0

மாரடைப்புக்கு அருமருந்து இஞ்சி!

posted on , by tamim

மாரடைப்புக்கு அருமருந்து இஞ்சி! மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.“இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் ...

0

உடலில் சிறுநீரகக் கல் எவ்வாறு உருவாகின்றது?

posted on , by tamim

உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர். 'கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு ...

0

அல்சர் நோயும்! அதை குணப்படுத்​தும் வழிமுறைகளு​ம்!

posted on , by tamim

வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதாப இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் (அல்சர்) இருக்கலாம், என்கிறார் சென்னை அண்ணா நகரில் உள்ள கொலேரேக்டல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன். அவர் மேலும் கூறியதாவது:-இரைப்பையும் ...

0

பாழாக்கப்ப​டும் ஃபஜ்ர் தொழுகை

posted on , by tamim

பாழாக்கப்ப​டும் ஃபஜ்ர் தொழுகைதொழுகை என்பது இஸ்லாத்தின் தூண் என்று போற்றப்படும் ஒரு சிறப்புமிக்கவணக்கம் என்பதை அனைத்து இஸ்லாமியர்களும் அறிந்து வைத்திருக்கின்றார்கள்.இதையும் தாண்டி தொழுகை, இறைவனுக்கு மிகவும் விருப்பமானதாகும்.இறைவனிடத்தில் மிக நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.மறுமை நாளில் முதன் முதலாய் இறைவன் நம்மிடம் விசாரிப்பது இந்த தொழுகையைப்பற்றிதான். இதற்கான பதில் சரியாய் அமைந்து விடுமாயின் பின்னுள்ள அனைத்துகேள்விகளுக்கும் திருப்திகரமான பதிலை கொடுத்து வெற்றிக்கனியைஎட்டிப்பறித்து விடுவோம். மாறாக, ...

0

ஆண்களை “வெளுத்து” வாங்கும் சவூதிப் பெண்கள்!

posted on , by tamim

சவூதி அரேபியாவின் ஜித்தா நகர காவல்துறை சமீபத்தில் ஒரு அதிர்ச்சியான புள்ளி விவரத்தை வெளியிட்டு அரபுநாட்டு ஆண்களை ஆடிப்போக வைத்துள்ளது.“கணவன்மார்களை அடித்து வெளுத்து வாங்கும் பெண்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக்கிறது என்பது தான் அந்த அதிர்ச்சியான புள்ளிவிவரம். ஒரு மாதத்திற்கு 145 ஆண்கள் அடியின் வேதனை தாங்க முடியாமல் காவல்துறையில் புகார் அளிக்கின்றனர் என்றும் இந்தக் கொடுமை ஆண்டுக்கு 20 ...

0

துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் வணக்கங்கள், சிறப்புகள் மற்றும் அதன் சட்டங்கள் (video)

posted on , by tamim

துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் வணக்கங்கள், உழ்ஹிய்யாவின் சட்டங்கள், அரஃபா நோன்பின் சிறப்புகள் மற்றம் ஈதுல் அல்ஹாவின் சட்டங்கள்வழங்குபவர்: இப்ராஹீம் மதனீநாள்: 11-11-2010இடம்: இஸ்லாமிய வழிகாட்டி மையம், ஸனாய்யியா, ஜித்தாதுல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் வணக்கங்கள் from islamkalvi Download video – Size: 133 ...

0

சட்டம் படித்தால் பல இலட்சங்கள் சம்பளம்

posted on , by tamim

குஜராத் நேஷனல் லா யுனிவர்சிட்டியில் சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், நீதித்துறை, அரசுத் துறைகள் தனியார், சட்ட நிறுவனங்கள் ஆகியவற்றில் வளாகத் தேர்வு மூலம் வேலைகிடைத்துள்ளது.அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.14 இலட்சம் ஊதியத்தில் வேலை கொடுக்க பிரபல சட்ட நிறுவனங்கள் முன்வந்துள்ளன. சில சட்ட நிறுவனங்கள் ரூ.12 இலட்சம், ரூ.8 இலட்சம் என்ற ஊதியத்தில் மாணவர்களை போட்டி போட்டுக் ...

0

நபிகள் நாயகத்தின் ‘அரஃபா’ பேருரையும் உரிமைகள் பிரகடனமும்

posted on , by tamim

 எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி (இலங்கை)முஹம்மத் நபி அவர்கள் உயர்குலமான குரைஷிப்பரம்ரையில் ஆமினா என்ற பெண்ணுக்கு கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தை அப்துல்லாஹ்வையும், பிறந்து சில மாதங்களில் தனது தாய் ஆமினாவையும் இழந்தார்கள். அநாதையான இவரை அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் என்பவர் பெறுப்பேற்று வளர்த்தார்கள். பொதுவாக அநாதையாக வாழும் குழந்தைகளுக்கு ...

0

ஆடையணிவதின் ஒழுக்கங்கள்

posted on , by tamim

ஆடையணிவதின் ஒழுக்கங்கள்ஆடை இறைவனின் அருளாகும்ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது. (அல்குர்ஆன் 7 : 26)வெப்பத் தி­ருந்து உங்களைக் காக்கும் சட்டைக ளையும், போரில் உங்களைக் காக்கும் கவச உடைகளையும் அவன் ஏற்படுத்தி னான். நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன் தனது அருட் கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தினான் (அல்குர்ஆன் 16 : 81 )அழகிய ஆடை ...

0

ஹஜ் உம்ரா வழிகாட்டி (ebook by அபூ நதா)

posted on , by tamim

- மவ்லவீ அபூநதா எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீஹஜ் முகவர்கள் பலர் பிரசுரிக்கும் பெரிய நூல்களில் காணப்படும் ஆதாரமற்ற, மற்றும் மார்க்கத்திற்கு நேர்முரணான மாபெரும் தவறுகள் அல்லாஹ்வின் உதவியால் இதில் இருக்கவே முடியாது. உங்களின் ‘ஹஜ்’ அங்கீகரிக்கப்;பட்ட ஹஜ்ஜாக மாறவேண்டும் என்பதே எமது ஆழ்மனதில் வேரூன்றிய எண்ணமாகும். பல அறிஞர்களின் நூல்களின் துணை கொண்டே இது தொகுக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை படிக்க ...

0

ஓ, இந்திய முஸ்லிமே! நான் பாபரி மஸ்ஜித் ..

posted on , by tamim

ஐநூறு ஆண்டுகள் நிலைத்து நின்றேன்!என்னுள் நீங்கள் அல்லாஹ்வைத் தொழுது வந்தீர்கள்..வரலாறாய் வாழ்ந்து கொண்டிருந்தேன்.அமைதியாக நின்று கொண்டிருந்த என் மேல்சில கழுகுப் பார்வைகள் விழத்தொடங்கின.என்னை இந்தியாவின் அவமான சின்னம் என்றார்கள்,நான் களங்கப் படுத்தபட்டேன்என்னை இடித்துத் தரைமட்டம் ஆக்கினார்கள்! நான் ஷஹீது ஆக்கபட்டேன்....அல்லாஹுவைத் துதித்து வந்த என் இடத்தின்மேல்காவிகளின் களியாட்டம் நடக்குதே!ஓ, ...

0

வாய்ப்புண் (Mouth Ulcer)

posted on , by tamim

வாய்ப்புண் தொந்தரவால் பலர் அடிக்கடி அவதியுறுபவர். அனைவருக்குமுள்ள ஒரு பொதுவான விஷயம் என்றாலும் அவதி... அவதிதான். தெரியாதவர்கள் "இதுக்கு போயி பெரிசா அலட்டிக்கிறே!" என்றால் "வாய்ப்புண் உனக்கு வந்தா தெரியும்!" என்பர். பாதிப்படைந்த சிறிய பகுதி என்றாலும் அந்த அளவிற்கு முகத்தை வாட வைக்கும் இந்த வாய்ப்புண் பற்றிச் சில விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டால் நமக்கு மட்டுமின்றி, பாதிப்படைந்தவர்களுக்கும் ...

0

சுவர்க்க நகைகள்" குடும்ப பெண்களுக்கா​ன தபால் வழி இஸ்லாமியப் படிப்பு

posted on , by tamim

ஜாமிஆ மில்லியா கமாலியா(இஸ்லாமியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம்)GOLDEN CITY, PERIYAKULAM - 625601 THENI Dt.cell : 95664 63856 Email : kamaaliya@gmail.com"சுவர்க்க நகைகள்" குடும்ப பெண்களுக்கான தபால் வழி இஸ்லாமியப் படிப்புதிருமணத்தை எதிர்நோக்கி வீட்டில் இருக்கும் இளம்பெண்கள், திருமணமான பெண்களுக்கான மார்க்கக் கல்வியும், உலகக் கல்வியும் இணைந்த பயனுள்ள படிப்பு. தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான பெற்றோர்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள், உலமாக்களின் வரவேற்பையும், பாராட்டுதலையும் பெற்ற படிப்பு. அல்லாஹ் நாடிய ...

0

வாழத் தெரிந்தால் வாழலாம்...! வழியா இல்லை வையகத்தில்...?

posted on , by tamim

வாழத் தெரிந்தால் வாழலாம்...! வழியா இல்லை வையகத்தில்...? முனைவர் A.P. முஹம்மது அலி, PhD., I.P.S (Rநவீன உலகில் வாழ்க்கை கடினமானதும், சவாலானதும் ஆகும். ஆனால் திறமையிருந்தால் சமாளிக்கலாம் என்ற கருத்துடன் எழுதப்பட்டது இந்தக் கட்டுரை. அதிர்ஷ்ட்டத்தினை நம்பியிருக்கிறவனுக்கும், அதிர்ஸ்ட்ட தேவதை அவன் கதவைத் தட்டினாலும் அதனை சமாளிக்க சிலருக்குத் தெரியாது. ஒருவனுக்கு ஒரு நகைக்கடை பரிசுக் கூப்பனால் ...

0

மனைவியை மகிழ்விப்பது எப்படி?

posted on , by tamim

தமிழில்: Mufti(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை)அழகிய முகமன் வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி ‘முஸாபஹா’ செய்யலாம்.வெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்துவிட்டு ...