ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார்.

, , No Comments
ஆப்பிள் கணினியைக் கண்டுபிடித்து பெர்சனல் கம்ப்யூட்டர் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார். அவரு‌க்கு வயது 56.
நீ‌ண்ட நா‌ட்களாக பு‌ற்றுநோயா‌ல் அ‌வ‌தி‌ப்ப‌ட்டு வ‌ந்த அவ‌ர் நே‌ற்‌று இற‌ந்ததாக அ‌ந்த ‌நிறுவன‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.



ஸ்டீவ் ஜாப்ஸும் அவருடைய பள்ளி நண்பரான ஸ்டீபன் வோஸ்னிக்கும் இணைந்து ஆப்பிள் கணினியை கலிபோர்னியாவின் புறநகர் பகுதியில் 1976 ஆ‌ம் ஆ‌ண்டு ஏ‌ப்ர‌ல் 1ஆ‌ம் தே‌தி உருவாக்கினர்.


அதன்பின்னர் பெர்சனல் கம்ப்யூட்டர் உலகில் பெரும் புரட்சி ஏற்பட்டது. கணினி மட்டுமல்லாது ஆப்பிள் ஐபாட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதன உற்பத்தியில் நிறுவனம் கொடிகட்டிப் பறக்கக் காரணமாக அமைந்தவர்.
ஒவ்வொருமுறையும் ஒரு புதிய அறிமுகத்தை உலகிற்கு காட்டும்போது அதைக் கொண்டுவர்ந்து சேர்க்கும் ஸ்டீவ் ஜாப்ஸின் ஸ்டைலே தனி! இதற்காகவே ஆப்பிள் தயாரிப்புக்களின் ஏராளமான ரசிகர்கள் காத்துக்கிடப்பார்கள். ஐபோனின் அண்மைய பதிப்பான ஐபோன் 4S ஐ ஆப்பிள் அறிமுகம் செய்த மறுதினமே அவரின் மரணச் செய்தியும் வந்தது மிகப்பெரும் சோகம். 1984 ஆம் ஆண்டு முதல் முதலாக ஆப்பிள் கணினியின் மாக்கின் டாஸை அறிமுகம் செய்ததிலிருந்து ஸ்டீவ் ஜாப்ஸின் டாப் 10 மாஜிக்கல் தருணங்களை இங்கே பார்க்கலாம். 1

0 comments:

Post a Comment