இணையதள வானொலி

, , No Comments
அனுப்பியவர்:அன்ஸார்





தாருல் அதரின் இணையதள வானொலி ஆரம்பம்

எழுச்சியின் பாதையில்
அன்பின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுழ்ழாஹி வபரகாதுஹு
தாருல் அதர் அத்தஅவிய்யாவின் தஃவா எழுச்சியின் மற்றொரு வடிவமாக சர்வதேசமெங்கும் வாழ்கின்ற தமிழ் பேசும் இஸ்லாமிய உறவுகளுக்காக இன்ஷா அழ்ழாஹ் எதிர்வரும் 17.06.2011 வெள்ளிக் கிழமை முதல் Zajil FM எனும் பெயரில் தாருல் அதர் தனது உத்தியோகபூர்வ இணையதள வானொலி ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

மேற்கத்தேய இஸ்லாத்திற்கெதிரான சதித் திட்டங்களுக்கு மத்தியில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிரச்சாரம் செய்வதற்கு இவ்வாறான இணையதள வானொலிகள் உருவாக்கப்பட வேண்டியதும் ஊக்குவிக்கப்பட வேண்டியதும் காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
இவற்றைக் கருத்திற்கொண்டு எமது அல் அதர் மீடியா குழவினரின் ஏறபாட்டில் இன்ஷா அழ்ழாஹ் எதிர்வரும் 17.06.2011 வெள்ளிக்கிழமை அன்று எமது ஜாமிஉல் அதர் ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெறவிருக்கும் ஜும்ஆவை நேரடியாக அஞ்சல் செய்வதனூடாக Zajil FM தனது சேவையை ஆரம்பிக்கவிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.
சகோதர சகோதரிகள் எமது இணையதள வானொலியை www.zajilfm.com எனும் இணையதள முகவரில் இலங்கை நேரப்படி பி.ப 4.00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி வரை கேட்கலாம். விஷேடமாக இணைய வானொலி வசதி கொண்ட கைத் தொலைபேசிகளிலும் எமது நிகழ்ச்சிகளை கேட்கலாம்.
அல் அதர் மீடியா
தாருல் அதர் அத்தஅவிய்யா
காத்தான்குடி.

நன்றி:அன்ஸார்

0 comments:

Post a Comment