
இந்தப் புதிய கண்டு பிடிப்பு இவ்வார இறுதியில் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது. தொலைத்தொடர்புத் துறை ஜாம்பவான்களான ஒரேன்ஜ் நிறுவனமே இந்த புதிய கண்டுபிடிப்பை அறிமுகம் செய்யவுள்ளது.
தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் தாங்கள் அணிந்திருக்கும் இந்த T-ஷேர்ட்டில் போனை இணைத்து சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இவ்வார இறுதியில் இடம்பெறவுள்ள கிளஸ்டென்பரி திருவிழாவில் இந்த T-ஷேர்ட் செய்முறை ரீதியாக அறிமுகப்படுத்தப்படும். ஓசை அலைகளை அடிப்படையாகக் கொண்டு மிக இலகுவான தொழில் நுட்பத்தில் இந்த T-ஷேர்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
ஓசை அலைகளின் அழுத்தங்களை உள்வாங்கி அதை மின்சக்தியாக மாற்றி பற்றரிக்குள் செலுத்தி அதற்கு வலுவூட்டுவது தான் இந்தத் தொழில் நுட்பம. இதன்படி அதிக சத்தத்தோடு இசையை உள்வாங்கி அதிலிருந்து கிடைக்கும் அழுத்தங்களை சக்தியாக மாற்ற முடியும்.
எனவே இந்த T-ஷேர்ட்டை அணிந்து கொண்டு எவ்வளவு சத்தமாக இசையைக் கேட்கின்றோமோ, அவ்வளவு விரைவாக பற்றரியை சார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும் உற்பத்தியாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
வார இறுதியில் இடம்பெறவுள்ள கிளஸ்டென்பரி திருவிழாவின் போது ஒரேன்ஜ் நிறுவனம் பலருக்கு இந்த உற்பத்தியை அணிவித்து நேரடியாக அதன் செயற்பாட்டைப் பரீட்சிக்கவுள்ளது.
thanks to;z9tech.com
0 comments:
Post a Comment