மனைவியின் தங்கை தொட்டுப்பழகுவது கூடுமா?

, , No Comments
கேள்வி 1 : என் மனைவிக்கு ஒரு தங்கை இருக்கிறாள். திருமணமானவள். அவள் என்னிடம் பேசும் போதும், பழகும் போதும் ஹிஜாப் இல்லாமல் பழகுகிறாள். அவளுக்கு நான் மச்சான் என்கிற முறையில்(அண்ணனாக நினைத்து) தொட்டும் பழகுகிறாள். இரு மார்க்கத்தில் கூடுமா? கேள்வி 2 : எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். என்னுடன் தான் தங்குகிறான். 18 வயதை கடந்தவன் . என் மனைவி அவன் முன்பாக வரும்போது (அவனை அந்நிய ஆணாக நினைத்து) ஹிஜாப் அணிய வேண்டுமா? அல்லது அவள் சொந்த தம்பியிடம் பழகுவது போன்று பழகலாமா?

பதில்: இஸ்லாம் ஆண், பெண் உறவுகளில் மணமுடிக்கத் தடைசெய்யப்பட்ட உறவை ''மஹ்ரம்'' என்ற எல்லையாக விதித்துள்ளது. மஹ்ரம் இரத்தத் தொடர்பான உறவிலும், பால்குடி உறவிலும் ஏற்படும். மஹ்ரம் என்ற உறவில் வராதவர்கள் அன்னியர்களாகவே கருதப்படுவர். எல்லாக் காலத்திலும் திருமணம் செய்ய விலக்கப்பட்ட, தவறி மணம்முடித்திருந்தாலும் தெரிந்தபின் அது தாகாத உறவு என அத்திருமண உறவு இரத்து செய்யப்படும். - திருமணத்தில் இணைய முடியாத உறவே மஹ்ரம் என்று கொள்க! உங்கள் நால்வருக்குள்ளும் மஹ்ரம் உறவு இல்லை என்பதால் நீங்கள் உங்கள் மைத்துனி, உங்கள் தம்பி, உங்கள் மனைவிக்கிடையே அன்னியருக்கான சட்டத்தையே கடைபிடிக்க வேண்டும். இந்தியாவில் முஸ்லிம்கள் அண்ணன், தம்பி, மைத்துனர், மைத்துனி என கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்குப் பழகிவிட்டதால் விதார்ப்பமாகத் தெரியவில்லை. மஹ்ரம் உறவு இல்லாத இவர்கள் தனிமையில் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும். (அல்லாஹ் மிக அறிந்தவன்)

ஆதாரங்கள்:

பார்க்க, *இறைமறை வசனங்கள் 004:023, 024

(புகாரி, பாகம் 3, அத்தியாயம் 57, எண் 3105)

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள். *(ஒருமுறை) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் இருந்தார்கள். அப்போது ஒருவர் ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டிற்குள் செல்ல அனுமதி கேட்டுக் கொண்டிருக்கும் குரலை செவியுற்றேன்.

உடனே நான், 'இறைத்தூதர் அவர்களே! இதோ, ஒருவர் தங்கள் வீட்டினுள் நுழைய அனுமதி கேட்கிறார்" என்று கூறினேன்.

அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'அவரை இன்னார் - ஹஃப்ஸாவின் தந்தைக்குப் பால்குடிச் சகோதரர் - என்று கருதுகிறேன்; (ஒருவரின் வயிற்றில்) பிறப்பது எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத் தகாத) புனித உறவுகளாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் (ஒருவரிடம்) பால்குடிப்பதும் புனிதமானவையாக்கி விடும்" என்று கூறினார்கள்.

(புகாரி, பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5232)

உக்பா இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள் *இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் '(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள். Posted by:

www.nidur.info

0 comments:

Post a Comment