மறுபிறவியில் நம்பிக்கை வைத்தல்

, , No Comments
மக்களின் பிழையான நம்பிக்கைகளில் மறுபிறவி கோட்பாடும் ஒன்று. அதாவது ஒருவர் மரணித்த பின் உயிர் அல்லது ஆன்மா அந்த உடலிலிருந்து வெளியேறி இன்னொறு உடலில் வேறு அடையாளத்துடன் வித்தியாசமான நேரத்தில் இடத்திலும் பிறப்பதை குறிக்கும். சமீப காலங்களில் மூடநம்பிக்கைகளை பின்பற்றுபவர்களும் ஏக இறைவனை நிராகரிப்பவர்களில் பலரையும் இது கவர்ந்து வருகிறது.

இந்த வாதத்திற்கு வலுவூட்ட எந்த சான்றுகளும் இல்லாத போதும் இந்த மூடநம்பிக்கை ஆதரவு பெற காரணம் - அவர்களிடமுள்ள இறை மறுப்பேயாகும். மரணத்திற்கு பின்னால் ஒரு வாழ்கையுள்ளது என்பதில் நம்பிக்கையற்றவர்கள் மரணத்திற்கு பின் தாங்கள் மறைந்து போவதை கண்டு அஞ்சுகின்றனர். மறுபுறத்தில் குறைவான நம்பிக்கையுடையவர்கள் இறைவனது நீதி அவர்களை நரகத்தில் தூக்கி எரிந்து விடும் என்ற பயத்தில் துக்கப்படுகிறார்கள். இவ்விரு சாரார் பொருத்தவரையில் இவர்களுடைய ஆன்மா இன்னொருவருடைய உடலில் வேறொரு நேரத்தில் பிறப்பது மிகவும் சந்தோஷமானதாக தோன்றுகிறது. இந்த தவறான கொள்கை பின்பற்றுபவர்கள் பிழையான விளம்பரத்தை கொண்டு மக்களை நம்பவைத்து விடுகிறார்கள். அதை பின்பற்றுபவர்கள் எவ்வித ஆதாரங்களை கேட்காமல் இருப்பது அவர்களை மேலும் உற்சாகப்படுத்துகிறது.

இத்தகைய மூட நம்பிக்கை மிக சில முஸ்லிம்களிடமும் காணப்படுகின்றது. இத்தகையவர்கள் தங்களை அறிவாளிகளாகவும் முற்போக்குவாதிகளாகவும் இணங்காட்ட முனைபவர்கள். இதில் மிக முக்கியமான ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும். அத்தகையவர்கள் தங்களின் வாதத்திற்கு குர்ஆனின் வசனங்களை ஆதாரமாக வைப்பார்கள். அவர்கள் அதன் உண்மையான விளக்கங்களை மறைத்து அவர்களுக்கு சாதகமான முறையில் விளக்கத்தை மாற்றி கொள்கிறார்கள். இவற்றை சுட்டி காட்ட காரணம் இவர்களின் நம்பிக்கை குர்ஆனுக்கும் இஸ்லாத்தின் கொள்கைகளுக்கும் முற்றிலும் மாற்றமாக இருக்கிறது என்பதை தெளிவுபடுத்வதற்காகும்.

இவர்கள் குர்ஆனிலிருந்து கீழுள்ள சில வசனங்களை அவர்களுக்கு சாதகமாக எடுத்து காட்டுவார்கள்.

அதற்கவர்கள்: 'எங்கள் இறைவனே! நீ எங்களை இருமுறை மரணமடையச் செய்தாய், இருமுறை நீ எங்களை உயிர்ப்பித்தாய், ஆகையால் நாங்கள் (இப்பொழுது) எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டோம் - எனவே (இதிலிருந்து தப்பி) வெளியேற ஏதும் வழியுண்டா?' எனக் கூறுவர். (ஸூறா முஃமின் : 11)

மறுபிறவியில் நம்பிக்கையுள்ளவர்கள் இந்த வசனத்தை பின்வருமாறு விளக்குகிறார்கள் : ஒரு மனிதன் வாழ்கையை வாழ்ந்து மரணித்த பின்பு அவனுக்கு ஒரு புது வாழ்கை கொடுக்கப்படுகிறது. இரண்டாவது முறையாக அவனது ஆன்மா அதனது வளர்ச்சி அடைகிறது. அவனது இரண்டாவது வாழ்கை முடிவடைந்து மரணித்த பின்பு மறுமையில் எழுப்பப்படுவார்கள். எமது மனதில் ஒரு கேள்வி வருகிறது : மனிதனின் முதல் நிலை என்ன ? மரணமா அல்லது உயிருடனா ? இதற்கான விடை அடுத்த வசனத்தில் இருக்கிறது.

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்¢ பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்¢ மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்¢ இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (ஸூறா பகறா : 28)

இந்த வசனம் மனிதனின் முதல் நிலை மரணம் என்று தெளிவாக கூறுகிறது. வேறு வகையில் அவனது உண்மை நிலையை கூறுவதானால் நீர் அல்லது உலகை போன்று உயிரற்ற பொருளாகவே அவன் படைக்கப்பட்டான் என்று இவ்வசனம் கூறுகிறது. இந்த உயிரற்ற பொருள் குவியலை உயிர் கொடுத்தான் (படைத்து உருவம் கொடுப்பது). இதுதான் முதல் மரணம் - மரணத்திலிருந்து முதல் உயிர் பெருதல். சற்று காலம் உயிர் வாழ்ந்து இறுதியில் மரணிக்கிறான். அவன் மீண்டும் மண்ணறைக்கு திரும்பி செல்கிறான். இதுதான் இரண்டாவது மரணம். இரண்டாவதும் கடைசியுமான மீண்டும் உயிர்பெரும் நிகழ்வு மறுமையில் தான் ஏற்படுகிறது. ஆகவே இவ்வுலகவாழ்வில் மறுபிறவி என்ற ஒன்று இல்லை. இல்லையென்றால் மூன்றாவது உயிர்பெருதலுக்கான அவசியத்தை ஏற்படுத்திவிடும். மூன்றாவது உயிர்பெருதலை சொல்லக்கூடிய எந்த ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை. ஆகவே சூறா அல் மூஃமின் 11 மற்றும் சூறா அல் பகறா 128 ஆகிய இரண்டிலும் இவ்வுலகில் இரண்டாவது உயிர் பெருவதை பற்றி கூறவேயில்லை. மாறாக இவ்வுலகில் ஒருமுறை உயிர் பெருவதையும் அடுத்து மறுமையில் ஒருமுறை உயிர் பெறுவதை பற்றியே குறிப்பிடுகிறது.

ஆனாலும் மறுபிறவியை பின்பற்றுகிறவர்கள் அவர்களது முழு நம்பிக்கைகளையும் அதில் முதலீடு செய்துள்ளனர்.

மறுபிறவியை நம்பிக்கை கொண்டவர்கள் ஆதாரம் காட்டும் இவ்விரு வசனங்களும் அவர்களின் மாசுபட்ட கருத்துகளை மறுக்கிறது. மேலும் குர்ஆனிலுள்ள பல வசனங்கள் மனிதனை சோதிப்பதற்காக ஒரு வாழ்கை இவ்வுலகில் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது. மரணத்தின் பின் இவ்வுலகிற்கு திரும்புதல் இல்லை என்று பின்வரும் வசனம் கூறுகிறது:

அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: 'என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!' என்று கூறுவான். 'நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக' (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. ( அல் மூஃமின் 99-100)

மரணத்திற்கு பின் இவ்வுலகத்திற்கு திரும்பி வர முடியாது வசனம் தெளிவாக கூறுகிறது. அவநம்பிக்கையாளர்கள் மரணத்தின் பின் மீண்டும் உயிர் பெரும் பொருட்டு நிராசை கொள்வார்கள் என்ற உண்மையை இறைவன் எமக்கு சொல்கிறான். இவை ஏக இறைவனை மறுப்பவர்களால் முன்மொழியப்படும் சாதாரண வார்தைகளேயன்றி அவற்றுக்கு எவ்வித பெறுமதியுமில்லை.

சுவர்கத்திலுள்ளவர்கள் முதல் மரணத்திற்கு பிறகு இன்னொரு மரணத்தை சுவைக்க மாட்டார்கள்.

முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்¢ மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான். (இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும், இதுவே மிகப் பெரிய வெற்றியுமாகும் (ஸுறா துகான் : 56-57)

சுவர்க்கவாசிகளுக்கு கொடுக்கப்பட்ட நற்பேறுகளை பின்வரும் வசனம் சொல்கிறது. அவர்களுக்கு நன்மைகள் வரக்காரணம் முதல் முறை தவிர மீண்டும் மரணிக்கமாட்டார்கள்

(பின்னர் சுவனவாசிகள்) நாம் (மறுபடியும்) இறந்து விடுபவர்கள் இல்லையே? (என்பார்கள்). நம்முடைய முந்தய இறப்பை தவிர (வேறு இல்லை). நாம் வேதனை செய்பவர் இல்லை. நிச்சயமாக இதுவே மகத்தான வெற்றியாகும் (ஸுறா ஸாஃப்பாத் : 58-60)

மேலுள்ள வசனம் மனிதன் ஒருமுறைதான் இவ்வுலகில் மரணமடைவான் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக கூறுகிறது. இச்சந்தர்பத்தில் ஒரு வினா எழும்ப கூடும் : மேலுள்ள வசனங்களில் இரண்டு மரணங்களை என்று கூறப்பட்ட போதிலும் ஸுறா ஸாஃப்பாத் 58ல் ஒரு மரணத்தை பற்றி மட்டும் பேசுவதேன்?இந்த கேள்விக்கான பதில் ஸுறா துகானின் 56; வசனத்தில் 'முதல் இறப்பை தவிர (வேறு) இறப்பை அவர்கள் அதில் அனுபவித்திட மாட்டார்கள்' என குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதன் சுயநினைவோடு ஒரே ஒரு மரணத்தை மட்டுமே சந்திக்கிறான். அவன் மரணத்தை அவனது எல்லா உணர்வுகளை கொண்டும் சந்திக்கிறான். இந்த மரணமே ஒருவன் அவனது கடைசி நேரத்தில் சந்திக்கிறான். மனிதனால் மரணத்தின் முதல் நிலையை உணரமுடியாது காரணம் அத்தருணம் அவனது உணர்வுகளையும் சுயநினைவையும் இழக்கிறான்.

இத்தகைய மரணித்து மீண்டும் உயிர் பெறுவது அல்லது ஆன்மாக்கள் வேறு உடலுக்குள் போவது போன்றவற்றை கருத்துகளை குர்ஆனின் வசனங்கள் முற்றிலும் மறுக்கிறது.

மறுபுறத்தில் மறுபிறவி கொண்ட வாழ்கையை இறைவன் ஏற்படுத்தியிருந்தால் மனிதர்களுக்கு உண்மை வழிகாட்டியாக வந்த குர்ஆனில் அதை பற்றி நிச்சயமாக இறைவன் குறிப்பிட்டு இருப்பான். இது உண்மையாக இருந்தால் இறைவன் மறுபிறவியின் அனைத்து நிலைகளையும் தெளிவாக குறிப்பிடடிருப்பான். வாழ்கை மரணத்தை பற்றி குறிப்பிடும் குர்ஆனில் மறுபிறவியை பற்றி சிறு தகவல் கூட இல்லை.

0 comments:

Post a Comment