அதிசய வழக்குஒருநாள் இரு சகோதரர்கள், செய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்) அவர்கள் முன் வந்து "நபி அவர்களே, எங்களின் தந்தையார் எங்கள் இருவர் மீதும் ஒத்த அன்புடையவராக இருந்தார். ஆனால் அவர் இறப்பு படுக்கையில் கிடக்கும்போது எங்களை அருகில் அழைத்து எங்களுக்கு அறிவுரை பல வழங்கினார். இறுதியாக இறக்கும் முன் எங்களை பார்த்து "என் சொத்து அனைத்தும் உங்களில் ஒருவனுக்கே உரியதாகும்." என்று கூறினார். அது யார் என்று கூறவில்லை. எனவே அவரது சொத்து அனைத்தும் யாருக்கு உரியது என்று அறியாது விழிக்கிறோம்" என்று கூறினார்கள். எவ்வாறு ...
அபூ யஸீத் பிஸ்தாமி ரஹ்மாதுல்லாஹி அலைஹி அவர்கள் மாபெரும் ஆன்மீக மகான். ஒரு நாள் அவர்களுக்கும் ஒரு யூத மதகுருவுக்கும் ஒரு யூத கோயிலில் ஏராளமான யூதர்கள் முன்னிலையில் ஒரு உரையாடல் நிகழ்ந்தது. அப்போது அந்த யூத மதகுரு இவர்களை நோக்கி, "ஏ முஸ்லிமே!! நான் உம்மிடம் சில கேள்விகள் கேட்கிறேன். அதற்கு நீர் சரியான பதிலை கூறினால் நாங்கள் உமக்கு வழிப்படுவோம். இல்லையெனில் உம்மை எம் வாளுக்கு இரையாக்குவோம்" என்று கூறினார். அதற்கு அபூ யஸீத் பிஸ்தாமி ரஹ்மாதுல்லாஹி அலைஹி அவர்கள் " நல்லது. அவ்விதமே செய்யுங்கள். தங்களின் ...
ஊரெங்கும் நாளை வர இருக்கும் பெருநாளுக்காக சந்தூஷமும், குதூகலமும் கொப்பளிக்க மக்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர். இருலோக இரட்சகரான முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் அருந்தவப்புதல்வி சுவர்கலோக தலைவி பாத்திமா நாயகி திருக்குர்ஆன் வசனங்களை ஓதியவர்களாக எளிய ஒட்டுப்போட்ட ஆடையில் திரிகையில் கோதுமை அரைத்தவகர்கலாக உள்ளார்கள். இந்த கோதுமையும் எப்படி வந்தது என்றால்...வெளிய சென்று வீடுதிரும்பிய அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பாத்திமா உண்பதற்கு ஏதும் உணவு இருக்கின்றதா? என வினவ இருவேளை பட்டினிதான், குழந்தைகளும் ...
ஒரு நாள் இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கடற்கரையில் அமர்ந்து தனது கிழிந்த ஆடைகளை தைத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வழியே வந்த பல்க் நாட்டு அமைச்சர் ஒருவர் தனது அரசராக இருந்த இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் இன்றைய நிலையை பார்த்து மனதுக்குள் அரச போகத்தை விட்டு விட்டு இப்படியொரு ஏழ்மையை எந்த புத்திசாலியாவது விரும்புவானா? என்று அங்கலாய்த்தார். இதை உள்ளுணர்வு மூலம் அறிந்த இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தங்களின் கையிலுள்ள ஊசியை அந்த அமைச்சர் பார்க்கும் ...
சூபிகளை பற்றி ஒரு இளைஞர் எந்நேரமும் குறைகூறிக்கொண்டிருந்தார். ஒருநாள் அவர் ஹழ்ரத் துன்னூன் மிஸ்ரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களை காண வந்தார். அப்பொழுது அவர்கள் அவரிடம் தாம் அணிந்திருந்த மோதிரத்தை கொடுத்து அதை ஒரு மளிகை கடைக்காரனிடம் கொடுத்து ஒரு தீனாருக்கு அடமானம் வைத்து தேவையான மளிகை பொருள்களை வாங்கிவருமாறு பணித்தார்கள். இளைஞரும் அதனை எடுத்துக்கொண்டு சென்று மளிகை கடைக்காரனிடம் அடமானம் வைக்க முற்பட்ட பொழுது, "இதற்கு ஒரு தீனார் தர இயலாது ஒரு திர்ஹம்தான் தர இயலும்" என்று கூறிவிட்டான் கடைக்காரன். அவர் ...
இறைநேசம் உள்ளத்தில் குடிக்கொண்ட பின்னர் மற்றெல்லாம் வெறுப்பாகவே காட்சியளிக்கும். இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக பத்ருப்போர் முடியும்வரை ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அதன்பின் தான் அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். ஒரு நாள் ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், மகனாரும் பத்ருப்போரை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அது சமயம் மகனார் தந்தையிடம், "தந்தையே! பத்ருப்போரில் நான் காபிர்கள் அணியில் சேர்ந்து போர்செய்த நேரம் பலதடவை தங்களை கொள்ளும் வாய்ப்பு ...
அலி அக்பர் ரலியல்லாஹு அன்ஹு ஹழ்ரத் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இரண்டாவது மகனாவார்கள். அவர்கள் உருவ அமைப்பில் தம் பாட்டனார் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்களை ஒத்தியிருந்தனர். கர்பலாவில் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. ஹழ்ரத் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சகோதரர் அப்பாஸ் இறந்ததும், இவர்கள் தம் தந்தையாரின் அனுமதி பெற்று போருக்குப் புறப்பட்டனர். ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், மகனாருக்காக துஆச் செய்து குதிரை மீதமர்த்தி அனுப்பி வைத்தனர். வீராவேசத்துடன் மின்னலாய் பரந்த அலி அக்பர் ...
மாமேதை ஹஸன் பஸரி (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் கூறுகிறார்கள். நான் வாலிபர் ஒருவருடன் பஸரா நகர வீதியொன்றில் சென்றுக் கொண்டிருந்தேன். வழியில் மருத்துவர் ஒருவர் ஒரு நாற்காலியில் அமர்ந்துக் கொண்டிருக்க ஆண்களும்,, பெண்களும், ,, சிறுவர்களும் அவரைச் சுற்றிலும் நின்றுக் கொண்டு தத்தம் நோய்களைப் பற்றி அவரிடம் கூறி மருந்துக்களை வாங்கிக் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது என்னுடன் வந்த வாலிபர் அம்மருத்துவரிடம் சென்று மருத்துவரே! பாவங்களை கழுவி சுத்தப்படுத்தி இதய நோய்க்கு நிவாரணம் அளிக்கும் மருத்துவம் தங்களுக்கு ...
ஒரு நாள் பிரபல மருத்ததுவர் ஒருவரிடம் ஒரு நோயாளி வந்தார். "டாக்டர் என்னை சோதித்து பாருங்கள்" என்றார். "ஏன் உங்களுக்கு என்ன செய்கிறது" என்றார் டாக்டர். அவ்வளவுதான் தமக்கிருப்பதாக தாமே நினைத்து கொண்ட ஆயிரம் நோய்களை அழாக்குரையாக கூறி முடித்தார். "அப்படியா" என்று கேட்டு கொண்டே வந்த டாக்டர் எல்லா சோதனைகளையும் செய்து முடித்தார். "எனக்கு என்ன வியாதி என்பதை கண்டுபிடித்தீர்களா" என்று பதட்டத்தோடு கேட்டார் நோயாளி. "உங்களுக்கு எந்த நோயும் இல்லை. நீங்கள்தான் கண்டதை நினைத்து கவலைப்பட்டு கொண்டிருக்கிறீர்கள்.""என்ன ...
ஒரு நாள் செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) பிரயாணம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது வழியில் வாடிய வதனத்துடன் சிலர் இறைவனை வணங்கி கொண்டு இருந்தனர். "நீங்கள் யார்? உங்களின் இந்த நிலைக்கு என்ன காரணம்" என்று வினவினர் செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள். அதற்கு அவர்கள், "நரக நெருப்புக்கு நாங்கள் அஞ்சுகிறோம். அதனால்தான் உடலை வருத்தி இறைவனை வணங்கி கொண்டு உள்ளோம்" என்றனர். அதற்கு செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள் "நரக நெருப்புக்கு அஞ்சியாவது வணக்கம் புரிகிறீர்களே. அல்லாஹ் உங்களை நரக நெருப்பில் இருந்து பாதுகாப்பானாக" ...
ஒரு நாள் செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள் வெட்ட வெளியில் கடும் மழையில் அகப்பட்டு கொண்டனர். ஒதுங்குவதற்கு இடம் தேடியபோது அங்கு ஒரு குடில் தென்பட்டது. அதை நோக்கி சென்றனர். அதில் ஒரு பெண் இருந்தாள். அதில் அவர்கள் நுழையாது வேறிடம் தேடி சென்றனர். ஒரு குகையை கண்டு அதற்குள் எட்டி பார்த்தனர். அங்கு ஒரு சிங்கம் கர்ச்சித்து கொண்டு இருந்தது. அப்போது செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள் அல்லாஹ்வை நோக்கி, "யா அல்லாஹ்! உன்னுடைய படைப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் இடத்தில் ஒதுங்கி கொண்டு உள்ளன. அவற்றிற்கு நீயே இடங்களை ...
ஒரு முறை ஒரு மனிதர் ஹழ்ரத் அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, "தங்களின் வீடு நெருப்புப் பற்றிப் கொண்டது" என்று கூறினார். அது கேட்ட அவர்கள், "என் இல்லத்தில் நெருப்புப் பிடிக்காது" என்றனர். சிறிது நேரம் கழித்தபின், இன்னொரு மனிதர் வந்து அதையே கூற உடனே அவர்கள் முன்பு கூறிய பதிலையே கூறினார்கள். பின்னர் மூன்றாவர் வந்து, "நெருப்பு பிடித்துக்கொண்டே வந்து, தங்கள் வீட்டினருகில் அணைந்து விட்டது, தங்கள் வீடு பற்றவில்லை" என்று கூறினார். அது கேட்ட அவர்கள், "அல்லாஹ் என் வீட்டை எரிக்க மாட்டான் எனும் ...
செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்களும் எறும்பும்ஒரு நாள் செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்கள் படுத்திருக்கும்போது அவர்களின் உடம்பில் எறும்பு ஒன்று ஊர்ந்து திரிந்ததை கண்ட அவர்கள் அதனை பிடித்து வீசி எறிந்தார்கள். அப்போது அந்த எறும்பு அவர்களை நோக்கி, "நெறி நீதி மன்னனாகிய அல்லாஹ்க்கு நீரும் நானும் அடிமைகள்தான் என்பதை உணராது என்னை நீர் அகங்காரத்துடன் பிடித்து வீசி எறிந்தீர். உமக்கு வல்லமை உள்ளது என்று எண்ணி பெருமையுற்று வரும் துன்பம் பற்றி உணராது எனக்கு துன்பம் இளைத்தீர். இது பற்றி நான் மறுமையில் ...
செய்யதுனா ஈசா நபியும் வாகனமும் ஒருநாள் செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்களிடம் அவர்களின் சீடர்களில் ஒருவர் "எப்போது பார்த்தாலும் நடந்து கொண்டே இருக்கிறீர்களே, வாகனத்தில் ஏறி சென்றால் நலமாக இருக்குமே" என்று கூறினார். அதற்கு செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள் "என்னிடம் வாகனம் வாங்க பணம் இல்லையே" என்று கூறினர். அது கேட்ட அவர் உடனே ஒரு கழுதையை வாங்கி அவர்களுக்கு அன்பளிப்பு செய்தார். அதிலே ஏறி அவர்கள் இவர்ந்து சென்றனர். இரவானதும் அதற்கு தீனி போடுவது பற்றிய கவலை அவர்களுக்கு ஏற்பட்டது. உடனே அக்கழுதையை ...
செய்யதுனா யஹ்யா (அலைஹிஸலாம்) அவர்கள் கண்ட இப்லீஸ் ஒரு நாள் செய்யதுனா யஹ்யா (அலைஹிஸலாம்) அவர்கள் அல்லாஹ்வை நோக்கி "யா அல்லாஹ்! நான் இப்லீசை அவனது உண்மையான உருவத்தில் காண ஆசைபடுகிறேன். அவனை என்னிடம் அனுப்பி வை. அவனிடம் ஒன்றையும் மறைக்காது உள்ளதை உள்ளப்படி கேட்க விரும்புகிறேன்" என்று இறைஞ்சினார்கள். அப்போது ...
இன்ஷா அல்லாஹ்வின் மகிமைஒரு நாள் செய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்) அவர்களிடம் அவர்களின் மனைவி "இன்று கவசம் விற்று வரும் பணத்தை என்னிடம் தாருங்கள்" என்று கூறினர்."சரி தருகிறேன்" என்றார்கள் செய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்)ஆனால் அன்று கடைத்தெருவுக்கு கவசத்தை எடுத்து சென்றபோது அவற்றை வாங்க யாருமே வரவில்லை.கணவர் கவசத்தோடு திரும்பி வருவதை கண்ட மனைவிக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு அளவே இல்லை. "இன்றில்லாவிட்டால் என்ன. நாளை விற்று விடுகிறது" என்று மனைவிக்கு ஆறுதல் கூறினர் செய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்)அடுத்த நாளும் ...
கனவு பற்றி நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள்: "அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)அபூகத்தாதா அல் அன்சாரி (ரலியல்லாஹு அன்ஹு)நூல் : ஸஹீஹுல் புஹாரி (பாகம் – 7 அத்தியாயம் – 91 ஹதீஸ் எண் - 6984)"அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) தவிர நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை என்று கூற நான் கேட்டேன். அப்போது மக்கள் நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன என்று வினவினர். நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் நல்ல ...