பாங்கின் அர்த்தம்

அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :
முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :
முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
ஹய்ய அலஸ் ஸலா(த்), ஹய்ய அலஸ் ஸலா(த்) :
தொழுகையின் பக்கம் வாருங்கள், தொழுகையின் பக்கம் வாருங்கள்
ஹய்ய அலல் ஃபலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் :
வெற்றியின் பக்கம், வாருங்கள், வெற்றியின் பக்கம் வாருங்கள்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
லா இலாஹ இல்லல்லாஹ் :
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவனில்லை



அறிவிப்பவர் : அபூமஹ்தூரா(ரழி)
நூல் : முஸ்லிம்
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரழி)
நூல் : இப்னுமாஜா,அபூதாவூத்


ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். அல்குர்ஆன் 23:1,2,9

இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், - அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள் இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம். அல்குர்ஆன் 5:58

தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள் அவனுக்கே அஞ்சி நடங்கள் அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 6:72

எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம். அல்குர்ஆன் 7:170

“நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. அல்குர்ஆன் 20:14

“உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்.). அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை”. அல்குர்ஆன் 74:42,43

உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள் பத்து வயதை அடைந்த(தும் தொழமலிருந்தால்) அதற்காக அவர்களை அடியுங்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: அம்ரு இப்னு ஷூஜபு.
நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்.

யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ளவில்லையோ அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, சாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. (மாறாக) அவன் மறுமை நாளில் காரூன், பிர்அவ்ன், காமான், உபைபின் கஃப் ஆகியோருடன் இருப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு,
அம்ருஇப்னு ஆஸ் (ரழி)
நூல் : அஹ்மத்

சிறந்த அமல்:
அமல்களில் சிறந்தது எது என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என்றார்கள்.
அறிவிப்பாளர்: உம்முஃபர்வா (ரழி)
நூல்கள் : திர்மிதி, ஹாகிம், அபூதாவூத்.

பஜ்ரு, அஸர் தொழுகையின் சிறப்புகள்:
(பஜ்ரு தொழுகையை) சூரியன் உதிப்பதற்கு முன்பும் (அஸர் தொழுகையை) சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுதவர் நிச்சயம் நரகில் நுழையமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



கூட்டுத் தொழுகையின் சிறப்பு:
ஒரு மனிதர் தனித்து தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமார்(ரழி)
நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி

தொழுகையை விட்டவனின் நிலை:
நமக்கும் அவர்களுக்குமிடையே (காஃபிர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: புரைதா (ரழி)
நூல்கள்: திர்மிதி,அபுதாவுத்,அஹமத்,இப்னுமாஜா

(நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக. இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக) நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது. அல்குர்ஆன் 17:78

இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன் மீது பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜமாஅத்தும், இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என நபி(ஸல்) அவர்கள் நவின்றனர்.
அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரழி)
நூல்கள்:புகாரி, முஅத்தா, அபூதாவூத், திர்மித், நஸயீ

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கியப் பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும்,உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும் என்று உளறுகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு படுக்கையிலிருந்து உளு செய்தபின், இரண்டாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸயீ
(குறிப்பு: பிற மத சகோதரர்களுக்கு பிரிண்ட் எடுத்து கொடுங்கள். உண்மையான இறைவனை அறிய செய்யுங்கள் - எடிட்டர்ஸ் இதுதான் இஸ்லாம்.காம்)
இந்தக் கட்டுரைப் பற்றி கருத்துக்கள், மேலதிக விளக்கங்கள் எழுத நாடுபவர்கள் கீழ்கண்ட லிங்கில் பதிக்கலாம்.
http://idhuthanislam.blogspot.com/2006/09/blog-post.html
வணக்கத்திற்கு உரியவன் இறைவனைத் தவிர வேறெவரும், எதுவும் இல்லை' என்றக் கொள்கையை ஏற்று அதன் படி வாழ்ந்துக் கொண்டிருக்கும் மக்களின் தொகை உலகில் இருநூறு கோடிகளுக்கும் மேல். இந்தக் கொள்கையை மனதால் ஏற்று தன் நிலையை மாற்றிக் கொள்ளா விட்டாலும் இந்தக் கொள்கை சரியானதுதான் என்று கருதுபவர்களும் கோடிக்கணக்கில் உள்ளனர். 'வணக்கத்திற்கு உரியவன் இறைவனைத் தவிர வேறெவரும், எதுவுமில்லை' என்ற கொள்கையை நாம் அரபு மொழியில் மொழிபெயர்த்தால் 'லா இலாஹ இல்லா அல்லாஹ்' என்று வரும். இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் 'முஸ்லிம்' என்று அடையாளப்படுத்தப்படுகிறார். முஸ்லிம் என்ற அரபு வார்த்தையை தமிழ்படுத்தினால் 'கட்டுப்பட்டவர்' என்று பொருள் வரும்.இந்தக் கொள்கையாளர்கள் தங்கள் வணக்கங்களிலும், தங்கள் இறை நினைவுகளிலும், அந்தக் கொள்கையைப் பற்றிப் பேசும் போதும் அந்தக் கொள்கையின் அரபு வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். அந்த வார்த்தையில் 'அல்லாஹ்' என்ற பதம் வருவதால் அல்லாஹ் என்ற அந்தக் குறியீடு தனிக் கடவுளை குறிக்கும் ஒரு சொல் என்றும், முஸ்லிம்கள் தனிக் கடவுளை ஏற்றுக் கொண்டவர்கள் என்றும் பிறர் விளங்கிக் கொள்கின்றனர்.பல்வேறு மொழிகள் வழக்கிலுள்ள ஒரு நாட்டில் அவர்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஒரு மொழியின் வார்த்தை ஒரு சாரார் பயன்படுத்தப்படும் போது அது வேறுவிதமான உணர்வுகளை ஏற்படுத்தவே செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மை. கிறிஸ்த்தவர்கள் வணங்கும் இயேசுவைப் பொருத்தவரை மொழிக்கு ஏற்றார்போல அந்த வார்த்தை மாற்றப்பட்டு புழக்கத்திற்கு வந்து விட்டது. ஆங்கிலத்தில் ஜீஸஸ் என்றும், அரபுவில் ஈஸா என்றும், தமிழில் இயேசு என்றும் இடத்திற்கு தகுந்தார்போல அவரது பெயர் மாற்றப்பட்டு விட்டதால் கிறிஸ்த்தவர்கள் இயேசுவென்று தமிழில் குறிப்பிடும் போது பிறர் அதை பளிச்சென்று புரிந்துக் கொள்கிறார்கள். முஸ்லிம்களைப் பொருத்தவரை அவ்வாறு எல்லா சந்தர்பங்களிலும் அல்லாஹ் என்பதை மொழியாக்கம் செய்வதில்லை. (இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன) அல்லாஹ் என்றே குறிப்பிடுவதால் அல்லாஹ் என்பது ஒரு இணத்தின், ஒரு கொள்கையின் கடவுளை குறிக்கும் சொல் என்ற நிலையைப் பெற்று விட்டது. இது வருந்தத்தக்க ஒன்றுதான், ஏனெனில் ஒரு மொழியில் பலவீனம் அல்லது மொழி இடைவெளிகளின் காரணத்தால் மிகப் பெரிய ஒரு பொதுக் கொள்கை தவறாக புரியப்படுவது வருந்தத்தக்கதுதான். இந்த தவறான புரிதல் அக்கறையுள்ள முஸ்லிம்களின் மீது கூடுதலான விளக்கும் சுமையை? ஏற்படுத்தியுள்ளது.'மிகப் பெரியக் கொள்கை' அலட்சியப்படுத்தாமல் பரிசீலியுங்கள்.'அல்லாஹ்' என்பது ஒரு மொழியின் வார்த்தையாகும். அதுவும் அசல் உச்சரிப்பிலிருந்து மருவி அரபு மக்களிடம் ஏற்றதாழ 4000 வருடங்களாக புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையாகும். அந்த அரபு மக்களின் பெரும்பான்மையானோர் தாங்கள் வணங்கி வந்த மண், மரம், மட்டை, கற்கள், இன்னப்பிற மரணித்த மனிதர்கள், நம்பி இருந்த தேவதைகள் இவைகள் அனைத்தையும் 'இலாஹ்' என்று குறிப்பிட்டு வந்தனர். இலாஹ் என்பது வேர் சொல்லாகும். இதற்கு 'வணங்கப்படும் கடவுள்' என்பது பொருள். பல வணங்கப்படுபவைகளை உருவாக்கிக் கொண்ட அவர்கள், இவை அனைத்தையும் கடந்து ஒரு பெரிய சக்தி இருக்கின்றது என்றும் அதற்கு அல்லாஹ் என்ற பெயரையும் சூட்டி வந்தார்கள். இவை அனைத்தையும் அந்த மக்களிடம் இஸ்லாம் வெளிப்படுவதற்கு முன்பிருந்த வரலாறாகும்.இந்த வரலாற்றை விளங்கிய யாரும் அல்லாஹ் என்பது இஸ்லாமிய கடவுளுக்குரிய ஆடையாளமல்ல என்பதை புரிந்துக் கொள்வர். ஏனெனில் இந்த அல்லாஹ் என்ற பெரிய கடவுள் கொள்கை சித்தாந்தம் அரபு மக்களிடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்ற ஒன்றாகும்.பெரியக் கடவுள் (அல்லாஹ்), குட்டிக் கடவுள்கள்(இலாஹ்) என்ற பலவீன சித்தாந்தத்தை இஸ்லாம் முறைப்படுத்தி பல்வேறு குட்டிக் கடவுள்களையெல்லாம் களைந்து விட்டு அந்த மாபெரும் சக்தியான ஒரே இறைவனை (அரபு மொழிக் குறியீடான அல்லாஹ்வை) நிலைப்பெற செய்தது.
பலக் கடவுள்கள் வேண்டாமென்று (இவர்) ஒரேக் கடவுளாக ஆக்கிவிட்டாரா.. இது ஆச்சரியமான ஒன்றுதான் என்று (அந்த அரபு மக்கள்) கூறினர். (அல் குர்ஆன் 38:5)

இதுதான் உண்மையே தவிர பிறர் நினைத்துக் கொண்டிருப்பது போன்று இஸ்லாம் புதிதாக அல்லாஹ் என்று ஒரு இறைவனை உருவாக்கிக் கொடுக்கவில்லை.புரிந்துக் கொள்வதற்காக ஒரு உதாரணம் கூறலாம். ஒருவேளை முஹம்மத் என்ற அந்த இறைத்தூதர் அரபு தேசத்தில் இல்லாமல் தமிழகத்தில் - தமிழ் மொழியில் வெளிப்பட்டிருந்தால் இங்கு நிலவி வந்த பல இறைக் கொள்கையை சீர் திருத்தி ஒரே இறைவன் என்ற அந்த மாபெரும் சக்தியை புரிய வைத்து அதன் பக்கம் மக்களை மீட்டெடுத்திருப்பார். அப்போது அவரது கொள்கை அரபுவில் மொழி பெயர்க்கப்பட்டால் தமிழில் முஹம்மத் அவர்கள் யாரை இறைவன் என்று குறிப்பிட்டார்களோ அது அரபுவில் அல்லாஹ் என்று மொழி பெயர்க்கப்படும். இதிலிருந்து அல்லாஹ் என்பது தனிக் கடவுளை குறிக்கும் சொல் அல்ல மாறாக பொதுக் கடவுளை குறிக்கும் சொல் என்பதை விளங்கலாம்.தமிழில் பிரம்மன், விஷ்னு, முருகன் என்று குறிப்பிடப்படும் அந்த சொற்களுக்கும், இறைவன், கடவுள் என்று குறிப்பிடப்படும் அந்த சொற்களுக்கும் உள்ள வித்தியாசத்தை எவரும் விளங்கலாம். முந்தைய சொற்கள் தனிப்பட்டதையும் பிந்தைய சொற்களான இறைவன், கடவுள் என்பது பொது சக்தியையும் குறிப்பதாக எப்படி விளங்கிக் கொள்கின்றோமோ அதைப் போன்று தான் அல்லாஹ் என்பதும் எல்லோருக்கும் பொதுவான அனைத்து சக்திகளையும் உள்ளடக்கிய ஒரு போது இறைவனைக் குறிக்கும் ஒரு அரபு சொல்லாகும். அதனால் தான் பொதுக்கடவுளை ஏற்றுக் கொண்ட அரபு மொழி பேசக் கூடிய யூதர்கள், கிறிஸ்த்தவர்கள் கூட இறைவனை அல்லாஹ் என்றே குறிப்பிடுகிறார்கள்.இஸ்லாம் எந்த ஒரு தனிக் கடவுள் கொள்கையையும் வகுக்கவில்லை மாறாக அது எடுத்தக் காட்டுவது பொதுக் கடவுள் கொள்கைதான் என்பதை சந்தேகமற விளங்க வேண்டும். பின்னர் சற்று அது கூறும் அந்தக் கொள்கையின் உள்ளே நுழையுங்கள்.பகுத்தறிவே உலக புரட்சியின், வளர்ச்சியின் அடையாளம் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டும் என்பதில்லை. படிப்பும், சிந்தனையும், அனுபவமும் பகுத்தறிவை தூய்மைப்படுத்தி மனிதனை விசாலமாக்குகின்றது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள தனது பகுத்தறிவை முழு வீச்சில் பயன்படுத்தும் மனிதன் தனது கடவுள் கொள்கைக்கு மட்டும் அதைப் பயன்படுத்தாமல் நம்பிக்கை என்ற பெயரில் பகுத்தறிவிலிருந்து விலகி நிற்பது விந்தையாக இருக்கின்றது.சக்தியும் - வடிவமும்பொதுவாக சக்தி அல்லது ஆற்றல் போன்றவற்றை வடிவப்படுத்தி மனிதன் அனுபவிப்பதில்லை. காற்று என்பது ஒரு ஆற்றல். அதை அனுபவிக்க காற்றுக்கு உருவம் வேண்டும் என்று எந்த மனிதனும் முடிவு செய்வதில்லை. ஒளி என்பது ஒரு சக்தி. ஒளிக்கு உருவம் வடிவம் கொடுத்தால் தான் அதை புரிந்துக் கொள்ள முடியும் அனுபவிக்க முடியும் என்று எந்த அறிவும் நம்பிக்கையும் கூறுவதில்லை. வெப்பம் என்பது கூட ஒரு சக்தி. அதை உருவப்படுத்தி அனுபவிக்க வேண்டும் என்று எந்த மனிதனும் சொல்லவில்லை. ஆனால் கடவுள் என்ற சக்தி அனுபவிக்க மனிதன் விரும்பியவாறெல்லாம் உருவப்படுத்திக் கொள்கிறான். பிற இறைக் கொள்கையில் உள்ள பலவீனங்களில் ஒன்று கடவுளை உருவப்படுத்துவது. (இறைவன் உருவமற்ற வெறும் சூனியம் அல்ல. இறைவன் அவனுக்கே உரிய உருவ அமைப்போடு இருக்கிறான். அவனது உருவத்தை யாரும் இதுவரை கண்டதில்லை என்பதால் இந்தப் பரம்பொருளை உருவப்படுத்தக் கூடாது என்று இஸ்லாம் சொல்கின்றது)மனித கற்பனை, கடவுளை கொச்சைப்படுத்தலாமா..?ஆன்றோர்கள் முதல் சான்றோர்கள் வரை எவருமே கடவுளை கண்களால் கண்டதில்லை என்பதால் தான் கடவுளாக கருதப்படும் வடிவங்கள் பெருத்த அவலங்களைப் பெற்றுள்ளன. கடவுளாக கருதப்படும் சிலைகளை பற்றி சிந்திக்கும் எந்த அறிவும் இது கடவுளை கொச்சைப்படுத்தும் போக்கு என்பதை விளங்கும். மனிதன் அவனுக்குத் தேவையானவற்றை மிக்க அழகுடன் வடிவமைக்கவே விரும்புகிறான். வீடு கட்ட விரும்பும் எந்த மனிதனும் கற்களை அடுக்கி கட்டி விட்டால் போதும் வீடாகி விடும் என்று முடிவு செய்வதில்லை. பொறியியளாளர்களின் ஆலோசனைப்படி வீட்டை அழகுற அமைக்கிறான். ஒரு ஓவியன் தனது ஓவியத்தை அசிங்கமாகவும் அவலட்ஷனமாகவும் வரைய விரும்புவதில்லை. புகைப்படக்காரர்கள் பார்த்தவுடன் முகம் சுலிக்கும் விதத்தில் அகோரமான புகைப்படங்கள் எடுப்பதில்லை. அவனது தேவைகளுக்காக அழகுணர்ச்சியை நாடும் மனிதன் கடவுளை கற்பனை செய்யும் போது மட்டும் எவ்வளவு கேவலமாக அதை வடிவமைத்துக் கொள்கிறான் என்பதை பார்க்கும் போது சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.ஒன்றுக்கு மேற்பட்ட தலைகள், இரண்டுக்கும் மேற்பட்ட கரங்கள், மிருகங்களுக்குள்ள கோறப்பற்கள், யானைத்தலையும் பெருத்த தொப்பையும் கொண்ட உருவம். கருத்த, தடித்த நிறத்தில் பயங்கர உருவங்கள் என்று எத்துனை வித அகோரங்கள்!. தனது குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கைகளுடன் குழந்தை பிறந்தால் கடவுளின் வடிவம் என்று அதை ஆபரேஷன் செய்யாமல் விட்டு விடுவார்களா..? கோரப் பற்களுடன் குழந்தைப் பிறந்தால் அதைக் கண்டுக்கொள்ளாமல் விட்டு விடுவார்களா..? இறைவனாக கருதப்படும் உருவங்களுக்கு ஏன் இந்த அவலங்கள்! மேல் தட்டு மக்களாக தங்களைக் கருதிக் கொள்ளும் ஒரு சாரார் வழிபடும் சிலைகளிடம் இத்தகைய அகோரங்கள் இல்லை என்பதை கவனிக்க வேண்டும். தாழ்ந்த மக்களாக அவர்கள் கருதுபவர்களின் சிலைகளின் வடிவங்கள் கூட தாழ்ந்தவைகளாகவே இருக்க வேண்டும் என்ற ஜாதிய வெறிப்பாடே இவற்றிற்கு காரணம்.இறைவன்(அல்லாஹ்)வாகிய அவனுக்கு இந்த அவலட்சனங்கள் இல்லை.தெய்வம் என்றால் அது தெய்வம் வெறும் சிலை என்றால் அது சிலையா..?கல்லை கடவுளாக உருவப்படுத்திக் கொள்பவர்கள் அதை நியாயப்படுத்த இப்படிக் கூறுவதைப் பார்க்கிறோம். சாதாரண நடைமுறைக்கு கூட சாத்தியமில்லாத தத்துவத்தை மகாப் பெரிய பொதுக் கடவுள் கொள்கைக்கு பொருத்திப் பார்ப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. அறிவாளிகளால் இதை எப்படி சரிகாணமுடியும் என்பதும் விளங்கவில்லை.இந்தத் தத்துவத்தை சரிகாண்பவர்களின் வீட்டை ஒருவன் பார்த்து 'இது உன் வீடென்றால் உன் வீடு, என் வீடென்றால் என் வீடு' என்று கூறினால் மிக அழகான தத்துவம் அதனால் நீ விரும்பினால் இந்த வீட்டுக்கு சொந்தம் கொண்டாடு' என்று சொல்வார்களா..? சிலைகள் என்றைக்கும் சிலைகளாகத்தான் இருக்கும் அவை ஒரு போதும் தன் நிலையிலிருந்து உயர்வுப் பெறாது. வேண்டுமானால் நாளடைவில் அது தனது புதிய பொலிவை இழக்கலாம் அதைத்தவிர வேறெந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. ஊனமான பல சிலைகள் ஆங்காங்கே கேட்பாரற்று கிடப்பதைக் கூட பார்க்க முடியும். வித விதமாக பல சிலைகளை வடிவமைத்து தூக்கி ஆடிபாடி கடலில் கரைத்து விட்டு கடவுளை கண்ணியப்படுத்தி விட்டதாக மகிழ்கிறார்கள். உண்மையான இறைவனை இப்படியெல்லாம் செய்ய முடியுமா...? அல்லாஹ் என்ற அந்த இறைக் கொள்கை இவற்றிர்க்கெல்லாம் அப்பாற்பட்டதாகும்.சிந்தனையின் அடுத்தக்கட்டத்திற்கு நகருங்கள்.ஏன் பல இறைவர்கள் வேண்டும்?எதற்காக, எந்த அடிப்படையில் இந்த மக்கள் பலக் கடவுள்களை நாடுகிறார்கள் அதற்கு என்ன அவசியம் என்பதும் பரிசீலிக்க வேண்டிய ஒன்றாகும்.உயர்ந்த மனிதன்! தாழ்ந்தக் கடவுள்!!திறமைமிக்க எந்த ஒரு மனிதனும் தன் திறமை தனித்துவத்துடன் வெளிப்படுவதையே விரும்புவான். தனது திறமையையும், உழைப்பையும், உலகம் மிகச் சரியாக கண்டுணர வேண்டுமானால் தாம் தனித்துவத்துடன் வெளிப்படவேண்டும் என்றே ஆசைப்படுவான். அப்படி வெளிப்பட்டவர்கள் தான் உலகில் மிளிர்கிறார்கள்.மிகச் சிறந்த, திறமைவாய்ந்த ஒரு கட்டிடப் பொறியாளர் தன்னுடைய திறமையால் ஒரு கட்டிடம் உயர்வதையே விரும்புவார். கூட்டு வைத்துக் கொண்டு தனது திட்டத்தை உருவாக்க மாட்டார். புகழ் மிக்க ஓவியர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களில் யாராவது கூட்டாக ஓவியம் வரைந்து அந்தப் புகழை அடைந்தார்களா..? இப்படி நூற்றுக்கணக்கான உதாரணங்கள் கூறலாம். பலவீனங்கள் அடங்கிய மனிதனே ஒற்றையில், ஒற்றைப்பாட்டில் இத்துனை உயர்வுப் பெறும் போது பலவீனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் மட்டும் எப்படி ஒன்றுக்கு மேற்பட்டு இருக்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட இறைவனைக் கற்பனை செய்பவர்கள் மனிதனின் ஆற்றலை விட கடவுளின் ஆற்றல் குறைந்தது என்று எண்ணுகிறார்களா..?சீர்மை சிதையும் என்பது உறுதி.முழு உலகையும் நீங்கள் உங்கள் சிந்தனை திரையில் கொண்டு வந்து விரியுங்கள். எந்த நாட்டிலாவது சம அதிகாரம் பெற்ற இரண்டு ஜனாதிபதிகள், இரு பிரதமர்கள் இருக்கிறார்களா...! அரசுத் துறைகள் எதுவொன்றிலும் சம அதிகாரம் பெற்ற அதிகாரிகள் ஒன்றுக்கு மேற்பட்டு பணியாற்றுகிறார்களா...? ஒன்றுக்கு மேற்பட்ட இறைவர்கள் இருந்தால் என்ன தவறு என்று கேட்பவர்கள். இந்தக் கேள்விகளையும் தங்களுக்குத் தாங்களே சற்றுக் கேட்டுப் பார்க்கட்டும். ஒரு நாட்டிற்கு இரு பிரதமர்கள், இரு ஜனாதிபதிகள் இருந்தால் என்னத் தவறு?பள்ளிக் கூடங்களுக்கு, கல்லூரிகளுக்கு இரு தலைமை ஆசிரியர்கள் இருந்தால் என்னத் தவறு? ஒரு வீட்டுக்கு இரு குடும்பத்தலைவர்கள் இருந்தால் என்னத்தவறு? இங்கெல்லாம் இருமை இருந்தால் என்னத் தவறு ஏற்படுமோ அதை விட பயங்கரம் இருக் கடவுள்கள் இருந்தால் ஏற்படும். இதை இறை வேதமாகிய குர்ஆன் இப்படிக் கூறுகிறது.வானங்கள், பூமி ஆகியவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டுக் கடவுள்கள் இருந்திருந்தால் அவை சீர்கெட்டு சின்னாபின்னமாகி இருக்கும். இது மறுக்க முடியாத உண்மை. எதுவொன்றும் ஒரே சீராக இயங்கவேண்டுமானால் அது ஒரு அதிகாரத்திற்குட்பட்டிருக்க வேண்டும். நாடும் வீடும் சிறக்க ஒருமையே சரியானத் தீர்வு எனும் போது மொத்த உலகிற்கும் எப்படி ஒன்றுக்கு மேற்பட்டக் கடவுளைக் கற்பனைச் செய்கிறீர்கள்?பலவீனங்களே கூட்டாச்சியைப் பற்றி சிந்திக்கும்.ஒரு பெரியக் காரியத்தை சாதிக்க முற்படுபவர்கள் அதற்கான சக்தி தங்களுக்கு இல்லை என்றால் தங்களைப் போன்றவர்களை ஒருங்கிணைத்து அந்தக் காரியத்தை சாதிப்பார்கள். இன்றைக்கு நடக்கும் கூட்டாச்சிகளை இதற்கு உதாரணம் கூறலாம். ஒரு காரியத்தை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், ஆசை தங்களுக்கு இருந்தாலும் அதற்கான தகுதி தங்களிடம் இல்லை என்பதால் பிறரை நாடி கூட்டணி வைத்துக் கொண்டு நாடியதை சாதிக்கிறார்கள். (இந்தக் கூட்டணிகளில் பிரச்சனை உருவாகி முட்டி மோதிக் கொள்வது தனி விஷயம்)இப்போது சிந்தியுங்கள். இறைவர்களும் கூட்டாச்சி நடத்த வேண்டுமென்றால் இறைவர்களிடமும் மனித பலவீனங்கள் இருக்கின்றனவா..? இப்படி சிந்திப்பது கடவுளை பலவீனப்படுத்துவதாகாதா...? பலவீனத்திற்குட்பட்டவ(ர்)ன் எப்படி இறைவனாக இருக்க முடியும்? பல கடவுள் சித்தாந்தக்காரர்கள் நிதானமாக இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உண்மையான அந்தப் பரமசக்தி (அல்லாஹ்)க்கு எத்தகைய கூட்டு இறைவர்களும் தேவையில்லை. ஏனெனில் அவன் அனைத்து பலவீனங்களுக்கும் அப்பாற்பட்டவன்.பல கடவுள்கள் - பல மனிதர்கள்ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் கலந்து ஒரு மனிதன் உருவாகின்றான். அந்த உருவாக்கம், கருவரையின் குடியிருப்பு, பிறக்கும் முறைகள், பால்யப் பருவம் என்று உலகில் பிறக்கும் கோடானக் கோடி குழந்தைகளும் ஒரே விதத்தில் பிறக்கும் போது பின்னர் ஜாதியம் என்ற கொடிய நோய் அந்தக் குழந்தையோடு வந்து ஒட்டிக் கொள்கின்றது. மிக சொர்ப்பமானவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள், அதிகமானவர்கள் தாழ்ந்தவர்களாகின்றார்கள். மனிதத்துவம் சிதைந்து ஏற்றத்தாழ்வு உருவாகி நிலைப் பெற்று விட்டது. இதற்கு என்னக் காரணம்? பலக் கடவுள் கொள்கையே இந்த ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி விட்டது. இந்த நிலை மாற்றப்பட வேண்டுமானால் அதற்கு ஒரே வழி பலக் கடவுள் கொள்கையை கைக் கழுவுவதேயாகும். விண்ணுலகம், மண்ணுலகம் என்று அனைத்துலகத்திற்கும் ஒரே இறைவன் என்ற நிலை வரும் போதுதான் அவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் சம அந்ததஸ்த்துள்ளவர்களாவார்கள். அதை மிக வலுவாக உலகில் நிலை நிறுத்திக் காட்டியது இஸ்லாம் ஒன்றுதான். மனித சகோதரர்களே.. கூண்டுகளிலும், முட்களிலும் சிறைப்பட்டு கிடக்கும் உங்கள் சிந்தனைச் சிறகுகளை அவற்றிலிருந்து விடுவித்து சற்று அகலமாக விரித்து பறக்க முயலுங்கள். அகன்ற வானவீதி அனைத்தையும் ஆளும் அந்த மகா இறைச் சக்தி உங்களுக்குப் புலப்படும். கடுகளவுக் கூட பலவீனமில்லாத அந்த மகா இறைச் சக்தியே உண்மையான இறைசக்தி. அந்த இறைவன் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியவனல்ல. அவனே அனைத்துலகுக்கும் சொந்தமானவன். அந்த மகா சக்தியை அரபுமொழியில் 'அல்லாஹ்' என்று குறிப்பிடுகிறோம். இறைவன் என்று குறிப்பிடுங்கள், கடவுள் என்று குறிப்பிடுங்கள் அதில் எந்தத் தடையும் இல்லை. மனிதக் குலம் விடுதலைப் பெற வேண்டுமானால் அந்த ஓரிறைக் கொள்கைக் குறித்து சிந்திப்பது ஒன்றே சரியான வழியாகும். இறைவனாகிய அந்த அல்லாஹ்வின் பக்கம் உங்களை அழைக்கின்றோம்.
குர்ஆனை உலகப் பொதுமறை என்று நாம் பெருமையாக சொல்லிக் கொண்டாலும், அதன் உள்ளடக்கத்தையும் அது உலகிற்கு வைக்கும் அழைப்பையும் நம்மில் எத்துனைப் பேர் கூர்ந்து - ஆழ்ந்து கவனிக்கிறோம்? முஸ்லிம்கள் பெருமைப் பேசிக் கொள்வதற்காகவோ வெறும் புனிதப் பொருளாகக் கருதிப் பாதுகாத்து வைப்பதற்காகவோ குர்ஆன் இறக்கி வைக்கப்படவில்லை.

அதன் ஒளியும் - ஒலியும் உலகத்தாரின் கண்களுக்கும், செவிகளுக்கும் சென்றாக வேண்டும். அந்தப் பணியை செய்ய முஸ்லி்ம்கள் தயாராகவில்லை என்றால் அவர்கள் குர்ஆனைப் பற்றி பெருமைப் பேசுவது வெறும் வெத்துப் பேச்சாகவே முடியும்.

குர்ஆனை பொருளரிந்து படிப்பதும், அதன் கருத்துக்களை, வாதங்களை ஆழ்ந்து சிந்திப்பதும் கட்டாயம்.

அல்குர்ஆனை பொருளறிந்து படிப்பது.

திருமறையை சூரத்துல் ஃபாத்திஹாவிலிருந்து சூரத்துன்னாஸ் வரை முழுமையாகப் படித்து அதன் செய்திகளை அறிந்து கொள்ளவேண்டும். அதன் கட்டளைகளுக்கு கட்டுப்படுவது, அது தடுக்கும் செயல்களை விட்டும் விலகிக் கொள்வது. அதில் கூறப்பட்ட சம்பவங்களின் மூலம் படிப்பினை பெறுவது, இவ்வாறு அல்குர்ஆனோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது முஸ்லிம்கள் அனைவரின் மீதும் கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்) அவர்களின் குணநலன்கள் அல்-குர்ஆனாகவே இருந்தது என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதின் பொருளும் இதுதான்.

எனவே நம்முடைய வாழ்க்கையை முற்றிலும் அல்-குர்ஆனுக்கு கட்டுப்படும் வாழ்க்கையாக அமைத்துக் கொள்ளவேண்டும். அதுவே அல்-குர்ஆன் இறக்கி அருளப்பட்டதின் மகத்தான நோக்கமாகும். இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்ட நபித்தோழர்களும் நபித்தோழியர்களும் அல்-குர்ஆனுக்கு இணங்க தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு வசனம் இறங்கும் போதும் அதன் கட்டளைகளுக்கு உடனே கட்டுப்படுபவர்களாக இருந்தனர். இதற்கு வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் பொதுமக்களுக்குப் புரியாது என்று கூறுவது தவறான கூற்றாகும். திருக்குர்ஆனின் அர்த்தம் மற்றும் விளக்கங்களை நேரடியாக அறிவதற்கு அரபி மொழியில் புலமை அவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மொழி பெயர்க்கப்பட்டவற்றைப் படித்து அதில் உள்ள செய்திகளை ஒவ்வொருவரும் அவரவரின் அறிவுக்கு ஏற்றவாறு புரிந்து கொள்ள முடியும். ஒரு நூல் மொழிபெயர்க்கப்படுகிறது என்றால் அந்த மொழியை அறியாதவர்கள் அதனை புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்குத்தான். எனவே குர்ஆனை அதன் மொழிபெயர்ப்பை புரிந்து கொள்ள முடியாதென்பது தவறானதும் அல்லாஹ்வின் வேதவசனங்களுக்கு மாற்றமான கூற்றுமாகும். அல்லாஹ் இதனை 54: 32, 47: 24 வசனங்களின் மூலம் உணர்த்துகிறான்.

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ

நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல்-குர்ஆன் 54:32)


َفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَاَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا

அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்-குர்ஆன் 47:24)

அல்குர்ஆனை ஓதுதல்

பொருளறியாமல் படித்தாலும் ஆன்மீக ரீதியாக நன்மையை பெற்றுத்தரும் ஒரே நூல் அல்குர்ஆன் மட்டும்தான். திருக்குர்ஆனை ஓதுவதில் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன. திருமறையைப் படித்தவர்களுக்காக அது மறுமையில் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யும். இதுபோன்ற இன்னும் பல நன்மைகளும் சிறப்புக்களும் உள்ளன. எனவே பொருட்செலவோ, கடின உடலுழைப்போ இன்றி குறைந்த நேரத்தில் நிறைந்த நன்மையைப் பெற்றுத் தரும் திருமறையை அதிகமாக ஓதிடவேண்டும்.

குறிப்பாக ரமளான் மாதத்தில் அதிமாக ஓதவேண்டும். ரமளான் மாதத்தில் ஒவ்வொரு முஸ்லிம் ஒரு தடவையாவது குர்ஆனை முழுமையாக ஓதி முடிப்பது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் ஒன்றாகும்.

நபி(ஸல்) அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ரமளானில் ஒரு தடவை குர்ஆனை ஓதிக் காண்பிக்கப்பட்டது. அவர்கள் மரணிக்கும் வருடம் இரண்டு தடவை ஓதிக் காண்பிக்கப்பட்டது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : புகாரி)

குர்ஆனின் சிறப்புக்கள்.

நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம் ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. (அல்-குர்ஆன் 17:82)

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது. (அல்-குர்ஆன் 10:57)

(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக. (அல்-குர்ஆன் 16:98)

அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்படடதாகும். அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால், அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். (அல்-குர்ஆன் 69: 43-46)

குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு அத்தியாயங்கள் அல்பகரா, ஆலஇம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்.

குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர் என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். உஸ்மான்(ரலி) புகாரி.

குர்ஆனின் ஒரு முனை அல்லாஹ்வின் கையிலும் மறுமுனை உங்கள் கைளிலும் உள்ளது. எனவே இதனை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் இம்மையில் வழிதவறமாட்டீர்கள், மறுமையில் அழிவுறவும் மாட்டீர்கள். என்பது நபிமொழி. அபூஹுரைரா(ரலி) தப்ரானி.

பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டுதல்களில் மிகச்சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் பாதையாகும். தீனில் தீமையானது மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள் முஸ்லிம்.

குர்ஆனின் சிறு பகுதியேனும் யார் உள்ளத்தில் மனனம் இல்லையோ அவர் உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றது என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) திர்மிதி.

குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதினால் நன்மை இருக்கிறது. ஒரு நன்மை அதுபோன்று பத்து மடங்காக்கப்படும். "அலீஃப், லாம், மீம்" ஒரு எழுத்து என்று சொல்லமாட்டேன். மாறாக அலீஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்துமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு மஸ்வூத்(ரலி) திர்மிதி, தாரமி.

குர்ஆனை ஓதக்கூடியவருக்கு உவமைகளையும், ஓதாமல் இருப்பவருக்கு உவமைகளையும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். குர்ஆனை ஓதக்கூடிய முஃமினின் உவமை பழத்தைப் போன்றது. அதனுடைய வாசனையோ மணமானது. அதனுடைய சுவையோ ருசிக்கத்தக்கது. குர்ஆனை ஓதாத முஃமின்களின் உவமை பேரித்தம் பழத்தை போன்றது. அதற்கு வாசனை இல்லை. அதனுடைய சுவையோ இனிப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் உவமை குமட்டிக்காய் போன்றது. அதற்கு வாசனை இல்லை. அதனுடைய சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதக்கூடிய நயவஞ்சகனின் உதாரணம் துளசி செடியை போன்றது. அதனுடைய வாசனை மணமானது. அதனுடைய சுவையோ கசப்பானது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபு மூஸா(ரலி) புகாரி, முஸ்லிம்.

குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள் மேலும் அதை ஓதுங்கள். குர்ஆனைக் கற்று அதனை ஒதி அதன் அடிப்படையில் நடப்போருக்கு உவமையானது கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையைப் போன்றது. அது அனைத்து இடங்களிலும் மணம் வீசிக்கொண்டிருக்கும். குர்ஆனைக் கற்று அது அவருடைய உள்ளத்தில் பசுமையாய் பதிந்தும் அதனடிப்படையில் நடக்கவில்லையோ அவரின் உவமை கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையை அது பரவாமல் கட்டிக்கொண்டவரைப் போல என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபுஹூரைரா(ரலி) திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா.

நாங்கள் திண்ணையில் அமர்ந்து இருக்கிற சமயத்தில் நபி(ஸல்) எங்களிடம் வந்து உங்களிடம் பாவம் செய்யாது சொந்த பந்தங்களை துண்டிக்காத நிலையில் ஒவ்வொரு நாளும் புத்ஹான் அல்லது ஹதீக் என்ற இடத்திற்கு சென்று திமில்களுடைய இரண்டு ஓட்டகங்களை கொண்டு வர யார் விரும்புவார்? என வினவினார்கள். நாங்கள் அனைவரும் இதை விரும்புவோம் என்று பதிலளித்தோம். உங்களில் ஒருவர் பள்ளிவாசல் பக்கம் செல்லக்கூடாதா? அவ்வாறு சென்று அல்லாஹ்வுடைய வேத்தில் இரண்டு வசனங்களை ஓதுதல் அல்லது கற்றல் இரண்டு ஒட்டகங்களை விட சிறந்தது. மூன்று வசனங்களை ஓதுவது மூன்று ஒட்டகங்களை விட சிறந்தது. நான்கு வசனங்களை ஓதுவது நான்கு ஒட்டகங்களை விட சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தன்னுடைய இல்லத்திற்கு செல்லும்போது தன்னுடன் நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்களை பெற்றுச் செல்லவேண்டும் என்று விரும்புவாரா? என்று வினவினார்கள். நாங்கள் அனைவரும் அதை விரும்புவோம் என்று கூறினோம். மூன்று (குர்ஆனிய) வசனங்களை உங்களில் ஒருவர் தன்னுடைய தொழுகையில் ஓதுவது அவருக்கு நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்கள் கிடைப்பதை விட சிறந்தது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபுஹூரைரா(ரலி) முஸ்லிம், இப்னுமாஜா).

குர்ஆனை ஓதுவதில் தேர்ச்சி பெற்றவர் கண்ணிமிக்க வானவர்களுடன் இருப்பார். குர்ஆனை ஒதுவது சிரமமாக இருப்பினும் அதைத் திருப்பித்திருப்பி சிரமத்துடன் ஓதுவாரானால் அவருக்கு இரண்டு கூலி இருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆயிஷா(ரலி) புகாரி, முஸ்லிம்.

மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம் குர்ஆனிய தோழரே ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பாரோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும் என்று கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) அபூதாவுத், திர்மிதி.

குர்ஆனை ஓதிய தோழர் மறுமையில் வருவார். அப்போது குர்ஆன் இறைவா இவருக்கு ஆடையை அணிவி என்று சொல்லும் அப்போது அவருக்கு உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்படும். இறைவா இவருக்கு உன் அருளை வழங்குவாயாக! என்று கூறும். அப்போது அவருக்கு உயர்ந்த சீருடை அணிவிக்கப்படும். பிறகு குர்ஆன் இவரை பொருந்திக் கொள்ளுமாறு சொல்லும் அவரை இறைவன் பொருந்திக் கொள்வான். அம்மனிதரிடம் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஒதுவீராக!, அவர் ஒதுகிறபோது ஒவ்வொரு வசனத்திற்க்கும் ஒரு நன்மை அதிகப்படுத்தப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபுஹூரைரா(ரலி) திர்மிதி, இப்னு குஸைமா.

குர்ஆன் உயிருடன் இருக்கும் போதே படித்து நேர்வழி பெறுவதற்குத்தானேயொழிய இறந்த பின் மரணித்தவர்களுக்கு குர்ஆனை அஞ்சல் செய்வதற்கு இல்லை.

(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனையுண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப்படுத்துகிறது (அல்குர்ஆன் 36: 70)

குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளிய நோக்கம் நாம் அதைப் படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பது உண்மை. உங்களை மரணம் வந்தடைவதற்கு முன் குர்ஆனை ஓதத் தெரிந்தவர்களிடம் சென்று குர்ஆனை ஓதத் தெரிந்து கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதரர்கள் குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். குர்ஆனைப் படியுங்கள். அதைப்படிப்பது மிகவும் இலகுவானது.

குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆகவே அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜுமதுல் குர்ஆனில் விளங்கிப்படியுங்கள். விளங்காதவற்றை அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள். அதன் படி செயல்படுங்கள்.





இந்த ஆக்கத்தின் கருத்துக்கள் சரியானதுதானா... உங்கள் கருத்தைப் பதியுங்கள்.
இறைவனுடைய வழிகாட்டுதல்களை மக்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள் பலரை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்லாமல்லாமல், அவர்களை துன்புறுத்தியும், அவர்களில் பலரை கொலை செய்ததும், அதுமட்டுமல்லாமல் தாங்கள் செய்த அந்த அநியாய - அநாகரீகச் செயல்களை பிற்கால மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அந்த தீர்க்கதரிசிகள் மீதே கலங்கம் கற்பிக்கும் வகையில் அனைத்து தீர்க்கதரிசிகளையும் ஏதாவது ஒரு வகையில் அசிங்கமாகவும் ஆபாசமாகவும் இன்னும் சொல்லப்போனால் ஒரு சாமானியன் கூட செய்யத்துணியாத செயல்களை எல்லாம் அந்த தீர்க்கதரிசிகள் செய்தார்கள் என்று வரலாற்றைத் திரித்து எழுதியவர்கள் தான் யூதர்கள். அந்த யூதர்களால் சிதைக்கப்பட்டு தங்களுக்கு சாதகமாக கூட்டியும், குறைத்தும், திரித்தும் எழுதப்பட்ட புத்தகங்களின் தொகுப்புகளைத்தான் 'பைபிள்' என்றப் பெயரில், இறைவனிடம் இருந்து வந்த புனித வேதமாக இன்றும் போற்றிவருகின்றனர் யூதர்களும், கறிஸ்தவர்களும்.

இந்த வரலாற்றுத் திரிபுகளின் தொடர்ச்சி தான் புதிய ஏற்பாட்டில் வரும் இயேசுவின் வரலாறும் அதன் பின் நடந்ததாக சொல்லப்படும் சம்பவங்களும்.

இயேசுவைக் கொலைசெய்ய முயற்சித்ததற்கான காரணங்களை பிற்கால மக்கள், யூதர்களை குற்றம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக அவரைப்பற்றி தரக்குரைவாகவும், இன்னும் சொல்லப்போனால் அவர் தன்னை கடவுளின் குமாரனாக காட்ட முயற்சித்தார் என்றும் அவர் யூதர்களை கடுமையாக திட்டித்தீர்த்தார் என்றும் இன்னும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வரலாற்றைத்திரித்ததோடு, அந்த இயேசுவை உயர்வாக மதிக்கக்கூடிய மக்களை, 'இது தான் உன்மையான இயேசுவின வரலாறு' என்று அவர்களை நம்பவைத்து அதையே பின்பற்றவும் வைத்த சூழ்சிக்காரர்கள் தான் இந்த யூதர்கள். (இது சம்பந்தமாக விரைவில் பல ஆதாராங்களுடன் கூடிய ஆக்கங்கள் நமது தளத்தில் இடம் பெறும் இன்ஷா அல்லாஹ்)

இவர்களின் இந்த அபாண்டமான குற்றச்சாட்டுகளை மறுத்தும் - இவர்கள் தங்கள் வேதங்களில் செய்த தில்லுமுள்ளுகளையும், வரலாற்றுத் திரிபுகளையும் மக்களுக்கு வெளிக்காட்டி, சத்தியத்தை எடுத்துச்சொல்ல வந்தது தான் திருக்குர்ஆன் என்னும் இறுதி இறைவேதம்.

இதையே அல்லாஹ் தன் திருமறையில் :

உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். (அல்குர்ஆன் 25 : 1)

இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன் - 3:138)


தன் தாயை (மரியாளை) மதிக்காத இயேசு :

இயேசு என்னும் ஈஸா (அலை) அவர்களின் 'நற்குணங்களில் ஒன்றை' திருக்குர்ஆன் பின்வருமாறு பறைசாற்றுகிறது :

'என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்). நற்பேறு கெட்டபெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. (குர்ஆன் - 19:32)

குர்ஆன் இந்த ஒரே வசனத்தில் இயேசுவின் இரு நற்குணங்களை பறைசாட்டுகிறது.

1. தாயாருக்கு நன்றி செய்வார்.
2. கெட்ட பெருமைக்காரனாக இருக்கமாட்டார்

இவ்வாறு தனது தாயை மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் மதிக்கக்கூடியவராகத்தான் இயேசு இருந்துள்ளார் என்பதை திருக்குர்ஆன் உலகுக்கு எடுத்துரைக்கின்றது.

ஆனால் நான்கு நபர்களால் இயேசுவின் வரலாற்றை எழுதியதாக சொல்லப்படும் பைபிலோ அவர் தாயை மதிக்காதவர் மட்டுமல்லாமல் திருக்குர்ஆன் எந்த இரண்டு குணங்கள் அவரிடம் இருந்ததாக சொன்னதோ அந்த இரு குணங்களும் அறவே இல்லாதவர் என்றே நிரூபிக்க முற்படுகின்றது. இதை சகோதரார் எம். எம். அக்பர் அவர்கள் சுருக்கமாக எழுதியதற்கு மறுப்பாக, இயேசுவை மதிக்கிறோம்(?) என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்கிற 'உன்மையடியான்' என்பவர் யூதர்களுக்கு ஆதராவாக எகிரி குதிக்கின்றார். இயேசு நாதர் தன் தாயை மதித்தார் என்று நிரூபிப்பதற்காக படாது பாடு படுகிறார். இயேசு நாதர் அவர் தாயை அவமதித்த சம்பவம் அந்த யோவான் 2:1-8ம் வசனம் மட்டும் தான் வந்துள்ளது என்றால் கூட நாம் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் இயேசுவையும் அவர் தாயையும் பற்றி பைபிளில் வரும் பல வசனங்களில் அவர் ஒரு இடத்திலும் அவரை மதித்ததாக தெரியவில்லை. இயேசுநாதர், தன் தாயை மதிக்காதது மட்டுமல்லாமல் அவரை பார்க்கும் நேரமெல்லாம் உதாசீனப்படுத்தியும் - அந்தப்பரிசுத்தமான தன் தாயை 'ஸ்திரியே' அதாவது 'பெண்ணே' என்று ஒரு மாற்றார் வீட்டு பெண்மனியை அழைப்பது போல் தான்; அழைத்தார் என்று கூறுகிறது. அவர் ஒரு இடத்தில் கூட மரியாளை 'தன் தாய்' என்று கூறியதாக பைபிளில் கிடையாது.

பைபிளின் மத்தேயு 12 : 50 - 56 வரை வரும் வசனங்களில் :

இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள். அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார். - மத்தேயு 12 : 56 - 50

மேற்குறிப்பிட்டுள்ள வசனங்களில் இயேசுவை அவரைப் பெற்றெடுத்த தாய் மரியால் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள்வைக்கின்றார். அதற்கு அவர் அளித்த பதிலுக்கும், தாயை மதித்தலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா? பொதுவாகவே ஒருவனுடைய தாய் எப்படிப்பட்ட கெட்டகுணம் உடையவராக இருக்கட்டும். எவ்வளவு மோசமானவராக கூட இருக்கட்டும். அதற்காக தன்னை பல கஷ்டங்களை அனுபவித்து பெற்றெடுத்த தாயுக்கு செய்யும் நன்றி உபகாரம் இப்படித்தான் இருக்குமா? இது தான் தாயை மதிக்கும் லட்சனமா? வெளியே நின்றுக்கொண்டு பார்க்க வேண்டும் என்று அனுமதிகேட்ட தாய்க்கு, இயேசு எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் இப்படி பதில் அளிப்பது தான் மரியாதையா?

அதுவும் மரியாள் என்ற அந்த பரிசுத்த பெண்மணி, ஏதோ உங்கள் தாய் என் தாய் போன்ற சாதாரன பெண்மணியா? அவருடைய தியாகம் என்ன சாதாரண தியாகமா? புரோகிதமும், மூடநம்பிக்கைகளும் புரையோடிப்போயிருந்த அன்றைய காலத்தில் திருமணமே முடிக்காத ஒரு கண்ணிப்பெண், இறைவனின் கட்டளைப்படி ஒரு குழந்தையை பெற்றெடுத்து அதை சமூகம் அங்கீகரிக்க என்ன பாடு பட்டிருப்பார்கள்? எவ்வளவு துன்பங்களை அனுபவித்திருப்பார்கள்? என்று யோசித்து பாருங்கள். இந்த மரியாள் என்ற மரியம் (அலை) அவர்களின் தியாகத்தைப் பெருமைப்படுத்தும் விதமாக நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: 'உலகிலேயே மிகச் சிறந்த இரண்டு பெண்மணிகளில் ஒருவர் மரியம் (அலை) என்று புகழ்ந்துரைத்தார்கள் (நூல் : புஹாரி) அப்படிப்பட்ட அற்புதமான தாயை -தியாகத்தின் மறுஉருவத்தை இயேசு இப்படித்தான மதித்திருப்பாரோ?

அடுத்து பைபிளின் யோவான் 2 : 1-8 ல்:

மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது. இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு 'ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை' என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள். யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார். அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார். அவர்கள் கொண்டுபோனார்கள்.

இந்த வசனத்திலும் இயேசுவிடம் அவரது தாய் ஒரு வேண்டுகோள் வைக்கின்றார். அதற்கு அவர் பதிலாக 'செய்கிறேன்' என்று சொல்லியிருந்தால் மரியாதை எணலாம். ஆனால் அதற்கு அவர் கொடுக்கும் பதிலென்ன? 'ஸ்த்ரியே' அதாவது பெண்னே - 'உனக்கும் எனக்கும் என்ன?' என்கிறார் என்றால் இதில் எங்கே மரியாதை இருக்கின்றது? சகோதரர் உன்மையடியான் 'ஸ்தியே' என்ற வார்த்தைக்கு பக்கம் பக்கமாக விளக்க அளித்தவர் அதற்கு அடுத்து வரக்கூடிய வாசகத்தில் தியாகத்தின் மறுஉருவமான பரிசுத்த மரியளை அதட்டும் விதமாக - முகத்தில் அறைந்தார்போல் 'உனக்கும் எனக்கும் என்ன' என்று பதில் அளித்துள்ளாரே, அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையோ? அந்த வார்த்தையை மட்டும் உங்கள் எழுத்துக்களில் அப்படியே மறைத்துக்காட்டுவதன் நோக்கம் என்ன?

//அதற்கு பதிலாக இயேசு ஸ்திரியே என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்கிறார்கள். இதை பைபிள் வசனங்கள் கொண்டு படியுங்கள், இதில் இயேசு மரியாளை எங்கு அவமதித்துள்ளார் என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள்.//

//பெண்ணே என் வேளை இன்னும்வரவில்லை, நான் எப்போது அற்புதங்கள் செய்யவேண்டும், எப்போது செய்யக்கூடாது என்று எனக்கு தெரியும். இறைவன் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் இப்படி மனிதர்களின் இடையூறு தேவையில்லை என்ற தோரணையில் இயேசு பதில் அளிக்கிறார். இதில் எந்த தவறும் இல்லை. இதே போல பல சந்தர்பங்களில், இயேசு என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்லியுள்ளார் (யோவான் 7:6, 8, 30, 8:20) //

உன்மையடியான் தனது கட்டுரையில் இடையிலே வரவேண்டிய அந்த 'உனக்கும் எனக்கும் என்ன?' என்று இயேசு திமிர்தனமாக பேசியதாக சொல்லப்படும் அந்த வாத்தைகளை அழகாக நழுவிட்டுள்ளதற்கான காரணம் என்ன? இவருடைய மனசாட்சிக்கே உறுத்தியதால் தானே இந்த தந்திர வேலை இவர் செய்துள்ளார்?

இப்படி 'உனக்கும் எனக்கும் என்ன' என்று கூறி தன் தாயை ஊர் மக்கள் கூடிஇருக்கின்ற திருமன சபையில், அங்கே வந்துள்ள அத்தனைப் பேருக்கும் முன்பாக - இப்படி எதிர்த்து பேசி மரியாளை அவமரியாதை செய்தவர்தான் இயேசு என்கின்றனர் பைபிள் எழுத்தாளர்கள். இது தான் தாயை மதித்தவர் என்பதற்கான அடையாளமா? இப்படித்தான் ஒவ்வொருவரும் தனது பெற்றோரை எல்லோருக்கும் முன்பாகவும் அசிங்கப்படுத்தி மதிக்க வேண்டும் (?) என்று இயேசு கற்றுத்தருகிறாரா?

அது மட்டுமல்ல உண்மைஅடியான் 'ஸ்திரி' என்பது ஒன்றும் மரியாதைக்குறைவான வார்த்தை இல்லை என்று கூற முயற்ச்சிக்கின்றார். ஆனால் இதே இயேசு அதே 'ஸ்த்ரி' என்ற வார்த்தையை பலருக்கும் பயன்படுத்தியது போல் 'விபச்சாரி' ஒருவருக்கும் பயன்படுத்துகிறார். (பார்க்க யோவான் - 8 : 10) அந்த விபச்சாரிக்கு என்ன வார்த்தையை பயன் படுத்தினாரே அதே 'ஸ்த்ரி' என்ற வார்த்தையைத் தான் தனது பரிசுத்த தாயுக்கும் பயன் படுத்தினார் என்பதையும் இதன் மூலம் 'ஸ்த்ரி' என்றுக்கூறி மற்ற பெண்களையள்ள தன் பரிசுத்த தாயை அவமதித்ததாகத்தான் பைபிள் கூறுகின்றது.

இப்படி தன் தாயை எந்தவிதத்திலும் மதிக்காதவராகவே பைபிளில் இயேசு காட்டப்படுகிறார். யூதஎழுத்தாளர்கள் இப்படித்தான் அவரைக் காட்ட முயற்ச்சிக்கின்றனர். தன் தாயை மட்டுமல்ல ஒட்டு மொத்த தாய் வர்க்கத்தையே மதிக்கதவராகவும், கோபக்காரராகவும், பெருமைக்காரராகவும் தான் யூதர்களால் எழுதப்பட்டு பைபிளில் இயேசுவைப் பற்றி காட்டப்படுகிறது.

அடுத்தவன் பெற்றோர்களையும் மதிக்காதவரா இயேசு?

பைபிளில் இயேசுவிடம் பரிசேயர்கள் ஒரு அடையாளத்தை கேட்கின்றார்கள். அதை மத்தேயு பின்வருமாறு சொல்கிறார் :

'இந்தப் பொல்லாத 'விபசார சந்ததியார்' அடையாளம் தேடுகிறார்கள் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களை விட்டுப் புறப்பட்டுப்போனார். மத்தேயு 16 : 3-4

இங்கே யூதர்களைச் சேர்ந்த பரிசேயர்கள் இயேசுவிடம் அடையாளத்தை காட்டும் என்று கூறுகிறார்கள். அதற்கு இயேசு அந்த யூதர்களின் மேல் எரிச்சலடைந்து யூதர்களைத் திட்டாமல் யூதர்களின் தாய்மார்களைத் திட்டுகிறார். அதில் வரக்கூடிய வாசகம் 'விபச்சார சந்ததியர்' இதை நம்ம தமிழ் பைபிள் மொழிப்பெயர்பாளர்கள் கொஞ்சம் 'டீசன்டாக' மொழிபெயர்த்துள்ளனர், தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக.

ஆனால் இயேசு திட்டியதாக சொல்லப்படும் அந்த வார்த்தையின் நேரடி மொழிப்பெயர்ப்பு என்ன?

பொல்லாத விபச்சார சந்ததியினர் = கெட்ட வேசிமக்கள் = கெட்ட வேசிபிள்ளைகள் = கெட்ட வேசி சந்ததியினர் = கெட்ட தேவ்டியா மக்கள் = கெட்ட தேவ்டியா பிள்ளைகள்

அதவாது 'இந்த கெட்ட வேசிமக்கள் - தேவ்டியாமக்கள்' அடையாளத்தை தேடுகிறார்கள் ...'

இப்படிப்பட்ட கேவலமான - இன்றைய ரௌடிகளும், பொருக்கிகளும் உபயோகப்படுத்தும் வாத்தைகளைத் தான் பரிசுத்த இயேசு பயன்படுத்தினார் என்று சொல்கிறது பைபிள்.

இப்படித் திட்டுவது தான் பெற்றோர்களையும் - தாய்மார்களையும் - அடுத்தவன் குடும்பத்தினரையும் மதிக்கும் லட்சனமா? அடுத்தவன் தாயை இப்படி விபச்சாரி என்றுத் திட்டலாமா? தன்னிடம் வம்புக்கு வரும் ஒருவனைப்பார்த்து 'நாயே' 'பேயே' என்றால் அவனை மட்டும் திட்டுவதாக அமையும். அதற்கு பதிலாக அவனது தாயை திட்டுவது எந்த வித்தில் நியாயம்? அவன் தாய் என்ன செய்தார்? இப்படித்திட்டினால் எவனுக்கு கோபம் வராது?
உலகத்திலேயே ஒரு புனித வேதத்தில் 'பொள்ளாத விபச்சார சந்ததியினர்' - 'கெட்ட தேவ்டியா மக்கள்' என்று ஒரு பரிசுத்தர் கூறிய வார்த்தை வருகிதென்றால் அந்த சிறப்பு பைபிளை மட்டுமே சாரும்.

இப்படிப்பட்ட அநாகரீக செயல்களைக் குறித்து குர்ஆனின் படி இயேசுவின் வழியில் இறுதியாக வந்த நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் உலகமக்களுக்கு கற்றுத்தரும் ஒழுக்கத்தைப் பாருங்கள் :

'தன்னுடைய பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய போது 'மனிதன் தன்னுடைய பெற்றோரைத் திட்டுவானா?'' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு ''ஆம்! ஒருவன் மற்றொருவனுடைய தந்தையைத் திட்டுகிறான்;. அவன்(பதிலுக்கு) இவனுடைய தந்தையைத் திட்டுகிறான். அதற்கு அவன் இவனுடைய தாயைத் திட்டுகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

இது போண்ற ஒழுக்கத்தை சொல்லக்கூடியவராகவும், அதை செயல்படுத்தக்கூடியவராகவும் தான் இயேசுவும் இருந்திருப்பார்கள் - இருந்திருக்க வேண்டும். அதை முஸ்லீம்களாகிய நாங்கள் உறுதியாக நம்புகிறோம். குர்ஆன் அவரை நல்லோர்களில் ஒருவர் என்று கூறுகிறது. ஆனால் பைபிளோ அவரையும் அவரைப்போண்ற தீர்க்கதிரிசிகளையும் மிக மிக மோசமானவர் என்பது போல் காட்டுகிறது.

தந்தையின் மரணத்திற்கு செல்லக்கூடாது என்று தடுத்த இயேசு:

அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். - மத்தேயு - 8 :21 - 22

ஒருவனுடைய தகப்பன் இறந்திருக்க, அவன் தன் தகப்பனை இறுதியாகப் பார்த்து விட்டு அவரை அடக்கம் பண்ணிவிட்டு வரவா? என்று கேட்டதற்கு, அதை தடுக்கின்றார் என்றால் இவர் எப்படிப்பட்ட அப்பட்டமான மனித உரிமை மீறலை செய்திருக்கின்றார் என்று புரிந்துக்கொள்ளுங்கள். சாதாரனமாகவே ஒருவர் இறந்து விட்டால் மற்றவர் அதற்கு உரிய அனைத்து உதவிகளும் செய்யவேண்டும் என்பது சாதாரண சாமானியனும் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒரு நியதி. ஆனால் இந்த உலகத்திற்கே நல்வழிக்காட்ட வந்தவர் தன் தகப்பனுடைய மரனத்திற்கு கூட செல்லாதே என்று தடுக்கின்றார் என்றால், இயேசு அவர்களை பைபிள் எவ்வளவு கீழ்தரமானவராக சித்தரிக்கின்றது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

இயேசு அவர்களை தாயை மதிக்கக்கூடியவராக, தற்பெருமையற்றவராக, மிகுந்த ஒழுக்கசீலராக காட்டுகிறது திருக்குர்ஆன். ஆனால் பைபிளோ இவை அனைத்திற்கும் மாற்றமாக நடந்தவர்தான் என்று கூறுகிறது. இதை கிறிஸ்தவ சகோதரார்களும், மாற்று மத அன்பர்களும் சற்று சிந்திக்க வேண்டும்.


இந்த ஆக்கத்தின் கருத்துக்கள் சரியானதுதானா... உங்கள் கருத்தைப் பதியுங்கள்.
இஸ்லாம் சந்தித்து வரும் இடுக்கண்கள், இஸ்லாம் எதிர் கொண்ட சவால்கள், அதற்கான தீர்வுகள் இத்யாதிகள் அனைத்தும் உலகம் அறிந்ததுதான். இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மரணம் அடைந்த சம்பவம், வரலாற்றுக் குறிப்பேடுகளில் மிகத் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் இயற்கையாக மரணமடைந்தார்கள் என்பதில் இரண்டு கருத்துகள் இல்லை. ஆயினும், நபி (ஸல்) அவர்கள் விஷம் வைத்த உணவை உண்டதால் மரணமடைந்தார்கள் என வரலாற்றில் இல்லாத - சம்பந்தமே இல்லாத செய்தி பரப்பப்படுகிறது. எனவே நபி (ஸல்) அவர்களின் இயற்கை மரணம் பற்றி இங்கு காண்போம்.

ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நபிமார்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் வழியாக மனித சமுதாயத்துக்கு இஸ்லாம் எனும் இறை மார்க்கத்தின் போதனைகைளை வழங்கினான் இறைவன். நபிமார்கள் போதித்த நல்லுபதேசங்கள் புறக்கணிக்கப்பட்டதோடு, சில நபிமார்கள் கொலையும் செய்யப்பட்டார்கள். (பார்க்க: திருக்குர்ஆன் வசனங்கள், 002:061,091. 003:021,112,181. 004:155. 005:070)

நபிமார்களின் அறவுரைகளைப் புறக்கணித்ததும், போதித்த நபிமார்களைக் கொலை செய்ததும் ஏன்? என்றால் மனித மனம் விரும்பாததை போதித்தாலேயே நபிமார்கள் கொலை செய்யப்பட்டார்கள்! என்று திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறது. மனம் விரும்பியதையெல்லாம் செய்பவருக்கு, அவரின் செயலால் பிறருக்கான உரிமைகள் பறிக்கப்படுகின்றன, பிறருக்குத் தீங்கிழைக்கப்படுகின்றன என்பதை உணர்த்தினால் அது பிடிப்பதில்லை. அவர் அறிவு அதை விரும்புவதுமில்லை. காரணம்: தன்னலம் மட்டுமே பிரதானமாகக் கருதுவது, பிறர் நலத்தில் அக்கறை கொள்ளாமல் இருப்பது.

இவ்வாறு மன இச்சைப்படி வாழ்க்கையை அமைக்க வேண்டாம் என்றே நபிமார்கள் வழியாக இறைவன் போதனைகளை வழங்கினான். ஆனால், மன இச்சையைப் பிரியர்கள், நல்லறங்களைப் பிரச்சாரம் செய்த நபிமார்களை அநியாயமாகக் கொலை செய்தும் தொடர்ந்து மன இச்சையிலேயே நீடித்தார்கள்.

சர்வ வல்லமை படைத்த இறைவன் தன்னடியார்களான மனிதர்களுக்கு நேர்வழியையும், ஆதாரங்களையும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெள்ளத் தெளிவென தக்க அத்தாட்சிகளுடன் இறைத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து மார்க்கப் பிரச்சாரப் பணிகளை அவர்கள் வழியாக நிறைவேற்றினான். இந்த வரிசையில் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தூதுப் பணி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முந்திய நபிமார்கள் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டது போல், முஹம்மது (ஸல்) அவர்களையும் கொலை செய்வதற்கான திட்டங்கள் எதிரிகளால் வகுக்கப்பட்டது.

(நபியே) உம்மைச் சிறைப்படுத்தவோ, உம்மைக் கொலை செய்யவோ, (ஊரை விட்டு) உம்மை வெளியேற்றவோ நிராகரிப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் செய்கின்றனர், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வதில் அல்லாஹ் சிறந்தவன். (திருக்குர்ஆன், 008:030)

நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் மக்காவில் பிரச்சாரம் செய்தபோது, மக்கா நகரின் பெரும் தலைவர்களெல்லாம் இஸ்லாத்தை எதிர்த்து தமது விஷமத்தனைத்தை வெளிப்படுத்தினார்கள். நபியவர்களின் தந்தையின் சகோதரர் அபூதாலிப் குரைஷிகளின் செல்வாக்கு மிக்கத் தலைவராக விளங்கியதால் நபி (ஸல்) அவர்களை எளிதாக நெருங்க முடியவில்லை

அபூதாலிபின் மரணத்திற்குப் பின் மக்காவில் இஸ்லாத்தை எதிர்த்தவர்களின் தொல்லைகள் அதிகரித்தது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு மதீனாவிலிருந்து அன்சாரித் தோழர்களின் ஆதரவு கிடைத்தது. நபி (ஸல்) அவர்களை எப்படியும் கொலை செய்திட - வேண்டும் என குரைஷித் தலைவர்களும், தலைவரின் கட்டளைக்குக் கட்டுப்பட்ட மக்களும் - கொலை வெறியுடன் அலைந்தார்கள். இன்று இரவு முஹம்மதை கொன்று விட வேண்டும் என்ற எதிரிகளின் திட்டம் அவர்கள் எதிர்பாரா அளவுக்கு முறியடிக்கப்பட்டது.

மக்காவைத் துறந்து மதீனாவுக்கு புறப்பட்ட தருணத்திலும் நபியவர்கள் பேராபத்துகளைச் சந்தித்தார்கள். வரலாற்றில் இச்சம்பவம் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. முஹம்மது தப்பித்து விட்டார் என்ற செய்தி பரவியவுடன் குரைஷித் தலைவர்கள் மிகுந்த ஆத்திரமடைந்து முஹம்மத், அபூபக்ர் இருவரில் ஒவ்வொருவரின் தலைக்கும் நூறு ஒட்டகங்கள் பரிசளிக்கப்படும் என பறைசாற்றினார்கள். அவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ யார் மக்காவுக்கு கொண்டு வருகிறார்களோ அவருக்கு இந்தப் பரிசு என்றும் அறிவிக்கப்பட்டது. (புகாரி)

இதனால்,கால்நடை வீரர்கள், குதிரை வீரர்கள், காலடித் தட நிபுணர்கள் என நபி (ஸல் அவர்களையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் மலைகள், பாலைவனங்கள் காடுகள் பள்ளத்தாக்குகள் என சல்லடை போட்டுத் தேட ஆரம்பித்தனர்.

எதிரிகளின் தேடல் நேரத்தில் நபியவர்களும், அபூபக்ரும் ஃதவ்ர் குகையில் இருந்தனர். அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ''நான் நபி (ஸல்) அவர்களுடன் குகையில் தங்கியிருந்தபோது எனது தலையை உயர்த்திப் பார்த்தேன். அப்போது எதிரிகளின் பாதங்கள் தெரிந்தன, நான் அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் யாராவது தங்களது பார்வையைத் தாழ்த்தினால் நம்மை பார்த்து விடுவார்களே'' என்று கூறினேன். ''அபூபக்ரே! கவலைப்படாதீர்! நம் இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நிராகரிப்போர் இவரை இருவரில் ஒருவராக வெளியேற்றி போதும், அவ்விருவரும் அக்குகையில் இருந்த போதும், ''நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்'' என்று அவர் தம் தோழரிடம் கூறியபோதும் அவருக்கு அல்லாஹ் உதவியிருக்கிறான். அமைதியை அவர் மீது இறக்கியிருக்கிறான். நீங்கள் பார்க்காத படைகளை கொண்டு அவரைப் பலப்படுத்தினான். (திருக்குர்ஆன், 009:040)

இஸ்லாம் மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்த முந்திய நபிமார்களை கொலை செய்தது போல் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை எவராலும் கொலை செய்ய முடியவில்லை! காரணம்: ஏனைய நபிமார்களை விட முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட பல சிறப்பம்சங்களில் மனிதர்களால் அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்திட முடியாது என்று நபியவர்களின் உயிருக்கு உத்திரவாதம் வழங்கியிருந்தான் இறைவன்.

''தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச் செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான்'' (திருக்குர்ஆன், 005:067)

மக்களோடு மக்களாக சாதாரணமாக வாழ்ந்த மாபெரும் தலைவாரக நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். நபியவர்கள் பாதுகாப்பு அரண் எதுவும் அமைத்துக் கொள்ளவில்லை. அப்படியிருந்தும் எதிரிகளின் சூழ்ச்சிகளால் நபியவர்களை கொல்ல முடியவில்லை.

விஷம் வைத்த சம்பவம்.

கைபர் போர் முடிவில் யூதர்கள் விஷம் கலந்த ஆட்டிறைச்சியை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். விஷம் கலந்த இறைச்சியை உண்ட நபித்தோழர் பிஷ்ர் பின் பாரா (ரலி) இறந்து விடுகிறார். நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. விஷத்தால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏனென்றால், மனிதர்களிடமிருந்து நபியை காப்பாற்றுவான் என்று இறைவன் வாக்களித்திருக்கிறான். அதனால் எந்த கொம்பனாலும் நபியவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்திட முடியாது. விஷத்தாலும் நபியவர்களை கொல்ல முடியாது!

ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு கைபர் போர் நடந்தது. இந்தப் போர் சம்பவத்தையொட்டியே யூதப் பெண்ணால் விஷம் வைத்த விருந்தும் வைக்கப்படுகிறது. நபி (ஸல்) அவர்கள் விஷம் சாப்பிட்டதால் மரணமடைந்தார்கள் என்பது உண்மையானால் அவர்கள் விருந்து சாப்பிட்ட இடத்திலேயே மரணமடைந்திருக்க வேண்டும். விஷ விருந்தை சாப்பிட்ட நபித்தோழர் சம்பவ இடத்திலேயே மரணித்திருக்கிறார். நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 10ம் ஆண்டு கழிந்து, ஹிஜ்ரி 11ம் ஆண்டு ஸஃபர் மாதத்தில் மரணமடைந்தார்கள்.

இதற்கிடையில்...

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக: (வானவர்) ''ஜிப்ரீல் என்னை ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதச் செய்து வந்தார்கள். இந்த ஆண்டு மட்டும் அவர்கள் என்னை இரு முறை ஓதச்செய்தார்கள். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்து விட்ட (தைக் குறிப்ப) தாவே அதை நான் கருதுகிறேன்'' என்று தெரிவித்தார்கள். (புகாரி) இது ஹிஜ்ரி 10ம் ஆண்டு ரமதான் மாதம் நடந்த சம்பவம்.

ஹிஜ்ரி 10ம் ஆண்டு ஹஜ்ஜின் போது,

''நீங்கள் உங்களது ஹஜ் கடமைகளை (என்னிடமிருந்து) கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான், எனது இந்த ஹஜ்ஜிற்குப் பிறகு ஹஜ் (செய்வேனா) மாட்டேனா என்பதை அறிய மாட்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிக்கொண்டிருந்தார்கள். (முஸ்லிம்)

மதீனா பள்ளியில் மிம்பரில் ஏறி, ''நான் உங்களுக்கு முன் செல்கிறேன். உங்களுக்கு சாட்சியாளனாக இருப்பேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இன்னும் இதுபோல் நபியவர்களின் பல இறுதி உபதேசங்கள், நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகை பிரியும் வேளை நெருங்கி, அவர்களது மரணச் செய்தி நபியவர்களுக்கு அறிவிக்கப்பட்டது என்பதை உணர்த்துகிறது.

''இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்'' (திருக்குர்ஆன், 005:003)

இஸ்லாம் நிறைவடைந்து, தூதுப் பணியும் பூரணமாக நிறைவுப் பெற்று இனி, இறைத்தூதரின் பிரச்சாரப் பணிக்கு அவசியமில்லை என்ற நிலையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உயிரை இறைவன் கைப்பற்றினான்.

நபி (ஸல்) அவர்கள் விஷம் சாப்பிட்டதால் மரணமடைந்தார்கள் என்று பிற மத நண்பர்கள் கூறுவது வெறும் கட்டுக் கதை!



இந்த ஆக்கத்தின் கருத்துக்கள் சரியானதுதானா... உங்கள் கருத்தைப் பதியுங்கள்.
மனிதன் பொதுவாகவே ஒரு கஷ்டமான காரியத்தை முடித்த மற்றொருவனைப் பார்த்து இந்த வேலையை இவன் இவ்வளவு கஷ்டப்பட்டுச் செய்திருக்கிறான். அதனால் அவனுக்குப் பலன் அதிகம். அவன் நிச்சயமாக உழைப்பாளிதான். அவன் கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் நடந்திருக்கிறான். வாகனம் இருந்தும் அவன் நன்மை நாடி நடந்துள்ளான். நடந்து செய்யும் இவ்வமலில் தான் கஷ்டத்தை உணரவேண்டும் என்பதற்காக நோன்பில்லா விட்டாலும் உண்ணாமலும், நீரருந்தாமலும் பசியுடன் நடந்துள்ளான். நிழலில் நடக்காது வெய்யிலில் தலைதிறந்து நடந்துள்ளான். அவனது பக்தி எங்களுக்கு வருமா!? ஆச்சரியத்தோடு கேள்வி கேட்கும் மக்கள் கூட்டத்தை இந்த 21ம் நூற்றாண்டிலேயும் பார்க்கிறோம்.

இதுமட்டுமல்ல, இன்னும் பலர் அதிகமாகக் கஷ்டப்பட்ட அளவிற்கு கூடுதலான நன்மைகள் கிடைக்கும் என்று நினைத்து அல்லாஹ் எங்களுக்கு அளித்திருக்கக் கூடிய சலுகைகளைக் கூட ஒதுக்கி விடுபவர்களைப் பார்க்கிறோம். வாகன வசதியிருக்கும்போது வேண்டுமென்றே நடந்து செல்வது. நடந்து செல்வதற்கும் தூர வழியைத் தெரிவு செய்வது. தங்குமிட வசதிகளில் கஷ்டமானதைத் தெரிவு செய்வது. இப்படி எந்தவொரு செயலை எடுத்துக் கொண்டாலும் அதில் கஷ்டமானதையே செய்ய முன்வருவது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு காரியத்தைச் செய்யும் போது அந்தக் காரியம் எளிதான முறையில் செய்வதற்கு முடியுமானதாக இருந்தால் அந்த வழியையே தெரிவு செய்தார்கள். ஹஜ்ஜின் போது அவர்கள் ஒட்டகை மீதே பயணம் செய்திருக்கிறார்கள்.

அல்லாஹ் கூறுவதைப் பின்பற்றுபவர்கள் வழிதவறி விட மாட்டார்கள்:
நீர் கஷ்டப்படுவதற்காக குர்ஆனை உம்மீது நாம் இறக்கவில்லை. (அல்-குர்ஆன் 20:1)

அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான், அவன் உங்களுக்குச் சிரமத்தை நாடவில்லை. (அல்-குர்ஆன் 2:185 வசனத்தின் ஒரு பகுதி)

இந்தக் குர்ஆன் வசனங்களுடன் நாம் கவனத்திற்கெடுக்க வேண்டிய ஒரு ஹதீஸைப் பார்ப்போம்:

ஒரு முதியவர் தமது இரண்டு புதல்வர்(கள் தம்மைத் தோள்களில் தாங்கிக் கொண்டிருக்க, அவர்)களிடையே தொங்கியபடி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்ததைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''இவருக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். ''(கஅபா வரை) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்!'' என்று மக்கள் கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ''இவர் தம்மை இவ்விதம் வேதனைப் படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது!'' என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு. நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

நம்மைப் படைத்து நமது வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் நமக்கு வசமாக்கித் தந்திருக்கிறான். அப்படி வசமாக்கித் தந்திருப்பது ஏன் என்ற சிந்தனை கூட இல்லாமல் இன்று நாம் நடந்து கொண்டிருக்கிறோம்.

ஹஜ்ஜுடைய காலம் நெருங்கி வரும்போது நமது சமூகத்திலே இப்போதெல்லாம் விளம்பரங்கள் போட்டி போட்டுக் கொண்டு வெளியாகின்றன.

முன்பெல்லாம் ரமளான் நெருங்கும்போது ரமளான் கலண்டர்கள் வந்து விடும். இப்போதோ அதையும் முந்திக் கொண்டு ஹஜ் விளம்பரங்கள். குளிரூட்டப்பட்ட வாகன வசதி, கட்டில்களோடு குளிரூட்டப்பட்ட அறை வசதி இப்படி வசதிகள் எல்லாம் விளம்பரத்திலே இருக்கும்.

ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் ஜித்தா விமான நிலையத்தை அடைந்த பின் அவர்களுக்கு 'பயான்' நிகழ்ச்சி நடைபெறும்.

அதிலே விசேடமாகச் சொல்லப்படுவது அந்த விளம்பரத்திலிருந்ததற்கு நேர்மாற்றமான செய்திகள்தான். கஷ்டப்பட்ட அளவிற்கு நன்மைகள் கிடைக்கும் என்பதுதான் அதன் சாரமாகவிருக்கும். குறைபாடுகளைப் பற்றிப் பேசக்கூடாது. அவற்றைப் பற்றித் தர்க்கிக்கக் கூடாது இப்படி அறிவுரைகள்.

இவற்றைக் கேட்கக் கூடியவர்களிலே சிலர் அதை அப்படியே நம்பி தாம் தங்கியிருக்கக் கூடிய இடம்; எவ்வளவு தூரத்திலிருந்தாலும் அதை அப்படியே ஏற்று அந்தத் தூரத்தை நடந்தே செல்வார்கள். கொழுத்த இலாபத்தை நோக்காகக் கொண்ட முகவர்களுக்குக் கொண்டாட்டம்தான்.

எந்த எந்த வசதிகளைப் பொருந்திக் கொண்டு முகவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்பவர்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டார்களோ அந்தந்த வசதிகளைக் கட்டாயமாகச் செய்து கொடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். ஏனென்றால், அதுதான் நடந்து முடிந்த வியாபாரத்தின் நிபந்தனை. அப்படியல்லாது, அவர்கள் புதுப் போதனைகள் செய்து, முடிந்து விட்ட வியாபார ஒப்பந்தத்தின் விதிகளை மீறுவார்களானால் அவர்கள் இரண்டு பிழைகளைச் செய்கிறார்கள்:

1. 'பக்தி'வசப்பட்டுள்ளவர்களின் மனோ நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு மார்க்கம் என்ற போர்வையில் உபதேசம் செய்வதன் மூலம் மார்க்கத்தைச் சொற்பக் கிரயத்திற்கு விற்கிறார்கள். (தமது குறைபாடுகளை சுட்டிக்காட்டி புதிய வியாபார ஒப்பந்தத்திற்குப் பதிலாக கஷ்டத்தினால் ஏற்படக் கூடிய நஷ்டம் வாங்கியவருக்குத் திணிக்கப்படுகிறது.)
2. வியாபார ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை விற்பவர் மீறுகிறார்.

இந்த வியாபாரத்தினால் கிடைக்கும் இலாபம் ஹலாலானதா அல்லது ஹராமானதா என்பதை தீர்மானிப்பதற்கு ஒரு சாதாரண முஸ்லிமுக்கு இருக்கக் கூடிய அறிவு போதுமானது.

இனி தலைப்புக்கு வருவோம்.

உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
என் சகோதரி கஅபா வரை நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். அவர், இதுபற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தீர்ப்புப் பெறும்படி எனக்கு உத்தரவிட்டார். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் விளக்கம் கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''அவர் (சிறிது தூரம்) நடந்து விட்டு வாகனத்தில் ஏறிக் கொள்ளட்டும்,'' என்றார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி)

இந்த சம்பவங்களிலிருந்து முஸ்லிம்கள் படிக்க வேண்டிய பாடம் என்ன என்பது மிகவும் தெளிவானது. அல்லாஹ் தேவையற்றவன். அவனுடைய திருப்தியைப் பெறுவதற்காக கஷ்டப்படக் கூடிய நேர்ச்சைகள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இஸ்லாம் மனிதனுக்கு எளிமையான வாழ்க்கையையும் இலகுவான நடைமுறைகளையும் வகுத்துத் தந்திருக்கிறது. இஸ்லாம் நடுநிலைமையான அமைப்பில் இருந்து கொண்டுதான் நற்செயல்களைக் கூடச் செய்ய வேண்டும் என்பதை எப்போதும் உணர்த்திக் கொண்டிருக்கிறது.

தொழுகை என்ற கடமையில் அல்லாஹ் தந்திருக்கக் கூடிய சலுகைகளைக் கவனிக்கும் போது கஷ்டப்பட்டுத்தான் நல்லமல்களைச் செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கே இஸ்லாத்தில் இடமில்லை.

வுளுவுக்குப் பதிலாக தயம்மும் செய்வது.
வுளுவின் போது காலுறைக்கு மேல் மஸ்ஹு செய்வது.
பெருமழையின் போது பள்ளியில் மஃரிப் தொழுகையுடன் இஷாத் தொழுகையையும் சேர்த்துத் தொழுவது.
பெருமழையின் போது வீடுகளிலேயே தொழுது கொள்ளும்படி அறிவித்ததன் மூலம் அனுமதியளித்தது.
பிரயாணத்தின் போது சேர்த்து, சுருக்கித் தொழுவதற்குள்ள அனுமதி.

இப்படி எத்தனையோ சலுகைகளை இஸ்லாம் எந்தக் கடமையை எடுத்துக் கொண்டாலும் அக்கடமையில் தந்திருக்கிறது. இவற்றின் உண்மையான அர்த்தம் என்ன என்று சிந்தித்தால் தெளிவு வரும்.

இன்று இஸ்லாமியர்கள் மத்தியில் பக்தி என்ற போர்வையில் பெரியார்கள் என்ற ஊர், பெயர் தெரியாத சந்நியாசிகளைப் பற்றிய கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. கஷ்டப்பட்ட அளவிற்கு பலன் உண்டு என்பதைப் போதிக்கத்தான் இந்தக் கதைகள். அப்படிப்பட்ட போதனைகள்தான் மற்றவனைச் சுரண்டி வாழ்வதற்கு பக்கபலமாக இருந்து கொண்டிருக்கிறது.

இந்தக் கதைகளுக்கும் நம்மைச் சூழவுள்ள மாற்றுமதத்தவர்களிடையே உள்ள அவர்களுடைய நம்பிக்கைகளுக்கும் வித்தியாசம் இல்லை.

அவர்கள் ஒரு நம்பிக்கையைத் தம் கடவுளோடு சம்பந்தப்படுத்திக் கூறும் போது, முஸ்லிம்களிலும் பலர் அதற்குப் போட்டியாகக் கதைகளை எழுதிப் பள்ளிபள்ளியாக விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கஷ்டப்பட்டால்தான் இறைவனை நெருங்க முடியும் என்பதுதான் அவர்களின் சித்தாந்தம். அதனால்தான், அவர்களின் கதைப்புத்தகங்களிலே:
ஒவ்வொரு நாளும் 1000 ரக்அத்கள் ஸுன்னத்தான தொழுகை தொழுத பெரியார்.
40 வருடங்கள் ஒரே வுளுவில் இஷாவையும் ஸுப்ஹையும் தொழுத பெரியார்.
தஸ்பீஹ் செய்யும் காலணியைக் கனவில் கண்ட பிரபல சூஃபி.
அல்லாஹ்வின் மீதிருந்த பேரின்பக் காதலில் மூழ்கி அறுபது வருடமாக அழுத பெரியார்.
எல்லா மாதங்களும் ரமளானே என்று வரித்த பெண் பெரியார்.
15 ஆண்டுகள் படுக்காத பெரியார்.
கப்ரில் தொழுத பெரியார்.
போன்ற பெரும் பெரும் கப்ஸாக்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதைச் சிந்திப்பவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட கதைகளை குர்ஆன், ஹதீஸைவிட மதிப்புக் கொடுத்துப் பின்பற்றுபவர்கள்தான் இன்று அதிகம்.

குர்ஆன், ஹதீஸை விட்டு விட்டுக் கொஞ்சக் காலம் மத்ஹபுகளைப் பின்பற்றினார்கள். இன்று மத்ஹபுகளோடு இந்த கப்ஸாக்களையும் சேர்த்து புதிய மத்ஹபொன்றை ஆரம்பித்துப் பள்ளி பள்ளியாகப் போதித்து அங்கேயே பள்ளி கொள்கிறார்கள்.

எல்லாவற்றையும் அல்லாஹ் பார்;த்துக் கொள்வான். முஸ்லிம் என்று சொல்பவன் தன்னைத் தானே வருத்திக் கொண்டு அவனை வணங்கிக் கொண்டிருக்க வேண்டும். எவ்வளவு கஷ்டப்பட முடியுமோ அவ்வளவு கஷ்டப்பட வேண்டும். அப்போதுதான் அதிகமான நன்மை.

அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பதில் எந்தத் தர்க்கமும் இல்லை. அவன் பார்த்துக் கொண்டிருப்பதற்கு மட்டுமுள்ளவனல்ல. கேள்வி கணக்குக் கேட்பதிலும் மிகவும் கண்டிப்பானவன். அல்லாஹ் சொல்கிறான்:

நிச்சயமாக உமதிரட்சகன், மனிதர்களுக்கு அவர்களின் அக்கிரமங்களுக்காக மன்னிப்பை உடையவன், (அவ்வாறே) நிச்சயமாக உமதிரட்சகன் தண்டிப்பதிலும் மிகக் கடுமையானவன். (அல்-குர்ஆன் 13:6)

மார்க்கத்தில் அவன் எங்களுக்குக் கஷ்டத்தை வைக்கவில்லை. அவன் எங்களுக்குக் கூறுவதெல்லாம் அவன் ஆகுமாக்கியவற்றை ஏற்றுத் தடுத்தவற்றிலிருந்து விலகி நடக்கும்படிதான்.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல் அவன் இட்டிருக்கும் கட்டளைதான்.
ஒரு விடயத்தில் நீங்கள் தர்க்கித்துக் கொண்டால் அவ்விடயத்தை அல்லாஹ்வின் பக்கமும் அவன் திருத்தூதரின் பக்கமும் திருப்புங்கள். (அல்-குர்ஆன் 4:59)

இப்படித் தெளிவான மார்க்கத்தை அல்லாஹ் தந்திருக்கும் போது இன்று பலர் மக்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு பகுதியினரைக் குறை சொல்வதை விட பலர் தாமாகவே வழிகேட்டிலாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் சரியான விளக்கமாகும்.

இன்று சந்தையில் வரக்கூடிய எந்தவொரு பொருளாக இருந்தாலும் அதை இயக்கும் விதத்தைத் தனது பெயரைக் கூட எழுதத் தெரியாதவர்களெல்லாம் படித்துக் கொள்கிறார்கள்.

மறுமையின் வெற்றியைத் தரக்கூடிய மார்க்கத்தை மட்டும் படிக்கவோ அதன் அறிவுரைகள் பற்றிச் சிந்திக்கவோ அவர்கள் முற்படுவதில்லை. காரணங்கள் இல்லாமலில்லை:

ஒன்று, ஏற்கனவே மௌலவிப் பட்டம் பெற்ற பலர், குர்ஆனை எல்லாருக்கும் விளங்க முடியாது என்று பிரச்சாரம் செய்வது.

இரண்டு, அப்படிப் பிரச்சாரம் செய்பவர்கள் மற்றவர்கள் குர்ஆனைப் படித்து விடக்கூடாது என்பதற்காக வியூகம் அமைத்து படிக்க முடியும் என்று சொல்பவர்களை பகிரங்கமாக மானபங்கப் படுத்தவும் தயாரான நிலையிலே இருந்து கொண்டிருப்பது.

மூன்று, அப்படியும் அவர்கள் குர்ஆனைப் படிக்க முற்படும் பட்சத்தில், அதற்காக மக்களை ஏவும் பட்சத்தில், அவர்களின் சொத்துக்களைத் தீயிட்டுக் கொளுத்திப் பயம் காட்டுவது.

நான்கு, இப்படிப்பட்ட இருட்டடி மஸ்தான் வேலை செய்யும் சிலர் இன்று சமூகத்திலே உலமாக்களாகவும், பள்ளி நிருவாகிகளாகவும் இருப்பதுதான் இன்று நமது சமூக அமைப்பின் இலட்சணமாகிக் கொண்டு வருவது.

இஸ்லாம் எளிமையானது. அதன் சட்டங்கள் அல்லாஹ்வினால் ஆக்கப்பட்டவை. அந்தச் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதற்கு மிகவும் இலகுவானவை. இதை முஸ்லிம்கள் மறந்து செயல்பட எத்தனிக்கக் கூடாது. அப்படியிருந்தால்தான் அவன் எங்களுக்கு நேர்வழியைக் காட்டுவான். அப்படியல்லாமல், அவனுடைய சட்டங்களில் இடைச்செருகல்களைப் புகுத்த நாம் முற்பட்டால் அவன் மிகவும் கோபக்காரன் மட்டுமல்ல, அவனுடைய அதிகார எல்லைக்குள் புகுந்தவர்களை அவன் சும்மா விடமாட்டான்.

இவற்றைக் கவனமாக, உன்னிப்பாக உணர்ந்து அவனுக்குக் கீழ்ப்படிவோமாக. அவன் கட்டளையிட்டபடி அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றி மறுமையில் நமது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வோமாக. அப்படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அந்தப் பெருநெருப்பினாலான நரகிலிருந்து பாதுகாப்புப் பெற ஒரு காரணியாக அமையும்.



இந்த ஆக்கத்தின் கருத்துக்கள் சரியானதுதானா... உங்கள் கருத்தைப் பதியுங்கள்.