சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்: இங்கிலாந்து மாணவர் சாதனை

, , No Comments
இங்கிலாந்தின் சவுத்யார்க்ஷயர் நகரில் உள்ள ஷெபீல்டு ஹல்லம் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருப்பவர் ரிச்சர்டு ஹெவிட்(21). இவர் சூப்பர் வாஷிங் மெஷினை வடிவமைத்திருக்கிறார்.

பொதுவாக தண்ணீர், பவுடர், துணிகளை போட்டதும் என்ன செய்வார்கள். சுவிட்சை ஓன் செய்து சுழல விடுவார்கள். இந்த மெஷினுக்கு மின்சாரம், பற்றரி தேவையில்லை.

வித்தியாசமான முறையில் சைக்கிளுடன் இணைக்கப்பட்டிருக்கிறது வாஷிங் மெஷின். சைக்கிள் ஓட ஓட அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் வாஷிங் மெஷினின் உள்பகுதி சுழல்கிறது.

துவைக்க வேண்டியதை போட்டதும் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்படுகிறார் ரிச்சர்டு. 10 நிமிடம் ரவுண்டு போய்விட்டு வீடு திரும்புகிறார். அவ்வளவு தான் முதல் ரவுண்டு தோய்க்கும் வேலை முடிந்தது. அழுக்கு தண்ணீரை கொட்டிவிட்டு நல்ல தண்ணீர் நிரப்புகிறார்.

சைக்கிளில் இன்னொரு ரவுண்டு. துணிகளை எடுத்து "டிரையர்" பகுதியில் போட்டுக் கொண்டு சைக்கிளில் மீண்டும் ஒரு சுற்று போய்விட்டு வந்தால் காய்ந்து விடுகிறது. இந்த ஐடியா உருவான பிளாஷ்பேக்கை பகிர்ந்து கொள்கிறார் ரிச்சர்டு.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ஆப்ரிக்க நாடான புருண்டிக்கு போன போது ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு சென்றேன். சேவை செய்ய விரும்பி குழந்தைகளின் துணிகளை தோய்த்து போட்டேன். மொத்தம் 30 லோடு. கை அசந்துவிட்டது.

வாஷிங் வேலையை எளிதாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். சைக்கிள் சக்கரத்தின் சுழற்சியிலேயே இயங்கும் வாஷிங் மெஷினை உருவாக்கியுள்ளேன். ஷெபீல்டு பல்கலைக்கழகத்தில் நடக்கவுள்ள "க்ரியேட்டிவ் ஸ்பார்க்" கண்காட்சியில் இதுவும் இடம்பெறுகிறது.

0 comments:

Post a Comment