன்றை காண நேர்ந்தால் ‘பாரகல்லாஹ்’ என மொழிந்தால் போதாதா?’ என ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி சற்று கோபமாகவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

பின் ஆமிர் பின் ராபிஆ ரளியல்லாஹு அன்ஹு அவர்களை, ‘ஸஹ்னுக்காக குளித்திடவும்’ என கட்டளையிட்டு, (அதன்பின்) ஆமிர் பின் ராபிஆ ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் முகம், இரு கைகள், இரு முழங்கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்களின் ஓரங்கள் ஆகிய உறுப்புக்களையும் அவர்களது ஆடையின் உள்ளேயும் கழுவப்பட்ட நீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து, அந்த நீரை ஸஹல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பின்புறத்திலிருந்து ஒருவர் தலையிலும், முதுகிலும் கொட்டி (தண்ணீர் பிடித்த) அப்பாத்திரத்தையம் தலைகீழாகக் கவிழ்த்துப் போடச் செய்தார்கள்.

இப்படிச் செய்ததும் ஸஹல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எவ்வித தீங்குமின்றி, தன் பயணத்தை மற்றவர்களுடன் தொடர்ந்தார்கள்’ என்ற நிகழ்ச்சியை இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் அஹமதிப்னு ஹம்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் நஸாயி ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் இப்னு ஹிப்பான் ரஹ்மதுல்லாஹி அலைஹி ஆகியோர் ரிவாயத்துச் செய்கின்றனர். அறிஞர்கள் பலரும் திருஷ்டி படுவது உண்மையென்பதை மேற்கண்ட, மற்றும் பல ஹதீஸ்கள் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கின்றனர். தவிர, இது அன்றாடம் நடக்கும், நாம் பார்க்கும் நிகழ்ச்சியாகவும் உள்ளது.

கேள்வியில் குறிப்பிட்டிருந்த, ‘கப்றுகளிலுள்ள மூன்றிலொன்று கண்திருஷ்டியினால் உள்ளதாகும்’ எனப் பொருள் தொணிக்கும் ஹதீஸின் ஸஹீஹான நிலைபற்றி நாம் அறியோம். எனினும், ‘எனது உம்மத்திலுள்ளவர்களில் மரணிக்கும் பலர், களா – கத்று (எனும் இயற்கைத் தீர்ப்பு, விதி)க்குப் பின் திருஷ்டியினாலேயே ஆவர்’ என்ற இந்த ஹதீஸை ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக இமாம் பஜ்ஜார் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ரிவாயத்து செய்துள்ளதை ‘நய்னுல் அவ்தார்’ என்ற நூலின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

‘அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை, அவனிடம் முழமையாக தஞ்சம் புகுதல் ஆகியவற்றுடன், திருக்குர்ஆனின் 112, 113, 114 அத்தியாயங்களான ஸுரத் இக்லாஸ், அல்ஃபலக், அந்நாஸ், ஸுரத் அல்ஃபாத்திஹா, ஆயத்துல் குர்ஸிய்யி போன்றவற்றை அதிகமதிகம் ஓதிவருதல், மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிவந்த தற்காப்பு துஆக்களான, ‘அவூது பி கலிமாதில்லாஹித் தாம்மாத் மின் ஷர்ரி மா கலக்’ (பொருள்: இறைவன் படைத்தவற்றிலிருந்து ஏற்படும் தீங்கை விட்டும் பூரண கலிமாக்களால் பாதுகாவல் தேடுகிறேன்)

‘அவூது பி கலிமாதில்லாஹித் தாம்மா, மின் களபிஹி, வ இகாபிஹி, வமின்ஹம ஷர்ரி இபாதிஹி, வமின்ஹம ஜாதிஷ் ஷைதானி வஅன் யஹ்ளுரூன்’ (பொருள்: அல்லாஹ்வின் கோபம், தண்டனை, அவனது அடியார்களின் தீங்கு ஆகியவற்றை விட்டும், மேலும் துன்மார்க்கனின் ஊசலாட்டங்கள், இன்னும் அவை என்னை நெருங்காமலிருக்கவும், இறைவனின் பூரண கலிமாக்களைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்.) என்ற துஆக்களையும்,

மேலும் 'ஹஸ்பியல்லாஹு லாஇலாஹ இல்லாஹுவ, அலைஹி தவக்கல்து வஹுவ ரப்புல் அர்ஷில் அளீம்’ (பொருள்: எனக்கு இறைவனே போதும். அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவனின் மீது நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அவன்தான் வலுவான அர்ஷின் அதிபதி) என்ற இறை வசனத்தையும் அதிகமதிகம் ஓதி வருவதைக் கொண்டு, மனு, ஜின், ஷைத்தான் போன்றோர்களது தீங்கை விட்டும் தற்காத்துக் கொள்வதற்காக தன்னை அரணிட்டுக் கொள்வது ஒவ்வொரு முஸ்லீமுக்கும் ஏற்புடையதாகும். நீடூர்.இன்ஃபோ

www.nidur.info
மவ்லவி S.முஹம்மது லியாகத் அலீ மன்பஈ

நாளை அருவடை செய்வதற்கு தயாராக இருந்த ஒரு விளைநிலத்தில் திடீரென்று ஓர் ஆட்டு மந்தை திபுதிபுவென நுழைந்தது. அவ்வளவுதான்! இன்றே முழு அருவடையும் செய்யப்பட்டுவிட்டது. ஆம்! அத்தனை பயிர்களும் ஆட்டு மந்தைக்கு உணவாகி விட்டது.


விவசாயி வந்து பார்த்தார். ஆட்டு மந்தையின் உரிமையாளர் மீது வழக்கு தொடுக்கின்றார். நபி தாவூது அலைஹி வஸல்லம் அவர்கள் வழக்கை விசாரித்தார்கள். இறுதியில் தீர்ப்பும் அளித்தார்கள்.

விவசாயியின் பயிர் முழுவதையும் விலை மதிப்பீடு செய்தபோது ஆட்டுமந்தையின் முழு விலைக்கு சமமாக இருந்தது. எனவே ஆட்டுமந்தையை விவசாயிக்கு உரிமையாக்குகிறேன் என்று தீர்ப்பளித்தார்கள்.

ஆடுகளுக்குச் சொந்தக்காரர் அழுதவண்ணம் வெளியே வருகின்றார். எதிரில் தாவூது அலைஹி வஸல்லம் அவர்களின் மகனார் நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்கள் நிற்கிறார்கள். விபரம் கேட்கின்றார்கள். விவசாயி சொல்கின்றார்.


‘வாயில்லா பிராணியான எனது ஆடுகள் செய்ய செயலுக்காக நான் எப்படி பொறுப்பாளியாக முடியும்? எவ்வளவோ காலமாக நான் கஷ்டப்பட்டு சேகரித்த சொத்தை ஒரு நொடியில் இழந்து நிற்கின்றேன்’ என அவர் கண்ணீர் விட ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்கள் மீண்டும் தம் தந்தையிடம் சென்று மறுவிசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குகிறார்கள்.

‘அதாவது ஆடுகளை கவனக் குறைவாக விளைநிலத்தில் மேயவிட்டதன் காரணமாக நீர் உமது ஆடுகளை அந்த விவசாயியிடம் சில காலத்துக்கு விட்டு விட்டு நிலத்தை நீர் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த அளவுக்கு அவரது பயிர் வளர்ந்திருந்ததோ அந்த அளவுக்கு நீர் அதில் விவசாயம் செய்ய வேண்டும். அது வரையில் உமது ஆடுகளின் பலனை அவர் அனுபவித்துக் கொள்ள வேண்டும். அவரது பயிர் உமது ஆடுகளால் அழிக்கப்பட்டபோது இருந்த நிலைக்கு வரும் வரை நீர் விவசாயம் செய்து அவரிடம் நிலத்தை ஒப்படைத்து விட்டு உமது ஆடுகளை மீட்டிக்கொள்ள வேண்டும்’ என்று தீர்ப்பளித்தார்கள்.

அற்புதமான இந்த தீர்ப்பைத் தான் வல்ல ரஹ்மான், ‘ஸுலைமானுக்கு நாம் தீர்ப்பின் நுட்பங்களை விளக்கி வைத்தோம். ஆனால் இருவருக்குமே கல்வியையும், ஞானத்தையும் கொடுத்திருந்தோம். (அல்குர்ஆன் 21:79) என்று புகழ்துரைக்கின்றான்.

இறைவனாலேயே தீர்ப்பின் நுட்பங்களைக் கொடுக்கப்பெற்று பாராட்டுப்பெற்ற நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்கள் அளித்த உலகப்பிரசித்திப் பெற்ற வியக்கத்தக்க இன்னொரு தீர்ப்பையும் பார்ப்போமே!

இரண்டு பெண்கள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். இருவருக்கும் குழந்தைகள். அதுவும் ஆண் குழந்தைகள். இந்நிலையில் அங்கே வந்தது ஓநாய் ஒன்று! தாய்மார்கள் அயர்ந்திருந்த வேளையில் ஒரு குழந்தையை அது கவ்விச்சென்று விட்டது. கண் விழித்துப் பார்த்த இருவரும் ஒரு குழந்தையைக் காணாமல் தவித்தபோது தூரத்தில் ஓநாயின் பிடியில் சிக்கி குழந்தை கதறுவதும் சற்று நேரத்தில் அதன் உயிர் பிரிந்து விட்டதும் தெரிகிறது. குழந்தையைப் பறிகொடுத்தவள் உடனே ஒரு தந்திரம் செய்தாள்.


அருகில் கிடந்த மற்றொரு குழந்தையை உடனே கைப்பற்றினாள். ‘உன் குழந்தையை ஓநாய் தூக்கிச் சென்று விட்டதே!’ என்று அடுத்தவளைப் பார்த்து சொன்னாள். அவளோ, ‘என்ன கொடுமை இது? உன் குழந்தையைத் தானே அது கொண்டு சென்றது. இது என் பிள்ளையல்லவா?’ என்று குமுறினாள்.

விவகாரம் நபி தாவூது அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகம் சென்றது. அவர்கள் வழக்கை விசாரித்தார்கள். இரு பெண்களில் வயதால் சற்றுப் பெரியவளாக இருந்தவருக்கே அந்த குழந்தை சொந்தம் என்று தீர்ப்பளித்து விட்டார்கள். அவர்களின் தீர்ப்பால் அழுது புலம்பிய மற்றொரு பெண் வெளியே வந்து அங்கே நின்று கொண்டிருந்த நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறையிட்டாள்.

வழக்கு மீண்டும் மறு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. விஷயத்தை நன்கு விளங்கிக் கொண்ட ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையான தாயைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு தந்திரம் செய்தார்கள். ‘குழந்தை இருவருக்குமே தேவை. எனவே ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் இக்குழந்தையை இரு கூறுகளாகப்பிளந்து ஆளுக்குப் பாதியாகத் தந்து விடுகின்றேன்’ என்றார்களே பார்க்கலாம்!

தாவூது அலைஹி வஸல்லம் அவர்களின் தீர்ப்பின்படி குழந்தையைத் தன்னிடம் வைத்திருந்த பெரியவள் சற்றும் சலனமின்றி வாய் மூடியிருக்க இளையவள் உடனே சொன்னாள், ‘அல்லாஹ் உங்களுக்கு கருணை புரிவானாக! வேண்டாம், தயவு செய்து அப்படிச் செய்யாதீர்கள். குழந்தை அவளின் பிள்ளைதான். அதை அவளிடமே கொடுத்துவிடுங்கள்’ என்றாள். இதைக்கேட்டவுடன் ஸ{லைமான் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இந்தச் சின்னவளே உண்மையான தாய்!’ எனத் தீர்ப்பு வழங்கினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, நஸாயீ)

தாயன்பு எத்தகையது என்பதற்கு இந்நிகழ்ச்சி தக்கதொரு சான்றாகும். ஆம்! தம் கண் முன்னால் தான் ஈன்றெடுத்த தன் அன்பு மகனை அறுக்கப் போகிறேன் என்று சொன்னவுடனேயே உண்மைத்தாய் பதறுகிறாள். தனக்குத் தன் குழந்தை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவனை கொன்றுவிடக்கூடாது என்பதற்காக குழந்தை தன் மகனல்ல, அவளின் மகன்தான் எனக் கூறிவிடுகிறாள். இதைத்தான் நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களும் எதிர்பார்த்தார்கள்.


நீதியைக் கண்டு பிடிப்பதற்கு சில வேளை இது போன்ற தந்திரங்கள் தேவைப்படுகின்றன. இல்லையெனில் நீதி அநீதியாக மாறிவிடும். நபி தாவூது அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த தீர்ப்பு வெளிப்படையான ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்திருந்தது. ஆனால் நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களோ அல்லாஹ்வினால் அளிக்கப்பட்டிருந்த அறிவின் ஒளியாலும் ஆழிய மதி நுட்பத்தினாலும் பிரச்சனையின் ஆழத்துக்கே சென்று ஒரு நொடியில் நீதியை வழங்கி விட்டார்கள்.

நன்றி : மனாருல் ஹுதா, நவம்பர் 2000

www.nidur.info