36வது அத்தியாயமான யாஸீன் அத்தியாயத்திற்கு ஏராளமான சிறப்புகள் உள்ளதாக இடம் பெற்றுள்ளது. அவை அனைத்தும் ஆதாரமற்ற செய்திகளாகவே இடம் பெற்றுள்ளது.இன்று யாஸீன் அத்தியாயம் தொடர்பாக வந்துள்ள இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான செய்திகளை அடிப்படையாக வைத்துதான் பல அமல்களை செய்துவருகின்றனர். எனவே யாஸீன் தொடர்பாக வந்துள்ள செய்திகளின் தரத்தை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

திருக்குர் ஆனின் இதயம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு இதயம் இருக்கிறது குர்ஆனுடைய இதயம் (சூரா) யாஸீனாகும். யார் யாஸீன் (சூராவை) ஓதுகிறாரோ அதை ஓதியததற்காக அவர் பத்து தடவை குர்ஆனை ஓதிய நன்மையை பதிவு செய்கிறான்.நூல்கள் : திர்மிதீ (2812), தாரமி (3282)

இதன் ஹதிஸின் அறிவிப்பாளர் தொடரில் ஹாரூன் அபீ முஹம்மத் என்பவர் இடம் பெறுகிறார், இவர் யாரென்று அறியப்படாதவர். இக்கருத்தை இதை பதிவுசெய்த இமாம் திர்மிதீ அவர்களே அந்த செய்தியின் இறுதியில் இக்கருத்தை குறிப்பிட்டுள்ளார்கள்.மேலும் தாரமியில் இடம் பெறும் ஹதிஸில், யார் என அறியப்படாத ஹாருன் அபீ முஹம்மத் என்பவரே இடம் பெறுவதால் இதுவும் பலவீனமாதாகும்.

திருக்குர்ஆனின் மிக உயர்ந்த அத்தியாயம்

சூரா பகரா குர்ஆனுடைய திமிழாகும். மேலும் அதில் உயர்வானதுமாகும். சூரத்துல் பகராவின் ஒவ்வொரு ஆயத்துடன் எண்பது மலக்குகள் இறங்கிறார்கள். இன்னும் ”அல்லாஹு லாயிலாஹு இல்லாஹுவ அல் ஹய்யுல் கையூம்” என்ற வசனம், அர்ஷின் கீழ் இருந்து எடுக்கப்பட்டு பகரா அத்தியாயத்துடன் இனைக்கப்பட்டுள்ளது. யாஸீன் குர்ஆனுடைய இதயமாகும், யார் அல்லாஹ்வுடைய பொருத்தத்தையும் மறுமையும் நாடி அதை ஓதுகிறரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும் (எனவே) அதை உங்களில் மரணநெருக்கத்தில் உள்ளவர்களுக்கு ஓதுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல்கள் : அஹ்மத் (19415), முஸ்னத் ரூயானி பாகம் : 2 பக்கம் : 323, அல்முஃஜமுல் அல்கபீர்லிதப்ரானீ பாகம்:20,

இதன் அறிவிப்பாளர் தொடரில் ஒரு மனிதர் அறிவிக்கிறார் என்றும் அவர் தம் தந்தையிடமிருந்து அறிவிக்கிறார் என்றும் இடம் பெற்றுள்ளது. இதில் ஒரு மனிதர் யார்? அவரின் தந்தை யார்? அவரின் நம்பகத்தன்மை எத்தகையது? என்ற கேள்விகள் எழும். இது போன்ற முகவரி இல்லாதவர்களின் செய்திகளை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்பதில்லை.இதே செய்தி அஹ்தில் (19427), அபூதாவூத் (2714), இப்னு மாஜா (1438), பைஹகி பாகம் : 3 பக்கம் 383,இப்னு ஹிப்பான் பாகம் : 7, பக்கம் : 269 லும் இடம் பெற்றுள்ளது.இவற்றில் ஒருமனிதர் என்ற இடத்தில் அபூஉஸ்மான் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரும் யாரென அறியப்படாதவரே! இவரின் நம்பகத்தன்மையும் உறுதிசெய்யபடாததால் இச்செய்தியும் பலவீனமடைகிறது.இந்த செய்தி தொடார்பாக ஹாபிழ் இப்னு ஹஜர் பின்வருமாறு கூறுகிறார்கள் : இந்த செய்தி நபித்தோழர் கூற்றாகவும், நபிகளாரின் கூற்றாகவும் குழப்பி அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் அபூஉஸ்மான் என்பரின் நிலையும் அவரின் தந்தையும் நிலையும் அறியப்படவில்லை என்று இப்னுல் கத்தான் அவர்கள் குறைகூறியுள்ளார்கள். ‘இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகவும் அதில் குறிப்பிட்டுள்ள செய்தி அறியமுடியாததாகும் உள்ளது. மேலும் இது தொடர்பாக எந்த செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல!’ என்று தாரகுத்னீ அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் : தல்கீஸுல் ஹபீர் பாகம் : 2, பக்கம் : 104)

பத்து குர்ஆனை ஓதிய நன்மை

யார் யாஸீன் அத்தியாயத்தை ஓதுகிறாரோ அவர் பத்து தடவை குர்ஆனை ஓதியவரைப் போன்றவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(
நூல் ஷுஅபுல் ஈமான் பாகம் : 2, பக்கம் : 479)

இதை பதிவு செய்த ஆசிரியர் அவர்களே இதை முர்ஸல் வகையை சார்ந்தது என்று கூறியிருக்கிறார். அதாவது நபித்தோழர் அல்லாத ஒருவர் நபிகளார் கூறியதாக சொல்வது. இது ஆதாரத்திற்கு ஏற்றது அல்ல! ஏனெனில் நபிகளார் கூறியதை நபித்தோழர்கள் மட்டுமே கேட்டிருக்க முடியும்..மேலும் இந்த செய்தி சுனன் ஸயீத் பின் மன்ஸூர் என்ற நூ­ல் பாகம் :2, பக்கம் :278, ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த செய்தியின் கீழ் அதன் ஆசிரியர் ‘இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.மேலும் இந்த செய்தியில் இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் இடம் பெற்றுள்ளார் இவர் ஹிஜாஸ் மற்றும் வேறு ஊர் வழியாக அறிவித்தால் பலவீனமாகும் இந்த செய்தியில் இடம் இஸ்மாயில் பின் அய்யாஷ என்பவர் யாரிடம் செவியுற்றாரோ அந்த ஸயீத் என்பவர் ஜவ்ஸஸான் என்ற ஊரில் பிறந்து மக்காவில் இறந்தவராவார். (நூல் தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 4, பக்கம் : 78)எனவே இந்த செய்தி மேலும் பலவீனமடைகிறது.மேலும் இந்த செய்தி இப்னு ஹிப்பான் பாகம் 6 பக்கம் 312 ல் இடம் பெற்றுள்ளது இதில் ஹஸன் அவர்கள் ஜுன்துப் (ரலி­) வழியாக கேட்டதாக இடம்பெற்றுள்ளது.ஹஸன் அவர்கள் தத்லீஸ் செய்பவர். (நூல் : தக்ரீபுத் தஹ்தீப் பாகம் : 1, பக்கம் : 160)தத்லீஸ் என்பது ஒருவர் தான் நேரடியாக கேட்காத ஒருவரிடம், கேட்டிருக்கவும் கேட்காமல் இருப்பதற்கும் வாய்ப்புள்ள வார்த்தைகளை பயன்படுத்தி அறிவிப்பார். எனவே இவர் போன்றவர்கள் தனக்கு அடுத்துவரும் அறிவிப்பாளரிடம் நான் செவியுற்றேன், அவர் எனக்கு அறிவித்தார் என்று தெளிவாக கூறினால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த செய்தியில் ஹஸன் அவர்கள் தனக்கு அடுத்துவரும் அறிவிப்பாளர் ஜ‎ýன்துப் (ர­) அவர்களிடம் நேரடியாக கேட்டேன் என்று அறிவிக்கும் வாசகத்தில் கூறாததால் இச்செய்தி பலவீனம் அடைகிறது.மேலும் இச்செய்தி தப்ரானீ அவர்களின் அல்முஃஜமுஸ் ஸகீர் பாகம் :1, பக்கம் :255, மற்றும் அல்முஃஜமுல் அவ்ஸத் பாகம் : 4, பக்கம் : 21, ஆகிய நூல்களிலும் வேறொரு வழியாக வந்துள்ளது. எனினும் இதன் அறிவிப்பாளர் தொடரில் அக்லப் இப்னு தமீம் என்பவர் இடம் பெறுகிறார், இவரும் பலவீனமானவரே.
(
நூல் : அல்லுஅபாவு வல் மத்ருகீன்லிநஸயீ, பாகம் : 1, பக்கம் : 20)இன்னும் இதே ஹதீஸ் ஸுஅபுல் ஈமான் பாகம் : 2, பக்கம் : 481 ல் இடம் பெற்றுள்ளது. இதிலும் மேலே விமர்சனம் செய்யப்பட்ட யாரென அறியப்படாத அபூ உஸ்மான் என்பவரே இடம் பெற்றுள்ளார்.

தட்டில் எழுதி கரைத்து குடியுங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சூரத்துல் யாஸினை தவ்ராத்தில் ‘அல் முயிம்மா’ (அனைத்தையும் சேர்த்துக் கொள்ளக்கூடியது) என்று அழைக்கப்படும் என்று கூறினார்கள் அப்போது ‘முயிம்மா’ என்றால் என்ன என்று கேட்டகப்பட்டது. அதற்கு, அதனை ஓதக்கூடியவருக்கு இம்மை மறுமையின் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். இம்மை மற்றும் மறுமையின் அனைத்து துன்பங்களும் நீங்கிவிடும். மறுமையின் பயங்கர சூழ்நிலையும் விலகிவிடும் என்று பதிள­த்தார்கள்.இன்னும் இந்த சூராவிற்கு தாஃபிஆத்துல் காழிஆ (விதியை மாற்றக்கூடியது) என்று அழைக்கப்படும். அதாவது அதனை ஓதக்கூடியவருக்கு (தீங்கை) விட்டும் தடுக்கும், அவரின் தேவைகளை நிறைவேற்றும். யார் அதனை ஓதுகிறாரோ அவர் பத்து ஹஜ் செய்தவரைப் போன்றவராவார். யார் அதை ஓதக்கேட்கிறாரோ அவருக்கு ஆயிரம் தீனார் அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்ததின் (நன்மை) எழுதப்படும்.இன்னும் யார் அதை எழுதி பின்பு குடித்து விடுகிறாரோ அவருடைய உள்ளத்தில் ஆயிரம் மருந்துகள் நுழைந்து விட்டன. ஆயிரம் ஒளியும், ஆயிரம் உறுதியும், ஆயிரம் பரகத்தும் ஆயிரம் ரஹ்மத்தும் அவருக்கு கொடுக்கப்படும். இன்னும் அவரை விட்டும் ஒவ்வொரு நோயும் மோசடித் தன்மையும் நீங்கிவிடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(
நூல் : ஷ‎ýஅபுல் ஈமான் பாகம் : 2, பக்கம் : 480)

இதனை பதிவு செய்த ஆசிரியர் அவர்கள், இந்த ஹதீஸின் அடிக்குறிப்பில்” இந்த செய்தியை சுலைமான் என்வரிடமிருந்து முஹம்மத் பின் அப்திர்ரஹ்மான் என்பவர் மட்டுமே அறிவிக்கிறார். இவர் நிராகரிக்கப்பட்டவர்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.இதே செய்தியை வேறு அறிவிப்பாளர் வழியாக கதீப் பக்தாதி அவர்கள் தனது ‘தாரீக் பக்தாத்’ என்று நூ­ல் பதிவு செய்துள்ளார்கள். (பாகம் : 2, பக்கம் : 387). அதன் கீழே ‘ இந்த அறிவிப்பாளர் வரிசை பொய்யானதாகும்’ என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

மலக்குகள் கலந்து கொள்வார்கள்

ஒவ்வொன்றுக்கு ஒரு இதயம் உண்டு, திருக்குர்ஆனின் இதயம் யாஸீன் அத்தியாயமாகும். யார் அல்லாஹ்வின் திருப்பொருத்தை நாடி இதை ஓதுவாரோ அவரை மன்னிப்பான், அவர் திருக்குர்ஆனை 12 தடவை ஓதிய கூ­யை கொடுப்பான். எந்த முஸ்­ம் (மரணித்தவரிடம்) இதை ஓதுவாரோ அங்கு மலக்குல் மவ்த் (உயிரை கைப்பற்றும் வானவர்) யாஸீûன் கொண்டு இறங்குவார். யாஸீனின் ஒவ்வொரு வசனத்தையும் 12 மலக்குகள் கொண்டு இறங்குவார்கள். அவர்கள் அவருக்கு முன்னால் அணிவகுத்து நிற்பார்கள், அவருக்காக அருளை வேண்டுவார்கள், பாவமன்னிப்பு கேட்பார்கள், அவரை குளிப்பாட்டும் போது கலந்துகொள்ளவார்கள, ஜனாஸாத் தொழுகையிலும் அடக்கும் செய்வதிலும் கலந்து கொள்வார்கள், யார் மரணநெருக்கத்தில் இருப்பரிடத்தில் யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருடைய உயிரை சுவர்க்கத்தின் காவலாளி சுவர்க்கத்தின் பானத்தைக் கொண்டு வந்து அவரின் விரிப்பில் அவர் இருக்கம் நிலையில் அதை அருந்தும் வரை மலக்குல் மவ்த் கைப்பற்ற மாட்டார். அவர் தாகம் தீர்ந்தவராக இருக்கும் நிலையில் அவரின் உயிரை மலக்குல் மவ்த் உயிரை கைப்பற்றுவார், அவர் தாகம் தீர்ந்தவராகவே கப்ரில் தங்கியிருப்பார், மறுமை நாளில் தாகம் தீர்ந்தவராகவே எழுப்படுவார், இவர் நபிமார்களின் (தாகம் தீர்க்கும்) தடாகத்தின் பக்கம் தேவைப்படமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்னத் ஷிஹாப் பாகம் : 2, பக்கம் : 130)

இதன் அறிவிப்பாளர் தொடரில் முகல்லத் பின் அப்துல் வாஹித் என்பவர் இடம் பெற்றுள்ளார் இவர் பொய்யராவார். (நூல் : ­ஸானுல் மீஸான் பாகம் : 6,
மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றிருக்கும் அ­ பின் ஸைத் அல் ஜ‎ýத்ஆன் என்பவரும் பலவீனமானவரே! (அல்லுபாவு வல் மத்ருகீன் பாகம் : 2 பக்கம் :193)

பாவங்கள் மன்னிக்கப்படும்

யார் இரவில் யாஸின் சூராவை ஓதுகிறாரோ அவர் காலையில் மன்னிக்கபட்டவராக விடுகிறார், யார் துகான் அத்தியாயத்தை இரவில் ஓதுகிறாரோ அவர் காலையில் மன்னிக்கபட்டவராக விடுகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(
நூல் : முஸ்னத் அபீ யஃலா பாகம் : 11, பக்கம் : 93)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் ஹிஸாம் பின் ஸியாத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று அபூஸர்ஆ, புகாரி போன்றோர் விமர்சனம் செய்துள்ளனர். (நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 11, பக்கம் : 36)இதே செய்தியை இமாம் பைஹகீ தனது ‘ஷுஅபுல் ஈமான்’ பாகம் : 2, பக்கம் : 484 ல் பதிவு செய்துவிட்டு இதை ஹிஷாம் என்பவர் தனித்து அறிவிக்கிறார், இவர் பலவீனமானவராவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.மேலும் இதே செய்தி தப்ரானீ அவர்களின் அல்முஃஜமுஸ் ஸகீர் பாகம் : 1, பக்கம் :255 ல் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘அக்லப் பின் தமீம்’ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நிராகரிக்கப்பட்டவர். மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் ஜிஸ்ர் பின் பர்கத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவரே. (நூல் : லுபாவுல் உகை­, பாகம் : 1, பக்கம் : 203)யார் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இரவிலே யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.அறிவிப்பவர் : அபூஹ‎ýரைரா (ர­), நூல் : தாரமி (3283)

இச்செய்தியை அபூஹ‎ýரைரா (ர­) அவர்களிடமிருந்து ஹஸன் அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆனால் இவர் அபூஹ‎ýரைரா (ர­) அவர்களிடமிருந்து எந்த செய்தியையும் செவியுறவில்லை. (நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் :2, பக்கம் : 231) எனவே இந்த செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும்.

அல்லாஹ் ஓதிய அத்தியாயம்

அல்லாஹ் தஆலா இந்த வானம் பூமி படைக்கப்படுவதற்கு ஆயிரம் வருடத்திற்கு முன் யாஸீன் அத்தியாயத்தையும் தாஹா அத்தியாயத்தையும் ஓதினான். மலக்குமார்கள் (இந்தக்) குர்ஆன் வசனங்களை கேட்டவுடன் இந்த அத்தியாயம் எந்த உம்மத்திறகு இறங்குகிறதோ அந்த உம்மத்திற்கு சுபச்செய்தி உண்டாகுவதாக! எந்த உள்ளம் இதை சுமக்கிறதோ அதற்கும் சுபச்செய்தி உண்டாகுவாக! எந்த நாவு இதை ஓதுகிறதோ அதற்கும் சுபச்செய்தி உண்டாகுவதாக! என்று சொன்னார்கள் என நபிகளார் கூறினார்கள். (நூல் : தாரமி (3280)

இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்ராஹீம் பின் முஹாஜிர் என்பவர் இடம் பெறுகிறார் இவர் பலவீனமானவர். (தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 1, பக்கம் : 147)மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் உமர் பின் ஹப்ஸ் என்பவரும் இடம் பெருகிறார். இவரும் பலவீனமானவரே!.
(
அல்லுஆபாவு வல் மத்ருகீன்லி இப்னுல் ஜவ்ஸீ, பாகம் : 2, பக்கம் : 206)தேவைகள் நிறைவேற்றப்படும்

யார் பக­ன் ஆரம்ப நேரத்தில் யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருடைய தேவைகள் நிறைவேற்றப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : தாரமி 3284)

இந்த செய்திû நபிகளார் கூறியதாக அறிவிக்கும் அதா பின் அபீ ரபாஹ் என்பவர் நபித்தோழர் இல்லை. நபிகளாரின் செய்திகளை நபித்தோழர்கள் மட்டுமே கேட்டிருக்க முடியும் எனவே இந்த செய்தி பலவீனமான முர்ஸலான எனும் வகையைச் சார்ந்ததாகும்.

பெற்றோர் பாவங்கள் மன்னிக்கப்படும்

யார் தன்னுடைய தாய், தந்தையர்களின் ஒருவரின் கப்ரையோ அல்லது இருவரின் கப்ரையோ வெள்ளிக்கிழமை தோறும் சந்தித்து அங்கு யாஸீன் அத்தியாயத்தை ஓதினால் ஒவ்வொரு ஆயத் அல்லது எழுத்து அளவுக்கு பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் அபூபக்கர் (ர­)
(
நூல்:தபகாத்துல் முஹத்தீஸீன் பி உஸ்பஹான் பாகம்:3,பக்கம் : 331)

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அம்ரு பின் ஸியாத் அல் பக்கா­ என்பவர் பொய்யராவார். (நூல் : அல்காமில் பீ லுபாஇர்ரிஜால்லிஇப்னு அதீ, பாகம் :5, பக்கம் : 151, மீஸானுல் இஃதிதால் பாகம் :5, பக்கம் : 316)

கப்ர் வேதனை குறைக்கப்படும்

யார் கப்ருகளின் பக்கம் சென்று (அங்கு) யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்கு அன்றைய நாள் வேதனை (கப்ராளிகளுக்கு) இலேசாக்கப்படும். அதில் உள்ள (ஒவ்வொரு எழுத்துக்கும்) அவரு(ஓதுபவரு)க்கு நன்மைகள் இருக்கினறன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் அனஸ் பின் மா­க் (ர­)
(
தப்ஸீர் ஸஃலபி, பாகம் : 3, பக்கம் : 161)

இச்செய்தியில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் அய்யூப் பின் மித்ரக் என்பவர் பொய்யராவார். (மீஸானுல் இஃதிதால், பாகம் : 1, பக்கம் : 463)மேலும் இச்செய்தியில் இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் அபூஉபைதா என்பவரும் ஆறாவது அறிவிப்பாளர் முஹம்மத் பின் அஹ்மத் அர்ரியாஹீ என்பவரின் நம்பத்தன்மையைப் பற்றி (நாம் பார்த்த வரை) எந்த நூ­ல் குறிப்பிடப்படவில்லை. எனவே இது இன்னும் பலவீனம் அடைகிறது.

ஷஹீதாக மரணிப்பார்

யார் தொடர்ந்து ஒவ்வொரு இரவிலும் யாஸின் அத்தியாயத்தை ஓதி வந்து மரணித்துவிட்டால் அவர் ஷஹீதாக மரணித்தவராக கணிக்கப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(
நூல் அல்முஃஜமுஸ் ஸகீர்லிதப்ரானீ, பாகம் : 2, பக்கம் : 191)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் ஸயீத் பின் மூஸா அல் அல் அஸ்தி என்பவர் இடம் பெற்றுள்ளார் இவர் பொய்யராவார். (நூல் ­ஸானுல் மீஸான் பாகம் : 3, பக்கம் : 44)யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு தொடர்பாக நபிகளார் சொன்னதாக பல செய்திகளைப் பார்த்தோம். இதைப்போன்று நபிகளார் அல்லாத பலரும் இது தொடர்பாக பல செய்திகளை குறிப்பிட்டுள்ளார். அவற்றையும் பார்ப்போம்.

பிரசவ வேதனை குறையும்

யார் யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்கு பாவங்கள் மன்னிக்கப்படும், யார் பசியுள்ள நிலையில் அதை ஓதுவாரோ அவர் வயிர் நிரம்புவார், யார் வழிதவறிய நிலையில் ஓதுவாரோ அவர் வழியை அடைந்து கொள்வார், யார் பொருளை தவற விடுவாரோ அதை அவர் பெற்றுக்கொள்வார், உணவு குறைந்துவிடும் என பயந்து உணவிருக்குமிடத்தில் அதை ஓதுவாரோ அவர் அதை போதுமானதாக பெற்றுக்கொள்வார். இறந்தவரிடத்தில் ஓதினால் வேதனை இலேசாகும். பிரசவ வேதனையில் இருக்கும் பெண்ணிடம் ஓதினால் அவருடைய பிரசவம் லேசாகும். மேலும் யார் யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவர் குர்ஆனை பதினொரு தடவை ஓதியவர் போன்றவராவார். ஒவ்வொன்றுக்கும் இதயம் இருக்கிறது குர்ஆனுடைய இதயம் யாஸீன் ஆகும் என்று அபூகிலாபா என்பார் கூறுகிறார்.
(
நூல் ஷ‎ýஅபுல் ஈமான், பாகம் : 5., பக்கம் : 478)

இந்த ஹதீஸை அபூகிலாபா என்பவர் அறிவித்துள்ளார். இவர் தாபியீ ஆவார். (நபித்தோழர்கள் வாழந்த காலத்தில் இருந்தவர்) ஒரு அத்தியாயத்திற்கு குறிப்பிட்ட சிறப்புகள் உள்ளது என்று கூறவேண்டுமானால் அல்லாஹ்வோ அல்லது அவனது தூதரோ மட்டுமே கூறமுடியும் எனவே அபூகிலாபா அவர்களின் கருத்தை ஆதாரமாக எடுத்துக் கொள்ளமுடியாது.மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் கலீல் பின் முர்ரா என்பவர் இடம் பெறுகிறார். இவரை பு‎காரி உட்பட பலர் விமர்சனம் செய்துள்ளனர்.(நூல் : தஹ்தீப் தஹ்தீப், பாகம் : 3, பக்கம் : 146)

முழுக் குர்ஆன் ஓதிய நன்மை

யார் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இரவிலே யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். மேலும் அது முழு குர்ஆனை ஓதியதற்கு சமமாகும் என்று ஹஸன் பஸரி அவர்கள் கூறுகிறார்கள்.
(
நூல் : தாரமி 3281)

இது ஹஸன் அவர்களின் சொந்த கூற்றாகும். நபிகளார் சொல்லாததால் இந்த கருத்தை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளமுடியாது.மேலும் இச்செய்தியில் அபூல் வலீத் மூஸா பின் கா­த் என்பவர் இடம் பெறுகிறார். இவர் யாரென்று அறியப்படாதவர். (நூல் : தஹ்தீபுத்தஹ்தீப், பாகம் : 10, பக்கம் : 304)

இறந்தவருக்கு ஓதுங்கள்

இறக்கும் நிலையில் உள்ளவரிடம் யாஸீன் அத்தியாயத்தை யார் ஓதுவாரோ அவருடைய வேதனைகள் குறைக்கப்படும் என்று அபூதர்தா (ர­) அவர்கள் கூறினார்கள்.
(
நூல் முஸ்னத் அல் பிர்தவ்ஸ் பாகம் 4 பக்கம் 32)

இதன் அறிவிப்பாளர் தொடரில் மர்வான் பின் ஸா­ம் என்பவர் இடம் பெருகிறார். இவரை புகாரி போன்றோர் ‘நிராகரிக்கப்பட்டவர்’ என்று கூறுகிறார்கள். தாரகுத்னீ அவர்கள் ‘கைவிடப்படப்பட்டவர்’ என்றும் கூறுகிறார்கள்.
(
அல்லுபாவு வல்மத்ருகீன், பாகம் : 3, பக்கம் : 113)மேலும் இது நபித்தோழரின் சொந்த கூற்றே தவிர நபிகளாரின் கூற்று அல்ல என்பதையும் கவனத்தில் கொள்க!சுவர்க்கவாதிகள் ஓதும் அத்தியாயம்
யாஸீன் அத்தியாயம், தாஹா அத்தியாயம் ஆகிய இரண்டு அத்தியாயத்தைத் தவிர மற்ற குர்ஆன் அத்தியாயங்கள் சுவர்க்க வாசிகளை விட்டும் உயர்த்தப்படும் என்று ஷஹ்ர் பின் ஹவ்ஷப் என்பார் அறிவிக்கிறார். (நூல் : பழாயிலுல் குர்ஆன்(காஸிம் பின் ஸலாம்.)பாகம் 1 பக்கம் 447)இது ஷஹ்ர் பின் ஹவ்ஷப் என்பவரின் சொந்த கூற்றாகும். இவர் நபித்தோழர் கூட கிடையாது. இவர் நபித்தோழர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தவர். இவரின் கூற்று மார்க்க ஆதாரமாக ஆகாது.



மகிழ்ச்சிக்கு ஓர் அத்தியாயம்

யார் யாஸீன் அத்தியாயத்தை காலையில் ஓதுவாரோ அவர் மாலை வரை சந்தோஷமாக இருப்பார், யார் மாலையில் ஓதுவாரோ அவர் காலை வரை சந்தோஷமாக இருப்பார் என்று யஹ்யா பின் கஸீர் என்பார் அறிவிக்கிறார்.
(
நூல் : பழாயிலுல் குர்ஆன்லி முஹம்மத் பின் லரீஸ், பாகம் : 1, பக்கம் : 230)இது யஹ்யா பின் அபீ கஸீர் என்பவரின் சொந்த கூற்றாகும். இவர் நபித்தோழர் கூட கிடையாது. இவர் நபித்தோழர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தவர். இவரின் கூற்று மார்க்க ஆதாரமாக ஆகாது.



மேற்கூறிய செய்திகளை வைத்துதான் யாஸீன் அத்தியாயத்தை பல சந்தர்ப்பங்களில் ஓதிவருகிறார்கள். ஆனால் யாஸீன் அத்தியாயத்திற்கு தனியான சிறப்புகள் உள்ளதாக ஆதாரப்பூர்மான எந்த செய்தியும் இல்லை. பொதுவாக திருக்குர்ஆன் வசனங்களை ஓதினால் ஒரு எழுத்திற்கு பத்து நன்மைகள் உண்டு, அந்த சிறப்பு யாஸீன் அத்தியாயத்திற்கும் உண்டு. இது தவிர வேறு தனியான எந்த சிறப்புகளையும் ஆதாரப்பூவமான ஹதீஸ்களில் காணமுடியவில்லை. எனவே ஆதாரமற்ற செய்திகளை அடிப்படையாக கொண்டு எந்த அமலையும் செய்யக்கூடாது.


உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை. (அல் குர்ஆன் 17 36)

ஆகையால் நாம், ஆதாரப்பூர்வமான செய்திகளை வைத்து நம்முடைய அமல்களை அமைத்து கொள்வோமாக.
பாவங்கள் என்றால் என்ன? என்பதைப் புரியாமலே நம்மில் பலர் அதைச்செய்து குற்றவாளியாகின்றனர். எனவே பாவம் என்றால் என்ன என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

பெருமானார் (ஸல்) அவர்களிடம் நன்மையைப்பற்றியும் தீமையைப்பற்றியும் வினவினேன். அதற்கவர்கள் “நல்லொழுக்கமே நன்மையெனப்படும்.பாவம் என்பது அதைச்செய்யும் போது உன் உள்மனம் உன்னை எச்செரிப்பதும், அதைப்பிறரிடம் வெளியிடும் போது நீ வெறுப்பதுமாகும்.” என விளக்கமளித்தார்கள். (அறிவிப்பவர்: நவ்வாஸிற பின் ஸம்ஆன், நூல் முஸ்லிம்)

இதுமட்டுமல்லாமல் இஸ்லாம் தடுத்துள்ள அறிவுக்குப் பொருந்தாத, அறிவை மழுங்கச்செய்யும் மூடநம்பிக்கைகள்,சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றையும் பாவம் என்றே இஸ்லாம் கூறுகிறது.

மதத்தின் பெயரால் எல்லா மதங்களிலும் மலிந்துள்ளதைப் போல் இஸ்லாத்திலும் மூடநம்பிக்கைகளைக காணமுடிகிறதே என்ற ஐயம் நம்மில் பலருக்கு எழலாம்.அவை யாவும் அந்நிய மதங்களிலிருந்து நம்மதத்தில் இறககுமதியானவையாகும். எனவே இஸ்லாத்தில் ஊடுருவியுள்ள சிறு பாவங்களையும் நம்மை அழிக்கும் பெரும் பாவங்களையும் விட்டு தவிர்ந்து கொள்வது நம்மனைவர் மீதும் தலையாய கடமையாகும். இப்போது தண்டனைக்குரிய பெரும் பாவங்களைப் பற்றித் தெரிந்து கொளவோம்.

பெரும் பாவம் என்றால் என்ன?

பெரும் பாவம் என்பது அல்லாஹ்வினாலும், அவன் திருத்தூதர் (ஸல்) அவர்களாலும் விலக்கப்பட்வைகளைக் குறிக்கும்.இவற்றைச் செய்வதால் இறைவனின் கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளாக நேரழடும்.

பெரும் பாவங்களைத்தவிர்த்து ஏனைய சிறு பாவங்களை மன்னிப்பதாக பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்:-

إِن تَجْتَنِبُواْ كَبَآئِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُم مُّدْخَلاً كَرِيماً


உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டால் உங்களுடைய சிறு பாவங்களுக்கு(அதனை)நாம் பரிகாரமாக்கி உங்களை (மன்னித்து மிக்க) கண்ணியத்தின் வாயிலிலும் புகுத்துவோம். (அல்குர்ஆன் 4:31)

என்ற மறைவசனத்தின் வாயிலாக பெரும் பாவங்களைத் தவிர்த்து தங்களை பாதுகாத்துக் கொண்டவர்களை சுவர்கத்தில் புகுத்துவதாக அறிவிக்கிறான வல்ல நாயன். மேலும்,

وَالَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ وَإِذَا مَا غَضِبُوا هُمْ يَغْفِرُونَ


(அல்லாஹ்வை நம்பிய) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடானவைகளையும் விட்டு விலகி இருப்பதுடன் தங்களுக்கு கோபமூட்டப்பட்ட சந்தர்பத்திலும் (கோபமூட்டியவரை) மன்னித்து விடுவார்கள் அல்குர்ஆன் 42:37), எனவும்

الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ


(நன்மை செய்யும்) அவர்கள் (அறியாமல் நேர்ந்துவிடும்) சிறு தவறுகளைத்தவிர ஏனைய பெரும்பாவங்களிலிருந்து விலகி இருப்பார்கள். நிச்சயமாக உமது இரட்சகன் மன்னிப்பதில் மிக்க தாராளமானவன். (அல்குர்ஆன் 53:32) எனவும் கூறியுள்ளான்.

“ஐந்து நேரத் தொழுகைகளும். ஒவ்வொரு ஜும்ஆவும். ஒவ்வொரு ரமளானும். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு இடைப்பட்ட காலங்களில் செய்யக்கூடிய சிறுதவறுகளுக்கு பரிகாரமாகும். (ஆனால்)இடைப்பட்ட காலங்களில் பெரும்பாவங்களில் ஈடுபடாத வரை! என நபி (ஸல்) கூறினார்கள். ( ஆதாரம்: முஸ்லிம்.திர்மிதி. அஹ்மத்)

இதன் மூலம் பெரும் பாவங்களை செய்யாதவனுக்கு ம்ட்டுமே இச்சலுகை வழங்கப்படும் என்பதை பெருமானார்(ஸல்)அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

மனிதனிடம் காணப்படும் பாவச்செயல்களில் ஏழு பாவங்களை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவற்றில் ஒன்றைச் செய்தாலும் அது அவனை அழித்துவிடும்.

“ஏழு பெரும் பாவங்கள்”

عَنْ أَبِى هُرَيْرَةَ – رضى الله عنه – عَنِ النَّبِىِّ – صلى الله عليه وسلم – قَالَ « اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ » . قَالُوا يَا رَسُولَ اللَّهِ ، وَمَا هُنَّ قَالَ « الشِّرْكُ بِاللَّهِ ، وَالسِّحْرُ ، وَقَتْلُ النَّفْسِ الَّتِى حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ ، وَأَكْلُ الرِّبَا ، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ ، وَالتَّوَلِّى يَوْمَ الزَّحْفِ ، وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلاَتِ »


ஒருமுறை நபிபெருமானார் (ஸல்) அவர்கள் தம் நல்லறத் தோழர்களிடம் “அழிவைத்த்தரும் ஏழு பாவங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு” எச்சரித்தார்கள்’அவை யாவை? என நபித்தோழர்கள் கேட்டபோது பின்வருமாறு விளக்கமளித்தார்கள் அண்ணலவர்கள்.

1. அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்
2. சூனியம் செய்தல்
3. இறைவன் தடுத்த ஓர்உயிரை அநியாயமாக கொலை செய்தல்
4. அநாதைகளின் சொத்துக்களை விழுங்குவது
5. வட்டிப்பொருளை உண்ணுதல்
6. போரில் பறமுதகிட்டு ஓடுவது
7. விசுவாசியான கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது.
அறிவிப்பவர். அபூ ஹுரைரா (ரலி) நூல்கள் புகாரி. முஸ்லிம்.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அவை ஏழிலிருந்து எழுபது வரை ஆகும் எனக்கூறுகிறார்கள். உண்மையில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுவது சரிதான் என இமாம் தஹபீ (ரஹ்) அவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.மேலே கூறப்பட்ட நபி மொழியில் பெரும் பாவங்கள் யாவும் கூறப்படவில்லை. அழிவிற்கு கொண்டு செல்லக்கூடிய பாவங்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளது.

கொலை. களவு. விபச்சாரம் போன்ற தண்டனைக்குரிய குற்றங்களும், விலக்கபட்டவைகளை உண்ணுதல், பருகுதல் போன்ற வேதனைக் குரிய குற்றங்களும், பொய். கோள் சொல்லுதல் போன்ற சாபத்திற் குரிய குற்றங்களும் பெரும் பாவங்களச் சார்ந்தவையாகும். இவற்றுள் சில சிலவற்றைவிட கொடியதாகும்.அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் பெரும் பாவங்களில் தலையாயது என நபி (ஸல்) கூறியிருப்பதிலிருந்தும்,” அதற்கு மன்னிப்பே கிடையாது, இணை வத்தவன் நிரந்தரமாக நரகிலேயே இருப்பான்” என்பதிலிருந்தும் இது பெரும் பாவம் மட்டுமல்ல, அதைவிடக்கொடியது என்பதும் புரியமுடிகிறது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றை ஆய்வு செய்த இமாம் தஹபீ(ரஹ்) அவர்கள் குர்ஆன் சுன்னா ஒளியில் எழுபது பாவங்களைப் பின்வருமாறுதொகுத்து வழங்கியுள்ளனர்.

“பெரும்பாவங்கள் எழுபது”

1. அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்.
2. சூனியம் செய்தல்.
3. இறைவன் தடுத்த ஓர் உயிரை அநியாயமாக கொலை செய்தல்
4. அநாதைகளின் சொத்துகளை விழுங்குதல்
5. வட்டிப்பொருளை உண்ணுதல்
6. போரில் புறமதுகிட்டு ஒடுதல்
7. வசுவாசியான கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுதல்
8. பெற்றோரைத் துன்புறுத்தல்
9. பொய் சத்தியம் செய்தல்
10.பொய்சாட்சிசொல்லுதல்
11. சதிசெய்தல்
12. அல்லாஹ்வின்மீதும்,அவனது ரஸூலின் மீதும் பொய்யுரைத்தல்
13. ஆகாததை ஆகுமாக்குதல்
14. காட்டிக்கொடுத்தல்
15. மோசடி செய்தல்
16. பொய்யுரைத்தல்
17. கோள் சொல்லுதல்
18. வாக்கு மாறுதல்
19. அநீதம் செய்தல்
20. முகஸ்துதி செய்தல்
21. வழிப்பறி செய்தல்
22. தொழுகையை விடுதல்.
23. ஸகாத்தை மறுத்தல்
24. நோன்பைவிடுதல்
25. ஹஜ்ஜு செய்யாதிருத்தல்
26. கற்ற கல்வியை மறைத்தல்
27. விதியை பொய்யாக்குதல்
29. திட்டுதல் (சபித்தல்)
30. பிறரைத் துருவி ஆராய்தல்
31. நன்மையை சொல்லிக்காட்டுதல்
32. சோதிடனை உண்மைப்படுத்தல்
33. அதிகாரிக்கு இலஞ்சம் வழங்குதல்
34. தற்பெருமை
35. தற்கொலை
36 திருடுதல்
37. மது அருந்துதல்
38. சூதாட்டம்
39. விபச்சாரம்
40. ஆண் புணர்ச்சி
41. தகாத உறவு
42. அதிகாரத்தில் இருப்பவபவன் அநீதி செய்தல்
43. நேர்மை தவறிய நீதிபதி.
44. ஆண் பெண்ணாகவும்,பெண் ஆணாகவும் வேடமிடுதல்
44. சிறுநீர் கழித்தபின் சுத்தம் செய்யாமை
45. கணவனுக்குத் துரோகம் செய்தல்
46. உருவப்படம் வரைதல்
47. ஒப்பாரி வைத்து அழுதல்
48. கொடுமை செய்தல்
49. வரம்பு மீறுதல்
50. அண்டை வீட்டாரை நோவினை செய்தல்
51. முஸ்லிம்களைத் துன்புறுத்தல்
52. மதபோதகர்களை இம்சித்தல்
53. கர்வம் கொள்ளுதல்
56. ஆண்கள் பட்டாடையும் தங்கமும் அணிதல்
57. அடிமை தப்பித்து ஓடுதல்
58. அல்லாஹ்வுக்கன்றி அறுத்தல்
59. அந்நியரை தந்தையாக ஏற்றல்
60. மேலதிக தண்ணீரைத் தடுத்தல்
61. அளவை நிறுவையில் மோசடிசெய்தல்
62. நியாயமின்றி வாதம் புரிதலும் பிறரை மயக்கப் பேசுதலும்
63. இறைச் சோதனைகளில் அவநம்பிக்கை கொள்ளல்
64. நல்லடியார்களை துன்புறுத்தல்
65. தனித்துத் தொழுதல்
66. ஜும்ஆத் தொழுகையைத் தவறவிடல்
67. மரண சாசனம் மூலம் அநீதமிழைத்தல்
68. பிறரை வஞ்சித்தல்
69. உளவு பார்த்தல்
70. நபித் தோழர்களை தூற்றுதல்
இறைதூதர்களின் கவ்முகள் (சமுதாயத்தினர்)

குர்ஆனில் ஒவ்வொரு இறைதூதர்களை எதிர்த்த பல சமுகத்தினரைப்பற்றிக் கூறப்படுகின்றன? அவர்கள் யாவர் ?
1. கவ்மு நூஹ் (நூஹ் நபியின் சமூகத்தார்)
2. கவ்மு ஆது (ஹீது நபியின் ஆது மக்கள்)
3. கவ்மு தமூது (ஸாலிஹ் நபியின் தமூது மக்கள்)
4. கவ்மு இப்றாஹீம் (இப்றாஹீம் நபியின் சமூகத்தார்)
5. அஸ்ஹாபு மத்யன் (ஷீஐப் நபியின் மத்யன்வாசிகள்)
6. அஸ்ஹாபுல்முஃதபிகாத் (லூத் நபியின் மக்கள்) ஆதாரம்: அல்குர்ஆன் 9:70

(தலைகீழாக புரட்டப்பட்ட ஐந்து நகரங்கள். அவை: ஸதூம்,ஸாமூரா,ஸாபூரா, தூமா, ஆமூரா)

7. அஸ்ஹாபுர்ரஸ் (கிணற்று வாசிகள்) 25:38, 50:12,
8. அஸ்ஹாபுல் கர்யத் (கிராம வாசிகள்) 36:13
9.அஸ்ஹாபுல் அய்கத் (தோட்டவாசிகள்) 50:14, 15:78, 26:176, 38:13
10.கவ்மு துப்பவு (துப்பவு மன்னரின் மக்கள்) 50:14
11. கவ்மு ஃபிர்அவன் (பிர்அவனின் மக்கள்) 38:12
13. அஸ்ஹாபுல் உக்தூத் (குண்டத்தையுடையோர்) 85:4

குர்ஆனில் வரும் தீயவர்கள், சிலைகள்

குர்ஆனில் வரும் தீயவர்கள், சிலைகள்
குர்ஆனில் தீயோரைப்பற்றி கூறப்பட்ட இடங்களை அத்தியாயம், வசன எண்களுடன் கீழே குறிப்பிட்டுள்ளோம். அவை உங்களின் தகவல்களுக்குப் பயன்படும். அவர்களின் வரலாறுகளை இன்ஷாஅல்லாஹ் சுருக்கமாக தொடர்ந்து வெளியிடுவோம்.
01. ஆது சமுதாயம் : 24 இடங்கள்
02. தமூது சமுதாயம் : 26 இடங்கள்
03. நெருப்புக் குண்டத்திற்குரியோர் : 5:4,5,6,7,8.
04. யானைப்படை : 105:1
05. அபூலஹப் : 111:1-3
06. இரம் வாசிகள் : 89:7
07. காரூன்:(நான்கு இடங்கள்) 28:76,28:79,28:81,29:40
08. பிர்அவ்ன்:(ஐந்து இடங்கள்) 2:49, 7:127, 7:141, 14:6, 28:4
09. ஹாமான்:(ஆறு இடங்கள்) 28:6, 28:8, 28:38, 29:39, 40:24, 40:36
10. ஸாமிரி (இரண்டு இடங்கள்) 7:148, 20:87
10. ஆஸர்:(எட்டு இடங்கள்) 6:74, 9:114, 19:42, 21:52, 26:70, 37:85, 43:26, 60:4
11. ஜாலூத்: (இரண்டு இடங்கள்) 2:249 ,2:251.
12. ஆதமின் புதல்வர் : 5:27
13. யஃஜூஜ் மஃஜூஜ் (இரண்டு இடங்கள்) 18:94, 21:96.
14. கிராம வாசிகள் (அஹ்லுல் கர்யா) 36:13 முதல் 29 வரை
15. மஜூஸிகள் : 22:17
16. முனாhபிகீன்கள்(நயவஞ்சகர்கள்) 63 இடங்கள்.
(2:8, 2:11, 2:14, 3:119, 4:143, 5:61, 8:49, 9:56, 9:57, 9:96, 47:16, 63:1 இவ்வாறு 63 இடங்கள்)
மற்றவர்கள்
01. இஸ்ரவேலர்கள்
02. யூதர்கள்
03. கிறித்தவர்கள்
04. குரைஷ் : 106:1
சிலைகள்
01. மனாத் : 53:20.
02. லாத்: 53:19.
03. உஸ்ஸா: 53:19
04. வத்து: 71:23
05. ஸுவாவு: 71:23
06. யகூஸ்: 71:23
07. நஸ்ர்: 71:23
08. பஃலு: 37:125
புனித மிஃராஜ்


பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வாழ்விலும், இஸ்லாத்தின் வளர்ச்சியிலும் மிஃராஜ் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. அடியானுக்கும், அல்லாஹ்வுக்குமிடையிலான நெருக்கத்தின் எல்லையையும் அன்நெருக்கத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் மிஃராஜ் விளக்குகிறது.


ஆன்மீகப் பயணத்தின் யதார்த்தமான விளக்கமாகவும், ஆன்மாவின் ஆற்றலின் வெளிப்பாடாகவும் மிஃராஜ் நிகழ்வு அமைகிறது.



பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் நபிமார்களின் நாயகர் என்பதையும், மலக்குகள் அர்ஷ், குர்ஷ் அனைத்தையும் விட மேலானவர்கள் என்பதையும் மிஃராஜ் நிரூபித்துக்காட்டுகின்றது.

வேந்தர் நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பிரபஞ்சத்தில் எதிலும் தேவையற்றவர்கள் என்பதையும், வல்லநாயனான அல்லாஹ்விடத்தில் மாத்திரமே தேவையுள்ளவர்கள் என்பதையும் மிஃராஜ் சுட்டிக் காட்டுகின்றது. ஆன்மீகப் படித்தரங்களில் அடிமைத்துவமே மேலானது என்பதையும், அதன் மூலமே எஜமானான இரட்சகனை அடையலாம் என்பதையும் மிஃராஜ் விளக்கிக் காட்டுகின்றது. இவ்வாறு பல்வேறு தத்துவங்களை உள்ளடக்கியுள்ள மிஃராஜினை பின்வருமாறு ஆராயலாம்.



1. மிஃராஜ் பயணம் ஏன் விண்ணகத்தில் ஏற்பாடாகியது?

2. மிஃராஜில் பொதிந்துள்ள தத்துவம் என்ன?

3. மிஃராஜ் கூறும் படிப்பினை என்ன?





மிஃராஜ் பயணம் ஏன் விண்ணகத்தில் ஏற்பாடாகியது?



நபிமார்களிடத்தில் சிதறிக் காணப்பட்ட அனைத்து அற்புதங்களும் அஹ்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) யிடத்தில் முழுமையாகக் காணப்பட்டன. நபிமார்களுக்கெல்லாம் நாயகமானவர் நபியுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டும் முக்கிய அம்சமாகவே மிஃராஜ் நிகழ்வு அமைகிறது. இதனை பின்வருமாறு நோக்கலாம்.



1. நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) தூர்சீனா மலையில் அல்லாஹ்வுடன் பேசினார்கள். நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நான்காம் வானம் உயர்த்தப்பட்டார்கள். எனவே பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நான்காம் வானம் தாண்டிச் சென்று அல்லாஹ்வை தரிசிக்க வேண்டியதால் விண்ணகம் சென்றார்கள்.



2. அர்ஷிலிருந்து பர்ஷ் வரையிலான அனைத்தும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஒளியிலிருந்து அவர்களுக்காகவே படைக்கப்பட்டன. படைப்பினங்களின் முதலானவரான பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் படைப்பினங்களின் அவசியத் தேவைகள் எதிலும் படைப்பினங்கள் பால் தேவையற்றவர்கள் என்பதையும் படைத்தவனிடம் மட்டுமே அவர்கள் தேவையுள்ளது என்பதையும் எடுத்துக் காட்டவேண்டி ஏற்பட்டதால் அர்ஷுக்கும் மேலால் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் விண்ணகம் சென்றார்கள்.



3. நபிமார்கள் அனைவரும் வானவர் தூதர் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மூலமே அல்லாஹ்வைப் பற்றியும், சொர்க்கம், நரகம் பற்றியும் அறிந்து மக்களுக்கு விளக்கம் கூறினார்கள். ஆனால் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஏனைய நபிமார்களைப் போன்று இரண்டாம் தரப்பு செய்திகளைக் கூறாமல் நேரடியாகவே அல்லாஹ்வையும், சொர்க்கம், நரகம் முதலியவற்றையும் நேரில் கண்டு கூறும் ‘ஷாஹிதாக’ இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்பினான். அதனால் விண்ணகம் நோக்கிய பயணத்திற்கு ஏற்பாடு செய்தான்.



“எனக்கு நான்கு அமைச்சர்கள் உள்ளனர் இருவர் மண்ணுக்கும் மற்றுமிருவர் விண்ணுக்கும்” என பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் நவின்றுள்ளார்கள்.



மண்ணுக்கான அமைச்சர்கள்.

 அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு)

 உமர் (ரழியல்லாஹு அன்ஹு)



விண்ணுக்கான அமைச்சர்கள்.

 ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்)

 மீக்காயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுமாவர். (மிஷ்காத்)



மன்னரின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் நிர்வாகத்தை கண்காணிப்பது அமைச்சர்களின் கடமை. மன்னகத்தின் நிர்வாகத்தை நேரில் அவதானித்துக் கொண்டிருக்கும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை வின்னகத்தின் நிர்வாகத்தையும் ஒருமுறை நேரில் வந்து பார்த்துவிட்டுச் செல்லுமாறு விண்ணகத்திற்குப் பொறுப்பான இரு அமைச்சர்களையும் நேரில் அனுப்பி அழைப்பு விடுத்தான் அகிலத்தை ஆளும் வல்ல நாயன் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று விண்ணகம் சென்றார்கள் வேந்தர் நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்).



“ஒவ்வொன்றும் அதன் அஸலை நாடிச் செல்லும்” என்பது நபிமொழி.

இந்த வகையில் கஃபதுல்லாஹ் அமைந்துள்ள புனித இடமே பூமியின் அடிப்படை நிலமாகும். அதனால் பூமியின் எப்பகுதியிலும் சரி வாழும் மனிதர்கள் தாய் நிலமாகிய மக்கமா நகர சென்று ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுகின்றனர். அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் தாய்ப்பள்ளி மக்கமா நகரில் இருக்கும் கஃபாவுகும். அதனால் தாய்ப் பள்ளியாகிய கஃபாவை கிப்லாவாக ஆக்கி உலக முஸ்லிம்கள் தொழுகின்றனர். ‌



ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டதால், பெண்ணுக்கு ஆண் அடிப்படையாக இருக்கின்ற காரணத்தினால் ஆணுக்கு வழிப்பட்டவளாக ஆணின் துணையை நாடிச் செல்கிறாள். படைப்பினங்கள் அனைத்துக்கும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஒளியே அடிப்படையாக இருப்பதால் அனைத்துப் படைப்பினங்களும் அஹ்மது நபியை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) விசுவாசிக்கின்றன. அன்னாரின் வேதமே இறுதி வேதமாகவும், முழுமையான வேதமாகவும் அங்கீகரிக்கப்பட்ட வேதமாகவும் அமைந்திருக்கிறது. அனைத்து நபிமார்களும் அஹமது நபியைப் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பற்றி அன்னவர்களின் உம்மத்தினருக்கு உபதேசித்து வந்தனர். அன்னாரிடமே மறுமையில் அபயம் தேடி நபிமார்கள் உட்பட அனைத்து மக்களும் செல்வர்.



அஹமது நபியின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஒளிக்கு அல்லாஹ்வின் ஒளியே அடிப்படையாக இருப்பதனால் அதனை இடம், காலம் என்ற படைப்பின் எல்லைகளை தாண்டிச் சென்று சந்திக்க வேண்டி ஏற்பட்டது. அதனால் விண்ணகம் சென்றார்கள்.





மிஃராஜின் படிப்பினை

1. மிஃராஜ் பயணத்தின் ஆரம்பத்தில் பெருமானாரின் உடல் பிளக்கப்பட்டு இதயம் வேறாக்கப்பட்டு இதயத்தில் சில பகுதிகள் நீக்கப்பட்ட பின் புதிதாக சில பகுதிகள் இதயத்துள் வைத்து பொருத்தப்பட்ட நிகழ்ச்சி புகாரி, முஸ்லிம் போன்ற நூற்களில் காணப்படுகின்றது.



2. மிஃராஜ் பயணம் மக்காவிலிருந்து சித்ரத்துல் முன்தஹா வரையிலும் ‘புராக்’ என்ற வாகனத்திலே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. “புராக்” என்பது “பர்க்” – மின்னல் என்ற பொருளைக் கொடுக்கும் சொல். இதனை மின்சாரத்தில் இயங்கும் ஒளிவேகங்கொண்ட வாகனம் என்றும் எடுத்துக்கொள்ள முடியும்.



3. காற்று மண்டலம், நெருப்பு மண்டலம் ஆகிய அனைத்து மண்டலங்களையும் தாண்டியதாக இப்பயணம் அமைந்திருக்கின்றது.



4. காலம், இடம், திசை இல்லாத அந்தர வெட்ட வெளியில் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் இறுதிப் பயணம் அமைந்திருக்கின்றது.





சிந்திக்க வேண்டியவை

1. பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் உடலின் யதார்த்தம் மண்ணின் கூறிய கத்தியால் உடல் கிழிக்கப்பட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சுட்டுவிரலினாலே உடல் கிழிக்கப்பட்டது. அப்போது குருதி கொப்பளித்திருக்க வேண்டும். இதுவும் நடக்கவில்லை. ஒரு சொட்டு குருதியும் வெளியேறவில்லை. இதயம் வேறாக்கப்பட்ட போதும் அதன் அடிப்பகுதிகள் நீக்கப்பட்ட போதும் அவர்கள் உணர்விழந்திருக்க வேண்டும். மாறாக முழு உணர்வுடன் நடந்தவற்றை பார்த்துக் கொண்டுமிருக்கின்றார்கள். இச்செய்கை மூலம் பின்வரும் படிப்பினைகளை பெருகின்றோம்.



பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடத்தில் கீழ்வரும் மூன்று நிலைகளும் காணப்பட்டிருக்கின்றன.

1. யுத்தத்தில் காயப்பட்ட போது உடலிலிருந்து குருதி வந்தபோதும், அகழி தோன்றும் போது பசியின் கடுமையால் மணிவயிற்றில் கல்லைக் கட்டிய போதும் உடலியல் (பஷரிய்யத்) மிகைத்தவர்களாக இருந்தார்கள். அதனால் மனிதத்துவ நிலை அவர்களில் மேலோங்கிக் காணப்பட்டது.



2. மிஃராஜ் பயணத்தின் முன் உடல் கிழிக்கப்பட்ட போதும், தொடர் நோன்பு நோற்றபோதும், தூக்கமின்றி விடியவிடிய வணங்கிய போதும், வின்னகப் பயணத்தில் காற்று, நெருப்பு மண்டலங்களை கடக்கும் போதும் மலக்கானியத் மிகைத்துக் காணப்பட்டார்கள்.



3. ‘இதற்கப்பால் ஒரு நூல் அளவு தாண்டினால் எரிந்து சாம்பலாகிவிடுவேன்’ என்று கூறி ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பின்வாங்கிய போது அச்சமோ, ஆயாசமோயின்றி அடக்கமாகவே முறுவலித்தவர்களாக பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மேற்கொண்ட பயணத்தின் யதார்த்தத்தை ஹக்கானியத் என்று சொல்லப்படும். அல்லாஹ்வும், அவனது ஹபீபும் தான் அறிவர். ஆனால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயம். இம்மூன்று பயணங்களிலும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் “அப்தாக” அடியாராகவே இருந்துள்ளார்கள். படைப்பினங்களின் சகல தரப்பையும் சுட்டும் பொதுவான சொல் ‘அப்து’ என்பதை தவிர வேறொன்றில்லை. ஆதலால் ‘தனது அப்தை இராவழி நடத்திய நாயன் தூயவன்’ என்று அல்லாஹ் கூறுகின்றான்.

“இராவழி நடாத்திய நாயன் தூயவன்” என்ற கூற்று இப்பயணம் அல்லாஹ்வின் விருப்பத்தின் அடிப்படையில் அவனது தனிப்பெரும் ஆற்றலால் நிகழ்ந்தது என்பதை சுட்டிக் காட்டுகிறது.



மிஃராஜ் பயணம் அல்லாஹ்வினுடனான சந்திப்பின் ஒழுக்கத்தை எடுத்துக் காட்டும் அம்சமாகவே அமைந்திருப்பதை இவ்வாறு அறியலாம்.

1. பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் இதயம் பரிசுத்தமாக்கப்பட்டு ஈமான் நிரப்பப்பட்ட விடயம்.

பரிசுத்தமான உள்ளமுடையவர்கள் மாத்திரமின்றி நிரப்பமான தூய ஈமான் உள்ளவர் மாத்திரமே அல்லாஹ்வின் திருக்காட்சியை காணும் தகுதி பெற்றவராவார் என்பதை உணர்த்திக் காட்டப்படுகின்றது. இதனையே ‘பரிசுத்தமான உள்ளமுடையவரே வெற்றி பெற்றார்’ என்ற திருவசனம் நமக்கு உணர்த்துகின்றது.



2. மஸ்ஜிதுல் அக்ஸாவில் நபிமார்களுடனான சந்திப்பு,

புனிதப் பயணங்கள் நல்லவர்களின் ஆசியுடன் அல்லது நல்லவர்களின் ஸியாரத்துடன் அமைதல் வேண்டும் என்பதை புலப்படுத்துகிறது. புராக்கிலான பயணமும், ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வழித்துணையும் இறைவழிப் பயணம் சடநிலையில் அல்லாமல் ஆன்மீக நிலையில் ஏற்கனவே வழியறிந்த, தெரிந்த காமிலான ஷெய்கின் துணையுடனே அடக்கமாக அமைதல் அவசியம் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) புராக், ஆகியவற்றின் பின்வாங்குதலும், றப் றப் பின் வருகையும், அதற்கப்பால் உள்ள பயணமும், மனித முயற்சியும், வழிகாட்டுதலும் குறிப்பிட்ட எல்லை வரையிலும்தான் என்பதையும் அதற்கப்பால் உள்ள பயணம் அதாவது முக்தி என்பது அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையில் “நிஃமத்தில்” – அருளில் தான் தங்கியிருக்கிறது என்பதையும் அவன் நாடியவர்களை மட்டுமே நேர்வழி காட்டி முக்தி பெறச்செய்வான் என்பதையும் காட்டுகிறது.





கப்ரில் தொழுகை

பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மக்காவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா செல்லும் வழியில் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கப்ரில் தொழுது கொண்டிருப்பதை கண்டதாகவும், மஸ்ஜிதுல் அக்ஸா சென்றடைந்த போது பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை வரவேற்க மூஸா (அலைஹிஸ்ஸலாம்) தயார் நிலையில் நின்றதாகவும் ஹதீஸ் கிரந்தங்களில் காணமுடிகிறது.





ஆன்மாவின் வேகம்

மேலும் கூடவே மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழுத நபிமார்கள் பெருமானாரை வழியனுப்பிய பின்பே பிரிந்தார்கள். ஆனால், புராக் விண்ணகம் செல்லும் முன்பே நபிமார்கள் அங்கு சென்று விட்டார்கள்.

இது, நபிமார்களுடைய ஆன்மாவின் வேகம் உச்ச ஒளி வேகங்கொண்ட புராக்கின் வேகத்தை விட வேகமானது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.





மரணித்தவர் உதவுதல்

அல்லாஹ்வை தரிசித்து உரையாடிய பின் ஐம்பது வேளை தொழுகையை பரிசாக கொண்டுவந்த போது மூஸா (அலைஹிஸ்ஸலாம்) ஐந்தாக குறைக்கும் வரை வாதாடியது.

“தொழுகை முஃமினின் மிஃராஜ்” அல்லாஹ்வை காண்பது மிஃராஜின் பூரணம். பெருமானாரை தவிர்த்து ஏனையோர் கலப்பால் அல்லாஹ்வை காணும் பாக்கியத்தை பெறுவார் என்பதனால்.

ஊசிக்காதளவு அல்லாஹ்வுடன் வசநித்து மதிமயங்கிய அனுபவத்தை பெருமானாரிடம் எடுத்துக்கூறி தினமும் ஐம்பது வேளை இறைவனை தரிசிக்கும் ஆற்றல எல்லா உள்ளங்களுக்கும் கிடையாது. எனவே குறைத்து வாருங்கள் என்று கூறியதிலிருந்து........



1. மரணித்தவர்கள் உயிருள்ளவர்களின் பலம், பலவீனம் ஆகியவற்றை அறிந்திருக்கின்றார்கள்.

2. உயிருள்ளவர்களின் நடவடிக்கைகளில் மரணித்தவர்கள் அக்கறை கொண்டுள்ளார்கள்.

3. உயிருள்ளவர்களுக்காக மரணித்தவர்கள் உதவி செய்ய முடியும் என்பது தெளிவாகின்றது.


விஞ்ஞான தத்துவம்

மிஃராஜ் பயணம் சிலேடையாகவும், இஸ்ராப் பயணம் வெளிப்படையாகவும் அல்குர்ஆனில் கூறப்பட்டிருப்பதானது தெரிந்த உண்மைகளை கொண்டே தெரியாத உண்மைகள் விளக்கப்பட வேண்டும் என்ற விஞ்ஞானத் தத்துவம் எடுத்துக் காட்டப்படுகிறது. பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பௌதீக அதீத விடயங்களான மறைஞானங்கள் பகிரங்கமாக பாமரர்கள் மத்தியில் பேசக்கூடியதல்ல என்பதனால்தான் அறிவுள்ளவர்கள் மாத்திரம் அறிந்து கொள்ளும் அமைப்பில் அல்குர்ஆன் சிலேடையாக எடுத்துக் கூறுகின்றது.

மிஃராஜ் நிகழ்வு நபித்துவ 11 ½ ல் ரஜப் திங்கள் இரவின் பிற்பகுதியில் நடந்தேறியதிலிருந்து..... பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் மார்க்கம் நடுநிலையானது என்பதையும் நடுநிலை – மத்திமமானதே – மேலானது என்பதையும் காட்டுகின்றது அதாவது.

நடுநிலை



1. நபித்துவத்தின் முளுக்காலம் 23 ஆண்டுகள். இதன் சரிபாதி 11 ½ ஆண்டுகள்.



2. நுபுவ்வத்தின் ஆரம்பம் நல்ல கனவுகலாகும். இக்கனவு ரபியுல் அவ்வலில் தொடங்கியது. இதனை நுபுவ்வத்தின் தொடக்கம் என கணக்கிட்டால் ரஜப் வருடத்தின் மத்தியாகும்.



3. ஷரீஅத்தினடிப்படையில் வெள்ளிக்கிழமை முதல் நாளாகும். இதன்படி கிழமையின் மத்தி திங்களாகம்.



4. முந்திய மார்க்கங்களில் சில ஜவாலியத் – (தீவிரம்) ஆகவும், வேறுசில ஜமாலியத் (சாத்வீகம்) ஆகவும் அமைந்துள்ளன. ஆனால் இறுதி வேதமான இம்மார்க்கம் இரண்டையும் உள்ளடக்கிய சமநிலையான மத்திய மார்க்கமாக இருப்பதனால்,



“ இந்த உம்மத் நடுத்தரமான உம்மத்” என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

“நடுத்தரமானதே சிறந்தது” என்ற அடிப்படையில் “இதுவரை தோற்றுவிக்கப்பட்ட உம்மத்துகளில் இந்த உம்மத்தே சிறந்த உம்மத்” என சிறப்பித்துக் குறிப்பிட்டுள்ளான். இதனால், மிஃராஜ் நிகழ்வு, மத்திமத்தில் நிகழ்ந்திருப்பதால் இஸ்லாம் நடுநிலையையே போதிக்கிறது. அதுவே அழகானது. அழகையே அல்லாஹ் விரும்புகிறான் என்பதனை புலப்படுத்திக் காட்டுகிறது.



மிஃராஜ், ஹபீப், மஹ்பூபை நாடிச்செல்லும் பயணமாகும். இப்பயணத்தின் இன்பம் (விஸாவில்) சந்திப்பில் தங்கியிருக்கிறது. இச்சந்திப்பு அடக்கமான இரவு நேரத்தில் நிகழ்வதால் பூரண இன்பத்தை பெற முடியும் என்பதை மறைமுகமாக எடுத்துக் காட்டுகின்றது.



எனவே மிஃராஜ் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் யதார்த்த நிலையை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகவும் ஆன்மீகப் பயணத்தின் ஒழுக்கத்தை விளக்கும் ஒரு செயல்முறை பயிற்சியாகவும் அமைந்திருப்பது புலனாகின்றது.



தொழுகை மிஃராஜின் பரிசாகும். இது முஃமினீன் மிஃராஜாகும். அதனால், தொழுகையின் அசைவுகள் அடிமைத்துவத்தின் வெளிப்பாடாக அமைந்திருக்கின்றன. “அடிமைத்துவத்தின் பலன் வெற்றியாகும். இதனை அத்திய்யாத்தில் பெறமுடியும். அத்தஹிய்யாத் இறைவனுக்கு முன்னாள் நபியவர்கள் உரையாடியதை நினைவுப்படுத்துகின்றது. அதனால், தொழும்போது நாம் நேரே அல்லாஹ்வுடன் வசனிப்பதாகவும், நபியவர்களுக்கு ஸலாம் கூறுவதாகவும் கருதிக்கொள்ள வேண்டும். அதனால் நபியவர்களை நேரில்பார்ப்பதாக கற்பனை செய்துகொண்டு ஸலாம் கூறினால் நபியவர்கள் பதில் கூறுவார்கள் என்று ஹஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் இஹ்யாவில் குறிப்பிட்டுள்ளார்கள்.










மீலாத் விழாவின் அடிப்படை நோக்கங்கள்!!





எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! சலவாத் எனும் கருணையும், சலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!




மீலாத் விழாவின் அடிப்படை நோக்கங்கள் :



மீலாத் விழாவினுடைய அடிப்படை நோக்கம்: நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய பிறப்பின் அற்புதங்களை எடுத்து கூறுவதும், அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவதும், அவர்களுடைய சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதும், மக்களை ஈமானின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும் உணர்வூட்டுவதும், அவர்களின் நற்குணங்களை அறிந்து கொள்ளுவதும், சந்தோசத்தையும் முஹப்பைத்தையும் மற்றும் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதும், அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை சொல்லி காட்டுவதும், மக்களுக்கு உணவளித்தல் போன்ற நல்ல அமல்களை செய்வதும் அதன் மூலம் நன்றியை வெளிப்படுத்துவதும் ஆகும்.



இவ்வாறு எங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஒரு முஸ்தஹப்பான அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை அள்ளித்தரக்கூடிய காரியமாகும்.

அல்லாஹுதஆலா கூறுகிறான்:

"அல்லாஹுதஆலா உங்களுக்கு செய்த நிஹ்மத்தை நினைவு கூறுங்கள்." இவ்வசனத்தின் மூலமாக நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய பிறந்த தினத்தை நாங்கள் கொண்டாடுகின்றோம். காரணம் அருட்கொடைகளிலே மிகச் சிறந்த அருட்கொடை இறுதி தூதர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களே ஆவார்கள்.



மற்றுமொரு ஆயத்தில் அல்லாஹ் குறிப்பிடும் போது:

"உங்களுடைய அல்லாஹ் அளித்த நிஹ்மத்துகளை சொல்லிக்காட்டுங்கள்." இவ்வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ் எங்களுக்கு அளித்த எத்தனையோ விதமான அருட்கொடைகளை நாங்கள் சொல்லி காட்டுகிறோம். எனவே அருட்கொடைகளில் மிகவும் சிறந்த அருட்கொடை நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய வருகையே. எனவே அவர்களின் வருகையை கொண்டாடுவது எவ்வாறு விலக்கப்பட்ட விடயம் என்று கூற முடியும்?



மற்றொரு ஆயத்தில் அல்லாஹு த ஆலா குறிப்பிடுகின்றான்:

"அல்லாஹு த ஆலா முஹ்மின்களின் மீது மாபெரும் உபகாரத்தை செய்துள்ளான். எப்பொழுதெனில் அவர்களில் ஒரு ரசூலை அனுப்பிய போது."

இவ்வாயத்தும் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய பிறப்பின் சிறப்பை எடுத்து இயம்புகின்றது.



எனவே நபிமார்களுடைய பிறப்பு பற்றி எடுத்து சொல்லுவது என்பது இறை வழிமுறையில் நின்றும் உள்ளது என்பது தெளிவாகின்றது. அது மட்டும் இன்றி அல்லாஹு தஆலா குர் ஆனிலே பல இடங்களில் நபிமார்களுடைய பிறப்புகளை பற்றி கூறுகிறான் உதாரணமாக: நபி ஈஸா அலைஹி சலாம் அவர்களுடைய பிறப்பையும் அச்சமயம் ஏற்பட்ட அற்புதங்களையும், அவர்களுடைய வாழ்கையில் நடந்த சம்பவங்களையும் அதே போன்று நபி மூசா அலைஹி சலாம் அவர்களுடைய பிறப்பின் சிறப்பு, வளர்ந்த முறை, நபித்துவம் பெறல் போன்ற அனைத்தையும் அல்லாஹு சிறப்பான முறையில் குறிப்பிடுகின்றான்.



இதே அமலைதான் நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம் இது இறை வழிமுறை. இறை வழிமுறையை ஏற்று நடப்பது தான் நல்லடியார்களின் பண்பு. அது மட்டுமன்றி நபி ஈஸா, நபி மூசா அலைஹி சலாம் அன்னவர்களுடைய பிறப்பை எடுத்து சொல்வதே மிக உன்னதமான செயலாயின் நபிமார்களிலே இறுதியானவரும், மிக உயர்வானவருமாகிய நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய பிறப்பை எடுத்துக் கூறுவது மிகவும் சிறப்பானது.



நபியவர்களும் சஹாபா பெருமக்களும் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய பிறப்பின் நிகழ்வுகளை ஒன்று கூடி பேசிக் கொண்டு இருப்பார்கள். அவ்வேளையில் யா ரசூலல்லாஹ்!! உங்களைப் பற்றி எங்களுக்கு கூறுங்கள். என சஹாபாக்கள் கூறுவார்கள். அப்போது நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறுவார்கள். என இமாம் ஹாகிம் ரஹ்மாதுல்லாஹி அலைஹி அறிவிக்கின்றார்கள். (பைலுள் கதீர் - ஷரஹு ஜாமிஉஸ்ஷகீர்)



இந்த உண்மைகள் விளங்காத சிலர் மீலாத் விழாவை சிலை வணக்கம் போல் சித்தரித்து, அதை செயல்படுத்தும் முஸ்லிம்களை தடுத்து வருவது சகிக்க முடியாத தவறாகும். "எங்களை விட அறிஞர்கள் இல்லை" என்ற கர்வ நிலையில் உள்ள தற்கால வழி கெட்ட அறிஞர்களை விட பல்லாயிரம் படித்தரத்தால் அறிவாலும், இறையச்சத்தாலும் மென்மையான நேர்வழி பெற்ற இமாம்கள் அனைவரும் அனுமதித்துள்ள மீலாதுன் நபி விழாவை வழிகேடவர்களின் விசமகருத்திட்காக தவிர்க்க வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இல்லை.



மாறாக மீலாது நபி விழாவை பெரு மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதே அல்லாஹ்வின் விருப்பமாகும். எப்படி என்றால்,

"அல்லாஹ்வுடைய "பள்ல்" " ரஹ்மத்" தைக் கொண்டு அவர்கள் (முஹ்மீன்கள்) மகிழ்ச்சி கொண்டாடட்டும்." என நபியே! நீங்கள் கூறுங்கள் அது அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்துகளை விட மிக சிறந்ததாகும். (10 - 58)



மேற்கூறிய மறை வசனத்தில் கூறப்பட்டுள்ள "பள்ல்" " ரஹ்மத்" என்பது நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் தான் என பல தப்சீர் கலை அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.



ஆகவே நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய பிறப்பையும், அதனுள் பொதிந்துள்ள சிறப்புகளையும் எடுத்து கூறுவது குர் ஆன், ஹதீசுக்கு மாற்றமில்லாத சுன்னத்தான நல்ல அமலாகும்.



எனவே இறுதி நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவதரித்த மீலாதின் அருள் அந்த மாதம் முழுவதிலும் உண்டு என்பதை புரிந்து ரபிஉல் அவ்வல் மாதத்தை முஹுமீன்கலாகிய நாங்கள் நன்றி உணர்வோடு கொண்டாடி நற்பேறு பெறுவோமாக!!