கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் புகை பிடிக்கும் பழக்கத்தால் கருவில் உள்ள குழந்தை பாதிக்கப்படுகிறது. சிகரெட் புகையில் உள்ள ரசாயனங்கள் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக கருவில் உள்ள குழந்தைக்கு நல்ல கொலஸ்ட்ரால்களை குறைத்து விடுகிறது. இந்த அளவு குறைவதால் பிறக்கும் குழந்தைகளுக்கு இதய நோய் ஏற்படுவது 10-15 சதவீதம் கூடுதலாக உள்ளது என புதிய ஆய்வு கூறுகிறது.


இந்த ஆய்வு அறிக்கை ஐரோப்பியா ஹார்ட்னுர்னலில் வெளியாகி உள்ளது. நமது உடலில் எச்.டி.எல் எனப்படும் உயர் அடர்த்தி லியோ புரோட்டின் உள்ளது.

இந்த நல்ல கொலஸ்ட்ரால் இதயத்தில் இருந்து உடல் உறுப்புகளுக்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்தக் குழாய்களில் சேதத்தை தடுக்கிறது. இதய நோய் ஏற்படுவதையும் தடுக்கிறது. உடலில் எல்.டி.எல் என்ற கெட்ட கொலஸ்ட்ராலும் உள்ளது. இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் புகைப்பிடிப்பதால் ரத்த அளவில் எச்.டி.எல்.லை குறைத்து விடுகிறது. இந்த ஆய்வு அவுஸ்திரேலியா சிட்னி பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் செலி மேஜர் தலைமையில் நடந்தது. எச்.டி.எல் கொலஸ்ட்ரால் 2-3 சதவீதம் குறைவதன் மூலம் இதய பகுதி ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டு காரனோரி இதய நோய் அபாயம் ஏற்படுகிறது.

மேற்கத்திய நாடுகளில் 15 சதவீதப் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது புகைப்பிடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை கண்டு கொள்வது இல்லை. அவர்கள் கர்ப்பமாக இருக்கும் போது தொடர்ந்து புகைபிடிக்கிறார்கள்.

thanks to; z9tech.com

பூமியின் காந்த ஈர்ப்பு தன்மையை உணரும் சக்தி மனித கண்களில் உள்ள புரதத்திற்கு உள்ளது. பறந்து செல்லும் பூச்சிகளின் கண்களில் காந்தப்புலம் தெரிவது இல்லை.

அதே பூச்சிகளுக்கு மனித கண் புரதத்தை செலுத்திய போது அந்த பூச்சிகள் பூமியின் காந்த புல பகுதியை கடக்கும் போது பதில் அளிப்பதாக இருந்தது. காந்த திசையை காட்டும் கருவியாக மனித கண் புரதம் இருக்கும் என்ற ஆய்வு விவரம் நேச்சர் கொம்யூனிகேஷன்ஸ் ஆய்வு இதழில் வெளியாகி உள்ளது.



இந்த ஆய்வு குறித்த சர்ச்சை நீடித்த போதும் புதிய கண்டுபிடிப்பு ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. மனிதர்களை போல இடம்பெயரும் பறவைகளுக்கு பதிவு செய்யும் கிரிப்டோகிராம் மூலக்கூறு இருப்பது தெரியவந்துள்ளது.

1980ம் ஆண்டு முதல் மனித கண் புரதம் குறித்து மான்செஸ்டர் பல்கலைகழக பேராசிரியர் ரொபின் பேக்கர் ஆய்வு மேற்கொண்டு இருந்தார். அதில் மனிதர்களுக்கு காந்த சக்தி அறியும் ஆற்றல் இருப்பதையும் கண்டறிந்தார்.

பழமை வாய்ந்த புரதம் பெரும் வடிவ நிலைகளாக இருக்கும் போது கிரிப்டோ கிராம் என அழைக்கப்படுகின்றன. பூமியில் ஒவ்வொரு விலங்குக்கும் இந்த புரதம் உள்ளது.

இடம்பெயரும் பறவைகள், மொனார்கோ பட்டாம்பூச்சி, பழப்பூச்சிகள் ஆகியவற்றுக்கு தாங்கள் செல்லும் பாதையை கண்டறிய கண்ணில் உள்ள கிரிப்டோகிராம் புரதம் உதவுகிறது.

thanks to;z9tech.com

கையடக்கத் தொலைபேசியின் பற்றரி சார்ஜ் குறைந்து விட்டால் அதை மீண்டும் சார்ஜ் செய்வதற்கான புது வகை T-ஷேர்ட் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்தப் புதிய கண்டு பிடிப்பு இவ்வார இறுதியில் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது. தொலைத்தொடர்புத் துறை ஜாம்பவான்களான ஒரேன்ஜ் நிறுவனமே இந்த புதிய கண்டுபிடிப்பை அறிமுகம் செய்யவுள்ளது.


தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் தாங்கள் அணிந்திருக்கும் இந்த T-ஷேர்ட்டில் போனை இணைத்து சார்ஜ் செய்து கொள்ளலாம்.

இவ்வார இறுதியில் இடம்பெறவுள்ள கிளஸ்டென்பரி திருவிழாவில் இந்த T-ஷேர்ட் செய்முறை ரீதியாக அறிமுகப்படுத்தப்படும். ஓசை அலைகளை அடிப்படையாகக் கொண்டு மிக இலகுவான தொழில் நுட்பத்தில் இந்த T-ஷேர்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

ஓசை அலைகளின் அழுத்தங்களை உள்வாங்கி அதை மின்சக்தியாக மாற்றி பற்றரிக்குள் செலுத்தி அதற்கு வலுவூட்டுவது தான் இந்தத் தொழில் நுட்பம. இதன்படி அதிக சத்தத்தோடு இசையை உள்வாங்கி அதிலிருந்து கிடைக்கும் அழுத்தங்களை சக்தியாக மாற்ற முடியும்.

எனவே இந்த T-ஷேர்ட்டை அணிந்து கொண்டு எவ்வளவு சத்தமாக இசையைக் கேட்கின்றோமோ, அவ்வளவு விரைவாக பற்றரியை சார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும் உற்பத்தியாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
வார இறுதியில் இடம்பெறவுள்ள கிளஸ்டென்பரி திருவிழாவின் போது ஒரேன்ஜ் நிறுவனம் பலருக்கு இந்த உற்பத்தியை அணிவித்து நேரடியாக அதன் செயற்பாட்டைப் பரீட்சிக்கவுள்ளது.

thanks to;z9tech.com

நாம் அனைவரும் வீடியோவினை பார்க்க அதிகமாக நாடும் தளம் யூடியூப் ஆகும். இந்த தளத்தில் எண்ணற்ற வீடியோக்கள் உள்ளன.
அவற்றில் ஒரு சில வீடியோக்களை புக்மார்க் செய்து வைத்திருப்போம்.

யூடியூப் வீடியோவினை நாம் முழுத்திரையிலையோ அல்லது குறிப்பிட்ட வடிவில் மட்டுமே பார்க்க முடியும். யூடியூப் வீடியோக்களை ஓன்லைனில் இருந்த படியே நமக்கு விருப்பமான வடிவில் பார்க்க முடியும். மேலும் இதனுடைய தோற்ற திரையையும் நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.



இதற்கு Youtube Embeded Code என்னும் மென்பொருள் உதவி செய்கிறது.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பின் ஒப்பன் செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான யூடியூப் வீடியோவில் URLயை உள்ளிடவும்.

பின் அகலம், உயரம், நிறம் போன்றவற்றை மாற்றியமைத்துக் கொள்ளவும். பின் Generate Code என்னும் பொத்தானை அழுத்தி அந்த XHTML கோடினை கணணியில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

வேண்டுமெனில் குறிப்பிட்ட திரையிலேயே Perview பார்த்துக் கொள்ளவும் முடியும். பின் சேமித்த XHTML கோப்பை உலவியில் ஒப்பன் செயதால் நீங்கள் வடிவமைத்த வடிவில் வீடியோவானது இருக்கும். இனி வழக்கம் போல வீடியோவினை காண முடியும்.

இணையதள முகவரி

thanks to;z9tech.com

ஆரோக்கியமாக இருப்பவர்கள் உடல் பருமனை பற்றி கவலைப்பட வேண்டாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாநில பொது மருத்துவ மற்றும் பல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உடல் பருமன் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ஆதர்ஷ் குப்தா தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 454 பேரின் மருத்துவ குறிப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர்களிடமும் பரிசோதனைகள் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.



ஆய்வு சொல்லும் தகவல்கள் வருமாறு: உடல் எடையை உயரத்தின் இரு மடங்கால் வகுத்து கிடைக்கும் தொகை பி.எம்.ஐ(பாடி மாஸ் இண்டக்ஸ்) எனப்படுகிறது. இது 18.5 முதல் 25 வரை இருப்பது நார்மல் என கருதப்படுகிறது. குறைந்தால் ஒல்லி என்றும் அதிகரித்தால் குண்டு என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

25-30 இருப்பது அதிக எடை என்றும், 30-35 இருப்பது சுமார் குண்டு, 35-40 என்பது அதிக குண்டு, 40-க்கு மேல் இருந்தால் அதிகபட்ச குண்டு என்றும் கூறப்படுகிறது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 454 பேரில் 135 பேரின் பி.எம்.ஐ அதிகமாக இருந்தது. பருமனாக இருந்தாலும் அவர்கள் ஆரோக்கியமாகவே இருந்தனர்.

thanks to;z9tech.com

தற்போதைய அறிவியல் யுகத்தில் உடலில் இழந்த உறுப்புகளை மீண்டும் புதிதாக பொருத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கண்டுபிடிப்பை மருத்துவ உலகம் கண்டுவருகிறது.

நமது உடலில் மிக மென்மையான பகுதி கண்ணாகும். வயதான காலத்தில் பாரம்பரியம் காரணமாக பார்வை இழப்பு ஏற்படுவதுண்டு. இந்த பார்வை இழப்பை சரி செய்து பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் பார்வை பெற புதிய ஆதார செல்களை(ஸ்டெம் செல்) கண்களுக்குள் செலுத்தும் சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பார்வை இழந்த இரண்டு பெண்களுக்கு லட்சக்கணக்கான கரு ஆதார செல்கள் செலுத்தப்பட்டு அவர்களுக்கு பார்வை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கண்களுக்குள் ஆதார செல்களை செலுத்தும் துவக்க கட்ட சோதனை அமெரிக்காவில் நடைபெறுகிறது.



இருப்பினும் இந்த ஆதார செல் சோதனை பிரிட்டன் நோயாளிகளுக்கு வரவிருக்கும் இளவேனிற்காலத்தின் போது மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பார்வை இழப்பு ஏற்பட்ட விலங்குகளுக்கு ஆதார செல் செலுத்தும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் போது மிக அற்புதமான முடிவு கிடைத்தது. ஆதார செல்கள் செலுத்தப்பட்ட விலங்குகள் புதிய கண் பார்வை பெற்றுள்ளன. இந்த அதிநவீனமான சிகிச்சை மனிதர்களுக்கு மேற்கொள்ளப்படும் போது நல்ல பலனளிக்கும் என மருத்துவ விஞ்ஞானிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆதார செல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இரண்டாவது பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்படுகிறது. முதல் பரிசோதனை கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்றது.

புதிய சிகிச்சை முறை குறித்து மாசாசூட்ஸ் அதிநவீன செல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் மருத்துவர் லாங்சா கூறுகையில்,"முற்றும் சிகிச்சை அளிக்க முடியாத நோய்களுக்கு மட்டுமல்லாமல் பலவீனம் அடைந்த கண் நோய்களுக்கும் சிகிச்சையை இந்த ஆதார செல்கள் மூலம் அளிக்க முடியும்" என்றார்.

thanks to;z9tech.com