உடல் பருமனாவதை தடுக்கும் நார்ச் சத்துப் பொருட்கள்

, , No Comments
உடல் குண்டாகாமல் தடுக்க தினமும் நார்சத்து அதிகம் உள்ள பழம் மற்றும் பருப்பு வகைகளை சாப்பிட வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

இத்தகைய ஆரோக்கியமான உணவுகள், கொழுப்புகள் உடலில் சேர்வதை தவிர்க்க உதவுகிறது. இதனால் உடல் பருமன் தடுக்கப்படுகிறது என பொது ஆரோக்கிய ஹார்வர்டு பள்ளி ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவு நியூ இங்கிலாந்து மெடிக்கல் இதழில் வெளியாகி உள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்கள் 20 ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டனர்.

பால் பொருட்கள் வகையை சார்ந்த யோகர்ட் காய்கறிகள், பழங்கள், முழுத்தானிய வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் எடை குறைகிறது என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

அதிக நார்ச்சத்து மற்றும் மெதுவாக ஜீரணம் ஆகும் தன்மையால் முழுதாக சாப்பிட்ட உணர்வு கிடைக்கிறது. இதனால் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிட தோன்றும் எண்ணமும் தவிர்க்கப்படுகிறது.
இந்த நிலையில் உடல் எடை குறைகிறது. ஹார்வர்டு இணை பேராசிரியர் டாரிஷ் மெசாபரியன் தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. நார்ச்சத்து உணவுகள் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சிறந்த கலோரி சக்தி கிடைக்கவும் உதவுகின்றன. உரிய நேரம் தூங்குவதாலும் உடல் எடை குறைகிறது என முந்தய ஆய்வு தெரிவிக்கிறது.

thanks to;z9tech.com

0 comments:

Post a Comment