கவலைக்கு மருந்து

, , No Comments
ஒரு நாள் பிரபல மருத்ததுவர்
ஒருவரிடம் ஒரு நோயாளி வந்தார். "டாக்டர் என்னை சோதித்து பாருங்கள்" என்றார். "ஏன் உங்களுக்கு என்ன செய்கிறது" என்றார் டாக்டர். அவ்வளவுதான் தமக்கிருப்பதாக தாமே நினைத்து கொண்ட ஆயிரம் நோய்களை அழாக்குரையாக கூறி முடித்தார். "அப்படியா" என்று கேட்டு கொண்டே வந்த டாக்டர் எல்லா சோதனைகளையும் செய்து முடித்தார்.

"எனக்கு என்ன வியாதி என்பதை கண்டுபிடித்தீர்களா" என்று பதட்டத்தோடு கேட்டார் நோயாளி.

"உங்களுக்கு எந்த நோயும் இல்லை. நீங்கள்தான் கண்டதை நினைத்து கவலைப்பட்டு கொண்டிருக்கிறீர்கள்."

"என்ன டாக்டர் சொல்கிறீர்கள்?"

"ஆமாம் இப்போது உங்களுக்கு தேவை மருத்துவமல்ல. மன மகிழ்ச்சி. நான் சொல்வது போல் செய்யுங்கள். இன்று நம்மூரில் நடக்கும் சர்கசுக்கு செல்லுங்கள். அங்கே கிரிபால்டி என்னும் கோமாளி வருவான். அவன் ஏராளமான வேடிக்கைகள் செய்வான். நிச்சயமாக அவன் தன் வேடிக்கைகளால் உங்களை சிரித்து பிரள வைத்து விடுவான். நான் சொல்கிறேன். நம்புங்கள். உலகில் உள்ள எல்லா மருந்துகளை விடவும் இப்போது உங்களுக்கு நன்மை பயக்க கூடியது இதுதான்"

மருத்துவரை பரிதாபத்தோடு பார்த்தார் நோயாளி. "டாக்டர் அந்த கிரிபால்டியே நான்தான்" என்றார் அழாக்குரையாக.

0 comments:

Post a Comment