••• மூன்று கடினமான கேள்விகள் ••• 




நீண்ட காலமாக ஒரு இளைஞர் வெளி நாட்டில் படித்து வந்தார். அவர் 

தாயகம் திரும்பிய பொழுது, அவர் பெற்றோரிடம் "ஒரு மார்க்க அறிஞரை 

காட்டுங்கள், அவரிடம் எனக்கு மூன்று கேள்விகள் கேட்க வேண்டும்" 

என்றார். 

அவரது பெற்றோரும் அவரை ஒரு மார்க்க அறிஞரிடம் அழைத்து சென்றார்கள்..

 இளைஞர் : நீங்கள் யார்? 

என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா? மார்க்க அறிஞர் : 

நான் அல்லாஹுவின் அடிமை.. இறைவன் நாடினால் உங்களுக்கு பதில் 

அளிக்க முடியும் என்று நம்புகிறேன்.. 

இளைஞர் : எனக்கு மூன்று கேள்விகள் இருகின்றன.

 1. இறைவன் இருக்கிறானா? 

அப்படி இருந்தால் அவனின் உருவத்தை காட்டுங்கள்..

 2. தக்தீர் (விதி) என்றால் என்ன?? 

3. ஷைத்தான் தீயால் படைக்க பட்டவன் என்றால், இறுதியில் அவனை ஏன் 

தீயாலான நரகத்தில் அல்லாஹ் போடுகிறான். 

அது அவனுக்கு வலிக்க போவது இல்லை, ஏனென்றல் நரகமும்,

 ஷைத்தானும் தீயால் படைக்கப்பட்டவைகள் .. அல்லாஹ் இதை கூட 

யோசிக்கவில்லையா?? 

உடனே மார்க்க அறிஞர் அந்த இளைஞனை அறைந்தார்.. 

இளைஞர் : (வலியோடு) ஏன் என்மேல் கோபம் கொள்கிறீர்கள்?

 மார்க்க அறிஞர் : நான் கோபம் கொள்ளவில்லை. உங்கள் கேள்விகளுக்கு பதில் கூறினேன்..

 இளைஞர் : (வியப்போடு) என்ன சொல்கிறீர்கள்?

 மார்க்க அறிஞர் : நான் உங்களை அடித்த பிறகு எவ்வாறு உணருகிறீர்கள்? 

இளைஞர் : எனக்கு வலிக்கிறது.. மார்க்க அறிஞர் : நீங்கள் வலியை நம்புகிறீர்கள??

 இளைஞர் : ஆமாம். 

மார்க்க அறிஞர் : அப்படி என்றால், அதன் வடிவத்தை காட்டுங்கள்.. இளைஞர் : என்னால் முடியாது.

. மார்க்க அறிஞர் : அது தான் முதல் கேள்விக்கான பதில்.. 

இறைவனின் உருவத்தை பார்க்காமலே அவனை உணர முடியும்..

 (மேலும் தொடர்ந்தார்) நேற்று இரவு நான் உங்களை அடிப்பேன் என்று கனவு கண்டீர்களா?

 இளைஞர் : இல்லை 

மார்க்க அறிஞர் : இன்று என்னிடம் அடி வாங்குவேன் என்று

 நினைத்தீர்களா??

 இளைஞர் : இல்லை.. 

மார்க்க அறிஞர் : இது தான் தக்தீர் (விதி). 

(மேலும் தொடர்ந்தார்) என் கை எதனால் செய்யப்பட்டது??

 இளைஞர் : சதையால் செய்யப்பட்டது..

 மார்க்க அறிஞர் : உங்கள் முகம்?? 

இளைஞர் : சதையால் தான்.

 மார்க்க அறிஞர் : நான் அறைந்தது வலித்ததா?? 

இளைஞர் : ஆமாம்

மார்க்க அறிஞர் : இது தான் உங்கள் மூன்றாவது கேள்விக்கு பதில்

ஷைத்தானும், நரகமும் தீயால் படைக்கபட்டவையாக இருந்தாலும்,

இறைவன் நாடினால் அது ஷைத்தானுக்கு கடும் வேதனையை தர கூடியாதாக அமையும்..

 ஜஸாக் அல்லாஹ் ஹைர்
.. 
இந்த page-ஐ லைக் செய்யவும்:-இஸ்லாம்

திருச்சி விமான நிலையம் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்...!  நண்பர்கள் இச்செய்தியை பகிர்ந்து அனைவருக்கும் உதவவும்.  சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் மூலம் எனது நண்பர் நேற்று தாய்நாட்டிற்கு செல்கையில் அவரது லக்கேஜ்ஜில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் பூட்டை உடைத்து திருடப்பட்டுள்ளன.ஆகவே நண்பர்கள் தங்கள் உடைமைகள் சரியாக உள்ளனவா என கண்காணிக்கவும்.  தகவல் :- Krishnan Senthil















திருச்சி விமான நிலையம் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்...! நண்பர்கள் இச்செய்தியை பகிர்ந்து அனைவருக்கும் உதவவும். சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் மூலம் எனது நண்பர் நேற்று தாய்நாட்டிற்கு செல்கையில் அவரது லக்கேஜ்ஜில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் பூட்டை உடைத்து திருடப்பட்டுள்ளன.ஆகவே நண்பர்கள் தங்கள் உடைமைகள் சரியாக உள்ளனவா என கண்காணிக்கவும். தகவல் :- Krishnan Senthil
இதை கனிவுடன் படியுங்கள்.!!!

ஒரு பையனுக்கு கேன்சர் இருந்தது.
எல்லோருக்கும்
தெரிந்ததுதானே கேன்சரை குணப்படுத்த
முடியாது என்று.

 அவனுக்கு 18 வயது , எந்த
நேரத்திலும் சாகலாம்.


அவன் வாழ்க்கை முழுதும் அவன்
வீட்டிலேயே முடங்கி கிடந்து அம்மாவின்
பராமரிப்பில் வாழ்ந்து வந்தான். அவன்
வீட்டை விட்டு எங்கேயும் வெளியில்
சென்றதில்லை.


ஒரு நாள் அவன் வெளியில்
சென்று சுத்திபார்க்க அவன் அம்மாவிடம்
அனுமதி வாங்கினான்.


அவன் வீட்டை விட்டு வெளியில்
இறங்கி நடக்கையில் பல
கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே
நடந்தான்.


அப்படி ஒரு கடையை கடந்து விட்டு பின்
திரும்பி இன்னொரு முறை அந்த
கடையை பார்த்தான்.




 அது ஒரு கேசட் கடை.
அதைவிட முக்கியமாக அந்த கடையில் அவன்
வயதை ஒட்டிய ஒரு தேவதை மாதிரி ஒரு பெண்
இருந்தாள்.


அவன் மெதுவாக அந்த கடை உள்ளே சென்றான்.
அவன் 'என்ன வேண்டும்'
என்று கேட்டுவிட்டு ஒரு புன்னகையை
உதிர்த்தாள்.. அவன் வாழ்நாளில்
இப்படியொரு அனுபவம் கிடைத்தில்லை.


 முதல்
பார்வையிலே காதல் என்பதை உணர்ந்தான்.
ஆனாலும் அவனுக்கு ஒருவித பயம்..
ஏதோ ஒரு கேசட்டை காட்டி இது வேண்டும்
என்றான். அவளும் அதை எடுத்து இதை பார்சல்
கட்டவா என்றாள். அவன் ஆமாம் என்பதாக
தலையை ஆட்டினான்.
அவள் உள்ளே சென்று கேசட்டை அழகாக பார்சல்
கட்டி வந்தாள்.


நேராக அதை கொண்டு போய்
அவன் அலமாரியில் வைத்து விடுகிறான்.
இது தினமும் நடக்கிறது. ஒருநாள் கூட
அவளிடம் பேசுவதற்கு அவனுக்கு பயம்.
கேசட்டை பிரித்து பார்த்ததும் கிடையாது.

இது அவன் அம்மாவுக்கு தெரிய வருகிறது.

அவள் அவனுக்கு தைரியம்
சொல்லி அனுப்பி வைக்கிறாள்.அவன் அந்த
கடைக்கு போய் ஒரு கேசட்டை வாங்கி அவள்
பார்சல் கட்டும் சமயத்தில் ஒர் பேப்பரில்
அவனது தொலைபேசி எண்ணை எழுதி
வைத்துவிட்டு கேசட்டை வாங்கியவுடன்
வீட்டிற்கு ஓடி வந்துவிடுகிறான்.


அடுத்த நாள் அந்த
வீட்டு தொலைபேசி மணி அடிக்கிறது. அவன்
அம்மா எடுக்கிறார்கள்.. அவன்
பெயரை சொல்லி 'இருக்கிறானா'
என்று கேட்கிறாள்..


அம்மாவிற்கு அழுகையை அடக்க
முடியவில்லை. அவன் நேற்றே இறந்துவிட்டான்
என்று கூறுகிறாள்.


 ஒரு பெரிய நிசப்தம். அவள்
அம்மாவின் அழுகை தவிர எதுவும்
கேட்கவில்லை.
அடுத்த நாள் அம்மா அவன்
நியாபமாக அவன் அறைக்கு செல்கிறாள்..


அங்கே அவன் அலமாரியில் நிறைய பிரிக்கப்படாத
பார்சல்கள் இருந்தன.. அதை பிரித்து பார்க்கிறாள்.
அதன் உள்ளே ஒரு கேசட்டும்
ஒரு துண்டுபேப்பரும் இருந்தது. அதில் 'நீ
ரொம்ப அழகாக இருக்கிறாய். ஏன் என்னிடம்
பேசவே மாட்டேங்குறே '
என்று எழுதியுருந்தது..


 மற்ற பார்சல்களிலும்
ஒரு கேசட்டும் அதே துண்டு பேப்பரும்
இருந்தது.


நெஞ்சை தொடும் இந்த குட்டிகதையில்
ஒரு பெரிய நீதியே இருக்கிறது.


உங்கள்
துணையிடன் எப்பாவாவது சண்டை போட்டால்,
சிறிது நேரம் உங்கள்
ஈகோவை கழட்டி வைத்துவிட்டு சில சமாதான
வார்த்தை கூறுங்கள்.. 


இல்லாவிடில் அந்த
பிரிக்கப்படாத பார்சல் போல பல வாய்ப்புகள்
பறிபோகும்...!!!


thanks to: tamil facebook news..!!!!


பறக்க முடியாமல் இருக்கும் தன் தாய்க்கு குஞ்சுகள் வந்து உணவளிக்கும் காட்சி...!!!




 (அல்லாஹ் மிகப்பெரியவன்)

thanks to: daytamil.com


ஆஸ்திரேலியாவில் பிரசவத்திற்காக
கேதே ஒக் டேவிட் என்ற ஆஸ்திரேலியப்
பெண்மனி சிட்னி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். கருத்தரித்து 27
வாரங்களே ஆன நிலையில்.
அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.
குறைந்த எடையில் பிறந்த ஒரு ஆண்,
ஒரு பெண்.


இரு குழந்தைகளையும் காக்க
மருத்துவர்கள் பெரு முயற்சி செய்தனர்.
பெண் குழந்தை உயிர் பிழைத்தது.
ஆனால்..


மருத்துவர்கள் கடைசி வரை போராடியும்
ஆண் குழந்தையைக் காப்பாற்ற
முடியவில்லை. குழந்தை இறந்துவிட்டதாக
தாயிடம் தெரிவிக்கப்பட்டது.


அதைத் தாங்கிக் கொள்ள முடியாத, அந்தத்
தாய்.. இறந்த
குழந்தையை மார்போடு கட்டி அணைத்து அழ
ஆரம்பித்து விட்டார்.


தொடர்ந்து இரண்டு மணி நேரம் தன்
உடலுடன் குழந்தையை அணைத்துக்
கொண்டு அழுதவாறே இருந்தார்.


அப்போது.. குழந்தை மெதுவாக
மூச்சு விடுவதை அந்தத் தாய் உணர்ந்தார்.


உடன்
மருத்துவர்களை அழைத்து குழந்தை மூச்சு விட
ஆரம்பித்ததைக் கூறினார்.


மருத்துவர்கள் குழந்தைக்கு அவசர
சிகிச்சை அளித்து.. இங்குபேட்டரில்
வைத்து..
சகஜ நிலைக்குக்
கொண்டு வந்தனர்.


சிறிது நேரத்தில் கண்
விழித்தது குழந்தை..
அதைப் பார்த்து.. ஆனந்தக்கண்ணீர் விட்ட
தாயின் விரல்களை குழந்தை பிடித்துக்
கொண்டது. 


இறந்த குழந்தையை உயிர்
பிழைக்க வைத்தது எது..


ஆம்..
அந்த தாயின் அரவணைப்பு..


இப்போது சொல்லுங்கள், உலகத்தில்
சிறந்தது தாய்மைதானே...!!!


(அல்லாஹ் மிகப்பெரியவன்)

Hard Disk ஐ பாதுகாக்க Check Disk செய்யுங்கள்

Hard Disk ஐ பாதுகாக்க Check Disk செய்யுங்கள்
உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.
மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.
இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.
இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.
எப்படி செய்வது எனக் காண்போம் வாருங்கள்.
1.My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.
2.அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab ஐ தெரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.
3.இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.
4.இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.
உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.
5.இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக் கூடாது எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள்.மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப் படும்.
6.மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ் ) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.
உங்கள் Hard Disk ஐ பரமரிப்பது உங்கள் கடமை. எனவே முதலில் chkdsk (check Disk )செய்யுங்கள். உங்கள் Hard Disk ஐ காப்பாற்றுங்கள்.
நன்றி:udayanadu.wordpress.com