அனுப்பியவர்:அன்ஸார்

, , No Comments
அனுப்பியவர்:அன்ஸார்
  

அன்பார்ந்த இணைய சகோதர சகோதரிகளுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வ.வ
பலஹீனமான செய்திகள் சொல்லப் படத்தான் வேண்டுமா? சரியானதை மாத்திரம் சொன்னால் போதுமே! என்று நம் இணைய சகோதரர்கள், நண்பர்கள் சிலரின் விமர்சனங்களுக்காக, சிறிய விளக்கம் ஒன்றை தருவது பொருத்தம் என நினைக்கிறேன்.
 தற்காலத்தில் இணையமானாலும், ஆடியோ, வீடியோ உரைகளானாலும், கட்டுரைகளானாலும், மாநாடுகளானாலும், நாளு பேர் கூடி பேசுகின்ற இடமானாலும், (ஸஹீஹான) சரியான ஹதீஸகளை மாத்திரம்தான் பேசுகிறோம் -செவிமடுக்கிறோம். ஆனால் நபியவர்கள் பற்றிய பலஹீனமான செய்திகளையும் நாம் அறிவது, குர்ஆனின் கூற்றாகிய இவ்வசனப் படி அவசியமான ஒன்றாகும்.

"முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (49-6)"



இதுவும் சரியான ஹதீஸாக இருக்கலாம் என்ற சந்தேகத்தோடு நபி மீது அவதூறாக, அவர் கூறாத ஒன்றை நம்பி, நாமும் பின் பற்றி, பிறரையும் செய்யும் படி தூண்டி, பின் அது பற்றிய தெளிவு கிடைக்கும் பொழுது, ஆஹா! தெரியாமல் அறியாமல் செய்து விட்டோமே! என்று புலம்பாமல், அதனை தீர்க்க விசாரித்து அறியும் படி அல்லாஹ் கட்டளையிடுகிறான். எனவே, இதனை அறிவது மிக அவசியமான ஒன்றாகும்.
“கெட்டதும் நல்லதும் சமமாகாது.” என்று கூறுவீராக! கெட்டது அதிகமாக இருப்பது உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே! அறிவுடையோரே! அல்லாஹ்வை அஞசுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! (5-100)“
“பலஹீனமான மற்றும் இட்டுக் கட்டப் பட்ட செய்திகளை” பிரித்தறிந்து மக்கள் அதை விட்டும் விலகி சரியான ஹதீஸ்களை நம்பி அமல் செய்ய வேண்டும் என்பதர்க்காக, ஹி. 3ம் 4ம் நூற்றான்டுகளிலும் சமகாலத்திலும் பல அறிஞர்களால் பல பாகங்கள் கொண்ட (அறபி) நூல்களை வெளியிட்டுமுள்ளது, இங்கு குறிப்பிடத் தக்கது.
எனவே, இதனைக் கருத்திற் கொண்டு, எல்லா தரப்பு மக்களையும் சென்றடைய, தனித் தலைப்பாக, அல்லது ஒரு பாடத்திட்டமாக அல்லாமல், மக்கள் மத்தியில் பிரபல்யமாக, மற்றும் அறவே கேள்விப் படாத பலஹீனமானதும் இட்டுக் கட்டப் பட்டதுமான, செய்திகளை அறியவும், இத்தொடரில் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு பலஹீனமான செய்தியையாவது அறியும் பொருட்டும்தான், இது துவங்கப் பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி:தமிம்

0 comments:

Post a Comment