உலகத்தில் நாம் பரவலாக பார்க்கும்போது இன்பமும் துன்பமும் இருக்கிறது. இந்த உலகத்தில் மனிதனுக்கு, விருப்பத்திற்கு உட்பட்டவைகளும் சம்பவிக்கின்றன. ஆக இன்பம் துன்பம் விருப்பு வெருப்புகள் ஆகிய எல்லாமே நிறைந்ததுதான் வாழ்க்கை. ஆனால் உலகில் ஒவ்வொரு தனி மனிதனும் “நம் வாழ்வில் இன்பமும் இருக்கிறது. துன்பமும் இருக்கிறது. எது அதிகம்? என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ளும் போது” ஒவ்வொருவனும் 90% க்கு மேல் இன்பத்தை அனுபவிக்கிறார்கள். ஒரு 10% க்கும் குறைவாகவே துன்பம் அவனது வாழ்வில் அவ்வப்போது தலை காட்டுகிறது” ...
இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)அல்லாஹ்வின் தூதரே! ...
சூரா அல்பாத்திஹாஇது திருக்குர்ஆனின் முதலாவது அத்தியாயமாகும். இந்த அத்தியாயத்தை விளங்கிக் கொள்ள ஏராளமான ஹதீஸ்கள் இருந்தாலும் அவற்றிலிருந்து ஒரு ஹதீஸை இங்கு காண்போம்.‘தொழுகையில் ஓதுவதை எனக்கும் என் அடியானுக்கும் இடையில் பங்கிட்டுள்ளேன். என் அடியான் கேட்பவை அவனுக்கு உண்டு. அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (அகில உலகங்களையும் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்) என்று ஒருவன் கூறும் போது, ‘என்னை என் அடியான் (புகழ வேண்டிய விதத்தில்) புகழ்ந்து விட்டான்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.அவன் அர்ரஹ்மா ...
கல்கிஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த ...
பிரபல பாப் இசைப் பாடகரான முன்னாள் கேட் ஸ்டீபன்ஸ், தாம் இஸ்லாத்தை தழுவிய வரலாற்றை இதோ விவரிக்கிறார்:நான் இஸ்லாத்தை தழுவிய வரலாற்றை நீங்கள் அனைவரும் அறிந்துள்ள செய்தியின் மூலம் துவக்குகின்றேன். அது யாதெனில்.. எல்லாம் வல்ல இறைவன் இந்த பூமியில் நம்மை வழித்தோன்றல்களாக ஆக்கி நமக்கு தூதர்களை அனுப்பியுள்ளான். குறிப்பாக நமக்கு சீரான பாதையைக் காண்பிப்பதற்காக இறுதித்தூதராக முஹம்மத் (ஸல்) அவர்களைத் தெரிவு செய்துள்ளான். எனவே இதற்காக நன்றி செலுத்த வேண்டும் என்பதை மனிதன் கருத்தில் கொள்ள வேண்டும். இனி வரவிருக்கும் ...
அல்லாஹ் மறைவானவன், அவன் மறைந்திருப்பவன். தான் இருப்பதை தெரிவிப்பதற்காக அல்லாஹ் அழகான உலகத்தை படைத்தான். உலகம் மட்டுமல்ல பல கோள்கள், சந்திரன், நட்சத்திரங்கள் போன்ற அனைத்தையும் படைத்து, அவை அத்தனையையும் ஒன்றோடு ஒன்று மோதி விடாதவாறு சுழலவிட்டுள்ளான். அப்படிப்பட்ட அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.பின்னர் அல்லாஹ் மனிதனைப் படைக்க முடிவு செய்தான். பானைகள் செய்ய பயன்படுத்தப்படும் களி மண்ணால் அல்லாஹ் மனிதனை செய்தான். அவன் தன்னுடைய ஆவியை அதனுள் ஊதினான். இப்படித்தான் அல்லாஹ் முதல் மனிதருக்கு உயிரைக் கொடுத்தான். ...
திருக்குர்ஆனை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சுயமாகத் தயாரிக்கவில்லை; இறைவன்தான் வழங்கினான் என்றால் எந்த வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்ற கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்வது அவசியம். நபிகள் நாயகத்துக்கு முன் ஏராளமான இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டனர். இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்பது தான் இஸ்லாமிய நம்பிக்கை. முதல் மனிதராகிய ஆதம் முதல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வரை எத்தனை தூதர்கள் வந்துள்ளனர் என்று குர்ஆன் கூறாவிட்டாலும் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டதாகக் ...
1:1 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ1:1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)1:2 الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ1:2. அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.1:3 الرَّحْمَٰنِ الرَّحِيمِ1:3. (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.1:4 مَالِكِ يَوْمِ الدِّينِ1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).1:5 إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ1:5. (இறைவா!)உன்னையே ...
முஹர்ரம் மாதம் இஸ்லாமிய (அரபு) வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் சிறப்புகளை இஸ்லாமிய சமூகம் சரிவர முழுமையாக புரிந்து கொள்ள வில்லை என்றே கருத வேண்டியுள்ளது.அதன் காரணமாகத்தான் இம்மாதத்தில் இஸ்லாத்தின் பெயரால் பல்வேறு வகையிலான அனுஷ்டானங்கள் உலகின் பல பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதில் தமிழ் முஸ்லிம் சமூகமும் விதிவிலக்கின்றி கூடுதலான பல அம்சங்களோடு அவற்றை கடமையான செயல்களைப் போல் நிறைவேற்றி வருவதை காண்கிறோம்.இம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுவனவற்றில் பிரதானமான ஒன்று முஹர்ரம் ஒன்று முதல் ...
ஹாஜிகளின் வழிகாட்டி:ஹஜ்ஜின் தினங்களில் ஹாஜிகள் தாம் நிறைவேற்றப்போகும் ஹஜ்ஜிற்கேற்ப மேற்கொள்ள வேண்டிய சுருக்கமான விவரங்கள்.நாள்: துல்ஹஜ் 8 க்கு முன்புஹாஜிகள் செய்ய வேண்டிய அமல்கள்.முஃப்ரித் – ஹஜ் இஃப்ராத்1. மீக்காத்தில் இஹ்ராம் அணிந்ததும் லப்பைக்க ஹஜ்ஜன் எனக்கூறி நிய்யத் செய்ய வேண்டும்.2. மக்காவாசிகளும் அங்கு தங்கியிருப்போரும் மீக்காத் வரவேண்டியதில்லை, தத்தம் இருப்பிடங்களிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம்.3. தவாஃபுல் குதூம் செய்ய வேண்டும்.4. ஸயீ செய்ய வேண்டும். (தவாஃபுக்குப் பிறகு ஸயீ செய்யாமல் உடனே ...
அலக் எனும் அற்புதம் ஹாபிழ் கே.என்.முஹம்மது ஜமாலி பாக்கவி, ஃபாஸில் உமரி,மக்கி ‘நிச்சயமாக மனிதனை களி மண்ணின் மூலத்திலிருந்து நாம் படைத்தோம். பின்னர் பாதுகாப்பான ஓரிடத்தில், அவனை விந்தாக நாம் ஆக்கினோம். பின்னர், இந்த இந்திரியத்தை அலக்காக படைத்தோம். பின்னர் அந்த அலக்கை தசைத் துண்டாகப் படைத்தோம்.பின்னர் அந்த தசைத் துண்டை எலும்புகளாகப் படைத்தோம்.பின்னர் அவ்வெலும்புகளுக்கு சதையை அணிவித்தோம்.பின்னர் அவனை வேறொரு படைப்பாக (முழு மனிதனாக) உண்டாக்கினோம் …’ (அல்குர்ஆன் 23:12-14)ஆண் உயிரணுவும் பெண் சினை முட்டையும் ...
நாவின் விபரீதம்மௌலவி அலிஅக்பர் உமரிஅல்லாஹ் மனிதனுக்கு எத்தனையோ அருட்கொடைகளை அளித்திருக்கின்றான். அவைகளில் மிக முக்கியமானது பேசும் நாவாகும். நாவை ஒரு கூரான கத்திக்கு ஒப்பாகக் கூறலாம். கத்தியைக் கொண்டு ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து, அவரின் உயிரைப் பாதுகாக்கவும் செய்யலாம். அதே கத்தியைக் கொண்டு ஒருவரின் உயிரை எடுத்தும் விடலாம். இதே போன்றது தான் நாவும். நாவைக் கொண்டு சொர்க்கம் செல்லவும் முடியும். அதே நாவு நரகம் செல்வதற்கு முக்கிய காரணமாகவும் அமையலாம். ஆகவே நாவை பேணிப் பாதுகாப்போம்.மனிதனின் உயர்வுக்கும் ...
அல் கஹ்ஃப் (அந்தக் குகை) அத்தியாயம்அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.கஹ்ஃப் என்ற வார்த்தையின் பொருள் குகை. அல் கஹ்ஃப் என்றால் அந்தக் குகை என்பது பொருள். இந்த அத்தியாயத்தின் ஒன்பதாவது வசனம் முதல் இருபத்தி ஆறாவது வசனம் வரை ஒரு குகையில் தஞ்சம் புகுந்த நல்லடியார்கள் குறித்த வரலாற்றுக் குறிப்பு கூறப்படுகிறது. இந்த அத்தியாயத்திற்கு அல் கஹஃப் (அந்தக் குகை) என்று பெயர் வர இதுவே காரணமாகும்.இந்த அத்தியாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின் போது ...
ஓர் உலகமகா செய்தி‘அம்ம யதஸாஅலூன்’ என்று துவங்கும் இந்த அத்தியாயம் ‘அந் – நபா’ அத்தியாயம் என்றழைக்கப் படுகின்றது. இதன் பொருள் ‘மகத்தான செய்தி’ என்பதாகும். இந்த அத்தியாயத்தில் மகத்தான ஒரு செய்தி பற்றிக் கூறப்படுவதால் இதற்கு இப்பெயர் வந்துள்ளது.நாற்பது சிறிய வசனங்களைக் கொண்ட இந்த அத்தியாயம் நபி (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டதாகும்.‘எதைப் பற்றி அவர்கள் வினா எழுப்புகின்றனர்? அவர்கள் எதில் (இரு கூறாகப் பிளவுபட்டு) கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார்களோ, அந்த மகத்தான செய்தியைப் பற்றியா ...