பேஸ்புக் செய்தியை பார்த்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெங்களூர் ஐ.ஐ.எம். மாணவியின் காதலன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்தவர் மாலினி மர்மு(22). அவர் பெங்களூர் ஐ.ஐ.எம் இல் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்தார். அவருடைய காதலன் பேஸ்புக்கில் மர்முவை பிரிவதாகவும், இதன் மூலம் தான் சுதந்திரமடைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதைப் பார்த்த மர்மு துக்கம் தாங்க முடியாமல் உடனே விடுதி அறையில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மாலினி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவருக்கும், அவரது காதலருக்கும் இடையே தகராறு நடந்ததையும். இதையடுத்து தான் அவர் பேஸ்புக்கி்ல் மாலினியைப் பிரிவதாகத் தெரிவித்துள்ளார் என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வழக்கில் மாலினியை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது காதலன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். மாலினி தற்கொலை செய்து கொண்டதையடு்தது அந்த நபர் தனது பேஸ்புக் கணக்கினை அழித்துவிட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடையொன்றில் நகைகளை திருடி பாவாடைக்குள் உள்ள இரகசிய பொக்கெட்டுக்களில் மறைத்து வைத்த பெண்ணொருவர் வசமாக மாட்டிக் கொண்டார்.
திருடிய தங்க நகைகளின் பெறுமதி 54000 ஸ்டேர்லிங் பவுண்கள். இவர் நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பெட்டியுடன் சேர்த்தே திருடி பாவடையில் இருந்த நீண்ட பொக்கெட்டுக்களில் மறைத்து வைத்துள்ளார்.
கண்காணிப்புக் கமரா காட்டிக் கொடுத்தமையால் Saina Sava என்ற குறித்த பெண் வசமாக மாட்டிக் கொண்டார்.
குறித்த பெண் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் ரோமானியா நாட்டைச் சேர்ந்தவராவார். திருடுவதிலும் திருடர்கள் நாளாந்தம் புது புது தொழிநுட்பங்களைக் கையாளுகிறார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டியது எல்லோருமே…

thanksto:athirchi.com
தேவாலயத்தில் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொணடிருந்த போது நபரொருவர் தனது சொந்த கண்களை தோண்டியெடுத்து அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

வியரேக்கியோ பிராந்தியத்திலுள்ள சாந்த அன்றியா தேவாலயத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து கண்களை வெளியே தோண்டியெடுத்த அல்டோ பியன்சினி என்ற மேற்படி நபர் உடனடியாக வேர்சிலியா நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுபற்றி அவர் விபரிக்கையில் ஒரு குரல் ஒன்று எனது கண்களை தோண்டி எடுக்கும் படி என்னிடம் கூறியது என்று தெரிவித்தார்.

இந்த நபருடைய கண்களை மீளவும் பொருத்தி அவருக்கு பார்வை ஏற்படுத்துவது சாத்தியமில்லாது உள்ளதாக தெரிவித்திருந்த மேற்படி மருத்துவமனையின் சத்திர சிகிச்சை நிபுணர்கள் அவர் வாழ்நாள் முழுவதும் குருடாக இருக்க நேரிடும் என நம்புவதாக கூறுகின்றனர்.

அல்டோ மன நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வேர்சிலியா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ஜினோபர்பாக்சி விபரிக்கையில் எனது 26 வருட கால சேவைக்காலத்தில் இதுபோன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை காணநேர்ந்ததில்லை என்று கூறினார்.

அன்டோ பியான்சினி அம்புலன்ஸ் வண்டியில் அவரது தாயாருடன் மருத்துவமனையை வந்நடைந்ததாகவும் தனது மகனுக்கு எவ்வாறாவது பார்வையை மீளப்பெற்றுத்தரும்படி அந்த தாய் கண்ணீர் மல்க மருத்துவர்களிடம் கெஞ்சியமை நெஞ்சை உருக்கும் விதத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
வேற்றுக் கிரகவாசிகளின் வாரிசு ஒன்று கடந்த மாதம் பூமியில் பிறந்து உள்ளது என ஊடகங்கள் கேள்விக்குறியோடு அதிர்ச்சி செய்தி வெளியிட்டு உள்ளன.
கௌதமாலா நாட்டின் வான்பரப்புக்கு மேலாக கடந்த மாதம் இரவு பறக்கும் மர்மப் பொருள் ஒன்று பறந்து இருக்கின்றது.அதைத் தொடர்ந்து அத்தினத்தில் மனித முகத்துடன் அதிசய பன்றிக் குட்டி ஒன்று அங்கு உள்ள கிராமம் ஒன்றில் பிறந்து உள்ளது.பறக்கும் மர்மப் பொருளில் வேற்றுக் கிரகவாசிகள் வந்திருக்கின்றனர் என்றும் அவர்கள் பூமியில் விட்டுச் சென்ற வாரிசுதான் இந்த அதிசய பன்றிக் குட்டி என்றும் கிராம மக்கள் விசுவாசிக்கின்றனர்.
திரைப்படங்களில் வேற்றுக் கிரகவாசிகளுக்கும் மனிதர்களுக்கும் பிறக்கின்ற குழந்தைகளாக காட்டப்படுகின்ற பாத்திரங்களின் உருவத்தை இப்பன்றிக் குட்டி கொண்டு உள்ளது.

thanksto:athirchi.com